All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
யாரோ தன்னை தூக்கவும் முதலில் பதறி திமிரியவள் அது தன் கணவன் என்று கண்டு கொண்டதும் உள்ளுக்குள் சந்தோசம் பீறிட கன்னங்கள் வெட்கத்தால் குங்குமமாய் சிவந்து குழைய பட்டும் படாமலும் அவன் மார்பில் தன் கன்னத்தை சாய்த்துக் கொண்டாள்.
அவனோ அதை சற்றும் உணராமல் மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டு லிப்டை நோக்கி சென்று தன் தளத்தை அடைந்தவன் தன் படுக்கை அறைக்குள் நுழைந்து படுகையில் அவளை கிடத்தி விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் மடிகனணியை உயிர்ப்பித்து அதில் மூழ்கிப்போனான்.
தன்னவன் தன்னை கட்டிலில் கிடத்தவும் முன்பொரு நாள் இதே போல் தன்னை கட்டிலில் கிடத்தி அவன் செய்த அத்துமீறிய லீலைகள் கண்முன்னே தோன்றி அவளுள் ஒருவித அச்சத்தையும் வெட்கத்தையும் உண்டாக்க தன் கள்வனின் நினைவில் கண்களை அழுந்த மூடி தூங்க முயற்சித்தும் தூக்கம் வாராது போகவே மெதுவாய் எழுந்தமர்ந்தாள்.
அவன் சற்று தள்ளியமர்ந்து மடிகணனியில் மூழ்கி இருக்க அவளோ அவன் சோபாவில் அமர்ந்து வேளையில் மூழ்கியிருந்த அழகாய் கண்கொட்டாமல் ரசித்து பார்க்க துவங்கியிருந்தாள் தன்னை அறியாமலே...
அவள் அவனை முதல் தடவை பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையில் பல வித்தியாசங்கள் இருக்க தன் மனங்கவர்ந்த கணவனை காதலுடன் விழிகளால் பருகியவள் அவனையே இமை சிமிட்டாது வெறித்தாள்.
அவன் பிறந்த மண்ணுக்கே உரிய நிறமுடைய நீள்வட்ட முகத்தில் ஒற்றை பார்வையாலையே எதிரிகளை துளைத்தெடுக்கும் கூரிய விழிகளும் சீராய் அமைந்த நாசியும் சிரிக்கவே தெரியாது என்பது போல் அழுத்தமாய் மூடி இருக்கும் அதரங்களும் அதை மறைத்தாற் போல் வளர்ந்திருந்த தாடியும் அவனுக்கு கம்பீரம் சேர்க்கும் விதமாய் அமைந்திருந்த மீசையும் யாருக்கும் அடங்கமாட்டேன் என அவனை போலவே சிலிர்த்துக் கொண்டிருக்கும் முடியும் விரிந்து புடைத்திருந்த மார்பும் தினமும் வேர்க்அவுட் செய்வதால் உருண்டு திரண்டிருந்த புஜமும் என மொத்தத்தில் ஆணழகனாய் இருந்தான் அவன்.
தனக்கு மட்டுமே உரிய கணவனை விழிவிரிய பார்த்தவள் தன்னை மறந்து அவனருகில் சென்றிருந்தாள்.
அவள் அருகில் நிற்கிறாள் என்பதை கூட உணராமல் மைலுவின் புகைப்படங்களை மாற்றி மாற்றி அவன் பார்த்துக் கொண்டிருக்க அவன் பின்னால் நின்று அவனையே ரசித்துக் கொண்டிருந்தவள் எதேர்ச்சியாய் அவனின் மடிகணனியை நிமிர்ந்து பார்த்து மனம் பதற அவசரமாய் அவனிடமிருந்து விலகி செல்லும் போது அங்கிருந்த மர நாற்காலியில் அவளின் கால் பட்டு அது ‘க்ரீச்’ என்ற ஓசையுடன் சற்று இடம்பெயர அதில் நிமிர்ந்து பார்த்தவன் அங்கு மனைவி நின்று கொண்டிருக்கவும் முதலில் புரியாமல் விழித்தவனின் முகம் சிறிது நிமிடத்தில் கோபத்தில் ஜொலித்தது..
மடிகணனியை கட்டிலில் தூக்கி வீசியவன் கோபத்தில் அவளை நெருங்கி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.
கணவன் தன்னை நெருங்கவுமே பயத்தில் முழித்தவள் அவன் அறையவும் உடலிலுள்ள சக்தியெல்லாம் ஒட்டு மொத்தமாய் வடிந்தது போல் தரையில் விழுந்தாள்.
அவள் விழும் முன்பே தன் கையால் அவளை தாங்கியவன் அவளை தன் முன்னால் நிமிர்ந்து நிற்க வைத்தான்.
அவன் அறைந்த அறையில் அவனின் ஐவிரல்களும் அவள் கன்னத்தில் பதிந்து கன்னம் திகுதிகுவென பற்றி எரிய அதேயளவு அவள் மனமும் உள்ளுக்குள் பற்றியெரிந்தது.
தன்னை பிடித்து கொண்டிருக்கும் கணவனின் தொடுகையை அதற்கு மேல் சகிக்க முடியாமல் எங்கிருந்து தான் அத்தனை தைரியம் வந்ததோ அவனது கையை தன் தோளில் இருந்து உதறித் தள்ளி பயத்துடன் அவனிடமிருந்து விலகியவள் அங்கிருந்த சுவற்றில் பல்லி போல் அப்பிக் கொண்டு நின்றாள்.
அத்தனை நேரம் மைலுவுடன் மாய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த யுத்கார்ஷ் மலரின் உதறலில் தன்னிலை அடைந்து அவளை நெருங்கும் வேலை தன் கையை அவன் முன் நீட்டி அதை தடுத்திருந்தால் அவன் மனையாட்டி.
