All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரனின் ஒன்றுவிட்ட தம்பி ரஞ்சித், பவித்ரனைக் காண சத்யாதேவி வீட்டிற்குச் சென்றான்.

ரஞ்சித்திற்கு, பவித்ரன் ரோல் மாடல், அவனைப் போலவே, கல்லூரியில் படித்தவன், பட்டம் முடிந்த கையோடு, லண்டனில் அவன் படித்த கல்லூரிக்கே செல்ல, அவனிடம் வழிமுறைகளைக் கேட்கவும், அதற்குரிய புத்தகங்களை அவனிடமிருந்து இரவல் வாங்கிச்செல்லவும் வந்தான்.

சத்யாதேவிக்கு ரஞ்சித்தை மிகப்பிடிக்கும், படிப்பில் பவித்ரனுப்போலவே ஆர்வமாக இருந்தாலும், பவித்ரனிடம் இருக்கும் பிடிவாதமும் மூர்கத்தனமும் அவனிடம் இல்லாதது அதற்கு ஒரு காரணம்.

பவித்ரன் இல்லை வர எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும் என சத்யாதேவி சொன்னதும் ரஞ்சித் முகம் வாடினான்.

பெரியம்மா, அண்ணாட்ட புக் வாங்கிதான் நான் படிக்கணும் அப்ளை பண்ணணும், சரி அண்ணணோட போன் நம்பர் குடுங்க, என்றான்.

மலைப்பகுதியில் சிக்னல் சரியாகக் கிடைக்காமல் அவனது செல் உறங்கிவிட, அவர் லேண் லைனை நம்பரைத் தந்தார்.

பவித்ரனிடம் தொலைபேசியில் பேசி விவரங்களை அறிந்து கொண்டவன், அழைப்பை துண்டித்துவிட்டு, பெரியம்மா அண்ணா புக்க எடுத்துக்க செல்லீட்டாங்க நான் போய் எடுத்துக்கிறேன் என்றவன், முகம் மலர மாடி ஏறி ஓடினான்.

அவரும் சிரித்துக் கொண்டே தனது அலுவல்களை கவனிக்கச் சென்றார்.

சிறிது நேரத்தில் திரும்ப ஓடி வந்தவன், ஒரு புக் கிடைக்கல, வாங்க தேடிக்குடுங்க என சிறுபிள்ளையாய் அழைத்தான்.

அவனுக்கு மறுப்பு கூற விருப்பமில்லாமல் பவித்ரன் அறைக்குச் சென்றார் சத்யாதேவி.

புத்தக அலமாரிகளில் தேடியவர்கள், அடுத்ததடுத்து அவனது டிரா, பரன், அலமாரி என அனைத்திலும் துலாவ, சத்யா தேவின் கையில் ரஞ்சனியின் புகைப்படம் கிறுக்கி நாசம் செய்யப்பட்டதுடன் கூடிய ஒரு கடிதம் கிடைத்தது.

ரஞ்சனியின் புகைப்படம் முன்னால் பின் அடிக்கப்பட்டு இருந்தது, அந்த டிடக்டிவ் ரிப்போட், அதில் அவள் கண்கள் முழுதாக கிருக்கி அழிக்கப்பட்டு இருந்தது. இதை ஒரு நாலு வயது சிறுவன் செய்திருந்தால், அது விளையாட்டு அல்லது சேட்டை, கணவன் மனைவியின் படத்தை இப்படி நாசம் செய்தால், அப்போது அவளை என்ன செய்ய காத்திருக்கிறான் என்று நினைத்த மாத்திரத்தில் அவரது, இடது மார்பு சுருக்கென தைத்தது. மார்பில் கைவைத்தவர், அப்படியே மடக்கி கட்டிலில் அமர்ந்தார்.

பெரியம்மா இங்க இல்ல, அவங்க பழைய புக்கெல்லாம் எங்க இருக்கும் என்றான் அவரைப் பார்க்காமலே.

கீழ ஸ்டோர் ரூம் செல்வ்ல இருக்கும் என்றவர், அவன் நகர்ந்து சென்றதும் கடிதத்தை படிக்க ஆரம்பித்தார்.

