All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி ஐந்தாம் பகுதி...

ஜீவிதா பவித்ரனை பேசியில் அழைத்தாள்.

ஹலோ பவி அண்ணா...

சொல்லு ஜீவிதா, நீ நல்லாதானமா இருக்கிற..

ம்.. அண்ணா, எனக்கு ஒரு உதவி செய்றீங்களா..

சொல்லு ஜீவிதா,என்றான் பவித்ரன்.

அண்ணா.. என்று தயங்கியவள், எனக்கு வேற வழியும் தெரியல அண்ணா, சில குழப்பங்களும், பயமும் தான்...

புரியல ஜீவிதா.. என்னாச்சு???

நான் நேரடியாவே கேக்கிறேன், நான் சாவதால் யாருக்கு லாபம்...என்றாள் இதயம் துடிக்க..

பவித்ரனுக்கு அவள் பேசிய வார்த்தைகளை ஜீரணிக்கவே சில வினாடி ஆனது.

ஜீவிதா எதுவும் நினைக்காத, உன்ன யாராலும் கொல்ல முடியாது. நான் இருக்கிறேன். தூங்கு என்றான் , ஒரு சகோதரனாக.

இல்ல அண்ணா எனக்கு தெரியணும். சொல்லுங்க என்றாள்.

உன் எல்லா கேள்விகளுக்கான பதிலும் உனக்கு கிடைக்கும். ஆனால் நீ அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும், என்றான் பூடகமாக..

இல்ல அண்ணா, உங்களுக்கு தெரியாது, என்னோட அண்ணா ரொம்ப தைரியசாலி, அவர யாரோ பின்தொடர்வது மாதிரி இருக்குனு ஒரு நாள் நான் பேசும் போது சொன்னார், மறுநாள் அவர் ஒரு கோர சாலைவிபத்தில் இறந்து கிடந்தார். எங்களுக்கு அவருடைய உடலை ஒரு மூட்டையா கட்டித்தான் குடுத்தாங்க, என உடல் நடுங்கக் கூறினாள்.

அவர் ஒரு பிசினஸ்மேன், ஒரு வேலை பிசினஸ் எதிரிகளால்கூட இந்த விபத்து நடந்திருக்கலாம்.

ஆனால் நான்???

என்னால் ஒரு யூகத்திற்கு வர முடியவில்லை. என்னை கொன்றால் யாருக்கு லாபம்???? என திரும்பவும் முதல் கேள்விக்கு வந்தாள்.

பவித்ரனும் இப்போது அவள் யோசனைக்குள் வந்தான்.

ஆனந்தன் கெட்டவன்தான் என்றாலும், இவள் இறந்துபோனால், சொத்து அவன் கைக்குக் கிட்டாது. அப்படியானால் வேறுயார்???

தெரியல ஜீவிதா, போலீசில் தகவல் கொடுத்தாச்சு, எப்படியும் கண்டுபிடிப்பாங்க , தூங்கு என்றான்.

தூக்கம் வரல, பயமா இருக்கு, நான் துங்கும்போது யாராவது வந்து ஏதும் செய்வாங்களோனு தோணுது என்றாள்.

இறந்து போன உன்னோட அண்ணணை நினை. நான் தூங்கப்போறேன் நீதான் எனக்குக் காவல் என வேண்டிக்கொண்டு தூங்கு என்றான் பவித்ரன்.

அண்ணா இன்னோரு விசயம், எனக்கு இப்போதைக்கு என்னை சுற்றி இருப்பவர்களைப் பார்த்தாலே பயமாய் இருக்கிறது. நான் நாளை கிளம்ப வேண்டும், நீங்களும் என்னுடன் வரமுடியுமா???

எனக்கு சில விவரங்கள் அறியவேண்டும், உங்கள் உதவி எனக்கு வேண்டும். பிளீஸ் அண்ணா!!! என்றாள்.

எல்லோரைப் பார்த்தும் பயப்படுகிறாயே, ஏன் என்னைப் பார்த்து பயம் தோன்றவில்லையா???

இல்லை. நிச்சயமாய் இல்லை. அதற்கு காரணம் உங்கள் தொழிற்சாலை. உங்கள் தொழிலாளர்களை நீங்கள் நடத்தும் விதம். நான் இந்த ஒருவாரத்தில் தினமும் பார்க்கிறேனே, உங்களால் யாருக்கும் துன்பம் வராது. உங்களுடன் இருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், உங்களுடன் இருப்பதை பெருமையாகவும் கருதுவர்.

அப்பப்பா... எனக்கு ஓவர் ஐஸ் ஆகாதம்மா...உன்னுடன் கண்டிப்பாக வருகிறேன். போதுமா...

பேசியை அணைத்தவன் காதுகளில் ஜீவிதாவின் கடைசி வார்த்தை ரீங்காரமிட்டது, உங்களுடன் இருப்பது மிகவும் பாதுகாப்பானது.. பெருமையானது...என்ற ஜீவிதா வார்த்தைகள்.

ரஞ்சனி உன்னைப் பெருத்த வரையில், நான் எப்படிப்பட்டவன், காமுகன், என்னுடன் வாழ்ந்த நாட்கள் உன்வாழ்வின் மோசமான தருணங்கள்,!! ஆனால் எனக்கு உன்னுடன் வாழ்ந்த நாட்கள் பொக்கிசம், உன்னைப் பார்த்த முதல் நொடி இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. என ரஞ்சனியின் நினைவுகளில் உருகினான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவிதா விடுதியில் உறங்கிக்கொண்டிருந்தாள். நிலவொளி சன்னல் வழியாக அவளுக்கு போரிவையாகியது.

ஒரு உருவம் நிலவொளிக்கும் அவளுக்கும் இடையே, இப்போது அந்த புதிய நிழல் அவள் மீது படந்து, அவளுக்கு போர்வையாகியது.

ஜீவிதா கண்திறக்கவும், திடமும் , உயரமுமாக ஒரு உருவம் கருமையாக அவள் முன்னால், பயந்தவள் ஆ..ஆ.. என கத்தப்பார்த்தால், அதற்க்குள் அந்த உருவம் ஒடிவந்து அவளது வாயை அடைத்தது.

ஜீவிதாவிற்கு, இது கனவா?? நினைவா என்று கூட தோன்றவில்லை. உடல் நடுங்க, அவனது கைக்குள் கிடக்கிறாள் கத்த நினைக்கிறாள், முடியவில்லை.. அவனது கை, அவளது வாயை அடைத்திருக்கிறது. மற்றொரு கையால் அவனது கால்சட்டையை துலாவி எதையோ எடுக்கிறான், அது கத்தியா?? என்னை கொல்லப்போகிறான்?? என பலநினைவுகள்...

கடவுளே !!! என கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். சில வினாடிகளில் அவன் கையை எடுத்துவிட்டான். கண்ணைத் திற என காதருகே ஒரு மெல்லிய சத்தம், உடல் கூசினாள் நங்கை.

மெதுவாக கண்களைத் திறந்தாள். அறையில் செல்போன் டார்ச், வெளிச்சத்தை பரப்பியது. அந்த உருவம் அவன் பொருட்காட்சியில் தன்னை காப்பாற்றியவன். இன்னும் அவன் கை அவளது தோலை சுற்றி இருக்க, அவனை தட்டிவிட்டு விலகி நின்றாள்.

ஓ.. சாரி நீங்க கத்தக்கூடாது என்று தான் என லேசாக புன்னகையில் தடுமாறினான்.

எதுக்காக என்னோட அறைக்கு வந்தீங்க... அதுவும் இராத்திரியில் என இன்னும் படபடப்பு குறையாமல் கேட்டாள்.

படபடப்பு இருட்டில் கண்ட உருவத்திற்கா அல்லது, சில நிமிடங்கள் ஒரு ஆடவனின் கைக்குள் அடங்கிக் கிடந்ததற்கா என அவளுக்கு தெரியவில்லை.

பொருட்காட்சியில் சில நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என சொல்லித்தானே சென்றேன். அதனால் தான் திரும்பி வந்தேன்.

அவனை உற்று பார்த்தவளுக்கு, அவன் சிரிப்பை அடக்கியவாறு பேசி தன்னை கேலி செய்வது நன்றாக புரிந்தது.

மிக்க மகிழ்ச்சி, கொடுத்தவாக்கை காப்பாற்றிவிட்டீர்கள், செல்லுங்கள் என்றாள் ஜீவிதா.

கதவு தட்டப்பட்டது. விடுதி வார்டன் ஜீவிதா, என்னம்மா சத்தம்!! என கேட்டார்.

உடனே ஜீவிதா அவனை குளியலரைக்குள் தள்ளி கதவடைத்துவிட்டு, அறைக்கதவை திறந்தாள்.

கண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தும் அவளது செயலுக்கு உடன்பட்டான்.

ஒன்னும் இல்ல மேடம் கனவு, யாரோ திருடன் வந்த மாதிரி, சாரி மேடம் என்றாள்.

கண்ணன், அவள் சலிக்காமல் பொய்கூறிவிட்டு தன்னை திருடன் ஆக்கியதை நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான்.

