All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பத்தாம் பாகம்...

நடந்ந நிகழ்வு பவித்ரனுக்கு திரும்பத் திரும்ப ஞாபகம் வந்தது. தனது வீட்டில் அமர்ந்து, முன்னிருந்த எழுத்து மேசைமேல் அந்த லைட்டரை வைத்தான். உங்களுக்கு ஒரு கிப்ட் என்ற அவளின் வார்த்தை திரும்பத்திரும்ப ஞாபகம் வந்தது. எப்படி என் மீது சந்தேகம் எழுந்தது என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டவன், நினைவில் நீங்க கோயம்புத்தூரா என ரஞ்சனி கேட்ட கேள்வி விடை தந்தது.

ஆனால் எப்படி அவள் கோயம்புத்தூர் என கண்டறிந்தாள், என பவித்ரனால் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் வேறு எதையெல்லாம் கண்டறிந்துள்ளாள் என்றும் தெரியாததால், சர்வ ஜாக்கிரதயாக நடந்துகொண்டு, வந்ததை சத்தமில்லாமல் நிகழ்த்த முடிவெடுத்தான்.

ரஞ்சனி, தனது வீட்டில் பவித்ரனை சந்தேகித்த தனது அறிவை திட்டிக்கொண்டிருந்தாள். பவித்ரன் ஒரு நாள் முழுவதும் தன்னை சந்திக்க வராதது குறித்து வருத்தமுற்றாள். அவளே பவித்ரனை அழைத்து பேசினாள். சம்பிரதாயத்திற்கு பேசியவன், நாளை சந்திப்பதாக கூறி வைத்துவிட்டான்.

நடத்த வேண்டியதை நாளையே முடித்துவிட்டு ஊருக்கு கிளம்ப திட்டமிட்டான் பவித்ரன்.

ரஞ்சனியின் திருமணம் ஒரு மாதத்தில் என முடிவு செய்யப்பட்டது. திருமணம் கோயம்புத்தூரிலும், ஒருவாரம் கழித்து சென்னையில் ரிசப்சன் எனவும் முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு ஒருவாரமே இருப்பதால், திருமணத்திற்கு முதல்நாள் வரும் சொந்தங்களுடன் நிச்சயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ரஞ்சனி திருமணமாகப் போவதால், தனது பணிகளுக்காக, ராஜாவை நியமித்தாள். தனது வேலைகளையும், கடையின் விதிமுறைகளையும் ஒவ்வொன்றாக சொல்லிக்கொடுத்தாள்.

மதியம் உணவு நேரம் தாண்டியும், அவளும் உண்ண செல்லவில்லை, அவனையும் விடாமல் ஒவ்வொரு வேலையாக சொல்லிக்கொண்டிருந்தாள்.

மேடம் லண்ச் என ராஜா ஞாபகப்படுத்தியும், வேலையப் பாருங்க, எல்லாத்தையும் குப்பை மாதிரி அங்கங்க ஸ்டோர் செய்து வைச்சிருக்கீங்க, ஒவ்வொரு பிராட்கட், டீலர் உடைய அக்கௌண்டும் தனித்தனியா வைக்கணும், பழைய வரவு செலவெல்லாம் இன்னும் ஒரே வாரத்துல முடிச்சிடுங்க, என அடுத்தடுத்து கட்டளைகளை ஊழியருக்கு பிறப்பித்தவண்ணம் இருந்தாள் ரஞ்சனி.

இதை ஒருவாரத்தில் முடிங்க, இதை நாளை முடிங்க என அவளின் பரபரப்பு கடையின் மேல்மட்ட ஊழியர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

முடிவு, ஏன் இவ்வளவு அவசரப்படுறாங்க என்ற கேள்விக்கு விடையாக, கல்யாண செய்தி கசிய ஆரம்பித்தது. ரஞ்சனி இனி கடைக்கு வரப்போவதில்லை என்றும். அதனால் புதிதாக வருபவர்களுக்காக, அனைத்தும் வரிசைபடுத்தப்படுவதாகவும், ஆபீஸிலிருந்து, கேட் செக்யூரிட்டி வரை அனைவரும் முணுமுணுத்தனர்.

பவித்ரனின், அன்றைய வருகையும் அதற்கு தூபம் போட்டது.

மேடத்துக்கு கல்யாணமா, பாவம் மாப்பிள்ளை என்று சொன்னவர்கள்தான் அதிகம். பவித்ரனை பார்த்தவர்கள், அவனது அழகைப் பற்றி புகழ்ந்து, பார்காதவர்களை வெறுப்பேற்றினர்.

ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி, கல்யாணத்திற்காகவும், அதனால் கிடைக்கப்போகும், போனசிற்காகவும்.

கடையின் பிளம்பருக்கு காலையில் போன் செய்து வரச்சொன்னாள் ரஞ்சனி, அரைமணியில் வருகிறேன் என்றவன், அரைநாள் ஆகியும் வரவில்லை.

அவன் இன்னும் அரைமணிநேரத்துல வந்து சேரணும், இல்லனா அவனோட காண்ட்டாக்ட கட் பண்ணுங்க, என்றவள் அடுத்த வேலைக்கு சென்றுவிட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் பிளம்பரிடமிருந்து போன் வந்தது, ஹலோ எனும் முன் கட்டானது, ரிசீவரை வைத்தவுடன் மீண்டும் கால் வந்து மீண்டும் கட்டானது.

அடுத்த போன்காலை எடுத்தவள் லைன் கிடைத்தவுடன் திட்ட ஆரம்பித்துவிட்டாள்.

உன்னோட பேசுறது ஒன்னுதான் என்னோட வேலைன்னு நினச்சியா? இன்னும் அறைமணிநேரத்துல வந்து சேர்ற, இல்ல காண்ட்ராக்ட கேன்சல் பண்ணீருவேன், பேன வை என முடித்தாள்

மறுமுனையில் பவித்ரன் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் கடையின் கார்பார்கிங்கில் இருந்து ரஞ்சனியை அழைத்திருந்தான். அப்போதுதான் பிளம்பர் என ரஞ்சனி திட்டியது. சரியென தானே மேலே சென்று அவளை அழைத்துச்செல்ல போனான்.

ரஞ்சனியின் அறையில், லேப்டாப்புடன் சிலரும், போனும் கையுமாக சிலரும், அவளிட்ட பணியை அவசர அவசரமாக செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவரையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே சுழற்றிக்கொண்டிருந்தாள்.

அறையின் வெளியே இருந்த பர்னீசர் ஹாலில் சிலர் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர்.

பவித்ரன் ரஞ்சனி அறையில் நுழைய, அவனை நிமிர்ந்து பார்த்தவர்கள், அடுத்த வினாடி வேலையில் மூழ்கினர்.

கணினியல் கவனமாக இருந்தவளின் முன்னே சொடுக்கிட்டவன், ரஞ்சனி என அழைத்தான். அனைவருக்கும் பகீரென்றது, தங்களை ஆட்டி வைப்பவளை ஒருவன் சொடுக்கிட்டு அழைத்து ரஞ்சனியை அவமானப்படுத்தியதாக கருதினர்.

ரஞ்சனி பவித்ரனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். வேலை பளு, அவன் சொடுக்கிட்டு அழைத்தது எதுவும் அவளுக்கு தெரியவில்லை. சர்ப்ரைஸ்ஸா இருக்கு, ஆர் யூ ஓகே, கோபமில்லையே என இரண்டு நாட்கள் அவனை பார்க்காமல் இருந்த தவிப்பு, அவளையறியாமல் வெளிப்பட்டது.

அனைவரும் தங்களையே பார்ப்பதை கண்டவள், ஓகே காய்ஸ் மணி மூணுக்கு மேல ஆகுது, யூ ஆர் ஆல் டேக் யூவர் டைம் பார் லண்ச், என்றாள்.

அங்கிருந்த அனைவரும் அப்பாடா என கிளம்பிச்சென்றனர். பவித்ரனைப் பற்றி சலசலத்துக்கொண்டே சென்றனர்.

எதுவா இருந்தாலும் மேடம் வெட்டு ஒன்னு தூண்டு இரண்டுனு, பேசுவாங்க, இப்ப என்ன? எல்லார் முன்னாடியும் சுண்டி கூப்புடுறாங்க, அவங்க சிரிச்சிட்டே திரும்புறாங்க, என ஒரு பெண் தன் தோழியிடம் கேட்க, அப்பெண்ணோ அதுதான் காதல் போல , மேடம் அதுல தொபக்கடீன்னு குதுச்சுட்டாங்க போல, என்றாள் கேலியாக!
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன பவி நேத்து முழுதும் பேசல, நான் ,.. ஐ ப்வீல் யூ ஹர்ட், பிகாஸ் ஆப் மை டாக், என்றாள் ரஞ்சனி, பவித்ரனிடம் மனதை மறைக்காமல்.

ப்சூ அத விடு என்றவன், ஒன்லி ப்வீல் மட்டுந்தான் பண்ணியா எனக்கேட்டான் ரஞ்சனியை கூர்ந்து பார்த்து.

வேற என சலிக்காமல் அவனை பார்த்தவள், ஆமா என்ன இப்படி போன் கூட பண்ணாம இந்த நேரத்துல வந்திருக்கீங்க என பேச்சை மாற்றினாள்.

அதற்கு பவித்ரன் பலமாக நகைத்தான். ரஞ்சனி என்னவென பார்க்க, நீதான, அரைமணில வர்லைனா, காண்ட்ராக்ட் கேன்சல்னு சொன்ன, சோ பயந்து ஓடிவந்த்ட்டேன். உன்ன கூட்டீட்டு ஓடிபோகத்தான் வர்றியா என கை களை அவள்புறம் நீட்டினான்.

ஓ சாரி, நீங்கனு தெரியாம, ஓ மைகாட், போன்லயே சொல்லி இருக்க வேண்டியதுதான என ரஞ்சனி அவனை பார்க்க, கைகளை இன்னும் தாழ்த்தாமல் வைத்திருந்தவனை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.

பவித்ரன் எதுவும் பேசவில்லை, கைகளையும் நீக்கவில்லை, அங்கே அவஸ்தையான மௌனத்தை உணர்ந்தவள், பவி பிளீஸ், இது ஆபீஸ், என்றாள்.

அவன் கண்டுகொள்ளவில்லை, அவளின் கண்களை பாத்துக்கொண்டே மென்புன்னகையில் இருந்தவன், சிலைபோல நின்றான்.

ரஞ்சனி, விட்டுக்கொடுத்தாள், விடமாட்டீங்க என சிரித்துக்கொண்டே அவன் கைகளில் தனது வலக்கரம் கொடுத்தாள்.

விடமாட்டேன், நினைக்கிறத முடிக்கிறவரை என்றான். முன்னதை வெளிப்படையாக, பின்னதை தனக்குத் தானே செல்லிக்கொண்டவனாய்.

வா என பிடித்திருந்த கையை பிடித்திழுத்தான் பவித்ரன். ஹே!! எனக்கு வொர்க் இருக்கு என்றவளை அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவளை கைபிடித்து அழைத்து வந்துகொண்டே இருந்தான், அவனது குறிக்கோள் அவனை தூண்டியது.

சிரித்துக்கொண்டே, சிறிது அவஸ்தையாக கையை எடுக்க முயன்றவள், முயற்ச்சி எடுபடவில்லை. வேறுவழியின்றி சிரித்துக்கொண்டே கடையில் வேலைபார்ப்பவர்களை சமாளித்துக்கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.

கடையின் முன் பகுதியில் உள்ள விநாயகரை சுத்தம் செய்து கையில் திருநீரை எடுத்துக்கொண்டு திரும்பிய ராமசாமியின் எதிரில் அவர்கள் வந்தனர்.

பவித்ரன் ரஞ்சனியின் கையை உரிமையுடன் பிடித்துக்கொண்டு கடையிலிருந்து வெளிப்பட்டான். அவர் யோசனையாய் ரஞ்சனியை பார்த்தார். ரஞ்சனியும் எதிரில் அவரை பார்த்தவள், ஐயோ, மானத்த கப்பல் ஏத்தாம விடமாட்டார்போல என எண்ணியவளாய், பவித்ரனை ராமசாமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.

வருங்கால கணவன் என ரஞ்சனி அறிமுகப்படுத்த, ராமசாமி மிகவும் சந்தோசம் கொண்டார்.

அப்போதும் ரஞ்சனியின் கையை விடாமல் பிடித்திருந்த பவித்ரனை கண்டவர், எப்பவும் இப்படியே இணைபிரியாம இருக்கணும் என வாழ்த்தி ரஞ்சனிக்கும் பவித்ரனுக்கும், தனது கையிலிருந்த திருநீரை, ஆசீர்வாதமாக நினைத்து பூசி விட்டார் பெரியவர்.

பவித்ரன் மனதுக்குள் நகைத்துக்கொண்டான். நானா இவளுடனா? சை என நினைத்தவன், அவரிடம் நன்றி கூறி விடைபெற்றான், ரஞ்சனி சகிதம்.

விதி வலியது என்பதை அவன் நோக்கும் நாள், நாளை . அதை அவன் அறிந்திருந்தால், ரஞ்சனியை சந்திக்கவே சென்னை வந்திருக்க மாட்டான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் ரஞ்சனியை அழைத்துக்கொண்டு பிரபல, நகைக்கடைக்கு வந்திருந்தான்.

ரஞ்சனி புருவம் உயர்த்தி பவித்ரனை பார்க்க, எதுவும் வாங்கித்தர மாட்டேன், ஜஸ்ட் சுத்திபாக்கத்தான், வா பார்ப்போம் என சொன்னதும், அடக்கப்பட்ட சிரிப்பில் அவனை பார்த்தாள் ரஞ்சனி.

முதல் தளத்தில் தங்கமும், மேல்தளத்தில் வைரமும் இருந்தது. உள்ளே சென்றதும், என்ன? உங்க கடைய விட சின்னதா இருக்கா என வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

அது நகரத்தின் மிகப்பெரிய நகைகடைகளில் ஒன்று. ரஞ்சனி பவித்ரனை பார்த்து நமட்டுச்சிரிப்பில், ஆமா ரொம்ப சின்னதுல்ல, ஒன்னு செய்களேன், இந்ந சின்....ன கடைய எனக்கு வாங்கித்தர முடியுமா, உங்க கல்யாண கிப்ட்டா? ம்.. எனக் கேட்டவள் பவித்ரனைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தாள்.

ரஞ்சனியின் கண்சிமிட்டலில் முதன்முறை தடுமாறினான். சில நொடிகள் சிலையானான். என்ன சார் இந்த சின்ன்ன கடைய கேட்டதுக்கே ப்ரீஸ் ஆயிட்டீங்க, உங்க வுட் பீக்கு இது கூட இல்லியா என அவள் உதட்டை குவித்து வேண்டுமென்றே பதிலுக்கு வம்பிழுத்தாள்.

ரஞ்சனி கேலியாகத்தான் இதைச் செய்தது, ஆனால் பவித்ரன், அவளது கண்ணசைவிலும், உதட்டசைவிலும், இன்ப அவஸ்தையாய் உணர்ந்தான்.

அவனது மோன நிலையை, கடை ஊழியர் களைத்தார். அவர் என்ன சார் பாக்குறீங்க என கேட்க, அவன் சற்று தெளிந்து, டைமண்ஸ் என்றான்.

அது மாடியில் எனவும், இருவரும் படி ஏறிச் சென்றனர். எதுவும் வாங்கிக்கொடுக்க போறது இல்லைனு சொன்னீங்க என ரஞ்சனி கேட்க, இப்பவும் நான் ஜஸ்ட மீடியேட்டர்தான், சொன்னது தேவி அம்மா என்றான் அவன்.

ஓ அத்தையா? அவங்க என்ன பாக்காமலே நகை எல்லாம் வாங்கித்தந்து பாசத்த காட்றாங்க, என்ன டிரைவர் தான் என அவனை ஒரு பார்வை பார்த்து வேண்டுமென்றே நிறுத்தினாள், பவித்ரன் ரஞ்சனியை கூர்ந்து, டிரைவர் தான் என கூறி, அடுத்து பேச அவளை ஊக்கினான்.

பிட்டுதான் பாஸ் என விளம்பர தொனியில் முடிக்க, படி ஏறிக்கொண்டிருந்தவன், அப்படியே நின்றான். அது ஒரு குறுகலான படி.

மேலே இரண்டு படிகள் ஏறியவள், பக்கவாட்டில் பார்க்க பவித்ரன் வராததால் திரும்பிப் பார்க்க, பவித்ரன் அவளது இடையில் கைவைத்து அப்படியே நின்ற மருங்கில் தூக்கினான்.

ஹே!ஹே! என்ன பண்றீங்க என்றாள், சத்தமில்லாமல் அவனிடம் , காரணம் கீழேயும் மேலேயும் உள்ள கூட்டம்.அப்படியே இரண்டு படிகள் ஏறியவன், அவளை இறக்கிவிட்டு, அவள் காதருகே குனிந்தவன், பிட்டுன்னு சொன்னியா? சோ ப்ரூப் பண்ணலாம்னு, என நக்கலாக கூறியவன் அவள் பதற்றமாக சுற்றும் முற்றும் பார்க்கவும், இனி இப்படி சொல்லுவ? எனக் கேட்டான்

ஆடையை இடையில் சரிசெய்தவளின் செவியில் அவனது சீண்டல் விழ, அவளும் சலைக்காமல், கண்டிப்பா தேவைப்படும் போதெல்லாம், ரெடியா பாஸ் என சீண்டினாள்.

ரெடி! அடிங் என முன்னே கை நீட்ட , முன்னால் வேகமாக படியேறியவள், கைக்கு அகப்படாமல் சிறித்துக்கொண்டே ஓடிவிட்டாள். பவித்ரனுக்கு ரஞ்சனி உடனான இன்றைய உறையாடல், பால்ய பருவ சீண்டல் போல் உற்சாகமளித்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi friends,

பெரிய பகுதியா கேட்டிருக்கீங்க, புரியுது, பட் இத எழுதவே இரண்டு நாள் எடுத்துக்குறேன், பெரிய பகுதியா தர இரண்டு வாரமாகும், உங்க கூட டச்ல இருக்குதுக்காக தான் நான் சின்னச்சின்ன பகுதியா போஸ்ட் பண்றேன். என்ன நீங்க புருஞ்சுக்கணும், உங்கள நானும் புரிஞ்சுக்கிறேன். இதைவிட பெரிய பகுதியாக தர முயற்சிக்கிறேன்


நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் ரசனைக்காக,

அடுத்த பகுதி, பவித்ரனின் தீர்மானங்கள் தலைகீழாகப்போகிறது, ரஞ்சனியுடனான காதலை, வார்த்தையால் மட்டுமில்லாது, உடல் மொழியாலும் உணரப்போகிறான், உணர்த்தப்போகிறான் பவித்ரன். ரஞ்சனி வீழ்வாளா? வெல்வாளா? பார்ப்போம்...

நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதினொன்றாம் பாகம்

நகைக்கடையில் ரஞ்சனியின் முன் டைமண்ட் செட்கள் பரப்பப்பட்டு இருந்தது.பவித்ரன் கையை கட்டிக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தான்.அழகிய பல வைர நகைகளின் குவியலில், பவித்ரனின் மனதைக் கவர்ந்தது, ரஞ்சனியின் கைகளின் அழகிய நிறம் தான்.

ஒவ்வொரு நகையாக கைகளில் எடுத்தவள், குழப்பத்தில் எதை எடுப்பது என தெரியாமல், பவித்ரனைப் பார்த்தாள். அவன் சிலையென பார்த்துக்கொண்டிருக்க, கெல்ப் பண்ணுங்க பாஸ் என்றாள்.

அப்போ நான் எத செலக்ட் பண்ணாலும் ஓகே வா? என வம்பிழுத்தான் அவன். இதில் உள்குத்து ஏதோ இருப்பது போல் தோன்ற, நீங்க உங்களுக்கு பிடிச்சத சொல்லுங்க, அதுல எது பெஸ்டோ அத செலக்ட் பண்றேன் என்றாள், அவனிடம் அகப்படாமல்.

அவளை கூர்ந்தவன், திஸ் இஸ் எஸ்கேபிசம், அப்போ ஒரு டீல் உனக்கு பிடிச்சதை ஐந்து நிமிடத்துல செலக்ட் பண்ணு, நானும் அதையே செலக்ட் பண்ணறனான்னு பாப்போம், இரண்டு செலக்சனும் ஒன்னா இருக்குதான்னு பார்ப்போம், என்றான் ஒரு சுவாரஸ்யத்திற்கு,

ம்.. இது கொஞ்சம் இன்ரஸ்ட்டிங், பட் நான் தேர்ந்தெடுத்தத, நீங்க தேர்வு செய்யலனா? என்றாள் கேள்வியாக,

என்ன செய்யனும், நீதான் சொல்லனும், பட் நான் வின் பண்ணீட்டா? என அவன் முடிக்க, நோ வே என்றாள் திடமாக.

முதல்ல போட்டிய நடத்துவோம் அப்பறமா, பார்ப்போம் என சவால் விட்டவன், உன்னோட ஐந்து நிமிடம் இங்க ஆரம்பிக்குது, ஸ்டாட் என்றான்.

ரஞ்சனிக்கு, இப்படி நகைகளையோ, ஆடையையோ தேர்ந்தெடுத்து பழக்கமில்லை. எப்போதும் லதாதான் மகளுக்காக அனைத்தையும் தேர்ந்தெடுப்பார், இன்று மாப்பிள்ளை உட்பட லதாவின் தேர்வுதான்.

தந்தை நகைக்கடை வைத்திருப்பதால், எந்த மாதிரியான மாடல், அழகானது, எது எப்போதும் உருகுழையாமல் நீண்ட நாள் உழைக்கும் என்பன போன்ற நகைகளின் டிசைன் பற்றிய அறிவு ரஞ்சனிக்கு நிறைய இருந்தது.
தனக்கு முன்னால் பல வைர நகைகள் இருக்க, சமயோஜிதமாக யோசித்தவள், தன் எதிரே உள்ள கண்ணாடியில், தனக்கு பின்னால் சோகேசில் இருந்த செட்டை கண்களால் தேர்ந்தெடுத்தவள், திரும்ப வெறுமனே தனக்கு முன்னிருந்த நகைகளை நோட்டம் பார்ப்பதுபோல் பார்த்துவிட்டு, ஓகே, நான் செலக்ட் பண்ணியாச்சு, நௌ யூர் டேன் என்றாள்.

பவித்ரனால் நிச்சயமாக கண்டுபிடிக்க முடியாது என்பது அவள் கணிப்பு, தனக்குள் சிரித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

பவித்ரன் எதிரே உள்ள கண்ணாடி வழியே அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் அடக்கப்பட்ட சிரிப்பு அவன் கண்களில் விழ யோசனையாய் அவளைக்கூர்ந்தவன், அவளின் பின்னாலிருக்கும் சோகேஸ் அவனுக்கும் தெரிந்தது.

ரஞ்சனியைப் பார்க்கும் முன்பே அவளது, புத்தியையும், குணத்தையும் நன்கு அறிந்தவன் ஆதலால், அவள் போட்டியில் கையாளும் வழிகளும் அவனுக்கு அத்துப்படி, கண்டிப்பாக அவள் அதில் தான் தேர்ந்திருபாள் என தெளிந்தவன், அதிலுள்ள சில செட்டில் அவள் எதைத் தேர்ந்தெடுத்திருப்பாள் என தெரியாததால், ஊழியரின் உதவியை நாடினான்.

பவித்ரன் ஊழியரை அங்கே அழைத்துச் சென்றதும் ரஞ்சனியின் கண்கள் மின்னியது. இதில் எது காஸ்ட்லி என்றான் கடை பணியாளரிடம், அவன் ஒன்றை எடுத்து கையில் தந்தான், எந்த மாடல் ஸ்டேபிள் எனவும் இன்னும் இரண்டு எடுத்துக்கொடுத்தான். உழைக்கக்கூடிய இரண்டில் பெரியதை எடுத்தவன், பேக் திஸ் என ரஞ்சனியின் புறம் திரும்பினான்.

அவள் தேர்ந்தெடுத்ததைத்தான் அவனும் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால், ரஞ்சனியிடம் எதுவும் பேசவில்லை அவன், குறைந்தது சரிதானா என்றும் கேட்கவில்லை.

காரில் அமைதியாக ஏறினான். அவளும் அவனின் அடுத்தவார்த்தைக்காக காத்திருந்தாள். அவனின் அமைதியில் பொறுமைஇழந்தவள், வேகமாக அவனை உட்கார்ந்த வாக்கில் அனைத்தவள், யூ ஆர் த வின்னர், டெல் மீ நான் என்ன செய்யனும் என அவள் காதோரம் சொல்லி விலகினாள்.

விலகிச் சென்றவள், நேராக இருக்கையில் அமரும் முன் தடுமாறினாள். அவளின் இதழை சிறை எடுத்தவன், அவளை மூச்சுக்காய் தவிக்க விட்டான்.

பாரின் M.B.A விடமிருந்து இப்படி காட்டுத்தனமான முத்தத்தை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. மூச்சிற்கு அவள் சிரமப்படவே, அவளின் மூச்சை பரிமாரியவன், இளக்கம் காட்டத்தான் மறுத்தான்.

கார்பார்க்கிங்கில், எங்கிருந்தோ ஹாரன் ஒலிர்ந்து, அவளுக்கு விடுதலை அளித்தது. அவனுக்கு சுய உணர்வையும்தான். பவித்ரன் ரஞ்சனி மூச்சுவாங்கிக்கொண்டு பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்க, மென்புன்னகையில் அவளுக்கு தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.

அவளுக்கு அதிமுக்கியமாக நீர் தேவைப்பட பட்டென வாங்கிக்கிக் குடித்துவிட்டு, அவனிடம் நீட்டினாள்.

அவள் சற்று ஆஸ்வாசப்படவும், அவனைப்பார்த்து முறைத்தாள். ஹே நீ தான ரஞ்சூ நான் என்னபண்ணணும்னு கேட்ட, பாவம் நீ கஷ்டப்படக் கூடாதேன்னு, நானே வேலைய முடிச்சுட்டேன் என கண்ணடித்தான்.

முறைத்துக்கொண்டிருந்தவள், இதழ் கடையில் சிரிப்பிற்காக துடித்தது, அவனது கேலியில். சிரிப்பு வந்தா சிரிக்கணும் எனவும், பட்டென அவன் முதுகில் தட்டியவள், சரியான ரத்தக் காட்டேறி என முணுமுணுத்தாள்.

அடுத்து ஐஸ்கிரீம் பார்லர் கூட்டிட்டுபோய் உன்ன கூல் பண்றேன் என வண்டியெடுத்தான்.

ரஞ்சனி அவனிடம், ஐஸ்கிரீம் பார்லர் போனா, அடுத்தது என்ன ஐ. சி.யூல தான் படுக்க வைக்கணும், எனக்கு குளிர்ச்சி சுத்தமா சேராது என்றாள். அவள் அவனிடம் உண்மையைத்தான் சொன்னாள், ஆனால் அவனோ அவள் மிகைப்படுத்தி கூறியதாக எடுத்துக்கொண்டான்.

அடுத்து பேசுவதற்குள் ரஞ்சனியிபோன் ஒலிர்ந்தது. அம்மா என பவித்ரனிடம் கூறியவள், லதாவிடம் பேச ஆரம்பித்தாள்.

சொல்லுங்கமா..
.. பவித்ரனோட வெளியல மா.
..
நகைக்கடையில, அத்தயோட கிப்ட், பவித்ரன் இதுவரைக்கும் எதுவும் வாங்கித்தரல,என கேலியாக பவித்ரனைப் பார்த்தாள்.

அவன் கண்ணில் முறைப்பும், இதழில் சிரிப்பின்துடிப்புமாக அமர்ந்திருந்தான்.அவனது செல்லுக்கு ஒரு தகவல் வரவே இருகி எதிரல் உள்ள கண்ணாடியை வெறித்தான்.

ரஞ்சனி அன்னையிடம், அத நீங்களே பாக்கக்கூடாத என்றாள்

...
சரி..., வர்றேன் மா என முடித்தாள்.
பவி வீட்ல டிராப் பண்ணுங்க, கல்யாண டிரஸ் அளவு குடுக்கணுமாம், இன்விடேசன் மாடல் வந்திர்க்காம், நீங்களும் வாங்க அம்மா செலக்ட் பண்ண கூப்பிட்டாங்க என்றாள் ரஞ்சனி.

பவித்ரனின் காதுகள் அவளது செய்தியை வாங்கிக்கொண்டாளும், அவனது யோசனை அவளிடத்தில் இருந்தது,, அவளது பேச்சில் இல்லை.

ரஞ்சனியை கடத்துவதற்காக பவித்ரன் பணித்தவர்களிடமிருந்து தகவல் வந்திருந்தது. நண்பனுக்காக, அவன் இதைச்செய்ய கடமைப்பட்டிருக்கிறான். ஆனால், நேற்றுவரை ரஞ்சனியிடம் பவித்ரனுக்கு இல்லாத உணர்வு, புதிதாய் முளைத்து, அவனை யோசிக்கச்சொல்கிறது.

ரஞ்சனியை கடத்தி, அவமானப்படுத்தி, அவளை வெளியே தலைநீட்டாத படி செய்யத்தான் திட்டமிட்டிருந்தான். ஆனால், அவனையும் அறியாமல் சற்றுமுன் நடந்த முத்தக்காட்சி அவனுக்கு ஞாபகம் வந்தது. தான் இவ்வளவு முரட்டுத்தனமாக நடப்பவனா என அவனையும் யோசிக்க வைத்தது. ரஞ்சனி மீது கொண்ட சீண்டலோ அன்போ, காதலோ, வெறியோ தன்னை அப்படி மாற்றியதாக நினைத்தவன், இப்போது ரஞ்சனியை அவமானப்படுத்த மனம் ஒப்பவில்லை.

நண்பனுக்காக இதைச்செய் என்றது ஒரு மனம், ரஞ்சனிக்கு தெரியாமல் கூட அது நடந்திருக்கலாம், எனவே ரஞ்சனியை துன்பப் படுத்திவிடாதே என்றது மற்றொரு மனம்.

இதற்கிடையில், நாங்கள் ரெடியா ஸ்பாட்டில் இருக்கிறோம் என கடத்தல் காரல்களிடமிருந்து செய்தி, வீட்டிற்கு அழைக்கிறாள் ரஞ்சனி, மனம் தவித்தான் பவித்ரன்.

ரஞ்சனி பவித்ரனை உலுக்கி கூப்பிடவே தனது யோசனையை தள்ளிவைத்தவன், காரை எடுத்தான்.

