All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை அவள் போக்கில் விட்டு, என்னோட காதலை நான் உணர வைப்பேன் அதுக்கு முன்னாடி ப்ளீஸ் நீங்க யாரும் சொல்லிடாதீங்க...


இது எல்லாத்துக்கும் செய்ய, எனக்கு உங்க ஹெல்ப் வேண்டும், ப்ளீஸ் மாமா, அத்தை, அப்பா, அம்மா, தருண் எனக்காகச் செய்வீங்களா???" என்று கேட்டு அனைவரின் முகம் பார்த்தான்...


தன் மகளிற்காகப் பேசும், மருமகனை பார்த்துக் கொண்டிருந்த குணசேகருக்கு, மகளின் வாழ்கை பற்றிய கவலை அகன்றது. 'இனி மாப்பிள்ளை எல்லாம் பார்த்துக் கொள்வர் என்று நம்பிக்கை வந்தது'. மெல்ல ராகவை பார்த்து சிரித்த குணசேகர்,


"கண்டிப்பா ராகவ், நானோ, ஆனந்தியோ , தருணோ யாரும் ரிதுவிடம் சொல்ல மாட்டோம், இனிமேல் எங்க ரிது உங்க பொறுப்பு!!!" என்று ராகவின் திட்டத்திற்கு அவர் சம்மதத்தைக் கூறினார்..


குணசேகரின் வார்த்தைகளில் சந்தோஷம் வரப்பெற்று, சிவசுந்தரையும், சாருலதாவையும் பார்த்தான் அவர்களின் முடிவை அறிய எண்ணி, மகனின் பார்வையைப் புரிந்து கொண்ட சிவசுந்தர்,


"ராகவ், ரிதுவையே எங்க மருமகள் என்று நாங்க முடிவு செஞ்சிட்டோம், இனிமேல் என்ன கவலை உனக்கு, நாங்க என்ன சொல்லுவோம் என்று, நீ என்ன செய்தாலும் ரிதுஷினி தான் எங்கள் மருமகள், இதில் எந்த விதமான மாற்றம் இல்லை!!!" என்று சாருலதாவின் சேர்த்து பதிலையும், அவரே கூறினார்..


எல்லாரின் சம்மதம் கிடைத்ததும், "ரொம்பச் சந்தோஷமா இருக்கு எனக்கு, என்னோட ஃபீலிங்ஸ்ஸை புரிந்து கொண்டு, நீங்க எல்லாரும் பேசியதை பார்த்து,


இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு அஸுரன்ஸ் கொடுக்கிறேன், கண்டிப்பா நானும் ரிதுவும் சந்தோஷமா வாழப்போறோம், அதை நீங்க எல்லாரும் பார்க்க தான் போறீங்க!!!"


"சரி, நான் அடுத்து என்ன செய்யலாம் என்று என்னோட மனதில் உள்ளதை உங்களிடம் சொல்றேன், நீ கடைசியா முடிவு எடுத்து என்ன பண்ணலாம் என்று சொல்றீங்களோ, அதே நாம செய்யலாம்!!!" என்று கூறி தன் மனதில் உள்ளதை கூற ஆரம்பித்தான்.


குணசேகருக்கு, ராகவின் யோசனை பிடித்திருக்க, இருந்தாலும் மற்றவர்களின் கருத்தை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்று ஆனந்தி, தருணின் முகத்தைப் பார்த்தார்...


குணசேகரை போல் சிவசுந்தருக்கும் ராகவின் யோசனை பிடித்தாலும், சாருலதாவின் முகத்தைப் பார்த்தார் அவரின் பதில் வேண்டி. மனைவியின் முகத்தை வைத்தே மகன் கூறியதில் சம்மதம் என்று புரிந்து கொண்ட சிவசுந்தர் தனக்குள் புன்னகைத்தவாறு


"எங்க இரண்டு பேருக்கும் ராகவின் ஆசை படியே செய்யலாம் என்ற எண்ணம்... நீங்க என்ன சொல்றீங்க??" என்று அவரிடம் கேட்டார்...


தங்களைப் போல் சிவசுந்தரும் நினைக்கிறார் என்று புரிந்து கொண்ட குணசேகர், ஆனந்தியையும், தருணையும் ஒரு பார்வை பார்த்து, "எங்க எல்லாருக்கும் சம்மதம், ராகவ் சொன்னது போலே செய்துடலாம்!!" என்று அவர்களின் சம்மத்தை கூறினார்...


அவர்கள் பேசியதை வைத்தே அவர்களின் சம்மதத்தைப் புரிந்து கொண்ட ராகவ், "ரொம்பத் தேங்க்ஸ் உங்க எல்லாருக்கும், ஐயம் சோ ஹாப்பி...


இவ்ளோ சீக்கிரம் எனக்கு உங்க சம்மதம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை... தேங்க்ஸ் அப்பா, அம்மா.. தேங்க்ஸ் மாமா, அத்தை" என்று எல்லாரிடமும் அவன் நன்றிகளைத் தெரிவித்தான்..


இவர்கள் எல்லாம் கலந்து ஆலோசித்த பிறகு ராகவ், எல்லாரிடமும் skype காலில் இருந்து விடைபெற்றுச் சென்றான்.. ராகவ் விடை பெற்றுச் சென்றது, குணசேகரும், மற்ற எல்லாரும் மீண்டும் ஒரு முறை என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று கலந்து ஆலோசித்து, சிவசுந்தர் சாருலதாவிடம், மூவரும் விடை பெற்று சென்றனர்.


இவர்கள் இவ்வாறு ஒரு புறம் பேசி முடிவெடுக்க, அங்கே ரிதுவின் கல்லூரி வாழ்கை வழக்கம் போல், சென்று கொண்டிருக்க அவள் ப்ரொஜெக்ட்டும் திட்ட தட்ட முடியும் தருவாயில் வந்தது...


