All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனி தனது கல்லூரியில், அவளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் தனக்கு பக்கத்தில் இருந்த காலி இருக்கையை அடிக்கடி கண்ணுற்றது. இதற்குக் காரணம் பழைய மாணவர்களின் வகுப்புப் புகைப் படங்களை நூலகத்தில் அவள் கண்டதுதான்.

பவித்ரன் நான்காண்டுகளுக்கு முன் படித்த கல்லூரிதான் இது என அவளுக்கு நன்றாக தெரியும். ஆனால் அவனது கடைசி வருடம் இதே வகுப்பில் தனது அடுத்த இருக்கைதான் என அவளுக்குத் தெரியாது. ஏனோ அவன் அருகில் அமர்ந்திருப்பது போலவே ஒவ்வொரு நொடியும் ரஞ்சனிக்கு தோன்றியது .

தனக்குத்தானே மனதில் மருகியவள், இடத்தை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பில் பட்டென எழுந்தாள். அவளை நகரவிடாது ஒருகரம் பிடித்துத் தடுத்தது.

திரும்பியவளின் கண்களுக்கு எதிரே, ஜார்ஜ் பவித்ரனது இடத்தில் அமர்ந்திருந்தான்.

நான் வந்த உடனே எங்க போற?? என்றான்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி ஒன்றாம் பகுதி....

ஆனந்தன் கல்லூரி விளையாட்டுகளில் ஒட்டுமொத்த சேம்பியன் சிப்பை தட்டிச் சென்றான். பவித்ரன் சில புள்ளி இடைவெளியில் இரண்டாம் இடம் பெற்றான்.

ஆனந்தன் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒருவருடம் முடியும் நிலையிலும் பவித்ரனுடன் அவன் நினைத்த நட்பு அமையவில்லை.

இன்று பவித்ரனையே சில புள்ளிகளில் வென்றுவிட்டதால் அவன் சரியான கோபத்தில் இருப்பான், இனி யாருடன் நட்பு கொண்டாலும் , தன்னுடன் ம்கூம் பேசவே மாட்டான் என ஆனந்தன் நினைத்தான்.

ஆனால் பவித்ரன் வித்யாசமானவன். அன்று அவன் விடுதிக்குச்செல்ல கல்லூரி போருந்து நிலையத்தில் காத்திருக்க பவித்ரன் கார் வந்து நின்றது.

கண்ணாடியை இறக்கி ஆனந்தை உள்ளே ஏறு என சைகை செய்தான். ஆனந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை விட முடியாமல் பவித்ரனின் காரில் ஏறினான்.

பவித்ரன் ஆனந்தனிடம் பிரண்ஸ் என கைநீட்ட, ஆனந்தன் நினைத்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், அடுத்தடுத்தான திட்டங்கள் மனதில் எழ நரிக்கண்களுடன் பவித்ரனது கைகளைப் பற்றினான்.

வாழ்த்துக்கள், என பவித்ரன் ஆனந்தனை வாழ்த்தினான். அவனது வெற்றிக்காக, பவித்ரன் வாழ்த்தினான்.

திறமையாளர்களை பவித்ரனுக்கு எப்போதும் பிடிக்கும். திறமையாளர்கள் மற்றவர்களை ஏமாற்றும் அவசியமோ மற்றவர்களை அழிக்கும் என்னமோ அற்றவர்கள், ஏனென்றால், அவர்கள் திறமையே அவர்களுக்கு வேண்டிய உயரத்தை ஈட்டித் தரும் என்பது அவனது எண்ணம்.

ஆனால்,ஆனந்தன் மற்றவர்களை அழித்து அதிலிருந்து சத்துக்களை உறுஞ்சுவதில் ஒட்டுண்ணியை விட திறமையானவன் என பவித்ரன் அறியவில்லை.

அதிலிருந்து சேர்ந்தே விளையாடினார்கள், சேர்ந்தே சுற்றினார்கள், பவித்ரன் வீட்டையே ஆனந்தன் தனது விடுதியாக்கிக் கொண்டான். பவித்ரனது எல்லா விசயங்களிலும் அவனது அணுகுமுறை இருந்தது.

பவித்ரனது மூளையை, செயலை, திறமையை, நாலாபுறமும் சூழ்ந்த ஆனந்தன், தான் செலுத்தும் திசையில் அவனை இயக்கப் பயின்றான்.

பவித்ரன் செலவிலேயே படிப்பு , விளையாட்டுத் திறன் அனைத்தையும் வளர்த்தான். ஆனந்தன் தனியாக கற்றுக்கொண்டது நீச்சல் மட்டுமே, ஏனெனில் பவித்ரனுக்கு தண்ணீர் என்றால் பிடித்தம் இல்லை, அதைவிட நீச்சல் சுத்தமாகத் தெரியாது.

பவித்ரனை ஜூனியர் பெண் நோட்டம் விடுவதை ஆனந்தன் அறிந்து கொண்டான். பெண்கள் , காதல் என்று வந்தால், பவித்ரன் நட்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறையும் என அறிந்தவன், அவனது திட்டத்தை நிறைவேற்றினான்.

அந்தப் பெண்ணிடம், அவனே வழிய சென்று பேசினான். பவித்ரனுக்கு பெண்கள் பார்வையும் புரியாது, காதலும் புரியாது, நீ உனது காதலை அதிரடியாக , நேரடியாகவே சொல், அவனுக்கு அதிரடிதான் மிகவும் பிடிக்கும் என அவளை ஏற்றிவிட்டான்.

சிந்துவும் ஒரு வசதி படைத்த குடும்பத்துப் பெண்தான். தைரியத்திற்கும் குறைச்சல் இல்லை.

சரி என பவித்ரனிடம் நேரடியாக, சந்தித்து அவளது காதலை சொல்ல எத்தனித்தாள் சிந்து.

மறுநாள் சிந்து அவளது காதலை பவித்ரனிடம் சொல்லப்போகும் ஆசையில் , அழகாக தயாராகி கல்லூரிக்குச் சென்றாள். ஆனால் அங்கு நடந்ததோ வேறு....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனியின் இடக்கை ஜார்ஜின் பிடியில் இருந்தது. ரஞ்சனிக்கு கோபம் தலைக்கேற, அவன் பற்றிய அவள் கையை உறுத்து விழித்தாள்.

அவளது பார்வையில் உள்ள தீயை கண்டுகொண்ட ஜார்ஜ் கைகள் தானாக தளர்ந்தது. ஜார்ஜூக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

ரஞ்சனி ஜார்ஜைப் பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைவாள் என்றே அவன் எதிர்பார்த்தான். ஆனால், ரஞ்சனியின் கண்களில் கோபத்தைக் கண்ட ஜார்ஜ்தான் அதிர்ந்தான்.

அவள் சென்று வேறொரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வகுப்பில் பாடத்தைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. ஜார்ஜ் புதிதாக இன்று கல்லாரியில் சேர்ந்ததை மாணவர்கள் கொண்டாடினர். பேராசிரியர்கள் வாழ்த்தினர். எதையும் அவள் ரசிக்கவில்லை. கண்களில் வெருமையாக அக்காட்சி ஓடியது. மனது எதிலும் பதியவில்லை. ஆனால் ஜார்ஜின் கண்கள் ரஞ்சனியின் மனநிலையை படம் பிடித்துக்கொண்டது. அவனுக்குப் புரியாதது, ஏன் அவள் அப்படி இருக்கிறாள்?? என்பது மட்டுமே.

வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் ஜார்ஜை சூழ்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அவனை எந்த முகம் இதுவரை கூட்டிவந்து இங்கு அமர்த்தியதோ, அது வேறெங்கோ வெறித்துக்கொண்டு உள்ளது.

ரஞ்சனியின் மனதில் புயல் சின்னம். அவளது கணினித்திரையில் நேற்று அவள் கண்ட காட்சி இன்று அவளது மனத்திரையில் ஓடியது.

பவித்ரனும், ஜீவிதாவும் காபிசாப்பில் உட்கார்ந்திருந்த புகைப்படம் அது. அவர்கள் வெவ்வேறு காரில் இருந்து இறங்கியது முதல், உள்ளே அவர் பேசியது, திரும்பி ஒரே காரில் சென்றது வரை வரிசையான புகைப்படமாக வந்திருந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜார்ஜ் இடைவேளையில் ரஞ்சனியிடம் வந்து ஹாய்!! என்றான்.

அவள் வாயை இழுத்துப்பிடித்து பதிலுக்கு ஒரு ஹலோ!! என்றுவிட்டு கிளம்ப எத்தனித்தாள்.

ஹலோ!! ரஞ்சனி எங்க போறீங்க என்றான் ஜார்ஜ்.

லண்ட்சுக்கு, பாய் என்றுவிட்டு நகர்ந்தாள்.

அவளது கையைபிடித்து தடுக்க எத்தனித்தவன், காலையில் அவளின் கோபம் நினைவுவர பாதியிலே கையை நிறுத்தினான்.

ஜார்ஜினின் இச்செயலைக் கண்டவளுக்கு அவனது மனது நன்றாக புரிந்தது.

சாரி ஜார்ஜ் என அவனது அந்தரத்தில் இருந்த கைகளைப் பற்றினாள்.

ஒரே நொடியில், தன்னை சரியாக யூகித்த ரஞ்சனியை நினைத்து வியந்தான் ஜார்ஜ். அவனது கண்கள் ரசனையுடன் ரஞ்சனியை மேய்ந்தது.

ரஞ்சனி ஒரு அவஸ்தையான புன்னகையை சிந்திவிட்டு நேரமாச்சு, நான் கிளம்புறேன் என்றாள்.

எங்கே?? என்றான் ஜார்ஜ்.

லண்ட்சுக்கு, என்றவள் நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடன் சேர்ந்து நடந்தவன், சேர்ந்தே போகலாமே என்றான்.

நான் வீட்டுக்கு போறேன், அம்மா சாப்பாடு பாய்!! என்று பறந்துவிட்டாள்.

ஜார்ஜின் முகத்தில் புன்னகை அரும்பியது, அவள் தொட்ட கைகள் ஏனோ அதன் ஸ்பரிசத்தை இப்போதும் அவனுக்கு உணர்த்தி தித்திப்பை வழங்கியது.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முப்பத்தி இரண்டாம் பகுதி...

சிந்து அவளது காதலை பவித்ரனிடம் சொல்வதற்காக கல்லூரி முழுவதும் தேடித்திரிந்தாள். ஆனால் பவித்ரன் எங்கும் இல்லை.

ஒருவேளை இன்று அவன் விடுப்போ என நினைக்கும் வேளையில் அவளது தோழி அவளை அவசரமாக காண வந்தாள்.

வந்தவள், உன்னை பிரின்சிபால் உடனே அழைத்ததாக கூறினாள்.

அங்கே பிரின்சாபால் அறையில் பவித்ரனும் இருந்தான். பிரின்சிபால் சிந்துவைக் கண்டதும் முறைத்தார்.

அவளுக்கு ஒன்றும் விளங்காமல், மருண்டு விழித்தாள்.

படிப்பதற்காக கல்லூரி வந்தாயா?? அல்லது காதலிப்பதற்காகவா??? என சினந்தார்.

சார்... அது என பவித்ரனையும், பேராசிரியரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

ஓ... உனக்கு இன்னும் புரியவில்லை என கையிலிருந்த காகிதத்தை அவள்மேல் விசிறியடித்தார்.

அவளது சிம் நம்பரிலிருந்து பவித்ரனுக்கு அவள் அழைத்ததாக பல அலைபேசிப் பதிவுகளை அது காட்டியது. ஆனால் உண்மையில் அவள் எந்த ஒரு காலும் செய்யவில்லை.

அவள் அதிர்ந்து நிற்க, இது நான் செய்யவில்லை சார் என்றாள்.

இது உன்னுடைய எண்தானே, என்றார்.

ஆமாம்...

நீ பவித்ரனிடம் இன்று காதலை சொல்லத்தானே வந்தாய், அவர் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் அவரை உன் அப்பா விடம் சொல்வேன் என மிரட்டி இருக்கிறாய்..

இல்லை..