சரி, சரி நாளைக்கு கிளம்புவதற்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டாயா?? என்றார்.

ம்.. எல்லாம் தயாரா வைச்சுட்டேன் என்றாள். உனக்கு பயமா இருந்தா நான் வேனா உன்னோட தூங்கவா?? என்றார்.

ஐய்யய்யோ என மனதில் நினைத்தவள், ரொம்ப நன்றி மேடம், ஆனா நான் பாத்துக்கிறேன் , குட்நைட் என ஒருவழியாக அவர்களை அனுப்பிவிட்டு கதவை தாளிட்டாள்.

குளியறை கதவை திறந்தவள், ரகசியமாக எப்படி வந்தாயோ, அப்படியே போ, பிளீஸ் என்றாள்.

அவன் சரி என அறைகதவுபக்கம் செல்ல, அவன் கை பற்றி போகவிடாமல் செய்தவள், இங்க எங்க போற? வார்டன் இருக்காங்க, எம்மானத்த கப்பல் ஏத்தாம விடமாட்ட நீ...என மெல்லிய குரலில் கீச்சிட்டாள்.

அவளது ரகசிய பேச்சு அவனுக்கு சிரிப்பு மூட்டியது. நீதான வந்த வழியாக போக சொன்ன, இதுதான் நான் வந்த வழி என்றான்.

அடேய்... வேற எந்த வழியும் தெரியாத...

நான் என்ன ஜீ பூம் பா.. வா சட்டென மறைய..

அதுவும் சரிதான் சிறிய உருவமாய் இருந்தாலும் பரவாயில்லை. சன்னல் பக்கம் எதையாவது முயற்ச்சிக்கலாம்.

நீ வஞ்சகம் இல்லாமல் வளர்ந்திருக்கிறாய்.. உன் அம்மாவுக்கு சல்யூட் என்றாள்.

ஹே!! என்ன சொன்ன??? என்றான் அவன்.

ச்சூஊஊ... ஒன்னுமில்லை. நீ கொஞ்சம் கத்தாம அமைதியாய் இருந்தாலே போதும்.

நீ நாளைக்கு எந்த ஊருக்கு போற?? என்றான் அவன் மெதுவாக...

சென்னைக்கு, ஏன்???

ஒன்னுமில்லை, சும்மா... என்றவன் அவள் பிடித்திருந்த கையை தனது இரு கைக்குள் அடக்கி பொத்தி வைத்தான்.

அவள் பட்டென தனது கையை உருவிக்கொண்டாள்.

ம்சூஊ என்றவன் பின்பு, மெல்லிய சிரிப்பில் கதவை தட்டியவுடன் என்னை திருடன் என பிடித்துக்கொடுக்க வேண்டியது தானே, ஏன்?? என்னை காப்பாற்றினாய். அதுவும் நான் கேட்காமல்....

நீ, நான் கேட்காமலே என்னை கொல்ல வந்தவர்களை கொன்று என்னை காப்பாற்றவில்லையா!. அதுபோலத்தான் இதுவும்...

அவன் வாயைப் பொத்திக்கொண்டு விழுந்து விழுத்து நகைத்தான். அவர்கள் உன்னைக் கொல்ல வந்தார்கள் என யார் சொன்னது????

பிறகு கையில் கத்தியுடன் வந்தார்களே,

அவர்கள் தாக்க வந்த இலக்கு வேறு, நானும் உன்னை காப்பாற்ற வரவில்லை... லூசு!! என்றான்.

பிறகு எதற்காக அத்தனை கூட்டத்தில் என்னை மட்டும் கூட்டிப்போய் தனியாக அமர்த்தினாய்.

பாவம் பொண்ணு நல்லா இருக்கே, கத்தி ஏதும் மேல பட்டா நாளைக்கு கல்யாணமாகாதே என்ற கரிசனம்தான்.

பொய் அவங்க என்னத்தான் கொல்ல வந்தாங்க, ஏய் லூசு!! இப்படி யார்கிட்டையும் போய் சொல்லீட்டு அழையாத என்றான்.

சொல்லீட்டனே, போலீஸ்ல புகார் வரை குடுத்தாச்சு. என்றாள் திருதிருவென முழுத்தவாறு.

என்னனு ...

என்ன கொல்ல வந்த மூவரை ஒருவன் கொன்று என்னை காப்பாற்றினான். ஒருவனை இழுத்துச் சென்றுள்ளான். என அப்படியே ஒப்பித்தாள்.

அடிப்பாவி, நீ என்மேல தான் புகார் குடுத்தயா???

அப்படி இல்லை , ஆனா காப்பாத்தினவன் எப்படி இருப்பானு கேட்டாங்க, உங்க அடையாளமும் சொல்லி இருக்கேன்....

நீ நல்லா வருவ, என்னனு சொன்ன..

உங்க அடையாளம் தான்...

ஐயோ!!!.. எந்த போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்த,

பவி அண்ணாவுக்கு, கமிஷ்னர் தெரியுமாம், அவர்கிட்டதான் கொடுத்தோம்.

செல்வ பாண்டியன் சாரிடமா???

ம். ம்.. உங்களுக்கு அவர தெரியுமா???

தெரியும் என தலை ஆட்ட ஆரம்பித்தவன், பின்பு எல்லா புறமும் தலையை ஆட்டி அவளை குழப்பிவிட்டு, பாய் !!! என பறந்துவிட்டான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா???
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி ஆறாம் பகுதி...

பவித்ரன் ஜீவிதாவுடன் சென்னை செல்வதற்கு அனைத்து பொருட்களையும் பெட்டியில் எடுத்து வைத்தான்.

டிடக்டிவ் இடமிருந்து வந்த ரிப்போட் பாதி படித்த நிலையில் இருக்க, அதை தன் சட்டையில் எடுத்து வைத்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்.

கடைசி தினம் என்பதால் ஜீவிதாவுடனான அனைத்து பெண்களும் தங்கள் பெட்டிகளுடனேயே கடைசி வகுப்பிற்கு வந்தனர்.

சில நாட்கள் சென்னைக்கு செல்லவிருப்பதால், அனைத்து பொறுப்புகளையும் அவரவருக்கு பவித்ரன் பிரித்துக் கொடுத்தான்.

மது மிகவும் ஏக்கமாக, அதை எப்படி அவனிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல், அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பவித்ரன் அவளது அலுவல்களை பட்டியலிட்டுக்கொண்டிருந்தான். அவளுக்கு சுத்தமாய் கவனம் அவன் சொல்லும் வார்த்தைகளில் இல்லை, மாறாக ஐயோ!!! ஊருக்குப் போகிறானே, நாளை முதல் அவனை எப்படி?? பார்ப்பது என்பதில்தான் முழுமனதும் இருந்தது.

அவளது பார்வை அறையை அளந்தது, ம்சூ என பார்வையை சுழற்றியவள் கண்ணில் தரையில் கிடந்த ஒரு புகைப்படம் பட்டது.

அதை குனிந்து எடுத்துப் பார்த்தவள், நெஞ்சம் துடித்துப்போனாள். அது ஆனந்தின் புகைப்படம்.

கண்ணில் கோபம் கொப்பளிக்க, அந்த புகைப்படத்தையும், பவித்ரனையும் மாறி மாறிப் பார்த்தாள்.

பவித்ரன், என்ன மது, கவனம் எங்க இருக்கு???என்ன போட்டோ அது??? என்றான்.

அதை அவனுக்கு திருப்பிக்காட்டினாள். அது ஆனந்தைப் பற்றிய ரிப்போட்டுடன் வந்த புகைப்படம். இது எப்படி கீழே விழுந்தது என எண்ணியவாறு, குடுங்க என்னோடதுதான் என வாங்க முயன்றான், பவித்ரன்.

மது, இவர உங்களுக்கு எப்படித் தெரியும் என தீவிரமாக வினவினாள்???

பவித்ரன் அவள் கண்ணில் அனல் கண்டு குழம்பினான்.

அதற்குள் பொறுக்க முடியாதவள், இந்த கொலைகாரன் எங்கிருக்கிறான்?? என சத்தமாக வினவினாள்??

கொலைகாரனா??? இதைத்தான் ரஞ்சனியும் கூறினாள். அவள் ஏதோ ஒரு பெண்ணை தாக்கியதாக ரிப்போட்டில் இருக்கிறது. ஆனால்???

தனது மனக்குழம்பத்தை தள்ளிவைத்தவன், கொலைகாரனா? யாரை கொலைசெய்தான்?? என நேரடியாக மதுவிடம் கேட்டான்.

என் அக்கா!!!! அழகான அக்கா!! கத்திக்கூட போசத்தெரியாதவள்!! சிரித்தாள் கூட இரண்டாம் நபருக்கு சத்தம் கேட்காது!!! ஆனால் ஒரு பைத்தியக்காரி!! என்ற மது அப்படியே மேஜையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

பவித்ரன் இதயத்துடிப்பு இரட்டிப்பானது. இது போலத்தான் எதையோ ரஞ்சனி சொல்ல முயற்சித்தாள், அவள் சொல்வதைக் கேட்காமல், அவள் பொய் கூற விளைவதாய் நினைத்து, அவளை தண்டித்துவிட்டோமே!!! சை!!!

