All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க...
ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு நான் மீண்டும் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
என்னுடைய முதல் கதை போல் இரெண்டாவது கதைக்கும் உங்களின் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கிறேன் பிரெண்ட்ஸ்..
சீக்கிரம் கதையின் டீசர் அல்லது முதல் ud உடன் வருகிறேன்.



என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயங்கள் உன்னாலே .jpg


ஹாய் பிரெண்ட்ஸ்...


எல்லாருக்கும் இனிய காலை வணக்கம்:):)....

இன்றைக்கு வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள் என்பதால் என்னுடைய இரெண்டாவது கதையின் டீசரை இங்கே பதிவிடுகிறேன் பிரெண்ட்ஸ்.... படித்து விட்டு எப்படி இருந்தது என்று உங்களின் கருத்தை தெரிவிக்கவும்....

டீசர் பார்ப்பதற்கு முன்னாடி ஒரு சில வார்த்தைகள் சொல்ல ஆசை படுகிறேன் பிரெண்ட்ஸ். ரொம்ப போர் அடிக்க மாட்டேன்... சீக்கிரம் முடிச்சிடுறேன்...


முதலில் நம்மளுடைய தளத்தில் என்னுடைய இரெண்டாவது கதையை பதிவிட எனக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்ரீகலா அக்காவிற்கு என்னுடைய நன்றி ப்ர்ஸ்ட தெரிவிச்சிக்கிறேன்.. தேங்க் யூ சோ மச் அக்கா:love::love:...


அடுத்து எனக்கு கதை எழுதுவதில் சில சந்தேகங்கள் வர அதை பொறுமையாக எனக்கு விளக்கிய ஜானு அக்காவிற்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவிக்க ஆசை படுகிறேன்...


தேங்க்ஸ் ஜானுக்கா உங்களோட நேரத்தை எனக்காக ஒதுக்கி சொல்லிக் கொடுத்ததற்கு...உங்களோட உதவியில் என்னுடைய அடுத்த கதையை ஆரம்பிக்க போறேன்க்கா. லவ் யூ ஆல்வேஸ் அக்கா:love::love: ....


இதே போல் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்த, அளிக்க போகும், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் பல...


ஒகே பிரெண்ட்ஸ்...


டீசர் பார்க்க போலாமா...

கதையின் பெயர்: "மாயங்கள் உன்னாலே!!!"


நாயகன்: ராகவ்


நாயகி: ரிதுஷினி


"என்னோட நிலைமை தெரிஞ்சும், ஏம்பா என்ன இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்திருக்கிறீங்க!!" என்று கேட்டு, அவர் காலடியில் அமர்ந்து... அவரின் மடியில் தலை சாய்த்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள் அவள்....


மகளின் வேதனையை காண சகிக்காமல், கண்மூடி தன் வருத்தத்தை மறைக்க முன்றார் குணசேகர்...


மகள் மற்றும் கணவனின் வேதனையை பார்க்க முடியாமல் வாயில் சேலையை வைத்து தன் கண்ணீரை அடக்கினார் ஆனந்தி....


"அப்பா அவளோட நிலைமை தெரிஞ்சும் நீங்க ஏம்பா அவளை கஷ்டப் படுத்திறீங்க??" என தங்கையின் வேதனையை காண முடியாமல் தந்தையிடம் கேட்டான் அவளின் பாசமிகு தமயன்...


மெல்ல தன் குரலை சரிப்படுத்தி, "கண்ணா வலிக்கு மருந்து கொடுத்தால் தான் காயம் ஆறும்.... அதே போல தான் இதுவும்!!" என்றார் மூவருக்கும் பொதுவாய் உரைத்தபடி...


தந்தையின் பேச்சில் எழுந்த துக்கத்தை மறைத்தவாறு, அங்கிருந்த மூவரையும் ஒரு முறை பார்த்து...


"சரிப்பா நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடுங்க!!" என்று கூறி தன் அறைக்கு அழுது கொண்டே சென்றாள்....


*********************************************

அதே நேரம் skypeபில் ," நா இது வரைக்கும் உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து எதுவும் கேட்டது இல்ல...... இந்த ஒண்ண மட்டும் கேட்கிறேன் ப்ளீஸ் டூ இட் பார் மீ......!!!" என்று அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் அவன்...


தான் சொன்னதும், எதிர் பக்கம் இருப்பவர்களிடம் சிறிது யோசனை தெரியவும்,"எனக்கு தெரியாது.... நீங்க தான் இத முடிச்சு குடுக்கணும்!!!" என்று பொறுமையாக வார்த்தைகளை கோர்த்து, அழுத்தமாக கூறினான்....


****************************************************

அவன் சொன்னது போல் தனக்கு வேண்டியவர்களிடம் தகுந்த தகவல்களை பெற்றுக் கொண்டு, "நீ ஒன்னும் பீல் பண்ணாத பேபிமா.... நா சீக்கிரமாவே உன்கிட்ட வரேன்!!" என்றான் மனதிற்குள்...

****************************************************

தன் அருகில் உட்காந்திருந்தவளின் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமல் அவளின் முகத்தையே ஒரு முறை கூர்ந்து பார்த்து பேச ஆரம்பித்தான், "ஹாய், **** இது தான உன்னோட நேம்.. ஐயம் *** "என்று தன்னை அறிமுகப்படுத்தி அவளிடம் பேச ஆரம்பித்தான்...

****************************************************

"என்னவோ தெரியல டி...இப்பலாம் எனக்கு அவன் நினைப்பாவே இருக்கு..... ஹீ ஹாஸ் சம் மேஜிக் இன் ஹிம்!!.... என்றால் அவளிடம்.....


அவள் கூறியது போலவே அவனும் அதே நேரம்" ***, உன்னோட ***** இருக்கால அவகிட்ட ஏதோ மேஜிக் இருக்குடா.... அது என்ன என்னவோ பண்ணுது!!" என்றான்....

****************************************************

யார் யாரிடம் என்ன என்ன மாயங்கள் செய்யப் போகிறான்(ள்) என்பதை அறிய நானும் உங்களைப் போல் காத்திருக்கிறேன்......

மாயங்கள் தொடரும்.....
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Screenshot_20181117-215607__01.jpg

ஹாய் பிரெண்ட்ஸ்

இனிய காலை வணக்கம்...

என்னடா டீசர் போட்டுட்டு ஆளையே காணாமல் போயிட்டாளே!!! என்று நீங்கள் என்ன தேடுவதை தெரிந்து ஆவலுடன், உங்களை சந்திக்க மாயங்கள் உன்னாலே!!! கதை பற்றிய ஒரு சிறு அறிவிப்புடன் வந்திருக்கிறேன் பிரெண்ட்ஸ்..

நான் இப்போ எடுத்திருக்கும் கதை களம் உங்களுக்கு தெரிந்த கதை போல் இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம்... ஆனால் என்னுடைய இந்த கதையை என் கற்பனை திறனுடன் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுக்க முயற்சிக்கிறேன்.... நன்றாக கொடுப்பேன் என்றும் நம்புகிறேன்..

இது எதுக்கு இப்போ முன்னாடியே சொல்றேன்னா எல்லாம் ஒரு முன் ஜாக்கிரதை தானுங்கோ😜😜😜...

சரி, இப்போ நான் எதுக்கு வந்திருக்கிறேன் என்ற மேட்டரை சொல்லிடுறேன். மாயங்கள் உன்னாலே!!! கதையின் முதல் பதிவை வியாழன் (22-11-2018) அன்று போடுகிறேன்...

என்னால் வாரம் ஒரு ud மட்டும் தான் போட முடியும் பிரெண்ட்ஸ்... டிசம்பர் மாதம் முடியும் வரை இதே போல் வாரத்தில் ஒரு நாள் (வியாழக்கிழமை) மட்டும் ud
போடுவேன்.. புது வருடத்தில் இருந்து வாரம் இரண்டு அல்லது மூன்று ud தர முயற்சிக்கிறேன்...

ஹான் அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டேனே டீசருக்கு உங்களின் ஆதரவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்😘😘😘.... ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்🙏🙏🙏.. இதே போல் கதைக்கும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன் ப்பா.. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க...

ஓகே பிரெண்ட்ஸ், பை... வியாழன் அன்று சந்திக்கலாம்...

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 1


images (22).jpeg


அவசர அவசரமாக, டெல்லியில் இருந்து சென்னை செல்லும் பிளைட்டில் ஏறி அமர்ந்தாள் ரிதுஷினி. முகம் நிறைய சோகத்துடன் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரை துடைக்கக் கூடத் தோன்றாமல் கண் மூடியபடி,


'அப்பாவுக்கு ஒன்னும் ஆகக் கூடாது... அப்பா நீங்க எனக்கு எப்பவும் வேண்டும்... ஐ லவ் யூ லாட் அப்பா!!!' என்று மந்திரம் போல் அவள் மனம் விடாது இதையே ஜெபித்துக் கொண்டிருந்தது...


தந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்துக் கிடைத்த பிளைட்டில் சென்னை வந்து கொண்டிருக்கிறாள்.


மூன்று மணி நேரப் பயணம் முழுவதும், கண்ணீருடன் சென்றது அவளிற்கு. இடையில் விமானப் பணிப்பெண் அவளின் நிலை அறிந்து, கொண்டு வந்த தண்ணீரையும் கூட, வாங்க மறுத்து விட்டாள்.


பிளைட் சென்னை வந்து லேண்ட் ஆகியதும் வெளியே வந்த ரிதுஷினி , கால் டாக்ஸி புக் செய்து அவள் அப்பா இருக்கும் பிரபலமான மருத்துவமனைக்கு வந்து இறங்கி, குணசேகர் இருக்கும் இடம் தெரிந்து கொண்டு, அதை நோக்கி ஓடினாள்.


ஐசியு முன்னாடி நிற்கும் ஆனந்தியின் தோளை தொட்டதும், வேகமாகத் திரும்பிய அவர், மகளைக் கட்டி அணைத்துக் கண்ணீர் வடித்தார்.


"அம்மா என்னாச்சு மா?? அப்பா நேத்து நைட் கூட என்கிட்ட நல்லா தான பேசிட்டு இருந்தாங்க.... சொல்லுமா என்ன ஆச்சு..." என ஆனந்தியிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.


மகளின் கேள்விகளுக்குக் கண்ணீர் மட்டுமே அவரின் பதிலாக இருந்தது. கணவரின் தற்போதைய உடல் நிலை, அவரைச் சுற்றுப்புறம் எதையும் கருத்தில் கொண்டு செல்லாமல் இருக்க வைத்தது...


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டாக்டர் கேட்ட மருந்துகளை வாங்கிக் கொண்டு வந்த தருண் அவர்கள் இருக்கும் இடம் வந்தான்.


"ரிது" என்று அழைத்த அண்ணனின் குரலில், இருந்த இருக்கையில் இருந்து வேகமாக எழுந்த ரிதுஷினி, "அண்ணா நீயாச்சும் சொல்லேன் அப்பாவுக்கு என்ன ஆச்சு?? நல்லா தானே இருந்தார்!!!" எனத் தருணிடமும் ஆனந்தியிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்டாள்.


அழும் தங்கையை அணைத்து ஆறுதல் படுத்தி," அப்பாவுக்கு மைல்டு அட்டாக் வந்திருக்கு ரிதும்மா!!! இன்னைக்கு மார்னிங் தான்... அம்மா எழுப்பும் போது அப்பா எழுந்திக்கல, அவசரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்ததும் தான் தெரிஞ்சிது, மைல்டு அட்டாக் என்று" எனக் குணசேகரனின் உடல்நிலையைத் தங்கையிடம் மெல்லக் கூறினான் தருண்..


குணசேகரனுக்கு மைல்டு அட்டாக் என்று கேள்வி பட்டதும், அவள் மனம் சடன் பிரேக் போட்டது போல் அதிலேயே நின்றது, "ரிது... ரிது... என்ன ஆச்சு??" எனத் தருண் கூப்பிட்டதும் தான், அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டபடி ,


"ஹான்... ஒன்னும் இல்ல... ஐயம் ஆலரைட்!!" என்று சொல்லி ஆனந்தியின் காலடியில் உட்காந்து அவர் மடியில் முகம் புதைத்துக் கண்ணீர் வடித்தாள் ரிது.


தருணும் தன் துக்கத்தை மறைத்தபடி ஒன்றும் பேசாமல் ஆனந்தியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தான். ஒரு மணி நேரம் கழித்து, ஐசியுவில் இருந்து வெளியே வந்த டாக்டரை பார்த்தும்,


அவர் அருகில் வந்த தருண் அவரிடம்,"டாக்டர் இப்ப அப்பாவுக்கு எப்படி இருக்கு... ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே!!!" எனத் தன் தவிப்பை அனைத்தும் கேள்வியாய் கேட்டு அவர் முகம் பார்த்தான்.


டாக்டரிடம் தருண் பேசுவதைப் பார்த்து, ஆனந்தியின் மடியில் இருந்து எழுந்த ரிதுஷினி, வேகமாகத் தருண் பக்கத்தில் வந்து,"டாக்டர் ஹொவ் இஸ் மை டாட்... இஸ், ஹி இஸ் ஓகே??" என்று அவளும் தன் பங்கிற்குக் கலக்கத்துடன் அவரிடம் கேட்டாள்.


ரிது எழுந்ததும் ஆனந்தியும் தருணின் அருகில் வந்து நின்று, டாக்டரின் முகத்தைத் தவிப்புடன் பார்த்தார். மூவரின் தவிப்பை பார்த்து வருத்தம் அடைந்தாலும்,


அவர் தன் கடைமையை முன் நிறுத்தி, மூவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்து," இது அவருக்குப் பிரஸ்ட் அட்டாக்!! கரெக்ட் டைமில் நீங்க அவரைக் கூட்டிட்டு வந்தால், அவரை எங்களால் காப்பாத்த முடிந்தது... நொவ் ஹி இஸ் பெட்டெர்"


"ஐ திங்க் அவருக்கு ஏதோ ஸ்ட்ரெஸ் இருந்திருக்கும் போல.... ரொம்ப அதைப் பத்தியே திங்க் பண்ணிட்டு இருந்திருப்பார் என்று நினைக்கிறன், அதான் இந்த அட்டாக்!!!


இனிமேலும் இந்த மாதிரி ஆகாமல் பார்த்துக்கோங்க.... இப்போ மயக்கத்தில் தான் இருக்கிறார்... நீங்க ஒரு 2 ஹாவ்ர்ஸ் கழிச்சுப் போய்ப் பாருங்க.." என்று சொல்லி சென்றார்.
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு மணி நேரமும் நரகமாய் கழிய, நர்ஸ் வந்து அழைத்ததும், மூவரும் ஒன்று போல் உள்ளே சென்றனர் குணசேகரனை காண... முகத்தில் செயற்கை சுவாசம் போடப்பட்டிருக்க, கட்டிலில் ஒரே நாளில் உருக்குலைந்து துவண்டு படுத்திருந்தார் குணசேகர்.


ஆனந்தியும், ரிதுஷினியும் குணசேகரின் கை பிடித்துக் கண்ணீர் வடிக்க... அப்பாவை இந்த நிலைமையில் பார்க்க முடியாமல், மனதில் இருக்கும் வேதனையை முகத்தில் சுமந்தவாறு, அவர் முகம் பார்த்தபடி நின்றிருந்தான் தருண்.


மெல் கண் திறந்த குணசேகரனை பார்த்த தருண்,"அப்பா இப்ப எப்படி இருக்கீங்க!!! கொஞ்ச நேரத்தில் பயமுடித்திட்டீங்களே!!" என்றவாறு அவர் அருகில் வந்தான். தருண் குணசேகருடன் பேசுவதைக் கேட்டு, ஆனந்தியும் ரிதுஷினியும் குணர்சேகரின் முகத்தை ஆவலுடன் பார்த்தனர்.


தருணை கண் அசைவில் அழைத்து, அவனிடம் முகத்தில் போட்ட மாஸ்க்கை கழற்ற சொன்னார். தருண் கழற்றியதும்," என...க்கு ஒன்..னும் இல்..ல..." என்று முயன்ற புன்னகையுடன் மூவரிடம் பேசினார் குணசேகர்.


தந்தை சிரமப் படுவதைப் பார்த்து அவரைத் தூக்கி தருண் உட்கார வைத்ததும், தருணின் கைகளைப் பிடித்தவாறு, "அம்மாடி ரிது... நீ எப்ப வந்த??.... ரொம்பப் பயந்துட்டியா!!!" எனக் கேட்டு, கை அசைத்து மகளைத் தன் அருகில் வருமாறு செய்கை செய்தார்.


"இன்னைக்கு மார்னிங் தான் வந்தேன் அப்பா... ரொம்பப் பயந்திட்டேன்!! ஏம்பா உங்களுக்கு இப்படி??" என்று கேட்டு அவர் கையில் முகம் புதைத்துக் கண்ணீர் வடித்தாள் ரிதுஷினி..


மெல்ல மகளின் தலையை வருடிவிட்டவாறு, ஆனந்தியிடம், "நீயும் பயந்திருப்பில ஆனந்தி!!!" எனக் கேட்டு அவர் முகம் பார்த்தார். கணவனின் கேள்வியில் வந்த கண்ணீரை துடைத்த படி,"ஆமாங்க ரொம்பப் பயந்திட்டேன்!! இனிமேல் இப்படி எங்களைப் பயப்பட வைக்காதீங்க..." என்றார் சிறுபிள்ளை போல் விசும்பியபடி..


மனைவியின் குழந்தைத்தனமான பேச்சில் எழுந்த புன்னகையை உதிர்த்தபடி தருணிடம்,"பாருடா உங்க அம்மாவை!!!... இப்பவும் அப்பாவி மாதிரியே பேசுறா பாரு!!" எனச் சிரித்து அங்கிருந்த சூழ்நிலையை இலகுவாக்க முயன்றார்.


அவரின் பேச்சு நன்றாக வேலை செய்தது, "ஆமாங்க நான் இங்க உயிரை கையில் பிடித்து வச்சிக்கிட்டு இருக்கிகேன்!! ஆனா நீங்க எங்க மனநிலை புரியாமல் சாதாரணாகப் பேசிக்கிட்டு இருக்கீங்க??" என்று கேட்டு அவரின் பேச்சிற்கு ஒரு குட்டு வைத்தார் ஆனந்தி.


தந்தை மற்றும் தாயின் பேச்சில், வழக்கம் போல் தங்களின் துக்கத்தை மறந்து சிரித்தனர் தருணும், ரிதுவும். மகன் மகளின் சிரிப்பை பார்த்த குணசேகர்- ஆனந்தி தம்பதி ஒன்று போல்,


'இவர்களின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யலாம், எந்தத் துன்பத்தையும் ஒன்றாகச் சமாளிக்கலாம்' என்று நினைத்துக் கொண்டனர்.