ரிது அன்று குணசேகரிடம் சம்மதம் சொன்னது பிறகு, குணசேகர் அதற்குப் பிறகு எதுவும் பேசாததால், 'அப்பா அதை மறந்து இருப்பர்’ என்று நினைத்து நிம்மதியுடன், கல்லுரிக்கு சென்று கொண்டிருந்த அவளின் நிம்மதி அன்று இரவு போனில் பேசிய குணசேகரின் பேச்சில் முடிவுக்கு வந்தது...


குணசேகர் அப்படி என்ன பேசி இருப்பர்... அதற்கு ரிதுஷினியின் பதில் என்ன ???...



மாயங்கள் செய்வான்(ள்)....

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 7 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 8

Screenshot_20190109-232916__03.jpg

அடுத்த நாள் வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வந்த ரிதுஷினி, தன் அறையில் உட்கார்ந்து, ப்ராஜெக்ட் பற்றி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.


அவள் அருகில் வந்து உட்கார்ந்த தியா அவளிடம், ஏதோ சந்தேகம் கேட்க, அதைச் சொல்லிக் கொண்டிருந்த நேரம் ரிதுஷினியின் போன் சத்தம் அவர்களைக் கலைத்தது...


திரையில் குணசேகரின் முகம் தெரியவும், 'அப்பா இன் நேரத்திற்குப் போன் செய்கிறார் என்றால் என்ன விஷயமாக இருக்கும்' என்று நினைத்துப் போனை அட்டென்ட் செய்த ரிது, குணசேகரிடம் பேச ஆரம்பித்தாள்.


"அப்பா என்ன இந்த நேரத்திற்குப் போன் செய்து இருக்கீங்க, என்ன அப்பா ஏதாச்சு முக்கியமா விஷயமா, உங்க உடம்புக்கு எதுவும் பிரச்னை இல்லையே!!!" என்று அவரின் நலத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டாள்.


"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ரிதுமா, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் போன் செய்தேன், நீ பிரீயா இருக்கீயா??? உன்கிட்ட பேசலாமா??" என்று கேட்ட குணசேகரின் கேள்விக்கு "சொல்லுங்க அப்பா நான் பிரீ தான்", என்றாள் ரிது..


"ரிதுமா அன்னைக்கு நான் உன்கிட்ட கல்யாணத்திற்குச் சம்மதம் பற்றிக் கேட்டு இருந்தேன்ல, உனக்கு இப்ப ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு, எங்களுக்கு எல்லாம் ரொம்பப் பிடிச்சிருக்கு, நான் மாப்பிள்ளை போட்டோ அனுப்புறேன் நீ கொஞ்சம் பார்த்து சொல்லுமா!!!" என்றார்...


குணசேகர் இப்படித் தீடிர் என்று மாப்பிள்ளை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்காத ரிது, குணசேகர் கூறிய விஷயத்தில் அதிர்ச்சி அடைந்தாள்..


அதற்குள் “ரிது அனுப்பவா??” என்று கேட்ட குணசேகரின் குரலில், நினைவிற்கு வந்த ரிது, "இல்லப்பா எனக்குப் பார்க்கணும் என்ற அவசியம் இல்லை... நீங்க அம்மா, அண்ணா மூணு பெரும் பார்த்தாலே போதும்" என்றாள்...


"சரி மா, ரொம்பச் சந்தோஷம் நீ சொன்னதைக் கேட்டு, இருந்தாலும் நான் மாப்பிள்ளை போட்டோவும், பையோ டேட்டாவும் அனுப்புறேன் நீ பார்க்கணும் என்றால் பாரு!!!...


அப்புறம் மாப்பிள்ளையோட அப்பா, அம்மா உன்னைப் பார்க்கணும் என்று ஆசை படுறாங்க அதுனால, நீ அடுத்த வாரத்தில் ஒரு நாள் சென்னை வா மா, அவங்க உன்னைப் பார்த்துவிட்டு போகட்டும்" என்று அடுத்தக் குண்டை தூக்கி போட்டார்...


குணசேகரின் பேச்சை மீற முடியாமல், "சரி அப்பா நெஸ்ட் வீக் எண்ட் வரேன்" என்று கூறி, அவள் வரும் தேதியை கன்பார்ம் செய்துவிட்டு வைத்தாள்...


குணசேகரிடம் பேசி முடித்ததும், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தியாவிடம், "தியா நான் அன்னைக்குச் சொன்னேன்ல கல்யாணத்திற்கு வரன் பார்கவா என்று அப்பா கேட்டாங்கனு, அதுக்குத் தான் போன் பண்ணாங்க, ஒரு வரன் பார்த்துருக்கங்களாம், வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்காம்..


மாப்பிள்ளை வீட்டில் பொண்ணு பார்க்கணும் என்று சொன்னார்கள் போல், அதான் அப்பா என்னை நெஸ்ட் வீக் எண்ட் சென்னை வர சொல்லி, போன் பண்ணாங்க.... "


"நீ என்ன டி, சொன்ன அங்கிளிற்கு" என்று கேட்ட தியாவிடம், "நான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னது தான் தியா இனிமேலும் அப்பாவை என்னால் கஷ்டப்படுத்த முடியாது அதுனால,


அவங்க சொன்ன மாதிரி சண்டே வரேன் என்று சொல்லிட்டேன்" என்று கூறி கண்ணில் வர துடிக்கும் கண்ணீரை துடைத்தபடி தியாவிடம் கூறினாள் ரிது...


"ரிது, பி போல்ட்.. முடிந்த ஒன்றிக்காகப் பீல் பண்ணை கூடாது, சரி... அண்ணா போட்டோ பார்த்தியா நீ!!!" என ரிதுவிடம் கேட்டாள் தியா...


