All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் எல்லோரிடமும் சகஜமாய் பேசினான், அது தவறோ என வருந்தும் அளவிற்கு மது நடந்து கொண்டாள்.

அவன் லண்டன் சென்று படித்தவன்தான், பலதரப்பட்ட உடை அணியும் மனிதர்களை பார்த்தவன் தான், ஆனால் அவளின் உடையும், அங்கங்களை உயர்த்திக்காட்டி கீழ்தனமாக நடந்து கொள்ளும் போசும், சகிக்கவில்லை.

பவித்ரன் தாங்க முடியாமல் அதை அவளிடமே சொல்லிவிட்டான்,

மது வை டு யூ ட்ரை சேரி லைக் டிரடீசன் ட்ரஸ்? என்றான். அவள் ஏதோ கிப்ட் கொடுத்தது போல், உங்களுக்கு சேரிதா பிடிக்குமா? ஓகே சார் அதையே இனிமே போட்டுக்கிறேன் என்றாள்.

அது கூட பரவாயில்லை, சேரியை இப்படியெல்லாம் கட்டமுடியுமா என்ற அளவிற்கு அவள் அதில் தன் திறமையைக் காண்பித்தாள். எதற்கடா சேரி கட்டசொன்னோம் என நினைத்தான் பவித்ரன்.

விவரம் தொரிந்த நாட்கள் முதலே, இது போன்ற பிரச்சனையை அவன் சந்தித்ததுண்டு, ஆனால் இவ்வளவு தைரியமாக தன்னை யாரும் நெருங்கியதில்லை.

அதற்க்கு காரணம் ஆனந்த்.

அப்படி காலேஜகல் நெருங்க நினைக்கும் பெண்களை கண்காட்டினால் போதும்.ஆனந்த் அவர்களை படுத்தும் பாட்டிலும், அடிக்கும் கேலியிலும், திணறி ஓடிவிடுவர்.

அப்படி ஓடும் பெண்கள், ஆனந்த் என் பக்கத்தில் இருந்தாலே, தன்னை பார்ப்பதை கூட தவிர்த்து வேறு புறம் ஓடுவது பவித்ரனுக்கு நேற்று நடந்ததுபோல் நியாபகம் வந்தது.

அவர்களை விரட்டி அடிக்கும் ஆனந்தின் கேலியும் ஞாபகம் வர , முகத்தில் புன்னகை அரும்பியது பவித்ரனுக்கு.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் தன் அன்னையிடம் சென்றவன், மேடம், ஐ நீடு ஸ்பேஸ், நீங்க என்னோட அறையில் இருக்கிற அசிஸ்டண்ட் கேபின எல்லோரோடவும் சேத்து வெளில போட்டுடுங்க என்றவன், அவர் பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

சத்யவதேவிக்கு மகனின் பேச்சு விளங்கவில்லை. அவரை சந்திக்க வந்த அலுவலக மேனேஜரிடம் மதுவைப் பற்றி விசாரித்தார் .

அவரோ கெட்டிக்கார பொண்ணு மேடம், வந்த உடனே வேலைய புரிஞ்சுகிச்சு, பைலும் எந்த தப்புமில்லாம செய்யுது.ஏன் மேடம் ஏதும் பிரச்சனையா?

நோ, நோ புதுசா சேந்ததால விசாரிச்சேன் நத்திங், நீங்க மதுவுக்கு, ஆபீஸ் ஸ்டாப்ஸ் கூடவே கேபின் போட்டுடுங்க, என தன் பேச்சை முடித்துக்கொண்டார்.

மதுவுக்கு பவித்ரனின் விலகல் என்னவோ போல் இருந்தது, இன்று கேபினை அலுவலக அறைக்கு மாற்றியது சகிக்கவில்லை.

மதுவுக்கு வந்த கோபத்தில் பைலை தப்பும் தவறுமாக எழுதி, கையெழுத்திற்கு பவித்ரன் அறைக்கு சென்றாள்.

தவறிற்கு திட்டுவான்.அப்போது அழுது சீன் போட்டு சிம்பத்தியை ஏற்படுத்தி அவனுடன் ஒட்டிக்கொள்ள திட்டம் போட்டாள் மது.

பவித்ரனோ பைலை பார்த்தவன் நிமிர்ந்து அவளை ஒருபார்வை பார்த்தான். இனிமே உங்க பைல, ஆபீஸ் மேனேஜர்ட ஒருமுறை காட்டீட்டு, தென் கம் பார் மை சைன் என்றவன், பேச்சு முடிந்ததுபோல் கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான்.

அய்யையோ அந்த ஜெல்லுட்டயா என நினைத்தவள், மடமடவென திருத்தி எழுதி பவித்ரனின் கையெழுத்திற்கு கொண்டு சென்றாள்.

பைலை பார்த்தவன் தனக்குள் சிரித்துக்கொண்டு கையெழுத்திட்டான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமசாமிக்கு நம்பிக்கை இல்லை, இருந்தும் ரஞ்சனிக்காக, மகனுக்கு காத்திருந்த படியே கீழ் தளத்தில் சுற்றிக்கொண்டிருந்தார்.

அனைவரும் தன்னையை வித்யாசமாக பார்ப்பதுபோல் தெரிந்தது. நமக்கெதுக்கு வம்பு என அவர் அவருடைய போக்கில் நடைபயின்றார்.

அப்பா என குரல் கேட்டுத் திரும்பினார் ராமசாமி. அங்கே மகன், மருமகள், பேரன், பேத்தி எல்லோரும் நின்றிருந்தனர்.

சேகரு நல்லாயிருக்கியா பா? எனவும், ம்.. நல்லா இருக்கேன்பா, சாரிபா ஆபீஸ் டெங்சன்ல உங்கள மறந்துட்டேன் என்றான் சேகர்.

விடுங்க அவரே ஒன்னும் கேக்கல, சாப்டீங்களா மாமா என்றாள் மருமகள். ராமசாமிக்கு ஒரே ஆச்சர்யம். ஒரே வீட்டில் இருக்கும்போது ஜாடை மாடையாக திட்டுவதைத் தவிர அவரிடம் பேசியதில்லை. இப்போது என்ன ஆச்சு? என நினைத்தவர், நல்லா இருக்கேம்மா என்றார்.

அப்பா நீ டிரஸ் எல்லா வாங்கீட்டயா? வா பில் கட்டுவோம் என்றான் சேகர்.