மனைவியின் புதிய செய்கையில் உள்ளுக்குள் திடுக்கிட்டு தன் நிலையை உணர்த்த முடிவு செய்து காதலுடன் “பேபி...” என அவளை அழைக்க அவனை வெற்று பார்வை பார்த்தவள் அங்கிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீரை தலையில் கொட்டியவள் “இனிமே அப்பிடி கூப்பிடாதீங்க... இனியொரு தடவை அப்பிடி கூப்பிட்டீங்க செத்துப் போய்டுவேன்...” என உருக்கமாய் அதே சமயம் அழுத்தமாய் அவள் உரைக்க....
அதில் அடிபட்டு போன பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசியவன் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அதில் கோபம் அடைந்தவள் தன் கையிலிருந்த ஜக்கை சுவரில் அடித்தவள் அது சில்சில்லாய் உடைந்து அவள் கையில் ஒரு துண்டு எஞ்சவும் அதை தன் மணிக்கட்டில் வைத்து அழுத்தியவள் “கிட்ட வந்தீங்க கீரிக்கிட்டு செத்துடுவேன்...” என வெறி கொண்டு கத்தினாள்.
மெல்லிய மனம் கொண்ட மலரினும் மென்மையானவள் இன்று சுழன்றடிக்கும் சூறாவளியாய் மாறி இருந்தாள்.
இத்தனை நாள் அவன் மனம் மாறுவதற்காய் காத்திருந்தவள் இன்று அதுவும் தன்னிடம் அத்தனை நெருக்கம் காட்டி இறுகியிருந்த அவள் மனதை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்து அதில் அவன் நினைவுகளை இன்னும் அழுத்தமாய் பதிந்து அவளை மொத்தமாய் வசியம் செய்த பின் மீண்டும் அவன் பழைய நிலைக்கே போனால் அவளும் என்னதான் செய்வாள்.
எத்தனை நாளைக்கு தான் அவளும் பொறுமையாய் காத்திருப்பது... பொறுத்து பொறுத்து அவளின் பொறுமையையும் மொத்தமாய் சோதித்து இன்று சிதைத்து விட்டானே அவன்.
அமைதியாய் இருக்கும் வரை தான் பெண்கள் அலைகடல் ஆனால் பொங்கியெழுந்து விட்டால் ஆழிப்பேரலை அல்லவா...
அந்த நிலையில் தான் இன்று இருந்தாள் மலர்.
அவளின் முட்டாள்தனமான செயலில் அவளை முறைத்த யுத்கார்ஷ் “மலர் ப்ளீஸ்... இப்பிடி லூஸுத்தனமா பிஹேவ் பண்ணாத... நான் சொல்றத கேளு ப்ளீஸ்... நாம பேசி...” என அவன் முடிக்கும் முன்பே அவனை “போதும்” என்ற ஒற்றை சொல்லில் இடைமறித்தவள் மனதுக்குள் இறந்து விட்டிருந்தாள்.
அவன் ‘பேபி’ என்று அழைக்கவும் அவனை அழைக்க விடாமல் தடுத்தவள் இப்போது அவன் ‘மலர்’ என தன் பெயரை சொல்லி அழைக்கவும் ‘ஒஹ்... எப்போடா இவ இப்பிடி சொல்லுவான்னு காத்திருந்திருக்காரு போல அதான் நான் ஒரு வார்த்தை சொல்லவும் அதை பிடிச்சுக்கிட்டு யாரோ ஒருத்தர் கிட்ட பேசுற மாதிரி பேசுறாரு... அவரு எப்போவும் என்ன வேண்டாத மனைவியா தான் நெனச்சிருக்காரு நான்தான் பைத்திக்காரி மாதிரி தப்பு கணக்கு போட்டிருக்கேன்...’ என மனதுக்குள் எதையெதையோ எண்ணி தவித்தவள் ஏதோ முடிவெடுத்தவளாய் தீர்க்கமாய் அவனை நோக்கினாள்.
கையில் கண்ணாடி சில்லுடன் பத்ரகாளி போல் நின்றிருந்த மனைவியை எதிர்கொள்ள முடியாமல் கோழையாகிப் போய் நின்றிருந்தான் தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன்..
ஆனாலும் தன் கம்பீரமும் மிடுக்கும் சற்றும் குறையாமல் நிமிர்ந்து நடையுடனும் அனல் கக்கும் விழிகளுடனும் அவளை நோக்கி சென்றவனின் நடை அடுத்து அவள் கூறிய வார்த்தைகளில் அசையாது நின்றது..
மணிக்கட்டில் கண்ணாடி சில்லை அழுத்திக் கொண்டு தன்னை வெறுமையாய் நோக்கி கொண்டிருந்த மனைவியை நோக்கி முன்னேறினான் யுத்கார்ஷ்.
தன்னை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் கணவனை வெறுமையாய் நோக்கிய மலர் “என்கிட்டே வராதீங்க...” என கண்ணில் வழிந்த நீருடன் கெஞ்ச...... அதை சட்டையே செய்யாமல் தனக்கே உரியே திமிருடன் அவளை நெருங்கியவன் அவளருகில் சென்று அவளின் தோள்பட்டையை பிடித்து அழுத்தி “என்னடி நினைச்சிட்டு இருக்க... லூஸு மாதிரி...” என்றவன் அவள் கையிலிருந்த கண்ணாடியை தூக்கி ஏறிய முற்பட அதை புரிந்து கொண்டவள் எதையும் யோசிக்கமால் அதை கொண்டு தன் கையை கீறியிருந்தாள்.
