All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி மூன்றாம் பகுதி..

பவித்ரன் பொருட்காட்சிக்கு ஜீவிதாவை அழைத்து வந்திருந்தான். ஜீவிதாவோ, இது அது வென கடையையே வாங்கிக்கொண்டிருந்தாள்.

அவனும் சிரித்துக்கொண்டு ஐந்து, பத்து ரூபாய்களாக, அவள் வாங்கிய பொருட்களுக்கு பணத்தை கொடுத்துக்கொண்டே வந்து கொண்டிருந்தான்.

உன்னை பணம் படைத்த குடும்பப் பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் என்றான் பவித்ரன்.

அவனை திரும்பி ஆழமான பார்வை பார்த்தவள், உங்களுக்கு எப்படித் தெரியும் என்றாள்.

கூட்டம் அவர்களைச் சுற்றி அலைமோத, அவள் நின்ற இடத்திலிருந்து நகராமல் அவனை பார்த்துக்கொண்டு நின்றாள்.

கூட்டம் அதிகமாக உள்ளது, வா!! ஓரமாய் நிற்போம் என அவளது கையைப் பிடித்தான்.

அவன் வாங்கிக்கொடுத்த பொருட்களை அவன்புறம் நீட்டியவள், அப்போ என்னப்பத்தி எல்லாமே தெரிந்து வைத்துக்கொண்டுதான் என்னிடம் நட்பு பாராட்டினீர்களா??

உங்களுக்கு கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, உன்னைப் பார்த்தவுடன் ஒரு தங்கை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது என சொன்னது??? உண்மையா?? அல்லது அதுவும் பிளானா??

பவித்ரன் ஜீவிதாவின் இக்கட்டான கேள்வியில் உறைந்து நின்றான்.

நான் உன்னிடம் பாசமாக பழகுவது, வேசமாகவா தெரிகிறதா??? என ஜீவிதாவிடம் எதிர்கேள்வி கேட்டான்.

இல்லை, என்னுடன் வந்த ஆறு பெண்களில் நான் மட்டும் என்ன ஸ்பெசல், நான் பணக்காரவீட்டுப் பெண் என்பது, என் அப்பா அரசியலில் செல்வாக்கானவர் அப்படித்தானே???

உன் பணத்தையும், உன் அப்பா அரசியல் பலத்தையும் வைத்து நான் என்ன சாதிக்க நினைக்கிறேன் அதையும் நீயே சொல்லிவிடு என்றான் கடுப்பில்..

எத்தனையோ இருக்கலாம், உங்கள் தொழிலில் அரசாங்க ஆதரவிற்கு எத்தனையோ விசயங்கள் காத்திருக்கலாம். எங்கள் அப்பாவின் உடனான நட்பிற்கு என்னை பயன்படுத்தும் எண்ணம் இருக்கலாம். என்னுடன் இணக்கமாக பேசி அதை புகைப்படம் எடுத்து என்னையோ, என் அப்பாவையோ மிரட்டும் எண்ணம் இருக்கலாம் என வரிசையாக அவள் ஒப்பிப்பதை கேட்டுக்கொண்டிருந்தவன், கடைசி வார்த்தையை அவள் கூறும் போது அவளது கையை விட்டுவிட்டான்.

அவன் என்னவென பவித்ரனைப் பார்க்க, அவனது முகத்தில் கோபம் , அதை அடக்கும் வழியில் இருகி காணப்பட்டான்.

ஜீவிதாவிற்கு இன்னும் பேச வேண்டியது உள்ளது. ஆனந்தன் நேற்றிரவு சொல்லிய பாடத்தில் பாதியைத்தான் ஒப்பித்திருக்கிறாள். ஆனால் பவித்ரனின் கோபத்தைக் கண்டவள் நாவு அடுத்த வார்த்தைக்கு எழவில்லை.

இன்னும் ஏதேனும் உள்ளதா??? என்றான் அடக்கப்பட்ட கோபத்தில்,

இல்லை அது வந்து.. என திணறினாள் ஜீவிதா

அவளுக்காக அவன் வாங்கிக்கொடுத்த பொருளை அவனே திரும்ப வாங்கிக்கொண்டான்.

