கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 27)
இருங்க, இருங்க.. புடைவை கட்டி விடறான், நெற்றியில் முத்தமிடறான் சரி... அது ஏன், அவ எதிர்க்க ட்ரெஸ் சேஞ்ஜ் பண்ண மாட்டேங்கறான், அதே மாதிரி அவளை வெட்கப்பட வைக்கணுமின்னா நேரிடையா வெட்கப்பட வைக்க வேண்டியது தானே...? அதை விட்டு கண்ணாடி பிரதி பிம்பத்துல தான் சீனை ஒட்டுறான்...?
பொண்டாட்டி கிட்ட அவனுக்கு இல்லாத உரிமையா...? வை திஸ் ஆக்சன் ..? சம்திங் பிஷ்ஷி !
பின்னே என்னப்பா...? நீ ஒருத்தியை உருகி, உருகி காதலிப்ப. அண்ணன்காரன் ஊடால புகுந்து விளையாடி அதை தடுத்திருப்பான். நீயும் சரின்னு இன்னொரு பொண்ணு ப்ரபோஸ் பண்ணவுடனே அவளுக்கு ஓகே சொல்லி, அவளையே கட்டியிருப்பே. எல்லாம் சரி தான். ஆனா, இப்ப யாரு உன்னை குப்பையை கிளறச் சொன்னது...? கிளறினதும் இல்லாம, அதை உன் பொண்டாட்டி மூஞ்சியிலயே கொட்டினா..., நாத்தத்துல கெட்ட வார்த்தை மட்டுமில்லை, உன் மூஞ்சிலயே ஓங்கி குத்தினாலும் வாங்கிக்கணும், காறித் துப்பினாலும் துடைச்சுப் போடத் தெரிஞ்சுக்கணும் தானே...? யாரா இருந்தாலும்..
உனக்கு வலிச்ச மாதிரித்தானே
எதிராளிக்கும் வலிக்கும்.
இப்ப இதை சொல்லலைன்னு யாரு அழுதா...? மூடி வைச்சது
மூடி வைச்ச மாதிரியே இருந்துட்டா.... யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை தானே ? அதை விட்டு உண்மையை சொல்றேன், தொன்மையை சொல்றேன்னு..
உன்னை யாரு இப்ப குத்திக் கிளறுற வேலையை பார்க்கச் சொன்னது...? நீயென்ன கோழியா... குப்பையை கிளறதுக்கு...????
அடேயப்பா...! இங்க ஒவ்வொருத்தரும் ஒரு முகமூடி போட்டுட்டுத்தான் சுத்தறாங்க போல...? இது தான் நாணாவோட முகமூடியோ..???
ஓ மை காட்...! அப்படின்னா சக்தியும் அவளை நெருங்கலை,
சக்குவும் யாரையும் நெருங்க விட்டிருக்கலைன்னா....
அப்ப, நிச்சயமா இது மெடிக்கல் மிராக்கிள் குழந்தைத் தான்...!
எஸ்... இது மாதிரி ஒரு 13 வயசு பொண்ணு கர்பமாகி குழந்தை
பிறந்ததா, நான் படிச்சிருக்கேன்.
இவளுக்கும் அது மாதிரி தானோ...????
CRVS (or) CRVS 2797