அதில், ரஞ்சனியின் குண நலன்கள் முதலில் எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்தவரால் நம்ப இயலவில்லை. மிகவும் கருமையாக நடந்து கொள்வது, இரக்கமற்ற சுபாவம், கடை களிலோ, வெளியாட்களிலோ, தனக்கு ஆகாதவர்களை அவள் அடிக்கும் தந்திரம் என அனைத்தும் விவரிக்கப்பட்டிருந்தது.

எதிரிகளை, அவள் அழிப்பது, எழுதப்பட்டிருந்த இடத்தில் குறிப்பாக, பேனாவால் அடிக்கோடிடப்பட்டிருந்தது.

அடுத்து சில ரஞ்சனிக்கு தெரிந்த, போலீஸ், கடை டீலர் என பட்டியலிடப் பட்டிருந்தது. அடுத்தது கடையின் வேலை செய்பவரின் பெயர்கள், அதில் ரஞ்சனிக்கு அதிக விஸ்வாசமுள்ளவர்கள் வரை பட்டியலிடப் பட்டிருந்தது. மணி என்பவன் பெயர் கோடிடப்பட்டிருந்தது.

என்னவென புரியாத அவர் கடைசிபகுதியைத் திருப்ப, அதில் எழுதப்பட்டிருந்த பவித்ரனின் கையெழுத்தைக்கண்டு திடுக்கிட்டார்.

உன்ன அழிக்காம விடமாட்டேன் டி என எழுதி இருந்தது.

சத்யாதேவிக்கு, மகனின் குணம் நன்கு தெரியும், இந்த கடிதத்தை படித்ததும் மருமகளின் குணமும் புலப்பட்டது.

இதில் யாரால் யாருக்கு ஆபத்து என்றாலும் வலி அவருக்குத் தான்.

மடமடவென கடிதத்தை இருந்த இடத்தில் வைத்தவர் ஊட்டிக்கு அழைத்தார்.

ஊட்டியில் அடுத்து நடக்கப்போகும் ஆபத்தை க்உணர்ந்த வானமும் வெடித்து சிதறி, இடி முழங்கியது.

அதன் இடிமுழக்கத்தில், ஊட்டி தொலைபேசி இணைப்பு வேலைசெய்யவில்லை.

அடுத்து யாருக்கு கூப்பாடலாம் என எண்ணியவரிடம் ரஞ்சித் பெரியம்மா புக்கு கிடச்சிருச்சு நான் கிளம்புறேன் என்றான்.

அவனை உபசரிக்கக் கூட இல்லாமல் தலையாட்டி அனுப்பி வைத்தார்.

அடுத்து ரஞ்சனியின் அன்னை சத்யாதேவியை அழைத்தார்.

பவிமா நல்லாயிருக்கீங்களா? என்றவரிடம், ஒப்புக்காக பேசியரின் மனம் முழுவதும் எப்படி பவித்ரனை தொடர்பு கொள்வது என்ற எண்ணம் தான்.

அவர் ரஞ்சனீட்ட பேசி நாலுநாள் ஆகுது அவ போன் ஸ்விச் ஆப்னே வருது. அவ இருந்தா கொஞ்சம் குடுங்களேன் என்றதும் சத்யாதேவிக்கு பகீரென்றது.

பவி தனக்கும் பேசவில்லை, ரஞ்சனியும் பேசவில்லை, புதிதாக திருமணமானவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என பேசாமல் இருந்தால், ரஞ்சனி ஊட்டி சென்றதையே அவள் தாயிடம் கூறவில்லையா ஏன்? என்றவர் மனதில் ஏதோ தவறாகப்பட்டது.

ஹலோ, ஹலோ பவிமா.. என லதா கூப்பிட, அவளும், பவித்ரனும், ஊட்டிக்கு ஹனிமூன் போயிருக்காங்க, ரஞ்சனி உங்ககிட்ட ஒன்னும் சொல்லலியா என்றார் சத்யாதேவி.

என்ன பவிமா நீங்க, அவளுக்கு குளிர் ஒதுக்காதுன்னு சொன்னேனே, பின்ன எதுக்கு அனுப்புனீங்க, என்றார் லதா.

பவி உங்ககிட்ட நான் பேசிக்கிறேன்னு சொன்னானே, ஒன்னும் சொல்லலியா என்றார் சத்யாதேவி.