"அண்ணா வா?? யாரு டி அது" என்று கேட்ட ரிதுவை பார்த்து, "உன்னை மேரேஜ் பண்ணிக்கப் போறவங்க எனக்கு அண்ணா தானே அது தான் சொன்னேன்" எனத் தோழிக்கு விம்பார் போட்டு விளக்காத குறையாய் விளக்கினாள் தியா....


தியாவின் கிண்டலை சட்டை செய்தபடி, "அப்பா அனுப்புறேன் என்று தான் சொன்னாங்க தியா, நான் தான் உங்களுக்குப் பிடிச்சா போதும் என்று சொல்லிட்டேன்" எனக் குணசேகரிடம் கூறியதை கூறினாள்.


ரிதுவின் கையில் இருந்த போனை வாங்கிப் பார்த்த தியா, அதில் குணசேகர் அனுப்பிய பையோ டேட்டாவையும், ராகவின் போட்டோவையும், பார்த்தாள்.


"அண்ணா சூப்பரா இருக்காங்க ரிது , ஹீ சீம்ஸ் டு பி அப் பேர்பெக்ட் மேட்ச் பார் யூ!!!",
என்று சொல்லி ராகவின் பையோ டேட்டாவை படித்தாள்.
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஹே ரிது அண்ணா வெலிங்டன்ல ஒர்க் பண்ணறாங்க போல, ரிது நீ பாரீன் செட்டில் ஆஹ்!!" என்று கேட்டு ராகவ் வேலை செய்யும் இடத்தைச் சொன்னாள்.


தியா சொன்னதைக் கேட்ட ரிது , "எனக்குத் தெரியல தியா, ஐ டோன்ட் ஹாவ் எனி ஐடியாஸ், அப்பா சொன்னது தான் பைனல், எனக்குன்னு எந்தத் தாட்ஸ்சும் வச்சிக்கிடல, அப்பா அம்மாவோட சாய்ஸ் எனக்கு ஓகே!!!" என்று கூறி, அந்தப் பேச்சிற்கு முற்று புள்ளி வைத்து, அடுத்த வேலையைப் பார்க்க சென்றாள்.


ரிதுவின் பதிலில் அவளின் மனநிலையைக் கணித்த தியா அதற்கு மேல் ரிதுவை கஷ்டப்படுத்த விரும்பாமல், அவளின் வேலையைக் கவனிக்கச் சென்றாள்.

******************************
தன் நீண்ட கால ஆசை, நிறைவேற போகும் மகிழ்ச்சியில், அகமும் புறமும் மகிழ்ச்சி பொங்க புன்னகை முகமாய் ஆபீஸ் வந்த ராகவை எதிர் கொண்ட ரியான் ராகவின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சையைப் பார்த்து,


"ஹாய், ராகவ் இஸ் தேர் எனி குட் நியூஸ் பார் யு, அஸ் யுவர் பேஸ் ஐஸ் க்ளோவிங்!!!" என்று அவனிடம் கேட்டான்.. 'தன் சந்தோஷம் அத்தனை தூரம் முகத்தில் தெரியும் படியா இருக்கிறோம்' என்று நினைத்த ராகவ், "யா ரியான் சூன் ஐயம் கோயிங் டு பி எங்கேஜ்ட்!!!" என்று புன்னகை முகமாய்க் கூறினான்...


ராகவின் பதில் முகம் மலர்ந்த ரியான், "காங்கிராட்ஸ் ராகவ், மை பெஸ்ட் விஷேஷ் பார் யு!!" என்று கூறி ராகவை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..


ரியானின் வாழ்த்தையும் அணைப்பையும் பெற்றுக் கொண்ட ராகவ், ரியானிடம் விடை பெற்றுக் கொண்டு, தன் இருக்கைக்கு வந்து புன்னகையுடன், வேலை செய்யத் தொடங்கினான்...


அன்றைய நாள் மகிழ்ச்சியாய் செல்ல, வேலை முடித்துக் கிளம்பும் நேரம், இந்தியாவில் இருந்து கால், வந்தது... போன் அட்டென்ட் செய்த ராகவ், "ஹாய் தருண், ஹொவ் ஆர் யு??" என்று கேட்டுத் தருணிடம் பேச ஆரம்பித்தான்...


ஐயம் பைன் ராகவ், ஹொவ் ஆர் யு அண்ட் யுவர் ஜாப் என்று கேட்டு ராகவின் நலத்தையும் அவனின் வேலையும் கேட்டு தெரிந்து கொண்டான்...


"எவெரிதிங் இஸ் வெல் அண்ட் குட் தருண்" என்று கூறி, வீட்டில் உள்ளவர்களின் நலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டான்..



"எல்லாரும் நல்லா இருக்காங்க ராகவ்", என ராகவின் னால விசாரிப்பிற்குப் பதில் கூறிய தருண் அவன் அழைத்த விஷயத்தைப் பற்றி ராகவிற்குக் கூற ஆரம்பித்தான்..


"அப்பா நேத்து ரிதுவிடம் உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேசி, நீங்க பொண்ணு பார்க்க வரதை பற்றி ரிதுவிடம் சொல்லிட்டாங்க, ரிதுவும் இந்த வீக் எண்ட் வரேன் என்று சொல்லி விட்டாள்" என ராகவிடம் ரிதுவிடம் தகவல் பரிமாறப்பட்ட செய்தியை கூறினான் ..


