இருபத்தி ஏழாம் பகுதி...
ரஞ்சனி லண்டனுக்கு வந்துவிட்டாள். அதற்கு காரணம் ரஞ்சனியின் தோழி நந்தினி. திருமணத்திற்கு முன் ரஞ்சனியின் வாழ்க்கையைப் பார்த்து திருமணம் என்ற ஒன்று தேவையா என யோசிக்க ஆரம்பித்தவளை, ரஞ்சனிதான் மாற்றினாள்.
இருந்தும் ரஞ்சனி நீ தனியாக பவித்ரனுடன் இருந்த தருணங்கள் தான் அவரை எல்லை மீறி தவறு செய்யவைத்ததாக நான் கருதுகிறேன். நீ என்ன துன்பப்பட்டனு எனக்கு நீ சொல்லாம போனாலும், உன்னோட மனதும், உடலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று உன்னை பார்த்த உடன் தெரிந்து கொண்டேன்.
எனக்கு என்னவோ மனதின் ஒரு மூலையில், ரஞ்சனிக்கு ஊட்டிபோலத்தான் உனக்கு லண்டன் என ஒரு எண்ணம் தோன்றுகிறது. எனக்கு அவருடன் தனியாக செல்ல, ஒரு பழக்கமற்ற ஆணுடன் தனித்து செல்ல பயமாகத்தான் உள்ளது என்றாள் நந்தினி.
ரஞ்சனி, எனக்கும் பவித்ரனுக்கும் மனதுஒத்துப்போகவில்லை. நீ ஏன் ஒரு எடுத்துக்காட்டாக என் பெற்றோரையோ, உன் பெற்றோரையோ எடுத்துக்கொள்ளக்கூடாது? என்றாள்.
அவர்கள் நம் மூத்த தலைமுறை, இந்த தலைமுறையில், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பலமடங்கு பெருகி உள்ளது. உன் கணவரும் அந்த மாதிரித்தான் உன்னை துன்புறுத்தி.... என்றவளின் பேச்சு பாதியில் நின்றது, ரஞ்சனி முறைத்த முறைப்பில், ..
நான் எப்போது அப்படி சொன்னேன் என சீறினாள் ரஞ்சனி.
நீதான் எதையுமே கூறவில்லையே, இப்போதாவது சொல் என்னவானது என்றாள் நந்தினி.
நாம் இப்போது உன் திருமணத்தைப் பற்றி பேசுகிறோம் என நினைக்கிறேன். என்னது முடிந்துவிட்டது. முடிந்ததை தோண்டவும் கூடாது, அடுத்தவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளவும் கூடாது. இரண்டும் அறிவாளிகள் செய்யமாட்டார்கள்.
ஆனால், எதையும் பட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல, அடுத்தவர் வாழ்க்கையின் அனுபவம் மூலமாகவும் அறியலாம். இது அறிவாளிகள் செய்யும் காரியம் தானே.
நல்லபேச்சு, ஆனால் இங்கே பொருந்தாது. பவியைப்போல் கண்டிப்பாக நிவிஷன் இருக்கமாட்டார்.
ஏன்?? என்றாள் நந்தினி.
என்னடி என்னிடம் கேட்கிறாய்? நீ அவருடன் பேசினாய் தானே , உனக்குத் தெரியவில்லையா? என்னுடன் பேசிய இரண்டு முறையும் ,எந்த ஒரு நேரத்திலும் குரலை உயர்தக்கூட இல்லை. என்ன ஒரு நிதானம். அவரைப்போய் பவித்ரனுடம் இணைத்துப் பேசுகிறாய், என்றாள் ரஞ்சனி.
என்னுடன் ஒருமுறை பவித்ரன் பேசும் போதும் கூட, அழகாக சிரித்துதான் பேசினார். ஆனால் நான் கணித்த பவித்ரன் தவறாகி விடவில்லையா?? உண்மையில் அவருடைய சிரிப்பும், பேச்சும் என் கண்களுக்கு பொய்யாக தெரியவில்லை. உன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னே, ஆழ்பள்ளத்தில் விழும் என நான் எந்த ஒரு நொடியிலும் நினைத்தில்லை. இதெல்லாம் என் கண்முன்னே நடக்கும்போது எனக்கு திருமணம் செய்துகொள்ள பயமாக இருக்குமா?? இருக்காதா? என்றாள் நந்தினி விடாபிடியாக....
அதனால்???
திருமணம் செய்து கஷ்டம்படுவதற்கு பதில், செய்து கொள்ளாமலே இருக்கலாம்.என்றாள் நந்தினி.
இதை நீ யாருக்குச் சொல்கிறாய்?? என்றாள் ஒருமாதிரிக்குரலில் ரஞ்சனி.
எனக்குத்தான். நான் திருமணத்தை நிறுத்தப்போகிறேன் என்றாள் நந்தினி அறிவிப்பாக.
இப்போது நான் என்ன செய்தால், சரி என்பாய் என்ற ரஞ்சனியிடம், சற்றும் தாமதிக்காமல், நீ என்னுடன் சேர்ந்து லண்டன் வா என்றாள், ஒரே பிடிவாதமாக.
சரி, நான் யோசிக்கிறேன் என்ற ரஞ்சனியிடம் விடாபிடியாக , எனக்கு நாட்கள் குறைவாக இருக்கிறது, இப்போதே நீ வரமாட்டேன் என்று சொன்னால், திருமணத்தை நிறுத்த வசதியாக இருக்கும் என்றாள் நந்தினி.
சரி வருகிறேன் போதுமா?? ஆனால் இன்னொரு தரம் இப்படி பேசக்கூடாது என்ற ரஞ்சனி, சற்று தயங்கியவாறு, நான் திருமணத்திற்கு வரவில்லை என்றாள்.
நந்தினியின் கண்களில் கண்ணீர் முட்டியது. எங்கும் நிமிர்ந்து செல்பவள், இப்படி தலைகவிழ்ந்து தெரிந்தவர்களை சந்திக்க சங்கடப்படும் நிலையை எண்ணி, தனது திருமணத்திற்குக்கூட வரவில்லை என்கிறாளே என வருந்தினாள்.
திருமணத்தில் தெரிந்தவர்கள் ஏதும் கேட்டுவிட்டாளே ரஞ்சனி உடைந்துவிடுவாள். நிலைகுழைந்து இருப்பவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத நந்தினி, சரி என தலையசைத்து விடைபெற்றாள்.
நந்தினியின் தலையசைப்பில் ரஞ்சனியின் மீதான புரிதலே மேலோங்கி இருந்தது. ரஞ்சனியை லேசாக அணைத்து விடைபெற நந்தினி ரஞ்சனி அருகில் வர ரஞ்சனி ஓரெட்டு பின்னோக்கிவைத்தாள்.
கண்களை சுருக்கிய நந்தினியிடம், என்ன இப்பவே லண்டன் கட்டிப்பிடி வைத்தியமா? என கிண்டலடித்து விடைகொடுத்தாள்.