கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...!
எழுத்தாளர்: ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 43 & 44)
இது நல்ல பாயிண்ட்டா இருக்குதே...! சக்திக்கு பொண்ணு பார்க்க போறச்ச சக்குவும் வரணுமோ...சூப்பர்.
அய்யோ ராமா..! இந்த சக்கு ஏன் எல்லா முடிவையும் ஒருதலைபட்சமா எடுக்கிறதோட, எல்லாத்தையும் தன் தலையிலயே போட்டுக்குறாளோ தெரியலை ?
ஆக மொத்தம், காதல் மனம் கூடு விட்டு கூடு பாய்ஞ்சிடுமேன்னு தான், இவ இன்னமும் பயப்படுறா. மத்தபடி இவ நெஞ்சு முழுக்க அந்த காதல் இன்னமும் அதே உயிர்ப்போட தான் இருக்குன்னா... இவ இப்படி ஓடி ஒளிய என்ன தான் காரணம்...?
அந்த கர்ப்பமா..?
அதானே பார்த்தேன்... மனைவி போடற நாடகம் சர்வேஸ்வரனுக்கு புரியாமலா இருக்கும்..? அடப்பாவிங்களா !
அப்போ விஜயா உதயரேகா ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிங்களா..? ஆனா, நடிப்பு மாதிரியே தெரியாம, விஜயா பக்காவா நடிச்சு இருக்காங்க.
முதல்ல இந்த சக்குவையும் அவளோட மனசாட்சியையும் பிரிச்சு வைக்கணும். அப்பத்தான், சக்கு அதை சொல்றதெல்லாம் கேட்டு
தப்புத்தப்பா முடிவெடுக்காம
இருப்பா.
பின்னே..! இந்த சண்டி ராணி சக்கு கிட்டே மயிலே, மயிலே இறகு போடுன்னா நடக்குமா...
இப்படி அதிரடியா ஏதாவது பண்ணாத்தான் மாரியாத்தா கொஞ்சமாச்சும் மலையிறங்கி வருவான்னு தன் நாயகியைப் பத்தி நல்லா தெளிவா புரிஞ்சு வைச்சிட்டிருக்கான் சக்தீஷ்வரன்.
CRVS (or) CRVS 2797