இல்லியே, இந்த பொண்ணும் சொல்லல, எனக்கு பயமா இருக்கு, அவளுக்கு, உடம்பு சரியில்லாம போச்சுன்னா ஒரு மணி நேரத்துல ஒரு இன்செக்சன் போடணும், இல்லாட்டி உயிருக்கே ஆபத்து, நீங்க பவிக்கு போன் பண்ணி உடனே வர சொல்லுங்க, பவிமா என்றார் லதா.

இப்பதான் பவி, ரஞ்சித்ட பேசினான், அதுக்குள்ள என்னமோ லைன் கிடைக்கல, எப்படியும் கொஞ்சநேரத்துல சரியாயிடும், நான் பேசி உடனே இரண்டுபேரையும் வர சொல்றேன், கவலப்படாதீங்க, என்றார் சத்யாதேவி.

திரும்பத்திருப்ப, ஊட்டிக்கு அழைத்தும் இணைப்பு கிடைக்கவில்லை. சத்யாதேவிக்கு, மகனின் மருமகள் மீதான வெறுப்பு, பழிஉணர்வைக் கடிதம் மூலம் கண்டவருக்கு இருப்பு கொள்ளவில்லை.

தானே சொன்று பார்ப்போம் என டிரைவருடன் ஊட்டிக்கு கிளம்பிவிட்டார்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுடைய கதையை பொதுவாக நீங்கள், வெள்ளி, சனி , ஞாயிறுகளில் எதிர் பார்க்கலாம்.

வாரத்திற்கு இரண்டு பகுதிகள் தர முயற்சிக்கிறேன்


நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பத்தொன்பதாம் பகுதி...

மலர் தனது கதையை ரஞ்சனியிடம் கூறினாள்.

நான் கோவையில் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னை யாரோ பின் தொடர்வது போல இருந்தது.

நான் பார்க்க நன்றாக இருப்பதாக என் தோழிகள் கூறுவார்கள். அதனால் பல தொல்லைகளும் உண்டு, அதில் இதுவும் ஒன்று, அவனே பின்னால் சுற்றிவிட்டு போய்விடுவான் என நினைத்தேன். ஆனால், கல்லூரி முடிந்து என் தோழியுடன் போய்கொண்டிருந்தபோது ஒருவன் இடை மறித்தான், நான் எனது தோழியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அவன் முதலில் அவளைப் பார்த்து விரட்ட அவள் என் கைகளை உருவிக்கொண்டு ஓடிவிட்டாள். பயத்தில் எனக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.

நான் பயத்தில் வெடவெடத்து நின்றேன். நான் பயந்ததைப் பார்த்தவன், ரிலாக்ஸ், ரிலாக்ஸ் என்றான். அவன்தான் நந்து.

நீ எதற்காக இப்படி பயப்படுகிறாய், நான் என்ன சிங்கமா புலியா? உன்னிடம் கல்லூரியில் பேச முடியவில்லை. இப்போது உன்னிடம் பேசவே வழி மறித்தேன். வேறொன்றுமில்லை என்றான்.

நான் அவன் பேசுவதை பார்த்துக்கொண்டு பயத்தில் விழித்து நின்றேன். ஹே அழகி என்று என்னை கூப்பிடவும், நான் இரண்டெட்டு பின்னால் நகர்ந்தேன்.

நான் ஜஸ்ட் ஹாய் சொல்லி என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளத்தான் வந்தேன், வேறொன்றுமில்லை என்றான்.

நீ பயந்து போயிருக்கிறாய் போ என்றவுடன் ஓட்டமாக ஓடிவிட்டேன்.

அவனின் பலத்த சிரிப்பொலி அதன்பின் என்னைத் தொடர்ந்தது.

வீட்டுக்கு வந்ததும் அதை நினைத்துப் பார்த்த எனக்கு என்னைக் கண்டு வெட்கமாய் போயிற்று, அவன் பேசப்பேச ஒரு வார்த்தை கூட பேசாமல், சிறு பிள்ளைபோல வந்துவிட்டோமே எனத் தோன்றியது. உங்களிடம் பேச எனக்கொன்றுமில்லை என்றாவது சொல்ல வேண்டாமா? என என் தலையில் தானே கொட்டிக்கொண்டேன்.