மது, பிளீஸ் அழாத, தண்ணீர் குடி!! என அவள் புறம் தண்ணீரை நகர்த்தினான்.

மது அசையவில்லை. அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.

இவனை நீ தண்டிக்க விரும்பினாள், நான் உதவுகிறேன் என்றான் பவித்ரன்.

அந்த வார்த்தையில் மதுவின் கண்ணீர் பட்டென நின்றது. நிமிர்ந்து அமர்ந்தாள்.

எப்படி??? எங்கே இருக்கிறான் நந்து? என கண்ணில் ஆர்வத்துடன் வினவினாள்.

சொல்கிறேன். அதற்க்கு முன் என்ன நடந்தது என எனக்குத் தெரிய வேண்டும்.

சொல்கிறேன். ஆனால் அதற்க்குமுன் நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்யவேண்டும்.

என்ன சத்தியம்??

நான் என தயங்கியவள், பின்பு மன உறுதியுடன் , நான் நந்துவின் முகம், உடலெல்லாம் சிதைந்து ,உயிருக்காக அவன் கதறுவதை பார்க்க வேண்டும் என்றாள்.

பவித்ரன் மதுவின் வார்த்தைகளில் அதிர்ந்தான். மது லேசான குறும்பு செய்பவள் என்றாலும், யாரும் வருத்தத்தில் இருந்தால், அவளுக்கு மனம் தாங்காது. இது பவித்ரன் தன் விசயத்திலேயே சிலமுறை கண்டிருக்கிறான்.

மதுவை சற்றே நிலைபடுத்த விரும்பி, கேலிபோல, இது மட்டும் போதுமா??? என வினவினான்.

இதுதான் வேண்டும் என்றாள் இரட்டிப்பு தெளிவாக..

சரி சத்தியம். இப்போதாவது சொல் என்றான்.

இது என் அக்கா இறக்கும் தருவாயில், என்னை அழைத்து கூறியது. அப்போது அவள் இருந்த கோலம்... என மூச்சை இழுத்துப் பிடித்து அழுகையை அடக்கினாள் மது.

சில வினாடி பவித்ரன் அறையே நிசப்தமாய் இருந்தது. பின்பு ஒரு வித தைரியத்துடன் நிமிர்ந்த மது, அவளது அக்காவின் கதையை கூற ஆரம்பித்தாள்.

என் அக்கா பெயர் மலர். அவளுக்கு மிகவும் பொருத்தமான பெயர். மலரைப் போல அழகு, அமைதி, அதே போல சீக்கிரம் வாடியும் விட்டாள்.

எனக்கும் அவளுக்கும் மூன்று வருட இடைவெளிதான் என்றாலும், எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் என் அம்மா கடவுளிடம் சென்றுவிட்டதாக தந்தை கூறினார். அம்மா நம்முடன் தான் இருக்கிறார்கள் என அக்கா கூறினாள். சிறுவயதில் நான் இருந்தபோது எடுத்த புகைப்படத்தில் அம்மாவைப் பார்த்திருக்கிறேன். அம்மா எப்படி இறந்தார்கள் என்று கூட என்னிடம் அக்கா சொல்லவில்லை. நானும் அதை தெரிந்து கொள்ள விருப்பம் காட்டவில்லை. எனக்கு அம்மாவைத் தேடும் அவசியமே இல்லாமல் என் அக்கா பார்த்துக்கொண்டாள்.

நான் முதல் முறை என் அம்மாவைத் தேடியது, என் அக்கா திருமணம் முடித்து என்னை விட்டு சென்ற நாள். அந்த நாளை இன்றும் மறக்க முடியாது.

அப்பா சோகமாக இருந்தாரே தவிர எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

கல்யாணவீட்டை நானும் என் தந்தையும் சுத்தம் செய்தபின், வீடு சுத்தமாக மாறி, எங்களை அனாதையாக்கியதைப்போல உணர்ந்தேன். அன்று முழுவதும் அழுது, அழுது எனக்கு காய்ச்சல் வந்தது.

அக்கா உடனே என்னைக்காண வந்தாள். அவளை கட்டிக்கொண்டு என்னை விட்டுப் போகாதே என தேம்பித்தேம்பி அழுதேன்.

என் அக்கா மென்மையானவளே தவிர , நான் சிறு வயதில் அவள் அழுது பார்த்ததில்லை.

ஏன்?? சென்னை மாப்பிள்ளையை கட்டிக்கொண்டாய், இங்கே திருமணம் செய்து என்னுடனே இருந்திருக்கலாமே, என்னை பிரிந்து செல்லத்தான் உனக்கு ஆசையா??? என்றதும், அவள் கண்கள் மடமடவென நீர் சுரந்தது.

அப்போதும் அவள் விசும்பல் கூட எனக்கு கேட்கவில்லை. அக்காவையே அழவைத்துவிட்டோமே, சை !!என என்னை நானே தேற்றிக்கொண்டு அவளை வழியனுப்பி வைத்தேன்.

அக்காவின் எல்லா வேலைகளையும் நானும் அப்பாவும் பகிர்ந்து செய்யப் பழகினோம்.

ஒரு சில மாதங்களில் அக்கா தாய்மை அடைந்ததாக தகவல் வரவே, நான் கல்லூரிக்கும், அப்பா அலுவலகத்திற்கும் விடுப்ப எடுத்துக்கொண்டு, அவளைப் பார்க்க போனோம்.

அக்காவீடும் எங்கள் வீட்டைப் போலவே மாறி இருந்தது. கணவரும், மாமியாரும் மணிக்கு ஐந்து முறையாவது மலர் என்ற பெயரை ஜபித்தனர்.

அவளும் சளிக்காமல் சிரித்த வண்ணம் அவர்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொடுத்தாள்.

அழகான அக்கா, இன்னும் அழகாக மாறி இருந்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் அக்காவிடம் தனிமையில் பேசும்போது, அக்கா என்னைத் தேடி கல்லூரி நண்பர்கள், தெரிந்தவர்கள் யாரேனும் வந்தார்களா?? என வினவினாள்.

இல்லை , ஏன் கேட்கிறாய்??

அப்படியாரேனும் வந்தால், எனது தெலைபேசி எண்ணோ, என் விவரங்களோ எதுவும் தர வேண்டாம் மது, என்றாள் தீவிரமாக.

எத்தனைமுறை இதையே கூறுவாய், தரவில்லை. ஆமாம் ஏன்??? நீ ஏதும் தவறு செய்துவிட்டு கல்லூரியிலிர்ந்து ஓடிவந்துவிட்டாயா???? என கேலிபேசினேன்.

அவளும் சிரித்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து என் அக்கா என்னுடன் தெலைபேசியில் போசும் போது சோகமாக பேசினாள். வார்த்தைகளில் இருந்த உற்சாகம் அவள் குரலில் இல்லை.

அதன்பிறகு, அவளிடம் நான் பேச முயற்சி செய்யும்போது, பல சமயங்களில் அவள் மாமியார் போசி, அவள் அசதியாக, தூங்குவதாக கூறினார்.

அக்கா செல் இல்லாமல், வெளியில் எங்கோ இருந்து என்னை ஒரு நாள் அழைத்தாள், அவளது குரல் பதறியது.

எனக்கு என்ன நேர்ந்தாலும், நீங்கள் என் மாமியாரையோ, என் கணவரையோ கோபிக்கக் கூடாது என்றாள்.

என்னாச்சு அக்கா?? எங்கே இருந்து பேசுற???

அது வேண்டாம். என்னை மன்னித்துவிடு மது. அப்பாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், ஆனால் அவரிடம் பேசும் துணிச்சல் எனக்கில்லை என்றவள், பட்டென தொலைபேசியை வைத்துவிட்டாள்.

என்னவானது என நான் யோசிக்கும், முன் மலரின் கணவர் சாருநேசனிடமிருந்து அழைப்பு வந்தது.

மலரைக் காணவில்லை. அங்கு வந்தாளா??என்றார்.

இல்லை. என சற்றுமுன் அவள் பேசியதை அவரிடம் கூறினேன்.

என்னாச்சு அத்தான்??? என்றதும். அவர் ஒரு குண்டைப்போட்டார்.

அவளுக்கு மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, பதட்டம், பயம், கத்துவது , அதனால் அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் வைத்திருந்தேன். இப்போது எங்கே போனால் என தெரியவில்லையே.

அத்தான்!! என் அக்காவிற்கு ஒரு நோயிமில்லை. அவள் நன்றாகத்தான் சற்று முன் என்னோடு பேசினாள், என நான் அவரிடம் சண்டையிட்டேன்.

பின்பு சாருநேசன் போலீசில் புகார் அளித்தார். அக்காவின் மன நோய் குறித்தும், அவள் அதற்காக சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளையும் என்னிடமும், அப்பாவிடமும் காட்டினார்கள்.

அப்பா, இதையெல்லாம் முன்பே என்னிடம் ஏன்???? சொல்லவில்லை என அப்பா கத்தினார்.

அவ புள்ள பிறந்தா எல்லாமே சரியாகிவிடும் என மருத்துவர் கூறினார். அதற்குள் உங்களை பயம்புறுத்த வேண்டாமே, பிரசவம்கூட நானே பார்த்துக் கொள்ளலாம் என இருந்தேன் என அவளது மாமியார் அழுதார்.

அவர், அழுதழுது, கண்கள் வீங்கி இருந்தது. பின்பு நாங்களும் எங்கெங்கோ தேடினோம். கிடைக்கவில்லை.

ஒருநாள் இறந்த கர்பிணி உடல் சிதைந்த நிலையில் இருப்பதாகவும், அடையாளம் காட்ட வருமாறு போலீஸ் அழைத்தனர்.

அவளது மாமியார் அழுத வண்ணம் எங்களுக்கு முன்னே சென்றார்.

எங்களுக்கும் சரியாக தெரியவில்லை. நீரில் மூழ்கி உடல் வீங்கி இருந்தது. உங்கள் டீ. என். ஏ வுடன் பொருந்துவதாக அப்பாவிடம் போலீஸ் கூறினார்.

அவளது மாமியார்தான், எங்களைக்காட்டிலும் அதிகமாக அழுதார். என்னோட குலமே முடிஞ்சுபோச்சே!!!என அழுத அவர், அப்படியே மயங்கி சரிந்தார். சாருநேசன்தான் அவரை தூக்கிச் சென்று காரில் அமர்த்தினார்.

அந்த உடலை வைத்து அனைத்து சடங்குகளையும், அப்பாதான் செய்தார். அவர்கள் வரவே கூடாது என அப்பா தீர்மானமாக கூறிவிட்டார்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதன்பின் ஒருமாதம் முடிந்த நிலையில் எனக்கு ஒரு தெலைபேசி என்னிலிருந்து அழைப்பு வந்தது.

அது சென்னையைச்சேர்ந்த எண். ஒரு பெண் பேசினார். மிகவும் கம்பீரமான குரல்.

ஹலோ, நான் சேவை மருத்துவமனையிலிருந்து பேசுகிறேன் என்றார்.

என் அக்கா என்னைக்காண விரும்புவதாகவும், யாருக்கும் தெரியாமல் வரும்படி தகவல் வந்திருந்தது.

நானும் அப்பாவும் சென்றோம். அங்கே வயதான காரணத்தால் அப்பாவை அனுமதிக்கவில்லை. எனக்குமே ஒரு முகமூடி கொடுக்கப்பட்டது.

நிசமாகவே என் அக்காதான். என்கண்ககளை என்னால் நம்ப இயலவில்லை. இறந்ததாக காரியம் செய்தவள் உயிருடன். ஆனால் எனக்கு சந்தோசம் துளிஅளவும் இல்லை. கண்ணாடிக்கு வெளியே அப்பா, கண்ணாடிக்கதவின் வழியாக அவளைப் பார்த்து நெஞ்சைப்பிடித்துக்கொண்டு கதறி அழுதார்.

முடியெல்லாம் வெட்டப்பட்டிருந்தது. கால்கள் சூம்பிப்போய், விழுந்துகிடந்தது. கண்கள் மங்கி போயிருந்தது. பட்டுப்போன்ற அழகிய வெள்ளை சருமம், அங்கங்கே கருத்து திட்டுட்திட்டாய் மாறி இருந்தாள். அவளை ஒரு வலைக்குள் படுக்க வைத்திருந்தார்கள்.

கண்மூடி படுத்திருந்தவளை நான் தொட்டு எழுப்பப் போனேன். அங்கிருந்த செவிலியர், வேண்டாம் என்று எனக்கு கண்காட்டிவிட்டு, அவரே உறைபோட்ட கையால் அக்காவை லேசாக தொட்டு எழுப்பினார்.

அக்கா கண்திறந்து என்னைப் பார்த்ததும், கண்ணில் நீர் பெருகி அவளது கண்ணை மறைத்தது. அதைக்கூட அவளால் துடைக்க முடியவில்லை.

அவளைப் பார்த்து அழுகை வந்ததே ஒழிய போச்சு வரவில்லை.

என்னக்கா, எப்படி இப்படி ஆனது என கேட்டேன். அவளோ பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. அழுகையில் சுயநினைவு அற்று மயங்கிப்போனாள்.

செவிலியர் என்னை வெளியே இருக்கும் படியும், மயக்கம் தெளிந்தால், மீண்டும் கூப்பிடுவதாக கூறினார்.

அப்போது வெளியில் அப்பாவின் கையில் முத்தான பெண், அப்படியே என் அக்காவை உறித்து வைத்துப் பிறந்தாள்.

அப்பா, குழந்தையை நெஞ்சோடு அணைத்து கண்ணீர் விட்டார்.

என் அக்கா நிறைமாதத்தில் முதுகில் கடுமையாக தாக்கப்பட்டு முதுகொலும்பு உடைந்த நிலையில் இங்கே அனுமதிக்கப்பட்டார் என்றனர்.

அப்போது குழந்தையை வெளியே எடுத்திருந்தால், அது குழந்தைக்கு ஆபத்து, எடுக்காவிட்டால், மலருக்கு ஆபத்து என்ற நிலை.

ஆனால் உன் அக்கா பிடிவாதமாக குழந்தை முழு ஆரோக்கியம் வரும்வரை வெளியே எடுக்கக்கூடாது என கூறிவிட்டார்.

அதனால் முதுகெலும்பு சிதைந்த நிலையில், குழந்தையின் அவஸ்த்தையும் சேர, கைகால்கள் செயலிழந்து விட்டது.

சாரி, எங்களால் மலரை மீறி எதுவும் செய்ய இயலவில்லை என்றார் மருத்துவர். ஏன் அப்போது நீங்கள் எங்களை அழைக்கவில்லை என அப்பா கேட்டார்.

மலர் உங்கள் முகவரியை இப்போதுதான் கொடுத்தார்கள், போலீசில் புகார் கொடுத்தால் என் குழந்தைக்கு ஆபத்து உள்ளது என கூறிவிட்டார். அதனால் எங்களால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை.

ஏற்கனவே ஒருமுறை வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொலை முயற்ச்சியிலிர்ந்து தப்பித்துதான் இங்கே அனுமதிக்கப்பட்டார்.

யார் ??என் அக்காவை இந்த நிலைக்குத் தள்ளியது. யார் கொலை செய்ய முயற்சி செய்தது.???

இவர்தான் என ஒரு படத்தொகுப்பை ஓட்டிக்காண்பித்தார்கள்.


ஒரு பிரபள மருத்துவமனையில் என் அக்காவின் அறைக்குள் நுழைந்து, அவளது வயிற்று குழந்தையை தாக்க கையில் ஒரு கட்டைபோல் எதையோ எடுத்தான். அதற்குள் இரண்டு மூன்று ஆண்கள் அவனை வந்து பிடித்தனர். அவன்தான் நந்து.

நான் அவனை பார்த்ததும் அதிர்ந்தேன். அவன் என் அக்காவின் நண்பன். ஆனால் அவனிடமிருந்து தப்பிக்கத்தான் கல்யாணம் செய்து கொண்டாள் என்பதும், அதன்பின் அவன்தான் அவளை கடத்தி வந்து அவளை தாறுமாறாக தாக்கியதாகவும் விசாரித்து அறிந்து கொண்டேன்.

அங்கே என் அக்காவை கருணைக்கொலை செய்ய கையெழுத்து போட்டுவிட்டு, என் அக்காவின் ஆசைப்படி அந்த குழந்தையை மருத்துவமனை மூலமாக அத்தானிடம் ஒப்படைத்தோம்.

ஏன் போலீசில் அவனை பிடித்துக்கொடுக்கவில்லை. என்றான் பவித்ரன்.

என் அக்கா அவன் விசம். அவனை சீண்டாத வரை நமக்கு நல்லது. அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்தாள், நிச்சயமாக என் குழந்தையை, சாருவை அழிக்காமல் ஓய மாட்டான். எனக்கு அவனைப்பற்றி நன்றாக தெரியும்.

எனக்குத்தான் யாருடனும் வாழ கொடுத்துவைக்கவில்லை. என் பெண்ணாவது அவளது அப்பாவுடன் வாழட்டும் என்றாள், என மது அழுகையின் ஊடே கூறினாள்.

விசம், அவனை சீண்டினால், அழிக்காமல் ஓய மாட்டானா?? பார்க்கிறேன் என பவித்ரன் மனதில் சபதமெடுத்தான்.

பலியாவானா?? பலிகொடுப்பானா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி ஏழாம் பகுதி...

நந்தினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஜார்ஜ் குழந்தையைக் காண வைர ஆரத்துடன் வந்தான்.

ரஞ்சனி தன் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. ஜார்ஜ் தன் காதலைச் சொன்னதிலிருந்து அதிகமாய் ரஞ்சனி அவனைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தாள்.