மறுநொடி கையிலிருந்து குபுக் குபுக்கென இரத்தம் பீறிட அதை பார்த்து பதறியவன் “என்னடி பண்ணியிருக்க... ஐயோ வலிக்குதா...” என பதறியவன் “சை...” என தன் கையை ஓங்கி அங்கிருந்த சுவரில் குத்திக் கொண்டு தன் கையிலிருந்த கர்சீப்பால் அவள் கையை சுற்றி கட்டிவிட்டு அங்கிருந்த பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வர அங்கிருந்த நகர்ந்து சென்றான்.
தன்னை விட்டு செல்லும் கணவனையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் தன் காதல் கைகூடாது போன துக்கம் சூறாவளியாய் சுழன்றடித்து அவளின் மெல்லிய மனதையும் தேகத்தையும் வதைத்தது.
தன்னவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கின்றாள் என்பதை உள்ளுணர்வு மூலம் அறிந்தவன் அவளை திரும்பி பார்க்க துடித்த கண்களையும் இதயத்தை அடக்கி கொண்டு அவசரமாய் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி செல்ல ஆரம்பித்தான்.
அத்தனை நேரம் அவனையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் தன்னை நோக்கி வரவும் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டு கரகரத்த குரலை தொண்டையை செருமி சரி செய்தவள் “நீங்க எனக்காக கஷ்டப்பட வேணாம்.... நான் வேணா உங்களுக்கு விவாகரத்து கொடுக்கிறேன்.... நீங்க வேற... யாரவது உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... என்னாலையோ இல்ல என்னோட குழைந்தையாலையோ உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது... குழந்தையை நானே பார்த்துக்கிறேன்... குழந்தைக்காக உங்கள தேடிக்கிட்டு வந்துறவும் மாட்டேன்...”
“நான் ஏதாவது வேலைக்கு போய்... இல்லன்னா.... நான் ஏதாவது பண்ணிக்கிறேன்... நீங்க குழைந்தைக்காக தான் என்னை உங்க கூட வச்சிருக்கீங்கன்னு எனக்கு புரியுது... இனி மேலும் உங்களுக்கு அந்த கஷ்டத்த கொடுக்க எனக்கு மனசு வரல அதான்... அத்தை மாமாகிட்ட நான் பேசிக்கிறேன்... நான் சொன்னா அவங்க கேட்டுப்பாங்க... ஏன்னு கேப்பாங்க... கேட்டா எனக்கும் வேற... வேறோருத்தருக்கும் சம்பந்தம்னு சொல்லிக்கோங்க...” என மனம் கனக்க தன் பேச்சை முடித்து விட்டு உங்களுக்கு சம்மதமா எனும் ரீதியில் அவனை பார்த்தாள்.
அதுவும் இறுதியில் அந்த வார்த்தைகைளை கூறும் போது அவள் உடல் அருவருப்பில் கூசிச் சிலிர்த்ததை அவளன்றி வேறு யாரும் உணர்ந்திருக்க முடியாது. மனதினுள்ளே அவன் மேல் அள்ள அள்ள குறையாத அளவு காதல் இருந்தும் பத்துப் பொருத்தம் பார்த்து திருமணம் முடித்தவர்கள் மனப் பொருத்தமும் இருக்கின்றதா என்று அன்றே பார்த்திருந்தாள் அவனுக்கு இந்த நிலை வந்திருக்காதே.... என அவனுக்காய் மனம் வருந்தியவள் இரத்தம் வழிந்து கொண்டிருந்த தன் கையையே இமைக்காது வெறிக்க துவங்கினாள்.
அவள் பேச துவங்கியதுமே தன் நடையை நிறுத்து அவளின் முட்டாள்தனமான பேச்சை செவி சாய்த்து ஒன்றும் பேசாது கேட்டுக் கொண்டவன் அவள் பேச்சு முடிந்ததும் அவளின் முகத்தை ஒரு சில நிமிடங்கள் ஏறிட்டான்.
அவளோ தன் கண்களை பார்த்தே தன் உணர்வுகளை புரிந்து கொண்டுவிடுவானோ எனும் பயத்தில் தலையை தரையில் புதைத்து விடுமளவு தலையை குனிந்து அவனை நேருக்கு நேர் சந்திக்காமல் இருந்தாள்.
அதிலே அவளின் மனவோட்டத்தை நன்கு படித்தவனின் மனமும் எல்லையில்லா வருத்தம் அடைந்தாலும் அதை வெளிக்கொணராது தொண்டையை கனைத்து அவளை அழைத்தான்.
அவன் தன்னை தான் அழைக்கிறான் என்பதே புரியாமல் அவன் நினைவில் அவன் என்ன சொல்ல போகிறானோ எனும் எதிர்ப்பார்ப்பிலும் உள்ளே திக் திக்கென துடித்த இதயத்தை அடக்கும் வழி தெரியாது தலையை குனிந்த வாக்கிலேயே நின்றிருந்தாள் அவள்.
மனைவி அப்போதும் தலையை குனிந்தே இருக்கவும் இதழை அசைத்து வாய்க்குள்ளே அவளை லேசாய் திட்டியவன்...
“ஹலோ மிஸ் உங்களத்தான்...” ஒரு மாதிரி குரலில் கூறியவன் “ப்ச்” என தலையை தட்டிக் கொண்டு “ஆமா நீங்க மிஸ்’ஸா’ இல்ல மிசஸ்’ஸா’” என தலையை தடவிக் கண்டு யோசிக்க அதில் திடுக்கிட்டு அவனை விழிவிரித்து நோக்கினாள் மலர்.
