Uthaya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமசாமி ரஞ்சனியின் அறைக்கு சென்ற போது ராஜா திட்டு வாங்கிக்கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழைந்த உடன் ராஜாவைப் பார்த்து முறைத்தவள், ஐ நீடு வித் இன் ஒன் ஹவர் என்றாள்.
ராமசாமி இதில கோபமா வேற இருக்காங்க போல என நினைத்தவர் ரஞ்சனிக்கு எதிரில் அமர்ந்தார். ராமசாமி ஒருவர் மட்டுமே ரஞ்சனியின் அறைக்கு அவள் கூப்பிடமலே செல்லும் உரிமை உள்ளவர். அது அவரது பணத்தாசை இல்லாத குணத்திற்கும், கடையில் வாடிக்கையாளருக்கு அவர் செய்யும் உதவிகளால் கிடைத்த சலுகை.
கடையில் எந்த சமயத்திலும் யாருக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் ராமசாமி மூலமாகத்தான் ரஞ்சனி இடம் சொல்வார்கள். ரஞ்சனி கணினியை விட்டு கண்களை அகற்ற வில்லை, கைகள் வேகமாக தட்டச்சு செய்தது.
சொல்லுங்க ராமசாமி என்றாள் கண்களை திருப்பாமலேயே. அவருக்கோ மனதில் உங்களை சாப்பிட வைக்கத்தான் வந்தேன் என ஒரு முதலாளியைப் பார்த்து எப்படி சொல்வது ன தெரியாமல் அது ரஞ்சனி மா என்றார் வார்த்தைகள் கிடைக்காத தடுமாற்றத்தில்.
ஒரு நிமிடம் புருவத்தைச்சுருக்கி அவரை க்கூர்ந்தவள், என்ன?.. என்னாச்சு? என்றாள்.
அவர் தனக்குள் வார்த்தையை தேடிக்கொண்டிருக்கவும், கணினியை அணைத்தவள், சொல்லுங்க.. எதுவும் பெரிய பிரச்சனையா? என்றாள் ரஞ்சனி.
அவர் பதில் சொல்லாமல் பட்டென பிரைட் ரைசை மேசை மேல் எடுத்து வைக்கவும், அவரை கூர்ந்தவள், அம்மா பேசுனாங்களா? என்றாள்.
நீங்க சாப்பிடாம இருக்கீங்கனு, உங்களுக்கு இத குடுக்க சொன்னாங்க என்றார் சற்று திணறலாக.
பல்லை கடித்தவள், எதாவது முக்கியமான பிரச்சனைனு நினைச்சா, சோ டிஸ்கஸ்டிங், நீங்க போலாம், நான் சாப்டிப்பேன் என்றவள், கணினியை உயிர்ப்பித்தாள்.
அவர் அசையாமல் உட்காருந்திருக்கவும், கண்டும் காணமல் அவளது வேலைகளைச்செய்ய ஆரம்பித்தாள். சிலர் அவர்கள் வேலையை பெண்டிரைவில் கொடுத்தார்கள், சிலர் பைலில் கொடுத்தார்கள், சிலர் திட்டு வாங்கினார்கள், சிலர் ரஞ்சனியின் முறைப்பிற்கே அஞ்சி ஓடி தவறான வேலையை சரி செய்தார்கள். இப்படி வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் பொழுதை ரஞ்சனி அறையில் கழித்தார். மணி நான்கு என காட்டியது. ராமசாமியால் உட்கார முடியவில்லை. பசி மயக்கமே வந்துவிடும் அளவிற்கு கிறங்கினார்.
இதற்கு மேல் முடியாது என நினைத்தவர், ரஞ்சனி மா எனக்கு பசிக்குது , வாங்க ஒரு பத்தே நிமிடத்துல சாப்பிட்டு வேலை பார்க்கலாம் என்றார் பசி உந்தித் தள்ள.
நீங்க சாப்பிடலயா? என கண்களை உருட்டியவளை பார்த்தவர், ம்ம் என்றார் முணங்களாக.
எதுக்..கு? என்றாள் அழுத்தமாக, உங்கள சாப்பிட வைக்கணுமே அதுக்குத்தான், உங்களுக்கு பசிக்கலயா? என்றார் ராமசாமி.
இல்ல, நீங்க சாப்பிடுங்க, ம்.. உடனே என்று அதட்டினாள். அவரோ அசைந்தாரில்லை,
அப்போ உங்கள கட்டி போட்டு சாப்பாடு திணிக்க சொல்லீரு வேன், ம்.. சாப்பிடுங்க...என்றாள் ரஞ்சனி.
நீங்க எதுக்கு சாப்பிடமாட்றீங்க, என ரஞ்சனியைப் பார்த்து ராமசாமி கேள்வி எழுப்ப, நான் நீங்க சாப்பிடுறத பத்தி பேசுறேன் ராமசாமி, டோன்ட் ஆஸ்க் கொரிஸ் டூ மீ, எனக்கு வேலை இருக்கு..
நீங்க எங்கிட்ட பேசுன இந்நேரத்துக்கு சாப்பிட்ருக்கலாம் என அவர் குழந்தை தனமாக பேச, ரஞ்னியின் இதழில் மென் புன்னகை தோன்றியது.
