All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் கணினியில் வேலையாக இருந்தான். கதவு தட்டப்படவும் யெஸ் என நிமிர்ந்து பார்க்க, அங்கே சத்யதேவி நின்றிருந்தார்.

பவித்ரன் புருவம் சுருக்கினான். தன் அறைக்கு தாய் வந்திருப்பது அதிசயமாக இருந்தது.

யெஸ் மேடம் என எழுந்து நின்றான். இப்போது யோசிப்பது சத்யதேவியின் முறையானது.

தீரா, நான் ஆபீஸ் விசயமா வரல பா, உனக்கு சென்னைல ட்ரீம்ஸ் ஸாப் தெரியும்ல, அவங்க பொண்ண பாத்திருக்கேன். உனக்கு பிடிச்சதுன்னா சொல்லு, மோற்கொண்டு போசுவோம் என ஒரு கவரை நீட்டினார். இது போட்டோ என்றவர் பேச்சு முடிந்தது என எழ எத்தனிக்க பவித்ரன் கை நீட்டி தடுத்தான்.

பவிதரனுக்கு புரிந்துவிட்டது. இதில் ரஞ்சனியின் புகைப்படம் தான் இருக்குமென்று, எனக்கு இப்போ கல்யாணம் செஞ்சுக்கிற மூடு இல்ல, ஐம் காண்சன்ரேசன் ஆப் மை வொர்க் ஒன்லி, சோ லீவ் திஸ் என்றான் கடுமையாக.

மகனிடம் இவ்வளவு கடுமையை எதிர்பார்த்திராத சத்யதேவி குழம்பினார். ஏன் தீரா, நீ யாரையும் மனசில நினச்சிருக்கியா?

பவித்ரனின் முழுமனதையும் ஆக்ரமித்திருப்பது, ரஞ்சனிதான், ஆனால் எதிரியாக,

நோ என்றவன், டோண்ட் யூ அண்டஸ்ட்டுட், ஐ டோண்ட் வாட் மேரேஸ் நௌ. கம்பெனில இப்பத்தான் ஸ்டடி பண்ணீட்டு இருக்கேன். எனக்கு முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு, சோ .. ப்ப்ஸீஸ்... என்றான்.

பவித்ரன் முடிக்க வேண்டிய வேலை என்றது, ரஞ்சனியை பழி தீர்ப்பது பற்றி, சத்யாதேவி புரிந்து கொண்டதோ, அலுவலக வேலைகள் என்று, சத்யாதேவியின் தவறான புரிதல் ரஞ்சனியை அழிக்கப்போவது தெரியாமல், அவர் அடுத்து பேசினார்.
கல்யாணம் பண்ணீட்டு வேலையை முடி, அதுதான் நல்லது என்று மகனுக்கு கட்டளைபோல சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

பவித்ரன் சத்யதேவியின் வார்த்தைகளில் சிலையானான். பின்பு கவரைப்பிரித்து புகைப்படம் எடுத்தவன், உன்ன நேரடியா மீட் பண்ண வற்றேன், ரெடியா இரு என்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி வழக்கம் போல் கடை அலுவல்களில் பிசியானாள். கீழ்தள செக்யூரிட்டியிடமிருந்து போன் வந்தது. சற்று யோசித்தவள், கூட்டீட்டு வாங்க, போக் சைட்வழியா என்று அழைப்பை துண்டித்தாள்.
ராமசாமியை அவளது அறைக்கு அழைத்தாள். ஏனெனில் வந்திருப்பது அவர் மகன் ,அவரிடம் சண்டையிட.

கடையின் பின்பகுதி வழியாக அழைத்து வரப்பட்டனர். அங்கே இருவர் கட்டிபோடப்பட்டு இருந்தனர். கண்களும் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் நாய்கள் கூண்டில் வைக்கப்பட்டிருந்தது. கதவு திறக்கப்பட்ட ஓசையில் கட்டிபோடப்பட்டிருந்த இருவரும், மிரண்டனர். நாங்க தப்பு செய்ய மாட்டோம், என கோரசாக சொன்னார்கள். நாய்கள் அவர்களின் அசைவிற்கு, கூண்டை உடைக்கும் அளவிற்கு வெறி பிடித்து குரைக்க ஆரம்பித்தது.

நாய்களின் சத்தத்தைக் கேட்ட அந்த இரு ஆண்களும் பயந்துவாயை மூடிக்கொண்டார்கள். சேகரின் மனைவி இக்காட்சியைக்கண்டு கணவன் கைகளை இருக்கப்பிடித்துக் கொண்டு செக்யூரிட்டியின் பின்னால் சென்றாள்.

லிப்ட் நேரடியாக ரஞ்சனி அறையில் திறக்கப்பட்டது.

ராமசாமி, கதவு வழி நுழைய, அவர்மகன் மருமகளுடன் லிப்ட்டின் வழியாக நுழைந்தார்.

சேகருக்கு தந்தையை எதிரில் பார்த்தவுடன், அப்படி ஒரு கோபம் வந்தது, நேராக சென்று அவர் சட்டையை பிடித்துவிட்டான்.

ரஞ்சனி செக்யூரிட்டியிடம் கண் காட்ட, அவர்தான் சேகரை இழுத்துப்பிடித்தார்.

உக்காருங்க என்று அனைவரையும் இருக்கையில் அமரச்சொன்னாள்.
மேடம் பிரைஸ் மணிய அவர் அக்கௌண்டுக்கு போட சொல்லீட்டாருண்ணு சொன்னீங்க, சரி என்னனு கேப்போம்னு கடைக்கி வந்தா, இவரு பெரிய இவரு மாதிரி பாக்க முடியாதுன்றாரு, அப்பவே எனக்கு கோவந்தான். இப்போ போர்ஜெரி பண்ணி நா பிஸ்னஸ் ஸ்டாட் பண்ணர்துக்கு பணம் புறட்டி அக்கௌண்ட்ல வச்சிருந்தா அதுவும் அவரோட அக்கௌண்டுக்கு மாத்திருக்காரு, மனுசனா அவரெல்லாம், பெத்த பிள்ள லைப்ள இப்படி அடிக்கிறாரு, ஏன் நீ சாகப்போற வயசுல இதெல்லாம் கட்டீட்டு போகப்போறியா, சொல்லு என்றான் தன் தந்தையிடம் கடுமையாக..

