All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 2 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 3

full.png

தன்னவளின் நினைவுகளில் இருந்த ராகவிற்கு அவன் அருகில் இருந்து அடித்த போன் காலின் சத்தம், அவனை நினைவுக்குக் கொண்டு வந்தது.. ஆபீஸில் இருந்து கால் வர அதை அட்டென்ட் செய்து பேசியவன். தான் ஆபீஸ் போக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, பதினைந்து நிமிடத்தில் தயாராகி ஆபீஸ் சென்றான்.


"ஹேய் மேன், சாரி டு டிஸ்டர்ப் யு இன் சண்டே!!" என்றபடி அவனைக் கட்டி அணைத்த ரியானிற்குப் பதில் அணைப்பை கொடுத்தபடி, "இட்ஸ் ஓகே ரியான், நோ ப்ரோபஸ்!!" என்று கூறி, ரியானிடம் வேலையில் என்ன பிரச்சனை என்பதைக் கேட்டு, தன் இருக்கைக்குச் சென்றான் ராகவ்.


பிரச்சனையை ஆராய்ந்தவனின் கவனம் வேலையில் செல்ல, மதிய நேரம் கடந்தது... வேலையை முடித்த ராகவ், தன் செய்து முடித்ததை தன் சீனியரான ரியானிடம் சொல்லச் சென்றான்...


"ரியான் ஐ ரெக்டிபியை தி பக்ஸ், அண்ட் நொவ் தி இஸ்சுஸ் ஹாஸ் பீன் ரீசால்வ்ட்..." என்று கூறி அவனிடம் விடை பெரும் போது, ரியான் ராகவிடம், " ஐ க்நொவ்(know) அபௌட் யு மேன், தாட்ஸ் வாய்(why) ஐ கால்ட் யு.... ஓகே ராகவ், கேன் யு ஜோயின் வித் மீ பார் லஞ்ச்??" என்று அவனிடம் கேட்டான்..


"யா வித் பிளேஷர் ரியான்" என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு, இருவரும் அருகில் இருக்கும் உணவகத்திற்குச் சென்றனர். இருவரும் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.


உணவத்தில் இருந்து வெளியே வந்ததும், "வாட்ஸ் யூவர் பிளான்??" என்று கேட்ட ரியானிடம், "நோ மோர் பிளான் ரியான் பீலிங் டையர்ட்" என்று கூறி தன் அப்பார்ட்மெண்டிற்கு வந்தான் ராகவ்..


************************************

தன்னை மறந்து தூங்கிய ரிதுஷினி, சாயங்காலம் அவள் இருக்கும் அறைக்கு வந்த தியாவின் அழைப்பில் தான் எழுந்தாள்...


"உட்டோ ரிது, உட்டோ... தும் கப் ஆயி.. ஆப்கா பிதா கைசி ஹய்?? " (எழுந்திரி ரிது எழுந்திரி, நீ எப்போ வந்த... உன்னோட அப்பா எப்படி இருக்காங்க??) என்று கேட்டு அவளை எழுப்பினாள் ரிதுவுடன் அவள் ரூமில் தங்கி அவளுடன் படிக்கும் தோழி தியா...


தியா, ரிதுவின் அறையில் அவளுடன் ஒன்றாகத் தங்கி, ரிதுவைப் போல் ஐ.ஐ.டியில் (I.I.T), M.B.A இறுதி ஆண்டுப் படிக்கும் மாணவி. ஹரியானாவில் பிறந்து வளர்ந்த தியா படிப்பிறகாக டெல்லி வந்துள்ளாள்.


முதல் வருடம் ஹாஸ்டலில் ரிதுவின் அறைக்கு ஷாரிங் செய்ய வந்த தியா இரெண்டாம் வருடமும், ஹாஸ்டல் வார்டனிடம் போராடி இந்த முறையும், அவளின் அறை தோழியானாள். நோர்த் சைடில் பிறந்து வளர்ந்ததால் என்னவோ தியாவிற்கு, அவளின் தாய் மொழியான ஹிந்தி தான் சரளமாக பேச வரும்..


ரிதுவிற்கும் ஹிந்தி தெரியும் என்பதால் இருவரும் ஹிந்தியில் உரையாடிக் கொண்டாலும், பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடிக் கொள்வார்கள். கூடுதல் சிறப்பாகத் தியாவின் தமிழ் ஆசிரியராகத் தற்போது பதவி உயர்வு பெற்றிருக்கிறாள் ரிதுஷினி...


தோழியின் சத்தத்தில் முழித்த ரிது, "டுடே மோரிங் ஒன்லி ஐ கேம் தியா, டாட் இஸ் நொவ் (now) பெட்டெர்..." என்று அவளின் கேள்விக்குப் பதில் கூறி, தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள ரெஸ்ட் ரூம் சென்றால் ரிதுஷினி.. அவள் வந்ததும் இருவரும் தேனீர் அருந்த டைனிங் ஹால் நோக்கி சென்றனர்..


(தியா - ரிதுஷினின் உரையாடல் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கலந்து இருக்கும் என்பதால், உங்களைச் சிரமப்பட வைக்காமல் நானே தமிழாக்கம் செய்து கொடுத்திருக்கேன் பிரெண்ட்ஸ்...)


"என்ன ஆச்சு ரிது ஏன் சோகமா இருக்க ஏதாச்சும் பிரச்சனையா??" என்று தியா கேட்டதும், அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியேற்றினாள் ரிது..


தோழியின் அழுகையைப் பார்த்து பதறிய தியா அவளை அழைத்துக் கொண்டு அவர்களின் ரூமிற்கு வந்தாள். உள்ளே வந்ததும் அவளைக் கட்டிலில் உட்கார வைத்து மடி சாய்த்துக் கொண்டாள்.


