sivanayani
விஜயமலர்
வாவ் ரொம்ப அழகான கருதுப்பா.. Thank you so much pa. really I am blessed and honoured. மிக ஆழமான கருதும் கூட. அதுதான் சொன்னேன்ல.. நான்தான் இந்த கதையோட வில்லின்னு.. ஹா ஹா ஹா ... வில்லங்க எப்ப ஒழுக்க கதை எழுதி இருக்காங்க சொல்லுங்க...இன்றைய பதிவு மிகவும் ஆழமான உணர்வுகளை பிரதி பலிப்பதாக இருக்கிறது நயனிமா.
த மக்கைக்கு நீதி செய்யப் போய் தாரத்தின் நீதி மன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ள சூழ்நிலை கைதியாக நிற்கின்றான் அபயன். விதியின் விளையாட்டில் யாவரும் கைப்பொம்மைகளே. இங்கு அபயன் , மிருவின் வாழ்கையை மாற்றிய பிரம்மா நம்ம நயனிமா தான். இங்கு சகோதரி , தாரம் இரண்டும் இரு கண்கள் என்பதை அபயன் மறந்துவிட்டான். ஒரு கண்ணுக்கு நியாயம் செய்யப் போய் மறு கண்ணுக்கு துரோகம் செய்ததால் பாதிப்பு அவனின் பார்வைக்கு தான். இதோ துரோகம் இழைக்கப்பட்ட கண் ணுக்கு திரும்பவும் பார்வையை கொடுக்க அபயன் படும்பாடு பெரும் பாடுதான். என்ன செய்வது கண் ( மிரு) அடைந்த வலியும் வேதனைகளும் அவளை அவனை நம்ப முடியாத நிலைமைக்கு வழிவகுக்கிறது.இருந்தும் இதோ அவனை நம்பி அவனுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்து இருக்கிறாள் மிரு. இவ் அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவள் மனதை வெல்லுவான , இல்லை கொல்லுவான ? முடிவு நயனிமா கையில்