அப்போது நான்கு வயது பேரன் கிரிஸ் தாத்தா என அவரை இழுத்தவன், அவரிடம் உனக்கு கிடச்ச பிரைஸ் பணத்துல இருந்து எனக்கு ஒரு சாக்கோபார் வாங்கிக்குடு என்றான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை, அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது, கிருஸ் சும்மா இரு, முதல்ல தாத்தாக்கு பில் கட்டணும் என சேகர் தனது மகனை அதட்ட, சேகரின் மனைவி சீறினாள்,

அவன எதுக்கு திட்றீங்க, முதல்ல வந்த வேலைய முடிப்போம், அவங்கல்லாம் போயிடப் போறங்க, காசு போகும் போது கட்டுவோம், கடை இங்கதான இருக்கப்போது என்றாள் சேகரின் மனைவி.

ராமசாமிக்கு இவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ம்.. அதுவும் சரிதான் என்ற சேகர், வாங்கப்பா மொதல்ல பணம் வாங்கீட்டு வருவோம் என்றான்.

எங்கபோயி என்றார் பெரியவர்.

உங்களுக்கு தெரியாதா, சரி இருங்க என அங்கிருந்த செக்யூரிட்டியிடம் பேசிவிட்டு வந்தான். வாங்கப்பா எட்டாவது ஃப்ளோராம், ஓனர் ரூம் அங்கதா இருக்காம் என ராமசாமியை அழைத்தான்.

ராமசாமிக்கு புரிந்துவிட்டது. அவன் ரஞ்சனி அறைக்குத்தான் அழைக்கிறான் என்று, இதுவரை வாங்கியதுக்கும் திண்றதுக்கும் பணம் கட்டாமல், இவன் அவளிடம் சென்று பணம் வாங்குவோம் என்கிறானே என நினைத்தவர்.

ரஞ்சனியைக் கண்டு அஞ்சியவாறு அவளது அறையில் குடும்ப சகிதமாக நுழைந்தார் ராமசாமி.

பலிகொடுப்பாளா? பலியாவாளா ? ரஞ்சனி.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐந்தாம் பாகம்..


ரஞ்சனியின் குணம் தெரிந்ததால் ராமசாமி அடுத்து என்ன பூகம்பம் வெடிக்குமோ என்ற நிலையில் உள்ளே நுழைந்தார்.

அவளின் குணம் தெரியாமல், உள்ளே நுழைந்த சேகரும் அவன் மனைவியும் சந்தோசமாய் வந்தனர், தாம் புலிகுகைக்கு செல்வது தெரியாமல். நான்தான் இவரோட மகன் என தன்னைத்தானே சந்தோசமாய் அறிமுகப்படுத்திக்கொண்டான் சேகர், ரஞ்சனி கண்களால் இருக்கையை அவனுக்கு சுட்டிக் காட்டிவிட்டு, அமைதியாக சேகரை கவனித்துக்கொண்டிருந்தாள்.

ராமசாமிக்கோ, மகன் தன்னை கூட்டிச்செல்ல வந்திருக்கிறான் என புரிகிறது. வேறொன்றும் புரியாததால் அமைதியைக் கடைபிடித்தார், ரஞ்சனி மேலுள்ள பயமும் அதற்க்கு ஒரு காரணம்.

இருக்கையில் அமர்ந்த சேகரும் அவன் மனைவியும், கைப்பையினுள் துலாவி எதை எதையோ எடுத்து டேபிளில் பரப்பிக்கொண்டிருந்தனர்.

இது என்னோட ஐடி பாஸ்புக் மேடம். நான் தான் இவர் பையன். வின்பண்ண தங்கத்த பணமாவே இந்த அக்கவுண்ட்ல போட்டுடுங்க என்றான் ரஞ்சனியிடம் சேகர்.

ஓ.. என கோட்டுக்கொண்டவள், பதிலேதும் பேசாமல் ராமசாமியை கவனித்தாள். அவர் பேந்த பேந்த விழித்துக்கொண்டு நடப்பு புரியாமல் அமர்ந்திருக்கவும் சிரித்துவிட்டாள்.

சேகரும் அவன் மனைவியும், என்னவென ரஞ்சனியை கூர்ந்தனர். நோ, நத்திங் உங்க ஆர்வத்த பாத்து சிரிச்சுட்டேன், ஆமா நீங்க ராமசாமியோட பில் எல்லாத்தையும் அந்ததந்த ப்ளோர்ல பே பண்ணீட்டீங்களா? என்றாள் ரஞ்சனி.

இல்ல மேடம் நேரமாயிடுச்சுன்னு முதல்ல இங்க வந்துட்டோம்,

நான் பிஸ்னஸ் பண்றேன், சோ முதல்ல, என்னோட லாபம் என ராமசாமியை பார்த்தவள், பின்பு பார்வையை சேகர்புறம் திருப்பி, தென் உங்க கேச கவனிக்கிறேன். கோ அண்டு பே ஃபஸ்ட் என்றாள்.

எல்லோரும் எழ, எதுக்கு எல்லாரையும் அலைய வைக்கிறேங்க, ராமசாமி கேன் ஸ்டே கியர், வித் கிட்ஸ், யூ போத் ஆர் கோ என்றாள்.

ராமசாமி இப்போது நிம்மதியாக உணர்ந்தார். பணம் கட்டியாச்சு, அப்பாடா வீட்டுக்கு போயிரலாம், மற்ற தெரியாத விசயங்களைப் பற்றி அவர் தெரிந்து கொள்ள முயலவில்லை, அவர் மனதில் தோன்றிய தெல்லாம் ரிலீஸ் ஆயிட்டோம் என்பது மட்டும்தான்.

ரஞ்சனி பெரியவரிடம், பையன் வரமாட்டான் சொன்னீங்க, வந்துட்டான் போல, நீங்கதான் அப்பானு அழுத்தி சொல்றாரு, ம்.. கிளம்ப ரெடி ஆயாச்சா..

நான்தாம்மா அவன தப்பா நினச்சிட்டேம் போல, என்ன இங்க விட்டுட்டு மறந்து போனதுக்குத்தான், பொண்டாட்டியோட வந்து மன்னிப்பு கேட்டாம்மா, அவ ரொம்ப நல்லபையன் மா, ஏதோ இப்படி ஆயிடுச்சு,என்றார் ராமசாமி.

ரஞ்சனி, நல்லவரா, யெஸ், கொஞ்சம் இத பாருங்கனு கணினி திரையை அவர்புறம் திருப்பினாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்யாதேவி மதிய உணவு முடித்து வாஸ்ரூம் நோக்கி சென்றார். இடையில் இருந்த ஜெராக்ஸ் அறையில் இருந்து பேச்சுக்குரல் கேட்டது, அது மதுவின் குரல்.