வைர ஆரமா?? ஐய்யய்யோ ஜார்ஜ் என்னால் எந்த உதவியும் செய்ய முடியாது. அவகிட்ட நீங்க நேரடியாவே எதுனாலும் பேசிக்கோங்க , என்ன எந்த வம்புலயும் மாட்டிவிட்டுடாதீங்கப்பா!! என ரஞ்சனியின் அறைக்கதவில் ஒரு பார்வை பதித்த வண்ணம் ஜார்ஜிடம் ரகசியமாக பேசினாள் நந்தினி.

ஜார்ஜ் சிரித்துவிட்டான். அவர்கள் பேசுவதைக் கேட்கக்கூடாது என முக்கியமாக புத்தகம் படித்துக்கொண்டிருந்த ரஞ்சனியின் காதுகளில் நன்றாக அவனது சிரிப்புச்சத்தம் கேட்டது.

நம் காது எதைக் கேட்டக்கூடாது என்று நினைக்கிறோமோ, அது திவ்யமாக வந்து சேரும்.

ரஞ்சனியப் பார்த்து நான் பயந்தா அதில் ஒரு நியாயம் இருக்கு, நீங்க ஏன் பயப்படுறீங்க என்றான் ஜார்ஜ்.

என்னப்பத்தி ஜார்ஜிட்ட நீதான சொன்ன அப்படீன்னு அவ காதபிடிச்சு திருகுன திருகு எனக்கு தான தெரியும். நிறமாச கர்பிணிகூட பாக்கலயே, அதுல தான் எனக்கு பிரசவ வலியே வந்தது.

ஓ... ரொம்ப நல்லதாப்போச்சு... என்றான் ஜார்ஜ்.

நந்தினி முறைத்தாள்.

நான் அப்படி சொல்லல நந்தினி, பாருங்க ரஞ்சனி காத திருக ஆளில்லாம போனதாலதான், அவங்களுக்கு நடு ரோட்ல நடக்கும்போதே, பிரசவ வலி வந்துடுச்சு, நான் வந்து பிடிச்சு காப்பாத்தினேன் என சற்றே கத்தி பேசினான் ஜார்ஜ்.

அதனால, பதிலுக்கு நந்தினியும், ரஞ்சனிக்கு கேட்குமளவு சத்தத்தை ஏற்றினாள்.

பாருங்க ரஞ்சனி, உங்க காத திருகி வீட்லயே பிரசவ வலி வரவச்சுட்டாங்க, உங்கள சேதாரம் இல்லாம காப்பாத்தி இருக்காங்க என்றான்.

இப்போது நந்தினி பலமாக சிரித்து ஜார்ஜின் காதைத் திருகினாள்.

ஜார்ஜ் ஆ.... வென கத்தினான்.

ரஞ்சனி பொருமையின்றி கதவைத்திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

ஜார்ஜின் கையில் ப்ரணவ் பாந்தமாக அமர்ந்திருந்தான். ப்ரணவ் பழகாத மனிதரிடம் போக மாட்டான். இன்று அவன் இவ்வாறு அடங்கி உள்ளான் என்றால், எத்தனை நாட்களாக ஜார்ஜ் பிரணவுடன் பழகுகிறான் என்ற கேள்வி ரஞ்சனி மனதில் உதித்தது.

ஜார்ஜ் ரஞ்சனியைக் கண்டதும், என்ன காப்பாத்து ரஞ்சூ... என நந்தினியின் கைகளை தட்டிவிட்டு, ரஞ்சனியின் பின்னால் பிரணவுடன் வந்து நின்றான்.

இதுதான் சாக்கென ரஞ்சனியின் பக்கம் சென்று நின்று கொண்ட ஜார்ஜை, நடத்து! நடத்து!! என பார்வையால் கேலி செய்த வண்ணம் , அடுத்து ஜார்ஜ் என்ன செய்யப்போகிறானோ என சுவாரஸ்யமாய் வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் நந்தினி.

ஆனால், ஜார்ஜின் ரஞ்சூ என்ற அழைப்பிலேயே ரஞ்சனி நின்றுவிட்டாள். மனம் தாறுமாறாய் கொதிக்க ஆரம்பித்தது.

ஒரு வார்த்தைக்கே பவித்ரனை மறக்க முடியவில்லையே, அவன் உன் முன் வந்தால் என்ன செய்வாய் என மனம் கேள்வி கேட்டது.

அப்போது குழந்தை ரஞ்சனியின் ஆடையைப் பிடித்து இழுக்க நிகழ்காலத்திற்கு வந்தவள், குழந்தையை ஜார்ஜிடமிருந்து வாங்க கை நீட்டினாள்.

ஜார்ஜோ, ஒரு கையால் குழந்தையை பிடித்துக்கொண்டு மறுகையால் ரஞ்சனியை இடையோடு சோர்த்தணைத்தான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத ரஞ்சனி நிலைதடுமாறி, அவன்மீதே மோதி நின்றாள்.

இவன்அடிவாங்காம போகமாட்டான். வா பாப்பா நம்ம ஓடிறலாம் என நந்தினி குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.

ஆனால் ரஞ்சனி கோபப்படுவதற்கு பதில் அவனிடம் சாரி என்றாள், அவன் மீது மோதியதற்காக.

ஜார்ஜ் சுவாரஸ்யம்கூட, இது என்னுடைய கடமை ரஞ்சனி என்றான், இறுக்கத்தை தளர்த்தாமல்...

ரஞ்சனி ,விடு ஜார்ஜ் !!என சொல்ல ஆரம்பிக்க, அவளது கண்ணத்தில் இடியென இறங்கியது, லதாவின் வலக்கரம்.

உள்ளிருந்து ராஜனும், லதாவும் ஒன்றாகத்தான் வெளியில் வந்தனர். ஆனால் லதா இருவரையும் சேர்ந்து பார்த்ததும் கொதித்துவிட்டார்.

ராஜான், என்ன லதா இது என ஆரம்பிக்க, கோபத்தின் உச்சத்தில் இருந்த லதா, நீங்க போச வேண்டாம். குழந்தைய வாங்கீட்டு உள்ள போடி!! என ரஞ்சனியைப் பார்த்து கர்ஜித்தார்.

ரஞ்சனி எதுவும் போசவில்லை. நடந்தது என் தவறல்ல என்று கூட ஒருவார்த்தை கூறாமல், ஜார்ஜிடம் கைநீட்டி குழந்தையை வாங்கியவள், உள்ளே சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

ஜார்ஜிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அவன் ரஞ்சனி மீது எந்த தவறும் இல்லை. நான்தான் வேண்டுமென்றே அவளுடன் விளையாடினேன். நீங்கள் அவளை தவறாக நினைக்க வேண்டாம் என ஆங்கிலத்தில் மடமடவென மொழிந்தவன், வீட்டைவிட்டு வெளியேறினான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி இரவு உணவிற்குக் கூட வெளியே வரவில்லை. நந்தினி , ரஞ்சனியை அழைக்க வந்தாள்.

அம்மா ஏதோ தவறா நினைச்சுட்டாங்க, அதுக்காக இப்படி சாப்பிடாம இருந்தா சரியாயிடுமா, வா சாப்பிடு, நீ சாப்பிட வராம யாரும் சாப்பிடல, வா சாப்பிடலாம் என்றாள்.

ஏன் நந்தினி, நான் நடத்தை கெட்டவளா?? என் மீது தவறு இருக்கிறதா?? அவர்கள் பார்த்த காட்சியில் தவறு இருந்தாலும், அவர்கள் என்னிடம் ஒருவார்த்தை கூட கேட்காமல், முடிவெடுத்திருக்கிறார்கள் என்றால், இது அவர்களுக்கு நீண்ட நாட்களாகவே இருந்த சந்தேகம் அப்படித்தானே!!.

ஹே!, என்ன ரஞ்சனி நடத்தை அது இதுன்னு பேசிட்டு, நீ ஜார்ஜை விரும்பினால் கூட அது தவறில்லை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததை நினைத்து நான் மிகவும் சந்தோசப்படுவேன்.

நான் ஜார்ஜை விரும்புவதாக நீ நினைக்கிறாயா?? எப்படி???

காதலிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவன் உன் மனதில் நண்பனாகக்கூட இடம் பிடிக்கவில்லை என்று சொல்லாதே, நம்பும்படி இல்லை என்றாள் நந்தினி நேரடியாக.

ஆண் நண்பனா??? நான் என்ன சினிமா ஸ்டாரா??? அல்லது மாடலா??

பின் இன்டர் நெட்டில் உலவும் உங்கள் புகைப்படங்கள் பொய்யா??? என்றாள் நந்தினி

எந்த புகைப்படங்கள்???

எந்நேரமும் லேப்டாப்பில் உட்கார்ந்திருக்கிறாய். என்னிடம் வினவுகிறாய்??? என தனது செல்போனில் , ஜார்ஜும் ரஞ்சனியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை எடுத்து காண்பித்தாள் நந்தினி.

அதை ஒருவித எரிச்சலுடன் பார்த்துவிட்டு, நந்தினியை முறைத்தாள் ரஞ்சனி.

என்ன இதெல்லாம் பொய்யா??? என்றாள், நமட்டுச்சிரிப்புடன் நந்தினி.

