அவளுக்காக ஒரு யுத்தம்...
வீரனாய் அவளவன்
எதிரியாய் மித்ரனவன்
அவனாடும் கண்ணாமூச்சி
ஆட்டத்தில் கண்ணை கட்டியவளோ
ஒளிந்திருக்கும் காதலை தேட,
அவனோ மனதளவில் ஒடிந்து ஒளிந்திருக்கும் பெண்ணவளை தேடிக்கொண்டிருக்கிறான்...
அவனெதிரில் எதிராய் ராவணனோ,துரியோதனனோ
இல்லை எதிராய் அவளை சார்ந்தவராய் இருப்பின்
அவளோட வனவாசத்திறாக்கான
நீதியை அவளவன் வாங்கி தருவானோ அவளுக்காக...
ஸ்ரீ மா போர் என்று வந்தால் காரணம் ஒன்று பிறக்கும்...
காரணம் என்னவாக இருந்தாலும் அவளுக்காக தான் போராடறான் தெரியுது கதை களம் ரொம்ப விறு விறுப்பாக போகுது....
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் இந்த மொழி காதலுக்கு பொருந்தும் தானே ஸ்ரீ மா....
இந்த எபியில் ரொம்ப சொல்லில் அடங்காது வேதனையை உணர்ந்தேன் ஏன்னா எங்க ஹீரோயினுக்கு சீன் ஒன்னுமே இல்லை...
இதை நான் கண்டிக்கிறேன் ஒரு ஆர்மி மெம்பராக...
இப்படியே போச்சு என்றால் போராட்டம் வெடிக்கும் சொல்லறேன்