அதன் பின் தான் அவனை கல்லூரியில் பார்த்தேன். அவன் கடைசி வருடம் படிக்கிறான் என அறிந்து கொண்டேன்.

நானும் அவனும் எதேச்சையாய் கல்லூரியில் சந்தித்தால், என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் கேலிச்சிரிப்பு தோன்றும்.

முதலில், ஐயோ வென இருந்தாலும், தொடர்ந்து அவன் கேலியாய் சிரிக்க, நான் ஒருநாள் அவனுக்கு நேருக்கு நேராக, எதற்கு இந்த கேலி என தைரியமாய் கேட்டுவிட்டேன்.

கேட்டவுடன் என்ன சொல்வானோ, திட்டிவிடுவானோ என உதறல் தான் , இருந்தும் நிமிர்ந்து நின்றேன்.

அவனோ கைத்தட்டி விசிலடித்தான். நல்லவேலை விசில் சத்தம் கேட்டும் பக்கத்தில் எந்த பேராசிரியரும் இல்லை.

இந்த தைரியந்தான் எனக்கு வேணும், அடுத்து இந்த தைரியசாலியும் தான் என என்னை சுட்டியவன் கண்ணடித்துவிட்டு நகர்ந்து சென்றான்.

எனக்கு இதயம் படபடத்து நின்றது. இதுதான் நான் செய்த முதல் தவறு.

அதன் பின் அவன் காதலை ஏற்றது. நான் அதை விட அதிகமாக அவனைக் காதலித்தேன்.

காரணம் அவனுடைய ஆண்மை.

மலர் இப்படிச் சொன்னதும் ரஞ்சனியின் பார்வை மலரை அருவருத்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆண்மை என்றதும் நீங்கள் தவறாக எண்ணிக்கொண்டீர்கள். அவர் ஒரு அத்லட், உடலை எப்போதும் சரியாக வைத்திருப்பான், கடைசி வருடம் என்பதால், அது போக பெரிய இடத்து நட்பு, அவன் வைத்ததுதான், கல்லூரியில் சட்டம்.

பெண்களுடன் அவன் பேசி நான் பார்த்ததே இல்லை. நான் அதைத்தான் சொன்னேன். இவ்வாறு அவனுடைய நல்ல குணமே முதலில் என் கண்களுக்கு தெரிந்தது.

இவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, நான் கடைசி வருடம் படிக்கும் சமயம், அவர் காமன் வெல்த்தில், கலந்து கொள்ள கடுமையான பயிற்ச்சியில் இருந்தார்.

ஆனால் அவர், தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் தேல்வி வெறுப்பில் இருந்த சமயம், நான் கடைசி வருடம் என்பதால், வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவரிடம் இந்த சமயத்தில் எப்படி சொல்வது என ஒத்திப்போட்டேன். ஆனால், வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பது தீவிரமடைய, அவரிடம் சொன்னேன்.

நீங்கள் வந்து வீட்டில் பேசுங்கள். நீச்சலில் சாதனை படைத்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று, ஒரு வருடம், கால அவகாசம் கேளுங்கள் என்றேன், அதற்கு அவர் சொன்ன பதில்தான் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

நீச்சலில் நான் தோல்வி அடைந்ததால் வருத்தத்தில் உள்ளது உண்மைதான். அதற்கும் நம் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம் என்றார்.

அப்படியானால், நீங்கள் எதாவது வேலைக்கு போகப்போகிறீர்களா என்றேன்.

நான் எதற்கு மற்றவர்களிடம் கைகட்டி வேலை பார்க்க வேண்டும், அது தான் என் நண்பன் இருக்கிறானே, நான் சொத்தில் ஒருபகுதி கேட்டாலும் கொடுப்பான்.என்றான்.

எப்படி,???

அவன் ஒரு முட்டாள். அவன் கொஞ்சம் சுதாரித்தாலும், அவனை தீர்த்துவிட்டுக்கூட சொத்தை அனுபவிப்பேன். அவனை பொம்மையாக்கியும், சொத்தை அனுபவிப்பேன், என்னால் எதுவும் முடியும், என நந்து காலரை உயர்த்தி விட்டுக்கொண்டான். அதைப்பார்த்த எனக்கு குமட்டியது.