தியாவின் மடியில் ஆறுதல் தேடிய ரிது, மெல்ல கடந்த பத்து நாட்களாய் அடக்கி வைத்திருந்த அவளின் தூக்கத்தைக் கொட்ட ஆரம்பித்தாள்.


"தியா அப்பாக்கு என்னால் தான் ஹார்ட் அட்டாக் வந்திச்சு!!, நான் அன்னைக்கு அப்படி அப்பாகிட்ட பேசி இருக்கக் கூடாது..." என்று கூறி கண்ணீர் வடித்தாள்.


ரிதுவின் முகத்தைத் தன் முகத்தோடு பார்க்க்க வைத்த தியா, "இங்க பாரு ரிது, பாஸ்ட் இஸ் பாஸ்ட். இன்னும் அதைப் பத்தி ஏன் நினைச்சிட்டு இருக்க...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்னை சுத்தி நிறைய பேரு உனக்காக யோசிக்கிறவங்க இருக்காங்க, அத விட்டுட்டு நீ பழசையே யோசிச்சிட்டு இருக்கலாமா??" என்று கேட்டு அவளை ஆறுதல் படுத்தி, "நீ நம்ம ரூம்லையே இரு நான் போய் டின்னர் எடுத்திட்டு வரேன்..." என்று சொல்லி இருவருக்கும் டின்னர் எடுக்கச் சென்றாள் தியா...


சொன்னபடி டின்னர் எடுத்துவிட்டு வந்த தியா, ரிதுவிற்குச் சாப்பாட்டை ஊட்டி விட்டு, தானும் உண்டு அவளைத் தூங்க வைத்தாள்... தியாவிடம் தன் மனதில் உள்ள பாரங்களைக் கொட்டிய ரிதுவிற்கு, தன் மனபாரம் குறைந்ததால் என்னவோ, ஒரு வகையில் நிம்மதியாகத் தூங்கினாள்..


அடுத்த நாள் விரைவாக எழுந்த ரிது, ஹாஸ்டலில் இருக்கும் நடைபாதையில் காலை நேரத்தை ரசித்தவாறு சிறிது நேரம் நடந்தாள்.. பின்பு ரூமிற்கு வந்து குளித்து உடை மாற்றி, தூங்கி கொண்டிருந்த தியாவை எழுப்பினாள்...


இருவரும் தயார் ஆனதும் காலை சாப்பாட்டை டைனிங் ஹால் சென்று, சாப்பிட்டு முடித்துவிட்டு, அன்றைய வகுப்பிற்குச் சென்றனர்...


பத்து நாட்கள் கழித்துச் சென்றதால், அவளை விசாரித்த ஆசிரியர்களுக்குத் தக்க பதிலை சொல்லியும், பாடத்தைக் கவனித்து அன்றைய நாள், ரிதுவிற்கு விரைவாகச் சென்றது.. இடையில் குணசேகரை பற்றி ஆனந்தியிடம் விசாரிக்கவும் தவறவில்லை..


நாட்கள் வேகமாகச் செல்ல ரிதுஷினி டெல்லி வந்து ஒரு மாதம் ஆகியது, அந்த வாரம் எதுவும் முக்கியமான வேலை இல்லாமல் போக, சொன்னது போல் சென்னை செல்ல முடிவெடுத்தாள்...


தியாவிடம் சொல்லிக் கொண்டு, சென்னை செல்லும் விமானத்தில் ஏறிய ரிது, இம்முறை சற்று பழைய விஷயங்களில் இருந்து மீண்டு, புத்துணர்ச்சியோடு சென்றாள்..


மேக்க கூட்டத்தில் இருந்து வெளியே வரும் சூரியனை பார்த்த ரிது, இதேபோல் என்னுடைய வாழ்க்கையும் ஒரு நாள் விடியும் என்ற நம்பிக்கையுடன் கண் அயர்ந்தாள்...


சென்னை வந்து இறங்கியதும் அவளை அழைக்க வந்த தருணை பார்த்து, ஒரு புன்னைகையுடன் கை அசைத்து அவனுடன் கார் பார்கிங்கிற்கு நடந்தாள்.


தங்கையின் புன்னகை முகத்தைப் பார்த்த தருண், தானும் புன்னகைத்தவாறு அவள் காரில் ஏறியதும், "ரிது இப்போ தான் மா சந்தோஷமா இருக்கு உன்ன இப்படிச் சிரித்த முகமாய்ப் பார்க்க!!" என்றபடி அவளின் தலையைப் பாசமாய்த் தடவினான்...


"நானும் இதே மாதிரி தான் இருக்க ஆசை படுறேன் அண்ணா..." என்று சொல்லி தருணை பார்த்து ஒரு மென்னகை புரிந்தாள் ரிதுஷினி. இருவரும் வீட்டை அடைந்ததும் காரில் இருந்து இறங்கிய ரிது, தன் உடமைகளை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்...


ஹாலில் இருந்த குணசேகரின் அருகில் சென்று, "அப்பா இப்ப எப்படி இருக்கீங்க??? உடம்பு எப்படி இருக்கு... செக் அப்பிற்குப் போனீங்களா??" என்று கேட்டு அவரின் உடல் நிலையைப் பற்றித் தெரிந்து கொண்டாள்..


இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது, வந்த ஆனந்தியை பார்த்து, அவரின் உடல் நிலையைப் பற்றி விசாரித்து, தன்னை ரெப்பிரேஷ் செய்து விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவள் அறைக்குச் சென்றாள்..