போகும் வழி முழுக்க இருக்கமாகவே அமர்ந்திருந்தான். ரஞ்சனி, ஆர் யூ ஓகே எனவும் தலையசைத்தவன், பதிலேதும் சொல்லாமல், அவளை வீட்டில் இறக்கி விட்டவன், தலைவலி எனக்கூறி அவனது வீட்டிற்கு வந்துவிட்டான்.

வீட்டிற்கு வந்ததும்தான் மூச்சு சீரானது பவித்ரனுக்கு, ரஞ்சனி உடன் இருந்தாள், தனது திட்டத்தை தானே கெடுத்துவிடுவோம் என அவனுக்கு தோன்றியது.

ரஞ்சனியில் உண்மையில் என்ன இருக்கிறது என்று சுத்தமாக அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் மனமே அவனுக்கு எதிராக செயல்பட்டு அவளுடன் எதிரணியில் சேர்ந்து, தனக்காக செயல்பட மறுப்பது உண்மை.

இதுவரை தன்னிடம், பேச்சால் சிரிப்பால் வீழ்ந்து காதலைச் சொன்ன , சொல்ல நினைத்த பெண்கள் தான் அதிகம். ரஞ்சனியை அப்படி வீழ்த்தத்தான் அவன் வந்தது. வீழ்த்தியும் விட்டான். இதில் எங்கே, எப்போது அவளிடம் வீழ்ந்தோம் என்று அவனுக்கு புரியவில்லை.

எல்லைமீறி முத்தம் வரை தன்னையறியாமல் நடக்கும் அளவு தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கினான்.

பவித்ரனுக்கு ஒன்று புரியவில்லை.காதல் ஒன்றுதான் கண்ணுக்கு தெரியாமல் வரும், ஆனால் போனால் ஊர் உலகிக்கே தப்பட்டம் அடித்து, நாசப்படுத்திவிட்டு செல்லும்.

தனது டைரியல் இருந்த ஆனந்தின் புகைப்படத்தை, எடுத்துப் பார்த்தவன், கண்கள் பனித்தது. பெண்ணிடத்தில் மயங்கி நட்பை, நண்பனை ஏமாற்றியவன் என அது காரி உமிழ்ந்தது.

கடத்தல் காரர்களிடமிருந்து போன் வந்தது. அதை எடுத்து காதில் வைத்தவன், நாளை இதே டைமுக்கு முடிச்சிடலாம், இன்னிக்கு கேன்சல் என்றான்.

இன்று தவறவிட்ட சந்தர்பத்தை நாளை கைப்பற்றியே தீரவேண்டும் என்ற வெறி வந்தது பவித்ரனுக்கு.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திருமணத்திற்கு ஆடை நகைகள், பத்திரிக்கை அனைத்தையும், தேர்வு செய்தவள், மகிழ்ச்சியில் உறங்கச் சென்றாள். மகளின் முகத்தில் பூரிப்பை கண்ட தாய் மனதும் மிகுந்த சந்தோசம் கொண்டது.

ராஜனும், லதாவும் பத்திரிக்கை கொடுக்க வேண்டிய உறவுகளுக்கான பட்டியலை தயார் செய்தனர். சத்யா தேவியுடனும் தொடர்பு கொண்டு, திருமண விவரங்களை பகிர்ந்து கொண்டனர். சத்யா தேவியும் அவர்புறத்தில் திருமண ஏற்பாட்டில் இறங்கினார். மண்டபம், மேளதாளம், சமையல் என அனைத்திற்கும் முன்பணம் தந்துவிட்டார்.

உறங்கச்சென்றவளின் விழிகள் மூடியேதான் இருந்தது, ஆனால் தூக்கம் வரவில்லை. உனக்கேத்த தீவிரவாதிதான் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள் ரஞ்சனி. இன்று அவன் நடத்திய முத்தப்போராட்டம் திரும்பத்திரும்ப மனதில் தோன்றி அவளை இம்சித்தது.

அங்கே ரஞ்சனி, இன்ப அவஸ்தையில் தூங்காமல் இருந்தாள், இங்கு பவித்ரனும் அதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தான், ஆனால் பாதை தவறிய உணர்வில், அவமானமாக கருதினான். தன் நட்புக்கு துரோகம் செய்வதாய், அவனது மனசாட்சி இடித்துரைத்தது.

ரஞ்சனியுடன் காரில் புறப்பட்டான் பவித்ரன், தன்திட்டத்தை நிறைவேற்ற. கேள்வி கேட்க வேண்டிய ரஞ்சனி கூட எங்கே என்று அவனிடம் ஒருவார்த்தை கேட்கவில்லை, அவன் மேலுள்ள நம்பிக்கையில். அனைத்தும் தயாராகத்தான் இருந்தது, சரியாகத்தான் செயல்பட்டது, பவித்ரனின் மனதைத் தவிர...

அவளை ஒரு பெரிய மாலில் இறக்கிவிட்டவன், அங்கே காபிசாப்பில் அமரும்படியும், தான் காரை பார்க்செய்துவிட்டு வருவதாகக் கூறினான்.ரஞ்சனி சரியென உள்ளே சென்றாள். கார்பாக்கிற்கு சென்றவன் கடத்தல் காரர்களுக்கு தகவல் அளித்தான்.

அடுத்தது அவன் ரஞ்சனி வீட்டிற்கு வந்து, அவள் எங்கே என கேட்க வேண்டும். ஆனால் அவன் கார்பார்க்கிங்கிலிருந்து நகரவில்லை. மனம் தவித்தது. ரஞ்சனியை கடத்தி இருப்பார்களோ? என மனம் படபடத்தது. போன் செய்து திட்டத்தை நிறுத்து என ஒரு மனம் செல்ல, மற்றொரு மனமோ ரஞ்சனிக்கு தண்டனை கொடுத்து, பழியைத்தீர்த்துக்கொள் என்றது.

போனை வெறித்தவன், அதை பின் சீட்டில் தூக்கி எரிந்துவிட்டு, மனதின் அழுத்தத்தை குறைக்க, கண்ணை அழுத்த மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

சென்னையும் வெப்பச்சலனத்தில் மாலை மழையை இடியுடன் இறக்கியது. எவ்வளவு நேரம் சென்றதென தெரியவில்லை, அவனது மோன நிலையைக்கலைத்தது, கார் கண்ணாடியில் விழுந்தது பலமான தட்டு.