சேகரின் மனைவியோ, மனுசனா மாமா நீங்கெல்லாம், நீங்க அவருக்கே தெரியாம அவர் காச திருடுனதுக்கு, உங்க மேல கேஸ் போட்டு உங்கள ஜெயில்ல போடவைக்கிறேன்.

ராமசாமி, ரஞ்சனி சொன்னது போல் அமைதியாக அமர்ந்திருந்தார்.அவருக்கு நடப்பது அனைத்தும் புரியாத மொழி கார்டூன் போல இருந்தது, பாதி புரியவில்லை.

எதாவது பதில் சொல்றாறான்னு பாருங்க, எல்லாம் நீங்க கொடுக்குற இடம் மேடம் என்றான் ரஞ்சனியிடம் சேகர்.

ரஞ்சனி, எனக்கு ஒரு டவுட்டு, அவரோட ஊர்ல இருந்த வீட்ட வித்த பணந்தான உங்க அக்கௌண்ட்ல இருந்து திருடு போச்சு மிஸ்டர் சேகர் என்றாள்.

சேகர் அதிர்ந்து ரஞ்சனியை பார்க்கவும், அதாவது நீங்க அவர்ட இருந்து பாசம்ற பேர்ல திருடுனத, அவர் பேங்க் மூலமாவே திருடீட்டாரு, ரைட்.

அப்போ மேடம் இதெல்லாம் உங்க வேல தானா? ஏன் எங்கப்பாவ பிரிச்சு, இப்படி எங்க வாழ்க்கைல விளையாடுறீங்க,
குட், நானா கேம் ஆடுறேன். நீ உங்கப்பாவ தொலைக்கிறதுக்கு இந்ந கடைய சூஸ் பண்ண, இப்ப அவரோட சொத்தையும் அவரோட சேத்து தொலச்சிருக்க, அப்பாவ தொலைக்கும்போது வலிக்கல ரைட், இப்போ வலிக்கிது, பணம்போனவுடனே! குட், நீங்க சூப்பரா உங்க பையன வளத்திருக்கீங்க என்றாள் ரஞ்சனி ராமசாமியைப் பார்த்து.

ரஞ்சனி மா, நான் என்ன பண்ணேன் என்றார் ராமசாமி, ஹீன குரலில்,

என்னங்க, இங்க உக்காந்து இருந்தோம்னா வேலைக்காகாது, வாங்க நாம போலீஸ்ட போவோம், இவங்க போலீஸ்ட பதில் சொல்லட்டும் என்றாள் சேகரின் பத்தினி.

சூப்பர் என்றாள் ரஞ்சனி, போலீஸ்ல கேஸ் கொடுக்கப்போகும் போது அப்படியே இந்த கேசையும் சேத்து குடுங்க, நீங்க இப்போ தங்கிஇருக்குற பிளாட்டுக்கு வாடகப்பணம் மிஸ்டர் ராமசாமிக்கு ஆறுமாசமா தரல, அதையும் சேர்த்து பாத்திடுங்க, எதுக்கு வீண் அலைச்சல் மிஸ்சஸ் சேகர்.

வாட்! அந்த வீடு என்னோட பேர்ல இருக்கு, அதுக்கு நா எதுக்கு வாடகை பே பண்ணணும் என்றான் தீனக்குரலில் சேகர்.

அது, உங்கப்பா காச அவர் எடுத்துகிட்டதுக்கு, எப்படி போலீஸ் கம்ப்லைண்ட் குடுக்க முடியுமோ அப்படித்தான். அதாவது ராமசாமி பேர்க்கு ஆறுமாசம் முன்னாடியே நீங்க வித்ததா பத்திரம் பண்ணீரலாம். என்ன ராஜா பண்ணீரலாமா என தனது சிசீடிவி அறை சீஃப் இடம் கேட்டாள் ரஞ்சனி.

அனைவரும் வாயடைத்து நிற்க, ராஜா ஓ.. பண்ணலாம் என்றான்.

இது அநியாயம் என்றான் சேகர். இத போலீஸ்டயோ, கோர்ட்லயோ நீங்க பேசிக்கலாம், பைன் யூ மே லீவ் நௌ என்றவள், கணினியில் பார்வையை பதித்தாள்.

சேகரும், அவன் மனைவியும் அரண்டு நின்றனர். ராமசாமிக்கு மகனை நினைத்து பாவமாக இருந்தது. இருந்தும் மகன் செய்த தவறுக்கான தண்டனையை அனுபவிக்கும் போது தடுத்தால், இப்போது வேண்டுமானாலும் தப்பிக்கலாம். ஆனால் என்றாவது ஒருநாள் திரும்ப கிடைக்கும், அப்போது இதைவிட பெரிதாக அமைந்தால், என்ன செய்வது, அதற்கு இதுவே மேல் என அமைதியாய் இருந்தார்.

நிமிர்ந்து பார்த்தவள், இப்பவே இங்கிருந்து அமைதியா போனீங்கனா? ஓகே , இல்லாட்டி வீட்டையும் இழக்க வேண்டி வரும், என்றாள் ரஞ்சனி.

சரி மேடம் என்றவர்கள் மனதில் ஆயிரம் வார்த்தைகள் இருந்தும், ரஞ்சனியின் மேலுள்ள பயத்தில் வாயை மூடிக்கொண்டு சென்றனர்.
ராமசாமி உங்க அக்கௌண்ட்ல, 88% ஆப் வீட்ட விற்பனை செய்த காசு ஏறீருக்கு, மிச்சம் இதற்கு ஆன செலவு, தென் 2% பார் கட்ட பஞ்சாயத்து பீஸ் என்றாள் ரஞ்சனி.

கட்ட பஞ்சாயத்தா? என வாயை பிளந்தார் ராமசாமி.

பின்ன, இதுக்கு பேர் என்ன? எதுவா இருந்தாலும் லாபம் வேணும், இல்லாட்டி அந்த வேலைய செய்யக் கூடாது, திஸ் இஸ் மை பாலிசி என்றாள் ரஞ்சனி.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எட்டாம் பாகம்..