பவி சார் இப்படி என்ன பண்ணலாமா நீயே சொல்லு எனவும். சத்யாதேவி சென்று கொண்டிருந்தவர், பிரேக் போட்டதுபோல் நின்றுவிட்டார். திக்கென்றது சத்யாதேவிக்கு

அப்படி என்னடி பண்ணார் என மற்றொரு பெண் குரல்

உனக்கு தெரியாத்க்கும், ஆபீஸ்கே தெரியும்

நிறைய தெரியும், நீங்க வேலபாத்துக்கிட்டே சைட் அடிக்கிறது, அதுல நீ எத கேக்கிறனதான் புரியல,

சத்யாதேவிக்கு பகீரென்றது

க்கும்.. போடி போ நான் மட்டும் சைட் அடுச்சு என்ன பண்ண அங்க இருந்து ஒரு ரியாக்சனும் வர மாட்டிங்குது, சரியான டியூப் லைட் இது மது.

எதோ நீ சேரி கட்றதுக்கு காரணமே பவிசார்னு சொன்ன, என்னாச்சு இப்ப,

ஆமா, அது அப்போ,

இப்ப என்னவாம்.

ஆமா, இந்த பாட்டுல எல்லாம் வருமே, பொண்ணுங்க மனசுதான் ஆழம், குளம்னு, ஆனா நா மனச திறந்துதான் வச்சுருக்கேன், பய புள்ள கண்டுக்கவே மாட்டெங்கிது, என்ன நினைக்கிதுன்னும் புரில, நான் நினைக்கிறேன் அவரோட மனசுதான் கடலுக்கடில பெட்ரேலுக்கு தோண்டுற அளவுக்கு ஆழம்னு,

சிரித்துவிட்டாள் அடுத்த பெண்.

சிரிக்கிறயா போடி, லவ் பண்ணிப் பாரு அப்ப தெரியும்

சைட்ல இருந்து, லவ்வுக்கு புரமோட் பண்ணீட்டயா, குட் குட்,

போடி நா போறேன், கிண்டலா பண்ற

சரி கிண்டல் பண்ணல சொல்லவந்தத சொல்லு

சேரி கட்டு உனக்கு ரொம்ப,அழகா இருக்கும்னு சொன்னாரு டி

யாரு

அதுதான் பவிசார், இப்ப பாத்தா, அவர் ரூம்ல இருக்குற என்னோட கேபின தூக்கி, ஆபீஸ் கால்ல போட்டுட்டாரு டி, எதுக்கு இப்படி என்ன அவாய்ட் பண்றாரு

நீயே கேட்ற வேண்டியது தான, அவர் எல்லார்டயும், சகஜமாத்தான பேசுறாரு.

அதுக்குத்தான் பேசுறதுக்கு பிளான் பண்ணீட்டு, தப்புத்தப்பா பைல் ரெடி பண்ணீட்டு அவர் கேலிய எதிர் பாத்து போனேன்.

என்னாச்சு,

ம்... என்ன நிமிந்து கூட பாக்கல, ஆனா பைல்ல மிஸ்டேக்க கண்டுபிடிச்சுட்டார் போல, என்னாச்சு குட்டி மூல சூடாயிடுச்சா, டென்சன்ல தப்பு தப்பா டைப் பண்ணீருக்கு, இப்படி எப்படியாவது சொல்லுவாறுன்னு பாத்தா, ஆபீஸ் மேனேஜர்ட கரெக்ட் பண்ணீட்டு வர சொல்றாரு.

என்ன போனயா என்றாள் சிரிப்பில்.

மடமடன்னு போயி திருத்தீட்டு வந்துட்டேன், அந்த கிழத்துகிட்ட யாரு திட்டு வாங்குறது.

என்ன பெரிய மேம்ட இழுத்துட்டு போயி இதுதான் என் லவ்வர்னு இன்ரோ குடுத்து, ஓடிப்போய் கல்யாண வேலய பாப்பார்னு பாத்த, என்ன ஓட விடுறாரு , இது நியாயமா? நீயே சொல்லு.

அதற்கு மேல் சத்யாதேவி சென்றுவிட்டார். மகனுக்கு திருமணம் முடிக்க வேண்டும் என்ற முடிவுடன்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி காட்டிய திரையில் பெரியவரின் புகைப்படத்துடன் கூடிய தலைப்பாக, அறுபது வயதில் ஆறுகிலோ தங்கத்தை வென்றவர். என எழுதப்பட்டிருந்தது.

ராமசாமிக்கு ஒன்றுமே புரியவில்லை, கேள்வியாக ரஞ்சனியைப் பார்த்தார்,

புரியலியா என்றவள் கீழே இருந்த ஆடியோவை கிளிக் செய்ய, அதில் ஒரு ஆண் குரல் அப்பட்டமாக ஒலித்தது.

ஹலோ நான்தான் உங்க ஹரீஸ் பேசுறேன், நீங்க கேட்டுட்டு இருக்கிறது ஹலோ எப்.எம் 93.8. கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க, என்ன ஊர் வம்பு பேசலாமா, ஹலோ மக்களே இன்று சென்னையின் பிரபலக் கடையான, ட்ரீம்ஸ்லில், ஒரு குவிஸ் சோ நடந்திருக்கு, அதில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு அறுவது வயது முதியவர், வின் பண்ணீருக்காரு, தாத்தாவுக்கு இவ்வளவு அறிவானு நீங்க நினைக்கிறது புரியுது. மேட்டர் அது இல்லீங்க, அப்படி வின் பண்ண தங்கத்த வேண்ம்னு சொல்லீட்டாருங்கோ, எவண்டா இந்த கேனன்னு நீங்க கேக்குறீங்கோ, அதையும் சொல்றேனுங்கோ, ராமசாமி .

ஏன் வேணான்னு சொன்னாருன்னு தெரியனுமா வெயிட் பண்ணுங்கோ, இது ஹலோ எப்,எம்93.8 ங்கோ..

நானா? தங்கத்த ஜெயிச்சேனா? அதென்னம்மா கூஸ் சோ, அப்படீன்னா? என்றார் ராமசாமி.

ச்சூ என செய்கை செய்தவள் அடுத்த ஆடியோவை பிளே செய்ய, அது அதன் தொடர்ச்சியாக ஒலித்தது.

என்ன எதுக்கு வேணாம்னு சொன்னாருன்னு யோசிச்சேங்களா? எங்கடா நீ என்ன யோசிக்கச் சொன்னனு இவ்வளவு கத்தியா சொல்றது, சொன்னாத்தான் யோசிப்பீங்களா? போங்க பாஸ், சரி மேட்டருக்கு வற்றேன் அது எதனாலன்னா அவருக்கு வயசாயிடுச்சாம், எனக்கு பணமோ தங்கமோ தேவையில்லனு சொல்லீட்டாருபா.