சரி உன் அப்பா போலீஸ் டிஜி தானே அவரிடமே விசாரிக்கச் சொல்வோம், நீ உங்கள் அப்பாவை கூப்பிடுகிறாயா??? நான் அழைக்கவா என ரிசீவரை கையிலெடுத்தார் பிரின்சிபால்.

சாரி சார்... என்றாள் செய்யாத குற்றத்திற்கு அவள், அவளுக்கு வேறுவழியும் அப்போது தெரியவில்லை.

பவித்ரன் பக்கவாட்டில் திரும்பி அவளைப் பார்த்து முறைத்தான்.

இது உனக்குக் கொடுக்கும் கடைசி வாய்ப்பு, இதற்கு மேல் உன்மேல் ஏதும் தவறு என்றால், என்னிடம் மன்னிப்பு கேட்க வரவேண்டாம். நேராக வீட்டிற்குச் செல் என முடித்தார்.

பவித்ரன், நீ வகுப்பிற்கு போகலாம். இதை யாரிடமும் பகிரவேண்டாம் என முடித்தார்.

சிந்துவால், இது நான் செய்யவில்லை என பவித்ரனிடம் விவரிக்கக்கூட முடியவில்லை. பவித்ரனிடம் அவள் பேசவே கூடாது என பிரின்சிபால் நிச்சயமாக சொல்லிவிட்டார்.

இதையார் செய்திருப்பார்கள் என சிந்தித்தவாறு வந்தவள் கண்ணில் ஆனந்தன் பவித்ரன் தோள்மீது கைபோட்டுச் செல்வது விழுந்தது.

பவித்ரனுடன் பேசிக்கொண்டே, திரும்பி சிந்துவை கண்களில் அளந்தவன், போடி கண்களால் போடி!! என்றான்.

ஆனந்த்தா??? என அதிர்ச்சியில் சென்றவள், அடுத்து பவித்ரனிடம் பேச முயற்றிக்கவே இல்லை. பவித்ரனை யாரும் நெருங்கக்கூடாது என்ற வெறியை அவள் ஆனந்தன் கண்களில் கண்டாள். மனிதர்களிடம் பேசலாம், நரியுடன் பேசமுடியாது என அவள் அத்துடன் விலகிவிட்டாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜார்ஜ் பலமுறை ரஞ்சனியை லண்ட்சிற்கு அழைத்துள்ளான். ஆனால் ரஞ்சனியோ, அம்மா காத்திருப்பார், வீட்டில் எனக்கு பிடித்த உணவு, வீட்டில் புத்தகத்தை மறந்துவிட்டேன் என ஏதேனும் ஒரு காரணம் கூறி நழுவிச் சென்று விடுவாள்.

ரஞ்சனி அழகிய வெள்ளை கவுனும், ஒரு ஓவர் கோட்டும் அணிந்து வந்திருந்தாள். ஜார்ஜ் பாடத்தில் கவனம் செலுத்த முயல்வதிலேயே வகுப்பு முடிந்தது.

ரஞ்சனியிடம் அவன் பேச எத்தனிக்கும் முன் அவள் மடமட வென வெளியேறினாள். என்ன அவசரம் இவளுக்கு என ஜார்ஜ் ஓடித்தான் அவளை நெருங்க வேண்டியிருந்தது.

இவ்வளவு வேகம் எதற்காக என்றான், அவள் கைகளை பிடித்துக்கொண்டு.

பசி, வீட்டுக்கு சீக்கிரம் போகணும் என்றாள், வாயில் வந்த பொய்யில்...

அப்படியானால் வா!! கேன்டியனிலே சாப்பிடலாம் என அழைத்தான்.

ஓ சாரி, நான் அவசரமா போகணும் , இன்னொருநாள் கண்டிப்பா சாப்பிடுவோம் என நயமாக பேசி நகரப் பார்த்தாள்.

ஆனால் அவனோ கைகளை விட்டபாடில்லை. ம்கூம் இன்னைக்கி என்னோடதான் சாப்பிடனும் என அவன் புறம் இழுத்தான்.

அவன் இழுத்ததில் , தடுமாறியவளை அணைத்து நிறுத்தினான்.