பெரிதாக அவள் ஒன்றும் படிக்கவில்லை என்றாலும் அவன் கேட்பது அவளுக்கு புரிந்து தான் இருந்தது. ஆனால் அவன் அப்படி கேட்பதற்கான காரணம் தான் அவளுக்கு புரியவில்லை.
அதனால அவனை அவள் விழிவிரித்து நோக்க அதில் தன் கட்டுபாடுகளை உடைத்து எரிந்து அவள் விழிகளுடன் கலக்கத் துவங்கிய தன் விழிகளை அவளிடமிருந்து பிரித்தெடுத்து அவளை நோக்கும் பாவனையில் அவளுக்கு பின்னால் இருந்த ஓவியத்தை பார்த்தவன் மீண்டும் ஒரு முறை தொண்டையை செருமிக் கொண்டு...
“எதுக்கு கேக்கிறேன்னா நீங்க தானே இப்போ சொன்னீங்க... ஏதோ எனக்கு டிவோர்ஸ் எல்லாம் கொடுக்க போறதா... அதனால தான் கேக்கிறேன்... என்ன டிவோர்ஸ் பண்ணிக்கிட்டா நீங்க எப்பிடி மிசஸ் ஆக முடியும் சொல்லுங்க... அதுவுயில்லாம புருஷன் இல்லாம வாழ்றவங்கள இந்த ஊர் உலகம் என்ன சொல்லும்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே...” என கிண்டலாய் உரைத்தாலும் அவன் மனதில் தீயின் ஜுவாலையை போல கோபக் கனலொன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருந்தது.
அதுவும் அவள் குழந்தைக்காக தானே என்னை உன்னுடன் வைத்திருக்கிறாய் எனக் கூறியது ஆறாத வடுவை அவன் மனதில் ஆழப்பதிந்து போய்விட்டிருந்தது.
‘சொல் அம்போ வில் அம்போ’ என்பது போல் வில்லிலிருந்து பாயும் அம்பினைப் போல் வாயிலிருந்து வரும் வாய் வார்த்தைகளும் மிகுந்த காயத்தை ஏற்படுத்தும்.. அதனால் தான் வார்த்தைகளை கவனமாய் கையாள வேண்டும் என்பர்.. இன்று தன் நிலை குறித்த கவலையில் அவள் பேசிய பேச்சு அவன் மனதில் பெரும் காயத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அவளிடம் சாமதானம் பேசுவது என்பது அவனால் சற்றும் முடியாத காரணம் என்பதால் தன் கோபத்தை சிறிது குறைத்து தன் மனக்காயத்தை ஆற்றுவதற்காக அவளை வார்த்தை எனம் விஷம் தோய்த்து கொல்ல முடிவு செய்தான்.
இதுவரையிலும் யாருக்காவும் இறங்கிப் போகாதவன் இப்போது அவளுக்காகத் தானே தன் இயல்பை சிறிது மாற்றி அவள் மனதை மாற்றுவதற்காகாய் தன் நிலையில் இருந்து கீழிறங்கி அவளுடன் நெருக்கமாய் பழக ஆரம்பித்திருந்தான்.
ஒன்று தனக்கு வேண்டுமென்றாலும் சரி.. அல்ல அதே ஒன்று அவனிடம் இருந்து வேறு ஒருவருக்கு தேவை என்றால் சரி அதை அவர்களாக அவனிடம் வந்து கெஞ்சி கேட்ட பின்பு தான் அவன் அதை கொடுப்பான்
அவனின் இயல்பே அது தான். ஆனால் இன்று அவன் மனம் இறங்கியிருப்பது அவள் மேல் அவன் கொண்ட காதலினால் தான். அவளோ அது புரியாமல் அவளுடன் வாழ நினைப்பவனிடம் பிரிந்து விடலாம் என கூறினால் அவனும் தான் என்ன செய்வான்.
அவனுக்கும் பொறுமைக்கும் பல மைல் தூரம் என்று இருக்கையில் அவள் அவனின் பொறுமையை சோதித்தால் அதன் பலனையும் அவள் தானே அனுபவிக்க வேண்டும்.
அதனாலேயே தன் மனதின் வேதனையை மனைவிக்கு புரிய வைக்கும் நோக்கில் மனைவியின் மனம் அதனால் வருந்தினாலும் பரவாயில்லை என அந்த முடிவை எடுத்தவன் அதை செயலாற்றவும் ஆரம்பித்திருந்தான்.
ஆகமொத்தத்தில் இருவரும் தங்களை பற்றியே யோசித்தனரே தவிர தங்களின் இணையை பற்றி யோசிக்க தவறிப் போயினர்.
எப்போதும் தன்னை பற்றி மட்டும் யோசிக்காமல் தன்னுடன் உள்ள அனைவரை பற்றியும் யோசித்து அவர்களுக்காகவே வாழும் மலர் கூட அன்று தன் கண்வன மேல் கொண்ட ஆதீத காதலினால் அவன் மனநிலையை கவனிக்க தவறி இருந்தாள்.
எந்த பெண் தான் தன் கணவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கிறதென்றால் தாங்குவாள்.
அது போல் தான் மலரும் தன் கணவனுக்கு இன்னொரு பெண் அதுவும் தன் உயிருக்கும் மேலான தன் தோழியின் மேல் தீராத காதல் இருந்திருக்கிறதென்றால் அவளாலும் அதை எப்படி தாங்கிக் கொள்ள முடியும்...
ஆனால் அதையும் கூட தாங்கிகொண்டவளால் கணவனின் திடீர் திடீரென மாறும் மனநிலையை தான் அறவே தாங்க முடியவில்லை.
அதனால் தான் இத்தனை நாள் மனதில் போட்டு அழுத்தி வைத்திருந்த எண்ணங்களை எல்லாம் காட்டாற்று வெள்ளம் போல் கொட்ட துவங்கினாள்.