அப்படியா ரொம்ப நல்லதா போச்சு எனக்கு குடுங்கனு, நீங்க ஆசைபடுறது புரியுது, ஆனா கடை ரொம்ப நேர்மப்பா, அப்ப உங்க ரிலேட்டிங்வ கூப்புடுங்கனு சொல்லீருக்கு, மனுசனுக்கு என்னா வைராக்யம், கூப்பட மறுத்துட்டாறாம், சோ கடையே அவர் ரிலேசன, பப்ளிக்கா கூப்புடுது பா.

அப்படி எந்த கேள்விக்கு இவ்வோ மணின்னு நீங்க கேப்பீங்கனு நானும் எவ்வளவோ கேட்டு பாத்துட்டேன், க்உகூம் லீக ஆவள பா, அனேகமா அவங்க அந்த கேள்வியத்தான், அடுத்த தபாவும் கேப்பாய்கனு நினைக்கிறேன், சீக்ரெட்ட தெரிஞ்சுகோங்கோ, அடுத்த தபா, வின்பன்னுங்கோ, நீங்க கேட்டுட்டு இருக்குறது ஹலோ எப்.எம்93.8 இது உங்க ஹரீஸ் எனவும் ஆடியோ முடிந்தது, புயலுக்குப் பின் அமைதியானது.

ரஞ்சனி, அமைதியாக பெரியவரை கூர்ந்தாள். அவள் தனக்குள் யோசித்துக் கொண்டு இருக்கவும் என்ன உங்கபுள்ள, கெட்டவரா? பேராசைக் காரரானு? யோசிக்கிறீங்களா...

அவரோ, இல்லம்மா அது என்ன கேள்வியா இருக்கும்? என்றார்.

ரஞ்சனி சிரித்துவிட்டாள், நீண்ட நேரம் மனம் விட்டு சிரித்தாள்.

பலிகொடுப்பாளா? பலியாவாளா? ரஞ்சனி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆறாம் பகுதி.

இது போல விளம்பரம் பேப்பர், யூடியூப், பேஸ் புக் எல்லாத்திலும் கொடுத்து இருக்கோம், உங்க பையன கண்டுபிடிக்க, என்றாள் ரஞ்சனி.

எதுக்குமா இவ்வோ செலவு, எம்மகன கண்டுபிடிக்கவா? ஆயிரம் பேர் வந்து போற கடையில, நானும் துணி வாங்க வந்தேன், எல்லாரையும் விட மோசமா பில்லுக்குக் கூட பணமில்ல, எதுக்குமா எனக்கு இவ்ளோ உதவி செய்ற, உங்கப்பாவோ, தாத்தாவோ இது மாதிரி தொலஞ்சு போயிட்டாங்களா? என்றார் அப்பாவியாய்,

ரஞ்சனி சிரித்து, இல்ல, பணத்த வசூலிக்க வேண்டாமா? அதுக்குத்தான், என்றாள்.

இல்ல, நான் அந்த அளவுக்கு விவரம் புரியாதவன் இல்லம்மா, நீ சொல்ற பேஸ் புக், 93.8 வேனா எனக்கு தெரியாம இருக்கலாம், ஆனா இது தெரியும்.

தெரியுமா? என்ன தெரியும்.

அப்பாவ அம்போனு விட்டுட்டு போய்ட்டானு , அவன அடுச்சிருவியா? அன்னைக்கு ஒருத்தன, அடுச்சிருவேன் கொளுத்தீருவேனு மிரட்டினயே, அது மாதிரி, மிரட்டப்போறியா? அவன் பாவம் மா, தெரியாம பண்ணீருப்பான், விவரம் பத்தாது, வேறொன்னும் இல்ல, என்னம்மா, எதாவது போசு, அவன விட்றுவல்ல, என்றார் அப்பாவியாய்.

அப்போ நீங்க என்ன ரவுடி, தாதான்னே முடிவு பண்ணீட்டிங்க, ரைட்?

இல்லம்மா என்றார் பயந்தவாறு,

அவன் அன்னைக்கு கடைய கொளுத்தப்பாத்தான், நான் அவன கொளுத்தீருவேன்னு சொன்னேன், உங்க மகன், உங்கல துன்புறுத்தலியே, நான் எதுக்கு அவர துன்புறுத்தனும்,

வேற எதுக்கு வர வச்சிருக்கம்மா?

சும்மா, அப்பாக்களை ஆனாதையாக்கும் பிள்ளையின் முகம் எப்படி இருக்கும்னு, பாக்கத்தான்.

ராமசாமி, பேச ஆரம்பித்தார். அப்ப என்னோட மகன் என்ன கூட்டீட்டு பேக வரலியா? காசு வாங்கீட்டு போகவா வந்திருக்கான் என்றார் வேதனைக்குரலில்.

அப்படி சொல்லமுடியாது, காசு இருக்குற அப்பாவ கண்டிப்பா கூட்டீட்டு தான் போவாரு, காசோட, ம்.. ஆனா எனக்கு தெரிய வேண்டியது அது இல்ல, நீங்க அவரோட போறீங்களா? இல்லையா?

இன் கேஸ் நீங்க போகணும்னு விருப்பப்பட்டா, அவர் எதிர் பாத்து வந்த பணத்த குடுத்து, கண்டிப்பா உங்கள அனுப்புறேன், நீங்க போக விரும்பலைன்னா, உங்களோட சொத்த அவன்ட இருந்து வாங்கிக்குடுத்து கண்டிப்பா உங்க மீதி லைஃப, கௌரவமா வாழ கெல்ப் பண்றேன் , இப்ப உங்க விருப்பம் என்ன?..

தயங்கிய ராமசாமி, நான் எந்த முடி வெடுத்தாலும், எம் பையன்மேல கைவைக்கக்கூடாது, சரிதான?

நான் எதுக்கு அடிக்கணும், எதுக்கு திரும்பத்திரும்ப அதையே கேக்குறீங்க, ராமசாமி,

பின்ன சாதாரணமனுசன், எனக்காக எதுக்கு இவ்வளவு பண்ணணும்மா நீ?

இம்ப்ரஸ்டு, நீங்க அறிவாளிதான், ஆனா யோசிச்ச காரணம்தான் தப்பு, நான் செஞ்சது, அவன கஷ்டப்படுத்த இல்ல , உங்கள சந்தோசப்படுத்த.. அவன் யாருன்னு தெரிஞ்சுக்க, அப்பத்தான உங்க சொத்த வாங்கிக் கொடுக்க முடியும்.

