ரஞசனி குளித்து முடித்து, ஒன்றை துண்டுடன், அவனது அலமாறியை ஆராய்ந்து கொண்டிருந்தவள், கதவு தட்டப்படும் ஒலியில் திரும்பி பார்த்தாள்.
அவள் பிளீஸ் வெட் என்று சொல்லும் முன் கதவு திறந்து கொண்டது. ஐயோ திரும்பவும் இந்த கோலத்திலா என நினைத்தவள், பட்டென அலமாறிக்குள் மறைந்துகொண்டு, தலையை வெளியே நீட்டினாள்.
பவித்ரனுக்கு, அவளது செய்கை ஈர்த்தது. அவனை அறியாமலே அவனது கால்கள் அவள் புறம்பயணப்பட்டது.
அவன் அருகில் வருவதை உணர்ந்தவள், பிளீஸ் பவி என்றாள், வெளிப்படாத குரலில்,
குனிந்து தலையை மட்டும் நீட்டிய அவளின் முகத்தை உயர்த்தியவன், யூ பிளீஸ் டூ மீ என்றான் கிறங்கிய குரலில். அடுத்து அவளால் போசவே முடியாத வாறு அவளது வார்த்தைகளை உறிஞ்சியவன், மௌனத்தை பரிசலித்தான்.
அவனது செயலில் நாணியது, அவர்களின் உடைதான். யார் யாரை வீழ்த்தினார் என்பது, இருவருக்குமே நினைவில்லை.
அழகிய மஞ்சம், மன்றம் ஏறி தாலி வாங்காமலே முடிந்தது. அதைப் பற்றி இருவருமே கவலைப்படவில்லை. பவித்ரனை கணவனாகத்தான் உணர்ந்தாள் ரஞ்சனி. அவன் கேலியையும் கோபத்தையும், ஒதுக்கத்தையும் அவனுடன் சேர்ந்து ஏற்றுக்கொண்டாள். இப்போது அவனின் தீவிரமான காதலையும் ஏற்றுக்கொண்டாள்.இந்த ஐந்து நாட்கள் தான் பவித்ரனுடன் பழகினோம் என்பதை, அவளும் மறந்தாள். அவனுக்கும் மறக்கடித்தாள்.
பவித்ரனோ உறவு முடிந்தும் அவளை விலகினான் இல்லை. அவளது இடது தோளின் வழவழப்பில் கையால் பயணப்பட்டவன், அங்கே நேர்கோடாக ஒரு நெருடலை உணர்ந்தான். இது என்ன டாலி என்றான் .
அது ஸ்மால் ஆக்சிடன்ட் என்றாள் ரஞ்சனி,
ஆக்சிடென்ட் என்றவுடன் அவனது மோனநிலை கலைந்து, எப்படி என்றான்.
கார் ஆக்சிடண்ட், லாரி மேதிடுச்சு என்றவளிடம், என்ன ரஞ்சூ பாத்து போகக் கூடாதா என்றான் சற்று அதட்டலாக.
நல்லா முன்னாடியும், பின்னாடியும் வந்த லாரிய பாத்துட்டு, வெளில குதிச்சதால தான், புழைச்சேன், அப்படி இல்லனா, லாரிக்கு நடுல காரோட நசுங்கி இருப்பேன். என்ன சுரண்டிதான் வெளில எடுக்கணும் என்றாள் சற்று கேலியாக.
ஆனால் அவனுக்கு அது கேலியாக படவில்லை போல, பட்டென அவளின் வாயை மூடியவன், அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
ஹே, அதான் ஒன்னும் ஆகலியே, எதுக்கு இப்படி என்றவளை போச விடாமல், அவளது ஆறிப்போன வடுவிற்கு, முத்தத்தால் மருந்திட்டான். ரஞ்சனி போசும் நிலையைக் கடந்தாள், அவனும் தான்.
சூரியன் சென்னை வானில் பயணத்தைத்தொடங்க எத்தனிக்க, அவர்கள் பயணம் முடிந்தது. லேசான வெளிச்சம் ஜன்னலைத்தாண்ட, தன்னைக்கண்டு நாணியவள், அவனையே ஆடையாக்கி, உறங்கினாள்.