இதை நீ லஞ்சமாக நினைக்கலாம், அல்லது நான் உன்னை கொல்வதற்கு சைனேடு விசத்தைத் தடவி, அந்த கடைக்காரர்களிடம் கொடுத்து, இதை உனக்கு விற்கச் சொல்லியும் இருக்கலாம் , இல்லையா???

சந்தேகத்தில் எந்த உறவு கட்டப்பட்டாலும் விரைவாக முறியும். எனவே நாம் இனியும் சந்திக்க வேண்டாம் என நினைக்கிறேன், என்றவன், குட்பாய்!! என்றுவிட்டு அவன் வாங்கிக்கொடுத்த பொருளை அவனே எடுத்துக்கொண்டு மடமடவென கூட்டத்தில் நடந்து மறைந்தான்.

திணறி நின்றாள் ஜீவிதா. தவறாக பேசிவிட்டோம் என வருந்தினாள்.

சரியாக பவித்ரன் சென்றதும்,கூட்டத்தில் அவளை கடத்துவதற்கு நான்குபேர் சுற்றி வளைத்தனர்....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு நாட்களாக, ஜார்ஜ் கல்லூரிக்கு வரவில்லை. இன்று வந்தவனும், ரஞ்சனியை பார்ப்பதை தவிர்த்தான்.

ரஞ்சனி இதை கருத்தில் கொண்டாலும், முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. பாடத்தில் கவனம் போலவே இருந்துகொண்டாள்.

கணினியில் கல்லூரிப் பாடத்தை படித்துக்கொண்டிருந்தாள். வேலையை முடித்துவிட்டேன் என கண்ணணிடம் இருந்து தகவல் வந்தது. நன்றி என்றவளுக்கு அடுத்து இதை எப்படி கையாள்வது என விளங்கவில்லை. தனது கட்டுப்பாட்டை மீறி காரியங்கள் நடக்கப்போவதை ஊகித்தாள்.

இதை தடுப்பது அவளுக்கு ஒரு லாபம், தடுக்காமல் நடப்பதை வேடிக்கை பார்ப்பதும் ஒரு வகையில் லாபமே, ஆனால் அதைச் செய்ய மனது சம்மதிக்க மறுத்தது.

அவளாடும் சதுரங்கத்தில், எதிரியைப் பொருத்தவரையில் அவள் வெட்டப்பட்டு வெளியில் , தூக்கி எரியப்பட்ட ஒரு ராணி.

அவளுக்கு வேண்டியது வெற்றியல்ல, எதிரி படையில் அடியெடுத்து வைத்திருக்கும், தனது ராஜாவைக் காப்பது, தனது படையைக் காப்பது, மட்டுமே.

கடைக்கு அழைத்தாள். ராஜா போனை எடுத்தான். ரஞ்சனி பேசுகிறாள் என்றதும் , அவனது மூளைக்குள் வந்த முதல் கேள்வி, நாம் ஏதேனும் தவறு செய்துவிட்டோமா என்பது மட்டுமே???.

வழக்கத்திற்கு மாறாக ரஞ்சனி அனைவரது நலனும் விசாரித்தாள். கடையில் நிலவரத்தை கேட்டறிந்து கொண்டாள்.

அவனும், புதிய டீலர்கள், பணப்புழக்கம் அனைத்தையும் ஒப்பித்தான். அவனது மனதில் அறித்த கேள்வியை கடைசியில் கேட்டுவிட்டான்.

என்னாச்சு மேடம், ஏதும் பிரச்சனையா???

ம்.. என்றவள், ராமசாமி பாத்துக்குற குழந்தைங்க அறைக்கு இன்னும் இரண்டு ஆள் போடுங்க, பெண்களிடம் சீண்டுபவர்கள் யாராயிருந்தாலும் நம்ம குடௌன் வேண்டாம். போலீஸ்ல ஒப்படைங்க, அப்பறம் நம்ம இல்லம் தெரியும்ல, அங்கயும் இரண்டு மூனு பேர காவலுக்கு அனுப்பங்க.