மகளின் முகத்தில் சோர்வை பார்த்த குணசேகர், "ரிதும்மா நீயும் தருணும் வீட்டுக்கு போயிட்டுக் கொஞ்சம் ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க, நான் தான் நல்லா ஆகிட்டேன்ல!!!" என்றார்.


குணசேகர் பேசியதற்கு ஒன்றும் சொல்லாமல் எழுந்த ரிதுஷினி, குணசேகர், அனந்தியிடம் ஒரு தலை அசைப்பை குடுத்து, தருணை ஒரு பார்வை பார்த்தவாறு வெளியேறினாள்.


மகள் சென்றதும்," தருண், ரிது ரொம்பச் சோர்ந்து போய்த் தெரியிறா, நீங்க இரண்டு பேரும் வீட்டுக்கு போகும் போது சாப்பிட்டுட்டே போங்க..." எனச் சொல்லி தருணை அனுப்பி வைத்தார் குணசேகர்.


"சரிப்பா நாங்க சாப்பிட்டே போறோம், நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... அம்மா நான் போயிட்டு வரேன்!!!" என்று கூறி அவர்கள் இருவரிடமும் விடை பெற்றுக் கார் பார்க்கிங் நோக்கி வந்தான் தருண்.


தங்களின் கார் அருகே நின்றிருந்த ரிதுஷினியின் அருகில் வந்து, "வா ரிது" என்று அழைத்து, அவள் ஏறியதும், இருவரும் திருவான்மியூரில் இருக்கும் தங்களின் வீட்டை நோக்கி பயணித்தனர்.


பிள்ளைகள் இருவரும் சென்றதும் குணசேகரன் பக்கத்தில் வந்த ஆனந்தி, "என்னங்க ஏன் உங்களுக்கு இப்படி ஆச்சு!! ஏன் உங்க உடம்பு மேல் அக்கறை காட்டாமல் இருக்கீங்க?? உங்களை நம்பி தான நாங்க இருக்கோம்னு உங்களுக்கு மறந்திடுச்சா??" என்று கேட்டு அவர் முகம் பார்த்தார்.


"எனக்கு ஒன்னும் இல்ல ஆனந்தி... கொஞ்ச நாளாய் நம்ம பொண்ணைப் பத்தி தான் அதிகம் நினைச்சிட்டு இருந்தேன்!!! அதுனால் கூட இருக்கலாம்..." என்று சொல்லி ஆனந்தியின் கையை வருடி ஆறுதல் படுத்தினார் .


"நம்ம பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்கை அமையுங்க நீங்க வருத்த படாதீங்க!!" என்று கூறி அவரைத் தேற்றினார் ஆனந்தி. இருவரும் ஒருவருக்கு ஒருவர், ஆறுதல் வார்த்தைகள் பேசினாலும், அவர்களின் எண்ணம் தங்களின் மகளைப் பற்றியே இருந்தது.
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட குணசேகர் அந்தக் காலத்திலே காலேஜிற்குச் சென்று படித்தார். படித்து முடித்ததும் தன் படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடி, சென்னைக்கு வந்த குணசேகர்...


முதலில் ஒரு கம்பெனியில் சேர்ந்து வேலைக்குச் சென்று, நாளடைவில் அதே கம்பெனியிலே உயர் பதவிக்கு தன் உழைப்பால் முன்னேறி வந்தார். இதற்கிடையே அவருக்கு ஆனந்தி என்ற பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைத்தனர் குணசேகரின் பெற்றோர்..


மனைவியுடன் திருவான்மியூரில் குடியேறிய குணசேகர், சிறிது காலம் அதே கம்பெனியில் பணியாற்றினார். பின்பு தன் சொந்த முயற்சியில் ஒரு கம்பெனியை உருவாக்க ஆசைப்பட்டு, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக விலைக்கு வந்த ஒரு கம்பெனியை வாங்கி அதைத் திறம்பட நடத்தி வருகிறார்.


குணசேகரன் - ஆனந்தி தம்பதிக்குத் தருண், ரிதுஷினி என இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். தருண் சென்னை ஐ.ஐ.டியில் பொறியியல் சம்மந்தப் பட்ட படிப்பை படித்து, தந்தையின் உறுதுணையில், அவருடன் அவர்களின் கம்பெனியை வெற்றிகரமாகப் பொருப்பேற்று, அதை நடத்தி வருகினான்..


குணசேகர் ஆனந்திக்குத் தருண் பிறந்ததும், தங்களுக்கு ஒரு மகள் இல்லையே!!! என்ற அவர்களின் வெகு நாள் குறையைப் போக்க பிறந்தாள் ரிதுஷினி.


ரிதுஷினி என்றால் சந்தோஷ இசையை மீட்க வந்தவள் என்று பொருள். அவளின் பெயரின் பொருளைப் போலவே குணசேகர் ஆனந்தி தம்பதிக்கு மகளாய் பிறந்த ரிதுஷினி அவர்களின் சந்தோஷத்தை மீட்க வந்த தேவதை.


ரிதுஷினியின் முகத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டிருக்கும் கன்னக்குழி சிரிப்பு, பார்ப்பவர் மனதை எப்போதும் கொள்ளை கொள்ளும். அவள் தான் வீட்டின் கடைக்குட்டி, என்பதால் மூவருக்கும் செல்லம்...


எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை!!! என்ற வரிகள் போல் அவர்கள் வீட்டில் எப்போதும் திருநாள் தான். சிறு குடும்பம் தான் என்றாலும் சிறப்பான குடும்பம்.


பாசம் என்னும் உணவை அதிகமாக உண்டு வளர்ந்த குடும்பம். மகன், மகள் என்ற பாரபட்சம் பார்க்காமல், இருவருக்கும் சம உரிமை அவர்கள் வீட்டில் உண்டு.


வீட்டில் இருக்கும் எல்லாரையும் ஒன்று போல் நடத்துவதால், பேச்சு உரிமை என்பது எல்லாருக்கும் சமமாக உண்டு. பெற்றோர் – பிள்ளை, என்ற உறவை தாண்டி எல்லாரும் நண்பர்கள் போல் இருந்தனர்.


