கயிற்றில் கட்டப்பட்ட நிலையில், வாய் இருக்கக்கட்டப்பட்ட நிலையில் , கண்கள் மட்டும் வழித்திருக்க நின்றிருந்தாள் ரஞ்சனி. அவளைச்சுற்றி கும் இருட்டு, காப்பாற்றுங்கள் என கத்தினாள்... ஆனால் வாய் மூடப்பட்ட நிலையில் தெளிவற்ற லேசான சத்தம் மட்டுமே வந்தது.
வாயிற் காப்பாளன் கிட்டத்தட்ட அறை கிலோமீட்டர் முன்னால் வாயிலில் நின்றிருக்கிறான்.
நாய்களிரண்டும் சற்று முன்னால் வீட்டு வாசலில் கூண்டிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தது.
ஊட்டியில் பனி அதிகமாக கொட்டியது. குளிர் தாக்கியது. ரஞ்சனியை மேலும் கஷ்டப்படுத்த மழை பெய்யத் தொடங்கியது.
ரஞ்சனியின் தைரியத்தை மிகவும் சோதித்தது. ரஞ்சனி உடலளவில் வலு இழந்தாள். மயக்கம் சற்றே வரத்தொடங்கியது.
மலரின் இடைசி வார்த்தைகள் அவள் செவியில் கேட்டது. எனது இறப்பு இவ்வளவு கொடுமையாக அமைந்ததற்கு நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். ஏனென்றால் தவறான நபரை காதலித்தால் வாழ்க்கையில் எதையெல்லாம் சந்திக்க நேரும் என்பதை இந்த போராட்டம் எனக்கு சொல்லிக்கொடுத்தது. இதை நான் அடுத்த பிறவியிலும் மறக்காமல் இருக்கவே இறைவன் இத்தகைய கடுமையை எனக்கு காட்டினான். என்றாள்.
ரஞ்சனியின் மனது தவறான நபரை காதலித்து அவனை நம்பி வந்ததற்கு சரியான பாடம், மலரைப்போலவே நமக்கும் முடிவு நெருங்கிவிட்டதை நினைத்தாள். திடீரென வயிற்றிலிருக்கும் குழந்தை ஞாபகம் வர அனைவாக வயிற்றில் கை வைத்தவள், மறு நொடி மயங்கினாள்.
நரி ஒன்று ஆளை மோப்பம் பிடித்து வந்தது. நரிகளின் வாடையை உணர்ந்த நாய்கள் நிலையில்லாமல் குரைத்தது.
நாய்களின் சத்தத்தை கேட்ட வள்ளி எழுந்து கொண்டாள். நாய்கள் சத்தத்தை கேட்டு வந்தவள் கண்ட காட்சியில் உறைந்து நின்றாள்.
ரஞ்சனி கயிறு கட்டப்பட்ட நிலையில் வலிப்பு வந்துவிட, வெள்ளைநிற சுடிதார் முழுவதும் ஆங்காங்கே கயிறு அறுத்து சிராய்ப்பால் சிவப்பு நிறமாய் மாறி இருந்தது. வலிப்பால் கைகால்கள் வெட்டி இழுத்தது. அதன் பின்னே நரி வருவதை பார்த்த வள்ளி அலறினாள்..
அதற்குள் மருது வந்துவிட பட்டென நாய்களை திறந்துவிட்டான்.நாய் இரண்டு பாய்ந்து சென்று நரியை வேட்டையாடிக்கொன்றது. அதற்குள் ரஞ்சனியின் வெண்நிற ஆடை ஏறக்குறைய சிவப்பானது.
விரைந்து செயல்பட்ட வள்ளியும் மருதுவும் ரஞ்சனியை ஊட்டியின் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
மருது காரை ஓட்டிச்செல்ல, வள்ளி ரஞ்சனியை தாங்கிபிடித்து அழைத்துச்சென்றனர்.
மருத்துவர்கள் கேள்வி கேட்டு இருவரையும் துளைத்தெடுத்தனர். ஏனென்றால் ரஞ்சனியின் நிலை அப்படித்தான் இருந்தது.
மருத்துவர்கள் கேட்கும் அருவருப்பான கேள்வியில் வள்ளி அழுதுவிட்டாள். ஒரு பெண்ணை நடு இரவில் உடலெல்லாம் இரத்தம் பாய்த்த ஆடைகளுடன் தூக்கிவரவும், மருத்துவமனை ரஞ்சனிக்கு சிகிச்சையளிக்க மறுத்தது.