அவள் அறைக்கு வந்ததும், கட்டிலில் படுத்த ரிதுவின் முகத்தில் இருந்த மென்னகை கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனது.. சென்னைக்கு வருவதற்கு முதல் நாள் அவளிற்கும் தியாவிற்கு நடந்த உரையாடலை பற்றி நினைத்து பார்த்தாள்.


ஊருக்கு வரும் முதல் தான் சோகமாக இருந்த ரிதுவின் முகத்தைப் பார்த்த தியா, "என்ன ரிது எதுக்கு எப்படி டல்லா இருக்க??" என்று கேட்டு அவள் அருகில் அமர்ந்தாள்.


தியாவின் கேள்விக்கு, "எனக்கு ரொம்பக் கில்ட்டி பீலிங்கா இருக்கு தியா, அப்பாவை பேஸ் டு பேஸ் பார்க்க, என்னால தான அவங்களுக்கு எப்படி ஆச்சு!!!" என்று அவளின் சோகத்திற்கான காரணத்தைச் சொன்னாள்..


ரிது பேசியதை அமைதியாக உள்வாங்கிக் கொண்ட தியா,"ரிது உன்கிட்ட நான் எப்பவும் சொல்றது தான், பாஸ்ட் ஐஸ் பாஸ்ட்.... நீ இப்பவும் சோகமாய்ப் போனால் அங்கிள் எவ்வுளோ பீல் பண்ணுவாங்க... ஜஸ்ட் திங்க் அபௌட் இட்..." என்று கூறி அவள் முகத்தைப் பார்த்தாள்.


தியாவின் பேச்சில் யோசனையாய் அவளைப் பார்த்த ரிதுவிடம் மீண்டும், "நீ இப்போதைக்கு அவங்க முன்னாடி ஹாப்பியா இருக்கிற மாதிரி இரு.. அதுவே அவங்களைச் சீக்கிரம் குணமாக்கிடும்...." என்று தக்க அறிவுரை வாங்கினாள்..


தியா கூறியது போல் இருக்க முடிவு செய்து, அவர்கள் முன்னாடி புன்னகை முகமாக நடமாடியதை நினைத்த ரிது, நேரமானதை உணர்ந்து,
வேகமாகக் குளித்துக் கீழே சென்றாள்..
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேரே டைனிங் டேபிள் சென்ற ரிது, அங்கே எல்லாரும் இருப்பதைப் பார்த்து, ஒரு புன்னகையை அவர்களிற்கு கொடுத்து, அவர்களுடன் உண்ண அமர்ந்தாள்.


"ரிதுமா காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது, ப்ராஜெக்ட் ஒர்க் ஸ்டார்ட் பண்ணிட்டியா??" என்று கேட்ட குணசேகரிடம், "ஆமா அப்பா, காலேஜ் நல்லா போகுது, ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணிட்டேன், 25 பெர்ஸன்ட் ஓவர் ஆகிட்டு..." என்று அவரின் கேள்விக்குப் பதில் அளித்தாள்..


"இன்னும் ஒரு வாரம் இங்க தான இருப்ப ரிது??" என்று ஆவலுடன் கேட்ட அன்னையிடம், " இல்லமா நாலு நாள் தான் இருப்பேன்..." என்று கூறி சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக் கொண்டு கிட்சேனில் வைக்கச் சென்றாள்.


ரிதுவின் பதிலில், முகம் சுருங்கிய ஆனந்தியை பார்த்த குணசேகர் கண் அசைவில் அவரை ஆறுதல் படுத்தினார்.. "அப்பா நான் ஆபீஸ் கிளம்புறேன் ஈவினிங் சீக்கிரம் வர பார்க்கிறேன்" என்று கூறி தருணும், அவர்களிடம் விடை பெற்று ஆபீஸ் சென்றான்..


தருண் சென்றதும், "அப்பா நான் ரூமிற்குப் போறேன் கொஞ்சம் ப்ராஜெக்ட் ஒர்க் பத்தி, டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு..." என்று கூறி அவரிடம் விடை பெற்று, தன் அறைக்கு வந்தாள் ரிதுஷினி....


அறைக்குள் வந்த ரிதுஷினி, அவள் லாப்டாப்பில் சிறிது நேரம் ப்ராஜெக்ட் ஒர்க் செய்து கொண்டிருந்தாள்... மதிய நேரம் அவள் ரூமிற்கு வந்த ஆனந்தி, அவளிடம் சாப்பிட வர சொல்லி அழைத்துக் கீழே சென்றார்..


ஆனந்தி பின்னாடி வந்த ரிதுஷினி ஆனந்தியிடம், "அம்மா இன்னைக்கு எனச் சமையல்??" என்று கேட்டு, அவரிடம் சகஜமாகப் பேச முயன்றாள். அவரும், "உனக்கு பிடிச்ச சமையல் தான் ரிதுமா!!" என்று அவளிடம் கூறி டைனிங் ஹால் நோக்கி சென்றார்..


சாயங்காலம் தருண் வந்ததும், தேனீர் எல்லாரும் ஒன்றாக அருந்தினர்... அப்போது தருண், "அப்பா நம்ம நாலு பேரும் வெளியே போய் ரொம்ப நாள் ஆச்சு!!! இன்னைக்குப் போலாமா??" என்று கேட்டு எல்லாரின் முகம் பார்த்தான்...


தருணின் ஆவல் முகத்தைப் பார்த்த மற்ற மூவரும், சரி என்று சம்மதமாய் தலை அசைத்தனர்.. எல்லாரும் பதினைந்து நிமிட இடைவெளியில் கிளம்பி வந்தனர்..


காரில் ஏறியதும், எல்லாரும் முதலில் அவர்கள் வழமையாகப் போகும் அஷ்டலக்ஷ்மி கோவிலுக்குச் சென்றனர்... கோவிலில் சாமி கும்பிட்டுக் கோவில் மண்டபத்தில் உட்காந்திருந்தனர்..