சின்ன வயதில் இருந்து இந்தப் பழக்கத்தைக் குணசேகரன், ஆனந்தி, ஏற்படுத்தி இருந்ததால், வீட்டில் யாருக்கும் எதையும் மறைத்து வாழும் பழக்கம் கிடையாது.


ஏன், தருண் கூடத் தனக்கு வந்த லவ் ப்ரோபோசல் எல்லாவற்றையும் குணசேகர் ஆனந்தியிடம் , சொல்லி விடுவான். ரிதுவும் அதே போல் தான்.


‘எப்படி இருந்த குடும்பம், கடந்த சில வருடங்களாகக் களை இழந்து போய் நிற்கிறதே!!!’ என்று நினைத்தபடி இருவரும் தங்களின் மகளைப் பற்றிச் சிந்துக் கொண்டிருந்தனர்.


இவர்களைப் போல் தருணும், ரிதுவும் தங்களின் பெற்றோர்களைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தனர். வண்டியை ஒரு உயர்தர உணவகத்தில் நிறுத்திய தருண், ரிதுவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.


மறுபேச்சு இல்லாமல் அவன் கூட வந்த ரிதுவை பார்த்தபடி ஒரு டேபிளில் அமர்ந்தான். தங்கைக்கும் சேர்த்து தானே உணவை ஆடர் செய்தவன், இருவரும் உணவு உண்டதும் வீட்டை நோக்கி பயணம் செய்தனர்.


வீட்டு வாசலில் இறங்கியது "ரிதும்மா" என்ற அன்னையின் அழைப்பை நினைத்து பார்த்த ரிது, இன்று ஆனந்தி, குணசேகருடன் ஹோச்பிடலில் இருப்பதை நினைத்த படி, வீட்டை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.


தருணிடம் கூட ஒரு வார்த்தை பேசாமல் தன் அறைக்குச் சென்ற ரிதுஷினி, மனதில் உள்ள வெம்மையைப் போக்க ஷவரின் அடியில் நின்றாள்.


ஷவரில் அடியில் நின்று கொண்டிருந்த ரிதுஷினியின் மனம், 'என்னால் தான் அப்பாவுக்கு இந்த நிலைமை...' என்று நினைத்து கதறி துடித்த படி, அவளிற்கும் குணசேகருக்கும் மூன்று மாதம் முன்னால் நடந்த பேச்சுவார்த்தை பற்றி நினைத்துப் பார்த்தது....


மாயம் செய்வான்(ள்)...
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் முதல் அத்யாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 2

images (7).jpg

எத்தனை நேரம் ஷவரில் நின்றாள் என்று தெரியாமல், ஒருவாறு தன்னை நிலைப் படுத்தி, குளியல் அறையில் இருந்து வெளியே வந்தாள் ரிதுஷினி...


மனம் மீண்டும் மீண்டும் பழைய நியாபகங்களைக் கிளற, 'என்னால் என் குடும்பத்திற்கு எத்தனை வேதனை' என்று நினைத்தபடி, இயந்திரகதியில் தயாராகிக் கீழே வந்தாள்.


ஹாலில் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கும் தமையனின் முகம் பார்க்க முடியாமல், அவன் முன்னே சென்று நின்றாள். தங்கையின் வேதனை சுமந்த முகத்தைப் பார்க்க வருத்த முற்று,


"ரிது நீ ஒன்னும் கவலை படாத அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது... ஹி வில் பி ஆரைட் சூன்!!" என ரிதுஷினியை ஆறுதல் படுத்தி அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றான்.


ஹாஸ்பிடல் வந்ததும் ரிது ஆனந்தியை வீட்டிற்குப் போகச் சொல்லி, குணசேகரனுடன் இருந்து கொண்டாள்... இப்படியே பத்து நாட்கள் கழிய, ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீட்டிற்கு வந்தார் குணசேகர்.


இந்தப் பத்து நாட்களில் ரிது தன்னில் பெரிதும் ஒடுங்கிக் கொண்டாள். காலையில் தருணுடன் ஹாஸ்பிடல் செல்லும் அவள், மாலையில் ஆனந்தி வந்ததும்,


அவரைக் குணசேகரனுக்குத் துணைக்கு வைத்து விட்டு வீட்டிற்குத் திரும்புவாள். குணசேகரனால் கம்பெனி வரமுடியாத நிலையில் தருண் கம்பெனி பொறுப்பை முழுதாக ஏற்றுக் கொண்டான்.


மகளின் இந்த நிலைமையை நினைத்து பெரிதும் கவலைப் பட்டனர் குணசேகரனும் ஆனந்தியும். வீட்டிற்கு வந்ததும் இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் குணசேகர். தன் முடிவு மகளை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதை நினைக்கத் தவறிவிட்டார், ஆனால் குணசேகர் அதை நினைக்கும் போது???....


ஆலம் சுற்றி வீட்டிற்குக் குணசேகர் வந்ததும், மெதுவாக அவரை அறையில் உட்கார வைத்த தருண், அவரிடம்,"அப்பா இன்றைக்கு அந்த KVK கம்பெனியுடன் காண்ட்ராக்ட் சையின் பண்ற மீட்டிங் இருக்கு, நான் கண்டிப்பா போயே ஆகணும்...


சோ நான் போயிட்டு எவ்வளோ சீக்கிரம் முடியுமோ, அவ்வளோ சீக்கிரம் வரேன் ப்பா... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க..." என்று கூறி அவரிடம் விடை பெற்றுச் சென்றான்.


தருண் சென்றதும் அசதியில் சிறிது நேரம் கண் அயர்ந்தார் குணசேகர். மாலை மெதுவாகத் தன் அறையில் இருந்து வெளியே வந்த குணசேகர், ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.


அந்நேரம் கம்பெனியில் இருந்து வீட்டிற்கு வந்த தருண் குணசேகரிடம், "என்ன அப்பா ஹால்ல உட்கார்ந்திட்டு இருக்கீங்க... ரூமில் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான!!" என்று கேட்டு அவர் அருகில் உட்கார்ந்தான்.


"இத்தனை நேரம் ரூமில் தான் இருந்தேன் கண்ணா, இப்போ தான் வெளியே வந்தேன், ஆமா மீட்டிங் என்ன ஆச்சு என்று பொறுப்பான முதலாளியாய் கேள்வி கேட்டார்"



"சக்ஸஸ் தான் அப்பா, காண்ட்ராக்ட் சையின் பண்ணியாச்சு, இனிஷியல் ப்ரொஸிசர்ஜஸ் முடிஞ்சதும் ஒர்க் ஸ்டார்ட் பண்ண வேண்டியது" தான் என்றான்..


