நயனி மா.. மொத்த ஆர்மிய என் பக்கமா திருப்பிட்டீங்க.. மகிழ்ச்சி
ஆனா.. உண்மையிலேயே.. என் புரிதலை தான் சொல்லிருக்கேன்..
அபய்.. அசாதாரணமானவன்..
அவனின் கோபம்.. காதல்.. பாசம்.. எல்லாமே அதீதம் தான்.. அதான் அவன் ஹீரோ..
தன் வாழ்வை தன் தமக்கை வாழ்வை சிதைத்தவனை.. வஞ்சம் வைத்து.. தண்டனை முடிவு செய்து பழி தீர்த்தவனும் அவனே..
அதே எதிரியின் மகளை.. உயிருக்கும் உயிராய் காதலித்து.. மை ஸோல்.. கரேஜ் .. லைஃப் னு புலம்புபவனும் அவனே..
அவளின் தந்தை இறந்தபின்.. தீர்ப்பு எழுதின பேனாவை உடைத்தது போல் அவளை.. தூக்கி எறிந்ததும் அவனே..
இன்று தனது மனையாளாய்.. மனதிற்கு இனிமை தரமாட்டாளா என்று ஏங்கி நிறபவனும் அவனே..
போதைமருந்து உட்கொண்டேனும்.. தன் தமக்கையின் உயிர்வலி.. மனச்சிதைவை
. விக்னேஷ்வருக்கு கொடுத்திட அவளை உடல் முழுக்க காயங்களாய் துடிக்க வைத்ததும் அவனே.. இன்று.. அவளின் கால்நகப் பெயர்வுக்கும் கலங்கி.. மார்பில் சுமப்பவனும் அவனே..
தம்பியாய் பழிவாங்கினான்.. கணவனாய் தனைத் தானே தண்டித்துக் கொண்டான்.. தகப்பனாய்.. மாமனாய் நெறி பிறழாதவன்.. காதலனாய் அவளின் காதலுக்காய் ஏங்கி நிற்கிறான்..
கடலில் கரைத்த காயமாய்.. அவளின் காதலை தேடுகிறான்..
இரு குழந்தைகளை பதினெடடுமணி நேரம் போராடி அறுவை சிகிச்சையில் பெற்றெடுத்தவள்.. இதைவிடப் பெரிய வலிசகித்து தானே வாழ்ந்தேன் என்றதும் கண்டிப் போகிறான்.. தான் அவளுக்கு தந்த வலிகளை எண்ணி..
அசிங்கம் என்ற ஒரு வார்த்தைக்கு அளவிலா சினம் கொண்டவன்.. அவளின் நிலையில் நின்று பாராதவன்.. அடிபட்டதும் துடித்துப் போகிறான்..
அவன் முரண்களின் மொத்த உருவம் தான்.. எனினும்.. .. மாறாக் காதல். உறவின் நேசம்.. அன்பான தகப்பனாய் மனம் கவர்பவன். .
போதுமா..