இல்லை. ஆனால் இதில் கோர்வையாக பின்னப்பட்டுள்ள கதை, கட்டுக்கதை. நான் ரோட்டில் மயங்கிய போது ஜார்ஜ் காப்பாற்ற கைகொடுத்தது, ஸாப்பிங் மாலில் அவராக வந்து பேசும் போது எடுத்தது, என ஒவ்வொன்றும் உண்மை. ஆனால் நாங்கள் காதலிப்பதாக அதில் ஒரு செய்தி மறைந்திருக்கிறதே அது பொய், பொய் ! பொய் என்றாள் சற்றே உணர்ச்சி காட்டும் குரலில்.

நிஜமாகவே , உங்களுக்குள் எந்த வகையான அன்பும் இல்லையா??? என மனதில் எழுந்த ஏமாற்றத்துடன் வினவினாள் நந்தினி.

என்னைப் பொருத்தவரை, எனக்கு ஜார்ஜிடம் எந்த வகை உணர்வும் தோன்றவில்லை. என்பின்னால் சுற்றி காலத்தை வீண்செய்கிறானே என்ற ஒரே உணர்வுதான்.

ஏன்?? ஏன் தோன்றவில்லை. அவருக்கு என்ன குறை. அவரை நீ ஏன் மணக்கும் எண்ணத்தில் பார்க்க்கூடாது என தன் மனதின் ஆசையை போட்டு உடைத்தாள் நந்தினி.

ஏய்!! என எழுந்த ரஞ்சனி அவளை அடிக்க கை உயர்த்திவிட்டாள். நாகரிகம் கருதி கையை சட்டென இழுத்துக்கொண்டாள்.

ரஞ்சனியின் இந்த திடீர் கோபம் நந்தினியை சிந்திக்க வைத்தது. அப்படியானால், நீ ஜார்ஜை நிராகரிக்கும் அளவிற்கு உன் மனதில் உள்ளது பவித்ரனா?? அவரை இன்னும் நேசிக்கிறாயா???

ஆம் என் மனதில் உள்ளது பவித்ரன் தான். ஆனால் நேசமோ , காதலோ இல்லை. இனி எந்த ஒரு ஆணின் காதலையும் ஏற்று, உன்னை இழந்துவிடாதே என அவன் கற்றுக்கொடுத்த பாடம். நானே நினைத்தாலும், என் மரணம்வரை மறக்காது அவன் துரோகம்.

ஹே!!! பைத்தியம் போல பேசாத ரஞ்சனி. இப்போதுதான் எனக்கு உன்மீது கோபம் வருகிறது. ஜார்ஜை விரும்பவில்லை என்றாய் சரி, பவித்ரனை வெறுக்கிறேன் என்றாய் பரவாயில்லை. யாரையுமே நான் நம்பமாட்டேன் என்கிறாயே இது தவறு.

நான் உன்னை அடம்பிடித்து உன்னை எதற்காக என்னுடன் கூட்டிவந்தேன் தெரியுமா??? உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் அமையவேண்டும் என்றுதான். அது ஜார்ஜால் வரும், உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என நான் நினைக்கிறேன். நீ இதுவரை எப்படியோ, இனிமேல் அவனை அந்த இடத்தில் வைத்துப் பார். நிச்சயமாக அந்த இடத்தை அழகாக நிரப்பி உன் மனதில் இடம் பிடிப்பான்.

எனக்கு யாரும் தேவையில்லை. காதலன் நிச்சயமாக வேண்டாம்.

இவ்வளவு சொல்லியும் ரஞ்சனி அடம்பிடிப்பது, நந்தினிக்கு கோபத்தை வரவழைத்தது. காதலன் வேண்டாம் என்கிறாயே, அவனை எதற்காக விரட்டி அடிக்காமல், விட்டுவைத்துள்ளாய். மனதில் அவன் மீதுதான் எந்தவகையான உணர்வும் இல்லையே!! அவனை விரட்ட வேண்டியது தானே!!

அவன் மனதை நோகடித்து, அவனை திரும்ப என்னை பார்க்க வராதவாறு என்னால் விரட்ட இயலும். ஆனால் என்னைத் தடுப்பது ஒன்றுதான் அவன் எனக்கு இக்கட்டில் செய்த உதவி. அவன் என்னைக் கவரவோ, என்னை வீழ்த்தவோ செய்யவில்லை. மனதில் கபடமற்று செய்தான். அது ஒன்றுதான் என்னை ,அவன்மீது கடுமை காட்டவிடாமல் தடுப்பது.

பார்த்தாயா??? அவன் நல்லவன் என நீயே சொல்லிவிட்டாய், பிறகென்ன???

நல்லவனானால்????

உன் கணவர், இராமசாமி, இன்னும் சொல்லப்போனால் ராஜா, எனக்கு தெரிந்து நிறைய நல்லவர்கள் உள்ளனர், அதனால்???

ஒன்றுமில்லை. உன்னை சாப்பிட அழைக்க வந்தேன், வா போகலாம் என்றாள் நந்தினி எரிச்சலாக..

ரஞ்சனி சிரித்துவிட்டாள்.

என்ன ஜெயித்துவிட்டோம் என்ற நினைப்பா?? நான் எதையும் லேசில் விடமாட்டேன், அது உனக்கே தெரியும். இப்போது விட்டிருப்பது அடுத்து இறுக்கிப்பிடிக்கத்தான். என்னிடம் தனியாகவே இருப்பேன், வாழ்வேன் இந்த கதையெல்லாம் ஆகாது என சொல்லிவிட்டு மடமடவென முன் நடந்தாள் நந்தினி.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமைதியாக அனைவரும் உணவு உண்டனர். நிவிஷன் நந்தினியின் கால்களை மேஜைக்கடியில் லேசாக சுரண்டினான்.

அவனுக்கு நடந்த எந்த விவரமும் தெரியாது. திடீர் அமைதியை என்னவென தன் மனைவியிடம் வினவினன் இரகசியமாக.

என்னாச்சுங்க, குருமா ஊத்தவா?? என்றாள் நிசப்தத்தை கலைத்தவண்ணம்.

ம்ம்.. என்றவன் அனைவரின் அமைதியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.

இன்னைக்கு ஜார்ஜ் குழந்தையப் பாக்க வந்திருந்தார். ஒரே விளையாட்டுதான் என ரஞ்சனியை பார்த்தவாறு கூறி அவளை வம்பிழுத்தாள். நம்ம குழந்தைக்கு பேர் வைக்கிற விழாவுக்கு அவர கண்டிப்பா கூப்பிடணும். அப்பத்தான் வீடு கலகட்டும் என்றாள் அறிவிப்பாக.

லதா கோபம் தலைக்கேற அமர்ந்திருக்க, ரஞ்சனி நந்தினியை முறைத்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நிவிஷன் , கண்களால் அவர்களை நந்தினிக்கு சுட்டிகாட்டி, அமைதியாக இரு! என்றான்.

நந்தினி கணவனுக்கு, கண்களால் தெரியும்! என கூறிவிட்டு தொடர்ந்தாள். நீங்க உங்க ஆபிஸ்ல யாரையும் கூப்பிட வேண்டாம். நம்ம வீட்டு ஆளுங்க மட்டும் போதும். இல்லைனா எல்லாரும் ஜார்ஜையே பாத்துட்டு இருப்பாங்க, ரஞ்சனிக்கு அது சுத்தமா பிடிக்காது எனவும், ராஜனும் லதாவும் ஒருசேர ரஞ்சனியைப் பார்த்தனர்.

ரஞ்சனி நான் எப்போ அப்படி சொன்னேன் என நந்தினி மீது பாய்ந்தாள். நீதான ரஞ்சூ..... சொல்லுவ, ஒரு விழான்னா அது யாருக்கானதோ அவங்களுக்கு முக்கியத்துவம் தரணும்னு, ஜார்ஜ் வந்தா பாப்பாவ யாரும் பாக்கம, ஜார்ஜையே பாப்பாங்க, அது உனக்கு பிடிக்குமா???..பிடிக்காது, அததான் சொன்னோன் என நந்தினி ரஞ்சனியை மடக்கிவிட்டு கண்ணடித்தாள்.

ரஞ்சனி முறைத்தாள். இதை பார்த்துக்கொண்டிருந்த நிவிஷன், நாரதா!! எனக்கு குருமா வேணுமான்னு கேட்டீங்க, இன்னும் ஒரு சொட்டும் ஊத்தாம, பேசிகிட்டே இருக்கீங்க, கொஞ்சம் என் தட்டையும் கவனிச்சா நல்லா இருக்கும் என்றான்.

நிவிஷன் தட்டில் வெறும் இரண்டு சப்பாத்தி மட்டும் இருந்தது. அதைக் கண்ட அனைவரும் அவரவர் மனநிலை மாறி கலகலவென நகைத்தனர்.

ரஞ்சனி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நேரம், அவளது சேவை மருத்துவ மனையிலிருந்து போன் வந்தது.

ஏதும் பிரச்சனையோ என அடித்துப்பிடித்து ஹலோ என்றாள்.

மேடம் நான் டியூட்டி டாக்டர். சாரி அங்க நைட் ஆயிடுச்சா, சாரி மேம் என்றான்.

