கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
(அத்தியாயம் - 8)
பரவாயில்லையே! இன்னைக்கு சக்தியோட மனம் கவர்ந்த தேவதையின் அழகு தரிசனத்தால... மினி கிட்ட ரொம்ப சகஜமா பேசறான்னு எங்களுக்கே தோணும்போது
மினிக்கு தோணறதுல என்ன ஆச்சரியம் இருக்கப்போகுது ? அதாவது, நெல்லக்கு வார்க்குற நீர், புல்லுக்கும் கொஞ்சம் பாயுது போல...!
அது சரி ! மினிக்கு வாக்கு கொடுத்துட்டான்.... அதனால போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணிங்கற மாதிரி இனி மினியோட காதல் சக்ஸஸ் தான். பட், நாணாவோட காதல் டமாலா....? அப்படித்தானே... புரிஞ்சுப்போச்சு....!
அடப்பாவி..! ஆனாலும் இந்த சக்தி செய்யறது கொஞ்சம் கூட சரியில்லை. வெளி நாட்டில படிச்சா.. அந்த கல்ச்சரை அங்க மட்டும் ஃபாலோ பண்ணுங்க தப்பேயில்லை. ஆனா இங்கே வந்த பிறகும் ஹக், கிஸ் இதெல்லாம் இங்க ஏன் ஃபாலோ பண்றிங்க...? சரி, இங்க இருந்து தானே அங்கே போனீங்க, அப்ப இங்கத்தைய கலாச்சரத்தை ஏன் அங்கே எவனும், எவளும் ஃபாலோ பண்ண மாட்டேங்கறிங்க...?
அத்தனை கேவலமான கலாச்சரமா நம்ம கலாச்சரம் ?
புறந்தது, வளர்ந்தது இங்க தானே,..? மேற்படிப்பு மட்டும் தானே அங்கே. அதெப்படி ஒரு அஞ்சாறு வருசத்துல அந்த பழக்கம் நம்மளை தொத்திக்கும்ன்னு சொல்றது அபத்தமா இல்லையா...? அப்படின்னா...தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சொல்றது பொய்யா ? அதெப்படி அவங்கவங்களுக்கு ஏத்த மாதிரி எல்லாத்தையும் மாத்திப்பாங்களோ...? இது எஸ்கேப்பீஸம் மாதிரி தோணுதே..???
ஆனா, இதை சக்தி முதல்லயே செஞ்சிருக்கலாம் தானே...?
ஏன் தர்சனாவுக்கு ஃபால்ஸ் ஹோப் கொடுக்கிற மாதிரி பேசணும்....? பேபி,
டார்லிங்ன்னுலாம் கூப்பிடணும்?
இதெல்லாம் அவங்கவங்க நேசிக்கிறவங்களை ஆசையாக
கூப்பிடற செல்லப் பெயர்கள் தானே....? இதுவும் ஒரு ஏமாத்து வேலை மாதிரி தானே...? அவளை பிடிக்கலைன்னா முதல்லயே அவாய்ட் பண்ணியிருக்கலாம்
தானே..? முதல்ல ஏன் மேலே விழுந்து பிராண்டற அளவுக்கு
பழகணும்..? பழக விடணும்...?அப்புறம் எதுக்கு பேக் அடிக்கணும்...? இவஙடக பண்ற கூத்தெல்லாம் சக்கு & அவனோட நண்பன், ஏன் ஆஃபீஸ்ஸே நேரிடையா பார்த்திருக்காங்க தானே...? இவன் அவளை வைச்சு செய்யறதும் இல்லாம..
தர்சனா வேற இவன் கொடுத்த அட்வான்டேஜ்ல தானே பார்க்கிறச நேரத்துல எல்லாம் சக்குவை பலத்தடவை அவமதிச்சிருக்காத் தானே...? இன்னைக்கு என்ன புதுசா சீன் போடறதும் இல்லாம, எந்த மரத்து கீழே உட்கார்ந்து ஞானதோயம் வந்ததுன்னு இப்படியெல்லாம் பேசறான்னு தெரியலையே..? போகட்டும், நாளைக்கே இவன் சக்குவை காதலிக்கிறேன்னு
சொன்னாக்கூட, சக்குவே இவனோட பழைய நடத்தையைப் பத்தி கேள்வி எமுப்புவா தானே...? அவ அப்படி கேட்டாலும் அதுல தப்பில்லை தானே..? கற்புன்னு கொண்டு வந்தா.....ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம்ன்னு சொல்லி வைச்சிருக்காங்க தானே..? அது இவனுக்கு அப்ப மண்டையில உரைக்கலையா...?
இல்லை, பணக்காரன் எதை வேணாலும் செய்யலாம் என்கிற தெனாவெட்டா...?
இல்லை, சக்குக்கு இதுவே அதிகம்ங்கிற அலட்சியமா..?
புரியலையே...??????
(அப்பாடா...! இதெல்லாம் என் மனசுல உள்ள கேள்விகள்,
சந்தேகங்கள். இதையே சக்கு
ஃபாலோ பண்ணாலும் தப்பே இல்லை. ஏன்னா, எங்க ஹீரோயின்ஸ் யாருமே இப்படி
டபிள் கேம் ஆடுறவங்க கிடையாது தானே..? அப்ப தைரியமா நாக்கை புடுங்குற மாதிரி கேட்கலாம் தானே..?
பதில் சொல்லுங்க...?
பதில் சொல்லுங்க...??)
இதோ.. சனாவை பத்தி அபார்ஷன் வரைக்கும் தெரிஞ்சு வைச்சுக்கிட்டும், அவ கிட்ட ஏன் இத்தனை ப்ரீயா பழகினான் ?
இப்ப ஏன் நழுவுறான்னு புரியலையே ? அவங்கப்பா கிட்டேயும் பார்க்கலாம் என்கிற மாதிரித்தானே பேசி வைச்சிருக்கான். இப்ப ஏன் தவிர்க்கிறான்..? முதல்லயே அவாய்ட் பண்ணியிருக்கலாம் தானே ?
அதாவது அவனோட தங்கச்சி என்கிறச்ச, துப்பறியும் நிறுவனத்தைக்கூட நாடுவான்.
ஏன்னா, அவன் தங்கச்சிக்கு அக்மார்க் முத்திரை குத்தின நல்ல மாப்பிள்ளை மட்டும் தான் வேணும். அதே, சரக்கு விஷயத்துல மட்டும் அடுக்கு
நேரெதிர்.. அப்படித்தானே..?
இதையே நாசா எதிர்பார்த்தா
சக்தி மூஞ்சியை கொண்டு போய் எங்க வைச்சுப்பான்..
சொல்லுங்க, சொல்லுங்க..?
அதாவது, இவனுக்கு வந்தா இரத்தம், எதிராளிக்கு வந்தா
டொமேட்டோ சாஸ்... அப்படித்தானே..??
வை திஸ் பார்ஷியாலிட்டி...???
பிகாஸ் சக்கு இஸ் மிடில் க்ளாஸ்
அதானே...???
திஸ் இஸ் வெரி அன்ஃபேர்...!
CRVS (or) CRVS 2797