நௌ முட்டாள் சேகர் ஐடி கார்டோட வந்துட்டான். இவ்வளவும் உங்களுக்காக. நான் யோசிச்சதுக்கு காரணம், ஒன்லி யூ, ஐ லைக் யூ என்றாள்.

ராமசாமிக்கு பகீரென்றது, ஆஆ.. என பதட்டமானார். உள்ளுக்குள் சிரித்துக்கொண்ட ரஞ்சனி, செக்யூரிட்டியை அழைத்து, அவரோட போங்க, நான் இப்ப சொல்லாததெல்லாம் புரியும் என்றாள்.

குழந்தைகளை அழைத்துக்கொண்டு செக்யூரிட்டியுடன் சென்றார். அந்த பையங்கிட்ட அடி அடின்னு அடிச்சுட்டு, மூஞ்சியெல்லாம் கிழிச்சிட்டு, உன்ன காப்பத்துறதுக்குன்றா, இப்ப என்ன பிடிக்குமின்னு சொல்லீட்டு என்ன செய்வாளோ, தெரியலியே என பயத்தில் குழந்தைகள் கையை இறுக்கப்பிடித்துக் கொண்டார்.

அங்கே முதல் தளத்தில் கார்ட்டூன் படம் போட்ட அறைக்குள் சென்றவுடன், அனைவருக்கும் மகிழ்ச்சி, ராமசாமி தனக்குள் சிரித்துக்கொண்டார், எல்லாம் புரிந்ததால். நீ நல்லா இருக்கணும் என ரஞ்சனியை மனதில் வாழ்த்தினார். அவளுக்கு அடுத்த சில நிமிடங்களில் நடக்கவிருக்கும் ஆபத்து தெரியாமல்....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அங்கே ரஞ்சனியை பழி தீர்க்கத்துடிக்கும் ஒரு ஜூவன், தனது அடுத்த பிளானை ரெடி செய்தது, இதுதான் கடைசி பிளான். அதன் பிறகு நான் பிளான் போட, என்னோட எதிரி நீ உயிரோடு இருக்க மாட்டா என வன்மமாக தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.

ரஞ்சனி அவள் அறை பணியாளரை அழைத்து, ராமசாமி அண்டு கிட்சுக்கு என்ன வேணுமோ, பாத்து பண்ணுங்க, தென், சேகர எவ்ரி ஒன் அவருக்கு ஒருமுறை, என் ரூமுக்கும் கடைக்கும் இழுத்தடிங்க, ஓகே, ஐம் கோயிங் பார் த லண்ட்ச் என கிளம்பினாள்.

வீட்டில், ரஞ்சனியின் அன்னை கணவனுக்காக தோட்டத்தில் காத்திருந்தார். அதிசயமாக மகளின் கார் மதிய உணவிற்கு வீட்டிற்குள் நுழைந்தது, கணவன் காரும் அதையடுத்து உள்ளே நுழைந்தது.

ரஞ்சனி, தனது வேக நடையில், மா, நா என்னோட ரூமுக்கு போய்ட்டு பிரஸ் ஆகிவற்றேன், அதுக்குள்ள, லண்ட்ச டேபிள்ல ரெடி பண்ணுங்க, என்றாள் நடையிலேயே...

லதா, ஏய் நில்லுடி, எந்த சமயத்துல டி புறந்த, எப்ப பாத்தாலும் ஓடீட்டு, எனவும் ராஜன் மனைவியருகில் வந்து நின்றார்.

என்னங்க, இவ உங்க கடைய ஓட்டான்டி ஆக்க முடிவு பண்ணீட்டாங்க, ஆறு கிலோ தங்கத்த எவனுக்கோ தூக்கி குடுக்க போறாளாம், எங்க பாத்தாலும் அதே விளம்பரந்தான். ஏன்டி பரிசுன்ன, அத உங்கடைல இருக்குற பொருளா பாத்து குடுக்க வேண்டியது தான, உங்கப்பாவோட நகைக் கடைய ஏன்டி குறி வைக்கிற,

ராஜன், என்னம்மா அந்த விளம்பரம் , நானும் கேக்கணூன்னு நினச்சேன்.

இவரு ஒருத்தரு, நினச்சேன், துவச்சேன்னு, என்னடி இதெல்லாம் என்னடி னு நல்லா கேளுங்க ரஞ்சனி பா.

ம்ம்.. நீ கொஞ்சம் என மனைவியை அடக்கியவர், ரஞ்சனியிடம், சொல்லும்மா என்றார்.

என்ன மட்டும் அடக்குங்க, என லதா நொடித்துக்கொண்டார்.

அது சும்மாப்பா என்றவள் நகர முற்பட, லதா பிடித்துக் கொண்டார். ஒரு மனுசன் என்னம்மானு எவ்வோ அமைதியா கேக்குறாரு, கொஞ்சமாச்சும் மதிக்கிறாளான்னு பாருங்க, ஏதோ ஒரு ரூபா, இரண்டு ரூபா விசயம் மாதிரி சும்மாங்கிறா, ஒழுங்கா அப்பா கேக்குறதுக்கு பதில் சொல்லுடி..

லதா மா, நீ கொஞ்சம்... என்ற ராஜனிடம், சரி சாமி நான் பேசல..இது லதா.

அது...ஒரு நாயக்கூப்பிட வேண்டி இருந்தது, அதுனால, எலும்புத்துண்ட காட்டுனேன், குடுக்க மாட்டேன் கவலபடாத என்று லதாவிடம் பொரிந்தவள், மடமட வென சென்றுவிட்டாள்.

என்னங்க இப்ப யார நாயின்னு சொல்றா, திமிரு பிடிச்சவ,

உன்ன இல்லம்மா, அவ வேற எதோ பிரச்சனைய மனசில வச்சு பேசுறா,

பொய் சொல்லாதீங்க, உங்க பொண்ண விட்டுக் குடுக்காம பேசுவீங்க, நா யாரோ தான? என்றார் கண்ணீர் குரலில்.

அய்யோ அப்படி இல்லம்மா,

அப்போ, அம்மாட்ட மரியாதையா பேசுன்னு, ஒரு வார்த்த நீங்க சொல்லனுமில்ல,

லதாவின் கண்ணீரை துடைத்தவர், சரி , ரஞ்சனிய சாரி சொல்லச் சொல்லி, அவள பாரு , நீ எதுவும் பேசக்கூடாது, நான் சொல்லுவேன் அவ மன்னிப்பு கேப்பா, என ஏதேதோ சொல்லி மனைவியை சமாதானப்படுத்தினார்.

