All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Oooooooooooo சத்தியமா no words avanodaya வலி yum vethanaiyum அம்மாடி அம்மா..... அவன் அப்பா aaga poraanu therinji தான் avvallavu akroshama nadanthukitaan ah kaanndi எல்லாம் odachi..... Ennaku therinji சொத்து kaaga மஹிமா yum ava அம்மா vum பொய் solraanga lo..... Appo மஹிமா oda contract கல்யாணம் ah இருந்தாலும் avaloda வாழ்ந்தானா...... Ava பண்ணினா thappu avanodaya வாழ்க்கை ah எந்த அளவுக்கு விளையாடி இருக்கு la...... Kaalam கடந்த purithal காதல் எல்லாம் avaluku.... Enna aaga pooguthoo தெரியல.... Ashok கனி kaaga ellaathayum vittutu சதாரண மனுஷன் ah avala kalyanam pannikitu santhoshama வாழ்க்கை வாழ போறாங்க avanodaya காதல் semma.....சஞ்சய் mela ஏன் avanuku avvallavu kovamne puriyala... Enna பண்ணினா அவன்.. Velai ah vittu annupitaan.... Super Super mam... Very very emotional episode
This story is so heart touching sri mam......romba kastama irukku amar ah paarkum pothu......adiye mahima yaaru kuzhaithukku yaaru appa.....anjali unnoda oru thappu nala oru manushanoda vazhkaiye poiduchu......wish to see strong amar and his actions.....
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
"கற்பு நிலை என்று சொல்லவந்தார்
இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்."
பாரதியின் கூற்றில் கற்பு என்பது என்ன?
ஒழுக்கமே!
"கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை"
ஔவையின் கூற்றில் கற்பு என்பது என்ன?
ஓழுக்கமே!
ஒழுக்கம் அது பொதுச்சொல்!
செய்யும் செயல்கள்
ஒழுக்கத்தில் நேர் நின்றால்...
கற்பில் சிறந்தவர் அவர் என்றே
ஏழுலகும் போற்றிடுமே!
சமுதாயத்தின் பார்வையில்
ஒழுக்கத்தை வகைப்படுத்த
கலாச்சாரங்கள் பிறந்ததென்றால்...
உன் சமுதாய ஒழுக்கத்தை
முறையாய் கற்றொழுகு!
சொன்ன சொல் மாறிய ஒழுக்கத்தில்
பெண்ணவள் துரோகியாய் நின்றாலும்,
நின்ற நிலை மாறிய ஒழுக்கத்தில்
ஆணவன் பாவியாய் நின்றாலும்,
இரு மனம் தேடிய அன்பில்
இடியாய் இறங்கியது துரோகமே!
அவமானம் என்னும் வாள்
அறுக்கும் பந்தத்தில்
வெறுக்கும் சொந்தங்கள்
முறிக்கும் அந்தங்கள்!
வாழ்வின் முறை மாறினாலும்
வாழும் நிலை மாற்றலாமோ...?
வாழ்வின் குறை மீறினாலும்
வாழும் கலை மாற்றலாமோ....?
அறியாத வயதில்
புரியாத நிகழ்வில்
திசை மாறிய அன்றில்கள்
திசைக் கொன்றாய் தடம் மாற
நேர்மையின் வறுமையில் அவள்!
துரோகத்தின் வன்மையில் அவன்!
மன்னவனே!
கரை சேரப் பிடித்தது
கட்டுமரம் என்றால்
கரை கடந்துவிட்டால்
விட்டுவிடலாமே!
மன்னவனே!
குறை தீரப் பிடித்தது
பட்டுக்கரம் என்றால்
திரை போட்டுவிட்டால்
கட்டிவிடலாமே!
சமுதாய ஏற்றத்தில்
கற்பில்லா களங்கத்தில்
சிக்கிவிட்ட வாழ்வில்
தத்தளித்து நிற்கும்
தலைமகனே!
உன் அக ஒழுக்கம் ஒன்றே
அரணாகக் கொண்டால்
ஏழ்கடல் கூடத் தாண்டிடலாமே!
பெண்ணே!
நீ தாய்மையில் உயிர்த்து
தலைவனைக் காக்க
மடியதனை நீட்டி விட்டாய்!
நீ வாய்மையில் ஜெயித்து
தலைவனைக் காக்க
பிடியதனை காட்டி விட்டாய்!
ஆருயிர் மன்னவன்
ஆற்றாமல் தவிக்கும்
அலங்கோலம் கண்டு
அன்னையாய் அரவணைக்க
அன்னவனும் முடங்கிடுவானோ...?
