ரஞ்சனிக்கு உடனிருந்து மருந்து போட ராஜன் ஒரு செவிலியப் பெண்ணை பணித்தார். ரஞ்சனி லதாவை காயத்தை பார்க்கவோ, மருந்திடவோ அனுமதிக்கவில்லை.
ரிசப்சனை நிறுத்தியதற்கு, ராஜனு, லதாவும், சத்யாதேவியின் இறப்பை காரணமாக தெரித்தனர்.
ரஞ்சனிக்கு இந்த இரண்டு வாரங்களில், காயம் முழுதாக சரியாகிவிட்டது. அதிக சிராப்பு உள்ள இடங்களில் மட்டும் லேசான தழும்பு இருந்தது.
ரஞ்சனி, கடைக்கு கிளம்பினாள். லதா ரஞ்சனியை அனுப்பவா , தடுக்கவா என ராஜனைப் பார்த்தார்.
ராஜன், ரஞ்சனியை சாப்பிட அழைத்தார். கிட்டத்தட்ட, மூன்று வாரங்கள் கழித்து மகள் தன்னுடன், ஒரே மேசையில் உணவருந்துகிறாள்.
ஆனால், லதா, ராஜன் மனதில் சந்தோசமில்லை. மகளின் வாழ்க்கை நினைத்து துக்கமே மேலோங்கி இருந்தது.
புயலென வீட்டினுள் பவித்ரன் நுழைந்தான்.
ரஞ்சனி வாயிலுக்கு எதிர்புறம் பார்த்து அமர்ந்திருந்ததால், அவளுக்கு பவித்ரன் வருகை தெரியவில்லை. ரஞ்சனிக்கு காலை உணவு குமட்டுவதுபோல் இருக்க, சற்றே எழுந்தாள்.
பவித்ரன் அவள்முன் வந்து நின்றான். ரஞ்சனியின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தது.
பவித்ரன் ரஞ்சனி கையை இருக்கப் பற்றி என்னடி திமிரா? என சத்தமிட, ரஞ்சனி அவன் கையை உதறிக்கொண்டு வாஸ்பேசனுக்கு ஓடினாள். பவித்ரன் அவளைப்பின் தொடந்தான்.
லதாவும், ராஜனும் முதல்முறை பவித்ரனின் கோபத்தை பார்க்கிறார்கள்.
லதா, நான் கூட பவித்ரன்தான் காரணம்னு அவ சொல்றப்ப நம்பலங்க, ஓங்கி கூட பேசாதவர், இப்படி எல்லாம் செஞ்சிருக்க மாட்டார்னு நினச்சேன், ஆனா அவர் ரஞ்சனிமேல இவ்வளவு வெறுப்பா இருக்காரா??? என தனது வருத்தத்தை கூறினார்.
ராஜன், லதாவின் தோள்தொட்டு அங்கே பார் என சுட்டிக்காட்ட, அங்கே பவித்ரன் ரஞ்சனியை தோள்தாங்கி அழைத்து வந்தான்.
ரஞ்சனி வாந்தி எடுத்த களைப்பில் நிற்கவும் தெம்பின்றி தொய்ந்தாள். அவளை கைகளில் ஏந்தியவன், மாடிக்கு அவளறையை நோக்கி சென்றான்.
அதைப் பார்த்த லதா, ஆச்சர்யத்தில் ராஜனைப் பார்த்தார்.
ராஜன், கணவன் மனைவி சண்டை, இப்படித்தான் இருக்கும். அதனால நீ கவல படாத.. என்னோட பொண்ணு மேல எனக்கு நம்பிக்க இருக்கு, அவ எதிலயும் தோக்கமாட்டா... என்றார்.
அப்ப, நம்ம வக்கீல் சிவன் கிட்ட விவாகரத்து அனுப்ப சொன்னது எல்லாம், எதுக்கு...?
ஒருவேல பவித்ரன இங்க வரவழைக்கவோ என்னவோ???
, இல்லீங்க... அப்படி இருந்தா அவ மாசமா இருக்குறத, ஏன்? சொல்லக்கூடாதுனு சொன்னா??? என லதா வினவ..
ராஜன், பவித்ரன் வருவதை கண்காட்டிவிட்டு, அமைதியானார். டாக்டர கூப்பிடுங்க மாமா, என்றான் பவித்ரன்.
லதா, மகளைப் பார்க்க, சென்றார். ரஞ்சனி கட்டிலில் சாய்ந்தமர்ந்திருந்தாள்.
லதாவைப் பார்த்து, பவி எங்க.... என்றாள்.
ரஞ்சனிக்கு பழச்சாறு கொடுத்த லதா, கீழ அப்பாவோட இருக்கார் என்றார்.
ரஞ்சனி, மாப்பிள்ள உன்ன சமாதானப் படுத்தி கூட்டீட்டு போகத்தான் வந்திருப்பாரு, என லதா கூறவும், ரஞ்சனி வெறுமையாக சிறு நகைத்தாள்.
நானும் உன்னப்போல் அவர் எனக்காக டாக்டரக் கூப்பிடவும், பாசமாக பேசவும் அவர் மாரிவிட்டார் என நம்பியவள் தான், ஆனால் எதுவும் மாறவில்லை, மாறப்போவதுமில்லை என தனக்குள் நினைத்தவள், நீ கீழ போ மா நான் வற்றேன் என்றாள்.