நீ கவலைப்படாதே, மாமாவிடம் நான் வந்து பேசுகிறேன், எப்போது வர வேண்டும் என்றதும், நான் சுதாரித்தேன்.

அப்பா, ஊரில் இல்லை, ஆபீஸ் விசயமாக, வெளியூர் போயிருக்கிறார், வந்ததும் சொல்கிறேன் என்றேன்.

அடுத்து வந்த நாட்களில், அவனது தொடர்பை, சிறிது சிறிதாக துண்டித்தேன். மற்றவரை அழித்து வாழ நினைப்பவன், ஒரு மிருகம், அந்த மிருகம், இரைக்காக ஒருநாள் என்னையும் தின்றுவிடும் எனும் பயம் வந்தது.

கல்லூரி முடியும் தருணம், நந்து வந்து அவன் நண்பனுடன் ஊட்டி சென்று நீச்சல் பயிலப்போவதாக சொன்னான். அடுத்த காமன் வெல்த்துக்கு தயாராகப்போவதாகவும் சொன்னான்.

நான் சரி என்றதைத் தவிர வேறொன்றும் சொல்லவில்லை.

நந்து , அவனை என் பொம்மையாக்கிவிட்டேன். இன்னும் ஆறுமாதத்தில், நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என பெருமையாக, அவன் புத்திசாலித் தனத்தை காட்டுவதாக நினைத்து, மனதில் இருந்த விஷத்தைக் கக்கினான்.

நந்து பொல்லாதவன் என தெரிந்ததும், அவனிடம், எனக்கு உன்னுடைய குணங்கள் பிடிக்கவில்லை, என்று சொல்ல எனக்கு பயமாக இருந்தது. என்னையும், ஏதாவது செய்துவிடுவானோ என்ற பயத்தை விட, அப்படி ஏதாவது நடந்து என்னால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டுவிடுவார்களே என்ற பயம் அதிகரித்தது.

நான் அவரை காதலித்ததற்கு உண்டான அடையாளமான, காட், வாழ்த்து அட்டை போன்றவையை, ஒரு முறை பார்க்க ஆசையாய் உள்ளது, உங்களை அடிக்கடி இனிமேல் பார்க்க முடியாது, அதையாவது பார்த்துக் கொள்கிறேன் என வாங்கிக் கொண்டேன். எனக்கு செல்ஃபி என்றால் பிடிக்காது. நான் இதுவரை அவனுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டது இல்லை.

நான் இருக்கும் இடம் அவருக்கு தெரியக்கூடாது என, சென்னை மாப்பிள்ளைக்கு சரி என்றேன் , திருமணத்திற்கு கல்லூரியிலிருந்து யாரையும் கூப்பிடவில்லை

என் கணவர் மாமியார் எல்லோரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.

நந்து பற்றி பயத்திலிருந்து விடுதலை பெற்று, குடும்ப வாழ்வில் ஐக்கியமானேன்.

இவ்வாறு ஒருவருடம் மிக அழகாக போய்கொண்டிருந்த வாழ்வில் பேயென மீண்டும் வந்தான் நந்து.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருநாள் என் கணவர் சாருநேசன் என்னிடம், அவரது பாஸ் உடைய நண்பர் விருந்துக்கு வருவதாகவும், தடபடலாக சமைக்கச்சொன்னார்.

நானும் என் மாமியாரும் பேசி சிரித்துக்கொண்டே அனைத்தையும் தயார் செய்தோம். அதுதான் நான் கடைசியாகச் சிரித்தது.

விருந்திற்கு வந்தவன், நந்து. அவனை நான் பார்த்ததும் பயந்து கிச்சனுக்குள் சென்று மறைந்து கொண்டேன்.அவன் என்னை பார்த்துவிடக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன்.

மாமியார் என்னை வந்து பரிமாற அழைக்கவும், தலைவலி அத்தை , நீங்களே பிளீஸ் பார்த்துக்கொள்ளுங்கள் என சமாளிக்கப்பார்த்தேன்.