ராஜன் தனக்குள், சிரித்துக்கொண்டு, எல்லா வீட்லயும் அம்மா தான் அப்பாவ சமாதானப் படுத்துவாங்க, இங்க இப்படி என தனக்குள் எண்ணி நகைத்தவாறு, மனைவியை அனைத்து வீட்டினுள் அழைத்துச் சென்றார்.

நடந்த உரையாடல் எதுவும், தனக்கு கேட்காவிட்டாலும், பால்கனியிலிருந்து பார்த்த ரஞ்சனிக்கு தனது பெற்றோரின் அன்பு, அவர்களது செய்கையில் நன்றாக புரிந்தது.

தன்கணவர் இப்படி அமைவாரா? தானும் அம்மா அப்பா போல வாழ்வோமா என நினைத்தவள், அம்மாவின் படபடப்பும், தந்தையின் அமைதியும், மெல்லிய நகையை உண்டுபண்ணியது, ரஞ்சனி முகத்தில்...

சந்தோச மனதில் சாப்பிட அமர்ந்தவள், தந்தை சற்று அதட்டலான குரலில், என்ன ரஞ்சனி நீ அம்மாவ மதிக்கிறதே இல்ல, அவகிட்ட பேசுனதுக்கு ஒழுங்கா மன்னிப்பு கேளு என கிச்சனிலிருந்த அன்னைக்கு கேட்பதற்காக கத்தியவர், மகள் புருவத்தை சுருக்கவும் கண்ணடித்தார். அவள் மென்புன்னகையவள் ஆனாள்.

லதா, வரவும் ஐம் சாரி பார் த சாரி, எனவும் ராஜன் கண்களைவிரித்து மனைவியை பார்க்க, அவர் நினைத்ததுக்கு எதிர் மறையாய் லதா முகத்தில் புன்னகை இருந்தது,

லதாவிற்கு புரிந்தது எல்லாம் மகள் தன்னிடம் இருமுறை மண்ணிப்பு கேட்டது மட்டுமே, தந்தையைப் பார்த்து அதே போல் கண்ணடித்தவள், அமைதியாக உண்டாள்.

லதா மகளின் தட்டை கையிலெடுத்தவர், ராஜன் கேள்வியாய் மனைவியை பார்த்தார், மகளின் உள்குத்து புரிந்துவிட்டதோ என்று,

கணவனை கண்டுகொள்ளாமல், நல்லா சாப்புடு அம்மா இன்னிக்கு ஊட்றேன், மெலிஞ்சிட்டே போற கண்ணே, என மகளை தாங்கினார் லதா..

ரஞ்சனி, சாப்பிட்டு விட்டு காரில் சென்றவள், கூட்ட நெரிசலைத் தடுக்க, எப்போதும் பயன்படுத்தும் மக்கள் அதிகம் பயன் படுத்தாத ரோட்டில் சென்றாள், அந்த ரோட்டில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது, அதை தாண்டிச் சென்றவளின் முன் அதே போல் ஒரு லாரி தாறுமாறாக வலைந்து வலைந்து வந்தது.

சரி என, ரிவர்சில் செல்ல எத்தனிக்கும் போது, பிரேக் டௌன் என நினைத்த லாரி பின்னால் ஸ்டார்ட் செய்யப்பட்டது, மனதில் பொறி தட்ட, இரண்டு வாகனமும், தன் காரை நெருங்கிவிட, வேகமாக செயல் பட்டவள், பக்கத்து சீட்டிலிருந்த தனது கைப்பையை எடுத்துக் கொண்டு, அதை கேடயம் போல பாவித்து, நடைமேடையில் குதித்தாள்.

நடைமேடையில் அவள் விழுந்த நொடி, இரண்டு வாகனங்களுக்கிடையில் கார் அப்பளமாகக் கிடந்தது, நடந்தவிபத்தில் காரின் உடைந்து துணுக்கு நாலாபுறமும் தூக்கி எறியப்பட, அதிலிருந்து சிதறிய பெரிய தகரம், ரஞ்சனியை பதம் பார்த்து மூடியது, அவள் மயக்கமானாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அலைக்கழிக்கப்பட்ட, சேகரும் அவன் மனைவியும், சோர்ந்தனர், என்னங்க சாப்பாட்டு நேரமாச்சு சாப்பிட்டு, அவங்க ரூமுக்கு போவோம் என்றாள் சேகரின் மனைவி,

குழந்தைகளை அழைத்துவர, ராமசாமியை நாடிச்சென்றால், அங்கே மூவரும் உண்டு கொண்டிருந்தனர். வந்த மகனிடம், காலை உணவு மதிய உணவிற்கான பில்லை நீட்டியர், அதற்கு மேல் மகனை கண்டு கொள்ளாமல் உண்டார்.

எந்நேரம்! என்ற சேகர், வாடி அதுதான் அவங்க சாப்பிடுறாங்கல்ல, நாமலும் போய் சாப்பிட்டு அந்தம்மா ரூமுக்கு போவோம், எப்பபோனாலும், அம்மா மீட்டிங்ள இருக்காங்க, ஒருமணி நேரம் கழிச்சு வாங்கங்றாங்க, என சலித்துக்கொண்டு சென்றான்.

ராமசாமி, மனதில் மகன் மேல் பாசம், இருந்தும், அவனின் ஆசைக்கும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் பண்பிற்க்கும் அவனுக்கு ரஞ்சனி அவள் பாணியில் பாடம் புகட்டுவதாக நினைத்தார்.

எனக்கு இந்த கடையை சுற்றிக்காட்டிய மகனுக்க, ரஞ்சனி, கடையை சுற்றிக் காட்டுகிறாள் என நினைத்தவர், ரஞ்சனி என்றதும் இப்போது பயம் போய் பாசம் வந்தது.

காரணம், அவர் முதல் நாள் குழந்தையுடன் கடையில் பொருட்கள் வாங்க சிரமப் பட்டவருக்கு உதவும் பொருட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு பொழுதை கழித்தார், அப்போது ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்க சிரமப்பட்டதை கண்டவர், இரு நீள துணி கேங்கருக்கு மத்தியில் அவளை பால் புகட்ட சொல்லி ஒருபுறம் அவரும் மறுபுறம் அப் பெண்ணின் கணவரும் திரும்பி நின்று காவல் காத்தது, போல சில விசயங்களைக் ரஞ்சனி கண்டதால்தான், தன்னை திட்டவோ விரட்டவோ இல்லை போலும் என நினைத்தவர், குழந்தைகள் அறையின் ஒருபகுதியாக இருந்த தாய் சேய் அறையை திருப்தியாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டார்.