ஏதும் புரியா நிலையில், வள்ளி சத்யாதேவிக்கு அழைத்தாள். சத்யாதேவி அப்போதுதான் போக்குவரத்து சரிவர வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வள்ளி சத்யாதேவியிடம், அம்மா, ரஞ்சனி அம்மாக்கு வலிப்பு வந்துடுச்சு, எனவும் சத்யாதேவிக்கு பகீரென்றது.நாக்க அவங்கள ஆஸ்பத்ரிக்கு தூக்கீட்டு வந்தோம், ஆனா சேத்துக்க மாட்றாங்க, நீங்க பேசுங்க எனவும் , சத்யாதேவி மருத்துவரிடம் பேசினார்.
சத்யாதேவி அவரை அறிமுகப்படுத்திக்கொண்டு, முதலில் சிகிச்சையைத் தொடங்குங்கள், உங்களுக்கு ஏதும் ஆகாது.தான் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாக கூறினார்.
சத்யாதேவியின் வார்த்தைக்கு உடன்பட்டு மருத்துவமனை சிகிச்சையை தொடங்கியது.
சத்யாதேவி ரஞ்சனிக்கு குளிரினால் வரும் வலிப்பு என மருத்துவரிடம் தெரிவித்ததால், அதற்குரிய சிகிச்சையை தொடங்கினர்.
சத்யாதேவி வண்டியை திருப்பிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்.
ரஞ்சனி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாள். ரஞ்சனி மயக்கம் தெளிந்தாள்.
மருத்துவர் அவரிடம் என்ன நடந்தது என விசாரணை நடத்தினர்.
அவள் மௌனமாக இருந்தாள். நல்லவேளை இதில் உங்கள் கருவிற்கு ஏதுமாகவில்லை என்றனர். அதைக்கேட்டதும் ரஞ்சனியின் முகத்தில் சற்றே சந்தோசம் எட்டிப் பார்த்தது. இப்போதாவது சொல்லுங்கள் என்றனர்.
குளிர் ஒத்துக்கொள்ளாமல் வலிப்பு வந்துவிட்டது, என்றாள்.
மருத்துவர்கள், எப்படி உடலில் காயங்கள், என்றனர் சந்தேகமாய்..
விழுத்த இடம் கரடுமுரடான தரை எனவே, சிராய்த்தது என்றாள்.
அதற்குள் சத்யாதேவி வந்துவிட காத்திருப்பு பகுதியில் இருந்த மருதுவிடமும், வள்ளியிடமும் நடந்த விவரம் கேட்டார்.
வள்ளி தான் கண்ட காட்சியை ஒரு பிழையின்றி ஒப்பித்தாள்.
சத்யாதேவிக்கு இதைச் செய்தது பவித்ரன் என்று தெளிவாகத் தெரிந்தது.
ரஞ்சனிக்கு ஏதும் நேரக்கூடாது என கடவுளை வேண்டினார்.
மருத்துவர் தீவிர சிகிச்சை அறையிலிருந்து வெளிவந்து நலமாக உள்ளதாகக்கூறினார்.
ரஞ்சனியை சாதாரண அறைக்கு அழைத்துச் சென்றனர்.
சத்யாதேவி ரஞ்சனியைக் காண சென்றார். உடன் வள்ளியும் மருதுவும் சென்றனர்.
வள்ளி, என்னம்மா இப்படி பயம்புரித்தீட்டீங்க, நல்லா இருக்கீங்களா? என்றாள்.
ரஞ்சனி, ம் வள்ளி நல்லா இருக்கேன் , ஒன்னுமில்ல என்றாள்.
யாருமா உங்கள கட்டுனது எனவும், ஒரு நிமிடம் யோசித்த ரஞ்சனி,
நானேதான் ஒரு பந்தயம், எனக்குள்ள ஊட்டி குளிர ஒரு இரவு தாங்க முடியுதா? இல்லையா? பாக்கலாம்னு அது இவ்வளவு விபரீதமாக ஆகும்னு நான் நினைக்கல, சாரி உன்ன பயம்புருத்துனதுக்கு, நன்றி என்ன காப்பாத்துனதுக்கு என சிரித்த முகமாய் கூறிட வள்ளியும் மருதுவும் நிம்மதியுடன் வெளியேறினர்.