மண்டபத்தில் உட்காந்திருந்த நால்வரின் நினைவும் ஒன்று போல், இதற்கு முன்னாடி இங்கு வந்த நினைவு தான் வந்தது... முயன்று தங்களின் நினைவுகளை ஒதுக்கி சிறிது நேரம் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு, அங்கிருந்து கிளம்பி இரவு உணவை அவர்கள் வீட்டின் அருகில் உள்ள உணவகத்தில் முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்....


நாள் நாட்கள் தன் குடும்பத்தினருடன் செலவழித்த ரிதுஷினி, ஐந்தாம் நாள் டெல்லி வந்திறங்கினாள். மெல்ல அவள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய ரிது, ப்ராஜெக்ட், கடைசி வருடப் படிப்பு என்று அவள் வாழ்க்கையில் பிஸி ஆகிவிட்டாள்... இன்னும் சொல்லப் போனால் பிஸி ஆகத் தன்னை வைத்துக் கொண்டாள்..


ஒருவாறு ப்ராஜெக்ட் ஒர்க்கை திட்டத்தட்ட என்பது பெர்ஸன்ட் முடித்துவிட்டு, அடுத்து வரும் ப்ராஜெக்ட் வைவாவிற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஹாஸ்டலில் அவள் ரூமில் படித்துக் கொண்டிருக்கும் போது, போன் செய்த ஆனந்தி,


"ரிது எப்படி மா இருக்க?? உன்னைப் பார்த்து நாள் ஆச்சு கொஞ்சம் ஊருக்கு வந்திட்டு போறியா!!" என்று கேட்டு, அவளை ஊருக்கு வர சொல்லி அழைத்தும், அவளின் நலத்தை விசாரித்துக் கேட்டுக் கொண்டு போனை வைத்தார் ஆனந்தி..


ஆனந்தியிடம் பேசிய ரிதுவும், 'அம்மா அப்பாவை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு, ஒரு மூணு நாள் தங்குற மாதிரி சப்ரைஸா போகனும்' என்று மனதில் நினைத்துக் கொண்டாள்...


அவள் நினைத்தது போல், அவள் ப்ராஜெக்ட் செய்யும் ப்ராஜெக்ட் ஹெட் விடுப்பில் சென்றதால், அவளிற்கு நேரம் கிடைக்க, அடுத்த நாள் ஊருக்குச் செல்லலாம் என்று நினைத்துச் சென்னை செல்ல பிளையிட் டிக்கெட் புக் செய்தாள்...


அடுத்த நாள் சென்னை பிளையிட் ஏறிய ரிது, 'சப்ரைஸாக வீட்டினர் முன் தோன்றினால் அவர்களின் சந்தோஷத்தை பார்க்க போகும் நிமிடம் எப்படி இருக்கும்!!' என்று சிந்தித்தபடி மூன்று மணி நேரப் பயணத்தைச் சந்தோஷமான மனநிலையில் கழித்தாள்..


ரிதுவின் வருகை அவளின் குடும்பத்திற்கு ஆச்சிரியத்தை தருமா??, இல்லை அவர்கள் சொல்லப் போகும் விஷயம் ரிதுவிற்கு ஆச்சிரியம் (அதிர்ச்சி) தருமா?? என்பதை நாமும் பார்க்கலாம்....


மாயம் செய்வான்(ள்)...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 3 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 4

Screenshot_20181211-134033__02.jpg

தன் முன்னே வந்து நின்ற மகளைப் பார்த்த ஆனந்தியின் கண்கள் முதலில் ஆச்சிரியத்தில் விரிந்து, பின்பு அழுகையை வெளிப்படுத்தியது...


அன்னையின் கண்ணீரில் 'தன்னை எத்தனை தூரம் தேடி இருப்பார்...' என்று புரிந்து கொண்ட ரிது அவரை அணைத்து ஆறுதல் படுத்தி,


"அம்மா நான் தான் வந்துட்டேன்ல எதுக்கு இப்ப அழுக்கிறீங்க... இன்னும் த்ரீ டேஸ் உங்க கூடத்தான் இருக்கப் போறேன்... சோ பி ஹாப்பி!!" என்று கூறி வீட்டிற்கு உள்ளே ஆனந்தியுடன் வந்தாள்...


ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த குணசேகரின் அருகில் சென்று ரிது உட்காந்ததும், 'தன் அருகில் ஆனந்தியோ இல்லை, தருணோ உட்காந்திருக்கிறான்..' என்று நினைத்து திரும்பிய குணசேகரனுக்கு,


அவரின் செல்ல மகள் ரிதுஷினி உட்காந்திருப்பதைப் பார்த்த அவர் முகம், முதலில் ஆச்சிரியத்தில் வியந்து விரிந்து, பின் மெல்ல ரிதுவின் தலையை வருடி, அவர் தோள் வளைவில் அணைத்துக் கொண்டார்.


தந்தையின் அணைப்பில் சிறிது நேரம் இருந்த ரிதுஷினி, மெல்ல அவரிடம், "அப்பா உங்க ஹெல்த் இப்ப எப்படி இருக்கு... செக் அப்பிற்கு எல்லாம் கரெக்ட்டா போறீங்களா??" என்று கேட்டு தந்தையின் உடல்நிலைப் பற்றித் தெரிந்துக் கொண்டாள்...


மகளின் அக்கறையில் நெகிழ்ந்த குணசேகர், ரிதுவின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் கூற ஆரம்பித்தார், “நான் நல்லா இருக்கேன் ரிதுமா... இப்போ தான் ரெண்டு நாள் முன்னாடி இருந்து நம்ம ஆபீஸ் கூடப் போக ஆரம்பிச்சிருக்கேன்..." என்றார்..