மகன் வந்ததை அறிந்து அவனிற்குக் காபி எடுத்துக் கொண்டு வந்த ஆனந்தி, " இப்பதானே ஹாஸ்பிடலில் இருந்து வந்திருக்கிறீங்க, அதுக்குள்ள என்ன கம்பெனி பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க!!!


ரெண்டு மாசம் கழிச்சு தான் நீங்க கம்பெனி போகணும், அது வரை நீங்க அங்க தலை வச்சு கூடப் படுக்கக் கூடாது" என்று மகனிடம் காபி குடுத்தபடி குணசேகரிடம் பேசினார்..


மனைவியின் பேச்சில் தன் மேல் உள்ள அக்கறையே நிறைந்திருப்பதை, பார்த்த குணசேகர், "வீட்டின் எஜமானி சொன்னா அதுக்கு அப்பீல் எது???, நீங்க சொல்லற மாதிரியே நடந்துக்கிறேன் மேடம்!!!" என்றார் மனைவியைப் பார்த்தவாறு.


தன் பேச்சில், சிரித்த ஆனந்தி மற்றும் தருணை பார்த்த குணசேகர்,"ஆமா ரிது எங்க?? காலையில் இருந்து அவளை நான் பார்க்கவே இல்லையே" என்றார் மகளைக் காணாமல்...


"காலையில் உங்களைக் கூட்டிட்டு வந்ததும், அவ ரூமிற்குப் போனவள் தான் இன்னும் கீழே வரலை!!!" என்றார் ஆனந்தி மகளின் வருத்தத்தைப் போக்க முடியாமல் இருக்கும் தன் நிலைமையை நொந்தபடி...


ஆனந்தி சொன்னதும் மூவரும் ஒரு நிமிடம் ரிதுவை நினைத்து வருத்தப்பட்டனர், தருண் தான் சூழ்நிலையை இலகுவாக்க முயன்று, "அப்பா நான் போய்ப் பிரெஷ் ஆகிட்டு ரிதுவை கூட்டிட்டு வரேன்!!!" என்று கூறி மாடியில் இருக்கும் அவன் அறைக்குச் சென்றான்.


தன்னை ரெப்பிரேஷ் செய்து முடித்ததும், தன் அறைக்கு நேர் எதிரில் இருக்கும் தங்கையின் அறையைத் தட்டினான், ரிது வந்து கதவை திறந்ததும், " ரிதுமா காலையில் இருந்து கீழயே வராமல் இருக்கீயாமே, அம்மா சொன்னாங்க... என்ன பிரச்சனை மா??" என்றான் அவள் தலையை வருடியவாறு..


அண்ணனின் பாசத்தில் வந்த கண்ணீரை அடக்கியவாறு, "ஒன்னும் இல்லனா சும்மா தான் என் ரூமில் இருந்தேன்..." என்றாள் தருணிடம். தன்னிடம் அவள் துக்கத்தை மறைக்கும் தங்கையைப் பார்த்து வருத்தப்பட்ட தருண் அவளைச் சகஜமாக்க, "வா ரிது நாம கீழ போலாம், அப்பா உன்னைக் கேட்டாங்க..." என்று கூறி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்...


தருணின் பேச்சை மறுக்க முடியாமல் கீழே வந்த ரிது, குணசேகர் இருக்கும் எதிர் சோபாவில் உட்காந்தாள். தன் எதிரில் உட்காந்திருக்கும் மகளைப் பார்த்த குணசேகர், அவளின் ஓய்ந்த தோற்றத்தை பார்த்து வருத்தப்பட்டு,
அவளைப் பேச வைக்கும் முயற்சியில் இறங்கினர்.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ரிது மா, நீ சென்னை வந்து பத்து நாள் ஆச்சே, எப்போ திரும்ப காலேஜிற்கு போக போற??" என்று கேட்டார். தந்தையின் கேள்வியில் அவர் முகம் பார்க்கதவாறு, "நாளைக்குப் போலாம் என்று நினைக்கிறன் அப்பா" என்றாள்.


தன்னிடம் வார்த்தைக்கு வார்த்தை பேசும் மகள் இன்று தான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் பேசுவதைப் பார்த்தது, அவளைப் பேச வைக்கும் பொருட்டு, "இன்னும் எவ்வுளவு நாள் மா இருக்குக் கோர்ஸ் முடிய??" என்று கேட்டார்.


"இன்னும் எயிட் மந்த்ஸ் தான் இருக்குப்பா கோர்ஸ் முடிய..." என்று அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறினாள்.. இவர்கள் பேசிக் கொண்டிருக்க அதற்குள் இரவு உணவு தயார் செய்த ஆனந்தி மூவரையும் இரவு சாப்பாட்டிற்கு அழைத்தார்.


தந்தை முன் உணவை மறுக்க முடியாமல், மவுனமாக, டைனிங் டேபிள் சென்று, பேருக்கு ஏதோ சாப்பிட்டு விட்டு, அவள் அறைக்குச் சென்றாள் ரிதுஷினி...


அடுத்த நாள் காலையில் 10 மணி பிளைட்டிற்கு வீட்டில் இருந்து 8 மணிக்கெல்லாம் கிளம்பிக் கொண்டிருந்தாள் ரிதுஷினி, அறையில் இருந்து ட்ராவல் பாகுடன் வெளியே வந்த ரிது ஹாலில் பேப்பர் படிக்கும் குணசேகரன் முன்னாடி நின்று,


"அப்பா நீ போயிட்டு வரேன், நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க.... நல்ல ரெஸ்ட் எடுங்க... நான் முடிந்தால் நெஸ்ட் மந்த் வர பார்க்கிறேன்.." என்று கூறினாள் அவர் முகம் பார்க்க சங்கடப்பட்டு..


"ஓகே ரிதுமா நீ பார்த்து போயிட்டு வா... ஐயம் ஆரைட் நொவ்" என்றார் குணசேகர் அவளிடம். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கிட்செனில் இருந்து ஆனந்தியும், மாடியில் இருந்து தருணும் ஹாலிற்கு வந்தனர்..


