தாமரை
தாமரை
என் பெயர் ம்ளிர்…
ம்ளிர் ம்ருதை…
ஒளிரும் பூமி ன்னு பேர் வச்சவங்க.. என்னோட அம்மா தமயந்தி எட்டு வயசுலேயே இறந்திட்டாங்க..
அதற்கு அப்புறம் தாயுமானவரா நின்னு...எனை வளர்த்தவர் என் அப்பா.. பதினெட்டு வயது வரை.. அம்மா இல்லைங்குற குறையே தெரியாம வளர்த்தார்.
படிச்சுட்டு இருந்த எனக்கு.. திருமணம்னு சொன்னதும் வந்த கோபம் ..அவர்.. அந்த கனடாவின் கோமான் அபயவிதுலன.. புகைப்படத்தில் பார்த்ததும்… எங்கோ மறைந்து போயிடுசசு.. அவரை நேரில பார்த்ததும் மிச்ச செச்சம் இருந்த தயக்கமும் ஓடிப்போக.. கல்யாணம் பண்ணிக்கிட்டேன்… கண் நிறைய கனவுகளும்.. மனம் நிறைய ஆசைகளுமா..
முதல் இரவு...ஏதேதோ கற்பனைகளோட பள்ளியறை புகுந்த எனக்கு கிடைத்தது.. …………
உலக உயிர்கெளெல்லாம்.. இன்பம் னு சொல்லி கொண்டாடுற
காதல் …. அது கானல் நீர்.. ஆ மறைஞ்சு போச்சு.
கலவி அது… என்னைப் பொறுத்த வரை..
கொதிக்கும் கொப்பரை… வறுக்கப்பட்டு துவண்டு கிடந்த என் மீது வீசப்பட்டது விவாகரத்துப் பத்திரம்..
என் தந்தை.. ஒருபெண்ணிற்கு செய்த கொடூரத்திற்கு பதில்.. தண்டனை தான்… எனது இந்த ஒரு நாள் திருமணமும்.. சில மணிநேரஉயிர் வதையுமாம்..
இவ்வளவு நேரம் என் உடலின் உள்ளும் புறமுமாய் இருந்த தகிப்பு.. காந்தல்.. வலியை விட அதிகமா வலிச்சது.. என் பெற்றவர் சுய உருவம் கண்டு.. நான் பெற்ற என் மணாளனின்.. மணாளனா… ம்ஹூம் என் தந்தையை தண்டிக்க வந்த நீதி தேவனைக் கண்டு…
அஞ்சினேன்.அவன் முகம் காண.. தந்தேன் அவன் கேட்ட விவாக விடுதலை… தந்தையின் மரணம் .. என் நிலை கண்டா.. என் கேள்விகள் குத்திக் கிழித்தா.. நின்று கொன்ற நீதியாலா.. நான் அறியேன்…
வெளியேறினேன்… அவர் தந்த... கூட்டை விட்டு .. தொலைந்து போனது.. நம்பிக்கை .. வாழ்வு.. குன்றியிருந்த நேரத்தில்.. கடவுள் காட்டிய வெளிச்சமாய்.. வயிற்றுச் சிசுக்கள்.. காமக் கொடூரனின் மகளிற்கும் கடவுள் கருணை செய்துவிட்டார்.. பற்றிக் கொண்டேன்.. கொம்பற்ற கொடியாய்.. தரையில் புரண்டு கிடந்த எனக்கு.. படர ஒரு பந்தலே கிடைத்தது.. பற்றி எழுந்தேன்.. புது வாழ்வு.. அதை அமைக்க.. ஐந்து நெடிய ஆண்டுகள்..
தொழில் தேடிச் சென்ற இடத்தில்.. அவன்..அவர்…
அறிந்தது போல.. கண் இமை முடி கூட காட்டிக் கொள்ள வில்லை.. தொடர்நத கொடும் நாட்களில்.. குழந்தைகளை சொந்தம் கொண்டாடுகிறார்.. கோடிக்ணக்கில் செல்வம் என் பேரில் என்கிறார்..
