All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் பேசிக் கொண்டிருந்த சத்தத்தைக் கேட்டு ஹாலிற்கு வந்த ஆனந்தியிடம், "ஆனந்தி, இவங்க சிவசுந்தர், இவங்க சாருலதா, நம்ம ரிதுவை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க!!!" என்று அவர்கள் வந்திருக்கும் விஷயத்தைக் கூறினார்...


குணசேகர் கூறியதும், 'இது என்ன புதுக் குழப்பம்' என்று நினைத்து, வந்திருந்தவர்களிடம் வணக்கத்தைத் தெரிவித்து, அவர்களை வீட்டுத் தலைவலியாய் வரவேற்றார் ஆனந்தி.. "இது என் மனைவி ஆனந்தி" என்று சிவசுந்தர், சாருலதா தம்பதிக்கு ஆனந்தியை அறிமுகப் படுத்தி வைத்தார் குணசேகர்..


அவர்களைப் பார்த்து சிரித்த ஆனந்தி, கணவன் அருகில் அமர்ந்து கொண்டார்.. இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே, ரிதுவை பிளைட் ஏற்றி விட்ட தருண், குணசேகரிடம் ஆபீஸ் விஷயமாக ஒரு முக்கியமான கையெழுத்து தேவை பட்டதால் அதை வாங்க வந்திருந்தான்...


ஹாலில் தந்தை மற்றும் தாய், புதியவர்களிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த படி உள்ளே வந்த தருணை, பார்த்த குணசேகர், தருண் அவர் அருகில் வந்ததும், இது தருண் என்னோட பெரிய பையன், ரிதுவிற்கு அண்ணா என்று கூறி தருணை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார்...


புதியவர்களிடம் ஒரு புன்சிரிப்பை கொடுத்த தருண், குணசேகரை கேள்வியாய் பார்த்தான், மகன் பார்வையைப் படித்த குணசேகர் அவனிடம்,


"தருண் இவங்க சிவசுந்தர் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றாங்க, இவங்க சாருலதா அவங்களோட வைப், நம்ம ரிதுவை அவங்களோட மகனிற்குப் பொண்ணு கேட்டு வந்திருக்கிறாங்க" என்று மகனிற்கு அவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கூறினார் ..


குணசேகரிடம், புரியாத பார்வையைச் செலுத்திய தருண், சிவசுந்தர் சாருலதா தம்பதியை ஒரு பார்வை பார்த்து, குணசேகரிடம், "அப்பா ஒரு சைன் மட்டும் நீங்க போடணும் அதை வாங்க தான் வந்திருக்கிறேன்" என்று மென்குரலில் அவன் வந்திருக்கும் காரணத்தைக் கூறினான்..


மகன் காட்டிய இடத்தில் ஒரு கையெழுத்து போட்ட குணசேகர், தருணிடம், "நீயும் இங்க இரு கண்ணா, பைலை உன்னோட பி.ஏவை வந்து வாங்கிக்கச் சொல்லு என்று கூறி மகனை தன்னோடு இருக்கச் சொன்னார்..


"சரி ப்பா... நான் சுரேஷிற்குக் கால் பண்ணி வர சொல்றேன் என்று கூறி, அவன் பி.ஏ விற்குக் கால் செய்ய வெளியே சென்றான்.. போகும் மகனை பார்த்த குணசேகர், சிவசுந்தரை பார்த்து, "சாரி சார், பையன் என் கூட என்னோட பிசினெஸை பார்த்துக்கிறான்...


முக்கியமான சைன் ஏதோ நான் போடணும் போல, அதான் இப்ப வந்திருக்கிறான், ஒரு போன் பேச போயிருக்கிறான், இப்ப வந்திடுவான்" என்று அவரிடம் மன்னிப்பையும் வேண்டி, மகனும் இங்கு இருப்பான் என்று செய்தியையும் மறைமுகமாய்க் கூறினார் குணசேகர்...


"அதுக்கு என்ன சார், ஒன்னும் பிரச்சனை இல்லை , அவங்க வந்ததுமே பேசிக்கலாம்" என்று சிவசுந்தரும் மறைமுகமாய்த் தருணின் வருகையை உறுதி செய்தார்.. போன் பேசி முடித்த தருண், உள்ளே வந்ததும் குணசேகர் அடுத்து இருக்கும் ஒற்றைச் சோபாவில் அமர்ந்து கொண்டான்..


தருண் உட்காந்ததும், சிவசுந்தர் பேச ஆரம்பித்தார், " சார் ஆல்ரெடி சொன்ன மாதிரி நான் ரிசெர்வ் பேங்க்ல ஒர்க் பண்றேன், மை வைப் சாருலதா ஹோம்மேக்கர்... எங்களுக்கு ஒரு பையனும், பொண்ணும்..


பையன் பெயர் ராகவ்.. சென்னைல பி.இ முடிச்சிட்டு இங்க ஒரு சாப்ட்வேர் கம்பெனில ஒரு ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணான். இப்ப ஆன்சைடில், வெல்லிங்டன்ல த்ரீ இயர்ஸ்சா ஒர்க் பண்றான்..


பொண்ணு இங்க சென்னையில் தான் ஒரு காலேஜில் பி.இ பைனல் இயர் பண்ணறா... என்னோட பூர்விகம் சென்னை தான், என்னோட மனைவிக்கும் சென்னை தான்..


இது தான் சார் எங்க குடும்பம்.. நாங்க என்னோட பையனுக்குத் தான் உங்க பொண்ணைக் கேட்டு வந்திருக்கிறோம்" என்று தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை நீண்டதொரு விளக்கமாய்க் கூறினார்...


சிவசுந்தர் பேசியதை கேட்ட குணசேகர், அவர் கூறிய செய்திகளை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு, ஆனந்தியையும் தருணையும் ஒரு பார்வை பார்த்தார்...


குணசேகரின் பார்வையில், அவர்கள் இன்னும் தெளிவாக வில்லை என்பதைப் புரிந்து கொண்ட சிவசுந்தர் மீண்டும் பேச ஆரம்பித்தார்..


"சார், நானும், என் மனைவியும் பிராங்கா எங்க பசங்க கிட்ட பழகுவோம், அவங்களோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்... உங்க கிட்ட ஆரம்பத்தில் இருந்து பிரீயா பழகணும்னு நினைக்கிறேன், அதுனால எங்க வீட்டில் நேத்து நடந்ததைச் சொல்றேன்" என்று சொல்லி, ராகவ் பேசியதை கூறினார்..
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"நேத்து ராகவ் எங்களுக்குப் போன் பண்ணி பேசினான், உங்ககிட்ட பொண்ணு கேட்க வர சொன்னான், எங்களுக்கும் எதுக்கு அவன் இப்படிச் சொன்னான்னு தெரியாது...

எங்களுக்கு அவனோட சந்தோஷம் முக்கியம், அதுனால தான் இன்னைக்கு நாங்க இங்க வந்திருக்கோம்" என்று அவர்கள் தீடிர் வருகை பற்றிய விஷயத்தைக் கூறினார்..


சிவசுந்தரனின் உண்மையான பேச்சில் கவரப்பட்ட குணசேகர், ஒரு மென்னகையை உதிர்த்தபடி அவர்களைப் பார்த்தார்..

குணசேகரின் மென்னகையை உணர்ந்து கொண்ட சிவசுந்தர், அவரின் பார்வையைப் புரிந்து கொண்டு மீண்டும் அவரின் பேச்சை தொடர்ந்தார்..

"சார், என்னோட பையன் உங்க வீட்டுக்கு வந்திட்டு skype கால் அவனிற்குப் பண்ண சொன்னான், சோ இப்ப நான் அவனுக்குப் போன் பண்றேன்.

நீங்க எல்லாரும் அவனைப் பார்த்துக்கோங்க, அவனிடம் என்ன கேட்கணும் என்றாலும் கேளுங்க, அதுக்கு அப்புறம் நாம பேசலாம்" என்று கூறி குணசேகர் முகம் பார்த்தார்..

குணசேகர், ஆனந்தியையும் தருணையும் பார்த்தார், அவர்கள் பார்வையில் சம்மதம் கிடைப்பேற்றதும், சிவசுந்தரிடம் நீங்க தம்பிக்கு போன் பண்ணுங்க என்று அவரின் சம்மதத்தைக் கூறினார்...குணசேகரின் சம்மதம் கிடைத்ததும் மகனிற்குப் போன் செய்தார் சிவசுந்தர்....

"ஹாய் அங்கிள் நான் ராகவ்" என்று புன்னகையுடன் திரையில் தோன்றிய ராகவ் குணசேகரிடம் "எப்படி இருக்கீங்க அங்கிள் ??? உங்க ஹெல்த் எல்லாம் எப்படி இருக்கு...." என்று கேட்டு வெகு சாதாரணமாய்ப் பேச ஆரம்பித்தான்.

நீண்ட நாள் பழகியவன் போல் ராகவ் பேசியது, குணசேகருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது..

முதன் முதலாய் பேசுவது போல் இல்லாமல் இயல்பாய் பேசி அவரின் உடல் நிலையைப் பற்றி விசாரித்தது அவருக்கு ராகவிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கியது..

"நான் நல்லா இருக்கேன் தம்பி" என்று கூறிய குணசேகர், ராகவின் உடல் நிலையையும் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டார்..

அடுத்து அவர் பேசியதும், "ஹாய் ஆன்ட்டி நான் ராகவ், நீங்க எப்படி இருக்கீங்க" என்று ஆனந்தியிடமும் பேசினான் ராகவ்..

அவர்கள் இருவரிடம் பரஸ்பர விசாரிப்பிற்குப் பிறகு, "ஹாய் தருண், நான் ராகவ்.. இப்படி இருக்கீங்க??? உங்க பிசினஸ் எல்லாம் எப்படிப் போகுது!!!" என்று தருணிடம் விசாரித்துக் கேட்டுக் கொண்டான்...

பொதுவான நலவிசார்ப்பிற்குப் பிறகு, தன்னையும் அறிமுகப் படுத்திய ராகவ், அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.. " அங்கிள் அப்பா உங்க கிட்ட ஆல்ரெடி என்னைப் பத்தியும் எங்க பேமிலிப் பத்தியும் பேசிருப்பாங்க.... நான் தான் அப்பாவை இன்னைக்கு உங்க வீட்டுக்கு வர சொன்னேன்...

என்னோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாது, நான் ஏன் இங்க வர சொன்னேன் என்று, ரிதுவை பிடிச்சிருக்கு என்று மட்டும் சொல்லி, உங்க பேமிலி பத்தி சொன்னேன்,

எப்படித் தெரியும் எல்லாம் சொல்லவில்லை, இப்ப உங்க முன்னாடி சொல்ல போறேன்" என்று கூறி ரிதுஷினியை சந்தித்த தினத்தைப் பற்றிக் கூற ஆரம்பித்தான்...

எனக்கு ரிதுவை ஒரு பைவ் இயர்ஸ்க்கு முன்னாடி தெரியும், என்னோட பிரெண்ட் மேரேஜிற்கு வந்திருக்கும் போது, ரிதுவை பார்த்தேன்..

எனக்கு அவளோட கலகப்பான சுபாவம், எப்போதும் சிரிச்சிட்டே இருக்கும் முகம், குழந்தை தனம் எல்லாம் ரொம்பப் பிடிச்சுது...

"சரி ரொம்ப அழகா இருக்காளே, நமக்குப் பிடிச்சிருக்கே என்று நினைத்து, அவளைப் பற்றி என் பிரெண்ட் கிட்ட விசாரிக்கும் போது தான் தெரிந்தது, என் பிரெண்டோட மனைவியோட பிரெண்ட், தான் ரிது என்று...

இப்போதைக்கு ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று நினைத்து, மேரேஜ் முடிஞ்சதும், ரிதுகிட்ட ஒன்னும் சொல்லாமல் கிளம்பிட்டேன்.. அதுக்கு அப்புறம் எனக்கு ரிதுவை சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கலை....

நானும் அதுக்கு அப்புறம் என்னோட காரீயர்ல போகஸ் பண்ணதால, ரிதுவை பத்தி அதிகமா நினைக்க முடியாமல் போச்சு, நானும் அஃப்ராட் வந்துட்டேன்,

அப்புறம் இங்க செட்டில் ஆகுறதுல என் கவனம் போனதால், ரிதுவிடம் அதுக்கு அப்புறம் பேசி என்னோட லவ்வை சொல்ல முடியாமல் போயிட்டு...

இப்போதான் ரிதுவிற்கு நீங்க அலையன்ஸ் பார்க்கிறதா கேள்வி பட்டேன், அதான் ரிதுவை எனக்கே மேரேஜ் செய்து தர முடியுமா?? என்று உங்களிடம் கேட்க என் அப்பா அம்மாவை அனுப்பி வைத்தேன்!!!" என்று எல்லாருக்கும் கூறினான்...

ராகவின் பேச்சை கேட்ட சிவசுந்தர், சாருலதா தம்பதியும் ஒரு மனநிலையில் இருந்தார்கள் என்றால், குணசேகர் ஆனந்தி தம்பதியும் ராகவின் பேச்சை கேட்டு ஒரு மனநிலையில் இருந்தார்கள்.... .

யார் யார் எந்த மாதிரியான மனநிலையில் இருந்தார்கள் என்பதை நாமளும் அடுத்த வாரம் பார்ப்போம்.....


மாயம் செய்வான்(ள்)....
 
Last edited:

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 5 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

கொஞ்சம் பர்சனல் ஒர்க் இருப்பதால் வியாழன் அன்று போட வேண்டிய பதிவை இன்றே போடுகிறேன் பிரெண்ட்ஸ்...

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....


இதுவரை பதிவு செய்த பதிவிற்கு உங்களின் கருத்துக்களை எழுத்தின் மூலமாகவும், ஸ்மைலி மூலமாகவும் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

அவசரமாக டைப் பண்ணியது பிரெண்ட்ஸ், பிழைகள் எதுவும் இருந்தால் மன்னிக்கவும்...

கருத்து திரி

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

வரும் வியாழன் வரை ரொம்ப நாள் கேப் விடுவது போல தோணுச்சு, அதுனால அதுவரைக்கும் உங்களை காக்க வைக்க விருப்பமில்லாமல் ஒரு சின்ன டீசர் போடுறேன் படிச்சு என்ஜாய் பண்ணுங்க..

இதோ அடுத்து வரும் அத்தியாங்களில் இருந்து ...

பி.கு: (படிச்சிட்டு இது எல்லாம் டீசரா என்று என்னை யாரும் அடிக்க வரக்கூடாது.. மீ எஸ்கேப்🏃🏃🏃🏃🏃🏃...)


Screenshot_20181222-131858__01.jpg

முதலில் குணசேகரை பார்த்து பேச ஆரம்பித்த, ராகவ் அவரிடம், "அங்கிள் நான் சொல்றது உங்களுக்கு நம்பும் படியா இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம்... இன்னும் சில விஷயங்களை உங்களிடம் தெளிவு படுத்த விரும்புறேன் அப்புறம் உங்களோட முடிவை சொல்லுங்க" என்று கூறி அவரிடம் பேச ஆரம்பித்தான்.

"அங்கிள் எனக்கு ரிதுவோட பாஸ்ட் அண்ட் இப்ப அவள் ஏன் உங்களை எல்லாம் விட்டுவிட்டு டெல்லி IITல படிக்க போயிருக்கா என்று எல்லாம் தெரியும்" என்று ராகவ் கூறியதும், குணசேகரின் குடும்பத்தினரின் முகத்தில் ஒரு ஆச்சிரியப் பார்வை வந்தது..

அதை எல்லாம் பார்த்த ராகவ், குணசேகரிடம் தன் பார்வையை திருப்பினான்....'எல்லாம் தெரிந்துமா நீ பெண் கேட்கிறாய்!!!' என்று கண்ணில் கேள்வியுடன் பார்த்த குணசேகரின் பார்வையை புரிந்து கொண்ட ராகவ், மேலும் தன் பேச்சை தொடர்ந்தான்...

"அங்கிள் எனக்கு ரிதுவை அவளிற்காக மட்டுமே பிடிக்கும், ஐ டோன்ட் வாண்ட் ஹேர் பாஸ்ட்!!, எப்படி இருந்தாலும் ஐ வில் மேக் ஹேர் ஹாப்பி வித் மை லவ் !!,

என்னோட மிச்ச வாழ்கையை என் ரிது கூட சந்தோஷமா ஸ்பென்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்... அண்ட் ஐயம் சுவர் ஐ வில் பிரிங் மை ஓல்ட் ரிது பாக்!!!" என்று நம்பிக்கையுடன் கூறினான்....

******************************

"அப்பா என்ன இந்த நேரத்திற்கு போன் செய்து இருக்கீங்க, என்ன அப்பா ஏதாச்சு முக்கியமா விஷயமா, உங்க உடம்புக்கு எதுவும் பிரச்னை இல்லையே!!!" என்று அவரின் நலத்தை விசாரித்து தெரிந்து கொண்டாள்.

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல ரிதுமா, உங்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் போன் செய்தேன், நீ பிரீயா இருக்கீயா??? உன்கிட்ட பேசலாமா??" என்று கேட்டார்...

"சொல்லுங்க அப்பா நான் பிரீ தான்", என்றாள் ரிது.. "ரிதுமா அன்னைக்கு நான் உன்கிட்ட கல்யாணத்திற்கு சம்மதம் பற்றி கேட்டு இருந்தேன்ல, உனக்கு இப்ப ஒரு நல்ல சம்பந்தம் வந்திருக்கு, எங்களுக்கு எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு, நான் மாப்பிள்ளை போட்டோ அனுப்புறேன் நீ கொஞ்சம் பார்த்து சொல்லுமா!!!" என்றார்...

குணசேகர் இப்படி தீடிர் என்று மாப்பிள்ளை கொண்டு வருவார் என்று எதிர்பார்க்காத ரிது, குணசேகர் கூறிய விஷயத்தில் அதிர்ச்சி அடைந்தாள்..

அதற்குள் “ரிது அனுப்பவா??” என்று கேட்ட குணசேகரின் குரலில், நினைவுக்கு வந்த ரிது, "இல்லப்பா எனக்கு பார்க்கணும் என்ற அவசியம் இல்லை... நீங்க அம்மா, அண்ணா மூணு பெரும் பார்த்தாலே போதும்" என்றாள்...

"சரி மா, ரொம்ப சந்தோஷம் நீ சொன்னதை கேட்டு, இருந்தாலும் நான் மாப்பிள்ளை போட்டோவும், பையோ டேட்டாவும் அனுப்புறேன் நீ பார்க்கணும் என்றால் பாரு!!!...

அப்புறம் மாப்பிள்ளையோட அப்பா, அம்மா உன்ன பார்க்கணும் என்று ஆசை படுறாங்க அதுனால, நீ அடுத்த வாரத்தில் ஒரு நாள் சென்னை வா மா, அவங்க உன்னை பார்த்துவிட்டு போகட்டும்" என்று அடுத்த குண்டை தூக்கி போட்டார்...

குணசேகரின் பேச்சை மீற முடியாமல், "சரி அப்பா நெஸ்ட் வீக் எண்ட் வரேன்" என்று கூறி அவள் வரும் தேதியை கன்பார்ம் பண்ணிவிட்டு வைத்தாள்...

குணசேகரிடம் பேசி முடித்ததும், தன்னையே பார்த்துக் கொண்டிருந்த தியாவிடம், "தியா நான் அன்னைக்கு சொன்னேன்ல கல்யாணத்திற்கு வரன் பார்கவா என்று அப்பா கேட்டாங்க என்று, அதுக்கு தான் போன் பண்ணாங்க, ஒரு வரன் பார்த்துருக்கங்களாம், வீட்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்காம்..

மாப்பிள்ளை வீட்டில் பொண்ணு பார்க்கணும் என்று சொன்னார்கள் போல், அதான் அப்பா என்னை நெஸ்ட் வீக் எண்ட் சென்னை வர சொல்லி, போன் பண்ணாங்க.... "

"நீ என்ன டி, சொன்ன அங்கிளிற்கு " என்று கேட்ட தியாவிடம், "நான் அன்னைக்கு உன்கிட்ட சொன்னது தான் தியா இனிமேலும் அப்பாவை என்னால் கஷ்டப்படுத்த முடியாது அதுனால,

அவங்க சொன்ன மாதிரி சண்டே வரேன் என்று சொல்லிட்டேன்" என்று கூறி கண்ணில் வர துடிக்கும் கண்ணீரை துடைத்தபடி தியாவிடம் கூறினாள் ரிது.


 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 6

Screenshot_20181227-232155__01.jpg

குணசேகருக்கு ராகவின் வெளிப்படையான பேச்சுப் பிடித்திருந்தாலும், ராகவிற்கு ரிதுவை பற்றி மற்றவை எல்லாம் தெரியுமா என்ற கேள்வி இருந்தால், எல்லாவற்றையும் நினைத்து அமைதியாக இருந்தார்..


சிவசுந்தர் சாருலதா தம்பதிக்கு மகன் அவர்களிடம் நேற்று சொன்ன விஷயமும், அவன் நேற்று எதனால் அவர்களை அமைதி காக்க சொன்னான் என்று, இன்று அவர்களுக்குப் புரிந்தாலும், ராகவ் முழுமையாகப் பேசும் வரை எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து, அமைதி காத்தனர்...


குணசேகர் குடும்பத்தினரின் முகத்தையும் அங்கிருந்து பார்த்த ராகவ், அவர்களின் தெளிவில்லாத முகங்களை வைத்து, அவர்களிடம் 'இன்னும் சில விஷயங்கள் பேச வேண்டும்' என்று நினைத்து மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தான்..


முதலில் குணசேகரை பார்த்து பேச ஆரம்பித்த, ராகவ் அவரிடம், "அங்கிள் நான் சொல்றது உங்களுக்கு நம்பும் படியா இருக்கலாம், இல்லாமையும் இருக்கலாம்... இன்னும் சில விஷயங்களை உங்களிடம் தெளிவு படுத்த விரும்புறேன் அப்புறம் உங்களோட முடிவை சொல்லுங்க" என்று கூறி அவரிடம் பேச ஆரம்பித்தான்.


"அங்கிள் எனக்கு ரிதுவோட பாஸ்ட் அண்ட் இப்ப அவள் ஏன் உங்களை எல்லாம் விட்டுவிட்டு டெல்லி ஐ.ஐ.டியில (I.I.T) படிக்கப் போயிருக்கா என்று எல்லாம் தெரியும்" என்று ராகவ் கூறியதும், குணசேகரின் குடும்பத்தினரின் முகத்தில் ஒரு ஆச்சிரியப் பார்வை வந்தது..


அதை எல்லாம் பார்த்த ராகவ், குணசேகரிடம் தன் பார்வையைத் திருப்பினான்....'எல்லாம் தெரிந்துமா நீ பெண் கேட்கிறாய்!!!' என்று கண்ணில் கேள்வியுடன் பார்த்த குணசேகரின் பார்வையைப் புரிந்து கொண்ட ராகவ், மேலும் தன் பேச்சை தொடர்ந்தான்...


"அங்கிள் எனக்கு ரிதுவை அவளிற்காக மட்டுமே பிடிக்கும், ஐ டோன்ட் வாண்ட் ஹேர் பாஸ்ட்!!, எப்படி இருந்தாலும் ஐ வில் மேக் ஹேர் ஹாப்பி வித் மை லவ் !!, என்னோட மிச்ச வாழ்கையை என் ரிது கூடச் சந்தோஷமா ஸ்பென்ட் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன்... அண்ட் ஐயம் சுவர் ஐ வில் பிரிங் மை ஓல்ட் ரிது பாக்!!!" என்று நம்பிக்கையுடன் கூறினான்....


மகளைப் பற்றிப் பேசும் போது, ராகவின் கண்களில் மகளுக்கான காதலை கண்ட குணசேகருக்கு ராகவின் பேச்சில் நம்பிக்கை கிடைத்தது, 'எப்படியும் ராகவ், ரிதுவை பழைய மாதிரி கொண்டு வந்திடுவான்!!' என்று....


'அதே சமயம் ராகவின் பெற்றவர்களுக்கு ரிதுவை பற்றி முழுமையாகத் தெரியுமா என்று தெரியாமல், எப்படி மற்றதை பற்றி யோசிக்க முடியும்!!' என்று நினைத்து சிவசுந்தரின் முகத்தை ஆராய்ந்தார்...


குணசேகரின் பார்வை, சிவசுந்தரை பார்ப்பதை பார்த்த ராகவ், அவரின் பார்வையைப் பார்த்து அவனே மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தான், "அங்கிள் உங்களுக்கு இப்ப ஒரு டவுட் வரலாம்...


என்னோட அப்பா அம்மாவிற்கு ரிதுவை பற்றி எல்லாம் தெரியுமா என்று, அதைப் பத்தி நீங்க கவலை படவேண்டாம் அங்கிள், என்னோட அப்பா அம்மாவுக்கு ரிதுவை பற்றி எல்லாம் தெரியும்... அது தெரிந்து தான் உங்களிடம் என்று பேச வந்திருக்காங்க!!!" என்று ராகவ் கூறியதும்.


சிவசுந்தர் குணசேகரை பார்த்து, "சார், எனக்கும் என்னோட மனைவிக்கும் ரிதுஷினி தான் எங்கள் வீட்டு மருமகள் என்று நாங்கள் நேற்று ராகவ் எங்க கிட்ட உங்கள் பற்றி எல்லாம் சொல்லும் போதே முடிவு செஞ்சிட்டோம்....


நீங்க உங்களோட சம்மதத்தைச் சொன்னால், ரிதுவை சீக்கிரம் எங்களின் மருமகள் ஆக்கிக்கிடுவோம்" என்று சிவசுந்தர், சாருலதாவின் சம்மதத்தைச் சேர்த்து மறைமுகமாகக் கூறினார்...


சிவசுந்தர் பேசி முடித்ததும், சாருலதா அவரின் பங்கிற்கு, 'அண்ணா' என்று குணசேகரை அழைத்து, "உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம் அண்ணா... நாங்க ரிதுவை எங்களோட ஸ்வாதிக்கா மாதிரி பார்த்துக் கொள்வோம்!!!, நீங்க கவலைப் படாமல் உங்க பொண்ணை மட்டும் அனுப்பி வைங்க என்று அவரிடம் தன் மனதில் உள்ளதை கூறினார் சாருலதா....


சிவசுந்தர், சாருலதாவின் தெளிவான பேச்சை கேட்ட குணசேகருக்கு மெல்ல அவர்களின் மேல் நம்பிக்கை வர ஆரம்பித்து இருந்தது.... தன் அருகில் இருந்த மனைவி மற்றும் மகனின் முகத்தைப் பார்த்தார்..


அவர்களும் ராகவ், சிவசுந்தர், சாருலதாவின் பேச்சை கேட்டு, நம்பிக்கை கொண்டனர்.. அவர்களின் வெளிப்படையான பேச்சு, இவர்கள் மூவரையும் கவர்ந்தது...


மனைவி, மற்றும் மகனின் முகத்தை வைத்தே அவர்களின் மனநிலையைக் கணித்த குணசேகர், தங்களையே பார்த்துக் கொண்டிருந்த சிவசுந்தரையும்,
சாருலதாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ராகவை பார்த்தார்...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தை மற்றும் தாய் பேச ஆரம்பிக்கும் போதே, இவர்கள் மூவரின் முகத்தைப் பார்த்த ராகவ், ஓர் அளவிற்கு அவர்களின் மனநிலையைக் கணித்திருந்தான்....


இருந்தாலும் அவர்களுக்கு முடிவு எடுக்க நேரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவனே குணசேகரிடம், "அங்கிள் நான் பேசணும்னு நினைச்சது எல்லாம் உங்கள் எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன், அப்பா அம்மாவிடம் நேத்து ரிதுவையும் உங்களையும் பற்றி மட்டும் தான் சொன்னேன்,


அவர்களுக்கே இன்றைக்குத் தான், நான் ரிதுவை எப்போது பார்த்தது, எப்படி லவ் பண்ணேன் என்று விஷயத்தைச் சொன்னேன்....எனக்கு எல்லார்கிட்டையும் ஒரே நேரத்தில் சொல்லி உங்களின் சம்மதம், வாங்கித் தான் ரிதுவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதான் இப்போ இங்க சொன்னேன்...


அப்பா அம்மாவோட சம்மதம் நேற்று கிடைத்தை வைத்து சொல்றேன், எங்க வீட்டில் எல்லாருக்கும் ரிதுவை பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்னையும், என்னோட பேமிலியும் பிடிச்சிருந்தால் சொல்லுங்க அங்கிள், நாம மித்த விஷயங்களைப் பற்றிப் பேசலாம்...


நீங்க இப்பவே சொல்லணும் என்று அவசியம் இல்லை, நீங்க ஆன்ட்டி, தருண் எல்லாரும் கலந்து பேசி முடிவு எடுத்து உங்க முடிவை சொல்லுங்க, எனக்கு ஒரே ஒரு சின்ன ரேக்குவெஸ்ட், ரிதுக்கிட்ட மட்டும் நான் பேசுனதை சொல்லாதீங்க!!!,


அதை நான் ஏன் சொல்ல வேண்டாம் என்று சொல்றேன் என்பதை, நீங்க எங்க கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லும் போது சொல்றேன்...


இப்ப நான் வைக்கிறேன் அங்கிள், பொறுமையா முடிவு எடுத்துக்கிட்டு சொல்லுங்க..." என்று கூறி அங்கிருந்த எல்லாரிடமும் விடை பெற்றுப் போனை வைத்தான்....


ராகவின் தெளிவான பேச்சில் எல்லாருக்கும், 'அவன் இத்தனை தூரம் ரிதுவை பற்றி யோசித்து இருந்தால், இப்படி ரிதுவிற்காகப் பேசுவான்!!' என்ற எண்ணமே தோன்றியது...


ராகவ், பேசி விடை பெற்றதும், சிவசுந்தர் குணசேகரை பார்த்து, "சார் நாங்க சொல்ல வேண்டியதை சேர்த்து என் பையனே சொல்லிட்டான், இருந்தாலும் நானும் சொல்றேன், நீங்க உங்க வீட்டில் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திட்டுப் பொறுமையா சொல்லுங்க....


எந்த முடிவு எடுத்தாலும் தயங்காமல் சொல்லுங்க, இது என்னோட கார்ட்... இதுல என்னோட கான்டக்ட் நம்பர் அண்ட் எங்க வீட்டு அட்ரஸ் இருக்கு... உங்களுக்குகாக எங்க வீடு எப்போதும் காத்திருக்கும்!!!” என்று சொல்லி, அவர்களிடம் விடை பெற்று சென்றனர் சிவசுந்தர், சாருலதா தம்பதியினர்.


அவர்களை வழி அனுப்பி வைத்ததும் உள்ளே வந்த குணசேகர், ஹாலில் உள்ள சோபாபில் உட்கார்ந்தார்... ஆனந்தி மூவருக்கும் காபி போட்டு எடுத்துக் கொண்டு, குணசேகருக்கும், தருணிற்கும் கொடுத்து தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டு, குணசேகர் அருகில் உட்காந்தார்...


மெல் தன் காபியை குடித்த குணசேகர், மனதில் சூடான காபி இறங்கியதும், அவருக்குள் புத்துணர்ச்சி கொடுத்தது.... தன் நிலை அறிந்து காபி கொண்டு வந்து கொடுத்த ஆனந்தியை பார்த்த புன்னகைத்த குணசேகர் ஆனந்தியிடம் பேச ஆர்மபித்தார், "நீ இப்போ வந்திட்டுப் போனார்களே அவர்களைப் பற்றி என்ன நினைக்கிற மா!!!" என்று மனைவியிடம் கேட்டார்...


ஆனந்தியும், "ரொம்ப நல்ல குடும்பம் போல் தாங்க தெரியுது, அவங்க பேசும் விதத்தைப் பார்த்தாள். இந்த வித ஒளிவு மறைவு இல்லாமல், நம்மகிட்ட அந்தப் பையன் நம்ம பொண்ணைப் பற்றிப் பேசியது, எனக்குச் சந்தோஷம் தாங்க.... நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு ஒகே தான்" என்று அவர்களைப் பற்றிய எண்ணத்தைக் கூறினார்.


மனைவியின் பேச்சை உள்வாங்கிக் கொண்ட குணசேகர், அடுத்துத் தருணை பார்த்து, "நீ என்ன சொல்ற கண்ணா இதைப் பற்றி..." என்று அவனிடம் கேட்டார்...