பவித்ரன் கொண்டு வந்த பால் தயிரானது. கேட்பாரற்று டேபிளில் கிடந்தது.
உச்சி வெயிலிலும் உறங்கும் ரஞ்சனியின் போன் உறங்கவில்லை போலும், அது ஒலித்து, தன் இருப்பிடத்தை தெரிவித்தது.
பவித்ரன் போன் ஒலித்ததில் உறக்கம் கலைந்தவன், தன்னை கட்டிக்கொண்டு கிடக்கும் ரஞ்சனியைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்டு, அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டவன். போனை நோக்கிச் சென்றான்.
இப்போது ரஞ்சனியின் தந்தை அழைத்திருந்தார். மணி மதியம் 1 என்றது முன் திரை, எடுத்து போசவா வேண்டாமா என தயங்கி நின்றான் பவித்ரன்.
திருப்ப மறுமுறை அழைக்கப்படவும், வேறுவழியின்றி, ரஞ்சனியின் பெற்றோரை பதட்டப்படுத்த மனமில்லாமல் போனை எடுத்தான்.
அவன் ஹலோ எனவும், ஒரு சில வினாடிகள் தயங்கி ஹலோ என்றார் ராஜன்.
பவித்ரன் ரஞ்சனி என தயங்கிய ராஜன், இரவு உங்க வீட்டிலா இருந்தா? என கேட்டு முடித்தார்.
அங்கிள்.. என்ற அவனது தயக்கமே அவருக்கு அனைத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டது.
நான் நந்தினி கிட்ட பேசுனேன் என்றார், அவனது தடுமாற்றம் உணர்ந்து,
ஹெவி டிராவிக் அங்கிள், லேட் நைட் ஆனதால, நந்தினி வீட்ல டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு, இங்கயே இருக்க வேண்டியதா போச்சு என்று , ஒருவழியாக சொல்லிமுடித்தான்.
ரஞ்சனி எங்கே என்றவரிடம், வெளில தோட்டத்த சுத்தி பாக்குறா, கூப்பிடவா என்றான், வாயில் வந்த பொய்யில்.
மதியம் மணி ஒன்றுக்கு தோட்டத்தை சுற்றிப்பார்க்கிறாளா? என நினைத்தவர் மேலும் விசயத்தை தோண்ட மனமில்லாது, சரி லதா வெயிட் பண்றா, சீக்கிரம் வாங்க, பட் லேட்டானதுக்கு இதவிட பெட்டர் பொய்யா யோசிச்சு வச்சுக்கோங்க, அவ தோண்டி தோண்டி கேள்வி கேப்பா, நாட் லைக்மீ என்று கடைசியில் கேலியில் முடித்தார்.
ரஞ்சனியை நாடிச்சென்றான் பவித்ரன். முதலில் அவளைக் கிளப்பி வீட்டில் விட வேண்டும் என்று நினைத்தவாறே அறையைத் திறந்தான்.
வெளிச்சம் அவள் பாதத்தில் விழ கால்களை போர்வைக்குள் இழுத்து தூங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப அவனுக்கு மனம் வரவில்லை.
போர்வையுடன் அவளை இறுக்க அணைத்தவனை தூக்கத்திலே உணர்ந்தவள், பவி லவ் யூ, என்றாள் உளரலாக, தனக்குள் சிரிதுதுக்கொண்டவன், இப்படியே போனால் வேலைக்காகாது என்பதை உணர்ந்தவன், அவளை அலேக்காக தூக்கிச் சென்று நீர் நிரம்பிய பாத் டப்பில் போட்டான்.
அவள் தூள்ளிக்குதித்துக்கொண்டு எழுந்தாள். விழுந்த அதிர்ச்சியில் இருந்தவளிடம், இன்னும் பத்து நிமிசத்துல உங்கப்பா வர சென்னாங்க என்றவன், கதவை மூடிவிட்டு சென்றான்.
மடமடவென இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு கிளம்பினர்.
ரஞ்சனி வீட்டிற்கு வந்ததும் அவளறைக்கு ஓடிவிட்டாள். முடிவு லதாவிடம் மாட்டியது பவித்ரன்.
அவனுக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு, என்ன மாப்ள நான் எத்தன முறை கூப்பிடுறது. ஏன் இரண்டு பேரும் போனே எடுக்கல என்றார்.
