அமரஞ்சலி...
உரிமையில்லாத உறவு
உடைந்து போன நெஞ்சம்
உறைந்து போன மனம்
உருகி நிற்கும் பெண்மை
உறுதியை உடைக்கும் ஆண்
உந்தி தள்ளும் வேதனை
உலைகளமாய் துடிப்பு
உறங்கி போகும் நள்ளிரவில்
உலவிடும் அவன் கரங்கள்
உதறிட இயலாத அவள் நிலை
உள்ளமோ காதலாய்
உறவோ பெயரின்றி நிற்பதாய்
உன் வேட்கை நானானால்
உன் வேதனை துரோகமானால்
உடலால் நீவென்றால்
உள்ளத்தால் உன் இந்த பந்தத்தால்
உயிரற்ற போவேன்
உடம்பால் தீண்டி இதயத்தை
உரசி கைகளில் வரும்
உமையவளின் கண்ணீர்
உன்மத்தம் தரும் வரும் காலங்களில்
ஸ்ரீ மா....
வாழ்க்கையில் விளையாடலாம்... ஒரு பெண்ணின் உணர்வுகளில் விளையாட கூடாது....
நல்லவன் நாலும் தெரிந்தவன் செய்யும் செயல் தான் அவள் காதலை கேலியாக விளையாடுவது...
தெரியாமல் செய்த தவறுக்கு விலை அவள் காதலென்றால்,
தெரிந்தே அவன் செய்யும் தவறுக்கு விலை அவள் உயிராகும் நினைக்கிறேன்...
அது வரை அவன் இப்படி அவளை சீண்டி விளையாடுவான்...
நல்லா இருக்கு அவன் நியாயம்
தள்ளி விடுவான் அவளே அவனிடம் வரனும் நினைப்பான் நல்லவன் பண்ணற வேலை இதா...
எதிர்காலத்தில் அவளே வருவா அப்போ அவனால் இதே அகங்காரத்தோடு அவளை எதிர்கொள்ள முடியுமா ???
என்ற கேள்வியோடு...
கண்டிப்பாக அவள் இப்படியே தான் தாங்கி தாங்கி அவனை நிமிர்வோடு தன்னை தாழ்த்தி வாழ போறா...
இனி வரும் எபியில் பார்க்கலாம்...
இவன் ஒரே ஒரு தடவை... அந்த அர்ஜூன் போல மழை சீன் நிற்கனும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
...
ஒரு கேர் டேக்ருக்கு ஒரு ஜெர்கின் கூட வாங்கி தர முடியாத பிசினாரி பிஸ்னெஸ் மேன் இந்த அமர் சொல்லி கடுமையாக கண்டிக்கிறேன்
அவளுக்கு காய்ச்சல் வந்திருந்தா தெரிஞ்சு இருக்கு டா அமரு...
இதே வேலையா போச்சு இவனுக்கு சமையற்கட்டு இடம் மாத்துங்கோ... அவள் அங்க தான் அவன் வேலையை காட்டறான்
குளிரில் நடுங்கும் அப்பாவி அபலை பெண் ப்ச்ச்.... இந்த அஞ்சலி என வருத்ததுடன்....