Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
பால்வாடி என்றாலும்
சாம்ராஜ்ய அசோகனின்
அன்பின் தேடலில்
அரவணைக்கும் ஆரணங்கு!
நட்பிலும் கற்பிலும்
அன்பிலும் பண்பிலும்
கனியவள் காருண்யம்
கலங்கரை விளக்கமே!
தன்னைக் கொண்டாடும்
காதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை பந்தாடினால்
பக்கம் வருமோ பால்மனமே…?
தன்னைக் கண்டாடும்
கூதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை துண்டாடினால்
பக்கம் வருமோ அஞ்சுகமே…?
தன்னை மன்றாடும்
காதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை கொண்டாடினால்
பக்கம் வாராதோ பால் நிலவே!
தன்னை தின்றோடும்
கூதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை மன்றாடினால்
பக்கம் வாராதோ தேன் மலரே!
சின்னவளே!
நேர்மையில் நின்றாலும்
காதலின் கனியமுதே! – உன்
கிள்ளை மொழி கண்டால்
கிறங்காத மனமும்
கிரக்கத்தில் வேகாதோ?
வாய்மையில் வென்றாலும்
கூதலின் பனிமலரே! – உன்
பிள்ளை மொழி கண்டால்
இறங்காத மனமும்
இரக்கத்தில் சாயாதோ…?
இரக்கமும் கிரக்கமும்
இல்லாத வாழ்க்கையில்
காதலின் கண்ணியங்கள்
காலவதி ஆகிடுமோ?
இல்லை….
காதலே மெய்யென்று – அதன்
காயமே பொய்யென்று,
அன்புருவாய் நிகர் நின்று
அமுத கானம் பாடினால்…
கூட்டுக்குள் முடங்காமல்
கூவிடுமோ காதலின் உயிர் வலி!
அவன் தேடும் காதல்
அவள் மூடும் காதல்
கொல்லாமல் கொன்றாலும்
கொண்டாடும் கோலாகலமே!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
இனிய தோழி,
பால்வாடி என்றாலும்
சாம்ராஜ்ய அசோகனின்
அன்பின் தேடலில்
அரவணைக்கும் ஆரணங்கு!
நட்பிலும் கற்பிலும்
அன்பிலும் பண்பிலும்
கனியவள் காருண்யம்
கலங்கரை விளக்கமே!
தன்னைக் கொண்டாடும்
காதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை பந்தாடினால்
பக்கம் வருமோ பால்மனமே…?
தன்னைக் கண்டாடும்
கூதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை துண்டாடினால்
பக்கம் வருமோ அஞ்சுகமே…?
தன்னை மன்றாடும்
காதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை கொண்டாடினால்
பக்கம் வாராதோ பால் நிலவே!
தன்னை தின்றோடும்
கூதல் தேடும் மன்னவனே! – நீ
பெண்ணை மன்றாடினால்
பக்கம் வாராதோ தேன் மலரே!
சின்னவளே!
நேர்மையில் நின்றாலும்
காதலின் கனியமுதே! – உன்
கிள்ளை மொழி கண்டால்
கிறங்காத மனமும்
கிரக்கத்தில் வேகாதோ?
வாய்மையில் வென்றாலும்
கூதலின் பனிமலரே! – உன்
பிள்ளை மொழி கண்டால்
இறங்காத மனமும்
இரக்கத்தில் சாயாதோ…?
இரக்கமும் கிரக்கமும்
இல்லாத வாழ்க்கையில்
காதலின் கண்ணியங்கள்
காலவதி ஆகிடுமோ?
இல்லை….
காதலே மெய்யென்று – அதன்
காயமே பொய்யென்று,
அன்புருவாய் நிகர் நின்று
அமுத கானம் பாடினால்…
கூட்டுக்குள் முடங்காமல்
கூவிடுமோ காதலின் உயிர் வலி!
அவன் தேடும் காதல்
அவள் மூடும் காதல்
கொல்லாமல் கொன்றாலும்
கொண்டாடும் கோலாகலமே!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Last edited: