All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தனது எல்லா திட்டமும் வரிசையாகத் தோற்பதை, நினைத்து கடுப்பானான் ஆனந்த்.

ஜீவிதா, எப்போதும் தன்னைப் பார்த்ததும் உருகுவாள், என்ன ஆயிற்று?? தொட்டதும் விழுந்துவிடுவாள் என நினைத்துதான் அவன் எந்த ஒரு இரண்டாம் திட்டமும் இல்லாமல் சென்றான்.

ஆனால் ஜீவிதாவிடம் தனது திட்டம் சொதப்பும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

இவளையெல்லாம் முன்னமே முடித்துவிட்டு, என் பின்னால் நாய்போல் சுற்றவிட்டிருக்க வேண்டும். துரையின் அலுவலகத்தை கைபற்றுவதில் கவனமாக இருந்து, சை!! இவளை விட்டவிடுடோமே!!

அலுவலகம் முழுதாக என் கைக்குள் வந்துவிட்டது. துரையையும் முடித்துவிட்டால், இனி ஜீவிதா, தான் சொன்ன படிதான் ஆடியாக வேண்டும், என நினைத்தான் ஆனந்த்.

ஆனால் ஜீவிதாவோ , என அவள் அறைந்த கன்னத்தை தொட்டுப்பார்த்தான், தோல்வியுடம் அவமானமும் சேர அவனது அடுத்த திட்டம் தயாரானது.

இரண்டு நாட்கள் ஆனந்த் ஜீவிதாவின் வீட்டிற்கும் வரவில்லை. மருத்துவ மனைக்கும் வரவில்லை.

பவித்ரனும், ஜீவிதாவும் மாறி மாறி அவசர சிகிச்சை அறையை காவல் காத்தனரே ஓழிய, துரையின் சிகிச்சை பற்றிய விவரங்கள் எதுவும் , மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. பார்க்கவும் அனுமதிக்கவில்லை.

தொலைக்காட்சியில் பரபரப்பான அமைச்சரின் விபத்து செய்தி , சிறுது சிறிதாக தேய்ந்து, இப்போது காணாமல் போய்விட்டது.

ஜீவிதாவின் சிரிப்பு முதலில் மறைந்தது. இப்போது அழுகையும் கூட மறைந்துவிட்டது. சோகமாக யாரிடமும் பேசாமல், இறுக்கமாக அமர்ந்திருந்தாள். பவித்ரனுக்கு அவளை பார்க்க மிகவும் பாவமாக இருந்தது.

ஜீவிதா, தந்தையின் உடல் நலம், காதலனின் புறக்கணிப்பு என மனம் நொந்திருந்தாள்.

அப்போது ஆனந்த் ஒரு கோப்புடன், ஜீவிதாவை மருத்துவமனையில் காண வந்தான். ஜீவிதாவின் மனப்புண்ணிற்கு ஆனந்தை கண்டதும் சிறிய ஆறுதல் உண்டானது.

இதில் உங்கள் கையெழுத்து இருந்தால்தான், அடுத்த பிராஜெக்டை தொடங்க முடியும் என்றான் ஜீவிதாவிடம் ஆனந்த்.

நானா?? எனக்கு எதுவும் தெரியாதே என்றாள் ஜீவிதா.

உங்களைத்தான் அவர் வாரிசாக பதிவு செய்துள்ளார். எனவே அவர் கையெழுத்திடாத பட்சத்தில் நீங்கள் தான் போட முடியும் என கோப்பை நீட்டினான்.

எதற்காக என்னை மரியாதையாக கூப்பிடுகிறார் என மனதுக்குள் பொருமினாள்.

அவனிடமிர்ந்து கோப்பை வாங்கியவள், அவன் கொடுத்த பேனாவில் மடமடவென, அவன் காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டுவிட்டு நிமிர்ந்தாள்.

நன்றி மேடம் என்ற ஆனந்தோ, கோப்பை வாங்கிக்கொண்டு திரும்பி நடந்தான். ஜீவிதா மனம் நொந்தாள், மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என்று கூட கேட்கவில்லை என நினைத்தவள், ஆனந்தின் புறக்கணிப்பை நினைத்து கண்ணீர்விட்டாள்.

பவித்ரனுக்கு ஜீவிதாவை அறையலாம் போல இருந்தது. தவறானவனை காதலித்துவிட்டு துடிக்கும் அவளை நினைத்து பாவமாகவும் இருந்தது.

நடந்த டிராமாவில், கோப்பை படித்துப் பார்காமலே கையெழுத்திட்டுவிட்டாளே!! என ஆனந்தை பிடிக்க எழுந்தான் பவித்ரன்.

ஆனால் ஆனந்தே திரும்ப உள்ளே வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். மேடம் போனா என்றான் அருகில் வந்து, அதை வாங்கிக்கொண்டு திரும்பியவனிடம் சாரி ஆனந்த் தெரியாம செஞ்சுட்டேன் . எனக்கு நீங்க இல்லாம, யாருமே இல்லாத மாதிரி தோணுது, பிளீஸ் என் பக்கத்தில் இருங்கள் என்றாள் பீறிட்ட அழுகையில்.

ஆனந்தோ திரும்பிப் பார்த்து, எட்ட நின்றே அவளது கண்ணீரைத் துடைத்தான். லேசாக கண்கலங்கினான்.

அப்பா... என்னா நடிப்புடா சாமி!!.. என பவித்ரன் நொந்தான். சை! இப்படி மயங்கிக் கிடப்பவளை எப்படி எழுப்புவது என பெருமுச்சுவிட்டான். இப்போது கோப்பைப் பற்றி கேட்டால், அவர்கள் காதலுக்கு ஆனந்த், என்னை வில்லனாக்கிவிடுவான் என நினைத்த பவித்ரன் விலகி நின்றான்.

அழாத ஜீவி, உனக்கு நான் அன்னைக்கு துணையா இருக்கத்தான் வந்தேன். ஆனால் நீ என்னையே சந்தேகப்பட்ட, அதனாலதான் விலகி இருக்கேன் . அதுக்கும் அழற , அழாத ஜீவி என தேன் தடவிய மொழிகளில் அவள் நடந்து கொண்டதுதான் தவறு. தனக்கு எந்த தப்பான எண்ணமுமே இல்லை என அவளை நம்ப வைத்தான்.

அதுக்காக, இப்படி தனியா விட்டுட்டுப் போயிருவீங்களா?? சாரி!! சாரி!! சாரி என்னை திருப்பி அடிங்க, ஆனா விட்டுட்டுப் போயிடாதீங்க! என அவனது சட்டை காலரைப் பிடித்து இழுத்தவள், அவனது நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள்.

பவித்ரன் ஜீவிதாவின் செய்கையைப் பார்த்து திகைத்து நின்றான்.

ஜீவிதாவை ஒரு கையால் அணைத்து அவளது தோள்களில் தன் கையை படறவிட்டவன், பின்னால் நின்றிருந்த பவித்ரனைப் பார்த்து சத்தமில்லாமல் சிரித்தான்.

டாக்டர் எதுவுமே சொல்லல, எனக்கு பயமா இருக்கு என ஜீவிதா தேம்பினாள்.

எனக்குத்தான் தெரியுமே என்றான் ஆனந்த்.

ஜீவிதா ஆனந்தை நிமிர்ந்து அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

ஆனந்த் நிதானமாக பேசினான். அவங்க எதுவும் நமக்கு சொல்லமாட்டாங்க, போலீஸ்டதான் தகவல் கொடுப்பாங்க, அதனால தான் புகாரை திரும்பப் பெற அன்னிக்கே சொன்னேன், நீ கேட்டாத் தான?? என தனது அடுத்த கத்தியை வீசினான்.

கத்தி சரியாக பவித்ரனை தாக்கியது. ஜீவிதா பவித்ரனிடம், அண்ணா, எனக்கு இப்பவே அப்பா எப்படி இருகார்னு தெரியணும், அவரை பாக்கணும், நீங்க டாக்டர்ட பேசுங்க, இல்லனா புகாரை இப்பவே திரும்ப வாங்குங்க என்றாள்.

சீஃப் மாலை வந்ததும் பேசுகிறேன் என ஒத்திப்போட்டான் பவித்ரன்.


என்னால் இப்பவே உங்கப்பா பற்றிய தகவல் சொல்ல முடியும். சொல்லவா?? என்றான் ஆனந்த்.

பிளீஸ் ஆனந்த் தெரிஞ்சா சொல்லுங்க என்றாள்.

பவித்ரனைப் பார்த்து கண்களால் சிரித்தவன், தனது செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஓட்டினான்.

பவித்ரனும் ஜீவிதாவின் அருகில் வந்து அதைப் பார்த்தான். அது திரையில் வரும் முன் பவித்ரன் மனது படபடத்தது.

ஒரு வார்ட் பாயிடம் காசு கொடுத்து, துரையின் உடல் நலத்தை விசாரித்திருக்கிறான் ஆனந்த்.

அந்த வார்ட் பாய். முதல் இரண்டு நாட்கள் அமைச்சருக்கு நினைவே திரும்பவில்லை என்றும். இன்று காலை தான் நினைவு திரும்பியதாகவும், இருந்தாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுத்திருப்பதாக கூறினான். வீடியோ முடிந்தது.

அப்பாடா!! என இருந்தது பவித்ரனுக்கு, அவன் பயந்தது போல் ஆனந்திற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

போதுமா, உங்கப்பா கண்முழிச்சிட்டாரு, ஆபத்து ஒன்னுமில்லை. சந்தோசமா?? என்றான் ஆனந்த்.

ரொம்ப நன்றி ஆனந்த் என அவனது கைகளை எடுத்து நெற்றியில் அழுத்திக்கொண்டு கண்ணீர் விட்டாள் ஜீவிதா.

ஆனந்த் திரும்பவும் மெல்லியதாக பவித்ரனைப் பார்த்து சிரித்தான். பவித்ரனும் இப்போது திரும்பச் சிரித்தான், ஆனந்தைப்போல் ..அமைதியாக...ஆனால் விசமமாக..

அதைக் கண்ட ஆனந்தின் கண்கள் யோசனையானது.

வாங்க மாப்பிள்ள, டீ குடிச்சுட்டு போவோம், அதுதான் மாமா ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாரே என மருத்துவ மனை உணவகத்திற்கு அழைத்தான்.

ஆனந்த் காபி அருந்திக் கொண்டிருந்த போது, டேபிளில் இருந்த கோப்பை பவித்ரன் எடுத்துப் பார்த்தான்.

என்ன சந்தேகமா?? இதுலயும் என்ன நம்பவில்லையா??? வாங்க பவித்ரன் நாளையிலிருந்து நீங்களே அலுவலகத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றான் ஆனந்த்.

ஜீவிதா, ஆனந்தின் பேச்சைக் கண்டு, பயந்தவள், அவனது கரத்தை இறுகப்படித்துக் கொண்டாள்.

பவித்ரன் மிகவும் தெளிவாக இருந்தான். அவனது உதட்டில் இருந்த கூறான சிரிப்புடன், யார்?? உங்களை சந்தேகப்பட்டது என்றான்.

அண்ணா, நீங்க பைலை வச்சிடுங்க, அவருக்கு பிடிக்கவில்லை என்றாள் ஜீவிதா.

திவ்யமாக காபியை அருந்தியவண்ணம், ம்ம்.. என்றவன், சுவாரஸ்யமான புத்தகத்தை படிப்பது போல், ஒவ்வொரு பக்கமாக படித்தான்.

ஆனந்த் ஜீவிதாவை முறைத்தான். பவி அண்ணா, அவர்... என இழுத்தாள் ஜீவிதா.

புத்திசாலிம்மா, மாப்ள பெரிய பிராஜெக்ட்டாத்தான் செய்யப் போறார். அதை நீதான் பாக்காம கையெழுத்து போட்டுட்ட என்றதில் ஒரு அழுத்தம் கொடுத்தவன், நானாவது பார்த்து பாராட்ட வேண்டாமா?? அதுதான் படிச்சேன், தப்பா மாப்பிள்ள?? என்றான் நிதானமாக பவித்ரன்.

அல் த பெஸ்ட் மாப்பிள்ள என ஆனந்த்திற்கு கைகொடுத்தான் பவித்ரன். ஆனந்தும் வேண்டா வெறுப்பாக கைநீட்டியவன், இது இனிமே ஜீவிதா ஆபிஸ் இல்ல, என்னோடது என்றான் அழுத்தமாக, அதை முன்னேற்றுவது என் கடமை என்றான் ஜீவிதாவிடம், அவள் ஆனந்தை பெருமையாகப் பார்த்தாள்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி ஒன்றாம் பகுதி...