'தந்தை ஆபீஸ் போகிறார் என்றால், தருண் அவரின் உடல் நிலை தெரிந்து தான் அவரை ஆபீஸ் வர அனுமதிருப்பான்' என்று புரிந்ததால், குணசேகரை பார்த்து புன்னகைத்தாள்...


"என்ன ரிதுமா தீடிர் என்று வந்திருக்க… ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே!!" என்று மகளின் தீடிர் வருகையைப் பற்றிக் கவலையுடன் கேட்ட குணசேகரிடம்..


"ஒன்னும் ப்ரோப்லேம் இல்லை அப்பா, உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று தோணியது, அதான் கொஞ்சம் பிரீ ஆனதும் உங்கிட்ட சொல்லாமல் சப்ரைஸா வந்துட்டேன்!!!" என்று கூறி சிரித்தாள்...


மகளின் புன்னகை முகத்தைப் பார்த்த குணசேகர், 'இந்தப் புன்னகை தான் சொல்லப் போகும் செய்தியில் இப்படியே இருக்குமா!!!' என்று மனதில் நினைத்து,


"ரொம்பச் சந்தோசமா இருக்கு மா, அப்பாவுக்கு நீ வந்தது... சரி... நீ போய்ப் பிரெஷ் ஆகிட்டு வா... அப்பா அதுக்குள்ள பேப்பர் படிச்சிட்டு வந்திடுறேன்.. இன்னைக்கு முழு நாளும் உன்கூடத் தான் இருக்கப் போகிறேன்!!!" என்று கூறி ரிதுவை அவளின் அறைக்கு அனுப்பி வைத்தார்.


தன் அறைக்கு வந்த ரித்து, தியாவிற்கு அவள் ஊருக்கு வந்ததை அழைத்துச் சொல்லி, கட்டிலில் சிறிது நேரம் படுத்திருந்தாள்.. பின்பு நேரம் ஆவதை உணர்ந்து, குளித்துக் காலை உணவிற்காகக் கீழே சென்றாள்...


தருணின் அருகில் சென்று அவன் தோள் தட்டி, அவன் பின்னாடி நின்றாள்...தோளில் அடி விழுந்ததும் திரும்பிய தருண், தன் பின்னாடி நின்ற ரிதுஷினியை பார்த்துச் சந்தோஷம் அடைந்தான்.


"ஹேய் ரிது, வாட் அப் பிளேசன்ட் சப்ரைஸ், சென்னைக்கு வந்திருக்க!!!" என்று கேட்டு அவளைத் தன் அருகில் அமர வைத்தான்..


"உங்களை எல்லாம் பார்க்கணும் என்று தோணுச்சு அதான் கிளம்பி வந்துட்டேன்" என்று பெற்றோரிடம் கூறிய அதே பதிலை தமயனிடமும் கூறினாள்....


"சூப்பர் ரிது, ஐயம் ஹாப்பி, ஆனா என்னால இன்னைக்கு உன்கூடப் புல் டே இருக்க முடியாதே, ஹம்ம்... இப்ப என்ன பண்ண??, ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு, அதைக் கண்டிப்பா அவொய்ட் பண்ண முடியாது ரிதுமா..." என்று கூறி சோகமாய் அவள் முகத்தைப் பார்த்த தருணிடம் ...


"நோ வோரீஸ் அண்ணா, சீக்கிரம் வீட்டுக்கு வந்திடு, அவ்ளோதான் ப்ரோப்லேம் சால்வ்ட்" என்று தருணின் கலக்கத்திற்குச் சுலபமாகப் பதில் கூறி கண்சிமிட்டினாள் ...


தங்கையின் பதில் சிரித்த தருண், "ஒகே டன் ரிதுமா, நீ சொன்ன மாதிரி சீக்கிரம் வரேன்,
ஈவினிங் வெளில போலாம்!!!" என்று கூறி தன் உணவை முடித்துக் கொண்டு ஆபீஸிற்குச் சென்றான்....
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தருண் சென்றதும், மூவரும் பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.... பின்பு குணசேகருடன் நேரத்தை செலவழித்த ரிது, மதிய சாப்பாட்டிற்குப் பிறகு ரெஸ்ட் எடுக்க அவள் அறைக்கு வந்தாள்...


சாயங்காலம் தருண் வந்ததும், இருவரும் வெளியே சென்று வந்தனர்.. அன்றைய பொழுது நன்றாகச் சென்றது போல், மற்ற இரு நாட்களும் நன்றாகச் சென்றது ரிதுஷினிக்கு...


இங்கு வந்த வந்து சேர்ந்த இரண்டு நாளும் ரிது, சந்தோசமாகக் கழித்தாள்... குணசேகர் எப்படியும் ரிதுவிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்து, அதைச் சொல்ல தக்க நேரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.


இரவு உணவை முடித்துக் கொண்டு, எல்லாரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, இது தான் ரிதுவிடம் பேசுவதற்குத் தகுந்த நேரம் என்று நினைத்த குணசேகர், ரிதுவிடம் பேச ஆரம்பித்தார்..


"அம்மாடி ரிது உனக்கு ஒரு வரன் வந்திருக்கு, அதைப் பார்க்கலாம்னு இருக்கோம், எல்லாம் நல்லா வந்தா பேசி முடிக்கலாமா?? என்ன சொல்ற மா நீ!!!" என்று அவளிடம் கேட்டார்... தந்தையின் கேள்வியில் அதிர்ச்சியான ரிது, அவரிடம் உணர்வற்ற பார்வையைச் செலுத்தினாள்...


