All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
அர்ஜீனோட யுத்தம் ஆரம்பிச்சாச்சா?அப்போ கதை அதிக விருவிறுப்பாக போகும்,இன்றைய பதிவு அருமை. :love:😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!



இனிய தோழி,


இல்லத்து நாயகன்

கிராமத்துக் காவலன்

இல்லறம் ஏனோ....

நல்லறம் சொல்லா ஓர் வனம்!




தாயாய் பிள்ளையாய்

கொண்டாடும் நாயகன்...

தாரத்தின் தாத்பர்யம்

தெரியாத கோமகனோ...!



பட்டுச் சிறகடிக்கும்

கூட்டுக் கிளியின் கூக்குரல்...

கூரை ஏறி கூவி நின்ற அவலம்...!

கூட்டில் கூடிய

கொட்டானின் கொடுரமோ...?



ஆணவன் பிள்ளைக்கு

ஊரெல்லாம் ஏங்கி நிற்க...

கொண்டவள் மனம் மட்டும்

கொந்தளிக்கும் கோரமென்ன...?



தொலைக்க நினைத்தவன்

தோட்டத்து பைங்கிளி

பரிதவித்து போராடி

ஊனக்கிளியாய் ....

உயிர் தாங்க வந்து நிற்க...

நேர்ந்திட்ட அவலமென்ன...?


மனிதம் மீறிய

இறைவனின் ஆட்டம்...
இதில்...

ஆணும் பெண்ணும்

ஆவேசம் கொண்டாலும்
ஆக்ரோசம் கொண்டாலும்
அவனுக்கு அவளென
விதி போட்ட முடிச்சுக்கு...
வினையாய் நிற்பது
ஆணவன் பரிகாசமென்றால்
அவன் யார்...?
பெண்ணை மீறிய
ஆணின் ஆசை
காவிய இலக்கணம்
காட்டிய தில்லையோ...?
மண்ணாசையும்
பொன்னாசையும்
கைகொண்டாலும்
ஆறடி நிலமே மாணுட விதியே!
அறிந்தவன் புனிதன் - அவன்
நாம் தேடும் மனிதன்!


வடுக்கள் ரணமாய் சீழ்பிடித்தாலும்
இடுக்கன் களையும் நட்பில்
அன்னவன் மாதவனே!

கோவத்தில் ராவணன்
சுபாவத்தில் கிருஷ்ணன்
பாவத்தில் அர்ஜுனன் - இவன்
மனோபாவத்தில் மன்மதனோ...?


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விறுவிறுப்பான பதிவு...

கிருஷை பற்றி என்னவென்று சொல்ல... எவ்வளவு பொறுமைசாலி இவ்விடத்தில்... அன்பு கொண்டுள்ளவர்களிடம் மட்டுமே அவர்கள் என்ன தப்பு செய்தாலும் சீரணித்து பெரிதுபடுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்வர்... இங்கே அனு உமிழ்ந்ததும் அவளையே துடைக்க சொல்வதும் அவனே துடைத்து கொள்வதும் ஆனால் துடைத்து கொண்ட இடம் தான் அவள் தண்டனையோ?

சரிதாவிற்கு அழகாய் விளக்கமளித்து தந்தை ஸ்தானம் என்று சொல்லி சமாதானப்படுத்தி வீடு வரை அழைத்து சென்று விடுவது அழகென்றால் பாண்டியன் காதலும் அழகோ அழகு...

சரிதா பாண்டியன் கல்யாணமும் சீக்கிரம் எதிர்பார்க்கலாம் கிருஷின் முயற்சியால்...

ஆனால் ஊரில் உள்ள பெண்கள் எல்லாம் கிருஷின் வாரிசை சுமக்க ஆசைப்படும் போது..

கிருஷ் எந்தளவிற்கு உத்தமனாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்...

அனுவிற்கு கிருஷின் நடத்தை புரியவில்லையோ? காதலில் பொறாமை ஒரு அங்கம் தானே... சீக்கிரம் புரிந்து கொள்வானா நம் அனு கிருஷை???

சரிதாவின் தந்தை என்ன சொல்லிவிட்டார் கிருஷிடம்? இத்தனை நாள் ஏன் மௌனமாக இருந்தார்??

அனுவின் சொத்துகள் செல்லாது என்றவுடன் இதனால் பாதிக்கப்படபோவது கண்ணனா? இல்லை அவன் அத்தை அப்பாவா??

கிருஷ்ணார்ஜூன யுத்த வில்லின் குறி யார் மீது?????

நிறைய கேள்விகள் மனதில்...

அற்புதமான பதிவு ஆர்ப்பாட்டமாய்...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்..
 
Top