சத்யதேவி மகனிடம் பெண்ணிண் புகப்படம் கொடுத்ததோடு முடித்துக்கொண்டார். மகனிடம் பெண் பற்றியோ, சம்மதமா என்றோ கேட்க வில்லை. காரணம் ஒரே வீட்டிலிருந்தும், ஒரே கம்பெனியில் வேலை பார்த்தும் அவனை பார்ப்பது அவருக்கு அறிதாகிக்போனது.

எதிரில் பார்க்கும் சில தருணங்களிலும், மிகுந்த வேலையில் இருந்தான். அந்த சமயம் சத்யதேவிக்கு இதைப்பற்றி பேச தகுந்த தருணமாக தோன்றவில்லை.

பவித்ரன், இந்நிலையில் ஒருநாள் மாலை சத்யாதேவியிடம் பேச அவரது அறைக்குச் சென்றான்.

சத்யாதேவி இதுதான் சந்தர்ப்பம் என கல்யாண விசயம் பேச எத்தனிக்க, அவன் ஒரு மாத விடுப்பு கடிதத்தை நீட்டினான்.

என்னாச்சு தீரா, எதுக்கு லீவ் , அதுவும் ஒரு மாசம்..

உங்க வேலை எல்லாம் கம்ப்ளீட் பண்ணியாச்சு, ஆல் என்னோட லீவ் டேஸ்க்கும் சேத்து, அப்பறம் என்ன பிராப்ளம்.என்றான் விட்டேட்றியாக.

சத்யதேவி தனக்குள் சிரித்துக்கொண்டு, சரி வேலை எல்லாம் முடிச்சுட்ட, நான் கேட்டது காரணம், எதுக்காக லீவ்னு, வேலைய முடிச்சுட்டா லீவு குடுக்க இது ஐ.டி செக்டார் இல்ல, ஐ நீடு ரீசன் என்றார் தெளிவாக.

அப்போ காரணம் சொன்னாத்தான் லீவு கிடைக்கும் , அப்படித்தான..

நிச்சயமா என மகனை அழுத்தமாகப் பார்த்தார்.

சற்று யோசித்து பல்லைக்கடித்தவன், எனக்கு கல்யாணம் என குண்டைத் தூக்கி போட்டான்.

வாட் என்ற சத்யதேவிக்கு மறுவார்த்தை வரவில்லை.

தாயின் பதட்டத்தை கண்டவன், தண்ணீர் கொடுத்தவன், ரொம்ப பதட்டப்படாதீங்க, ஹெல்த்துக்கு நல்லதில்ல, நான் கல்யாணம் பண்ணிக்க போறது வேறயாருமில்ல ட்ரீம்ஸ் ஓனரத்தான் என்றான்.

அப்போது, மது பெல்லடித்துவிட்டு உள்ளே நுழைந்தாள். மதுவை ஓரக்கண்ணில் பார்த்த சத்யதேவி, பவித்ரன் உங்க கல்யாணத்துக்கு ஒருமாசம் லீவ் கொடுக்க முடியாது. அதிகபட்சம் ஒருவாரம், கிளியர் என்றார்.

மது அதிர்ச்சியில் நிற்கவும், பவித்ரன் அன்னையை கண்டிக்கும் பார்வை வீசினான். சத்யாதேவி மதுவிடம், சைன் போட்டாச்சும்மா, போலாம் எனவும் , சுரத்தே இல்லாமல் நடந்து சென்றாள்.

மாம், ஐ டோண்ட் லைக் திஸ், நீங்க வேணும்னே மது முன்னாடி என்னோட கல்யாணத்த அனௌன்ஸ் பண்றீங்க என்றான் காட்டமாக.

ஆமா, அதனால உனக்கு என்ன பிராப்ளம், எனி பிராப்ளம்???

நோ, சி இஸ் கிரஸ் ஆன் மி, யூ ப்ரோக்கன் இட், நௌ யூ ஆர் ஹேப்பி... ம்

சரி அத விடு, கல்யாணம் பண்ணிக்க என்னமோ சொன்னியே... ஆ.. மூடு இல்லனு, இப்ப பொண்ணு பாக்கல, நிச்சயம் பண்ணல ஸ்ரைட்டா கல்யாணமா, எனக்கு ஒன்னும் புரியல... எப்ப கல்யாண மூடு 100% ஆச்சு ப்ரம் 0.

நத்திங், நீங்க இப்போ கல்யாணம் முடிங்க, அப்பறம் உங்களுக்கே தெரியும்.

ஹே, நீ நினைக்கிறமாதிரி திஸ் இஸ் நாட் ஒன் மேன் ஆக்சன், அந்த சைடு இருந்தும் பாசிட்டிவ் ரியாக்சன் வரணும். வீ வில் சீ, வாட் தெயர் ஆன்சர்..

வாட், அவங்க இன்னும் ஒன்னும் சொல்லலியா? கே,கே நோ பிராப்ளம், நான் போய் கேட்டு வற்றேன் என்றான்.

இது முறையில்ல தீரா, நான் சொல்றத கேளு, எனவும்.

பவித்ரன் எழுந்துவிட்டான். தேக்யு, லீவ் குடுத்ததுக்கு என்றவன் சென்றுவிட்டான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனியை போலீஸ் விபத்து விசயமாக சந்தித்துவிட்டுச் சென்றார். லாரி இரண்டிற்க்கும் வெவ்வேறு ஒனர்கள். லாரி டிரைவரை விசாரித்ததில் நாங்கள் அந்த ரோட்டில்தான் பிரேக்டௌனை சரிபார்ப்போம், டிரையல் ஓட்டுவோம் என்றார்களாம்.

ஆனால் இதுவரை ஒரு லாரியைக்கூட அவள் கண்டதில்லை, விபத்து நடந்த தினத்தைத் தவிர, வண்டியில் பிரேக் பிடிக்கவில்லை என்று ஒருவனும், குடி போதையில் வண்டியை ஓட்டி செக் செய்ததாக மற்றவனும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

ரஞ்சனிக்கு இடிப்பதெல்லாம், ஒன்றுதான், வெவ்வேறு மாநிலக்காரர்களின் லாரிகள் எப்படி கோயம்பத்தூர் ரிசிஸ்ரேசன், போன கடை விபத்தில் உள்ள க்ளுவும் கோயம்புத்தூர், இதுவும் அதே கோயம்புத்தூர். தன்னை அழிக்க நினைப்பவர்கள் அங்கேதான் உள்ளார்களோ என நினைத்துக் கொண்டிருக்கையில், லதா மகளின் அருகில் அமர்ந்தார்.