குணசேகரிடம் ஒரு தலை அசைப்பை கொடுத்து,ஆனந்தியிடம், "அம்மா நான் போயிட்டு வரேன்... அப்பாவை பார்த்துக்கோங்க... அப்படியே உங்களையும் கவனிச்சுக்கோங்க... நான் டெல்லி போயிட்டு போன் பண்றேன்" என்று சொல்லி அவரிடம் விடைபெற்று தருணுடன் வெளியே வந்தாள்..


தன் முகம் பார்க்காமல் செல்லும் மகளின் குற்றவுணர்ச்சியைப் புரிந்து கொண்ட குணசேகர், அவளை ஆறுதல் படுத்தும் விதமாக வாசல் கடக்கும் மகளை "ரிது" என்று அழைத்தார், குணசேகரன் குரலை கேட்டதும், திரும்பிய ரிது அவர் முகம் பார்த்தாள்..


ரிதுவின் பார்வையில் உள்ள வருத்தத்தைப் புரிந்து கொண்டவாறு,"பார்த்து போயிட்டு வா ரிதுமா" என்று சொல்லி அவர் கண்களை மூடி திறந்து அவளைப் பார்வையால் ஆறுதல் படுத்தினர்.


தந்தையின் ஆறுதலை படித்த ரிதுஷினி, அவள் பார்வையில் மன்னிப்பை யாசித்தவாறு,"சரி ப்பா..." என்று கூறி தலை அசைத்து அவரிடம் விடைபெற்று வெளியே வந்தாள் ...


ஏர்போர்டிற்குத் தருணுடன் செல்லும் போதும் அவனுடன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, தங்கையின் நிலை சிறிது காலம் இப்படித் தான் இருக்கிறது என்று புரிந்தாலும், இந்த முறை மவுனம் சாதிக்கும் தங்கையைக் காண வருத்தமுற்றவனாக, அவளிடம் பேச்சு வளர்க்க எண்ணி,


"ரிது, அப்பாவோட ஹெல்த் பத்தி நீ ரொம்ப ஒர்ரி பண்ணிக்காத, இனிமேல் அப்பாக்கு ஒரு டூ மந்த்ஸ் நான் கம்ப்ளீட் ரெஸ்ட் தான் குடுக்கப் போறேன்... நீ உன்னோட லாஸ்ட் இயர் ஸ்டடீஸ்ல கான்செண்ட்ரேட் பண்ணு!!!" என்று கூறி அவளை ஆறுதல் படுத்தினான்...


"ஓகே அண்ணா" என்று ஒற்றை வார்த்தையில் அவனின் கேள்விக்குப் பதில் கூறினாள்.. ரிதுவின் அண்ணா என்ன அழைப்பிலே அவளின் மனநிலையை அறிந்து அதற்கு மேல் வேற எதுவும் பேசவில்லை தருண்...


ஏர்போர்ட் வந்ததும், ரிப்போர்டிங் டைம் வந்ததும், ரிது உள்ளே போக எழுவதைப் பார்த்து, அவள் அருகில் வந்த தருண், அவள் தலையைத் தடவி ஆறுதல் படுத்தி, "பார்த்து போ ரிது, டெல்லி போயிட்டு போன் பண்ணு, டேக் கேர்" என்று சொல்லி அவளை வழியனுப்பி வைத்தான்..


தருண், அவள் தலையைத் தடவியதும், அவனின் அன்பில் நெகிழ்ந்த ரிது, கண்களில் வரத்துடிக்கும் கண்ணீரை உள் இழுத்து, "ஓகே அண்ணா பை" என்று கூறி அவனிடம் விடை பெற்று உள்ளே சென்றாள்...


விமானத்தில் ஏறிய ரிதுவிற்கு, மீண்டும் பழைய நினைவுகள் ஆட்கொண்டது.. இதற்காகவே முடிந்த அளவிற்கு அவளைத் தனியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள மாட்டாள்..


தனிமையான நேரங்களில் முதலில், தான் செய்த செல், அதில் ஏற்பட்ட சந்தோசம், வருத்தம், கடைசியில் குற்றவுணர்ச்சி என்று கலவையான உணர்வுகளே, அவளைக் காயப்படுத்தும்...


கடந்த இரண்டு வருடத்தில், நடத்த சம்பவத்தில் இருந்து வெளியே வந்தது போல் மற்றவர்களிடம் காட்டிக் கொண்டாலும், இன்னும் அவளால் அன்நினைவுகளில் இருந்து முழுமையாக வெளியே வர முடியவில்லை..


இவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிச் சிந்தித்த படியே விமானப்பயணம், கழிந்தது ரிதுஷினிக்கு... டெல்லி இந்திரா காந்தி வினமான நிலையம் அடைந்ததும், தன்னுடைய ட்ராவல் பாகை எடுத்துக் கொண்டு, கால் டாக்ஸி புக் செய்து ஐ. ஐ. டி (IIT) டெல்லி கேம்பஸ் நோக்கி தன் பயணத்தை மேற் கொண்டாள்...


ஹாஸ்டல் சென்றதும், முதலில் வீட்டிற்குப் போன் செய்து தான் பத்திரமாக வந்து சேர்த்த தகவல்களை சொன்னாள்.. அடுத்து, என்ன செய்ய என்று தெரியாமல், சிறிது நேரம் தூங்கினாலாவது தன் கவலைகள் மறக்கும் என்று நினைத்து, தன் பெட்டில் படுத்துறங்கினாள்.

************************************
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே நேரம் வெலிங்டன் நகரில், தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் சிறிது பிரச்சனை வர அதைச் சரி செய்து முடிக்க லீவ் நாளான சனிக்கிழமையும், ஆபீஸ் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட வேலைக்குச் சென்ற ராகவ்,


ஒருவழியாக மாலை 6 மணிக்கு அவன் வந்த வேலை முடிய, தன் சர்வீஸ் அப்பார்ட்மெண்டிற்கு வந்து தன்னைச் சுத்த படுத்திக் கொண்டு, அசதியில் கண்மூடி தூங்க ஆரம்பித்தான்...


தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த ராகவை, சென்னையில் இருந்து வந்த போன் அழைப்பு அவனை எழுப்பி விட்டது, போன் அடிக்கும் சத்தத்தில் கண் முழித்த ராகவ், வீட்டில் இருந்து வீடியோ கால் (skype call) வந்திருப்பதைப் பார்த்து, எழுந்து அவர்களுடன் பேசிக் ஆரம்பித்தான்..


