sivanayani
விஜயமலர்
Wow Thamu What a spectacular comment paa... No words to say. இப்போ கண்ணுல கண்ணீர் முட்டி நிக்குது. உங்களுக்கு பதில் டைப் பண்ணுறேன். உங்க கருத்து ஒவ்வொண்ணும், என்னோட எழுத்தோட பாதை சரியான கோட்டில் பயணிக்கிறது அப்படின்னு புரியுது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா... எதை நீங்க எல்லாரும் உணரவேணும்னு இன்னய பதிவை போட்டேனோ... அதையே நீங்க சொல்றப்போ... அப்படியே சந்தோஷத்தில பூரிச்சிட்டேன். அதனால் பெரிய கட்டிப்புடியோட முத்தமும் உங்களுக்கு பார்சல். and I love you love you love you love you haa haa appuram avalai kandaa avan ethupaanaa maataanaa. antha santhekamthaan enakkum. oru thudna pottu vainka. nanaum senthu yosikkiren. Thamu You made my day pa...நயனி மா
ம்ளிரும் காந்திமதியும் பேசும் வசனங்கள் சும்மா நச் நச் னு இருந்தது.. ஒவ்வொரு வார்த்தையும் .. அதைக் கோர்த்ததும் மிக அற்புதம்..
ம்ளிரைக் கேள்வி கேட்க.. புத்தி கூற தகுதி உள்ளவர் அவர் மட்டுமே.. ..
அதும்..
அபயனுக்கு அக்கையாகவும்.. ம்ளிர்க்கு தாயாகவும் .. உணர்ந்து.. இரு நிலைகளையும் பேலன்ஸ் பண்ணி அவர் பேசியது மிக அருமை..
தம்பியின் சார்பில் உண்மை கூறும் அவர்.. அவன் தனக்கு தானே அளித்துக் கொண்ட தண்டனைகளை... சரியென்று..தான் தடுக்கவில்லை என மனதைக் கல்லாக்கி கூறும் போது வானளவு உயர்நது போகிறார்..
'உன் தந்தை.. காதலோடு எனைத் தொட்டிருந்தால் மன்னித்து இருப்பேன்.. உன் அன்னைக்கு த்ரோகம் செய்தவரை.. மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன்' எனும் போதும்.. 'அவருக்கும் இந்த தீக்காயம்..சவுக்கடி கிடைத்திருக்க வேண்டும்..தப்பிவிட்டார்' எனும் போது.. ஆமா.. ஆமா என்று சொல்லித் தலையாட்டத் தோன்றியது..
ம்ளிர்... மை பேபி...
அவன் தண்டனைகள் பற்றித் தெரிந்ததும்.. 'தடுக்கலையா..'ன்னு காந்திமதிட்ட கோபமா கேட்டியே.. அங்க நிக்கிற நீ.. லவ் யூ பேபி...
உன் துயரம்.. தவறினவனிடம் காதலை வைத்து விட்டோமே எனும் குற்றவுணர்வு.. இன்னமும் அவனை.. அவன் மீதான அன்பை பரிசோதனை செய்யும் துயரம்.. அவனின் அன்பை காதலை சந்தேகிக்கும் கொடுமை.. அனைத்திலிருந்தும் வெளிவந்த தருணம்.. கண்ணீர்.. கொட்டுகிறதா...கொட்டட்டும்... இருக்கட்டும்....அக்கண்ணீர் புதுப் புனலில்... மனதின் ஆங்காரம்.. வலி.. துயரம்.. அனைத்தும் கரைந்து ஓடட்டும்..
நான்கு வருடங்களுக்கு முந்தய ம்ளிராக அது உன்னை மாற்றட்டும்..
நான்காண்டுத் துயரங்கள்.. ஏமாற்ற வலிகள்.. அனைத்தும் தொலைதூரமா மறைந்து போகட்டும்..
இப்போ அவன் உன்னை ஏத்துப்பானா ன்னு தவிக்கிறாயே..
உனக்கு மேல நான் பீதியாகி இருக்குறேன்..
நயனி மா.. ஏதும் அவனை ஏதும் சிக்கலில் மாட்டி வைக்காம இருந்தா.. வந்து.. அவனின் காதலால் செய்கையால்.. பதில் சொல்வான்....
அவனின் தேவதை நீ.. தெய்வம் மனுஷனை சோதிக்கலாம்.. அந்த காதலும் அன்பும் கலந்து கட்டின மனுஷன் உனை சோதிக்க மாட்டான்..
நாளை வரை வெயிட் பண்ணுவோம்.. வேற வழியில்ல..