என் கணவர் என்னை உணவு மேசையிலிருந்து கத்திக் கூப்பிடவும், இப்போது என்ன செய்வது என நான் விழிக்கும் போது, நந்துவின் குரல், விடுங்க சாரு, அவங்களுக்கு தான் உடம்பு முடியலன்னு ஆண்ட்டி சொன்னாங்களே, விடுங்க என்றான்.

என்கணவரோ, அதற்கில்லை உங்களுக்கு அறிமுகப்படுத்தத்தான் என்றார்.

அதற்கென்ன இன்னொருமுறை வந்து பார்க்கிறேன் , ஆனால் நான் வரும்பேதெல்லாம் எனக்கு பிடித்த இந்த இனிப்பு வடை இருக்கவேண்டும் என்றான். நகைச்சுவைபோல் அனைவரும் சிரித்தனர்.

என்கணவர், நிச்சயமாக வாருங்கள் என்றார்.

நீங்கள் என் நண்பனாகிவிட்ட பிறகு வராமல் இருப்பேனா? நிச்சயம் என்றான் நந்து.

அவன் என் கணவரை நண்பன் என்றதும் பகீரென்றது. அவனுக்கு நண்பர்களானால், அடுத்தது அவர்கள் அழியப்போகிறார்கள் என்று அர்த்தம்.

மடமடவென ஹாலுக்கு சென்றேன். அவன் என்னைப்பார்த்ததும் அதிர்ச்சியடையவில்லை. மாறாக பார்வையில் என்னை அளந்தான்.

இப்போது எனக்கு புரிந்தது. என்னைப் பார்க்கவே எனது கணவரின் நண்பன் என வீட்டிற்கு வந்துள்ளான் என்பது. அவனது கண்கள் என் மேடிட்ட வயிற்றை முறைத்துப் பார்த்தது. எனக்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது.

வணக்கம் மிஸ்ஸஸ் சாருநேசன் என்றான், கண்ணை எட்டாத சிரிப்பில், எனக்கும் அந்த சமயத்தில் வேறுவழி தெரியவில்லை, வணக்கம் என கூறிவிட்டு அடுபடிக்குள் சென்றுவிட்டேன்.

சாப்பிட்டு முடித்து கை கழுவியவன், என்னிடம் டவல் என்றான்.

நான் உள்ளுக்குள் இருந்த பயத்துடன், கை துடைக்க டவல் கொடுத்தேன். என்னிடம் டவல் வாங்கியவன், எப்போது உன் கணவனை விட்டுவிட்டு என்னுடன் வருவாய் என்றான் யாரும் அறியா வண்ணம்.

நான் தலையை இடவலமாக அசைத்து , என்னால் முடியாது என்னை விட்டுவிடு என்றேன்.

இப்போது என்னுடன் நீ வருகிறாய் என்று சொல், உனக்கு கெட்ட பெயரே வராமல், உன் கணவனே உன்னை என்னுடன் அனுப்பும் படி செய்கிறேன். மாறாக அடம்பிடித்தால், பல புதிய பெயர்களை உனக்கு கொடுத்து அனைவரும் வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு தள்ளுவேன். உனக்கு என்னுடன் வருவதைத் தவிர வேறு வழி அப்போது இருக்காது. நீயே முடிவெடு...

நான் அவர் குழந்தையை சுமக்கிறேன். என்னுடைய குடும்பத்தை கலைத்துவிடாதே, பிளீஸ் என்னைவிட்டுவிடு என்றேன்.

அவன் மெல்லிய உயிர் உறையும் சிரிப்பில் என்னைப் பார்த்து, நீ இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்துள்ளாய். இந்த நொடி முதல் தயாராய் இரு என்றான்.


பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
  • தாமதத்திற்கு வருந்துகிறேன். இனி ஒவ்வொரு வெள்ளியும் கதை தருகிறேன். காத்திருந்த அன்பர்களுக்கு நன்றி
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபதாம் பகுதி...


நந்து எதற்காக இந்த நொடிமுதல் தயாராய் இரு என்று சொன்னான் என எனக்கு முதலில் விளங்கவில்லை.

அனைவரும் சாப்பிட்டதும், ஹாலில் அமர்ந்து பேசினார்கள். என்னால் நந்துவிடமும் பேசமுடியவில்லை. அவரிடமும் பேச முடியவில்லை. என்ன செய்வது என்ற சிந்தனையில், அடுப்படியிலிருந்து அறைக்குள் சென்று முடங்கினேன். வெளியில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென சத்தம் கேட்டது. என்னவென பதறியடித்து நான் வெளியில் வந்தேன்.