மலரவளின் அதே நிலையில் தான் இருந்தான் அவள் கணவனும்.
ஒருத்தியை உயிருக்குயிராய் காதலித்து அவள் இறந்த பின் அவளின் ஆசைக்காய் அவளின் வீட்டு வேலைக்காரியை திருமணம் செய்தாலும் அவன் நினைத்திருந்தால் ஒரே ஒரு நொடியில் அந்த திருமணத்தை இல்லாமல் செய்திருக்கலாம்...
ஆனால் அவன் அதை செய்யவில்லை காரணம் அவன் அறியாமல் மலரவளின் மேல் அவன் கொண்டிருந்த உன்னதமான காதல்... அந்த காதலை உணராமல் அவன் அவளை எந்தளவு கஷ்டப்படுத்தியிருக்கிறான் என்பது அவனுக்கு நன்கு தெரியும்...
ஆனால் அதேசமயம் அந்த காதலை உணர்ந்த பின் அவன் அவள் மேல் எந்தளவு காதலாகி கசிந்துருகி இருக்கின்றான் என்றும் அவனுக்கு தெரியும்.
அதைத்தான் அவன் தன் மனைவியிடத்திலும் பெரிதும் எதிர்பார்த்தான்.
தான் அவளுக்கு ஒன்று என்றால் எப்படி பதறுகிறோமோ அதேபோல் தன் மனைவியும் தனக்கொன்றென்றால் பதறவேண்டும் என எதிர்பார்த்தான்.
அவனுக்கு ஏதாவதென்றால் அவள் எந்தளவுக்கு துடிதுடித்து போவாள் என்று அவனுக்கு நன்கு தெரியும் இருந்தாலும் இதுவரை தனக்காக எதுவும் செய்யாமல் ஒரு மனைவியாய் அவள் தன் கடமைகளை சரிவராமல் செய்யாமல் இருப்பதே அவனுக்கு ஆத்திரத்தை வரவழைக்க போதுமாய் இருந்தது.
தன் கணவன் திருமணத்திற்கு முன்பு காதலித்தவளின் நினைவில் அவள் புகைப்படத்தை பார்த்து கொண்டு இருக்கின்றான் என்றால் ஒரு சராசரி மனைவி என்ன செய்ய வேண்டும்.... கணவனின் சட்டையை பிடித்து உலுக்கி அவனை கேள்வி கேட்க வேண்டாமா அட்லீஸ்ட் ஒரே ஒரு கேள்வியாவது அவனை கேட்க வேண்டாமா... அதைவிட்டு விட்டு அழுது வடிந்து கண்ணீர் விட்டுக் கொண்டு எப்போதும் ஒரு வித பயத்துடனேயே இருந்தால் அவனின் தகுதிக்கும் அவனின் உயரத்திற்கும் அது சரிவருமா என்ன..
அவனும் எத்தனை நாளைக்கு தான் பொறுத்து போவது.
அதனால் விளைந்த கோபத்தில் தான் மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். அப்போதாவது அவள் ஏதாவது தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்டு அதில் தன் மனதை அவளிடம் வெளிப்படுத்தி அதன் பின்பு ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ வேண்டும் என எண்ணித்தான் அவன் அந்த காரியத்தை செய்தது..
இதுவரைக்கும் எதிலும் தோற்று பழக்கப்படாதவன் இதிலா தோற்று போக போகிறான்... அதிலும் அவன் நினைத்தது போல் வெற்றியையே ஈட்டியிருந்தான்.
அதிலும் மனைவி விவாகரத்து என்றதில் கோபம் வந்தாலும் வீரியம் பெரிதா காரியம் பெரிதா என்று எண்ணுகையில் அவனுக்கு காரியம் தான் பெரிதாய் தோன்ற வந்த கோபத்தை சிறுது கட்டுப்படுத்தி கொண்டு ஆழ மூச்சு எடுத்து தன்னை ஒரு நிலைபடுத்து கொண்டவன் மீண்டும் அழுத்தமான காலடி ஓசையுடன் அவளை நெருங்கினான்.
மீண்டும் தன்னை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருக்கும் கணவனை தடுக்கும் வழிவகை அறியாது அப்பாவியாய் மலங்க மலங்க விழித்தவள் அவன் அருகில் வந்து காயத்திற்கு முதலுதவி செய்து முடிக்கும் வரை ஒன்றுமே பேசவில்லை... பேசவும் தோன்றவுமில்லை..
அதனால் அமைதியின் மறு உருவாய் திருவாய் மலர்த்தி எதுவும் பேசாமல் இருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன ஒன்னும் பேசாம இருக்கீங்க... நீங்கதான் வாயை தொறந்தா அருவி மாதிரி பேசுவீங்களே... இப்போ எதுக்கு வாயை கப்புன்னு மூடிக்கிட்டு இருக்கீங்க... ஒன்னும் பேச தோணலையா இல்ல எல்லாத்தையும் பேசி முடிச்சிடீங்களா” என மரியாதை பான்மையில அவளை பார்த்து கேட்க அதில் பதறிப்போனவள்....
“ஏன் இப்பிடியெல்லாம் பேசுறீங்க... நீங்க போய் என்கிட்டே இப்பிடி பேசுறது நல்லா இல்ல...” என மெல்லிய குரலில் தயக்கமாய் கூறினாள்.
அதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் முகத்தில் அதை காட்டாது “பின்ன வேற எப்பிடிங்க பேசுறது... நீங்க என்ன விவாகரத்து பண்ண போறீங்கன்னு சொல்றீங்க... அப்றோம் எப்பிடிங்க நான் உங்கள உரிமையா கூப்புடுறது.... அப்பிடியே கூப்பிட்டாலும் உங்கள கட்டிக்க போறவரு அதூ சம்மதிக்கவா போறாரு...” என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு அவன் சோகமாய் கேட்டு வைக்க...