அது ஆண்ட்டி போன் ஹால்லயே மறந்துட்டேன், அதனால கேக்கல என்றான். ஆமா இந்த ரஞ்சனிக்கு என்னாச்சு, போனும் கையுமா சுத்துவா, அது அவ ஃப்ரண்ட ரொம்ப நாள் கழிச்சு பாத்திருப்பா, அதுதா போன மறந்துட்டா போல என்றார்.
எந்த ப்ரண்டு?
அதான் நேத்து ரஞ்சனிய கொண்டு விட்டீங்களே.. நந்தினி.. என்றார் லதா.
லதா பவித்ரன் பேச்சை கேட்டவண்ணம் அருகே அமர்ந்திருந்த ராஜனை, பவித்ரன் ஒரு பார்வை பார்க்க, அவரோ வாயில் விரல் வைத்து, ச்சூ என்றார் ஜாடையில்,
ஓ அவங்களா என்றவன், வேறேதும் பேசவில்லை, சமாளித்து வீடு வந்து சேர்ந்தான்.
அவனது அறைக்குள் நுழைந்தவன் கட்டில் இருக்கும் நிலை கண்டு தனக்குள் சிரித்த வண்ணம், அதை சரி செய்தான். மனமும் உடலும் மிதப்பது போல் உணர்ந்தான்.
அறையின் இருவரும் மாறி மாறி இடித்துக்கொண்டு அவசரமாக கிளம்பியதில் அனைத்தும் கலைந்து கிடந்தது. ஒவ்வொன்றாக சரி செய்தவன், டிராவில் பொருட்களை திணிக்க, அவனது டைரி கண்ணில் பட்டது. அதை நடுங்கும் கைகளில் திறந்தவனை பார்த்து சிரித்தான் ஆனந்தன்.
பவித்ரனின் இதயம் நின்று துடித்தது, இதுவரை ரஞ்சனியின் கைவரிசையில் கலைந்து கிடந்த பொருட்களை ரசித்த வண்ணம் சரி செய்து கொண்டிருந்தவனுக்கு, இப்போது அது அபஸ்சுரமாக தெரிந்தது.
இவ்வளவு நேரம் என்பதைவிட, கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் அருகில் அவள் இருந்த ஒவ்வொரு மணித்துளியும் ஆனந்தன் ஞாபகம் வரவே இல்லை. பவித்ரன் தன்னைக்கூட மறந்து அவளைத்தான் நினைத்திருந்தான். இப்படி அவளருகில் அனைத்தையும் மறக்கும் பவித்ரனை இந்த பவித்ரன் முற்றிலும் வெறுத்தான்.
ரஞ்சனி அருகில் இருந்தும், அவளுக்கெதிராய் செயல்பட முடியாமல், அவளுடன் ஒட்டிக்கிடந்த, உருகிய தருணத்தை நினைத்தவன் மனம் மூங்கில் காட்டின் நெருப்புபோல் சட்டென மூண்டது, நிமிடத்தில் உள்ளத்தை தணலாக்கிச்சென்றது.
பவித்ரணுக்கு இப்போது ரஞ்சனி மீதுள்ள கோபத்தைவிட, நிலை தவறிய தன்மேல்தான் அதிக கோபம்.
டிரசிங் டேபிளில் அவனது பின்பம் தெரிய அதை உறுத்து விழித்தவன், அவன் பின்பத்தையே பார்க்க வெட்கினான்.
அறையின் ஒவ்வொரு இடத்திலும் நேற்று அங்கே நின்ற ரஞ்சனியே தோன்ற மூச்சுக்கு திணறியவன், அறையை திறந்துகொண்டு வெளியே வர, அங்கே பால் டம்ளர் கண்ணில் விழ, கோபத்தையெல்லாம் திரட்டியவன். அதை தரையில் ஓங்கி அறைந்தான்.
சிந்திய பாலை வெறித்தவன், இங்கே இருந்தால் பித்தம் பிடித்துவிடும் என நினைத்தவனாய், பொருட்களைமடமடவென எடுத்து பெட்டியில் அடுக்கியவன், கோயம்புத்தூர் பயணப்பட்டான்.
பலியாவாளா? பலிகொடுப்பாளா?