"எனக்கும் பிடிச்சிருக்கு அப்பா, பையன் நல்ல வேலையில் இருக்கிறார், அவங்க வீடும் நம்மளை போலத்தான், ரொம்ப ஜோவியலா எல்லாரும் இருப்பாங்கன்னு நினைக்கிறேன், அங்கே போனால் நம்ம ரிது நல்லா இருப்பாள் என்று எனக்குத் தோணுது" என அவன் கருத்தை கூறினான்...


மகன் கூறியதையும் கேட்டுக் கொண்ட குணசேகர், "எனக்கும் அப்படிதான் தோணுது, ஆனா இரண்டு விஷயம் நம்ம யோசிக்க வேண்டும், இன்னும் அவங்க பேமிலி பற்றிக் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்,


அடுத்து என்னோட பிரெண்ட் கிட்ட சொல்லி இருந்தேன் என்று சொன்னேன்ல அதைப் பத்தி யோசிக்கணும்..... பாக்கலாம் இந்த விஷயத்தை ஒரு நாள் ஆறப்போட்டு அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று அவரின் கருத்தை கூறினார்...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குணசேகர் சொன்னதும் ஒரு வகையில் யோசிக்க வேண்டிய விஷயம் என்பதால், இருவரும் அதை ஆமோதிப்பதாய் தலை அசைத்தனர்...


"சரி ப்பா, நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம், நீங்க இன்னைக்கு ஆபீஸ் வர வேண்டாம்... நான் மட்டும் போய் விட்டு வரேன்" என்று கூறி அவரிடம் விடை பெற்று எழுந்தான் தருண்...


"தருண், நீ எதுக்கும் உனக்குத் தெரிந்த பிரெண்ட்ஸ் வச்சி, அந்தத் தம்பி வேலை பார்க்கிற ஆபீஸ்ல கொஞ்சம் விசாரி..." என்று கூறி தருணை அனுப்பி வைத்தார்....மகன் சென்றதும், குணசேகரும் ஆனந்தியும் சிறிது நேரம் பேசி கொண்டர்...


**********************************************

சென்னையில் ரிதுஷினியை பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருந்த அதே நேரம், டெல்லி சென்று அடைந்த ரிதுஷினி, அவள் ஹாஸ்டல் வந்து இறங்கி, தியாவிடம் வீட்டில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்...


"தியா, நேத்து அப்பா நைட் பேசிட்டு இருக்கும் போது, எனக்குக் கல்யாணம் பண்றதை பற்றிப் பேசி, எனக்குக் கல்யாணம் பண்ண சம்மதமா?? என்று கேட்டாங்க...


என்னோட நிலைமை தெரிந்தும், பேசிய அப்பாவிடம் என்னால் ஒன்னும் சொல்ல முடியல, யார்கனவே என்னால் தான் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்று எனக்குக் கில்ட்டியா இருக்கும் இதே நேரம், கல்யாணத்தைப் பற்றி அப்பா பேசியதும், எனக்கு அழுகை தான் வந்துச்சு....


என்னோட அழுகையைப் பார்த்து பதறி தருண், பேச வரும் போது அண்ணாகிட்ட நீ ஒன்னும் சொல்லதான்னு சொல்லிட்டாங்க.... மனசு ரொம்பக் கஷ்டமா போச்சு....


அப்பா ஒரு முடிவோட தான் இருக்காங்கனு புரிஞ்சிகிட்டு, இனிமேலும் என்னால அப்பாவை கஷ்டப் படுத்த விருப்பம் இல்லாமல், கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லிட்டு வந்துட்டேன்!!!" என்று கூறி தியாவின் மடி சாய்ந்து அழுதாள்...


அழும் ரிதுவின் தலையைக் கோதி ஆறுதல் படுத்திய தியா, 'கல்யாணத்திற்குச் சம்மதம் சொல்லி விட்டு, அழும் தோழியை நினைத்து' அவளிற்கும் கண்ணீர் வந்தது...


பின்பு இது அவளைத் தேற்றும் நேரம் என்பதை உணர்ந்து, மெல்ல தன் கண்ணீரை துடைத்து, "ரிது உனக்காக அப்பா, அம்மா, உன்னோட சந்தோஷத்திற்காக எத்தனையோ விஷயங்கள் பண்ணிருக்காங்க, நீ இப்ப அவங்க சந்தோஷத்திற்குப் பண்ண போகும் ஒரே விஷயம், உன்னோட கல்யாணம் தான்..


பழசை எல்லாம் ஒரு கெட்ட கனவாய் நினைத்து மறந்திடு, அவங்களுக்காக நீ சந்தோஷமா இருக்க ட்ரை பண்ணு, சில நேரம் நடந்ததை நினைத்தே வருத்த பட்டுக் கொண்டு இருக்காமல், லைப் எப்படிப் போகுது அதே மாதிரி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்...


சோ டோன்ட் கிரை ஹியர் ஆப்டர், சீயர் அப் மை பேபி...." என்று அவளைத் தேற்றி, ரிதுவை கிளப்பி, அவள் மனநிலையை மாற்ற வெளியே அழைத்துச் சென்றாள்.


தோழி கூறிய நிதர்சனம் புரிந்ததால், வருவது வரட்டும், அதன் போக்கில் விட வேண்டும், என்று நினைத்து, தியாவுடன் வெளியே சென்றாள் ரிதுஷினி...



**************************************

குணசேகரிடம் பேசி விட்டு வீட்டிற்கு வந்த சிவசுந்தர், சாருலதா தம்பதியினர், ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்... "என்னங்க நம்ம ராகவ் ரிதுவை லவ் பண்ணினான் என்று தெரியும், ஆனால் அவனிற்குள் இத்தனை ஆழமான காதல் இருக்கிறது என்று எனக்குத் தெரியாமல் போய்ட்டுங்க!!!" என்று சாருலதா மகனின் காதலை பற்றிச் சிவசுந்தரிடம் பேசினார்..


"நானும் இதை எதிர்பார்க்கலை சாரு, நாம அவங்க கிட்ட பேசுறதை பேசியாச்சு இனி அவங்க தான் அடுத்து முடிவு என்னவென்று சொல்ல வேண்டும், பார்க்கலாம் நல்லதே நடக்கும்" என்று கூறி தன் அறைக்குச் சென்றார்..


கணவன் சொன்னது போல், நல்லதே நடக்கும் என்று மகனிற்காக வேண்டிய சாருலதா பின்பு சமையல் வேலையைக் கவனிக்கச் சென்றார்...


இவர்களைப் போல் எல்லாரிடமும் பேசிய ராகவ், எல்லாம் நன்றாக நடக்க வேண்டும் என்று நினைத்து, ரிதுவின் நினைவுகளுடன் கண் அயர்ந்தான்.