கண்திறந்து பார்த்தவன், இன்பமாக அதிர்ந்தான், அது ரஞ்சனி மழையில் தொப்பலாக நனைந்து, கையில் ஹீல்சுடன், கார் கதவை திறக்கச் சொல்லி அவனை கூப்பிட்டாள்.

அழகிய பேன்சி புடவை, அங்கங்களை காட்டிக்கொண்டிருக்க, மூச்சு வாங்கிக்கொண்டு அருகில் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. தான் தோற்றுவிட்டோம் என தெரிந்தும், பவித்ரனின் மனது மகிழ்ந்துதான் போனது.

என்ன பவி எவ்வளவு நேரம் வெய்ட் பண்றது எனசற்று காட்டமாகக் கேட்க, இல்ல ரஞ்சூ இங்க டாய்லெட் தேடுனேன், அதுல லேட் ஆயிடுச்சு என வாய்க்கு வந்ததை கூறினான்.

உங்க போன் எங்க, எத்தன முறை கூப்பிடுறது எனவும், பின் சீட்டில் வீசப் பட்ட போன் ஞாபகம் வர அதை எட்டி எடுத்தான், வீசப்பட்ட அதிர்வில் அது அனைந்திருந்தது. சாரி ஸ்விச் ஆப் ஆயிடுச்சு என காண்பித்தான்.

அவளிடம் என்னாச்சு ரஞ்சு என அறியாதது போல் கேட்டான். இரண்டு பொறுக்கி ராஸ்கல்ஸ், பின்னால வந்து நெருங்கப்பாத்தாங்க என்றாள்.

அப்பறம் என்றவனை முறைத்தவள், அப்ப பாத்து ஷூ பிஞ்சுடுச்சு, உட்கார்ந்து சரிபண்ணலாம்னு குனிஞ்சேன், மழை பெரிசா பிடிச்சிருச்சு, அவன்க பொண்ண கடத்துற கும்பல் போல, கையில ஏதோ ஸ்பேரே மாதிரி வச்சிருந்தாங்க, நான் முதல்லயே அவங்க மேல சந்தேகப்பட்டதால, கையில இருந்த ஹீல்ஸ் ஆலயே பட்டுனு அவன் கையில போட்டேன்.

இரண்டு கையிலயும் செப்பல் இருந்ததால கண்ணம், கைகாலெல்லாம் அவனுங்களுக்கு பழுத்திருச்சு, கூட்டம் கூடுனதால, அவங்கல கூட்டத்திலயே ஒப்படிச்சுட்டு வந்துட்டேன் என்றாள் சாதாரணமாய்.

இரண்டு ஆண்களை, அதிலும் கடத்துவதற்காகவே பயிற்சி எடுத்தவர்களை, அடித்து வீழ்த்திவிட்டு சாதாரணமாக சொல்கிறாள் என அவன் வியந்து பார்க்க, என்ன ? என்றாள் ரஞ்சனி.

இரண்டு ஆம்பளைங்கள எப்படி தனியா அடுச்ச என்றான் வியப்ப மாறாமல். அதுவா, நான் உட்கார்ந்து ஹீல்ஸ் ஷூவ கழட்டும் போது பக்கத்துல வந்தாங்களா, சோ கிடச்ச இடத்துல அடுச்சேன், சுருண்டுட்டானுங்க என சற்று உதடு சிரிப்பில் துடிக்க கூறினாள்.

அவள் சொன்னதை கற்பனை செய்து பார்த்தவன் விழுந்து விழுந்து நகைத்தான்.

அம்மா தாயே ஆம்பளைங்கல்லாம் உங்கிட்ட சர்வ ஜாக்கிரதையா இருக்கணும் போல, ஐய்யோ! அய்யய்யோ என கூறிக்கொண்டே வண்டியெடுத்தான்.

கண்டிப்பா!!! என விரல் நீட்டி பவித்ரனிடம் கார்வமாக மொழிந்தாள் ரஞ்சனி.

அவளது கர்வம் அவனது பழி உணர்வை மீண்டும் உயிர்பித்தது. அவன் இறுகி அமர்ந்திருந்தான்.

நனைந்த ஈரமும்,ஏசி காரும் சேர்ந்து ரஞ்சனிக்கு குளிர ஆரம்பித்தது. வெளியில் கோடை மழை இடியுடன் தண்ணீரை கொட்டி தீர்த்துக்கொண்டிருந்தது.

பவி ஏசிய ஆப்பண்ணுங்க என்றாள் ரஞ்சனி. எப்போதடா அவளை வீட்டில் விட்டுச் செல்வோம் என நினைத்தவன், வாகனங்கள் மழை காரணமாக நத்தையாய் ஊர்வதால் எரிச்சலில் இருந்தான்.

இதை அறியாத ரஞ்சனி பாஸ் என்ன ஆப்ஸ்காண்டா, ஏசிய குறைங்க என்றாள், சற்று அதட்டலாக. முடியாது, ஐ நீடு இட் என்றவன் அதிகமாக குளிரை ஏற்றியவன், வேண்டுமென்றே அவள்புறம் திருப்பி வைத்தான்.

ஹே ! டோண்ட் பிளே பவி, இட் ஹர்ட்ஸ் மீ பிளீஸ்.... என்றாள் அவனிடம் ரஞ்சனி.

ஐ டோண்ட் கேர் என்றவன், அடுத்து அவள்புறம் திரும்பவில்லை.

இப்படி பவித்ரன் கவலையில்லை என சொன்னபிறகும், அவனிடம் திரும்பப் பேசவோ, கெஞ்சவே ரஞ்சனிக்கு தன்மானம் இடம் தரவில்லை.

குளிர்ந்த காற்று அவள் முகத்திற்கு நேராய் வீசப்பட மூச்சு விடவே திணறினாள். புடவையை இழுத்து மூடியவள், காலில் முகம்புதைத்து அமர்ந்தாள்.

பவித்ரனின் பொறுமையை சோதிக்க, சிக்னல்கிளியர் ஆகாமல் கார் நின்றே விட்டது. சை என திரும்பி ரஞ்சனியைப் பார்த்தால், அவளோ இருந்த நிலையிலேயே அப்படியே கால்களை கட்டிக்கொண்டு மயக்கத்தில் இருந்தாள்.

