கண்ணன்...
தோழிக்கு தோள் கொடுத்து துயரத்தை தோள் தாங்கி நட்புக்காய்
துன்பத்தை வாங்கி புன்னகையால்
அவளுக்கு துணை நிற்கும் இவன் ஹீரோவை விட சிறந்தவன் தான்...
உண்மையில் அவளை காயப்படுத்த யோசிக்கும் இவன் செயல் தான் அவள் எந்த அளவுக்கு துன்பத்தை கடந்து வந்திருக்கா என்பதை உணர்த்தும் கதாபாத்திரம்....
அவளோட வனவாசத்திற்கு முன் அவளுக்கு நடந்தது என்ன என்பதை அவன் தெரிந்திருப்பானோ இல்லை அவனுக்கு அவள் துயரத்தை கண்டு துணை நிற்கிறானோ ஆனால் சிறந்த நண்பன்...
அவள் மனசுல இருந்த கொஞ்ச குற்ற உணர்வு துடித்து எறிந்து விட்டான் இந்த ராவணன். இனி அவள் மனதில் உரிமை உணர்வுகளால் தான் இனி வரும் எல்லாமே அது வெறுப்பில் தொடங்கி காதலாக முடியும் இரண்டுக்கும் இடையே ஒரு நூல் அளவு தான் இடைவெளி சரி தானே ஸ்ரீ மா
கண்களில் சிவப்பும் கரங்களில்
மென்மையுமாய் அவனென்றால்
குற்ற உணர்வு கடந்து மனதில்
வெறுப்பாய் அவள் நின்றாள்
காதலோ இருவருக்குள்ளே வர
அனுமதியை கேட்டு நின்றால்
காலமோ இதற்கான நேரம்
இதுவல்ல என தடையாகி நிற்கிறது...
காலத்தை வென்றவன் மனிதன்
காதலை காவியமாக மாற்றுவான்
இந்த அர்ஜூன் ...
இவன் நினைக்காமல் எங்க ஹீரோயின் எதுவுமே பண்ண மாட்டாள் என்பது தான் இங்கே ஒவ்வொரு முறையும் யோசிக்க தோனுது...
அவனுக்கு உணர்வுகளை இவள் கொன்று விட்டாள் என்றால் இவனுக்கான அவளுணர்வுகள் மறக்கப்பட்டு விட்டது அவளுக்கு போலவே...
இதை நினைவில் கொண்டு வருவது நீங்க தான் செய்யனும் ஸ்ரீ மா...
ஹீரோயின் மனதை மாற்ற அவள் மனதில் இருக்கும் குற்ற உணர்வு போக்க எதாவது செய்யறத விட்டு இப்படி அவளை வெறுப்பில் ஆழ்த்துவது தவறு ஹீரோ ஆர்மீஸ், எப்பவும் அவளை எதாவது ஒரு வகையில் வேதனை படுத்துவதை இத்தோடு நிறுத்த சொல்லுங்க உங்க ஹீரோவ