(சென்னைக்கும் வெல்லிங்டனிற்கும் ஏழு மணி முப்பது நிமிடம் (7.30) வித்தியாசம் உண்டு என்பதால், ராகவிற்கு சனிக்கிழமையும் அவன் வீட்டில் (சென்னை) ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்களின் உரையாடல் அவ்வாறு நடப்பது போல் நினைத்துக் கொண்டு படிக்கவும்...)


"ராகவ் எப்படி இருக்க நீ... எப்ப டா இந்தியா வர, வந்து ஒரு வருஷம் ஆச்சு, உன்ன பார்க்கணும் போல இருக்குது டா!!!" என்று கேட்ட அன்னையிடம், "அம்மா இன்னும் ஒரு த்ரீ ஆர் பௌர் மந்த்ஸ் வெயிட் பண்ணுங்க அம்மா, ஒரு சின்னப் பிரேக் எடுத்திட்டு வரேன்" என்று அவரைச் சமாதானப் படுத்தினான்..


"போ டா, இதையே தான் ஆறு மாசமா சொல்லிட்டு இருக்க!!!" என அங்கலாய்த்த அன்னையிடம் ஒரு புன்னைகையே விடையாகக் கொடுத்தான்...


மகனின் பேச்சில், அவன் தூக்க கலக்கத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட சாருலதா பரிதவிப்புடன், "என்னடா ராகவ் தூங்கிட்டு இருக்கும் போது கூப்பிட்டேனா!!!" என்று கேட்டார்.


"இல்லமா, இன்னைக்கு ஆபீஸ் போக வேண்டியதா போச்சு, அதுனால இப்பதான் வந்தேன்!!!" என்று கூறி அவரை அமைதிப்படுத்தினான்.


"டேய் அண்ணா போன தடவை வரும் போது தான், நா கேட்ட ஐபாட் வாங்கிட்டு வர மறந்திட்ட, இந்தத் தடவையாவது கண்டிப்பா வாங்கிட்டு வா டா...." என்றபடி சிஸ்டமின் திரையில் தோன்றினாள் அவனின் செல்ல தங்கச்சி சுவாதிக்கா...


"இந்தத் தடவை கண்டிப்பா வாங்கிட்டு வரேன் திக்கா, சுவாதிக்கா!!!" என்று அவளைக் கிண்டல் செய்தான். ராகவின் கிண்டலில் வெகுண்ட சுவாதிக்கா, "பாரும்மா இந்த ராகவ என்னைக் கிண்டல் பண்ணறான்!!!" எனச் சிறுபிள்ளையாய் அன்னையிடம் அண்ணனை பற்றிப் புகார் வாசித்தாள்...


"ஆமா டி, இப்ப அவன் கிண்டல் பண்றான்னு சொல்ல வேண்டியது, அவன் போன் வச்சதுக்கு அப்புறம், இனி அடுத்தச் சண்டே தான் அவன் கிட்ட பேச முடியும் என்று புலம்ப வேண்டியது.... உனக்கும் வேற வேலை இல்லை... அவனுக்கும் வேற வேலை இல்லை..." என்று இருவரையும் டேமேஜ் செய்து விட்டு அங்கிருந்து சென்றார்..


அன்னையின் வெளிப்படையான டேமேஜில், அசடு வழிந்த சுவாதிக்கா, ராகவிடம்,"இந்த அம்மா சும்மா சொல்லுது!!!" என்று சமாளித்தாள்.. தங்கையின் சமாளிப்பில் சிரித்த ராகவ்,


"சரி சரி... அதை விடு உன்னோட பைனல் இயர் ஸ்டடீஸ் எல்லாம் எப்படிப் போகுது, அடுத்து என்ன பண்ண போற?? என்று வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டான்...


"கேம்ப்ஸ்க்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன், செலக்ட் ஆகிட்டா ஜோப்க்கு போனும்.. இல்லாட்டி பிஜி படிக்கணும்" என்று பதில் சொன்னாள்...


"நீ ஜோபிற்குப் போகணும் என்று கட்டாயம் இல்ல சுவாதி, நீ பிஜி படிக்கணும்னாலும் படி, ஒன்னும் ப்ரோப்லேம் இல்ல!!!" என்று பொறுப்பான அண்ணனாக தங்கைக்கு அறிவுரைகள் கூறினான்..


இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போதே, கடைக்குச் சென்று வந்த சிவசுந்தரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அடுத்த வாரம் கூப்பிடுவதாகச் சொல்லிவிட்டு வைத்தான்..


இருவருக்கும் நேரம் ஓத்துவராததால் வாரம் ஒரு முறை தான் பேசிக்கொள்வார்கள்


போனை வைத்த ராகவ், தன் குடும்பத்தைப் பற்றி நினைத்து பார்த்தான்.. அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் சிவசுந்தர்- சாருலதா தம்பதிக்கு தலைமகனாகப் பிறந்த ராகவ், 27 வயது நிரம்பிய ஆண்மகன்..


பார்க்க நம்மில் ஒருவன் போல் தோற்றம் இருக்கும் ராகவ், எப்போதும் புன்னகை முகமாய் காட்சி அளிப்பான், எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்ளும் பறந்த மனப்பான்மை உடையவன்.... அதே போல் தன் மனதில் பட்டதைப் பேசவும் தயங்க மாட்டான்...


சென்னையில் பிறந்து வளர்ந்த ராகவ், சென்னையிலே ஒரு புகழ் பெற்ற IT கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த சமயம், அந்தக் கம்பெனி சார்பாக நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் வேலைக்காக வந்துள்ள அவன், கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கு வசித்துக் கொண்டிருக்கிறான்..


சிவசுந்தர் ரிசெர்வ் வங்கியில் உயர் அதிகாரியாக உள்ளார்.. அவர் மனைவி சாருலதா இல்லத்தரசி... ராகவிற்கு அடுத்து பிறந்தவள் தான் சுவாதிக்கா, இவர்கள் வீட்டின் கடைக்குட்டி. சென்னையில் ஒரு தனியார் கல்லுரியில் BE பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறாள்.


தன் குடும்பத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த ராகவிற்கு, அவளின் நினைவுகளும் வந்தது....



மாயம் செய்வான்(ள்)...
 
Status
Not open for further replies.
Top