அடுப்படியில் குக்கர் வெடித்திருந்தது. ஆனால் குக்கரில் ஒன்றுமில்லை. நான் என் மாமியார் தான் தவறாக மூடிவிட்டார் என அவரைப்பார்க்க, அவரோ என்னிடம் வந்து, என்னம்மா, நீதான அடுப்படில இருந்த, சமைச்சு எல்லாரும் தான் சாப்டாச்சே, ஏன் மா குக்கர வைச்ச, என்னச்சு என என் தலையைத் தடவிக் கேட்கிறார்.

என்கணவர் என்னிடம் வந்து, நல்ல வேளை யாரும் அடுப்படில இல்லை இருந்தா என்னாகும் எனக் கடிந்தார்.

நான் செய்யலங்க, எனக்கு.... என்றவள், நந்துவின் மீது சந்தேகம் எழ அவனைத் திரும்பிப் பார்த்தேன்.

அவன் நரிக் கண்களுடன், மெல்லிய சிரிப்பில் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

நீ இல்லைனா வேற யாரு? நீதான இவ்வளவு நேரம் அங்க இருந்த என்றார்என் கணவர்.

என் மாமியார் விடுப்பா, மாசமா இருக்குற பொண்ண திட்டிகிட்டு, அதுதான் யாருக்கும் ஒன்னுமாகலியே, விடு என்றார்.

நந்து பேசினான். சார் விடுங்க சார் மேடம் வேணூன்னா பண்ணுவாங்க, அது மாசமா இருக்கும் போது, சில பெண்கள், தான் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்வது. அதனால், நீங்கள் முடிந்தவரை மேடமை சமையலறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றான்.

புரியவில்லையே, இப்படியெல்லாமா நடந்து கொள்வார்கள் என்றார் என் கணவர்.

இல்லீங்க, எனக்கு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, நான் இதைச் செய்யவில்லை. என்றேன் சற்று சத்தமாகவே.

உடனே நந்து, பாருங்க மேடம் கத்துறாங்க, இதெல்லாமே, மாசமா இருக்குற பெண்களுக்கு வரும்னு நான் படிச்சிருக்கேன். அவங்க கெல்த் அவங்க கையில இல்லை. நம்மதான் அவங்கள நல்லா பாத்துக்கணும், என்றவன், என் அருகில் வந்து, கண்ணில் சிறு வஞ்சச் சிரிப்புடன், நீங்க ஒன்னும் பண்ணல, நான் நம்பறேன், நீங்க போய் ஓய்வு எடுங்க என்றான்.

நான் என் கணவரைப் பார்க்க, அதற்குள், என் கணவனிடம் அவன் கண்களால் ஏதோ சைகை காட்ட, அவரும் சரிமா, நீ போய் ஓய்வு எடு என சொல்லிவிட்டார்.

என்னால், எதையும் பேச முடியவில்லை. ஆனால் பின்னால் வந்த சமயங்களில், நான் என் காதலைப்பற்றியும், நந்துவைப்பற்றியும் முன்னமே சொல்லி இருக்கலாம் என வருந்தினேன்.

ஏனேன்றால், என்னை சுய நினைவி இல்லாமல் வேலை செய்பவள் என முதலில் சொன்னான், அதன் பின் என் ஆடைகளை அங்கங்கே கிழித்தோ, ஏதேனும் கரைபடும்படி அப்பியோ வைத்து விட்டு அதையும் நான் சுய நினைவில்லாமல் செய்ததாக கதை கட்டினான்.

நான் என் கணவரிடம் மெதுவாக எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என முடிவு செய்தேன். அந்த முடிவிற்கு தள்ளப்பட்டேன், இல்லையேல் என்னை பைத்தியக்கார மருத்துமனையில் சேர்த்துவிடுவான் என பயந்தேன்.

ஆனால் நான் நினைத்ததற்கு நேர்மாறாக, நான் என் கணவனை நெருங்கினாலே அவர் தள்ளிச்சென்றார். முதலில் அவருக்கு ஏதோ வேலை என நினைத்தேன், பிறகு சந்தேகம் வர அவரிடம் வலுக்கட்டாயமாக பேசினேன்.