ரஞ்சனி நிமிர்ந்து அன்னையைப் பார்த்து என்ன என்றாள், சற்றே யோசனையை தள்ளி வைத்து.

லதா கணவனை கண்களால் துணைக்கழைத்தார். ராஜன் லதா அருகில் உட்கார்ந்ததும், லதா தைரியம் வரப்பெற்றவராக, மாப்பிள்ள போட்டோ இதுல இருக்கு, பாத்துட்டு பிடிச்சிருக்கானு சொல்லு மா என மகளிடம் கேட்டார்.

மாப்பிள்ளயா? யாருக்கு எனக்கா?

ஆமா டா மாப்பிள்ள டால், ஹேண்ட்சம்,சூப்பர் ஸ்மார்ட் என்னங்க என கணவனை துணைக்கழைத்தார் லதா., ராஜன் மனைவி மாப்பிள்ளையை , மகளிடம் மார்க்கெட்டிங் செய்வதை நினைத்து சிரித்துக்கொண்டிருந்தவர், தன்னை மார்க்கெட்டிங்கின் கோ ஆன்கர் ஆக்கவும், இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல், ம்.. ம் என்றார்

வாட் இஸ் திஸ் மா, மாப்பிள்ள டீடல்ஸ்னா கேரியர், குடும்பம் பத்தி சொல்லாமா,ஹேண்ட்சம் அது இதுன்னு...

லதா துள்ளிக்குதிக்காத குறையாக, அப்போ உனக்கு கல்யாணத்துல சம்மதமா என்றார், ராஜன் மகளிடம் ஆர் யூ ஓகே பார் யுவர் கெல்த் ரஞ்சி, கல்யாணத்துக்கு சம்மதமா? என தன்மையாய்க் கேட்டார், மனைவியின் முறைப்பை பரிசாய் வாங்கிக்கொண்டு...

நௌ, நோ பிராப்ளம் பா, தையல் போட்ட இடதுதுல இடிச்சுட்டா மட்டும் லைட்டா வலிக்கும், வேற ஒருவலியும் இல்ல,

ஏங்க, கொஞ்சம் சும்மா இருங்க, அதெல்லாம் சரியாப்போச்சு, கல்யாணவிசயம் பேசறப்பத்தான் ஆக்சிடண்ட் அது இதுன்னு,நீ போட்டாவ பாரு ரஞ்சனி.

ரஞ்சனி போட்டோவைப் பார்த்ததும் அசந்துவிட்டாள். பார்பவர் யாரையும் நிமிடத்தில் குளிரவைக்கும் ஆணழகனாய் இருந்தான். ஒரு ஆணுக்கு இத்தனை கவர்ச்சியா? இல்லை தனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா? லதா சொன்னதுபோல் முதலில் ஞாபகம் வருவது ஸ்மாட்னெஸ்தான் என ரஞ்சனி நினைத்துக் கொண்டிருக்க, அருகில் லதாவோ, கேரியர் தான, கோயம்புத்தூர் மில் ஓனர். அந்த கம்பெனி நேம் என்னங்க என ராஜனைப் பார்த்தார்.

ராஜன் மகளின் முக மாற்றத்தை கண்டுகொண்டார். ரேடியோ போல பெனாத்திக்கொண்டிருக்கும் மனைவியை அமர்த்தி மனைவிக்கு மகளை சுட்டிக்காட்டியவர், மனைவியுடன் அமைதியாக நகர்ந்துகொண்டார்.

இதற்கிடையில் ரஞ்சனி கவணிக்காமல் விட்டது, சிறு வார்த்தையைத்தான், அதுதான் கோயம்புத்தூர்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி அலுவலில் பிசியாக இருக்க, லதா மகளை லண்ச்சுக்கு வீட்டிற்கு அழைத்தார். என்றும் இல்லாத திருநாளாக இன்று அன்னை அழைத்திருப்பது வித்யாசமாகப்பட்டாலும், அவரின் குரலில் இருந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் கெடுக்க விரும்பாமல் ஓகே சொல்லிவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் திரும்பக் கூப்பிட்டவர், கிளம்பியாச்சா எனவும் ரஞ்சனிக்கு ஒன்றும் புரியவில்லை, மணி பதினொன்றுதான் ஆகிறது, நான் ஒரு மணி இல்ல இரண்டுக்கு தான் வருவேன், என்னாச்சு, ஆர் யூ ஓகே மா என்றாள். ஓகே, ஓகே எனக்கென்ன, ஐம் பைன் என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் திரும்ப போன் வரவும், என்னம்மா, உங்களுக்கு பொழுது பேலைன்னா அப்பாக்கு போன்பண்ணி விளையாடுங்க, எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு, சோ பிளீ...ஸ் என்றாள் எரிச்சலாக..

லதாவின் குரல் மறுமுனையில் ஒலித்தது, அது இல்ல ரஞ்சனி நம்ம வீட்டுக்கு திருடன் வந்துட்டாம்மா... என்றார். ஆனால் குரலில் பதற்றத்திற்கு பதிலாய் உற்சாகம் இருந்தது.

ரஞ்சனி, என்னம்மா வாட்ச் மேன் என்ன பண்றான், அப்பாட்ட சொன்னீங்களா? திருடன பிடிச்சாச்சா, போலீஸ்கு சொன்னீங்களா?..என்றாள்.

இத்தன கேள்வி கேட்டா எப்படிமா? எனக்கு திணறுது ரஞ்சி, ஒன்னொன்னா கேளு,

என்னமா நீங்க, நீங்க சேஃப் ஆ இருக்கீங்களா?

ஆ.. ஆ.. சரி..ஆ நல்லாதான் இருக்கேன்.

திருடன பிடிச்சாச்சா?

ஆ.. ஆ.. பிடிச்சாச்சுமா. நீ வாயேன்.

சரி இருங்க நான் போலீசோட உடனே வர்றேன் என்ற ரஞ்சனியிடம், போலீஸ்லாம் எதுக்குமா? வீனா பேப்பர்ல போட்றுவானுங்க, வேனாம்மா, நீ,.. நீ முதல்ல வா, அப்பறமா பாத்துக்கலாம் என்றார்.