எங்கிட்ட அனுமதி கேக்காம, வெளியாள் யாருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டாம். பக்கத்துல சைக்கிள்ல அடி பட்டது, அது இதுனு ரத்தக் காயத்தோட வந்தாலும் பக்கத்துல இருக்குற வேற ஆஸ்பத்திரிக்கு அனுப்பீடுங்க என்றாள்.

என்னாச்சு மேடம்???

அப்பறம் சொல்ல மறந்துட்டேன். கண்காணிப்பு கேமரா அறைல மூணுமடங்கு ஆள் போடுங்க. கடைல விற்பனையே குறைந்தாலும் பரவாயில்லை. ஆனால் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றாள்.

சரி மேடம், ஆனா??? எதுக்காக...

கேள்வி கேக்காதீங்க, சொன்னத செய்ங்க, இவ்வளவு சொல்லியும் பிரச்சனை எதாவது வந்தது. என்னோட அடி பிரச்சன செஞ்ச ஆளுங்களுக்கு மட்டும் விழாது, அத தடுக்காத உங்களுக்கும் விழும் என மிரட்டிவிட்டு வைத்தாள்.

ஏற்கனவே கவனமாக வேலைசெய்யும் ராஜா இரண்டு மடங்கு கவனமானான்.

அரசாங்க ஆணை பற்றிய செய்தி தொலைக்காட்சியில் ஓடியது. கவனமில்லாமல் அதை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி கவனத்தை மொத்தமாக ஈர்த்தான் ஜார்ஜ்.

எல்லா அலுவகங்கள், கல்லூரி, என பெண்கள் வேலை பார்க்கும் எல்லா இடங்களிலும், தாய்ப் பால் கொடுக்க, ஒரு அறை தனியாக இருக்கவேண்டும். பச்சிலங்குழந்தைகள் அங்கே பாதுகாப்பாக இருக்க அந்தந்த நிறுவனங்கள் ஆட்களை நியமிக்க வேண்டும். ஊட்டச் சத்து பிரச்சனை குழந்தைகளுக்கு வருவதால், இதை அனைவரும் ஒருமாதத்தில் நடைமுறைப் படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

ரஞ்சனிக்கு இதைப் பார்த்தவுடன் அழுகையே வந்துவிட்டது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வகுப்பில் , ஜார்ஜ் ரஞ்சனிக்கு மிக தொலைவில் அமர்ந்திருந்தான்.

இடைவேளையில் அவன் வேகமாக எழுந்து சென்றுவிட்டான். அவளுக்கும் வீட்டிற்கு செல்ல கார் எடுக்க வரும் போது ஜார்ஜ் முன்னால் நடந்து கொண்டாருந்தான்.

ஜார்ஜ் என அவனை அழைத்த வாறு அவனருகே வர, அவன் காருக்குள் ஏறினான்.

ரஞ்சனி, கார் கண்ணாடியை லேசாக தட்ட, ஜார்ஜ் மறுபுறம் கதவைத் திறந்து, உள்ளே ஏறு !! என்றான்.

உள்ளே ஏறியவள், சாரி ஜார்ஜ், என்றாள் உண்மையான வருத்தத்துடன். அவள் கண்களை உற்று நோக்கியவன், இப்போதும் நன்றி இல்லையா??? என்றான் .

ரஞ்சனி சிரித்த முகத்துடன், அப்படியானல், மன்னித்து விட்டாயா??? நன்றி, நன்றி மிக்க நன்றி என்றவள், பட்டென பேச்சை நிறுத்திவிட்டு, நீதான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும், என்றாள் கண்ணில் குறும்புடன்.

நானா?? எதற்காக, என்றான் அவனும் ஆர்வமாக..

நீ என்றால், உங்கள் நாட்டு பெண்கள், என்னால்தானே இந்த சட்டம் நிறைவேறியது.

ஓ.... என்றவன், சிறு திருத்தம், என்நாடல்ல, நம் நாடு என்றான் அவளை நெருங்கியவாறு...