அன்பிலே அடங்கிடுவானோ...?
ஆறுதல் கண்டிடுவானோ...?
சிரித்து மயக்கும் கள்வர்கள் முன்னே
எரித்து வெறுக்கும் நல்லவர் எல்லாம்
கோபத்தில் பார்வையில்
எதிராய் நின்றாலும்,
காதலின் பார்வையில்
புதிராய் நின்றாலும்,
அன்பின் பார்வையில்
அன்பர்கள் அன்றோ...!
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? எதிர்பாராத திருப்பங்களும் ஒரு ஆணுக்கு இந்த இழுக்கை மட்டும் ஜீரணிக்கவே முடியாத பதிவு...
ஸ்ரீ மேம் என்ன சொல்வது? அசோக்கின் காதல் கிடைக்க கனி தவம் இருந்திருக்க வேண்டும் அவளுக்காக அனைத்தையும் உதறி விட்டு அவளிடம் அவன் மட்டுமே அடைக்கலமாய்... அற்புதமான காதல் ஜோடிகள்... இது ஒரு வரம்...
சொத்து எதுவும் இல்லை என்ற செய்தியை கேட்ட ஸ்ரேயா இனி மேல் அசோக் பக்கம் கூட திரும்ப மாட்டாள்...
அமரிடம் பேசி சிரித்து கொண்டிருந்த கனியை ஏக்கத்தோடு பார்த்த அசோக்கிடம் எவ்வளவு அழகாய் உங்களுக்கான நேரம் என்று ஒதுக்கி வாழ்த்தை யும் சொல்லி... அற்புதமான நண்பன்...
போதையில் வந்த அமர் முன்னே சிரித்து பேசி கொண்டுள்ள அஞ்சலி மற்றும் சஞ்சய்ஐ பார்த்தவனுக்கு கோபம் தலைக்கேற வேலையை விட்டே துரத்தி விட்டான்... ஆனால் எங்கோ கோபத்தை அவன் மேல் காட்டி விட்டானோ? ஆனால் எவ்வளவு கேவலமான பிறவி நீ என்று ஏன் சஞ்சய் ஐ பார்த்து சொன்னான் அமர்? என்ன செய்து அமரை இந்த அளவிற்கு கோவப்படுத்தி விட்டானோ தெரியலையே?
அமர் தனக்கு தெரிந்த செய்தியால் அவனையே அவனுக்கு பிடிக்காமல் தன்னையே சேதப்படுத்தி கொள்ள சத்தம் கேட்டு ஓடி வந்த அஞ்சலி அவன் இருந்த நிலை கண்டு இதயம் துடிக்க அவனுக்கு முதலுதவி செய்ய முற்பட... ஸ்ரீ மேம் என்னதான் அமரின் மனைவி தான் தோன்றி தனமாய் இருந்தாலும் இந்த கர்ப்பம் எந்த ஆண்மகனையும் ஆத்திரம் கோபம் எல்லா உணர்ச்சிகளும் எல்லையை கடக்கும்... அச்சோ! இதிலிருந்து எப்படி மீள போகிறான் என்று தெரியவில்லையே?
கடைசி கவிதை வரிகள் மனதை கசக்கி பிழிந்து விட்டது... நிஜம்தான் ஆண்மகனுக்கு வெட்கம், மானம், கோபம், வலி மற்றும் கண்ணீரில்லையா ஒவ்வொரிடம் ஏமாந்த போது... அற்புதம் ஸ்ரீ மேம்..
மனதை ரணமாக்கிய பதிவு... அனைத்து காட்சிகளும் எங்கள் கண் முன் உயிரோவியமாய்...
ஸ்ரீ மேம் இந்த கர்ப்பத்தை காரணமாய் வைத்து அவளிடமிருந்து அவன் விடுபட்டு கொள்ளளாமே? ஏன் இந்த வேதனை? இந்த நரக வேதனையை அவன் அனுபவிக்க தான் வேண்டுமோ? ஏன் அமர் மனைவியோட தந்தைக்கு தெரியவில்லையா? அமர் வாழ்வை நாசம் செய்து விட்டோம் என்று..
ஸ்ரீ மேம் இந்த கர்ப்பத்தை காரணமாய் வைத்து அவளிடமிருந்து அவன் விடுபட்டு கொள்ளளாமே? ஏன் இந்த வேதனை? இந்த நரக வேதனையை அவன் அனுபவிக்க தான் வேண்டுமோ? ஏன் அமர் மனைவியோட தந்தைக்கு தெரியவில்லையா? அமர் வாழ்வை நாசம் செய்து விட்டோம் என்று..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.