ரஞ்சனிக்கு குழப்பமாக இருந்தது, எப்போதும் படடப்பாக போசும் தாய் இப்போது ஒவ்வொரு கேள்விக்கும் ஆ .. ஊ.. என யோசித்துக் கொண்டிருப்பது, ஒன்றுமே புரியவில்லை.

விசயத்தைச் சொல்ல தந்தைக்கு அழைத்தாள். ராஜன் போனை எடுத்தவுடன், அம்மா பேசுனாங்களா என்றார். ஆமா என்றவுடன், சரி வீட்டுக்கு வா நான் கிளம்பீட்டேன் என்றவர் போனை துண்டித்துவிட்டார்.

ரஞ்சனி வாசலில் நுழைய, புது ரக ஸ்போட்ஸ் கார் நின்றிருந்தது. ரஞ்சனியின் புருவம் சுருங்கியது. தந்தையின் கார் இன்னும் வந்து சேரவில்லை. யோசனையுடன் உள்ளே நுழைந்தவளின் கால் வாயில் படியில் இடறியது,

ரஞ்சனியை தோளோடு தாங்கிப்பிடித்தான் பவித்ரன். ரஞ்சனியின் கண்கள், தாயின் பொய்யைக் கண்டுகொண்டது.

ரஞ்சனியை நிமிர்த்திய பவித்ரன், ஆர் யூ ஓகே எனவும் தான் ரஞ்சனியின் தையல் போட்ட பகுதியில் பவித்ரனின் கை அழுத்தத்தால், வலி ஏற்பட்டிருப்பதை ரஞ்சனி உணர்ந்தாள்.

வலியை மறைத்து, யா ஐம் ஓகே என்றவள், கம் என பவித்ரனை வரவேற்றாள்.

அங்கே டீபாயில் உணவு பதார்தங்கள் தட்டுகளில் பாதி கொரிக்கப்பட்ட நிலையில் இருக்க, லதாவைப்பார்த்து முறைத்தவள், இதுதான் திருடனாக்கும் எனக் கேட்க, நோ ரஞ்சூ ஆண்டிய திட்டாதீங்க, ஆல் திஸ் ஆர் மை பிளான், உங்களுக்கு ஸ்சாக் கொடுக்கலாம் னு, வேற ஒன்னுமில்ல,

இன்பேக்ட், லதா மா இஸ் சோ இன்னசண்ட் நோ, உங்களுக்கு ரொம்ப பயப்படுறாங்க, என்ன? அம்மாவையே மிரட்றதா? கேக்க ஆள் இல்லனு நினப்பா? நான் இருக்கேன் நீங்க கவலைய விடுங்க ஆண்ட்டி என்றவன், என்ன ஆண்ட்டி நீங்க சொன்னதெல்லாம் கரைட்டா சொல்லீட்டேனா? எனவும் லதாவிற்கு பகீரென்றது. அய்யய்யோ என நினைத்து மகளைப் பார்த்தார் அவர்.

ரஞ்சனி பவித்ரன் பேசுவதை ஏதோ ரசனையான சினிமாபோல் மென்புன்னகையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஆண்ட்டி நம்ம டீல்படி, நான் ரஞ்சனிய கண்டிச்சாச்சு, அதேமாதிரி நீங்களும் அங்கிள் வந்ததும் பையன் நல்லவன், வல்லவன், ரஞ்சனிய கண்டிக்கிற அளவு பராகிறமசாலின்னு சொல்லி, கல்யாணத்த ஓகே பண்ணணும், ஓகே எனவும், லதாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ரஞ்சுமா அம்மா அப்படி சொல்லமா, மாப்பிள்ள விளையாடுறாரு என சண்டைக்காரனிடமே சரணாகதி ஆனார் லதா.

ஆண்ட்டி டோண்ட் லை என லதா முன் விரலைநீட்டி பவித்ரன் மிரட்ட, ரஞ்சனி வாய்விட்டு சிரித்துவிட்டாள்.

திரும்பிப் பார்த்து,ரஞ்சனியின் சிரிப்பை அளந்தவன், அவளருகில் சென்று அமர்ந்தான்.

லதா தப்பித்தோம் பிழைத்தோம் என கிச்சனுக்குள் ஓடிவிட்டார், மகளுக்கு ஜூஸ் எடுத்து வர.

ரஞ்சூ, யூ ஆர் அம்சல்யூட்லி பியூட்டிபுள் என்றான் பவித்ரன்.

ரஞ்சனிக்கு அவனது நேர்த்தியான பாவனைகளும், பேச்சும் மிகவும் பிடித்துப்போனது. சொல்லப்போனால் இவனுடன் இருந்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.

என்ன பதிலே காணோம், மேடம்!!! ரஞ்சூ டால் என்றான்.

ரஞ்சூ டால், ம்... நான் என்ன சொல்றது, நீங்க புகழ்ந்து தள்றீங்க, சோ உங்க தள்ளு முல்லுல மூச்சு முட்டுது பா..என்றாள்.

ஜோக்கு, எனக்கு சிரிப்பே வரல, என்ன பேசுறதா? ஒரு ஸ்மார்ட் ஹேண்ட்சம், படிப்பாளி,ஸ்விம்மர் ஸ்டேட் சேம்பியன், இத்தன தகுதி இருக்கே, நான் உன்ன புகழ்ந்து தள்ளி மூச்சுமுட்ட வைச்ச மாதிரி, வை டோண்ட் யூ டிரை ? என்றான்.

ரஞ்சனிக்கு சிரிப்பு அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வந்து கொண்டே இருந்தது, நா எதுக்கு தனியா உங்கள புகழனும், அந்த வேலையத்தான் நீங்கலே சேத்து பாத்தமாதிரி இருக்கே!.

அது வந்து ரஞ்சூ, என்ன பத்தி ஒவ்வொரு விசயமா ஒவ்வொரு நாளும் சொல்லலாம், பட் டைம் வேஸ்ட், ஒரே நாள்ல சொல்லீட்டா கண்டினுட்டி மிஸ் ஆகாது பாரு, இதே மாதிரி உன்ன பத்தி சொல்லு? கம் குவிக் என கட்டளையிட்டான்.