"ரொம்பச் சந்தோஷம் தருண், லெட் அஸ் சி வாட் வில் பி நெஸ்ட்... ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் ரிது'ஸ் சிட்டுவேஷன் பட் எனிவெஸ் வீ ஹவ் டு, டூ இட் பார் ஹேர்!!! என்று கூறி தருணிடம்,


"தேங்க்ஸ் தருண் நீ தான் அங்க என்ன நடக்குது அன்று எனக்கு அப்ப அப்போ அப்டேட் கொடுக்கணும், அதுக்கு ஏத்த மாதிரி ஐ ஹவ் டு டேக் டெசிஷன்!!" என்று கூறி, சில நேரம் பேசிவிட்டுப் போனை வைத்தான்...


தருணிடம் பேசிவிட்டுப் போனை வைத்த ராகவ், மனதில் சில உறுதிகளை எடுத்து, அதன் படி நடக்க வேண்டும் என்று முடிவு செய்து, வீட்டிற்குக் கிளம்பினான்....

**********************************


அந்த வாரம் விரைந்து செல்ல, வெள்ளிக்கிழமையும் வந்தது.. வெள்ளிக்கிழமை காலையிலே கண்விழித்த ரிது, 'இன்று சாயங்காலம் சென்னை செல்ல வேண்டுமே!!!’ என்று நினைத்து வருத்தம் கொண்டாள்...


அவளிற்குக் கல்யாணத்தைப் பற்றி எந்த நினைப்பும், தற்போது இல்லை என்றாலும், தன் குடும்பத்திற்காகத் தன் வேதனையைத் தன்னுள் புதைத்துக் கொண்டு, கிளம்பத் தயாராகினாள்…


ஈவினிங் தான் பிளைட் என்பதால், காலை கல்லூரிக்கு சென்று, அங்கிருந்து நேராக விமான நிலையம் செல்ல, முடிவெடுத்து ஊருக்குக் கொண்டு செல்லும் எல்லாவற்றையும், எடுத்துக் கொண்டாள்.


தியா கிளம்பியதும், இருவரும் ஒன்றாகக் கல்லூரிக்கு சென்றனர். அன்றைய தினம் ஒருவித இறுக்கத்துடனே ரிதுவிற்குக் கழிய, சாயங்காலம் தியாவிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு...

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சென்னை பிளைட் ஏறி அமர்ந்த ரிதுவிற்கு, மனம் ஒரு நிலையில் இல்லை.. மறந்து விட்டதாய் நினைத்துக் கொண்டிருந்த நிகழ்வுகள் எல்லாம் நிழற்படம் போல் விரிய, கண்களை மூடி, மனதை ஒரு நிலை படுத்த முயன்று அதில் ஒரு அளவிற்கு வெற்றியும் பெற்றாள்.


இதற்குள் சென்னை வர, பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துக் கொண்டு, தன்னை அழைக்க வந்த தருணுடன், வீட்டிற்கு வந்தாள் ரிதுஷினி...


வீட்டிற்குள் வந்ததும், வரவேற்று பேசிய குணசேகருக்கும், ஆனந்திக்குத் தக்க பதில்களைக் கொடுத்து, இரவு உணவையும் முடித்துக் கொண்டு தன் அறைக்கு விரைவாக வந்தாள்.


அடுத்த நாள் வேகமாகக் கழிய, மாப்பிள்ளை வீட்டில் இருந்து வருவதாகச் சொன்ன ஞயாற்றுக்கிழமையும் விடிந்தது... வீட்டில் இருந்து மூவரும் பரபரப்பாகச் சுழன்று கொண்டிருந்தனர், ரிதுவை தவிர...


காலை 10 மணிக்கு அவர்கள் வருவதாய்ச் சொல்ல, குளித்து முடித்துக் கீழே வந்த ரிது, காலை உணவை முடித்துக் கொண்டு, ஆனந்தி எடுத்து வைத்த சேலையைக் கட்ட அவள் அறைக்குச் சென்றாள்.


வெள்ளை மற்றும் சிகப்பு நிற டிசைனர் சேலை உடுத்தி, ஆனந்தி கொடுத்த பூவை வைத்து, மிதமான ஒப்பனையில், எழிலோவியமாய் தயாராகி அறையில் இருந்தாள்...


ரிது தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ராகவின் அப்பாவும், அம்மாவும் குணசேகரின் வீட்டிற்கு வந்தனர்.. பரஸ்பர விசாரிப்புக்கு பிறகு, ஆனந்தி ரிதுவை அழைத்து வந்தார்...


போட்டோவில், பார்த்த ரிதுவை விட நேரில் பார்க்கும் ரிதுவிற்கு நிறைய வித்தியாசங்கள் இருந்தது... நேரில் இன்னும் அழகாக இருந்தாள் ரிதுஷினி.. ஆனந்தி கொடுத்த காபி ட்ரேயை வாங்கிக் கொண்ட ரிது, சாருலதாவிற்கும் சிவசுந்தருக்கும் கொடுத்தாள்.


சாருலதாவிற்குக் கொடுக்கும் போது ரிதுவை பார்த்து சிரித்த அவரைப் பார்த்து, ரிதுவும் மென்னகை புரிந்தாள்.. ஆனால் அவளின் புன்னகையில் ஜீவன் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட சாரு,


'ஆண்டவா, என் மருமகளின் புன்னகையை ஜீவன் உள்ளதாக மாற்ற, நீ தான் அவளிற்கு அருள் புரிய வேண்டும்' என மனதில் இறைவனிடம் அவசர கோரிக்கையை வைத்தார்...


இருவருக்கும், காபி கொடுத்த ரிதுவை அழைத்த குணசேகர், தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.. அது ஒருவகையில் ரிதுவிற்கு ஆறுதல் அளித்தது...


காபி அருந்தி முடித்த சிவசுந்தர் மெதுவாகப் பேச ஆரம்பித்தார், "எங்களுக்குப் பொண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு, பையனுக்கும் தான், உங்களுக்கும் என் பையனை பிடிச்சிருக்கு என்று நீங்க சொன்னீங்க...