மன்னிக்கவும் மறக்கவும் இருவருக்கும் முடியவில்லை.. தாமரை இலைத் தண்ணீர் என வாழ்வு.. ஒரு திங்களாக என் குழந்தைகளின் தகப்பனாக குறைவின்றி இருப்பவர்.. சில நாட்களாக.. எதை மறைக்கிறார்..
காயத்தை மறைப்பதும்.. காதலிக்கிறேன் என்பதும்.. எல்லாமே.. இன்னமும் விலக்கி நிறுத்துவதாய்..
இதை விட அன்போடு காதலோடு.. பார்த்து தானே கணையாழி தந்தார்.. மறுநாளே இல்லை... அது பழிக்கு அச்சாரம் என்று விட வில்லையா..
கணவனின்
சாபத்தினால் பாறையென உருமாறியவள் நான்.. இப்போது சிற்பமாகு என்றால் எப்படி ஆகுவது..
எனக்கு உயிர் வர என் கணவன் ராமன்.. என்று உணர வைக்க வேண்டும்.. அவனின் வலி எனக்கு அறிமுகம்.. காதல்..????????
எப்போது காட்டினான்..???
அவன் தந்த பணத்தில் என் குழந்தைகளுக்கு உடைகள் எடுக்க மறுத்தவள் நான்.. அவன் தந்த நகை வாங்கினால்.. அவன் பணத்திற்கு பல் காட்டியது ஆகாதா..
எந்த உரிமையில் எடுத்துக் கொள்வது.. மனைவி யா.. அவனின் குழந்தைகளுக்கு தாயா.. அவனின் சொத்துக்களுக்கு பினாமியாகவா..
இது என பெண்மைக்கு.. சுய மரியாதைக்கு.. அவமானம்…. என்றேனும் ஒரு நாள் விக்னேஷ்வரனின் மகள் தானேடி நீ... என்று விட்டால்.. என் உயிரை தொலைக்கும் நிலை வந்துவிடாது..!!!! எப்படிதொலைப்பேன் அந்த அடையாளத்தை… எதை மறப்பேன்.. எனக்கு ..நிகழ்ந்ததை..
வலியில் ஆண்.. பெண்.. கூட குறைய இருக்கிறதா..
கொடுமையில் உயர்வு.. தாழ்வு.. இருக்கிறதா...
உரிமையின்றி.. உறவின்றி வாழும் கொடுமை.. கொடும் பாலைத் தனிமை.. எப்படி நடப்பது.. அதை பரிசளித்தவனிடம்..
தாலியும் மோதிரமும்.. என் காதலின் அடையாளம்.. அதை எங்ஙனம் தொலைப்பேன்.. என் குழந்தைகளை தொலைப்பதற்கு சமமல்லவா அது…
நெருப்பாற்றில்… நீந்துகிறேன்.. வலி புரியாது உங்களுக்கு… கேலியும்.. தீப்பந்தங்களையும் எரியாமல் இருக்கலாமே...
அவனின் பத்து வருடக் காதல்..தெரியாது.. சொல்லவில்லை.. அவனின் காயம் என பொருட்டு அதும் தெரியாது…
அவணிடம் நகை வாங்கி கௌரவமும் காதலும் பெற்றால.. வேறு பெயர் கொடுத்துவிட மாட்டீர்கள்…
இதை மட்டும் பல்லிளித்துக் கொண்டு வாங்கிக் கொண்டாள் என்று சொல்லி விட மாட்டீர்கள்...
அது... அவமானம்.. அருவருப்பு.. இல்லையா..
அதைச் சொன்னால்.. ….. எவ்வளவு கல்லெறிகள்... சாபங்கள்.. ஹூம்… கடக்கிறேன்.. எவ்வளோ கடந்து விட்டேன்.. ஐந்து வருடங்களில்.. இதையும் கடக்கிறேன்…
பகலவனின் ஒளியில்
மின்மினிகள் ஒளிர்வதில்லை..
திருப்பப் பட்ட வெளிச்சத்தில்.. நிலவின் மறுபுறம் தெரிவதில்லை..
ஆணாதிக்க சமூகம்.. முதல் கல் விழுவது பெண்ணிற்கே..
இது இயல்புதானே..