sivanayani
விஜயமலர்
வாசுகி உங்க எல்லார்மேலயும் பொறாமை வருதுப்பா. எப்படி இப்படி சட்டுன்னு கவிதையா எழுதி தல்லுறீங்க. தாமரை இன்னொருவிதமா கலக்கிறாங்க. நீங்க இன்னொரு விதமா கலக்கிறாங்க... அவ்வ்வ்வ்துயரப்படுத்தியவனுக்கே இவ்வளவு வலியிருந்தால்....
துயரபட்டவளுக்கு எவ்வளவு வலி இருக்கும்...
அப்பா என்று உன்னை அறிமுகப்படுத்தவே துடிக்கின்றாயே....
அப்பா என்று ஒருவனை அறிமுகப்படுத்த முடியாமல் எவ்வளவு துடித்திருப்பால்....
காயம் பட்ட இதயம் கனிய காலமாகலாம் ... காத்திருப்பதை தவிர வழியில்லை....
சீற்றம் கொண்டு சீறுகிறாய் சிதறவிட்ட வார்த்தைகள்... தீங்கங்குகளை விட கொடியதே....
ஆங்காரம் தவிர்த்து அத்தனையும் அடக்கி
ஒருவரும் பார்த்திட இரட்டை துளி கண்ணீரை பரிசாய் அளித்து....
அகிலத்தையே ஆட்டி படைக்கும் வல்லமை கொண்ட நீ அபயம் கேட்கிறாய்....
மண்டியிடுகிறாய் மாசில காதல் பெண்ணின் முன்னே...
காதல் இருந்தும் வஞ்சம் நெஞ்சம் மறைக்க
வஞ்சியவளை வஞ்சித்து விட்டு சென்றதை....
அதே காதல் இருந்தும் அலைமேல் தத்தளிக்கும் தோணியாய் உள்ளத்தின் ரணம் உளைக்களமாய் கொதிக்க ....
உருகி கறைகின்றாள் ... கடந்து போன காலங்கள் விட்டு விட்டு சென்ற சுவடுகளை விட முடியாமல் தவிக்கின்றாள்...
அக்கினியாய் அவள் வார்த்தையை வீசி சென்றாலும்....
அன்பு என்னும் அடைமழை மட்டுமே அவளை அணைக்கும் வழி என்பதை மட்டும் மறவாதே...
...ரணம் ஆறும்...மனம் மாறும்...காலம் வரும்!!!!.
என் தோழியே மனம் கனிந்த கனியே
தட்டச்சென்னும் எழுதுகோளால்
கவியென்னும் இசைபாடி
உள்ளம் உருகச் செய்தவளே
வாசுகி
வா சகி
என் அன்பென்னும் அரவணைப்பை
உன் காலில் சமர்ப்பித்து
அன்பென்னும் மாலையை
அணிவித்து
கூறுகிறேன் ஆயிரம் நன்றி
ஏற்றுக்கொள்வாயா தோழி....
இங்க பாருங்க இதுவும் கவிதான் சொன்னா நம்பனும். இல்லேன்னா கோவமா போய்டுவேன்.