sivanayani
விஜயமலர்
yov... naa etharthamaa sonna atha patharthamaa kettuttu pokaama, ippadi teroraa oru kavithai podureenkale... this is too much pa...விஜிமா !
உங்களுக்கு காத்து வரலையா?
( அதாங்க ஃபேன்)
உங்களுக்கு தென்றல், புயல், சூறாவளி என்ற எல்லா காற்று அவதாரங்களும்
உங்களுக்கு அடிமை.
தமிழ் மணம் கமழும் உம் எழுத்து காற்றை,
இப்பிறவி முழுவதும் சுவாசிக்க,
வாசிக்க, நேசிக்க எம் நுரையீரல் பைகள் காத்திருக்கின்றன.
பொய்மை எனினும் தாய்மையை ஊரச் செய்தவளே!
உயிரற்ற கற்பனைகளுக்கு உணர்ச்சி ஊற்றியவளே!
கொடுத்த வாக்கிற்கிணங்க
காலம் தவறாமல் அதிகாரங்களை படைக்கும்
அவதாரமே!
கண்ணீரில் கூட பொய் உண்டு!
உன் வியர்வை துளியில்
மெய் உண்டு! மெய் உண்டு!
உன் வியர்வைத் துளிகள் உப்பு கற்களாய் மாறாமல், கற்கண்டாய் மாறி தித்திக்குதே!
தென்றல், புயல், சூறாவளி என்ற எல்லா காற்று அவதாரங்களும் வாசகியே உங்கள் கவிக்கு அடிமை.
தமிழ் மணம் கமழும் எழுத்து எனக்கு மட்டுமா சொந்தம்
இதோ பேனா நுனியின் மையில் சிந்தும் கவித்துளி அனைத்தும் தித்தித்து போகிறதே... மீனா அந்த காற்று உனக்கு சொந்தம்.
இப்பிறவி முழுவதும் என் கதையை சுவாசிக்க,
வாசிக்க, நேசிக்க தோழியே நீ இருக்கும் வரைக்கும் எழுத்தாளனாய் நான் ஜொலித்துக்கொண்டுதான் இருப்பேன்... அது எண்ணில் இல்லை.. உன்னால் எனக்கு கிடைத்த வரம்
எனவே தோழியே... அத்துணை புகழும் வாசகியாய் உன்னை சேரும்... மெய்யறிவாய் மகளே... (இதுவும் கவிதை தான் நம்பனும். இல்லேன்னா கொன்னுருவேன்)
Last edited: