தாமரை
தாமரை
ஹா ஹா புஷ்பாமா.. இப்படி சொல்லி சொல்லி.. என்னை அப்படியே ஆக்கீட்டாங்க போலவே.. நான் எல்லார் உணர்வையும் அவதானிச்சாலும்.. ஹீரோ ஹீரோயின் டீப்பா ஃபாலோ பண்ணுவேன். அதுல யாரோட பக்கம் நியாயம் இருக்குறதா எனக்கு தோணுதோ.. அப்படியே ஃபிக்ஸ் ஆகிடுவேன்..வாவ் தாமரை மா எப்பவும் போல மிளிரின் மன உணர்வுகளை எழுத்தில் வரையும் உங்கள் எழுத்தோவியம் (வேள் பாரி effect) வெகு அருமை..
மிளிரின் மேல் நீங்கள் கொண்டிருக்கும் உள்ளார்ந்த அன்பு உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கின்றது. அபயனால் மறுபடியும் மிளிருக்கு எந்தத் துன்பமும் நேரக் கூடாது அது பிரிவுத் துயரமாக இருந்தாலும் கூட என்று நீங்கள் மனம் பதைப்பதை உணர்ந்த என் மனக் கண்களுக்கு நீங்கள் மிளிரின் தாயாவே காட்சியளிக்கின்றீர்கள். Simply superb Thamarai ma
இதுல அபயன் பத்தி கணிக்குறது.. மிகக் கடினம்.. அதும் திருமண நேரத்து அபயன் ஆரம்பித்து.. அவளை சந்தித்த தினமன்று இருந்த அபயன் டோட்டலா வேற.. என்ன சொல்ல.. அவன் அந்நியன்..
அடுத்து அவனின் மாற்றம்... அழுத்தி வைத்த காதல் வெளி வரப் பார்க்கறத கண்ட்ரோல் பண்ண முயலும் அவனின் நிலை... குழந்தைகள் இருக்குன்னதும் அவனின் அனைத்து கட்டுக்களும் தளர்ந்து அவளுக்கு ஆபத்துன்னதும் எல்லா கட்டுப்பாடுகளையும் தெறிச்சு விழவச்சு அவன் திரும்ப காதல் கணவனா மாறுறான்..
அவனின் இந்த பரிணாமம் அவனுக்கே புதிராதான் இருந்திருக்கும்.. ஆனாலும் இவ்ளோ காதலா.. ன்னு வியக்க வைக்கறான்..
ம்ளிர் மிக இயல்பு.. அபய் எல்லாமே அதிகம் தான்..
அவனைத் தள்ளி நின்னு ரசிக்குறேன்.. அவ்ளோதான்..