ஏற்கனவே அவன் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தியதை நினைத்து கலங்கி போய் இருந்தவள் ‘நீ கட்டிக்க போறவன்’ என்றதும் மொத்தமாய் உடைந்து போனாள்.
அவள் தான் அவனிடம் விவாகரத்து பற்றி பேசினால் என்பது கூட அந்த நொடி அவள் நினைவலைகளில் இல்லை. ஏதோ அவன் தான் அவளிடம் விவாகரத்து பற்றி பேசியது போல் அதை கேட்டு கலங்கியவளுக்கு அதற்கு மேல் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை..
கண்களில் வழிந்த கண்ணீருடன் “ஏன்க இப்பயெல்லாம் பேசுறீங்க... நான் என்னங்க பாவம் பண்ணேன்... ஒவ்வொருத்தங்களும் எது எதுமேலேயோ ஆசை வைக்கிறாங்க... ஆனா நான் உங்க மேல தானேங்க ஆசை வச்சேன்... ஏன் ஆசை நிராசை ஆகிபோயிருந்தா கூட நான் இந்தளவு கவலை பட்டிருப்பேனான்னு தெரியலங்க... ஆனா இப்போ என்னோட... ஆசை நிறைவேறிடிச்சுன்னு தெரிஞ்சும் அத நெனச்சு சந்தோசப்பட முடியாம இருக்கேங்க...” என அவன் காலருகில் விழுந்து அவனது இரண்டு காலையும் பிடித்துக் கொண்டு அழுது கரைந்தாள்.
அதை கேட்டவனது கண்கள் கலங்கினாலும் அதை வெளிப்படுத்தாது விறைப்பாய் நின்றவனின் உள்ளமோ தன் மென்மையான மலரவளின் மனப்புழுக்கத்தை கேட்டு ஓசையில்லாமல் கண்ணீர் வடித்தது.
“எந்த பொண்ணுக்கும் அப்பா, அம்மா ரெண்டு பெரும் இருக்கனும்ங்க.. ஏன் சொல்றேன்னா... அம்மா, அப்பா துணையில்லாத பொண்ணு ஒவ்வொரு நிமிசமும் வாழ்க்கைல போராட வேண்டி இருக்கும்... ஒவ்வொரு நிமிசமும் அதோட வாழக்கை நரகமா இருக்கும்... இந்த உலகத்துல அனாதையா இருக்கிறத விட பெரிய தண்டனை வேற ஒன்னும் இருக்க முடியாதுங்க... ஒரு பொண்ணு அப்பாம்மா அரவணைப்பு இல்லாம வாழ்றது ரொம்ப கஷ்டம்ங்க... அந்த கஷ்டத்த நான் ஒவ்வொரு நாளும் அனுபவிச்சு இருக்கேங்க...” என வெடித்து கிளம்பிய கேவலை அடக்கி கொண்டு கூறினாலும் இறுதியில் அவளால் அதை அடக்க முடியாமல் போக அவன் கால்களில் முகம் புதைத்து கொண்டாள்.
“நீங்க நினைப்பீங்க இவளுக்கு யாரும் இல்லையான்னு... இருந்தாங்க தான்... ஆனா எனக்குன்னு தேவைப்பட்ட எதையும் அவங்ககிட்ட சொல்ல முடியாம அவங்ககிட்ட இருந்து அதை வாங்கவும் முடியாம நான் ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் போது தூக்கம் வாராம பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லைங்க... அப்பிடியே செத்துரலாம் போல தோணும்... அந்த நிமிசம் எல்லாம் நரகம்ங்க.. எல்லாருமே என்மேல பாசமா இருந்தாலும்... ஏன் நான் கூட அவங்க மேல பாசத்த கொட்டினாலும் என்னைக்கும் அவங்க வேற நான் வேற தானேங்க... அவங்க பணக்காரங்க... நான் பிச்சைக்காரி... அவங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க ஏகப்பட்ட பேர் இருந்தாங்க... ஆனா எனக்கு... நான் யாருமில்லாத அநாதை தானேங்க...”
“என்னோட அப்பாம்மா... என் தங்கச்சி மேல நான் எவ்ளோ பாசம் வச்சிருந்தேன்னு வார்த்தையால சொல்ல முடியலங்க... ஒவ்வொரு நிமிசமும் எங்களுக்கானதுன்னு சந்தோசமா இருந்தோம்... ஆனா அது அந்த கடவுளுக்கு பொறுக்கலையே.... எல்லாத்தையும் மொத்தமா சிதச்சிட்டான்...”
“அப்றோம் என்னோட மகா... என்னோட தேவிம்மா எல்லாரையும் ஒவ்வொருத்தரா என்கிட்டே இருந்து பறிச்சிட்டான்.... இப்போ நீங்க... உங்களையும் அந்த கடவுள் என்கிட்டே இருந்து பிரிச்சுடும்... அத என்னால தாங்க முடியாதே... அப்பிடி மட்டும் ஒன்னு ஆச்சு நான் செத்து போய்டுவேங்க... நீங்க இல்லாம நான் மட்டும் எப்பிடிங்க இருக்க முடியும்...”