மறுநாள் வழக்கம் போல, கல்லுரிக்கு செல்ல ஆரம்பித்த, ரிதுஷினிக்கு நாட்கள் எந்த விதமான மாற்றங்கள் இல்லாமல் செல்ல ஆரம்பித்தது, குணசேகர் அவளிடம் பேசும் வரை....


குணசேகர் ரிதுஷினியிடம் பேசியது என்ன??? அதற்கு ரிதுஷினியின் பதில் என்ன???...


மாயங்கள் செய்வான்(ள்)...

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

நான் வந்துவிட்டேன் "மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 6 வது அத்தியாயத்துடன்..

சாரி பிரெண்ட்ஸ் சில பர்சனல் வேலை காரணமாக நேரத்தோடு UD கொடுக்க முடியவில்லை...

இதோ இப்போது வந்திருக்கிறேன்... படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 7

Screenshot_20190102-131755.jpg
சிவசுந்தர் பேசி விட்டு சென்று ஒரு வாரம் சென்றிருக்க , அந்த ஒரு வாரத்தில் தனக்குத் தெரிந்த நம்பகமான ஆட்கள் மூலம் சிவசுந்தர் குடும்பத்தைப் பற்றி விசாரித்த குணசேகருக்கு திருப்திகரமான பதிலே கிடைத்தது.


கூடுதலாக ராகவை பற்றி, தருண் கூறியதும் நல்ல விதமாகவே தோன்ற, தன் மகளின் வாழ்க்கையை ராகவின் கைகளில் ஒப்படைக்கும் எண்ணம் குணசேகரிடம் வலுப்பெற்றது...


தான் எடுத்த முடிவை, ஆனந்தியிடமும் தருணிடம் பேச முடிவு எடுத்து, அன்று இரவு அவர்களிடம் பேசினார். "நான் விசாரிச்ச வரையிலும், அவங்க குடும்பம் நல்ல குடும்பமாகத் தான் தெரியுது, நம்ம ரிதுவை பற்றியும் அவங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு,


என்னோட பிரெண்ட் பையனை விட, தனக்கு வேண்டியதை எல்லாரிடம் சொல்லி, அவர்களிடம் தன் தேவையைக் கேட்டு பெற்றுக் கொண்ட ராகவின் குணம் எனக்குப் பிடிச்சிருக்கு, ராகவையே நம்ம ரிதுவிற்குப் பார்த்தால் என்ன???" என்று அவர்களிடம் கேட்டார்...


"நீங்க சொல்றதும் சரி தாங்க, எதையும் வெளிப்படையா பேசும் குடும்பம், எனக்கும் பிடிச்சிருக்குங்க....


சாருலதா அவங்களைப் பார்த்தால் நம்ம பொண்ணையும் நல்லா கவனிச்சிக்கிடுவாங்க என்று தோணுதுங்க நாம இவங்களே பேசி முடிக்கலாம் என்று தன் மனதில் தோன்றியதை கூறினார் ஆனந்தி...


"ராகவ் பத்தி நான் விசாரிச்ச வரைக்கும், ரொம்ப ஸ்மார்டான பையன் பா, பேமிலி மேல் அட்டச்மெண்ட் ஜாஸ்தி அவருக்கு, ரொம்பக் காரிங் கூட, நம்ம ரிதுவை நல்லா பார்த்துப்பார்.. ஹி சீம்ஸ் டு பி அப் பெர்பெக்ட் பேர் பார் ரிது...." எனத் தருணும் அவன் கருத்தை கூறினான்...


இவர்கள் பேசியதை கேட்டுக் கொண்ட குணசேகர், அவர்கள் இருவரையும் பார்த்து, " நம்ம எல்லாருக்கும் பிடிச்சிருக்கு.... நல்ல விஷயத்தைத் தள்ளி போட வேண்டாம் அதுனால, நாளைக்கே நாம அவங்க வீட்டுக்கு நேர்ல போய்ச் சொல்லிட்டு வந்திடலாம்" என்று கூறி மூவரும் நாளை ராகவின் வீட்டிற்குச் செல்வது எனத் தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்..


முடிவு செய்த படி அடுத்த நாள் காலை, சிவசுந்தர் வீட்டிற்கு வந்தனர், குணசேகர் குடும்பம்... அன்று ஞயாற்றுக்கிழமை என்பதால், சிவசுந்தர் வீட்டில் இருந்தார்... அவர்களை வரவேற்ற சாருலதா, அவர்களை உட்கார வைத்துவிட்டு, உள்ள அறையில் இருந்த சிவசுந்தரை அழைக்கச் சென்றார்...


"வாங்க வாங்க சார், எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்களா??" என்று தன் பங்கிற்கு வரவேற்று, குணசேர்கருக்கு எதிரில் இருக்கும் சோபாவில் உட்காந்தார்...


"நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்... நீங்க எப்படி இருக்கீங்க??" என்று கேட்டுச் சிவசுந்தரிடம் தன் பங்கிற்கு நலம் விசாரித்துக் கொண்டார் குணசேகர்..


"சார், நாங்க இப்ப எதுக்கு உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்னா எங்க எல்லாருக்கும் உங்க பையனை ரொம்பப் பிடிச்சிருக்கு என்ற விஷயத்தைச் சொல்லிட்டு, உங்களிடம் மித்த விஷயங்களைப் பற்றிப் பேச வந்திருக்கோம்" என்று அவர்கள் வந்த விஷயத்தைக் கூறினார் குணசேகர்...


குணசேகரின் சம்மத்தை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவசுந்தர், "நீங்க சொன்னதில் ரொம்பச் சந்தோஷம் எங்களுக்கும். இனிமேல் அடுத்து ராகவிடம் பேசிவிட்டு, நாமளும் சீக்கிரம் கல்யாண வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிடலாம் சம்பந்தி" என்று சிவசுந்தர் மகிழ்ச்சியாய் குணசேகரிடம் கூறினார்...


சம்பந்தி என்ற அழைப்பில் அவர்களின் சம்மத்தை புரிந்து கொண்ட குணசேகர், புன்னகைத்து ஆனந்தியும் தருணையும், ஒரு பார்வை பார்த்தார்... அவர்களின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை புரிந்து கொண்டு...


"அதுக்கு என்ன சம்பந்தி மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு கல்யாண வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தான்" என் சிவசுந்தரிடம் கூறினார்...


"சாரு நீ போய் லேப்டாப் எடுத்துக்கிட்டு வா... ராகவிடம் இப்பவே பேசிடலாம்!!!" என்று சொல்லி சாருலதாவை அனுப்பி வைத்தார்... சிவசுந்தர் சொன்னது போல் லேப்டாப் எடுத்துக் கொண்டு வந்த சாருலதா,
சிவசுந்தரிடம் அதைக் கொடுத்தார்...