உங்க பொண்ணுக்கு என் பையன், பிடிச்சிருக்கா என்று நீங்கள் கேட்டுச் சொன்னால் நல்லா இருக்கும்!!" என்று சொல்லி, ரிதுவின் சம்மதத்தை வேண்டினார்...


"அதுக்கு என் கேட்டுடா போச்சு என்று கூறிய குணசேகர் ரிதுவை பார்த்தார், அவளின் சம்மத்தை வேண்டி, இந்தச் சூழ்நிலையில் பேசி தான் ஆக வேண்டும் என்று உணர்ந்த ரிது மெல்லிய குரலில், "எங்க வீட்டில் உள்ளவங்களுக்குச் சம்மதம் என்றால், எனக்கும் சம்மதம்" என அவளின் சம்மதத்தைக் கூறினாள்.


ரிதுவின் வாய் மொழி சம்மதம் கிடைத்ததும், எல்லாரும் ஒரு வகையில் நிம்மதி அடைந்தனர், " ரொம்பச் சந்தோஷம் மா, அப்புறம் அடுத்தது என்ன சம்மந்தி, கல்யாண விஷயங்களைப் பேசலாமா!!!" என்று கேட்டு கல்யாண விஷயங்களைப் பேச ஆரம்பித்தனர் எல்லாரும்....


எல்லாரும் ஒன்று கூடி பேசி முடிவெடுத்து, கல்யாணத்தை இரண்டு மாதம் கழித்தும், நிச்சியதார்தத்தைக் கல்யாணத்திற்குப் பத்து நாள் முன்னாடி வைப்பதாக முடிவு எடுத்தனர்...


'எப்படியும் இந்தச் சம்மந்தப் பேச்சு முடிவாக நாள் ஆகும்!!!' என்று நினைத்த ரிதுவிற்குக் கல்யாணம் இரண்டு மாதத்தில் என்ற செய்தி சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கச் சிரமப்பட்டாள்...


மற்ற விஷயங்கள் எல்லாம் அடுத்து பேசி கொள்ளலாம் என்று முடிவு எடுத்து, எல்லாரிடமும் விடை பெற்று சென்றனர் சிவசுந்தரும், சாருலதாவும்...


அவர்கள் சென்றதும், அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த குணசேகரின் சிரித்த முகத்தைக் கண்ட ரிதுவிற்கு, 'தந்தையின் சிரித்த முகத்திற்காக எதுவும் செய்யலாம்' என்ற எண்ணமே தோன்றியது....


அன்றைய பொழுது விரைவாகக் கழிய, சாயங்காலம் சென்னையில் இருந்து டெல்லிக்குப் பிளைட் ஏறிய ரிது அவளின் ஹாஸ்டல் வர இரவானது ...


தன் அறைக்கு வந்து கட்டிலில், தலை சாய்த்த ரிது, அதுவரை அடக்கி வந்த கண்ணீர் எல்லாவற்றையும் தலையணையில் கொட்டினாள்.


ரிது கண்ணீரில் நினைய, ராகவோ மகிழ்ச்சி கடலில் மிதந்தான்... அவர்களின் நிலை இப்படியே தொடருமா....


மாயங்கள் செய்வான்(ள்)....
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 8 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 9

Screenshot_20190117-072237__01.jpg
நாட்கள் விரைவாகச் செல்ல, ரிதுவின் ப்ராஜெக்ட் கடைசிக் கட்டத்திற்கு வந்திருக்க, அவளின் கல்லூரி வாழ்க்கையும் முடியும் தருவாயில் வந்தது...


இன்று ப்ராஜெக்ட் வைவா(VIVA) நடக்க உள்ளதால் விரைவாகக் கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்த ரிது, தியாவையும் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றாள்.


அவளின் முறை வந்ததும் எஸ்டேர்னல்ஸ் (Externals) கேட்ட கேள்விக்குத் தக்க பதில்களை அளித்த ரிது,வைவாவை நல்ல படியாக முடித்துக் கொண்டு, கேன்டீனில் தனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் தியாவை பார்க்க சென்றாள்..


போனில் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருந்த தியா, ரிது வருவதைப் பார்த்து அவளிடம் கை அசைத்து விட்டு, தான் இருக்கும் இடத்திற்கு வர சொன்னாள். ரிது வந்து அமர்ந்ததும், "ரிது என்ன சாப்பிடுற ஹாட் ஆர் கோல்டு??" என்று கேட்டு, ரிது கேட்ட கோல்டு காபியை அவளிற்கு வாங்க சென்றாள்.


ரிதுவிற்குக் கோல்டு காபியை கொடுத்து, அவளிற்கு என்று வாங்கிய பைன்ஆப்பிள் ஜூஸ்சை பருக ஆரம்பித்தாள். தியா கொடுத்த கோல்டு காபியை குடித்த ஆரம்பித்த ரிதுவின் மனம், 'நாளை ஊருக்கு செல்ல வேண்டுமே!!' என்று அடுத்த அடுத்த நிகழ்வுகளைப் பற்றிச் சுற்றிக் கொண்டிருந்தது.


ரிதுவின் யோசனையான முகத்தைப் பார்த்த தியா, "என்ன ரிது எதையோ திங்க் பண்ணிட்டு இருக்கிற மாதிரி இருக்கு??" என அவளிடம் கேட்டாள் .


தோழியின் கேள்வியில் தன் நினைவை விட்டு வெளியே வந்த ரிது, "யா தியா நாளைக்கு ஊருக்கு போனுமே அதைப் பத்தி தான் திங்க் பண்ணிட்டு இருந்தேன்... இந்த டூ மன்த்ஸ் எப்படிப் போச்சு என்றே தெரிய வில்லை...