பரவாயில்லை, சொல்லுங்க ஏதும் பிரச்சனையா??

அதல்லாம் ஒன்னுமில்லை மேம், இங்க டொனேஷன் கொடுக்க வந்திருக்காங்க, அது கொஞ்சம் பெரிய தொகை அதுதான் வாங்கலாமா??..

இதுல என்ன இருக்கு, தொகை மருத்துவமனைக்கு வேண்டாமா???

தேவை!!

அப்பறம் என்ன வாங்கீட்டு முறைய ரிசிப்ட் கொடுங்க..

அது இல்ல மேம், அது பவித்ரன் சார் என்றார் மருத்துவர்.

ரஞ்சனிக்கு தூக்கம் சுத்தமாக கலைந்தது. சில வினாடி நிசப்தம், பின்பு யார் கொடுத்தா என்ன?? காசு தேவைப்படுதுல்ல, அப்போ வாங்கிக்கோங்க..

அவர் மருத்துவ மனைய சுத்திப்பார்க்க ஆசைப்படுறார்.

அது..

இப்ப சில பாதுகாப்பு நடவடிக்கையால தற்காலிகமா யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லைனு சொல்லீட்டேன். இருந்தாலும் நீங்க ஒரு வார்த்தை பேசுங்க என பவித்ரனிடம் பேசி தரப்பட்டது.

இரண்டு பக்கமும் பேச்சு இல்லை. ஒருவரின் இதயத் துடிப்ப மற்றவருக்கு தெளிவாக கேட்டது.

ஹலோ!! என்றான் பவித்ரன் மிக மென்மையான குரலில்....

...

ரஞ்சனிக்கு வார்த்தைகள் எழவில்லை. சாதாரண ஹலோ கூட இல்லை.

பவித்ரன், ரஞ்சனி!! இருக்கியா??? என்றான்.

ம்..ம்

இது என்னுடைய மருத்துவ மனை என தெரிந்திருக்கிறது. சொல்லுங்க சார்... என்றாள் தொழிற் குரலில் ....

பலியாவாளா?? பலிகொடுப்பாளா???
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி எட்டாம்பகுதி..

நான் பவித்ரன் பேசுறேன் என்றான், உணர்ச்சியை அடக்கிய குரலில்.

ஆமாம் சார், டாக்டர் சொன்னாங்க, நீங்க மருத்துவமனைய சுற்றிப்பார்க்க நினைப்பதாய்... நல்லதுதான் . ஆனால் வெளியாட்கள் யாரையும் நாங்கள் அனுமதிப்பதில்லை என இனிய குரலில் இயம்பினாள்.

நீங்கள் எங்கள் மருத்துவமனையின் அமைப்பையும் செயல்பாட்டையும் காண விரும்பினால், நாங்கள் காணொளி வைத்திருக்கிறோம், அதை காண்பிப்பார்கள்.

எங்களின் சேவைக்கு கரம் கொடுக்க வந்த உங்களுக்கு மிக்க நன்றி. எங்களின் சட்டங்களையும் புன்னகையோடு ஏற்பீர்கள் என நம்புகிறோம். நன்றி !!என தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அழகான போச்சு... வேறொன்றுமில்லையா???

நீங்கள் எதைப்பற்றி கேட்கிறீர்கள்???

போதும். ராத்திரி தூக்கத்துலயும் நல்லா நடிக்கிற, ஆனா பாரு, பகல்ல கூட உன்னோட பேச்சக்கேட்கும்போது, டாலினு தான் கூப்பிடத்தோணுது. சரி நல்லா இருக்கியா??

.....

இந்த மருத்துவமனை அதிபராவே கூட பதில் சொல் என்றான் பவித்ரன்.

நல்லா இருக்கேன் சார். நீங்க??

ரொம்ப கஷ்டபடுறேன். நீ இல்லாம ஏதோ போல இருக்கு, இந்த நிமிடம் உன் இடையை கட்டிகிட்டு உன்னோட வயித்துல முகம் புதைத்து கண்மூடி கிடக்கணும் போல தோணுது என்றான்.

அந்தப்புறம் பட்டென இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அந்த பேசியை நெற்றியில் வைத்து அழுத்திய வண்ணம் கண்மூடி அமர்ந்திருந்தான்.

அந்த அறையில் யாருமில்லை. நாகரீகம் கருதி மருத்துவர் எப்போதோ வெளியில் சென்றிருந்தார்.

மருத்துவர் திரும்ப உள்ளே நுழையும் போதும் யாருமில்லை . மேசையில் ஒரு காசோலை மட்டும் சிரித்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் ஜீவிதாவுடன் அவள் வீட்டில் தங்கியிருந்தான். அண்ணா!! இன்று உங்களுக்கு என் வருங்கால கணவரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என முகம் முழுவதும் வெட்கத்துடன் சொன்னால் ஜீவிதா.

பவித்ரன், மனதில் அதற்காகத்தானே வந்ததே! என நினைத்துக்கொண்டு, ப்பா என்ன வெட்கம்... போட்டோ எடுக்கணுமே! என கேலிசெய்தான்.

அண்ணா!!! என சிணுங்கியவள், பக்கத்திலிருக்கும் பூஞ்சாடியை பவித்ரனை அடிப்பதற்கு கையிலெடுத்தாள்.

அய்யோ , அடுச்சுடாத மா!! என அலறியவன், ஏற்கனவே காச்சலடிக்குது, நீ வேற அடுச்சு ஒரேடியா முடிச்சுடாத என மூச்சுவிடாமல் பேசினான்.

அப்படியா என பக்கத்தில் வந்து, பவித்ரன் நெற்றியை தொட்டுப்பார்த்துவிட்டு, ஏன் அண்ணா முதல்லயே சொல்லமாட்டீங்களா?? என்றாள் வருத்தமாக.

ஜீவிதா வீட்டு வேலையாள் மேலே வந்து, அவர்களை சாப்பிட அழைத்தான்.

வாங்கண்ணா, என பவித்ரனை அழைத்துக் கொண்டு , வந்தாள் ஜீவிதா.

அங்கே சாப்பாட்டு மேஜையில் இரண்டு கண்கள் பவித்ரனும், ஜீவிதாவும் சேர்ந்து வருவதை எரிச்சலுடன் பார்த்தது.

வாங்க!! எப்ப வந்தீங்க!! என ஆவளாக ஜீவிதா கேட்டது சாட்சாத் ஆனந்தை தான்.

பவித்ரன் கண்கள் ஆனந்தை அளந்தது. ஆனந்தன் கண்களில் பவித்ரன் மீதான கோபம் அப்பட்டமாய் தெரிந்தது. அதை மறைக்க சிரிப்பை முகத்தில் பூசிய வண்ணம் ஜீவிதாவைப் பார்த்தான்.

அண்ணா, இவர்தான், நான் சொன்னேனே என்றாள் ஜீவிதா.

என்ன சொன்ன, தோட்டம் கலை இழந்து போச்சு, நல்ல ஆளா வேலைக்கு வைக்கணும்னு சொன்னயே, என வேண்டுமென்றே வம்பிழுத்தான் பவித்ரன்.

ஜீவிதா , ஆனந்தன் முன்பு என்ன சொல்வது என புரியாமல் முழித்தாள்.

இல்லை. ஜீவிதாவையே கலையாக்கப்போகும் வருங்கால கணவன் என கைநீட்டினான் ஆனந்த்.

ஓ... அவள் தோட்டத்தைப்பற்றி கவலைப் பட்ட அளவிற்கு, வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தரவில்லை போல , அதனால் தான் உங்களைப் பற்றி அதிகம் எதுவும் கூறியதில்லை என்றவாறு, நான் பவித்ரன்!!, என கை குலுக்கினான்.

தெரியுமே, ஜீவிதா அடிக்கடி சொல்லி இருக்கிறாள் . நான் ஜீவிதாவின் கண்கள் வழியாகத்தான் மனிதர்களை பார்ப்பது. அதனால் அவளுக்கு அறிமுகமானாலே, அவர்கள் நிச்சயம் எனக்கும் தெரிந்துவிடுவார்கள். இது அதிகப்படி அறிமுகம் தான் என்றான் ஆனந்த், ஜீவிதாவை கண்களால் விழுங்கியவாறு...

ஆனந்தன் குலுக்கிய கையை விடாமல் ஒரு நசுக்கு நசுக்கினான் பவித்ரன். ஆனந்த் பட்டென திரும்பி பவித்ரனைப் பார்க்க, உங்களை நான் பார்த்திருக்கிறேனே!! என்றான் கண்ணை எட்டாத சிரிப்பில்...

எனக்கும் இவரை முதல்முறை பார்த்ததும் அதே போலத்தான் இருந்தது அண்ணா, என்றாள் ஜீவிதா.

ஆனந்த் பதட்டமே படாமல் நானும் உங்கள் கல்லூரிதான் என ஒப்புக் கொண்டான். அதன்பின் வேலைக்காக சென்னை வந்துவிட்டேன் என முடித்தான்.

பவித்ரன் கண்கள் விரிந்தது. தெரியாது, என்று சொன்னால் மாட்டிக்கொள்வோம். நண்பன் என்று சொன்னால் அந்த நட்பைப் பற்றியும் கூற வேண்டும், என ஒரே கல்லூரி என்றதோடு முடித்துக் கொண்டான்.