“நீங்க இல்லாம நானும் இல்லேங்கே.... ஆனா அது உங்களுக்கு புரியவே இல்லையே.... நான் போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேன்னு தெரியல.... அந்த கடவுள் எல்லா கஷ்டத்தையும் என் தலையிலே சுமத்திர்றான்... எத்தனையத்தான் நானும் தாங்குவேன்... அதான் நீங்க வீட்ட விட்டு போன்னு சொன்னதும் சாகுறதுக்கு போனேன்...” என்றதும் அவன் நெஞ்சம் தூக்கிவாரிப்போட அதில் திடுக்கிட்டு அவளை இழுத்தணைக்க துடித்த கரங்களை பேன்ட் பாக்கட்டில் நுழைத்துக் கொண்டு அவள் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டட்டும் என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு இறுகிப்போய் நின்றான்.
“ஆனா சாக துணிஞ்ச என்னால உங்கள விட்டிட்டு சாகத் தான் முடியல... அதான் அந்த ஆசிரமத்துல போய் சேந்த்துக்கிட்டேன்... ஆனா போனதுக்கப்றம் ஏன் அங்க போனோம்னு இருந்திச்சி... அங்க இருக்கிற குட்டி குட்டி குழைந்தைங்கள பார்க்கும் போதெல்லாம் எனக்கும் ஒரு குழைந்த இருந்தா நல்லா இருக்கும்னு மனசு துடிக்கும்... அத தாங்க முடியாம எத்தனையோ நாளு நான் இருக்கிற அறைகதவ மூடிக்கிட்டு விளக்கையும் அணைச்சு வச்சுட்டு இருட்டு அறையில உக்காந்து அழுதிட்டு இருப்பேன்... இருட்டுன்னா பயப்படுற நான் எப்பிடி அதையெல்லாம் தாங்கிட்டேன்னு எனக்கு சத்தியமா தெரியலைங்க...”s
“அப்பிடியே என்னோட வழ்ழக்கை முடிஞ்சு போய்டுமோன்னு பயத்துல இருக்கும் போது தான் என்னோட குழந்த என் வயித்துல உண்டாச்சு...” என சந்தோசமாய் கூறியவள் அவனது காலிலிருந்து தன் முகத்தை அகற்றி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அந்த நொடியை அவன் வாழ்நாள் பூராகவும் மறக்க முடியாத படி செய்திருந்தால் அவன் மனையாட்டி. அந்நொடி அவள் முகத்தில் வழிந்த சந்தோசமும் தாய்மைபெருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் உயிரில் உருவாகும் கரு எந்தளவு முக்கியம் என்பதை அவனுக்கு பறைசாற்றியது..
இத்தனை நாளாய் பெண்களை ஆண்களின் தேவை தீர்க்க வந்தவளாய் எண்ணியிருந்தவனின் எண்ணத்தை தன்னை அறியாமல் தன் உணர்வுகளின் மூலம் மொத்தமாய் மாற்றி விட்டிருந்தாள் மலர்.
அந்நொடி அவன் ஒன்றை அவன் உணர்ந்தான்... பெண் என்பவள் எத்தகைவள் என்று... அதே நொடி... தான் இத்தனை நாளாய் பெண்களை எந்த நிலையில் வைத்திருந்திருக்கின்றோம் என எண்ணியவனின் உடல் அருவருப்பில் கூசிப் போனது.
tகண்களை இறுக மூடி அதை மறக்க முயன்றவனின் கண்களில் அவன் பெண்களுடன் களித்த இரவுகள் ஒவ்வொன்றாய் வந்து போக அதை தாங்கமாட்டாமல் அவளருகில் மண்டியிட்டு அவள் முகத்தில் தன் முகத்தை புதைத்து கொண்டான்.
கணவனின் செய்கையில் தன் மாய உலகில் இருந்து சட்டென வெளிவந்தவள் அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.s
மனைவியின் அதிர்ச்சியை அவள் உடல் நடுக்கத்திலிருந்து கண்டு கொண்டவள் அவளை தூக்கி நிறுத்தியவாறு தானும் அவளுடன் எழுந்து நின்றவன் காற்றுகூட புக முடியாதளவு அவளை இறுக அணைத்து கொண்டான்.
இத்தனை நேரமாய் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவனின் உணர்வுகளை அதற்கு மேல் அடக்க முடியாமல் அவளை ஆரத்தழுவியவி தன் வசப்படுத்தியவன் அவள் எதிர்பாரா நொடி அவள் இதழோடு இதழ் பொருத்தினான்.
அவனின் வன்மையான இதழும் பெண்ணவளின் மென்மையான அதரமும் எத்தனை நீண்ட நொடிகள் யுத்தம் புரிந்ததோ அதற்கு மேல் அதை தாள முடியாமல் பெண்ணவள் மூச்சுக் காற்றிற்கு தவிக்க ஆரம்பித்ததும் அவளின் நிலை அறிந்து அவளவன் அவளை மெல்ல விடுவித்தான்.
அதில் அவனிடமிருந்து வெட்கத்துடன் விலகியவள் என்ன செய்வதென புரியாமல் கை விரலை வாயில் வைத்து கடித்து துப்ப தொடங்கினாள்.
அதை பார்த்து அடக்கமாட்டாமல் உடல் குலுங்க சிரித்தவன் “என்ன பண்றீங்க மேடம்” என்க
அதை கேட்டு அவனை முறைத்து வைத்தாள் அவள். இத்தனை நேரம் தன் மனதிலுள்ள எல்லாவற்றையும் அவனிடம் கொட்டியதாலோ என்னவோ அவள் மனச்சுமை சற்று இறங்கியது போலிருக்க அதில் அவளின் பழைய தன்மை மீள அவனை முறைத்து வைத்தாள்.