லதா, ரஞ்சு அம்மா சொல்றத கேளுமா, அவர் சமாதானப் படுத்தி கூப்பிட்டா அடம்பிடிக்காம போவதான, அவன் கெட்டவர் இல்லமா, நான் பாத்தவரை, கொஞ்சம் அதிகம் கோபப்படுறாரு அவ்வளவுதான்.
ஓஓஓ... அவ்வளவுதானா, நான் அங்க போனதுக்கு அடுத்து, அவர் கோபத்தால நான் பிணமாணாலும், அவ்வளவுதான், கெட்டவர் இல்ல, கோபக்காரர் அவ்வளவுதான் என்ன!!!!
ஏன் டி நெருப்பா பேசுற, அவர்தான நீ நிக்கமுடியாம இருந்தப்ப இப்ப தூக்கீட்டு வந்தாரு... பாசமில்லாமலா??? செஞ்சாரு
பழச்சாறை குடித்துவிட்டு குவலையை நீட்டியவள், ஆமா ரொம்ப நல்லவர், சரி நீ கீழ போ என்றாள்.
ரஞ்சனி சில செல் பேச்சுக்களை முடித்துக்கொண்டு கீழிரங்கி வரவும் மருத்துவர் வரவும் சரியாக இருந்தது.
பவித்ரன் மருத்துவரை வரவேற்க்கும் முன், ரஞ்சனி முந்திக்கொண்டாள்.
நல்லா இருக்கீங்களா டாக்டர்?
ம்... நான் உங்களுக்கு சிகிச்சையளிக்கவந்தால், நீங்க, என்ன நலம் விசாரிக்கிறீங்க , நீங்க எப்படி இருக்கீங்க என்றார்.
ரஞ்சனி கெஞ்சம் டையர்டு அவ்வளவுதான், நீங்க அலுவலக அறைல இருங்க, இதே நான் இப்ப வந்திடுறேன், அப்பா கவனிச்சுகோங்க என்றாள்.
லதா மகளை பார்த்து கண்சாடையில், பவித்ரனிடம் இணக்கமாக செல் என்றார். இணக்கமா!! என மனதில் நினைத்தவள், அம்மா டாக்டருக்கு எதாவது குடுங்க என அவரையும் உள்ளே அனுப்பி விட்டாள்.
பவித்ரன் அனைவர் செல்வதையும் கண்களால் அளந்து கொண்டு அமைதிகாத்தான், இறுதியாக ம்... என்ன போசணும் என ரஞ்சனியைக் கூர்ந்தான்.
ம்... புத்திசாலிதான் , ஆன மானமில்ல போல, வராதேனு சொல்லியும் வந்திருக்கீங்க...
வார்த்தை.. அகம்பாவம், எங்கம்மாட்ட அவங்க உயிர் போற அளவுக்கு என்னடி சொன்ன..
டி... யா.. நானா, நீங்க வார்த்தையை சரியா பேசுறீங்க, ஐ அப்ரிசேட் யூ...
எங்க அம்மாவ என்ன சொன்ன...
இத நீங்க போன்லயே கேட்டு இருக்கலாம். சரி சொல்றோன், நீங்க பையன ரொம்ப கேவலமா வளத்திருக்கீங்க, இந்தமாதிரி ஒரு மகன பெத்ததுக்கு நீங்க மலடியாவே... எனவும் பவித்ரன் கை ஓங்கிக்கொண்டு ரஞ்சனியை அடிக்க வந்துவிட்டான்.
ஆனால் அவனால் நகரமுடியாத அளவிற்கு அவன் பின்னே அவனைவிட உயரமான அடியாட்கள் அவனை சுற்றிப் பிடித்தனர்.
பவித்ரன், அவர்களை தள்ளினான் ஆனால் அவர்கள் பிடி இரும்பாகிட அவனால் நகரவும் முடியவில்லை.
என்னடி அடியாட்கல வைச்சு மிரட்டிப் பாக்குறியா?
நானா? இன்னும் மிரட்டவே ஆரம்பிக்கல, நினைத்த நேரத்தில் நீ கோபப்படுவதற்கு கன்னத்தை காட்டி மயங்கி விழுந்தவள், செத்துட்டா, இல்ல நீ கொன்னுட்ட, இது ரஞ்சனி , உனக்கு தான் என்னப் பத்தி நல்லா தெரியுமே, நான் எதித்தா நீ சாம்பல் சூட மிஞ்ச மாட்ட....
நீ ஒரு கேள்வி கேட்டல்ல, உங்கம்மாட்ட என்ன பேசுனேன்னு, முழுசா கேட்டியா, நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல, என்ன பாக்க வரதீங்கனு மட்டும் தான் சொன்னேன்.
அதுக்காக எதுக்கு எங்கம்மா சாகணும்...
ஐ நோண்ட் நோ... ஒருவேளை இப்படியும் இருக்கலாம், மாதா செய்தது மக்களுக்குனு ஒரு பழமொழி இருக்கு, இங்க அது உல்டா ஆகி நீ செஞ்ச பாவம் உங்கம்மாவுக்கு போயிருக்கும்,
இல்லனா இப்படியும் இருக்கலாம், தன்வினை தன்னைச்சுடும், நீ கட்டிய பலிபீடத்தில் முதல் பலி உங்க அம்மா...