அவன் ரஞ்சனியை நெருங்கிவர, அவன் காருக்குள் ஏறிய தன் மடமை நினைத்தவள், எப்படி?? என்றாள்.

ஆனால் அவள் கேள்வியில் அவன் மோனம் கலயவில்லை போலும், அவள் இரண்டு கைகளையும் பற்றியவன், யெஸ், நான் உன்னை காதலிக்கிறேன் !! என்றான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா???
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி நான்காம் பகுதி...

ஜீவிதாவை நால்வர் சுற்றிவலைக்க, அவள் கையை பிடித்து இழுத்தவன் , கடைகளின் பின்னால் ஓரிடத்தில் அமர்த்தினான்.

ஹே!! நீ யார்?? என்ற அவள் கேள்விக்கு கையில் கத்தியுடன் கூட்டத்தில் அவளைத் தேடும் நபர்களை அவளுக்கு சுட்டிக்காட்டினான் கண்ணன். அவர்களைக் கண்டதும் ஜீவிதா கண்ணில் தோன்றிய கலவரம் அவள் வாயை அடைத்தது.

நீ இங்கே யார் கண்ணிலும் படாமல் இரு, நான் அவர்களை பிடிக்க செல்கிறேன் என எழுந்தான்.

பயத்தில் ஜீவிதா அவன் கைகளை விடவில்லை. பிளீஸ் ஜீவிதா, விடுங்க, நான் போனாத்தான் அவங்களைப் பிடிக்க முடியும் என்றான்.

சாரி!.. என்றவள் அவனை விட்டுவிட்டாள், ஆனால் பயத்தை விடவில்லை. அவளைப் பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது.

சில நிமிடங்களில் வந்துவிடுவேன் என அவளுக்கு ஆறுதல் கூறியவன், கூட்டத்தில் கலந்தான்.

ஏதோ ஒரு கோபத்தில் திட்டிவிட்டு வந்தாலும், பவித்ரனுக்கு மனது ஏதோ போல இருந்தது. அது என்ன?? என தனக்குள் கேட்டுப் பார்த்தான்.

ஜீவிதாவிடமிருந்து வாங்கிய பொருட்களை காருக்குள் திணித்துவிட்டு, உள்ளே அமர்ந்தான். அதில் முன்னால் அழகிற்காக கட்டப்பட்ட பொம்மையை தொட்டுப் பார்த்து விளையாடியவள், இதையெல்லாம் யோசிக்கக்கூடுமா?? , ம்கூம் இல்லை இது ஜீவிதாவிற்கு யாரோ சொல்லிக்கொடுத்த வார்த்தைகள் என யூகித்தவன்.

அப்படியானால், ஆனந்தா??

ச்சே!! யோசிக்காமல் திட்டிவிட்டோமே என திரும்ப பொருட்காட்சிக்கு போனான்.

அங்கே ஜீவிதா இல்லை. கலவரமாக இருந்தது. பவித்ரனின் இதயத்துடிப்பு எகிறியது.

மூன்றுபேர் செத்துக் கிடந்தனர். ஜீவிதாவைத் தேடி நாலுபுறமும் கண்களை ஓட விட்டான். ஒரு கடைக்கு பின்னாலிருந்து அண்ணா... என்றாள் ஜீவிதா.

பவித்ரனுக்கு போன உயிர் திரும்ப வந்தது. அவளை வேகமாக காருக்கு கூட்டிவந்தவன், விடுதியை நோக்கி பயணப்பட்டான்.

ஜீவிதா பயத்தில் உறைந்து இருந்தாள். சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தியவன், அவளது நிலைகண்டு தண்ணீர் கொடுத்தான்.

அது, ஏதோ கலவரம் அதுக்காக ஏன் பயப்படுற, விடு அதுதான் வந்துட்டோமே, பயப்படாத.. என்றான்.

இல்ல அண்ணா!! அது என்னை கொலை செய்வதற்காக நடந்த கலவரம் என்றாள், ஜீவிதா உதடு துடிக்க..