பின்பு ஆனந்தியையும், தருணையும் ஒரு பார்வை பார்த்தாள், அதில் 'உங்களுக்கு என் நிலைமை தெரிந்தும் இதைச் செய்கிறீர்களா???' என்ற அர்த்தம் பொதிந்து இருந்தது...


மகளின் பார்வையைப் புரிந்தும் ஒன்றும் சொல்லாமல் இருந்தார் ஆனந்தி, அவரின் மனதில் 'எப்படியாவது மகளிற்கு ஒரு நல் வாழ்வு அமைய வேண்டுமே!!!' என்ற தவிப்பு மட்டும் தான் அதிகம் இருந்ததால், ஒன்று சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டார்...


தருணோ தங்கையும் நிலை புரிந்தும், ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தான் குணசேகரனே பேசி முடித்துக் கொள்ளட்டும் என்ற முடிவுடன்...


மகளிடம் எந்தப் பதிலும் வராததால், குணசேகரனே ரிதுவிடம், "என்ன ரிது அமைதியா இருக்க??" என்று மீண்டும் விடாது திரும்பவும் கேட்டார்...


மறந்து விட்டது என்று நினைத்தது எல்லாம் மீண்டும் நியாபகம் வர, கண்ணில் வழிந்து கொண்டிருக்கும் நீருடன் குணசேகரிடம் வலி நிறைந்த குரலில்,


"என்னோட நிலைமை தெரிஞ்சும், ஏம்பா என்ன இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்திருக்கிறீங்க!!" என்று கேட்டு, அவர் காலடியில் அமர்ந்து... அவரின் மடியில் தலை சாய்த்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்…


மகளின் வேதனையைக் காண சகிக்காமல், கண்மூடி தன் வருத்தத்தை மறைக்க முயன்றார் குணசேகர்...மகள் மற்றும் கணவனின் வேதனையைப் பார்க்க முடியாமல் வாயில் சேலையை வைத்து தன் கண்ணீரை அடக்கினார் ஆனந்தி....


தருணோ ரிதுவின் வேதனையைக் காண முடியாமல் குணசேகரிடம் "அப்பா அவளோட நிலைமை தெரிஞ்சும் நீங்க ஏம்பா அவளைக் கஷ்டப் படுத்திறீங்க??" எனக் கேட்டான் அவளின் பாசமிகு அண்ணன் தருண்...


மெல்ல தன் குரலை சரிப்படுத்தி, "கண்ணா வலிக்கு மருந்து கொடுத்தால் தான் காயம் ஆறும்.... அதே போலத் தான் இதுவும்!!" என்றார் மூவருக்கும் பொதுவாய் உரைத்தபடி கூறினார் குணசேகர்...


தந்தையின் பேச்சில் எழுந்த துக்கத்தை மறைத்தவாறு, அங்கிருந்த மூவரையும் ஒரு முறை பார்த்து...


"சரிப்பா நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடுங்க!!" என்று கூறி தன் அறைக்கு அழுது கொண்டே சென்றாள்....


மகளின் பதிலில் ஒரு பக்கம் சந்தோஷம் அடைந்தாலும் மறுபக்கம் அவளின் வேதனை புரிந்து வருத்தம் கொண்டார்... பின்பு ஆனந்தியிடமும் தருணிடமும்,


"இப்போதைக்கு அவளிடம் வேற ஒன்னும் சொல்ல வேண்டாம்.... மித்த விஷயங்களை இன்னொரு நாள் ரிதுவை வர சொல்லி, சொல்லிக்கிடலாம்..." என்று கூறி தன் அறைக்குச் சென்றார் குணசேகர்...


குணசேகர் சென்றதும், ஆனந்தியும் அவரின் பின்னாடியே சென்றார். சிறிது நேரம் அங்கிருந்த தருணும் அவன் அறைக்குச் சென்றான்..


அழுது கொண்ட தன் அறைக்கு வந்த ரிதுவோ, கட்டிலில் படுத்து, தன் வருத்ததைக் கண்ணீரில் கரைத்து, அவளை அறையாமல் தூங்கியும் விட்டாள்..


*************************************************
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குணசேகர் ரிதுவிடம் கல்யாண விஷயம் பேசிய அதே நேரம் ராகவும், சென்னையில் இருக்கும் தன் பெற்றோருக்கு sykpe கால் செய்தான்...


வார நாட்களில் தீடிர் என்று பேசும் மகனிடம் ஆராச்சி பார்வை பார்த்தவாறு, திரையில் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர் சிவசுந்தரும்,சாருலதாவும்...


அவர்களின் நலத்தைப் பற்றி விசாரித்த ராகவ், மெதுவாகத் தான் அழைத்த விஷயத்தைப் பேச ஆரம்பித்தான்.. “அப்பா, அம்மா, நான் இது வரைக்கும் உங்க ரெண்டு பேர் கிட்ட இருந்து எதுவும் கேட்டது இல்ல...... இப்ப ஒண்ணு கேட்ட மட்டும் போறேன் ப்ளீஸ் டூ இட் பார் மீ......!!!" என்று சொல்லி அவர்களிடம்,


"அப்பா எனக்காக நான் சொல்றவங்களிடம் பொண்ணு கேட்க வேண்டும்!!!" என்று கூறி, குணசேகர் மற்றும் அவரின் குடும்பத்தைப் பற்றியும், ரிதுஷினியின் தற்போதைய நிலையைப் பற்றியும், சொன்னான் ராகவ்...


ராகவ் சொல்லி முடித்ததும், எதிர் பக்கம் இருக்கும் அவன் பெற்றவர்களிடம் சிறிது யோசனை தெரியவும், "எனக்குத் தெரியாது அப்பா, நீங்க தான் இத முடிச்சு குடுக்கணும்!!!" என்று பொறுமையாக வார்த்தைகளைக் கோர்த்து, அழுத்தமாகக் கூறினான்...