இதுதான் சாக்கென, மடமட வென பிரைடு ரைசை திறந்து அவர்முன் வைத்தவர், ஸ்பூனை ரஞ்சனியின் கையில் திணித்தார்.
அவருடைய சாப்பாட்டையும் திறந்து ஒரு வாய் உண்டவர் அதன் பின் தான் ரஞ்சனியை நிமிர்ந்து பார்த்தார். ராமசாமியை அதிக நேரம் காக்கவைத்தது, அதுவும் அவர் தன்னால் சாப்பிடாமல் காத்திருந்ததை நினைத்தவள், சாப்பிட ஆரம்பித்தாள்.
கதவை திறந்து கொண்டு ஊழியர்கள் வர, இப்பத்தான் சாப்பிட ஆரமிச்சாங்க அதுக்குள்ளயா என நினைத்த ராமசாமி, சைகையால் அவர்களை தடுத்தவர், அவர்களை பத்துநிமிடம் கழித்து வரச்சொன்னார்.
ரஞ்சனிக்கு தெரியக்கூடாது, அவள் சாப்பிடும் வரை அவளை யாரும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என அவர் சத்தமே எழுப்பாமல் சைகையில் சொல்ல, ரஞ்சனியும் அதை சத்தமில்லாமல் கவனித்தாள்.
கடைசி மிடரில் அவளுக்கு பொறை யேற தண்ணீரைக்குடித்தவள், அடுத்த நொடி சிங்கில் அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டாள்.
ரஞ்சனி பாத்ரூமிலிருந்து வெளிவர, அவளுக்கு தண்ணீர் கொடுத்த ராமசாமி என்னாச்சுமா, என்றார் அக்கறைக்குரலில்.
நத்திங், காலைல இருந்து சாப்பிடாம இப்ப சாப்டது ஒத்துக்கல, நத்திங், நீங்க சாப்பிட்டீங்கனா உங்க பிளோருக்கு போங்க, என்றாள் ரஞ்சனி.
ரஞ்சனி பசி இல்லை என்று சொன்னது, அவளின் மெலிவு, இப்போதைய வாந்தி, பவித்ரனின் போன மாத சந்திப்பு அனைத்தும் அவருக்கு வேறு செய்தியைக் கூறியது.
ரஞ்சனி மா கைய குட்ங்க என்று அவளது நாடியை பரிசோதித்தவருக்கு, சந்தேகம் உறுதியானது.
எனக்கு ஒன்னுமில்ல, என்றவளை கூர்ந்தவர், இருக்கு வயித்துல குழந்த என்றார்.
ரஞ்சனிக்கு இதயம் நின்று துடித்தது, அதைத்தொடந்து பவித்ரனின் ஞாபகங்கள் வர, சுகமாக உணர்ந்தாள். ரஞ்சனியின் முகத்தில் அதிர்ச்சிக்கு பதிலாக ஆனந்தம் தோன்றவும் ராமசாமி குழம்பினார்.
ராமசாமி, தேங்ஸ் என்றவள், அவள் டேபிளில் இருந்த சாக்லேட்டை எடுத்து அவரிடம் திணித்தாள். நீங்க யார்டயும் சொல்ல வேண்டாம், கல்யாணத்துக்கு இன்னும் மூனு நாள்தான் இருக்கு, என்ன இருந்தாலும் இது பிபோர் மேரேஜ், கல்யாணம் ஆன பின்னாடி எல்லாருக்கும் சொல்லிக்கலாம் என்று அவரை வழி அனுப்பி வைத்தாள்.
அவருக்கு இந்த கர்பம் திருமணத்திற்கு முன் தவறாகப்பட்டாலும், ரஞ்சனி முகத்திலிருந்த மகிழ்ச்சிக்காக, அவரது கருத்தை சொல்லாமலே விடை பெற்றார்.
ரஞ்சனி வேகமாக பவித்ரனுக்கு அழைத்தாள், அவளது பெயரை பார்த்தவன், போனை அணைத்துவிட்டான்.
மது பைலின் கையெழுத்திற்கு நிற்க, அவனது டேபிலில் இருந்த லேண்ட்லைன் ஒலித்தது. பேனை எடுத்ததும் ஹலோ பவி என்றாள்.
எதுவும் பேசாமல் போனை மதுவிடம் தந்தவன், தான் இல்லை என சொல்லும்படி சைகை செய்தான்.
மது ஹலோ எனவும், பவித்ரன் இருக்காரா? என்றார் ரஞ்சனி.
சார் இஸ்இன் மீட்டிங், நீங்க என்றாள் மது, பவித்ரனை பார்த்தபடியே
ஓ என ஒற்றைச்சொல்லில் தன் ஏமாற்றங்களை மறைத்துக்கொண்டு, நான் ரஞ்சனி, அவர் உட் பீ, வந்ததும் பேச சொல்லுங்க என்றவள் போனை வைத்துவிட்டாள்.
மதுவின் காது ரஞ்சனி என்ற வார்த்தையை எதிரெலிக்க, மடமடவென பைலை பவித்ரனமிருந்து வாங்கிக்கொண்டவள், அவளது இடத்திற்கு ஓட்டம் பிடித்தாள்.