என்ன ஜீவிதா சொல்ற, எங்கயும் அடிபட்டிருக்கா?? என அவளை பார்த்தான். இப்போது பவித்ரனுக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இல்லை, என்ன ஒருத்தர் காப்பாற்றினார். அவர்தான் கூட்டத்தோடு கூட்டமாய் மூவரை கொன்றுவிட்டு, ஒருவனை இழுத்துச்சென்றார். எனக்கு படபடப்பாவே இருக்கு என தண்ணீரை மடமடவென விழுங்கினாள்.

யார் உன்னக் கொல்ல வந்தது??

தெரியல...

யார் உன்ன காப்பாத்தினது??

தெரியல..

ஆனால் பவித்ரனுக்கு ஒன்று புரிந்தது, ஜீவிதாவை காப்பாற்ற நினைப்பது தான் மட்டுமல்ல என்பது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனிக்கு ஜார்ஜின் காதலிக்கிறேன் என்ற வார்த்தையைக்கேட்டதும் பவித்ரனது முகமே மனதில் தோன்றியது.

எதிரே ஜார்ஜ் , ரஞ்சனியின் சம்மதத்துடன் கூடிய இதல் முத்தத்திற்கு காத்திருக்க, அவள் கண்ணில் கண்ணீர் பெருகியது.

ஜார்ஜ் கண்ணில் குறும்புடன், இதை சம்மதமாக ஏற்றுக் கொள்ளவா?? என இன்னும் நெருங்கினான்.

அவசரமாக முகத்தை திருப்பிக்கொண்டவள், சாரி நீங்க என்னோட ஏதோ விளையாடுறீங்க , அப்படித்தானே?? என நிலைமையை சகஜமாக்க முயன்றாள்.

ரஞ்சனியின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன், அவள் கண்ணைப் பார்த்து, நிச்சயமாய் இல்லை.

உன்னை பார்த்த நாளிலிருந்து , நான் பார்க்கும் அனைத்து பெண்ணிலும் உன்னைத்தான் காண்கிறேன், சில நேரம் வார்த்தைகளில், பார்வையில், உரிமையில், சிரிப்பில், என்னவென என்னால் பிரித்து அறியமுடியவில்லை, ஆனால் ஏதேனும் ஒரு ரூபத்தில் அவர்களிடம் நான் உன்னைத்தான் காண்கிறேன் என்றான் அவள் மறுக்கமுடியாதவாறு.

ரஞ்சனிக்கு ஜார்ஜ் காதலைச்சொன்னதும் இரக்கம் சுரந்தது. உங்களுடைய இத்தனை அன்பை ஒரு நல்ல பெண்ணிடம் கொடுங்கள், நிச்சயமாய் நீங்கள் அழகான வாழ்க்கை வாழ்வீர்கள் என்றாள் ரஞ்சனி.

ஏன்???

நான் ஒரு குழந்தையின் தாய்,

ஆனால், திருமணமாகி ஒரே வாரத்தில் விவாகரத்து ஆனவர்தானே!!

ஓ... இதையார்?? சொன்னது.

உண்மைதானே??

உண்மையாய் இருந்தால், கண்டிப்பாக திருமணம் செய்யவேண்டுமா?? இப்போது தன்னைப் பற்றி விவரங்கள் சேகரித்த அவன் மீது ரஞ்சனிக்கு கோபம் வந்தது .

ஆம் என்றவன், அவளை அணைக்க வந்தான்.

அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளியவள், அவன் சுதாரிக்கும் முன் , மின்னல் வேகத்தில் கார் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

அவளது வேகம் ஜார்ஜிற்கு சிரிப்பை வரவழைத்தது. புன்னகையுடனே கண்ணாடி வழியாக அவளின் வேகநடையைக் கண்டவன், அவள் தொட்ட இடத்தை தடவிப் பார்த்தான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவிதாவை ஆனந்த் தொலைபோசியில் அழைத்தான். நாளை ஊருக்கு கிளம்பத் தயாரா?? நான் ஆவளுடன் காத்திருக்கிறேன் என்றான்.

ஜீவிதா, சிறுவிசும்பலுடன், ம் ... ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது என்றாள்.

