sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றி நன்றி நன்றி. நிச்சயமாக இன்றைய கல்வி தரமானது இல்லை. ஏன்னா ஆசிரிகர்களுக்கே விபரங்கள் போதாது. எல்லாம் மனனம்தான். பிரக்டிக்கலாக எப்படி கற்பது இல்லை கற்பிப்பது என்று தெரியாது. சொல்லப்போனால் நாம சின்னப்பிள்ளைஙக்ளா இருக்கிறப்ப வாய்ப்பாடு பாடமாக்குவோம். அப்போ ஈரன்டு நாலு, ஈர் மூன்றாறு அப்படி மனமாக்குவோம். 12ஆம் வாய்ப்பாடு வரை அத்துப்படி. ஆனா ஈரண்டு நாலு எப்படி வந்துச்சுன்னு நமக்குத் தெரியாது. அத நாமளா கண்டுபிடிக்க வகுப்பு எட்டு ஒன்பதையும் தாண்டிடும். இன்றைய கல்வி அதுதான். விளக்கமில்லை. அதில் தெளிவு எப்படி கிடைக்கும். அதைத்தவிர நாம பசங்களுக்கு விருப்பமான பாடத்தைப் படிப்பதற்கு வாய்ப்பம் கொடுப்பதில்லை. என் பையன் இதத்தான் படிக்கணும்னு ஒரு முடிவோட இருந்து அவன்கிட்ட திணிச்சா அவனும் என்ன செய்வான் கடமைக்கு படிப்பான். எல்லாரையும் சொல்லல, நிறையப் பேர் இப்படித்தான் இருக்காங்க. மாறனும். கல்வி என்கிறது விரும்பி படிக்கணும். திணிக்கக் கூடாது. இது என் கருத்துசூப்பர் மாதாஜி
ஆத்விகன் சேட்டை , சிரிச்சு, சிரிச்சு முடியல (friends பட வடிவேலு தான் நியாபகம் வந்தார் )
அபயன் குழந்தைகள் கல்வி கற்பதை விருப்புடன் கற்க வேண்டியதையும், இன்றைய கல்வி நிலையையும், ஆசிரியர் கற்பித்தல் முறையும் கூறுவது 100% உண்மை.
நான் ஒரு கணித பட்டதாரி மாதாஜி, நான் கல்லுரியில் பயின்ற காலத்தில் விறுவிறுப்பாக எடுக்க வேண்டிய கணிதத்தை ஆசிரியர் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பார், எதாவது சந்தேகம் கேட்டால் லைப்ரரில செக் பண்ணிக்கோங்கனு சொல்லுவாங்க, அனைத்து ஆசிரியரும் அப்படி அல்ல, ஒரு சிலர் இப்படி இருக்க தான் செய்கின்றனர், கல்லுரி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால்,
மலரும் அரும்புகள் புரியாவிடில் என்ன செய்வார்கள் பாவம்.
இன்றைய கல்வி நிலை பற்றி கதை ஊடாக சொல்லி இருப்பது மிக அருமை.