சத்யதேவி ரஞ்சனியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். ரஞ்சனி உடம்பு எப்படி இருக்கும்மா என்றார்.
ரஞ்சனி, சத்யதேவியை ஒருமுறை முறைத்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். இதற்கு காரணம் பவித்ரன் தான ? என அவர் கூறவும், சீறும் பாம்பாய் கண்ணைத் திறந்தவள், ஆமா எல்லாம் தெரிஞ்சுட்டுதான் வந்துருக்கீங்க, ரைட்.
அப்போ நான் செல்றதுக்கு எதுவுமில்ல, யூ.... கெட் அவுட் என நெருப்பாய் வார்த்தைகள் வந்தன.
ரஞ்சனி உண்மைய சொல்லு உனக்கும் அவனுக்கும் நடுவுல என்னம்மா? ஆனந்த் இறந்ததுக்கு காரணம் நீயா? என்னாச்சுமா,
எனக்கு பவித்ரன் ரூம்ல லெட்டர் படுச்சதுல இருந்து படபடப்பாவே இருக்கு, உன்ன பழிவாங்கவா தீரன் கல்யாணம் பண்ணிகிட்டான். சொல்லும்மா, என்ன உன்னோட அம்மாவா நினச்சு சொல்லு என்றார்.
அம்மாவா நீங்களா? என்னோட எதிரிய பெற்று வளர்த்த நீங்க எப்படி எனக்கு அம்மா ஆக முடியும்.
அப்படி எல்லாம் சொல்லாதம்மா, நான் பவித்ரன் ட பேசுறேன், எல்லா சரி பண்ணலாம் என்றார்.
எனக்கு இந்த உறவு தேவையில்ல, அதனால நீங்க சரி பண்ணவும் தேவையில்ல, நான் தெரிந்தே தோற்ற ஒரே இடம் மணவறை, ஒரே நபர் பவித்ரன். நான் தோல்வியை வெற்றி ஆக்காமல் அவரை சந்திக்க மாட்டேன். என்னுடைய விடுதலைப்பத்திரம் வரும், இனி நான் பவித்ரனை என் வாழ்க்கையில் சந்திக்க விரும்பவில்லை.
அவனை வெறுக்கும் நீ எதற்கு, அவனை காட்டிக்கொடுக்காமல்,அனைவரிடமும் பொய் சொல்லி பழியை உன்மேல் போட்டுக்கொண்டாய் என்றார் ஒரு தொழிலதிபராக...
அவரை ஒரு பார்வை பார்த்த ரஞ்சனி, நான் தோற்றுவிட்டேன் என்று பறையடிக்க மாட்டேன். ஆனால், என்னை யார் எங்கே அடித்தார்களோ அதைவிட இரண்டு மடங்கு அவர்களை அடிக்காமல் ஓய மாட்டேன்.
இன் மை கோர்ட், யூ அண்டு யூவர் சன் ஆர் சேம் கேட்டகிரி, கெட் லாஸ்ட் என்றவளின் கடைசி வார்த்தை அலறலானது. வள்ளி மருது, நர்ஸ் யாவரும் அவள் சத்தத்திற்கு உள்ளே ஓடி வந்தனர்.
உள்ளே வந்த நர்சிடம் ரஞ்சனி, சத்யாதேவியை சுட்டி இந்த பொம்பள இனிமே என்ன பாக்க வரக்கூடாது என்றாள் கர்ஜனையில்,.
வள்ளிக்கும் மருதுக்கும் ஏதும் புரியவில்லை, ஆனால் ரஞ்சனியுடைய கர்ஜனைக்கு பின்னர் அவர்களுக்கு ஏதும் கேட்கும் தைரியம் இல்லை.
சத்யா தேவி வாழ்நாளில் இப்படி ஒரு அவமானத்தை உணர்ந்ததில்லை.
இவ்வளவு நேரம் உயிருக்கு போராடியவரிடமிருந்து இப்படி ஒரு குரலை நர்ஸ் சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. நர்ஸ் அனைவரையும் சற்று வெளியே இருக்கச்சொன்னார்.
ஒருநிமிஷம் என்ற ரஞ்சனி, என்னோட ஐஞ்சுநாள் சாப்பாட்டு காசு உங்களுக்கு வந்து சேரும் என்றாள்.