ஆனந்த், ஜீவிதாவை புடவை கட்டிக்கொண்டு வா என்றான்.

அவள் மறுபேச்சின்றி, அழகிய புடவையை கட்டிக்கொண்டு வந்தாள். எனக்கு கோவிலுக்கு போகணும் போல தோணுது, போலாமா?? என கேட்டான்.

காதலன் கோவிலுக்கு என்றதும், மனதில் எழுந்த மகிழ்ச்சி, முகத்தில் தெரிய ஆனந்தின் கரம் பற்றிய வண்ணம் கோவிலுக்குள் நுழைந்தாள்.

துரை பெயருக்கு அர்ச்சனை செய்தான் ஆனந்த். தனது அடுத்த பிராஜெக்ட் நல்லபடியாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்ள சொன்னான்.

ஜீவிதாவும் மகிழ்ச்சியுடன் வேண்டிக்கொண்டாள். இருவரும் கோவில் பிரகாரத்தில் அமர்ந்தனர்.

ஜீவிதாவின் கையை தன் கைக்குள் பொத்தி வைத்துக்கொண்ட ஆனந்த் பேச ஆரம்பித்தான்.

இன்று என்னநாள் என்று தெரியுமா?? என்றான். ஜீவிதா சற்று யோசித்துவிட்டு ஞாபகம் வரவில்லை என தலையசைத்தாள்.

மிகுந்த வலியுடன், இன்று நமக்கு கல்யாண நாள். நானே அனைவருக்கும் போன் செய்து திருமணம் நின்றுவிட்டதாக கூறினேன் என்றான், அவள் கண்ணைப்பார்த்து...

சாரி ஆனந்த், என ஜீவிதா கண்கலங்கினாள்.

உடனே ஆனந்த், சே!, சே!! நீ எதுக்கு அழற, என அவளது கண்ணீரை துடைத்துவிட்டவன், மாமா நல்லபடியா இருந்திருந்தா, இன்றைக்கு ஒரு கொண்டாட்டமாக இருந்திருக்கும்.

எல்லாமே எனக்குப் புரிந்தாலும், ஏனோ மனது மிகவும் கஷ்டமாக உள்ளது என அவள் தோளில் சாய்ந்தான்.

ஆனந்த், இது கோவில்... என அவள் சற்று நெளிந்து அவன்புறமிருந்து நகர்ந்தாள்.

ஓ.. சாரி என நிதானத்திற்கு வந்தவன், நாம எங்கயாவது போகலாமா??? எனக் கேட்டான்.

நான் அண்ணாட்ட எதுவும் சொல்லாம வந்துட்டேன். என்ன தேடுவாங்க, ஒருவார்த்தை சொல்லீட்டு போகலாம் என தனது பேசியை கையிலெடுத்தாள்.

ம்.. சூஊ என ஆனந்த் ஜீவிதாவின் பேசியை வாங்கியவன், அதை அணைத்தான்.

ஏங்க?? யாராச்சும் முக்கியமா எதாவது பேசப்போறாங்க என்றாள். அண்ணணே என்னத்தேடி பேசினாலும் பேசுவார் என்றாள்.

ஜீவிதா நான் உன்னுடன் எந்தவிதமான தொல்லைகளும் இல்லாமல், இன்னைக்கு முழுசும் இருக்கணும்னு நினைக்கிறேன். பிளீஸ் என்னையும் புரிந்துகொள், என்னப் பாத்தா உனக்கு பாவமா இல்லியா??? என்றான் ஆனந்த்.

அவனது கேள்வி அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, சரி என்றாள்.

ஜீவிதாவின் அழகிய சிரிப்பைப் பார்த்து ஒருவன் கொலைவெறியில் இருந்தான்.

அடுத்ததாக ஒரு உயர்தர உணவகத்தில் உணவருந்தினர். அடுத்ததாக ஆனந்த் கேட்ட கேள்வி ஜீவிதாவிற்கு, பயம்கலந்த சந்தோசத்தைக் கொடுத்தது.

பவித்ரன், ஜீவிதாவைக் காணாமல் அவளை அழைத்தான். ஆனால் பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வீட்டிற்கு அழைத்தான். ஜீவிதா காலையிலே கிளம்பிவிட்டதாக தகவல் வந்தது.