ஜீவிதா ஆனந்தனுக்கும், பவித்ரனுக்கும் உணவு பரிமாரினாள்.

பவித்ரன் பார்வை, ஜீவிதாவின் மீதே இருந்தது. ஆனந்தனைக் கண்டதும் அவளது நளினம், புன்னகை என புதிதாக தெரிந்தாள். ஆனால் ஆனந்தன் கண்கள் வழக்கம்போல், நரித்தனமே மிஞ்சி இருந்தது.

பெருமூச்சு ஒன்றை விட்டவன் கவனம் உணவில் இல்லை. இது ஆனந்தன் கண்களில் இருந்து தப்பவில்லை.

என்ன சார்! சாப்பிடலயா?? கவனம் எங்கிருக்கு?? என்றான் ஆனந்த்.

சாரா??? சரேலென பவித்ரன் பார்வை ஆனந்தை துளைத்தது.

அண்ணாக்கு காய்ச்சல் ங்க, நீங்க முடிஞ்ச வரை சாப்பிடுங்க அண்ணா, அடுத்து நாம ஆஸ்பத்திரிக்கு போலாம் என்றாள் ஜீவிதா.

ஜீவி.. நாம கல்யாணத்துக்கு புடவை எடுக்க போகணுமே, என்றான் ஆனந்த்.

அண்ணாக்கு உடம்பு சரியில்ல, முதல் டாக்டரப் பாத்துட்டு வந்துடுறேன். அடுத்து கடைக்கு போகலாமா!! என கேட்டாள் ஜீவிதா.

ஆனந்தன் முகத்தில் அப்பட்டமான கடுப்பு தெரிந்தது. பவித்ரனுடன் நண்பனாக இருந்த சமயத்தில், சின்ன தலைவலிக்குக் கூட டாக்டர்ட போலாம்டா.. என கூப்பிட்டவன், இப்போது நன்றாக மாறி இருந்தான்.

இல்லை, இல்லை அது நடிப்பு. இது தான் உண்மையான முகம்.

நீங்க போங்க ஜீவிதா நான் என்னை பாத்துக்கிறேன் என்றான் பவித்ரன்.

தேங்க்யூ சார். பாரு அவரே சொல்லீட்டார். வந்ததும் முதல் வேலை அவரை ஹாஸ்பிட்டல் கூட்டீட்டு போறதுதான். ஓகே, என ஜீவிதாவிடம் கண்ணடித்தான் ஆனந்த்.

பவித்ரன் மாடியேறப் போகும் போது, வேண்டுமென்றே தடுமாறி நின்றான்.

ஜீவிதா, அண்ணா பாத்து ணா, என்றவள், வாங்க என ஆனந்தையும் அழைத்துக்கொண்டு பவித்ரனை கூட்டிவந்து சோபாவில் அமர்த்தினாள்.

நீங்க கிளம்புங்கம்மா, லேட் ஆகுது மாப்பிள்ள காத்துட்டு இருக்கார். நீயும் சாப்பிட்டு கிளம்பு என்றான் தாரளமாக..

ஜீவிதா, ஆனந்தைப் பார்த்து முதல்ல ஹாஸ்பிட்டல் போலாம் பா பிளீஸ் என்றவள், ஆனந்தையே டிரைவராக்கினாள்.

வேண்டுமென்றே கூட்டமான பிரபள மருத்துவமனைக்கு போகலாம் என்றவன், மாலை மூன்று மணிவரை ஜீவிதாவை எங்கேயும் அனுப்பவில்லை.

கடுப்பான ஆனந்தின் பக்கம் வந்த பவித்ரன், நடக்காத கல்யாணத்துக்கு எதுக்குடா புடவை என்றான் ஜீவிதா கேட்காதவாறு.

ஆனந்தன் முகத்தில் சட்டென சிரிப்பு தவழ்ந்தது. நான் மத்தவங்கள மாதிரி ஏமாளி இல்ல, என் கல்யாணத்த எப்படி நடத்தனும்னு தெரியும், அதவிட அத எப்படி காசா மாத்துறதுன்னு நல்லாவே தெரியும் என்றான்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு டா.

ரஞ்சனியோட டிரஸ்டுக்கு போனதுக்கே, காய்ச்சல் வந்திருக்கு, யாரு??? நீ வல்லவனா? , ஆமா உள்ள அப்படி என்ன ஆச்சு?? என்றான் ஆனந்த் நக்கலாக..

பவித்ரன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.

எப்படி தெரியும்னு பாக்குறயா, எதிரினு ஒருத்தன் வந்தா அவன அழிக்காம அவன்மேல இருந்து என் பார்வை விலகாது என்றவன், ஜீவிதாவை அணைத்தவாறு மருந்துவாங்கிக்கொண்டு வந்தான்.

ஜீவிதாவின் அப்பா வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவர் பலத்த யோசனையில் இருக்கும் போது, அப்பா!! எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க என்றவாறே ஓடி வந்து அவரை அணைத்தாள் ஜீவிதா.

தனது யோசனையை சற்று தள்ளி வைத்தவர், ஜீவிதாவிடம், இப்பத்தான் பாப்பா. நீ சொல்லு எப்போ வந்த?? என்றார்.

நேற்று என்றாள். அதற்க்குள், பவித்ரனும் ஆனந்தும் அருகில் வந்துவிட, இது பவி அண்ணாப்பா, எஸ்.என் மில்ஸ் ஓனர் , பெரிய ஆளு என பவித்ரனை சிரித்தவாறு அறிமுகப்படுத்தினாள்.

இது என்னோட அப்பா துரை, துரை எக்ஸ்போட்ஸ் ஓனர், மத்திய மந்திரி, கட்சில பலத்த செல்வாக்கு, சும்மா சொல்லக்கூடாது, அப்பா நீங்களும் பெரும் புள்ளிதான் என்னப்பா?? என அவரையும் கிண்டலடித்தாள்.

பவித்ரன் சிரித்தவாறு கைநீட்டினான். அவனது கையை பற்றி குலுக்கியவர், அப்போ தம்பி, நீங்க சாமிநாதன் மகனா?? என்றார்.

ஆமாம் அங்கிள் என்றான் பவித்ரன். நானும் உங்கப்பாவும் சின்ன வயசு நண்பர்கள். இப்ப உங்கப்பா இருந்திருந்தா, நல்லாயிருந்திருக்கும் என பெருமூச்சுவிட்டவர், ஆனந்தைப் பார்த்ததும் முகம் மாறினார்.

மீட்டிங்கெல்லாம் எப்படிபோச்சுமாமா?? என விசாரித்தான் ஆனந்த்.

ம்... நல்லபடியா முடிந்தது. அதுல என்னோட கூடவே இருந்து குழிபறிக்கிற, ஒரு எம காதகன கண்டுபிடிக்க முடிந்தது, அவன என்ன செய்யலாம் ஆனந்த், நீயே சொல்லு!! என்றார்.

என்னப்பா சொல்றீங்க, யாரது??என்றாள் ஜீவிதா. ஆனந்தை ஒரு பார்வை பார்த்தவர், பயங்கர திருடன், காசுக்காக பல பிராடுத்தனம் பண்ணீருக்கான், நீ சொல்லும்மா என்ன தண்டனை கொடுக்கலாம் என்றார்.

எம்முன்னாடி அவன இழுத்துட்டு வாங்கப்பா, நாலு அரை விடுறேன். அப்பறமா அவன போலீஸ்ல பிடிச்சு குடுத்து இருக்குற எல்லா கேசும் ,அவன் மேல போட சொல்லுங்க என்றாள்.

உன் முன்னாடிதான் முதல்ல அவன இழுத்துட்டு வருவேன், நீ பெரிய அர்ணால்டு பாரு என கேலியில் முடித்தவர், சரி நான் கிளம்புறேன் பாப்பா, நைட் வந்து பாக்குறேன், என காரில் கிளம்பிச் சென்றார்.

தீ கக்கும் பார்வையினால் துரை போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த்.

நீங்க மாடிக்கு போங்க பவி அண்ணா, நான் கஞ்சி குடுத்து விடுறேன் என்ற ஜீவிதா உள்ளே சென்றுவிட்டாள்.

ஏ..பிராடு என பவித்ரன் அழைக்க, சராலென ஆனந்த் திரும்பிப் பார்த்தான். ஓ... அப்ப துரை அங்கிள் சொன்ன பிராடு நீதான, பரவால்ல!..., கல்யாணம் தன்னால நின்னுடும் போலவே! என்றான் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பவித்ரன்.

ஆனந்த், பவித்ரனை ஏற இறங்கப் பார்த்து, சிரித்துவிட்டு புறப்பட்டுச் சென்றான்.

பவித்ரன் குழப்பமானான்.

அதற்கு விடையாக அடுத்த பதினைந்தாவது நிமிடம் துரை பேன கார் பெரிய விபத்துக்குள்ளானது என தகவல் வந்தது.

பவித்ரனும் ஜீவிதாவும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
 
Top