ஓவர் சீன் என நினைத்தவன், திரும்பி மறுபுறம் வேடிக்கை பார்த்தான். எதிர்சாரியில் வாகனங்கள் சிக்னலிலிருந்து விடுபட்டு வேகமெடுத்து சென்று கொண்டிருந்தது.

ரஞ்சனியின் போன் ஒலித்தது. முதலில் அமைதியாக இருந்தவன், அவள் போனை எடுக்காததால், ரஞ்சனி என்றான் எந்த அசைவும் இல்லை.

அவளை தட்டிக்கூப்பிட்டான் அப்போதும் எந்த அசைவும் இல்லை. அவள் உடம்பிலுள்ள அதீத குளிரை உணர்ந்தவன், பட்டென ஏசியை அணைத்து விட்டு அவளை உலுக்கினான்.

அவன் உலுக்கியதில் அப்படியே சீட்டுக்கட்டு கோபுரமாய், கைகால்கள் அதுஅது இஷ்டத்துக்கு சரிய, அவள் முன்புறம் விழப்போனாள். பட்டென அவளை இழுத்துப்பிடித்து, இருக்கையில் சரியாக அமர்த்தியவன், அவளது கண்ணத்தில் தட்டி தட்டி அழைத்துப்பார்த்தான். அவள் எழவே இல்லை, பவித்ரனுக்கு இதயம் படபடத்தது.

அவளது உள்ளங்கையை அழுத்தி தேய்த்துப் பார்த்தான். அவளுடைய குளிரை அவன் உணர்ந்தானே, ஒழிய, அவனுடைய சூட்டை அவள் கை ஏற்கவில்லை.

ரஞ்சனியின் போன் திரும்ப ஒலித்தது. லதாதான் அழைத்திருந்தார்.

அதை உயிர்பித்து காதில்வைத்தவன் பதட்டத்தை காட்டாமல் ஹலோ என்றான்.

மாப்பிள்ள நீங்களா? ரஞ்சனி எங்க?

இதோ பக்கத்துல என்றவன் அவளை தோளில் சாய்த்துக்கொண்டு அவளைப்பார்த்தவண்ணம் பேசினான்.

குடுங்க மாப்பிள்ள நான் பேசுறேன்.

அது,... ஆண்டி அவ பாத்ரூம் போயிட்டா, எதாவது சொல்லணுமா?

இல்ல மாப்பிள்ள, அவ ஒன்னும் மழைல நனைஞ்சிடுலயே என்றார் சற்று பதட்டமாக...

ஏன் ஆண்டி?

இல்ல, அவளுக்கு சேராது, நீங்க எங்க இருக்கீங்க...

சேராதுன்னா? என்ன செய்யும்?

உடம்பு ஐசா ஆயிடும், கொஞ்ச நோரத்துல மயங்கீடுவா. நீங்க எப்போ வருவீங்க..

மயங்கினதுக்கு அப்பறம்?

அதுவரைக்கும் நாங்க விட்டதில்ல, டாக்டர்ட காட்டினதுக்கு, இப்படியே போச்சுன்னா விட்ஸ் வந்துடும் அப்படீனு சொன்னாங்க, அவ ஜாக்கிரதயாதான் இருப்பா. இருந்தாலும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடீங்கன்னா, எனக்கு கொஞ்சம் நிம்மதி என்றார் லதா.

இங்க மழையால டிராவிக் ஹெவியா இருக்கு ஆண்டி.

எவ்வளவு நேரமாகும்?

தெரில,

சரி ரஞசனிய நனையாம இருக்க சொல்லுங்க, இருட்டீடுச்சு, மழை பெரிசாகுது ,சீக்கிரம் வாங்க..

போனை வைத்தவன் விரைந்து செயல்பட்டான். பின் சீட்டில் இருந்த ஜர்கினை எடுத்தவன், மடமடவென அவளின் ஈர உடையை நீக்கினான்.

காரிலிருக்கும் சிறிய டவல் மூலம் தலையையும் உடலையும் துடைத்தவன், ஜர்கினை போட்டுவிட்டான்.
அவளை அணைத்துபிடித்து கைகாலெல்லாம் தேய்த்துவிட்டான். ஆனால் ரஞ்சனியிடம் மாற்றமே இல்லை. பவித்ரனுக்கு பதட்டம் அதிகரித்தது. அடுத்தது என்ன செய்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்தான்.

வலப்புறம் இருந்த டீ கடைக்கு விரைந்து சென்று, வெந்நீரும் டீயும் வாங்கினான். பவித்ரனின் முகத்தில் தெரிந்த பதற்றத்தில் கடைக்காரர் வேகமாக எடுத்துக்கொடுத்தார். அவன் பணம் கொடுக்கவே மறந்துவிட்டான்.அவரும் கேட்கவில்லை.

வந்தவன் வெந்நீர் டம்ளரை அவளது கையில் இருக்கப் பற்ற வைத்தான். கைகள் தெம்பின்றி விழுந்தது. சிறிது சிறிதாய் சூடான டீயை புகட்ட ஆரம்பித்தான். சூடான டீ இறங்க இறங்க, உடலில் குளிர்குறைய ஆரம்பித்தது.

மெதுவாய் கண்திறந்தவள், முதலில் கண்டது, பவித்ரனின் கலங்கிய விழிகளைத்தான். அவள் மயக்கம் தெளியவும், டீயை பக்கத்தில் வைத்தவன், ரஞ்சூ, ஆர் யூ ஓகே!! என பதறிய குரலில் கண்ணீர் முதல் துளி கீழேவிழ அவன் கேட்டான்.

அவள் லேசாக தலையசைக்க, உணர்ச்சிவசத்தில் அவளை இறுக்க அணைத்தான். அவனுக்கு போன உயிர் திரும்ப வந்தது. வெகு நேரம் அணைத்திருந்தவன், மனம் சற்று நிலைபெற, இறுக்கத்தை சற்று தளர்த்தியவன், அவளைவிட்டு விலகவில்லை.

ரஞ்சனி மிகவும் சோர்ந்திருந்தாள். அவனை விலக்கவும் முடியவில்லை. ஆறுதல் படுத்தவும் அவளுக்கு தெம்பில்லை.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi friends,

im wřiting this story for a month, now i neéd a help from u, or i have one clarification. please inform me that, how the story going, whether u like or need better naration. are u undestand my writing, if any potion, not in tip, u please tell me...


thank u
 
Top