நந்து நல்லவன் இல்லை, அவன் நண்பன் என்று யாரிடமாவது பழகினாலும், அவர்களை சர்வ நாசம் செய்யாமல் ஓயமாட்டான் , பிளீஸ் அவன் இனி நம் வீட்டிற்கு வரவேண்டாம் என்றேன்.

நந்துவைப்பற்றி உனக்கெப்படி தெரியும் என என்னிடம் எதிர் கேள்வி கேட்டார்.

நானோ தலை குனிந்தவாறு, நானும் அவரும் கல்லூரியில் காதலித்தோம், ஆனால் அவருடைய, கெட்ட குணங்கள் தெரிந்ததால் விலகிவிட்டேன் என்றேன்.

இதை ஏன்? என்னிடம் முதலில் சொல்லவில்லை என்றார்.

நான் செல்வதறியாது நிமிர்ந்து பார்த்தேன்.

நந்துவின் கெட்டகுணங்கள் என்றாயே அது, நண்பணை அழிப்பது, அதுதானே? என்றார்.

நானும் ஆம் என தலையாட்டினேன். அவர் ஏதும் சொல்லாமல் ஒருமாத்திரை கொடுத்து போடச்சொன்னார்.

இது என்ன மாத்திரை ? எதற்கு எனக்கேட்க, நீ, ஸ்ரெஸ்ஸா இருக்க, ரிலாக்ஸ் பண்றதுக்கும், தூங்குறதுக்கும் என்றார்.

இல்லிங்க, என நான் அடுத்து பேசுவதை காதிலேயே கேளாமல், மாத்திரையை குடிக்கச்சொன்னார்.

இது நந்துவின் வேலை என என்னால் உணரமுடிந்தது. இது தூக்கமாத்திரைதானா? அல்லது கருகலைப்பிற்கானதா என எனக்குள் சந்தேகம் எழ நான் சாப்பிட மறுத்தேன்.

என் கணவரிடம் நான் நந்துவைப் பற்றி என்ன பேசினாலும், முடிவில் மாத்திரையை நீட்டினார்.

என்னால் எதையும் சொல்ல முடியவில்லை.

சரி அப்பாவீட்டிற்கு போய் வருகிறேன் என்றதற்கும், என் மாமியார், உனக்கு உடம்பு ஒரு நிலைல இல்ல தங்கம், இங்கயே இரு, அம்மா, அப்பா பயந்துடுவாங்க என்றார்.

எனக்கு, ஒன்னுமில்ல அத்தை, நீங்கலாவது நம்புங்க என்றதற்கு, நம்புறேன்டா, குழந்தை உண்டாகும் போது சிலர் இப்படி நடந்துக்க வாய்ப்பிருக்குனு டாக்டர் சொல்றப்ப நாம ஜாக்ரதையாத்தான இருக்கணும், நீ உன் மனசரிஞ்சு எதையும் செய்யலண்ணு எனக்குத் தெரியாதா? என்றார்.

டாக்டரா? எந்த டாக்டர்? என வினவினேன்.

அது நம்ம நந்து தம்பி கூட்டீட்டு போச்சு,

ஓ... அப்ப என்ன நம்பல, நீங்களே டாக்டர்டர்ட விசாரிச்சுட்டீங்க, நந்துவ நம்பரீங்க...

இல்ல கண்ணு அந்த தம்பி நம்ம குடும்ப நல்லதுக்கும், குழந்த நல்ல படியா வளரத்தான கஷ்டப்பட்டு அந்த டாக்டர் அப்பாய்ண்மெண்ட்லாம் வாங்கி கூட்டீட்டு போயிருக்கு, நீ ஒன்னும் மனசுல போட்டு குளப்பிக்காம இரு, அத்தை உன்ன பாத்துக்கிறேன் என்றார்.

இதற்கு மேல் எதைச்சொன்னாலும் எந்த உபயோகமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

குடும்ப நலனுக்கும், குழந்தை நன்றாக வளரவும் பாடுபடுகிறான் நந்து, எனக்கு சிரிப்புதான் வந்தது.
 
Top