பவித்ரனின் அழைப்பு பண்மையிலிருந்து ஒருமைக்கு தாவியது, அதை அவளறியவில்லை, உரிமைக்காக மாற்றினானா? அடுத்தடுத்த காரியங்களுக்காக மாற்றினானா? அதை அவனே அறிவான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா ?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒன்பதாம் பாகம்...

ராஜன் சிறிது நேரத்தில் வந்துவிட்டார். பவித்ரனை பார்த்த உடன் அவருக்கு பிடித்துவிட்டது. ரஞ்சனியுடன் சிரிக்க சிரிக்க பேசினான். கேரம் செஸ் விளையாண்டார்கள். லதாவிற்கு அமைதியாகவே இருக்கும் வீடு இன்று, இனிய பேச்சுக்களில் அழகாய் மாறியதாய் கண்டார்.

லதாவிற்கு ரஞ்சனி ஒன்றை பெண் என்பதால் வீடு படு அமைதி, இப்போது, அவளை வெறுப்பேற்ற, சிரிக்க வைக்க, சீண்ட விளையாட ஒருவன் வந்து வீட்டை அழகாக்கியதும், மகளுக்கு மாப்பிள்ளையாக, பவித்ரனை அவர் பார்த்ததைவிட, தானும் அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றிருந்தால், இதுபோல் அரட்டைகளும் சப்தமும் தினமும் அரங்கேறி, வீடும் அழகாய் அமைந்திருக்குமோ என ஏங்கினார். பவித்ரனை பார்த்தவுடன் மகனை நாம் பெறவில்லை என்ற ஏக்கம் அவருக்கு தடுத்தும், இத்தனை வருடங்கள் சென்று வலித்தது.

சத்யாதேவியிடம் பேசி, மாப்பிள்ளையை மிகவும் கலகலப்பாக, பழகுகிறார். மிகவும் நல்ல பிள்ளை, சிரிக்க சிரிக்க பேசுகிறார் என லதா சொல்லவும், சத்யதேவிக்கு ஒன்றுமே புரியவில்லை.

பவித்ரனையும், உங்க பேமிலியும் எங்களுக்கு பிடிச்சிருக்கு, எங்களையும் எங்க பிடிச்சதால தான் பவித்ரன நீங்க அனுப்பீருக்கீங்கனு நினைக்கிறேன்.

நீங்க முறைப்படி நல்ல நாள் பாத்து சென்னா நிச்சியம் பண்ணலாம் என ராஜன் பேசினார்.

சரிங்க சம்பந்தி, நீங்க சொன்னபடியே செய்யலாம். நானும், தீரனும் சேர்ந்தே வரலாம்னு பிளான் பண்ணேன், பட் பவித்ரனுக்கு இந்த மாதிரி சம்மிரதாயங்கள்ல, சம்மதமில்லை, ஓல்டு பேஷன்னு தனியா வந்துட்டான் என மகன் தனியாய் வந்ததை சமாளித்தார்.

அதனால என்ன சம்பந்தி, சாதாரணமா வந்ததால தான, ரஞ்சனிய பத்தி அவரும், அவரப் பத்தி ரஞ்சனியும் புரிஞ்சுக்க முடிஞ்சது, இதே ஒரு பொண்ணுபாக்குற நிகழ்ச்சியா வைச்சிருந்தா, ஊர் முன்னால கொழுபொம்மையா இருப்பாங்களே தவிர, நட்பு இப்படி உடனே அமையாது, எல்லாம் நல்லதுக்கு தான், என்றார் ராஜன்.

பேசிவிட்டு போனைவைத்த சத்யதேவிக்கு ஒரே குழப்பம். வார்த்தைக்கு வார்த்தை, மாப்பிள்ளை , என்ற அளவிற்கு அங்கே என்ன செய்தான். என்னிடம் பேசினால் யெஸ் மேடம், ஓகே மேடம், இதைவிட்டால் கோபப்படுவான் என பிள்ளையைப்பற்றி நினைத்தவர், எப்படியோ ரஞ்சனியை நன்றாக வைத்துக் கொண்டால் சரிதான் என முடித்துக்கொண்டார்.

ரஞ்சனி அலுலகம் விட்டு வந்தது முதல் பவித்ரன் அவளைவிட்டு ஒரு இன்ச் நகரவில்லை, கோந்துபோல ஒட்டிக்கொள்ளவுமில்லை.

அவளது கடையைப்பற்றி தெரிந்து கொண்டான். அவனது தொழிலைப் பற்றி பரிமாரினான். தோழர்கள் , பள்ளி , கல்லூரி பற்றி பேச்சு நீண்டது. லதாவும், ராஜனும் சிறிது நேரம் பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டனர்.

ரஞ்சனியுடன் லதாவிடம் சென்று வேண்டுமென்றே வம்பிழுத்தான். லதா பவித்ரனை மகன்போலவே பாவித்ததால், அவரும் விட்டுக்கொடுக்காமல் பேசினார்.

பவித்ரன், ஆண்ட்டி ரஞ்சூ மாமா மேக்கா இருக்கு, உங்க மேக் இருக்கா ஆண்ட்டி என்றான்.

என்ன மேக் மாப்பிள்ள புரியலயே, அதுதான் ஆண்ட்டி ரஞ்சனிக்கு சிஸ்டர்ஸ் இருக்கா எனவும், இல்லையே மாப்பிள்ள, என்றார் லதா.

ரஞ்சனியிடம் கண்ணடித்தவன், சரி ஆண்ட்டி அப்போ உங்க மேக் ஒன்ன ரெடி பண்ணுங்க பிளீஸ் எனக்காக எனவும் ரஞ்சனி வாயை மூடிக்கொண்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே ஓடி விட்டாள்.

ரெடி பண்ணணுமா என சப்பாத்தி சப்ஜியை கிளறிக்கொண்டு யோசித்தவர், பொறிதட்ட பவி என திரும்பி திட்ட எத்தனிக்க, அவனும் ரஞ்சனியின் பின்னே ஓடிவிட்டான்.

ராஜன் டீவிப் பார்த்துக் கொண்டிருக்க, ரஞ்சனி சிரிப்பை அடக்கிக்கொண்டு சமையலறையிலிருந்நு வந்தவள், அமைதியாக அமந்து டீவி பார்த்தாள்.

சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டமான சிரிப்பில் பவித்ரனும் ராஜனைக் கண்டதும், சிரிப்பை கட்டுப்படுத்திய வாரே ரஞ்சனி அருகில் அமர்ந்தான். லதா சிறிது நேரத்தில் பூரிக்கட்டையுடன் வர, ராஜனைக் கண்டதும் அமைதியானார்.

ராஜன் என்னவென லதாவைக் கேட்க, மாமா கேக்கிறார்ல சொல்லுங்க ஆண்ட்டி எனவும், லதா பவித்ரனை என்ன பண்ணுவது என தெரியாமல், ஒன்றுமில்லை என்றார்.

நானே சொல்றேன் அங்கில் எனவும், லதாவும், ரஞ்சனியும் இவன் அடங்க மாட்டான் என்ற மனநிலையில் இருக்க, அவன் வேற ஒன்னுமில்ல அங்கில் பூரி கேட்டேன், நத்திங் என முடித்தான்.

சரியான பொய்யன் என இரு பெண்களும் அவனை பார்க்க, ரஞ்சனியிடம் கண்ணடித்தவன், லதாவிடம் போச்சு சப்ஜி கருகிற வாட வருது எனவும், அவர் அதை உண்மை என நினைத்து வேகமாய் உள்ளே சென்றார்.

இரவு உணவு கலகலப்பாக முடிந்தது, பவித்ரனை வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் வந்த ரஞ்சனிக்கு, அவன் சத்தம் இல்லாமல் நிசப்தமாகத் தோன்றியது.

அறையில் வந்து படுத்த ரஞ்சனிக்கு, பவித்ரனுடனான, சந்திப்பு இன்றுதான் முதல்நாள் என்றால் நம்ப முடியவில்லை. கேரம்போடில் காய்களை வேண்டுமென்றே எடுத்து ஒழித்து வைத்துக்கொண்டது, லதாவிற்கு ஏதுவாய் காய்களை நகர்த்தி அவருக்கு உதவியது என எதை நினைத்தாலும், பவித்ரனே நியாபகம் வந்தான். மென்புன்னகையில் தனது கைககளைப் பார்த்தவள், கல்யாணத்திற்கு பார்க்க வந்திருக்கும் பெண் என்ற என்னமே இல்லாமல், தன் கையை தயக்கமே இல்லாமல் பிடித்த பவித்ரனின் கைகள் ஞாபகம் வந்தது.

பவித்ரனும் அவனது சென்னை வீட்டில் உறங்காமல் யோசித்துக்கொண்டிருந்தான். நாளைய தினத்தில் முடிக்க வேண்டிய காரியங்களை நினைத்து, ஒத்திகை பார்த்தான்,

தன் முன்னே இருந்த காகிதத்தில், ஒன்று என்ற எண்ணிற்கு நேராக, கல்யாண சம்மதம் என எழுதி இருந்தது, அதை டிக் செய்தான். இன்னும் ஆறு நாட்கள் உள்ளது என கணக்கிட்டவன், அடுத்தடுத்து நிகழத்த வேண்டியதை நினைத்துப் பார்த்தவன், ஏழாம் நாளில் ரஞ்சனியை வீழ்த்த திட்டமிட்டவன், கண்களில் இரையை வீழ்த்திய புலியின் வெற்றி தெரிந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி தனது போனை எடுத்துப் பார்த்தாள். அதில் பவித்ரனிடமிருந்து காலை வணக்கம் தாங்கிய செய்தி வந்திருந்தது. தனது என்னை அவன் தெரிந்து கொள்ள நேற்று செய்த சேட்டையை நினைத்தவள் இதழில் புன்னகை மலர்ந்தது.

கையிலிருந்த போனைப் பறித்து, உன்னோடதா என்றான். ரஞ்சனி ஆம் எனவும், இதில வைரஸ் அட்டாக் ஆகாம இருக்க, ஆண்டி வைரஸ் போட்டாச்சா என்றான். இது செல்வ் மேக் எனவும், ஓ என்றவன், மடமடவென அவன் எண்ணுக்கு பேசிக்கொண்டே மிஸ் கால் கொடுத்துவிட்டு, என்னிடம் தந்தவன், இனி டெய்லி அட்டாக் தான், எப்படி தாக்கு பிடிக்குதுன்னு பாப்போம் என்றான், போலியாக முறைத்துக்கொண்டு. அதை நினைத்தவள், இதுதான் மெசேஜ் அட்டாக்கா, என சிரித்த வண்ணம் எழுந்தாள்.

குளித்து தயாராக கீழே வந்தவள், காதில் முதலில் விழுந்தது அவன் அசரடிக்கும் சிரிப்புதான். இட்லியை சாப்பிட்டுக்கொண்டே, லதாவிடம் ஜோக்கடித்துக்கொண்டிருந்தான். ரஞ்சனி வரவும், குட்மார்னிங் ரஞ்சூ என்றவன், நல்ல தூக்கமா என்றான். ம் எனவும் சம்பிரதாயப் பேச்சு முடிந்ததென்று, லதாவிடம் திரும்பியவன் ரஞ்சனியை கண்டு கொள்ளவே இல்லை.

ரஞ்சனி சாப்பிட்டு முடித்தும், அவன் ஒருவாய் சாப்பிடவும் லதாவிடம் அவன் கல்லூரி கதையை அளப்பதுமாக இருந்தான். ராஜன் வரவும், அவருடனும் அதேபோல் குட்மானிங் என்றவன், அடுத்து அவரையும் கண்டுகொள்ளவில்லை.

ரஞ்சனி பாய் மா, நான் கிளம்புறேன் என சிறிது சத்தமாகவே லதாவிடம் சொல்லிவிட்டுச் சென்றாள். லதா சரிமா என்றார்.

பவித்ரன் சீயூ அட் லண்ச் என்றவன், லதாவிடம் விட்ட கதையை தொடர்ந்தான்.

ரஞ்சனிக்கு இவன் இவ்வளவு காலையில் தன்னைப் பார்க்கத்தான் வந்தானா? அல்லது அம்மாவிடம் கதை பேசவா? யோசித்த வண்ணம் காரிலேறி அமர்ந்தவள், இன்பமாக அதிர்ந்தாள். அவளுக்குபிடித்த வாசம் காரில் மிதமாக ரசிக்கும் வண்ணம் போடப்பட்டிருந்தது.

ஒருமுறை ஆழமாக மூச்செடுத்தவள், கண்ணை மூடி ரசித்தாள். கண்ணை திறந்ததும் பக்கத்தில் பவித்ரன் அமர்ந்திருந்தான்.

ஹே, எப்படி மேசிக்கா என்றாள் ரஞ்சனி. எப்படி என்னோட பர்பியூம் தெரியும், திஸ் இஸ் டூ குட் என மறுமுறை மூச்சை இழுத்து வாசம் பிடிக்க, பவித்ரன் அவனது கண்ணத்தை அருகே கொண்டு சென்றான்.

ரஞ்சனி சிரித்து என்ன என சற்று பின்னால் நகர்ந்தாள், கிவ் அண்டு டேக் பாலிசி ரஞ்சூ, இது தெரியாம எப்படி பிஸ்னஸ் பண்ற, நான் சொல்றோன், நல்ல கேட்டு பாளோ பண்ணிக்க என்றவனிடம்

ரஞ்சனி போலியாக முறைத்த வண்ணம், சொல்லுங்க சரியா இருக்கானு செக் பண்றேன் என்றாள்.

சரியாதான இருக்கும், நான் பர்ஃபியூம் தந்தேன், நீ பே பண்ணீடு என்றவன் கண்ணத்தை காட்டி நிற்க, கண்ணத்தில் கிள்ளி வைத்துவிட்டாள்.

பிராடு என அவன் கத்த, நீங்க தான கிள்ளுறதுக்கு கண்ணத்த காட்டுணீங்க, இப்போ பிராடுன்னா, வாட் கேன் ஐ டூ? என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள்.

ரஞ்சனியைப் பார்த்து பல்லைக் கடித்து போலியாக முறைத்தவன், கிளம்புறேன் என இறங்கப்போக இத்தனை நேர விளையாட்டு சட்டென மறைய, நான் டிராப் பண்ணவா என்றாள்.

வேண்டாம் என இறங்கிக்கொண்டான். ரஞ்சனிக்கு என்னாச்சு என இறங்கிபோச மனம் சொன்னாலும், பழக்கமில்லாத ஒன்றை அவளால் செய்ய முடியவில்லை.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி தனது அலுவல்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, கேமிரா அறையிலிருந்து தகவல் வந்தது, தனது கணினியில் கனைக் செய்து கேமிரா பதிவை வைவ்வாக பார்த்தாள்.

ரவியிடமிருந்து கைப்பற்றிய, பேனா வடிவ லைட்டர் கடையின் முன் காட்சிப் பொருள்களுடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்தது. கடையை எரிக்க நினைத்தவன் வந்தால், பிடிப்பதற்கு அது பொறி.

அழகிய கண்ணாடியால் செய்யப்பட்ட அந்த பொருளை பார்த்தவர்கள் யாரும், அந்த பேனா என்ன விலை என்றுதான் கேட்டுள்ளார்கள். எனவே யார் மீதும் சந்தேகம் எழவில்லை. இன்று அதை ஒருவன் நீண்ட நேரம் பார்ப்பது தெரிகிறது. ஆனால் அவன் அந்த லைட்டரை நெருங்கவில்லை, அதைத்தான் ரஞ்சனி பார்த்துக்கொண்டிருந்தாள்.

எப்போதும் போல் கடைப்பெண்ணை அவனிடம் அனுப்ப, அவளிடம் ஏதோ சொன்னவன் மடமடவென சென்றுவிட்டான். அவன் தாடியும் கருப்பு கண்ணாடியும், அவனை சரியாக ரஞ்சனியால் பார்க்க முடியவில்லை.

அவனிடம் பேசிய பெண்ணை உடனடியாக மாடிக்கு அழைத்தவள், விவரம் கேட்டாள்.

ஏதாவது வேணுமா என்று கேட்டதற்கு, அவன் இந்த கண்ணாடி லைட்டருக்கு சொந்தமான கவர் இங்க இருக்கிற ஒருத்தர்ட தான் இருக்கு, கெட் சூன், அப்பத்தான், உங்களோட இந்த லைட்டர விக்க முடியும் என்றதாக அப்பெண் சொல்லிவிட்டுச் சென்றாள்.

அப்பெண் சென்றவுடன்,பவித்ரன் ரஞ்சனி அறையில் நுழைந்தான். ரஞ்சனி குழப்பத்தில் அமர்ந்திருந்தாள், என்ன ரஞ்சூ செம மூடா எனவும் நிமிந்து பார்த்து புருவத்தை சுருக்கினாள்.

என்ன பா, மூடு அவுட்டா இருந்தயா, ஜஸ்ட் மாத்தி கேட்டேன், அதுக்கெதுக்கு இப்படி, சரி வா வெளிய போய் லண்ச் சாப்பிடலாம் என பவித்ரன் அழைத்தான்.

ரஞ்சனி பவித்ரனைப் பார்த்து, நீங்க கோயம்புத்தூர் ரைட், எனவும், ஆமாங், எனங் நீங் தெரியாத மாதிரி கேக்குறீங் என வழவழத்தான்.

உங்களுக்கு ஒருகிப்ட் என அந்த கண்ணாடி லைட்டரை அவன் முன் நீட்டினால், பவித்ரன் அசராமல் அதை வாங்கியவன், முகம் மாறாமல், நா என்ன சின்ன பிள்ளையா பேனா தர்ற மை கேள், என்றான்.

ரஞ்சனி அதை நம்பிவிட்டாள். நடந்துமுடிந்த கதை ஆதி முதல் அனைத்தும் ஒன்று விடாமல் கூறியவள், பவித்ரனை தவறாக சந்தேகப்பட நேர்ததாக கூறினாள்.

பெருந்தன்மையாய் அனைத்தையும் ஏற்றுக் கொண்டான், அந்த லைட்டர் உட்பட, அழகாய் நிலமையை சிரித்தே சமாளித்தவன், நடந்த களோபரத்தில் ரஞ்சனியை அழைக்க வந்தவன், அவளை அழையாமலே விடை பெற்றுக் கிளம்பினான்.

பலியாவாளா? பலி கொடுப்பாளா?
 
Top