தாமரை
தாமரை
மீண்டும் பிறப்பாயடா...பார்த்திபா மீண்டும் பிறப்பாயடா(மஹவீரா)அபயா!
உடல் கிழிந்து உதிரம் கொட்டிய தமக்கைக்காய்,
சேயாய் தன்னை மடி தாங்கிய தாய்க்காய்,
பதின் வயதுப் பெண்ணின் பாவத்திற்காய்,
தன்னிலை மறந்த
பெண்ணிலைக்காய்,
உறு துயர் கண்ட
உண்மைக்காய்,
கூடாத காட்சியைக் கண்ட சாட்சியாய்,
இளமையின் வளமையை மறந்த அபயனாய்!
அன்று,
வரம்பெற்ற அசுரனாய்,
கரம்பிடித்த கன்னிகையை
வதம் செய்தாய்!
இன்று அவளை,
இதம் செய்ய இசைந்தாய்!
மதம் கொண்ட களிறே,
தன் பிடியின் முன் மண்டியிட்டது!
பிடிவாதம் கொண்ட பிடியோ
பிடி கொடுக்காமல் நின்றது!
முடிவாக முட்டிக் கொண்டது.
குட்டிகளை ஒட்டிக்கொண்டது.
தட்டிச் செல்லடா தலைவா!
அவள் உன் கட்டிச் செல்லமடா !
தவறை தவறுக்கு நேர் செய்த தளபதியே!
கன்றுக்கு மகனை ஈடாக கொடுத்தான் மனுநீதிச் சோழனுமே !
கற்புக்கு ஈடாக கற்பை கேட்டாய் !
உன் காதலை புதைத்தாய்!
உன்னை நீயே எரித்தாய்!
மனதால் மரித்தாய் !
உன் காதலுக்காக நீ மீண்டும் பிறப்பாய்யடா அபயா!
நீரில் அமிழ்ந்த காற்றுக் குமிழிபோல் விரைந்து வா!
உன்னை நீயே வதம் செய்த யாகத்திற்கு
தெய்வம் தந்தது இரட்டை வரம்!
மணிமுடி கலைந்தவனே !
நீ அரசாட்சி செய்ய அரியணை வேண்டாம்!
எங்கள் இதய சிம்மாசனம் உனக்காகவே!
பார் எனது வலியை என்று காட்டாத பாகுபலியே!
பாகுபலி. ....
நீங்களும் ராஜமௌலி ஃபேனா மீனுமா .