இதோ நம்மளோட காலேஜ் லைப் முடிய போகுது, அடுத்து என்ன என்று நினைக்கும் போது தான் மனசு கஷ்டமா இருக்கு, ஐ வில் மிஸ் யூ லாட்..." எனத் தியாவிடம் அடுத்து அவளின் வாழ்வில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை நினைத்த படி கூறினாள்..


ரிதுவின் மனநிலையைச் சரியாகக் கணித்த தியா,"ஹேய் ரிது டோன்ட் ஒர்ரி டியர், நாம தான் இன்னும் ஒன் வீக்ல உன்னோட எங்கேஜ்மென் அப்போ மீட் பண்ண போறோம்ல, அப்புறம் என்ன, எதுக்குப் பீல் பண்ற.. பி ஹாப்பி..." என்று கூறி தோழியைத் தேற்றினாள்...


'அதை நினைத்து தானே என் பயமே!!' என்று மனதில் நினைத்த ரிது, தியாவிடம் ஒரு புன்னகை புரிந்து, ஹாஸ்டல் செல்வதற்கு எழுந்தாள்..


தியாவும் அவளுடன் எழுந்ததும் இருவரும், கிளாஸிற்கு ஒரு முறை சென்று, எல்லாப் பார்மாலிட்டீசும் முடித்துக் கொண்டு, அனைவரிடமும் சொல்லி விட்டு ஹாஸ்டல் சென்றனர்...


ஹாஸ்டல் வந்த ரிதுவும், தியாவும் துணிமணிகளை எல்லாம் பாக் செய்தனர். இவை அனைத்தும் முடிக்க இரவாகியது.. இரவு உணவு உண்ணும் நேரம் வந்ததும், மெஸிற்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு, சிறிது நேரம் அங்கிருந்த லானில், நடந்தனர்...


ரூமிற்கு வந்ததும், படுக்கப் போகும் முன், ரிதுவை அழைத்த தியா, "ரிது, நான் திரும்பவும் இதே தான் சொல்றேன், பாஸ்ட் இஸ் பாஸ்ட், இனிமேல் உன்னோட லைப் ராகவ் அண்ணா கூடத் தான், சோ கெட் ரெடி யூர்செல்ப் டு என்டர் இன் டு யுவர் நியூ லைப்...


உனக்கு எதுவும் என்கிட்ட பேசணும் என்றால் எனக்குக் கால் பண்ணு, ஐ வில் பி ஆல்வேஸ் தேர் பார் யூ... ஐ வில் மிஸ் யூ ஸ்வீட் ஹார்ட்!!" என்று கூறி ரிதுவை அணைத்து அவளின் அன்பை பரிமாறினாள் தியா.


"யா தியா, நீ சொல்ற மாதிரி இருக்க ட்ரை பண்றேன், வில் பி ஆரைட் சூன், அண்ட் ஐ டூ மிஸ் யூ பாட்லி தியா!!" என்று கூறி ரிதுவும் தியாவை அணைத்து விடுவித்தாள்...


இருவரும், தங்களின் பிரிவை எண்ணி கண்ணீர் விட்ட படி, இரவை களித்தனர்...



**********************************************

அதே நேரம் காலையில் சீக்கிரம் எழுந்த ராகவ், பரபரப்பாக இந்தியா செல்வதற்கு என்று எல்லாவற்றையும் எடுத்துக் வைத்துக் கொண்டிருந்தான்.


ஸ்வாதி கேட்டது, சாருலதா, சிவசுந்தர், குணசேகர், ஆனந்தி, தருண், மற்றும் ரிது என ஒவ்வொருக்கும் தனித் தனியாகப் பரிசுகள் வாங்கியதை எடுத்து வைத்துக் கொண்டான்..


எல்லாம் எடுத்து வைத்து முடித்ததும், மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு,
ஆபீஸ் செல்ல அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்..
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆபீஸ் வந்த ராகவ், அன்றைய வேலையைச் சீக்கிரம் முடித்து விட்டு, ரியானிடமும் அவனுடன் பணிபுரியும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு, ஒரு மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு, தன் அப்பார்ட்மெண்ட் வந்தான்..


அப்பார்ட்மெண்ட் வந்ததும், சின்னதாக ஒரு குளியல் போட்டு, லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்டு, விமான நிலையம் செல்ல கே புக் செய்து விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்...


விமான நிலையம் வந்ததும், பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துக் கொண்டு விமானம் ஏறிய ராகவின் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.. 'மீண்டும் வெலிங்டன் வரும் போது ரிதுவுடன் தான் வருவோம்!!' என்ற நினைப்பே அவனிற்குச் சிலிர்ப்பை உண்டாக்கியது...


வெலிங்டனில் இருந்து கிறிஸ்ட்சர்ச் என்று இடத்திற்கு வந்து அங்கிருந்து, சிங்கப்பூர் வந்து, மீண்டும் சிங்கப்பூரில் இருந்து தான் சென்னை வர முடியும் என்பதால், வெலிங்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஏறினான்.


சிங்கப்பூர் சியாங்கி விமான நிலையம் வந்திறங்கிய ராகவ், அங்கிருந்த கடையில் ஒரு காபி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு, அங்கிருந்த வைட்டிங் ஹாலில் உட்கார்ந்து ரிதுவை பற்றி நினைத்துக் கொண்டு காபியை அருந்தினான் ...


ஒரு வழியாக வைட்டிங் நேரம் முடிந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை செல்லும், பிளைட் ஏறிய ராகவ், மூன்று வருடம் கழித்துத் தாயகம் திரும்பப் போகும் சந்தோஷத்துடன், ஆவலுடன் அப்பயணத்தை ரசித்தான்..


ராகவ் சிங்கப்பூரில் இருந்து சென்னை பிளைட் ஏறிய அதே நேரம் ரிதுவும் டெல்லியில் இருந்து சென்னைக்குப் பிளைட் ஏறினாள்..