வேகமாக உள்ளே நுழைந்த சேகர், போச்சுப்பா போச்சு என்றான் ராமசாமியிடம்.

அந்த ஓனருக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சாம், உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லையாம், ஆனா கடைக்கி வர ஒருமாசமாகுமாம், இப்பவே அது இதுன்னு இங்க இருக்குறவங்க எல்லாரும், கைல காசு கொடுக்காம அலக்கழிக்கிறாங்க, ஒரு மாசங்கழிச்சுன்னா நம்மலியே மறந்துட்வாங்க என்றான் தன் கவலையில் உளண்றவன்.

அது எப்படிங்க தராம போவாங்க, அவங்க கொடுத்த விளம்பரத்தல்லாம் சேத்து வச்சிருக்கேன், கேஸ் போட்டாவது வாங்கீடுவோம் நீங்க கவல படாதீங்க என்றாள் அவன் பத்தினி.

ஒருவர் படுகாயப்பட்டு இருக்க பணத்தைப் பற்றி போசுபவரிடம், எதைச்சொல்ல,என நினைத்தவர், தனக்கு வரும் பதட்டம் ஏன் இவர்களுக்கு இல்லை, சை என நினைத்தவர் அந்த முடிவை எடுத்தார்.

நீ பிள்ளைங்கள கூட்டீட்டு வீட்டுக்கு போப்பா, எனக்கு இங்க குழந்தைங்கள பாத்துக்குற வேல தந்திருக்காங்க, நா அப்படியே இங்க இருந்துக்கிறேன். உன் போன் நம்பர சி20 மோளாலர்ட குடுத்துட்டு போ, ரஞ்சனி மா வந்தா கூப்பிட சொல்றேன். என்றார்.

எதுக்குப் பா நா இருக்கும் போது இங்க தங்கீட்டு, ஒரு மாசம் கழிச்சு சேந்தே வருவோம் என்ற மகனின் சொல்லை எதிர்பார்த்து ஏமாந்தார். எடுத்த முடிவில் உறுதியானார்.

அதுவும் சரிதாங்க, வீட்லனா மாமாக்கு பொழுதும் போகாது, இல்ல மாமா? நாங்க கிளம்பறோம் என்றவள், கணவனையும், பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றாள்.

சி 20 யாருன்னு விசாரிச்சு மறக்காம போன் நம்பர் குடுங்க, அப்படியே அவர் நம்பரையும் வாங்கிக்கோங்க, என்ன ? என்ற மருமகளின் சத்தம் காற்றோடு கரைந்தது.

தந்தையை விட்டுச் செல்கிறவன், அவசரத்துக்கு கூப்புடுங்க என செல் வாங்கிக்கொடுக்க வேண்டாம், ஆனால் அவசரத்திற்கு தொடர்ப கொள்ள போன் நம்பர் கூட தராமல் மனைவியின் பின்னால் செல்லும், மகனின் முகம் இப்போது, முன்னிலும் அதிக விகாரமாய் தெரிந்தது ராமசாமிக்கு.

தனது நினைவிலிருந்து வெளிவந்தவர், செக்யூரிட்டியிடம் ஓடினார்.

ராமசாமி, ரஞ்சனி அம்மாக்கு எப்படி இருக்காம், எந்த ஆஸ்பத்ரீல சேத்திருக்கு என்றார்.

தெரிலப்பா, ஆனா உயிருக்கு ஒன்னுமில்லையாம்,

எந்த ஆஸ்பத்ரீன்னு தெரியுமா? நாம போய் பாப்போமா?

நீங்க வேற அதெல்லாம் பெரிய ஆஸ்பத்ரியா இருக்கும், நம்மல்லாம் கிட்டக்கூட போக முடியாது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா? பார்ப்போம்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏழாம் பாகம்...

ரஞ்சனியின் முதுகில் தகரம் பதம்பார்த்திருந்தது, உள்ளே அவளுக்கு சிகிச்சை நடைபெற்றது, வண்டியை நிறுத்திவிட்டு குதித்ததால், கை கால்களில் சிராய்ப்பு தவிர வேறில்லை,

டாக்டர் முதுகில் 22 தையல் போட்டிருப்பதாகவும், வலிக்கு மருந்து கொடுக்கப்பட்டிருப்பதால், யாரும் தொந்தரவு படுத்த வேண்டாம், என்றார்.

லதா 22தையல் என்றவுடன் கண்ணீர் வடிக்க ஆரம்பித்தவர், ராஜனின் தோள்களில் தேம்பினார். ராஜன்தான் மனைவியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, தனது வருத்தத்தை மறைத்து, டாக்டரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

டாக்டர் சென்றவுடன், போலீஸ் வந்தது. ரஞ்சனியின் பையை ஒப்படைத்துவிட்டு, உங்களுக்கு யார் மேலயாவது, சந்தேகம் இருக்கா, ஏன்னா இத பாத்தா பக்கா பிளான் மாதிரி இருக்கு எனவும், லதா நிமிர்ந்து போலீசைப் பார்த்தார்.

சீ, திஸ், என்றவர் தனது மொபைலில் ஆக்சிடண்டுக்கு பின் எடுக்கப்பட்ட போட்டாவை காட்டினார். காரின் முன் பகுதி, ஒருலாரி டயராலும், பின்பகுதி மற்றொரு லாரி டயராலும் முற்றிலும் நாசம் செய்யப்பட்டிருந்தது. இரு லாரிகளுக்கும் நூலளவு இடைவெளிதான் இருந்தது, அதை , அந்த இடைவெளியை கார் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அடையாளம் தெரியாத தகர பிளாஸ்ட்டிக் பொருட்கள் நிரப்பி இருந்தது.

லதா ஸ்தம்பித்துவிட்டார். அவரின் தொண்டைவரை வந்த கேள்வி, கேட்க முடியாமல், நெஞ்சம் ரணத்து இருந்தது. ராஜன் போலீசிடம், இது நடக்க வாய்ப்பே இல்லை, மிகுந்த புத்திசாலித்தனமாக ரஞ்சனி டிரைவ் பண்ணுவா, இது வரை கார் வாங்கின மூனு வருசத்துல, ஒரு சின்ன ஸ்ராச் கூட பட்டதில்ல, இந்தளவுக்கு எப்படி? என்றார்

எக்சாட்லி சார், டிரைவிங்ல நல்ல நாலேஜ் இருந்ததால தான் , கண்ட்ரோல் போன பின்னாடி, நடக்கப் போறதை யூகிச்சு குதிச்சிருக்காங்க, இல்லைனா... ஜம் சாரி என லதாவின் கேட்க முடியாத கேள்விக்கு விடையளித்தார்.

