கலாபம் கொ(ல்)ள்(லு)ளும் காதலா...! ஸ்ரீ கலா
(அத்தியாயம் - 19)
அதானே..! சக்குவால தான் நேசிக்கிறவனை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு,
மசிரை விட்டுக் கொடுத்துட்டா.
எதைக் கொடுத்தோம்ங்கிறதா
முக்கியம்..? நமக்காக யாரு கொடுத்தாங்கிறது தானே முக்கியம். அப்படிப்பட்ட நேசத்திற்கு விலை மதிப்பே இல்லைத்தானே...???!!!
யப்பா...! அடேய் சக்தி..! உன் மனசுல என்ன இருக்குதுன்னு எங்க கிட்டயாவது சொல்லித்
தொலையேண்டா...! இத்தனை நாளா, இது காதலா.. இது காதலான்னு சக்குவைப் போட்டு பிழிஞ்செடுத்துட்டு, இப்ப அவ உண்மையான காதலை உணர்ந்து உணர்வுப்பூர்வமா அதை சொல்றப்ப.......
நீ உணர்வுகளை தொலைச்சு மரக்கட்டையா மாறி நிக்குற.
என்ன டா உனக்கு பிரச்சினை..?
ஏதாவது சொன்னாத்தானே
எங்களுக்கே புரியும்.
அய்யோ...! இவன் எதையாவது மூடி மறைக்கிறானான்னே தெரியலையே...? இவனுக்கு ஏதாவது நோயா...? இல்லை, எங்காவது அடிப்பட்டு குழந்தை பிறக்கிறதுல ஏதாவது பிரச்சினையாயிடுச்சோ...? அதான் இப்படி விலகிப் போறானா..? இல்லை, இவனுக்கே தெரியாத
வேறெதாவது வில்லங்கத்துல மாட்டிக்கிட்டானோ....?
அவளோட சின்ன, சின்ன திங்ஸை கூட பொக்கிஷமா எடுத்து பத்திரம் பண்ணி வைக்குறவன், இப்ப அவ குங்குமத்தை எடுத்து நெத்தியில வைக்கச் சொன்னதுக்கு ஏன் இத்தனை
தயக்கம் காட்டுறான்...?
அவன் உயிர் பிழைச்சதுக்கு காரணமே சகுந்தலா செய்த
சுமங்கலி பூஜையினால் தான்னு நினைக்கிறவன்...
இப்ப அவ அவனுக்காக உசிரையே கொடுப்பேன்னா
ஏன் தயங்குறான்...?
இப்ப அவளோட காதலை பார்த்து ஏன் பயப்படறான்...?
எம்மா.. ஸ்ரீ ம்மா..! நீங்களாவது கொஞ்சம் சொல்லிட்டு போயேன். எங்களுக்கு மண்டையில இருக்கிற கொண்டையை பிச்சுக்கலாம்
போலயிருக்குதே...! அட ராமா..!
அடிப்பாவி தர்சனா..! ஓடு மீன் ஓட, உறுமீன் வாட காத்திருக்குமாம் கொக்குங்கிற
மாதிரி, என்னாம்மா வொர்ஸ்ட் ப்ளான் போட்டு அதை அப்கிரேட் வேற பண்றா...! ஆனா, சக்தி கிட்ட அது நடக்குமா....? இல்லை, சக்கு தான் அதை நம்புவாளா...?
இல்லை சக்தியோட குடும்பம் தான் அதை நம்புமா...?
தர்சனாவுக்கு என்ன தெரியும்
நம்ம சக்தியைப்பத்தி...? அவனை உள்ளும் புறமும் அறிஞ்சவ சக்கு ஒருத்தி மட்டும் தானே..! நம்ம சக்கு கிட்ட இந்த தர்சனாவோட பாட்சா பலிக்குமா என்ன...? எனக்கென்னவோ...தர்சனா எடுத்த அத்தனை அழகான போட்டோவும் அவளுக்கே பேக்ஃபயர் ஆகப் போகுதோன்னு தோணுது...?
ஆகட்டும், ஆகட்டும்.. ஆகி மானம் கப்பலேறி போயாச்சுன்னு நல்லா பறக்கட்டும். என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்டா மேம்...?
CRVS (or) CRVS 2797