பிளைட் ஏறிய ரிது, இனிமேல் தான் வாழ்கை பயணம் மாறப்போகும் திசையை எண்ணி கலக்கம் அடைந்தாள்.. 'என்ன ஆனாலும், தன் குடும்பற்காக எதையும் செய்யலாம்’ எனக் கலக்கம் அடைந்த மனதை சரி செய்து உறுதியாக முடிவு எடுத்துக் கொண்டாள்...


இருவரும் வெவ்வேறு மனநிலையில் சென்னையை நோக்கி தங்களின் பயணத்தை மேற்கொண்டனர்... இந்தப் பயணம் அவர்களின் தற்போதைய மனநிலையை மாற்றுமா???....


****************************

சென்னை வந்திறங்கிய ரிது, அவளை அழைக்க வந்த தருணுடன், வீட்டிற்கு வந்தாள். வழக்கமான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, தன் அறைக்கு வந்த ரிது, பல நாள் தூங்காததன் விளைவாக அசதியில் கண் அயர்ந்தாள்..


நாலு மணி நேரம் பயணம் முடிந்து சென்னை வந்திறங்கிய ராகவிற்குச் சந்தோஷம் ஊற்றடுத்து... பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்த ராகவ், விமான நிலையம் விட்டு வெளியே வந்தான்...


ராகவ், வருவதைப் பார்த்து அவனை நோக்கி ஓடி வரும் ஸ்வாதிகாவை தூரத்தில் இருந்து பார்த்த ராகவ், அவளைப் பார்த்து புன்னகையுடன் கை அசைத்தான்..


"ஹேய் ராகவ் அண்ணா, எப்படி இருக்க??" என்று கேட்டு அவனைக் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்வாதிகாவை தானும் அணைத்தவன், "நான் நல்லா இருக்கேன் ஸ்வாதி நீ எப்படி இருக்க??" என்று கேட்டு அவளை அணைத்து தன் மகழ்ச்சியை வெளிப் படுத்தினான்..


இருவரும் அவர்களின் பெற்றோர்களை நோக்கி நடந்து வந்தனர். தன் பெற்றோர்களின் கால்களில் விழுந்து வணங்கிய ராகவ், அவர்கள் அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்..


எல்லாரும் வீட்டிற்கு வந்ததும், பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, உணவு உபச்சாரம் நடந்தது... கிண்டல் கேலியுடன் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாகக் கழித்தனர்..


இப்படியாக இரெண்டு நாள் செல்ல, நிச்சியதார்த்த நாளும் வந்தது... மாலை பொழுது நிச்சியதார்த்த விழா நடக்கும் மண்டபத்திற்கு மதியம் நல்ல நேரம் பார்த்து இரு குடும்பமும் வந்தனர்...


பியூட்டிஷியனின் கைவண்ணத்தில் வானுலகத் தேவதையாய், தயாராகிக் கொண்டிருந்தாள் ரிதுஷினி.. அவளைப் போல், ஆண்மையின் இலக்கணமாய்க் கோட் சூட் அணிந்து மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தான் ராகவ்.


மணமகள் அறையின் கதவை திறந்த ஸ்வாதிக்கா, "வாவ் அண்ணி யூ ஆர் லூக்கிங் கார்ஜீயஸ்!!" என்று ரிதுவின் அழகை பாராட்டினாள். புன்னகையுடன் அதை ஏற்ற ரிது , புரியாத பார்வையை ஸ்வாதியை நோக்கி செலுத்தினாள்.


ரிதுவின் பார்வையைப் புரிந்து கொண்ட ஸ்வாதி, "அண்ணி நான் ஸ்வாதிக்கா, ராகவ் அண்ணாவோட தங்கச்சி... உங்களை மேடைக்கு அழைக்க வந்திருக்கிறேன்..." என்று சொல்லி ரிதுவை அழைத்துக் கொண்டு மேடை நோக்கி வந்தாள்.



ரிது மேடை நோக்கி வந்து கொண்டிருந்த அதே நேரம், தருணின் கை பிடித்து ராகவும் வந்து கொண்டிருந்தான். இருவர் பார்வையும் நேர் கோட்டில் சந்தித்துக் கொண்டனர்..


ரிது அப்போது தான் ராகவை பார்த்தாள். ஏனோ அவனின் பார்வையைத் தாங்க முடியாமல் அவனிடம் இருந்து பார்வையை விளக்கி குனிந்து கொண்டாள்..


ராகவோ, வானுலகத் தேவதையாய் தயாராகி இருந்த ரிதுஷினி பார்த்து,
பிரமித்துப் போனான்.. தன்னைப் பார்த்து தலை குனிந்த ரிதுவிடம் இருந்து பார்வையை விளக்க மனமே இல்லாமல் விளக்கி மேடை ஏறினான்...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரும் மேடை வந்தது, வந்தவர்களுக்கு வணக்கம் வைத்து, அவர்களை வரவேற்றனர்.. ஐயர் நிச்சய ஓலை வாசித்ததும், மாலை மாற்றியும், மோதிரம் மாற்றியும் தங்கள் உறவை அனைவருக்கும் முன் நிச்சயம் செய்தனர்...


அடுத்து அடுத்து உறவினர்கள் வர அவர்களுக்கு என நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது.. ஒரு வழியாகக் கூட்டம் குறைய, ஸ்வாதி அவளின் தோழிகளுடன் சேர்ந்து மேடைக்கு வந்தாள்..


கையில் கேக் எடுத்துக் கொண்டு வந்த ஸ்வாதி, அருகில் இருந்த டேபிளில் வைத்து, ராகவிடமும், ரிதுவிடமும், "அண்ணா அண்ணி, வாங்க ரெண்டு பெரும் கேக் வெட்டுங்க" என்றவாறு, ராகவின் கையில் கத்தியை கொடுத்தாள்.