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிவசுந்தர் லேப்டாபை ஆன் செய்து கொண்டிருந்த நேரத்தில், "என்ன தங்கச்சி உங்க பொண்ணு எங்க ஆளையே காணும்" என்று சாருலதாவிடம் கேட்டார் குணசேகர்...


குணசேகரின் தங்கச்சி என்ற அழைப்பில் மகிழ்ந்த சாருலதா, "ஸ்வாதி பிரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்கா அண்ணா" என்று குணசேகரை அண்ணா என்று அழைத்து அவரிடம் பதில் கூறினார்...


"என்னோட மருமகள் டெல்லியில் தான இருக்கிறாள்!!!" என்று கேட்ட சாருலதாவிடம் "ஆமா லதா ரிது டெல்லியில் தான் இருக்கா..." என்று பதில் கூறிய ஆனந்தி,


"உன்னை லதா என்று கூப்பிடலாம்ல, நாம இரெண்டு பெரும் ஒரே வயசு தான் இருக்கும் என்று நினைக்கிறன்!!!" என்று கேட்டு சாருலதாவை பார்த்தார் ... "அதுக்கு என்ன ஆனந்தி அப்படியே கூப்பிடு!!!" என்று ஒருமையில் அழைத்துத் தன் சம்மதத்தைக் கூறினார் சாருலதா...


இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது skype கால் செய்த சிவசுந்தர் மகன் அட்டென்ட் செய்வதற்கு வெயிட் செய்தார்...


அதே நேரம் வெலிங்டனில் சிவசுந்தரின் அழைப்பை பார்த்த ராகவ் 'காலையில் தான பேசினோம், திரும்பவும் அப்பா போன் செய்துருக்காங்க என்னவா இருக்கும்!!' என்று நினைத்து காலை சிஸ்டெமில் கனெக்ட் செய்தான் ராகவ்...


திரையில் தோன்றிய குணசேகரின் குடும்பத்தைப் பார்த்ததும், ராகவின் கண்கள் ஒரு நிமிடம் ஆச்சிரியத்தை வெளிப்படுத்தியது...


நொடியில் தன்னைச் சரி படுத்திக்கொண்ட ராகவ், "வாங்க மாமா, வாங்க அத்தை, வாங்க மச்சான்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க!!!" என்று கேட்டு அவர்கள் மூவரிடம் முறை வைத்து அழைத்தான்...


தாங்கள் சொல்லாமலே, தங்களின் வருகையை வைத்து புரிந்து கொண்ட, ராகவின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து, வியந்த குணசேகர், ராகவிடம் "நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை நீங்க எப்படி இருக்கீங்க" என்று அவரின் நலனை விசாரித்தார்...


"நான் நல்லா இருக்கேன் மாமா, ப்ளீஸ் என்னையும் தருண் மாதிரி நினைச்சுக்கோங்க, உங்க பையன் தான் நான் சோ, மாப்பிள்ளை என்ற மரியாதையை எல்லாம் வேண்டாம்.. ராகவ் என்றே கூப்பிடுங்க.." என்றான் ராகவ்...


"ஆல்ரெடி எங்க அப்பா உங்கிட்ட பிளாட் ஆகிட்டாரு, இப்ப நீ பேசுற பேச்சில் உன்கிட்ட டோட்டல் சரண்டர் தான்!!! " என்றுபடி ராகவிடம் இலகுவாகப் பேசி கிண்டல் செய்து நட்பு கரம் நீட்டினான் தருண்...


தருணின் பேச்சில் சிரித்த ராகவ், " நான் மாமாவின் பெண்ணிடம் ஆல்ரெடி பிளாட் ஆகிட்டேன்!!!, இப்ப மாமா என்கிட்டே பிளாட் ஆகிட்டார்... நாள பின்ன எனக்கும் ரிதுவுக்குச் சண்டை வந்தால்,


மாமா தான எனக்குச் சப்போர்ட் பண்ணனும் அதான் இப்பவே ஆள் சேர்க்கிறேன்... என்ன அத்தை நான் சொல்றது கரெக்ட் தான!! என்று தருணிடம் ஆரம்பித்து ஆனந்தியிடம் முடித்தான்...


ரிஷியின் பேச்சில் சிரித்த ஆனந்தி, "ஆமா தம்பி, கண்டிப்பா இவர் சப்போர்ட் உங்களுக்கு வேணும்!!!" என்று கூறி அவர்களின் பேச்சில் கலந்து கொண்டார்...


எல்லாரும் பொதுவான விஷயங்களைப் பேசிய பின்னர், அனைவரிடமும் ராகவ் பேச ஆரம்பித்தான், "இப்ப நான் சொல்ல போற விஷயத்தை நீங்க நல்லா கேட்டுட்டு எனக்குச் சப்போர்ட் பண்ணுங்க...


நான் ரிதுவை அவளுக்காகக் கல்யாணம் பண்ண நினைக்கிற மாதிரி, ரிதுவும் எனக்காக என்னை ஏத்துக்கிடனும்,


கல்யாணம் நடந்தாலும் ரிதுவுடன் நான் வாழ போற வாழ்க்கையை அனுபவிச்சு வாழனும்.. அதுக்கு நீங்க தான் ஹெல் பண்ணனும் மாமா என்று குணசேகர் பார்த்து சொன்னவன்.. மெல் தன் திட்டங்களை விவரிக்க ஆரம்பித்தான்...


"மாமா, ரிதுவிடம் என்னைப் பத்தி எல்லாத்தையும் சொல்லாதீங்க, நான் நீங்க பார்த்த பையனவே இருக்கட்டும், நான் என்னோட காதலை ரிதுவின் நானே புரிய வைக்கணும் என்று ஆசை படுறேன்..


நீங்க மூணு பேரும், எனக்கும், என் குடும்பத்திற்கும், ரிதுவை பற்றி எல்லாம் விஷயமும் தெரியுங்கிறதை ரிதுகிட்ட காட்டிக்கிடாதீங்க, அவ ஃபீல் பண்ணுவா...


என்னோட ரிது கொஞ்சம் வருஷம் அனுபவிச்ச கஷ்டம் போதும், இனிமேல் அவள் பீல் பண்ணை கூடாது,
கண்டிப்பா எனக்கோ எங்க வீட்டில் உள்ளவர்களுக்கோ விஷயம் தெரியும்னு தெரிஞ்ச அவள் வருத்த படுவாள். என்னால் இனிமேல் அவள் வருத்தப்படுவதைப் பார்க்க முடியாது..
 
Status
Not open for further replies.
Top