இன்னும் வரவில்லையே என நினைத்தவன் மனது படபடத்தது. ஆனந்திற்கு அழைத்தான். அவனோ பேசியை மியூட்டில் போட்டிருந்தான். அது அடித்து ஓய்ந்தது.

பவித்ரனுக்கு பதட்டம் அதிகரித்தது. அவனுக்கு தெரிந்துவிட்டது, ஜீவிதா ஆனந்துடன்தான் இருக்கிறாள் என, ஆனால் எங்கிருக்கிறாள் என்று தான் தெரியவில்லை.

மனது பயம் கொள்ளும் போது, உண்மைகளை விட கற்பனை மிகுந்தியாக பயம்புறுத்தும். அதேபோல ஜீவிதாவிற்கு என்னானதோ என்ற நினைத்தவன் மனத்திரையில் வரும் காட்சிகள், மிகுந்த படபடப்பை அளித்தது.

செல்வபாண்டியனுக்கு அழைத்தவன், நிலவரத்தைச் சொன்னான். அவரோ, கவலை வேண்டாம் என்றவர், ஜீவிதாவை தேடச் சொல்கிறேன் என்றார்.

அவனால் மருத்துவ மனையில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. காரை எடுத்தான். பவித்ரன் வெளியேறிய சமயம் சரியாக இருவர் உள்ளே நுழைந்தனர்.

அப்போது பவித்ரன் பேசிக்கு ஒரு புகைப்படம் வந்தது.

அதை எடுத்துப் பார்த்தவன் திகைத்தான். ஜீவிதாவும், ஆனந்தும் கைகோர்த்த வண்ணம், ஆனந்தின் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர்.பவித்ரனுக்கு ஆனந்தின் போலிச்சிரிப்பைவிட, ஜீவிதாவின் கபடமற்ற சிரிப்புதான் இப்போது அதிக பதட்டத்தைக் கொடுத்தது.

பவித்ரன் கார் ஆனந்தின் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.

பவித்ரனின் காரை ஒரு லாரி தொடர்வது போல் இருந்தது. சற்றே யோசித்தவன், காரை விலையுயர்ந்த உணவகத்தில் நிறுத்திவிட்டு, உள்ளே சென்றான். அத்துடன் லாரியும் சற்று முன்னமே ஆள நடமாட்டம்l குறைந்த தெருவில் நின்றுவிட்டது.

பவித்ரனின் கை, உணவகத்தின் மெத்தை இருக்கையை குத்தியது. என்னை அழிக்கவே துணிந்துவிட்டாயா?? இனி ஜீவிதாவிற்காக அமைதியாக இருக்க முடியாது. ஒரே அடியில் முடித்துவிட வேண்டும் என நினைத்தவன் மனதில் ஒரு சந்தேகம் முளைத்தது.

புதிய எண்ணிலிருந்து வந்த புகைப்படம் உண்மைதானா?? இல்லை என்னை குழப்ப எடுத்துக் கொண்ட முயற்சியா?? என சிந்தித்தான்.

உணவகத்தின் வேறு வழியில் வெளியேறியவன், வாடகைக் காரில் ஆனந்தின் வீட்டை நோக்கிச் சென்றான்.

இங்கே தன்னை வரவழைப்பது கூட ஆனந்தின் திட்டமாக இருக்கலாம், ஒருவேலை அது உண்மையான புகைப்படமாகவும் இருக்கலாம் என கணக்கிட்டவன்.

காரை தெரு முனையிலேயே நிறுத்திவிட்டு, முகத்தை மறைத்தவாறு பெரிய கண்ணாடியும், தொப்பியுமாக சற்றே தனது அடையாளத்தை மறைத்தவாறு, வீட்டு சன்னல் வழியாக எட்டிப்பார்த்தான்.

பார்த்தவன் திகைத்து நின்றான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவிதாவை , ஆனந்த் தனது வீட்டிற்கு அழைத்ததும், திகைத்து விழித்தாள். ஆனால் ஆனந்தோ அவளை கண்டுகொள்ளாமல் தொடந்தான். நமக்கு இந்நேரம் திருமணம் முடிந்திருக்கும்.

