All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

ஆழ்கடலின் அமைதியில்
அலையில்லை - அங்கு
கூதலின் தாக்கங்கள்!

ஆழ்மனதின் அமைதியில்
அலையில்லை - அங்கு
காதலின் தாக்கங்கள்!

கடலென்றாலும், மனமென்றால்
ஆழிப்பேரலையாய் ஏக்கங்கள் - அங்கு
ஆசையின் தாண்டவங்கள்!

ராவணனாய் கவர்ந்துவிட்டு
ராமனாய் கதறுபவன்...
ராதையின் போதையில்
கிருஷ்ணகானம் பாடினிற்க...
பேதை ராதை அவள்
கலங்கி நிற்கும் கோலமென்ன...?

சொல்லிய சொல்லுக்கு மாற்று
வல்லிய சொல் தானோ..?
சொல்லியதெல்லாம் போதாதோ...
சோகங்கள் தீராதோ...!

வார்த்தை அம்புகள்
வாகாய் பாய்ந்து விட்டால்
வாடாத மனங்களையும்
வேரோடு சாய்த்திடுமோ...!

ஓ மாணுடா!
பேசும் பேச்சுக்கு அளவுகோலும்
வீசும் வீச்சுக்கு திறவுகோலும்
ஓர் கணம் மதிகெட்ட
காலங்கள் தானோ...?


மாற்றம் ஒன்றே மாறாதது - அதன்
தேற்றம் ஒன்றே தீர்வானது!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... நாயகனின் மன உளச்சலை அறிந்த பதிவு...

மணி கிருஷிற்கு நல்ல நண்பன்.. கிருஷின் கடந்த கால விஷயம் அனைத்தையும் அறிந்தவன்... ஏதோ மணி இருப்பதால் மட்டுமே கொஞ்சமாவது கிருஷ் மனம் திறந்து பேசி ஆறுதல் அடைந்து கொள்கிறான்..

மணி நந்தினி அழகான ஜோடி... எவ்வளவு புரிதல் இருவருக்கும்... கிருஷின் வாழ்க்கை சரியானால் தான் மணி திருமணத்திற்கு சம்மதிப்பது இக்காலத்தில் யார் இருப்பார்கள்... அற்புதமான நண்பன் கிடைத்துள்ளான் நம் கிருஷிற்கு...

அனு இவ்வளவு இழிவான சொல்லை கிருஷை பார்த்து சொல்லியுள்ளாள் என்றால் அவள் அந்த நேரத்தில் எந்த நிலைமையில் இருந்தாலோ? அதை அவள் சொல்லாமல் இருந்து இருந்தால் கிருஷின் நிலை???? புரியாத புதிர்...

ஆனால் கிருஷின் நிலைமையோ எந்த ஆண் மகனுக்கும் வர கூடாதது..

வார்த்தையை கொட்டி விட்டால் அதை நாம் திரும்ப பெற முடியாது என்பது எவ்வளவு பெரிய உண்மை.. எதை செய்து அனு அந்த வார்த்தையிலிருந்து அவனை மீட்க போகிறாள்.. போங்க ஸ்ரீ மேம் எங்களை புலம்ப வைத்து விட்டீர்கள்...

போதையிலும் நான் ராதைக்கு மட்டுமே சொந்தம் என்பது அவன் ஆழ்மனதின் வெளிப்பாடு... இது அப்பட்டமான காதலே தவிர வேறு என்ன சொல்வது...

ஸ்ரீ மேம் அழகான கவிதை வரிகள்... நிஜம் தான்... நாங்களும் இருவரும் ஒன்று கலந்து ராதேகிருஷ்ணனாகும் நாளை எதிர் நோக்கி...

அழகான பதிவு...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜூன் மற்றும் ராதையின் உணர்வுகளை இதைவிட அழகா சொல்ல முடியுமான்னு தெரியல மேம்.. ஜஸ்ட் அமேசிங் ❤
 

Advikasri

New member
AS usual செம்ம ud ஸ்ரீமா😍😍😍
அர்ஜுன் என்னடா ஆன்னா ஊன்னா kiss அடிக்கர🥰🥰🥰
First மணி கல்யாணம், அப்பறம் மஞ்சரி கல்யாணம் சூப்பர் சூப்பர்😍😍😍
இந்த சாய் பக்கிக்கும் நிறைய விசயம் தெரியும் போல🙄🙄🙄
இன்னைக்கு உங்க கவிதை missing ஸ்ரீமா😢😢
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

கீதை சொன்னவன்
கிருஷ்ணன் என்றால்...
ராதை மாதவனும்
கிருஷ்ணனே!

கிருஷ்ண லீலைகள்
பாடும் நேரம்...
ராதை கோமகள்
காதல் தீரம்!

கிருஷ்ணனின் வழியில்
அர்ஜுனன் குறி...
காவிய ஓட்டத்தில்
இடுகுறி அன்றோ...!

வில்லாளன் குறியில்
சிக்கிய சில்வண்டு...
மன்மதன் பிடியில்
மாட்டிய பொன்வண்டோ...?


கண்ணால் காண்பதும்
காதல் கேட்பதும்
பொய்யென்றால்...
முது மொழி மறந்தால்
தீர விசாரித்தல் சதியன்றோ...?






வாழ்த்துக்கள் தோழி, நன்றி




























வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top