மகன் எதையும் சரியாகத்தான் செய்வான் என்று தெரிந்த சிவசுந்தருக்கு, மகனின் இந்த வேகம் அவன் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்ட, மகனின் வார்த்தையில் உள்ள அழுத்தத்தைப் புரிந்து கொண்டு, தன் மனைவியை மெதுவாகப் பார்த்தார்...


சாருலதாவிற்கும் மகன் ஆசையே பெரிதாய் தெரிய, சிவசுந்தரிடம் கண் அசைத்து அவர் சம்மதத்தைத் தெரிவித்தார்... மனைவியின் கண் அசைவில் அவளின் சம்மதத்தைப் புரிந்து கொண்ட சிவசுந்தர் ராகவிடம்," சரி ப்பா... இப்போ எதுக்கு நாங்க பேச வேண்டும்" என்று கேட்டார்...


சிவசுந்தரின் கேள்வியிலேயே அவரின் சம்மதம், மறைமுகமாகக் கிடைத்ததைப் புரிந்த ராகவ், தாயின் சம்மதத்தைத் தெரிய வேண்டி அவர் முகம் பார்த்தான்..


மகன் பார்வையைப் படித்த சாருலதா, ஒரு புன்சிரிப்பை பதிலாகக் கொடுத்தார்.. நொடிப்பொழுதில் இருவரின் சம்மதம் கிடைத்ததும், சந்தோஷம் அடைந்த ராகவ், சிவசுந்தரின் கேள்விக்கு,


"அப்பா ரிது வீட்டுக்கு நீங்க போங்க, நான் எதுக்கு உங்களை இப்ப போகச் சொன்னேன் என்று புரியும்... அங்க வச்சி எனக்குக் கால் பண்ணுங்க, நான் உங்க எல்லார்கிரையும் பேசுறேன்!!!" என்று கூறினான்...


இதற்கு மேல் மகனிடம் எதுவும் பேச முடியாது என்று புரிந்த சிவசுந்தர், "என்னவோ சொல்ற ராகவ், நாங்களும் நீ சொல்ற மாதிரி பண்றோம்....இது சரியா வருமா??" என்று கேட்டார்...


"எல்லாம் சரியா வரும் அப்பா, உங்க பையன் தப்பு பண்ண மாட்டான்... அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, நீங்க இதை ப்ரோசீட் பண்ணுங்க!!!" என்றான்...


மகனின் சாதுரியமான பேச்சுத் திறமையில் தனக்குள் சிரித்துக் கொண்ட சிவசுந்தர், " சரி ராகவ், எப்ப போய்ப் பேச வேண்டும்??" என்று கேட்டதுக்கு, "நாளைக்குப் போய்ப் பேசுங்க அப்பா..." என்று அவருக்குப் பதில் கூறினான் ராகவ்..


மகன் தந்தையின் உரையாடலை குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டிருந்த சாருலதா, அவர்கள் பேசி முடிக்கும் தருவாயில் ராகவிடம், " ராகவ் மருமகப்பொண்ணு பேரு ரிதுவா??" என்று கேட்டார்...


சாருலதா மருமகள் என்று கூறியதும், சிரித்த ராகவ்,"ஆமா அம்மா அவ முழுப் பெயர் ரிதுஷினி, ரிது என்று கூப்பிடுவாங்க.." என்று கூறினான்...


"மருமக பேரு ரொம்ப நல்லா இருக்கு ராகவ்..." என்று சந்தோசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தையில், அவளும் உங்களைப் போல் நல்லா இருப்பா அம்மா..." என்று கூறி தந்தையிடமும், தாயிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தான்...


சிவசுந்தர், சாருலதாவிடம் போன் பேசி முடித்த ராகவ், அடுத்து வேறு ஒரு சிலரிடம் போன் பேசி, அங்கு நடந்தவைகள் எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு, அவரிடம் தக்க நேரத்தில் தகவல் கூறியதற்கு நன்றி கூறி, போனை வைத்தான்.


அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தபடி, 'நாளைக்குக் குணசேகரிடம் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும்....' என்று மனதிற்குள் திட்டம் வகுத்துக் கொண்டான்...


எல்லாம் முடிவு எடுத்ததும், ஆபீஸ் செல்ல நேரம் ஆக, வேகமாகக் கிளப்பி ஆஃபீஸிற்குச் சென்றான். அதற்குப் பிறகு அலுவல் வேலை அவனைச் சூழ்ந்து கொள்ள மற்றதை பற்றி நினைக்க நேரம் இல்லாமல் போனது....


இவ்வாறு ரிது அந்நாளை துக்கத்தில் முடித்தாள் என்றால், ராகவோ அந்நாளை சந்தோஷத்தில் ஆரம்பித்தான்...


ரிதுவின் துக்கம் நிலைக்குமா, இல்லை ராகவின் சந்தோஷம் நிலைக்குமா!!!....


மாயங்கள் செய்வான்(ள்)...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 4 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 5

Screenshot_20181218-184643__01.jpg

அடுத்த நாள் காலை எழுந்த ரிது, தன் உடமைகள் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த ரிது எல்லாம் எடுத்த வைத்ததும், ட்ராவல் பாகை எடுத்துக் கொண்டு, கீழே வந்தாள்...

ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த குணசேகர், மகளின் வருகையை உணர்ந்து, அவளைப் பார்த்தார். இரவெல்லாம் வெகு நேரம் அழுத்திருக்கிறாள், என்று கூறுவது போல், அழுது அழுது வீங்கி முகத்துடன், சோக சித்திரமாய்க் கட்சி தரும் மகளைப் பார்க்க பார்க்க அவர் மனம் மிகுந்த வேதனை கொண்டது...