திருமணத்திற்கு வந்தவர்கள் இப்போது நம்மோடு சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். சற்று நேரத்தில் நம் வீட்டிற்குள் நுழைவோம், கூட்டமாக, ஆரத்தி எடுத்து, வலதுகால் எடுத்துவைத்து உன்னை என்வீட்டிற்கு அழைத்துச் சென்றிருப்பேன், ஆனால் இப்போதோ நான் மட்டும் தான், உன்னை வீட்டிற்கு அழைக்கும் உரிமையாவது எனக்குண்டா?? என்றான் அவளது கண்களில் தன்கண்களை கலந்தவாறு,

அவன் சொன்னதையெல்லாம் கற்பனை செய்து பார்த்தவள், கடைசியில் ஆனந்தின் கண்களைக்கண்டதும், ஆனந்தக் கண்ணீருடன் தலையசைத்தாள்.

இருவரும் ஒன்றாக கைகோர்த்தவாறு, ஆனந்தின் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.

ஜீவிதா முதல்முறை ஆனந்தின் வீட்டிற்குள் வருகிறாள். முன்னறையில் வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியை ரசனையுடன் பார்த்தாள்.

ஆனந்த் வா என ஜீவிதாவை அழைத்துச் சென்று அங்குள்ள மீன்களைக் காட்டினான். அதிலிருந்த ஆரஞ்சு நிற மீன்கள் மிகவும் சுறுசுறுப்பாக ஓடியது.

உங்க வீடு ரொம்ப நல்லா இருக்கு ஆனந்த். இந்த மீன்கிட்ட நின்னா நேரம் போறதே தெரியாதில்லையா?? என ஆனந்தின் தோளில் சாய்ந்தாள்.

ஆனந்த், ஆம்! என ஜீவிதாவைப் பார்த்து தலையசைத்து, விசமமாக சிரித்தான்.

வெளியே கண்ணன் கதவை உடைக்கும் வெறியில் ஒரு கட்டையுடன் நின்று கொண்டிருந்தான். பின்பு ஏனோ சத்தம் எழுப்ப விரும்பாமல், பைப்பைப் பிடித்து மாடிக்கு ஏறினான்.

ரெடிமேட் ஜீஸ்தான், எங்க மேடம் வந்தாத்தான் பிரஸ் ஜூஸெல்லாம் கிடைக்கும், என ஜீவிதாவிற்கு ஒரு குவளையை தந்தவன், தான் ஒரு குவளையுடன், அவளருகில் அமர்ந்தான்.

ஜீவிதா , இந்த நாளை மிகவும் அழகாக மாற்றிவிட்டீர்கள் ஆனந்த் என்றாள்.

ஆனந்த், இன்னும் இந்தநாள் முடியவில்லையே!! என்றான்.

ஆனால், எனக்கு.... என்றவள், காலிக்குவளையை வைத்துவிட்டு , அவன் தோளில் சரிந்தாள்.

ம்... உனக்கு என ஜீவிதாவை ஊக்கினான் ஆனந்த்.

ஆனால் அவளிடமிருந்து எந்த வித பேச்சுமில்லை, பாதி மயக்கத்தில் மெதுவாக சிரித்தாள்.

ஆனந்த் ஜீவிதாவை தூக்கிக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான். அவளை படுக்கையில் கிடத்தியவன், தனது சட்டையில் ஒவ்வொரு பட்டனாக கழற்ற ஆரம்பித்தான்.

ஜீவிதா ஒருவித போதையில் இருந்தாள். ஆனந்த் அவளது கண்ணத்தில் பட்டென அடித்தான் , ஆனால் ஜீவிதா சிரித்தாள்.

அவளது அடுத்த கண்ணத்திலும் ஆனந்தின் கைரேகை படிந்தது. அதற்கும் சிரித்தாள்.

என்னையாடி அடிக்கிற, நீ எழுந்திரிக்கவே முடியாத படி செய்றேன் என பெல்ட்டை கழற்றினான்.

கண்ணன் ஆனந்தின் பின்னால் சத்தமில்லாமல் வந்தான். அவனது பெல்டை பின்னிருந்து பிடுங்கியவன், ஆனந்தின் இரு கைகளையும் பின்னால் இழுத்து, பெல்ட்டால் இருக்கக் கட்டினான்.

