All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!





இனிய தோழி,

கண்ணியம் காப்பவன்
வேல்விழி நாயகன்
படிதாண்டி நின்றாலும்
பத்தினி அவள் பாகம் காப்பவன்!


காக்கும் கடவுளுக்கு
அவதாரமானவன்....
நோக்கும் பார்வையிலும்
நேர் கொண்ட மன்னவன்!


பாசத்தின் பார்வையில்
பாவியாய் நின்றவன்...
நேசத்தின் நேர்மையில்
ஆவியாய் போவானோ! - அவள்
உயிர் மூச்சாய் வாழ்வானோ!


பச்சை மண்ணும்
பாசையின்றி பரிதவிக்க...
கொஞ்சும் மழலை
கோசம் இன்றி குழிபறிக்க...
கோர விழிப் பார்வையில்
காமப் பேயாய்
கரு அறுக்கும் பாவிகளே! - உன்
உரு அறுக்கும் நாள் வந்தால்
பெண் மகவும் உயிர்க்காதோ...!

பார்வைகள் மாறுவதற்கு
பாசங்கள் காரணமோ...?
நேர்மைகள் மாறுவதற்கு
நேசங்கள் காரணமோ...?
பாசமும் நேசமும்
பாவியாக மாற்றுமென்றால்...
தாயே!
நீ பாவியாய் போனாலும் பாதகமில்லை!
நீ காளியாய் கொன்றாலும் பேதமுமில்லை!
நீ ஆழியாய் பொங்கினாலும் பேரழிவில்லை!
நீ ஊழியாய் சுழன்றாலும் பேர் இழிவில்லை!
அழித்துவிடு உன் மகனை
ஆதியோடு அந்தமாக!
கொளுத்திவிடு உன் மகனை
நீதியோடு நிரந்தரமாக!
சாட்டைகள் எடுக்காமல்
கழிசடைகள் மாறுவதில்லை!
சாமரம் வீசினால்
சமுதாயம் மீறுவது எல்லை!
எல்லைகள் வகுக்காமல்
தொல்லைகள் குறையாது!
முல்லைகள் மலராமல்
பிள்ளைகள் சிரிக்காது! - உன்
பிள்ளைகள் உயிர்க்காது!


காப்பாற்றக் கலங்கும் ராவணனவன்
காப்பற்ற ராதையை விடுவானா?


உயிர் காக்கும் உத்தமி நீ
உன் உயிர் காக்க மறந்தாயா!

மருத்துவம் என்ற மகத்துவம் கற்றவள்
சமத்துவம் என்று தனித்துவம் காட்டியவள்
பெண் என்னும் தாய்மையில்
உரிமையாய் உயிர்ப்பாயா?

பாவியாய் தெரிந்த பேதை
பாரமாய் எரிந்த கோதை
பாவமாய் புரிந்த ராதை
மேதையாய் விதைப்பாளோ!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி







 

Subasini

Well-known member
பொண்டாட்டி ஒரு டாக்டர் கூட தெரியாமல் ஒரு டெரர் ஹீரோ 😂...

அதுவும் அவள பத்தி ஒன்னும் தெரிஞ்சுக்காமல் இருந்து இருக்கான் அது தான் அவளுக்கு அவன் மேல் காதல் ஒன்னும் இப்ப வரவில்லை...

பெண் என்பவள் பூ, தேன்,நிலா,
இப்படி எதுவுமே இல்லை
அவள் ஒரு உயிர்...

அவளை அவளாக பார்த்தால்
பாசம் பிறக்கும்,

அன்பு ஊற்றெடுக்கும் ஒரு அருவியாய்

காதல் காற்றாற்று வெள்ளமாய்
பாய்ந்து வரும்

பெண் என்பவள் தேவதை அல்ல
எல்லாம் பொறுத்து போக

அவளுக்கு வலிக்கும்
வேதனைக்கும்
ஏமாற்றமிருக்கும்
சினம் வரும்
வார்த்தை சிதறிவிடும்
திறமையிருக்கும்
பண்பிருக்கும்
ஒரு பானை சோறிற்கு ஒரு சோறு பதம் அவளுக்கு பொருந்தாது
பாட்டன் வார்த்தைகள் கொண்டு அவளை செதுக்காதே
அவளை அவளாக விடு அந்த சீதையை விட சிறந்தவளாக இருப்பாள்

அவளை இந்த உலகம் புரிய வாழ விடு அனைத்தும் கற்று சிறந்த பெண்ணாய் உன்னை அன்பால் சிறப்பிப்பாள்....