ரஞ்சனி, ஸ்டாப்!! நான் போகணும் என அவனை உதறிவிட்டு நகர்ந்தாள். ஆனால், அவனோ, அவளின் இடக்கையை இருக்கிப்பிடித்திருந்தான்.

பொறுமை இழந்தவள், விடுங்க!! என்றாள் சற்று சத்தமாகவே, ஆனால் அவனோ கண்ணில் குறும்புடன் புன்னகைத்தான், பிடியைத் தளர்த்தாமல் போ!! என்றான்.

சுற்றி தன் பார்வையை சுழற்றினாள், மனித நடமாட்டம் குறைவாக இருக்க ஓங்கி வலக்கரத்தால் அவனது கன்னத்தை பதம் பார்த்தாள்.

அவள் ஓங்கி அறைந்ததில் அவளது ஒருபக்க ஓவர் கோர்ட்லேசாக நழுவி அவளது ஈரமான மார்பகத்தை அவனுக்குக் காட்டியது.

அவன் அவள் கைகளை விடுவித்து, ஓரடி பின்னாள் நகர்ந்தான்.

விறுவிறுவென காரை நேக்கி ஓடினாள் ரஞ்சனி.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் தனது நட்பை ஜீவிதாவுடன் வளர்க்க எண்ணினான். அவளுடன் சில இடங்களுக்கும் செல்ல வேண்டிய நிலை.

ஜீவிதாவின் அண்ணன் சமீபத்தில் மரணித்ததால், என்னை உன் அண்ணணாக ஏற்றுக்கொள் என்ற ஒரு வார்த்தை பவித்ரனின் திட்டத்தை ஜுவிதாவிடம் செயல்படுத்த போதுமானதாக இருந்தது.

அவளுடன் சுற்றித் திரிந்தது, ஆனந்தின் காதுகளுக்குச் சென்று அவனை பித்தம் கொள்ளச் செய்ய போதுமானதாக இருந்தது.

பவித்ரன் , உன் அண்ணன் உனக்கு எதை வாங்கித் தர வேண்டும் என நினைக்கிறாயோ , அதை என்னிடம் கேள். உன் அண்ணன் எங்கே உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறாயோ, என்னிடம் சொல் என்றான். ஜீவிதாவின் அண்ணன் சமீபத்தில் கொடூரமரணத்தில் இறந்ததில் வருந்தி இருந்தவளுக்கு , பவித்ரனின் இந்த வார்த்தைகள் இன்பமான இசையாக இனித்தது.

இரவு நேர ஐஸ்கிரீம், நிறைய சாப்பிங், லண்ச், டின்னர் என ஒவ்வொரு நாளும் ஜீவிதாவை சந்தோசத்தில் ஆழ்த்தினான்.

வேலை பொறுப்புகளை அனைவருக்கும் பிரித்து கொடுத்துவிட்டு, பல மணி நேரம் அவளுக்காகவே செலவிட்டான். மதுவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. வந்த இரண்டே நாட்களில் அவளுடன் செல்லும் அளவிற்கு என்ன வந்தது, என மனதில் வருத்தெடுத்தாள்.

பவித்ரனுக்கு நேரம் குறைவாகவே உள்ளது. ஜீவிதா சென்னை செல்லும்போது அவளுடன், அவள் அண்ணணாக செல்லும் அளவிற்கு பிணைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது.

இந்த நாட்களில் அவன் மற்றொன்றையும் கற்றுக்கொண்டான். அது பெண்களின் அன்பின் ஆழம். மிகவும் வியக்கத்தக்க அளவில், குறைந்த நாட்களில் ஆழமான அன்பை பெண்களால் மட்டுமே உணர்த்த முடியும் என அறிந்து கொண்டான்.

பவித்ரன் ரஞ்சனியிடம் அதை உணர்ந்தான். ஆனால் அதில் திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் என்ற ஒரு பந்தம் தொக்கி நின்றது. ஆனால் இதில் ஜீவிதாவின் பாசத்திற்கு ஏங்கும் மனமே அவனுக்கு மேலோங்கி தெரிந்தது.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 
Top