யார்?? யார் நீ என ஆனந்த் தலையைத் பின்னால் திருப்பினான். அவனை திரும்ப விடாமல், ஆனந்தின் தோளில் சரமாரியாக அடி விழுந்தது.

பவித்ரனா?? தீரா?? உன்னக்கொல்லாம விட மாட்டேன் டா, உன்னையும் அந்த ரஞ்சனியையும் முடிச்சுட்டுத்தான்டா மறுவேலை, என வலியில் , அடிப்பது பவித்ரன் தான் என நினைத்து கத்திக்கொண்டிருந்தான் ஆனந்த்.

அப்போது தான் பவித்ரன், திறந்திருந்த சன்னல் வழியாக, உள்ளே பார்த்தான்.

கண்ணன் கட்டிலிலிருந்த போர்வையை எடுத்தான். ஆனந்த் தன் எதிரே இருந்த சன்னல் வழியாக பவித்ரனைப் பார்த்தான். பவித்ரனும் அப்போது உள்ளே நடக்கும் கலோபரத்தைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

பவித்ரன் காப்.....என்ற ஆனந்தின் முகத்தை போர்வையால் மூடி, அவனை வேறொரு அறைக்கு இழுத்துச் சென்றான் கண்ணன்.

பவித்ரன் கண்ணனைப் பார்த்ததும், அவனது தலைமுடி, கட்டுடல், இதிலிருந்து போலீஸ் என கண்டு கொண்டான்.

கட்டிலில் ஜீவிதா அரைமயக்கத்தில் எழுத்து அமர்ந்தாள். பவித்ரன் அப்போது தான் ஜீவிதாவைப் பார்க்கிறான். இப்போதுதான் பவித்ரனுக்கு காட்சி விளங்க ஆரம்பித்தது. நெஞ்சு படபடத்தது.

கண்ணன் வேகமாக திரும்பவும் அறைக்குள் வந்தான். பவித்ரன் சற்றே மறைந்து கொண்டான்.

ஜீவிதா, உனக்கு ஒன்னும் ஆகலியே, என கண்ணன் படபடத்தான். ஜீவிதா , கண்ணனைப் பார்த்து போதையில் சிரித்தாள்.

என்னாச்சு ஜீவிதா என கண்ணன் அருகில் வர, ஜீவிதா தனது முத்தானையை சரியவிட்டாள்.

ஏய்!! என்ன பண்ற , என கண்ணன் பதற, அடுத்த அடையை கழற்ற ஆயத்தமானல் ஜீவிதா. வேகமாக ஜீவிதாவின் மேலாடையை போர்த்திவிட்டவன், திரைச்சீலையை கிழித்து, கயிறாக்கி, புடவை விலகாதவாறு இறுக்கக் கட்டினான்.

ஜீவிதாவை இறுக்க அணைத்தவன் கண்ணில், இரண்டு நாட்களுக்கு முன்பாக, முத்தமிட்டதற்காக தன்னை அடித்த ஜீவிதா, வந்துபோனால்.

கண்ணன் கண்ணில் கண்ணீர் பெருகியது. உன்ன இப்படி மாத்துனவனுக்கு, என்கைலதான் சாவு என சபதமிட்டான் கண்ணன்.

அதை பார்த்துக்கொண்டிருந்த பவித்ரனுக்கு சிலபல விசயங்கள் புரிய ஆரம்பித்தது.

ஜீவிதா அரைமயக்கத்திலிருந்து, முழுமயக்கமானால், கண்ணன் தோளில் சரிந்தாள்.

ஜீவிதாவை படுக்கையில் கிடத்தி அவளுக்கு போர்த்திவிட்டவன், அடுத்து ரஞ்சனிக்கு அழைத்தான்.

பவித்ரனின் கண்கள் கூறானது. இவன் யாருக்கு அழைக்கிறான் என்ற பவித்ரன் கேள்விக்கு விடையாக, ரஞ்சனி மேடம் நான் கண்ணன் பேசறேன் என்றான் கண்ணன்.

பவித்ரனின் விழி விரிந்தது.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

sriseetha

Active member
Acho, pavam jeevitha... avala suthi enna nadakudhu ney avalukku theyriyala... :(
Rommba viru viru nu poitu irukku story... waiting for anand's ending...
 
Top