All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விறுவிறுப்பான மற்றும் கவிதை வரிகளை கண்டு வேதனையை சுமந்த பதிவு...

பரசு குடும்பத்தை காலி பெருங்காய டப்பா என்று சொன்னது நகைச்சுவையென்றால் நந்தினி மற்றும் அவள் அம்மா மட்டும் தான் இங்கே உருப்படி என்பது நல்ல புரிதல்... பரசு குடும்ப தலைவனாய் எகிறுகிறான் என்றால் இந்த சின்னப்பையன் மனோ ஏன் கிருஷின் கடந்த காலத்தில் அவதூறான பேச்சில் துள்ளுகிறான்... அதற்கான கிருஷின் பதிலடி செம... வாங்கி கட்டி கொண்டான் மனோ... அதுவரை பொறுமையாக பேசி கொண்டிருந்த கிருஷூம் நண்பனுக்கு வேதனை என்றவுடன் மணியும் களத்தில் இறங்க அதற்கான முடிவு அருமை... என்ன மாதிரியான நட்பு இது!!!! அருமை ஸ்ரீ மேம் நட்பின் மேன்மை மற்றும் புரிதலை இதைவிட அழகாகவும் ஆழமாகவும் சொல்ல முடியாது...

மணி மற்றும் நந்தினியை அரவணைத்து திருமணத்தை தாங்களே நடத்துவதாக கிருஷின் பெற்றோர் சொன்னது நல்ல ஜமீன் பரம்பரை என்று இதை விட சான்று உண்டோ? நல்ல அற்புதமான பெற்றோருக்கு பிறந்த கிருஷ் மட்டும் தப்பானவன் ஆவானோ?

உதயனுக்கும் ஒரு சொடக்கு போட மறக்கவில்லை கிருஷ்...

அச்சச்சோ ஏன் ஸ்ரீ மேம் இப்படி??? எனக்கு கிருஷ் சொன்ன பொண்னும் எனக்குத்தான் பன்னும் எனக்குத்தான் என்பது அப்போது புரியவேயில்லை டைப்பிங் தப்பாயிடுச்சோ என்று கூட தடுமாறினேன்.. ஆனால் இப்போது தான் பொண்ணும் எனக்குத்தான் பன்னாகிய பொருளும் அதாவது சொத்தும் எனக்குத்தான் என்பது... புதிர் மன்னியே நீங்க வாழ்க பல்லாண்டு!!! ஒரே சொல்லில் உள்ள புதிர்... ஹா! ஹா! சரியான வார்த்தை விளையாட்டு ஸ்ரீ மேம்...அற்புதம்...

இருந்தாலும் கண்ணன் செய்த பாவம் தான் என்ன??? பெற்றோர் செய்த பிழை மகனுக்கா?

அருமையான கவிதை வரிகள்... நெஞ்சை உருக்கிவிட்டது... ஆணே இரண்டு தப்பையும் செய்துள்ளானா கிருஷ் வாழ்க்கையில்...

நிறைய கேள்விகள் மனதில் ஊர்வலமாய் விடையை நோக்கி...

அருமையான பதிவு ஸ்ரீ மேம்.
 

Shanthigopal

Well-known member
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!
இனிய தோழி,


வியூகம் வகுத்துவிட்டான் கிருஷ்ணன்;
மதியூகம் விடுப்பானோ அர்ஜுனன்!

பெண்ணவள் போதையும்,
ஆணவன் மமதையும்
ஆனவச் செறுக்கின்
அரிதாரம் அன்றோ!

வேடன் விரித்த வலையில்
சிக்கியதோ மாடப்புறா...?
புறாவைத் தூது விட்டு
பகை வளர்ந்த வைரியவன்
பகை முடிக்க பழியாடாய்
மாட்டியதோ சின்னப்புறா!

உணர்வு கொன்ற சிட்டு
ஊனமான மொட்டு,
உண்மையின் உயிர்ப்பில்
உருகியதோ மனம் விட்டு!

தாரம் ஆகியவள்
தாயும் ஆவாள்!
தாசியும் ஆவாள்!
தாசி அவள் வேசி அல்ல!
காமக் கிழத்தியுமல்ல!
தேவனின் அடியவள்; பக்தை!
இறைவன் அடி சேர்ந்த இறைவியே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
எப்படி இருக்கீங்க செல்வி? அற்புதமான ஆழமான கவிதை வரிகள்... நெஞ்சை அள்ளி விட்டது செல்வி... நிஜம் தான் தாரமானவள் தாயாகவும் தாசியாகவும் ஆவாள்... அருமை... வாழ்த்துக்கள்...
 

Banumathi Balachandran

Well-known member
ராதைக்கு கிருஷ்ணன் மேல் சுந்தரி விஷயத்தில் மிக கோபம் போல ஹாஹா 😆😆😆
மணி நந்தினி திருமணத்துடன் உதய் மஞ்சரி திருமணம் நடக்குமா?
சாமை கடத்தி என்ன உண்மையை தெரிந்து கொள்ள போகிறான் 🤔
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க செல்வி? அற்புதமான ஆழமான கவிதை வரிகள்... நெஞ்சை அள்ளி விட்டது செல்வி... நிஜம் தான் தாரமானவள் தாயாகவும் தாசியாகவும் ஆவாள்... அருமை... வாழ்த்துக்கள்...
வாவ் சாந்தி நல்லா இருக்கீங்களா? நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கீங்க.
 

Shanthigopal

Well-known member
வாவ் சாந்தி நல்லா இருக்கீங்களா? நாங்கள் நலம். நீங்க எப்படி இருக்கீங்க.
நல்லா இருக்கேன் செல்வி.. நிறைய நாட்கள் ஆகிவிட்டது உங்களிடம் எல்லாம் பேசி... இனி தொடர்வோம்...
 

தாமரை

தாமரை
முழுக்க முழுக்க கிருஷ்ணார்ஜூனின் வலி மட்டுமே..🤕🤕🤕🤕🤕🤕

ஒரு புறம் பெண்கள் வாழ்வைக் காப்பவனாய் அவதாரம்..
மறுபுறம் சொந்தமாய், உறவாய் இருக்கும் பெண்களின் வாழ்வை வைத்து விளையாடுபவனாய்.. அரிதாரம்..
இரண்டுமே அவனை நிம்மதியா வைக்கப் போறது இல்லை..

நண்பனை தவிர யாரும் அவனின் வலி வேதனைகள் அறிந்தவர், புரிந்தவர் இல்லை...

ஒன்னு மட்டும் புரியுது ஸ்ரீமா.. நீங்க செல்லம்னு சொன்னா.. அவன கதை முழுக்க.. வச்சு வச்சு செய்வீங்கன்னு..😐😐😐😐😐
25781
 
Top