கத்தியை வாங்கிய ராகவ், ரிதுவை ஒரு பார்வை பார்த்தான்.. அவன் பார்வையை உணர்ந்த ரிது, மெல்ல அவள் கையை எடுத்து ராகவின் கையில் வைத்தாள்.. பின் இருவரும் சேர்ந்து கேக் வெட்டினர்...


கேக் வெட்டியதும், ஒரு துண்டை எடுத்து ரிதுவின் வாய் அருகில் கொண்டுசென்றதும், மெல்ல வாய் திறந்து வாங்கிக் கொண்ட ரிது, குனிந்து ஒரு துண்டை எடுத்து, தயக்கத்துடன் ராகவின் வாய் அருகில் கொண்டு சென்றாள்.


தன் முன்னாள் நீண்ட கொண்டிருந்கும் ரிதுவின் கையையும், அவளின் முகத்தையும் பார்த்த ராகவ், அவளின் முகத்தில் தெரிந்த தயக்கத்தைப் பார்த்து மனதில் பெருமூச்சு ஒன்றை விட்டு அவளிடம் கேக் வாங்கிக் கொண்டான்..


பின் எல்லாரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.. இதற்குள் வந்தவர்கள் எல்லாம் சாப்பிட செல்ல, போட்டோக்ராபர் ரிதுவையும், ராகவையும் வைத்து போட்டோ எடுக்க வந்தார்..


இருவரையும் வித விதமான போஸில் நிற்க சொல்லி போட்டோ எடுத்துக் கொண்டார்.. முதலில், ரிதுவை ராகவின் தோளில் சாய்ந்து நிற்க சொல்லி, ராகவை ரிதுவின் இடுப்பை அணைத்துப் பிடித்திருப்பது போல், நிற்க சொன்னார்..


போட்டோக்ராபர் சொல்லவதை கேட்ட ரிதுவிற்கு அவஸ்தையாக இருந்தாலும், வேற வழி இல்லாமல், ராகவின் தோளில் பட்டும் படாமல் சாய்ந்து நின்றாள்.


ரிது பட்டும் படாமல் நிற்பதை உணர்ந்த ராகவ், மெல் அவன் கையை ரிதுவின் இடுப்பில் அணைப்பது போல் அணைத்து, அவளை இறுக்கி தன் கை அணைப்பில் வைத்துக் கொண்டான்..


ராகவின் கை ரிதுவின் வெற்று இடுப்பில் பட்டதும் தன்னை அறியாமல், சிலிர்த்த ரிது, அவளின் கை அணைப்பில் ஒரு நிமிடம் தன்னை மறந்து வெட்க புன்னகை ஒன்றை உதிர்த்தாள்..
கேமராவும் இதை அழகாக உள்வாங்கிக் கொண்டது..


அடுத்து போட்டோக்ராபர் ராகவை ரிதுவின் நெற்றியில் முத்தம் கொடுப்பது போலும் ரிது அதை வாங்குவது போலவும் நிற்க சொன்னார்...


போட்டோகிராபர் சொன்னதைக் கேட்டு, ஜெர்க் ஆன ரிது, அதை மறுக்கப் பார்த்தாள். அதற்குள் இவர்களைச் சாப்பிட அழைக்கக் குணசேகர் வந்ததால், அவர் முன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.


போட்டோக்ராபர் சொன்னது போல், ராகவின் இடுப்பை தன் கை வைத்து அணைத்த ரிது, மெல்ல முகத்தை நிமிர்த்தி ராகவின் முகம் பார்த்தாள். ராகவும் ரிதுவின் முகத்தைப் பார்த்தபடி அவளை நோக்கி குனிந்தான் ...


ராகவின் பார்வை வீச்சை தாங்க முடியாமல், ரிது கண் மூடவும், ராகவ் முத்தம் கொடுக்கவும், ரிது ராகவின் முத்தத்தில் சிலிர்த்துக் கண் மூடுவது போல வந்தது அந்தப் புகைப்படம்...


அடுத்து இன்னும் சில போட்டோஸ் எடுக்கப் போட்டோகிராபர் சொல்ல, 'இதற்குள் மேல் முடியாது என்பது போல்', கலக்கத்துடன் இருந்த ரிதுவின் முகத்தைப் பார்த்த ராகவ், அவர்களிடம் கல்யாணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்களை அனுப்பினான்.


போட்டோக்ராபர் சென்றதும் தான் ரிதுவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. மெல்ல தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். இதற்குள் குணசேகர் வரவும், மூவரும் டைனிங் ஹால் நோக்கி, சென்றனர்..


இரவு உணவு முடித்து, உறவினர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டு கிளம்ப, இவர்களும் சாப்பிட்டுக் கொண்டு கிளம்ப ஆயித்தமாகினர்..


எல்லாரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய ராகவ் ரிதுவின் அருகில் வந்து "பை ரிது" என்று கூறி அவளிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்..


ராகவின் குடும்பம் சென்றதும், ரிதுவின் குடும்பம் தங்களின் வீட்டை நோக்கி பயணித்தனர்... தன் அறைக்கு வந்த ரிது, அவளைச் சுத்தம் செய்து, கட்டிலில் சென்று படுத்தாள்..


படுத்த ரிதுவிற்கு ஏனோ அவளை அறியாமல் கண்ணீர் வந்தது... ரிது கண்ணீருடன் தூங்க. அங்கே ராகவ், இன்று நடந்த அவர்களின் நிச்சயதார்த்த விழாவை பற்றி நினைத்து புன்னகையுடன் கண்மூடினான்...



மாயம் செய்வான்(ள்)...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 9 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 
Status
Not open for further replies.
Top