லதா பெருங்குரலெடுத்து அழவும், சாரி மேம் இது என்னோட டியுட்டி என்றவர், ரஞ்சனி மேடம் பதில் சொல்ற அளவுக்கு தேறினதும் கூப்பிடுங்க, என்றவர், ராஜன் மனைவியை தேற்றுவதைப் பார்த்து அமைதியாக விலகிச் சென்றார்.

ஒருநாள் முழுவதும் வலி தெரியாமல் இருக்க, மயக்கத்தில் ரஞ்சனி வைத்திருக்கப்பட்டாள். லதாவிற்குக் கூட அனுமதி அளிக்கப்படவில்லை. அதன்பின் மூன்று நாட்கள், பெற்றோருக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், வலி காரமாக கொடுக்கப்பட்ட மாத்திரையால் அதிகம் போசவில்லை, தூங்கினாள்.

லதாவிற்கு துக்கம் தாளவில்லை, மகளின் நிலைகண்டு, எந்த நேரத்துலடி பிறந்த ஓடிக்கிட்டே இருக்க, நின்னு போசுடி என பலமுறை அதட்டியவருக்கு, மகள் அமைதியாய் படுத்திருப்பதைப் பார்க்க தாங்க முடிய வில்லை, மகளின் கையை பிடித்துக் கொண்டு அழுது கரைந்தார். மகளைத் தேற்றுவதை மருத்துவமனை பார்த்துக்கொள்ள, ராஜன் மனைவியைத் தேற்றினார்.

அரட்டி, மிரட்டி லதாவை சாப்பிட வைத்தார். இப்படியே உக்காராத லதா மா, அப்பறம் பொண்ண டிஜ்சார்ஜ் பண்ணும்போது, உன்ன அட்மிட் பண்ணீட்டுதான் போகணும், வீட்டுக்கு போனப்பறம் அவள கவனிக்க நீ தெம்பா இருக்க வேணாமா? என சாப்பிடச் சொன்னார்.

அப்போதும் லதா, ஏங்க அவ நடக்க ஆரமிச்சதிலிருந்து, அவ நின்னு பொறுமையா பேசி நா பாத்ததில்ல, நீங்க பாதுதிருக்கீங்களா?, எதையாவது யோசிப்பா, இல்ல ஓடி ஓடி வேல வேலன்னு இருப்பா, இப்ப இப்படி, சத்தமே இல்லாம படுத்திருக்காளே, எனக்கு சாப்பாடு இறங்குமா என்றார்.

ராஜனுக்கும் மகளின் நிலைகண்டு துக்கம் தான், இருந்தும் மனைவியிடத்தில், அவள திரும்ப ஓடுற குதிரையா ரெடி பண்ணத்தான், ஒழுங்கா சாப்பிடு என்றவர், தனது துக்கத்தை முழுங்கியவாரு வெளியே சென்றுவிட்டார்.

ராஜன், துக்கத்தை மறைத்து, ரஞ்சனிக்கி அடி ஒன்னும் பலமில்ல, சின்ன சிராய்ப்புதான், ரெஸ்ட் எடுத்துட்டு வேலைக்கு வந்திடுவாங்க, என கடை ஊழியர்களுக்கு அறிவித்து, அவர்களின் குழப்ப பேச்சுக் களுக்கு முற்றுப்பள்ளி வைத்தார்.ராமசாமி உட்பட்ட ரஞ்சனி விசுவாசிகள் சந்தோசப்பட்டனர்.

ரஞ்சனி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். ஒருநாள் வீட்டில் இருந்தவள், மறுநாள் அலுவலகம் கிளம்பினாள். அவளுக்காக புதிய கார் வீட்டில் இருந்தது.

லதா எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை. அட்லீஸ்ட் டிரைவரையாவது போட்டுக்கலாம் என சொன்ன தாயின் பேச்சையும் கேட்கவில்லை. ஐ நோ, வாட் ஐ ஆம் டுயிங் என்றவள் அடுத்த நொடி கிளம்பிவிட்டாள்.

என்னங்க, இவ என்னங்க இப்படி பண்றா, இவ காயத்துக்கு, காலையும், சாங்காலமும் மருந்து கட்டணுமே, இவ என்னங்க ஆபீஸ் போயிட்டா, நா அழுகுறேன்னு என்ன மருந்து போட்டு விட அனுமதிக்கல,சரினு,நர்ஸ் வச்சாச்சு, அந்ந புள்ள இவளுக்காக இங்க உங்காந்துருக்கு, இவ என்னன்னா ஆபீஸ் போறா, நீங்களும் ஒன்னும் பேச மாட்றீங்க. என லதா பொறிந்தார்.

ராஜன், பேசுவோம், நீ டென்சன் ஆகாத...

ஆமா எப்ப பேசுவீங்க, அவ போயிட்டா, அவ என் சொல்படியும் கேக்க மாட்றா, நீங்களும் கண்டிக்க மாட்டெங்கிறீங்க, அந்த போலீஸ்காரன் இத பிளான்னு சொல்றான், நம்மலால அவள பாதுக்கவும் முடியாது, நீங்க மாப்பிள பாருங்க,நல்லா போலீசு, மிலிட்ரி அது மாதிரி அப்பத்தா இவள நல்ல கண்ட்ரோல் பண்ணி வச்சிப்பான்.

மாப்பிளயா? ஆர் யூ சுயர்?

ஆமா, நிஜமாத்தான்.

அவகிட்ட ஒருவார்த்த கேட்டுட்டு, முடிவு பண்ணிக்கலாம்.

முதல்ல மாப்பிள நமக்கு பிடிச்சமாதிரி பாப்போம். அப்பறமா அவகிட்ட மாப்பிளய பிடிச்சிருக்கானு கேட்டுக்கலாம். இப்பவே கேட்டா அந்த சண்டிராணி ஒத்துக்கமாட்டா.

அதுக்கில்ல லதாமா, அவ யாரையாவது விரும்புனா? ..

அவ, ரஞ்சனியா! நீங்கவேற இவ காட்ற கடுமைக்கு முன்னாடி எவனும் தைரியமா பேசவே பயப்படுவானுங்க, இதுல லவ்வாம், அதெல்லாம் கண்டிப்பா இருக்காது. எம் பொண்ணப்பத்தி எனக்குத் தெரியும்.கடைசி வரியை சொல்லும் போது லதாவின் குரலில் இருந்தது அவ்வளவும் பெருமை மட்டுமே.
 
Top