என்னாச்சு, ஏன்?? என்றான்.

நானும், பவி அண்ணாவும், வெளில போனோம், அப்போது என்னை நாலுபேர் கொல்ல வந்தாங்க, எனக்கு இப்போ நினச்சாலும், படபடப்பா இருக்கு.

அயோ!! யார் உன்னோட பவி அண்ணாவா உன்ன காத்தது.

இல்ல, அதுக்குள்ள எனக்கும் அவங்களுக்கும் சின்ன வாக்குவாதம்,அவங்க கோபப்பட்டு போய்ட்டாங்க,. யாருன்னே தெரியல, வந்தான், அங்க எல்லாத்தாதையும் செம புத்திசாலித்தனமா மறஞ்சு இருந்தே அடிச்சான். அப்பறமா அப்படியே காணம போயிட்டான் என்றாள் ஜீவிதா.

யார்??? அது..

தெரியலியே, என்றாள் அப்பாவியாக...

உன்ன காப்பாத்தி இருக்கான், எதுக்காக என்ன காப்பாத்துறீங்க, இந்ந ஆளுங்க என்ன கொல்ல வர்றது எப்படி உங்களுக்கு தெரியும்??? எதாவது கேக்கலாம்ல, காப்பாத்தினது ஆணா?? பொண்ணா?? அதாவது தெரியுமா?? என ஜீவிதாவை துளைத்தான் ஆனந்த்.

அது ஒரு பலசாலியான ஆண்தான்..

அவனுக்கு சர்ட்டிவிகேட்டா??? ஆமா உனக்கு ஏதும் அடி பட்டதா??

இல்லை, என்றாள். சுணக்கமாக.

ஹே!! ஜீவி, எனக்கென்னவோ பவித்ரன், உன்ன கொல்றமாதிரி ஆளுங்கள அனுப்பி, அவரே உன்ன காப்பாத்தி , உன் மனசுல இடம்பிடிக்க முயற்சி பண்றாரோ! அப்படின்னு ஒரு சந்தேகம்..

ஆனந்த் சொன்னதும், ஜீவிதா பட்டென இல்லைங்க, அவர சந்தேகப் படாதீங்க, அண்ணா ரொம்ப நல்லவர். அவர நான் லேசா சந்தேகப்பட்டு பேசினதுமே, அவர் முகமே சிவந்து கோபம் கொப்பளிச்சது. நல்லவங்களுக்கு மட்டும்தான் அந்த கோபம் வரும் என்றாள்.

இல்ல, நான் பவித்ரன் தான்னு சொல்லலியே, யார் என்றே தெரியாத போது ஒரு சந்தேகம் அவ்வளவுதான் என ஊசி ஏற்றினான் ஆனந்த்.

கண்டிப்பாக இல்லை. அவர் என்னை கொல்ல வந்தவர்களின் அடையாளத்தை சொல்லி போலீசில் புகார் கொடுத்திருக்கார். என்றாள்.

இறந்து போனவர்கள் மேல் புகாரா???என்றான் ஆனந்தன் கடுப்பாக..

ஒருவன் உயிரோடுதானே இருக்கிறான் அவனை பிடிக்கத்தான்...என்றாள்.

போனை அணைத்ததும், ஆனந்தனுக்கு தலை காய்ந்தது, யார் ஜீவிதாவை காப்பாற்றியது??? பவித்ரன் காப்பாற்றவில்லை என்றால், வேறு யார்???

ஜீவிதா ஆனந்தனுடன் பேசியதும் தன்பிம்பத்தை கண்ணாடியில் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளது மூளை அவளிடம் கேள்வி கேட்டது, நீ அந்த மூவர் இறந்ததாக ஆனந்திடம் கூறவில்லை, அடித்ததாக மட்டுமே கூறினாய். ஆனால் அவன் நடந்ததை பார்த்ததுபோல் இறந்தவர்கள் மீது புகாரா??? எனகேட்டான். எவ்வாறு??? ஒருவேளை???

பலியாவாளா?? பலிகொடுப்பாளா???
 
Top