இதோ இன்று அவன் மனதின் அழகை அழகாக ஒரு பெண்ணாய் உணர்ந்தவள் அவனின் காதலையும் ஒரு மனைவியாக உணர வைக்க தவறாதே...

அன்று இதே போல் ஒரு காதலியாக மனைவியாக உன்னை ஆரோகணம் செய்வாள் காதலால்....

அவளை அவளுக்காய் நேசி, அவள் உனக்காய் உன் உலகத்தை சொர்கமாக்குவாள்...

சூப்பர் எபி ஸ்ரீ மா...

ஒவ்வொரு எபியிலும் ஹீரோயின் மாறிட்டே வர என்பது நன்றாகவே புரியுது...

அடுத்த எபிசோட் வெயிட்டிங் ❤️
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அனுவிற்கு கிருஷின் மேல் நல்ல அபிப்பிராயத்தை கொணர்ந்த பதிவு...

உள்ளாடை விளம்பரத்தை கண்டும், குழந்தையை கண்டு கலங்கி காப்பாற்ற சொல்வதும்...

ஆனால் இரண்டு வயது குழந்தைக்கு இந்த அவல நிலையா? அய்யோ! எங்கே போய் கொண்டு இருக்கிறது இவ்வுலகம்? அவன் எவ்வளவு காம கொடூரனாக இருப்பான்... இவனை எல்லாம் செயல்பட முடியாமல் செய்து பிணத்தை நாய் நரிகளுக்கு போட வேண்டும்... கொடூரமான வேதனை... கிருஷ்ணார்ஜூன் கோர்ட்டில் இவனுக்கு கொடூரமான தண்டனை காண ஆவல் ஸ்ரீ மேம்... மனம் புண்ணாகி வேதனை...

உதயன் அற்புதமான காதலன்.. அழகாக தாய் தந்தையிடமே தன் காதலை சொல்லி மஞ்சுவை பெண் கேட்க செய்வது அருமை... உடனே பெண் பார்க்க புறப்பட்ட பெற்றவர்கள் அழகென்றால் மணி தன் நண்பனான கிருஷை பெற்றோர் ஸ்தானத்தில் வைத்தது அழகோ அழகு...

அனு அம்மா மாமா மேல் கேஸ் புக்காகி முன் ஜாமீனும் வாங்கி விட்டார்களா? விடுவானா நம் கிருஷ்?

அனு டாக்டரா? கிருஷிற்கே இப்போது தான் தெரியுமா?

கிருஷ் கலங்குவதை கண்டு நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் என்ற அனு மனமறிந்து சொல்லும் நாள் எந்நாளோ?

அருமையான விறுவிறுப்பான பதிவு...
 

ilakkiyamani

Bronze Winner
இன்றைய பதிவில் கருணை அன்பு,கோவம் ,காதல் இவைகளின் உணர்வு வெளிப்பாடு அருமை,
AK sollrathu pondru nammal naattai thiruttha mudiyathu,naam irukkum oorrai thirutthalam endra varikal arumai mam. 👌😍:love:😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!





இனிய தோழி,





ஆதிக்க நாயகன்


ஆவேசம் கண்டு


அப்பாவை அன்பனில்


அருவமாய் கண்டவள்...


காதல் வாழ்வது


தோற்பதில்லை தோழி!





பாதிப்பின் பாதிப்பில்


பாவியாய் போனவள்


பாதிப்பு கேட்டால்...


பாதியாய் வந்தவன்


பாதிப்பின் பாவத்தை


பாசத்தில் வென்று


பாரங்கள் தீர்ப்பானோ...?





நீதியின் பாதையில்


தனி நீதி கண்டவன்...


நீதி கேட்கும் பெண்ணுக்கு


பிரதி நிதி ஆவானோ...?





காதல்....!


எத்தனை காதல் !


வகைப் படுத்தி...


மிகைப்படுத்த ...


காதலின் வரிசையில்....





பார்க்காத காதல்...


பரவசமோ...?


ஆவேசக் காதல்....


ஆக்ரோசமோ...?


அன்பான காதல்...


அனுபவமோ...?


பண்பான காதல்...


பாரம்பர்யமோ...!


விட்டுகொடுக்கும் காதல்...


விசுவாசமோ...?


காத்திருக்கும் காதல்...


காவியமோ...?


எத்தனை காதல்


ஏகாந்தமாய் வந்தாலும்


மாமாங்கம் வாழும்


மங்காத காதல்....


அன்பில் ஆளுமே!








வாழ்த்துக்கள் தோழி, நன்றி



 
Top