குணசேகரின் முன்னாடி நின்ற ரிது அவரிடம், "அப்பா நான் இன்னைக்கு டெல்லி போனும், மார்னிங்
9.30 க்குப் பிளைட்" என்று கூறி அவர் முகம் பார்க்க முடியாமல், தலை குனிந்து கொண்டாள்..

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, குணசேகருக்கு காபி எடுத்துக் கொண்டு அங்கு வந்த ஆனந்தி, அப்பா, மகள் இருவரும் பேசியதை கேட்ட அவரும், மகளின் அழுது வீங்கிய முகத்தைப் பார்த்து வருத்தம் கொண்டார்..

"சரி ரிதுமா... பார்த்துப் பத்திரமா போயிட்டு வா... நான் தருணை ட்ரோப் பண்ண சொல்றேன்... நீ மார்னிங் டிபன் சாப்பிட்டுக் கிளம்பு" என்று ரிதுவிடம் கூறி, ஆனந்தியை பார்த்து ரிதுவை டைனிங் டேபிள் அழைத்துக் கொண்டு போகச் சொன்னார் குணசேகர்...

அன்னையைப் பின் தொடர்ந்த ரிதுஷினி, ஒன்றும் சொல்லாமல், டைனிங் டேபிள் முன் அமர்ந்து, ஆனந்தி வைத்த இட்டிலியை சாப்பிட ஆரம்பித்தாள்.. அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, டைனிங் டேபிள் வந்த தருண், ரிதுவின் அருகில் உட்கார்ந்து தானும் சாப்பிட ஆரம்பித்தான்..

ரிது தன் நினைவிலே உழன்றதால் யாரிடமும், எதுவும் பேச வில்லை. 'மற்றவர்களோ எங்கே பேசினால், மீண்டும் ரிது கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ??' என்று நினைத்து அவர்களும் பேசவில்லை..

இருவரும் சாப்பிட்டு முடித்ததும், ரிது ஆனந்தியிடமும் குணசேகரிடமும் சொல்லிக் கொண்டு, தருணுடன் வினமான நிலையம் சென்றாள்.... ரிதுவை விமான நிலையத்தில் விட்ட தருண், அவளிடம்

"ரிது அப்பா அம்மா உன்னோட நலத்துக்குத் தான் செய்வாங்க, நீ எதை நினைத்தும் கவலை படாத.... உன்னோட ஸ்டடீஸ்ல மட்டும், இப்ப கான்செண்ட்ரேட் பண்ணு" என்று அவளிற்கு அறிவுரைகள் கூறி, அவளைப் பிளைட் ஏற்றி விட்டுக் கிளம்பினான்...


*************************************

அங்கே ராகவ் வீட்டில் மகன் சொன்னது போல், காலை 11 மணி வாக்கில் குணசேகர் வீட்டிற்கு , சிவசுந்தர் சாருலதா தம்பதியினர் வந்தனர்....

உள்ளே வந்ததும், " ஹலோ சார், நான் சிவசுந்தர் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றேன்.. இது என்னோட வைப் சாருலதா, ஹோம் மேக்கரா இருக்காங்க என அவர்களை அறிமுகம் செய்து தான் வந்த விஷயத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தார் சிவசுந்தர்...

"நாங்க இப்ப எதுக்கு இங்க வந்திருக்கோம்னா உங்களோட பொண்ணு ரிதுஷினியை என்னோட பையன் ராகவிற்குக் கேட்க வந்திருக்கிறோம்..." என்று கூறி அவர்கள் வந்த விஷயத்தைக் கூறினார்..

அவர்களை உள்ளே அழைத்து வந்து, உட்கார வைத்த குணசேகர், 'அவர்கள் வேற ஏதோ விஷயத்திற்கு வந்திருக்கிறார்கள்' என்று எதிர்பார்த்து பேசிக் கொண்டிருந்தவருக்குத் தங்கள் மகளைப் பெண் கேட்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதைக் கேட்டு ஆச்சிரியம் அடைந்தார்...

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னே, அவர் உடல் நிலையைப் பற்றிக் கேள்வி பட்ட அவர் நண்பர், அவரைப் பார்க்க வந்திருந்த சமயம், பிள்ளைகள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் மகனிற்கு ரிதுவை கேட்டிருந்தார்..

தனக்குத் தெரிந்த நண்பனின் குடும்பத்தில் தன் மகளைக் கொடுப்பதில் சந்தோஷம் அடைந்த குணசேகர், தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் கலந்து பேசி சொல்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தார்...

அவர் சென்றதும், ஆனந்தியிடமும் தருணிடமும் பேசி குணசேகர், ரிதுவிடம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்து, நேற்று தான் அவளிடம் கல்யாணத்தைச் செய்து கொள்வதைப் பற்றிப் பேசி சம்மதம் வாங்கிய நிலையில் இன்று இவர்கள் வந்திருப்பது அவரை வியப்புக்குள் ஆகியது...

குணசேகரின் ஆச்சிரியப் பார்வையைப் பார்த்த சிவசுந்தர், "சார், உங்களுக்குப் பர்ஸ்ட் இதைப் பத்தி கேட்டதும் ஷாக்கிங்கா தான் இருக்கும்!!! , என்னடா இவர் பாட்டுக்கு தீடிர் வந்து பொண்ணு கேட்கிறார்களே என்று...

எனக்கு என்னோட பையன் ஆசை முக்கியம், அதான் நாங்களும் சீக்கிரம் வந்துட்டோம்..." என்று அவர்களின் தீடிர் வருகையைப் பற்றிக் மேலும் கூறினார்..
 
Status
Not open for further replies.
Top