மனைவியின் முறைப்பில் அவளை விசித்திரமாய் பார்த்து வைத்தவன் ‘அமைதியான மைலு உன்ன பார்த்துத் தான் தன்னோட இயல்பவிட்ட உன்ன மாதிரி ஆகியிருக்கா... அவகூட பழகின எனக்கு அவளோட இயல்பை மாத்தின உன்னோட கேரக்டர் தான் ரொம்ப பிடிச்சிருந்தது சின்னு... நான் என்னை அறியாமலேயே உன்ன அப்போதிருந்தே லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்... அது எனக்கு இப்போ தான் தெரிஞ்சது...’
‘அமைதியா இருந்தவள உன்ன மாதிரி ஆக்கிட்டு இப்போ நீ அவள மாதிரி மாறிட்ட சின்னு... இனிமேலும் உன்னோட இந்த பொய்யான முகமூடிய என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது.. அதனால நான் என்ன பண்ண போறேன்னு...’ என மர்மமாய் சிரித்தவன் ‘வெயிட் அன்ட் சீ பேபி (wait and see baby)’ எண்ணிக் கொண்டவன் அவளை பதிலுக்கு முறைத்து வைத்தான்.
கணவன் தன்னை முறைப்பதை கண்டதும் தான் தான் அவனை முறைத்தது நினைவு வர பயத்தில் முகம் வெளுக்க “எ...எ...என்ன... என்னை மன்னிச்சிடுங்க....” என தலை குனிந்தவாறு பயத்துடன் கூறியவள் சற்று நிமிர்ந்து பார்த்திருந்தால் அவன் சத்தமில்லாமல் சிரித்தது அவளுக்கு தெரிந்திருக்குமோ?
அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வது என புரியாமல் திருதிருத்தாள் அவள்.
அதை பார்த்து அவனுக்கு தன் மனைவியை நினைத்து பரிதாபமாய் இருந்தாலும் தான் எடுத்த முடிவு நினைவு வரவே தன் கூரிய விழிகளால் அவள் இதயத்தை துளைத்தேடுப்பது போல் அவளை ஏறிட்டான்.
அவனின் பார்வையில் உள்ளம் குறுகுறுத்து கன்னங்கள் சிவக்க ஆயத்தமாக அதை மறைக்க பெரும் பாடு பட்டவள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
அவள் எதற்காக மறுபுறம் திரும்பி இருக்கிறாள் என்று தெரிந்து இருந்தாலும் அவளை சீண்ட வேண்டும் போல் அவனை அறியாமல் ஒரு சிறு ஆசை அவன் மனதை வியாபிக்க அதை கட்டுப்படுத்த முடியாமல் “ஓஹ்... அப்போ மேடமுக்கு என்ன பார்க்கிறதுக்கு கூட இஷ்டம் இல்லை போல... அதான் முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கீங்களா” என்றவன் “உங்களுக்கு கஷ்டம்னா சொல்லுங்க நான் வெளிய போய்றேங்க...” என பவ்யமாய் கூறி வைக்க..
அதில் பதறியவள் “இல்ல... இல்ல... இது உங்க ரூமு... நான்தான் இதுல தேவையில்லாம இருக்கிறேன்... அதனால நானே வெளியே போய்க்கிறேன்... நீங்க சௌகரியமா இருங்க...” என்றவள் அங்கிருந்து வெளியேற எத்தனிக்க...
அவளை போக விடாமல் அவள் கையை இறுக பற்றி தடுத்தவன் “ஏன்டி... உன் மனசுல இவ்ளோ காதல வச்சுக்கிட்டு அத என்கிட்ட சொல்லாம மறைச்சு வச்சிட்டு இருக்க...” என கேட்கத்தான் நினைத்தான்.
ஆனால் அவன் அதை கேட்கவில்லை... கேட்டாலும் அதற்கு அவள் பதில் சொல்ல போவதில்லை என்று தெரிந்த பின் அதை கேட்டு அவளை வருத்தி அவள் வருந்தவதை பார்த்து தானும் வருந்தி அது எதற்கு என்று அதை தன் மனதினுள்ளேயே கேட்டுக் கொண்டான்.
அவன் மனதினை அவள் படித்தாலோ என்னவோ ‘என்னோட காதல இப்போ உங்ககிட்ட வெளிப்படுத்தின மாதிரி என்னோட மனசுக்கு தோணுதுங்க... ஆனாலும் அதை உங்க கண்ண பார்த்து என்னால உங்ககிட்ட சொல்ல முடியாதுங்க... அப்பிடி நான் சொல்லி உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா என்னால அத தாங்கிக்க முடியாதுங்க... இந்த காதல் என்னோடவே போகட்டும்... அத என்னைக்கும் உங்ககிட்ட வெளிப்படுத்தவே மாட்டேன்...’ என தனக்குள் எண்ணியவளுக்கு தெரியவில்லை அவன் எப்போதோ அவள் காதலை புரிந்து கொண்டு விட்டானென்று...
அதுவும் இப்போது கூட அவள் தன் காதலை தன்னிலை இன்றி அவனிடம் உரைத்து விட்டாள் என்பது அவள் நினைவில் இல்லை...
அவள் மனதினை படித்தவனை போல அவள் இதழ்கள் புன்னகையில் விரிய அவள் கையை மெதுவாய் தன் பிடியிலிருந்து விடுவித்தான்.
அவன் தன் கையை விட்டதும் அவனை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தவாறு “நா... நான்... கீழ போறேன்....” என்றவள் அவனை திரும்பி திரும்பி பார்த்தவாறு லிப்ட் வழியால் கீழிறங்கி சென்றாள்.
விதியின் திருவிளையாடலால் அவளது காதலை அவன் புரிந்து கொண்டு விட்டான்... ஆனால் அவனது காதலை அவள் என்று புரிந்து கொள்ள போகின்றாளோ...s
அதுவரையிலும் காலன் அவளை விட்டு வைத்திருப்பானா??? இல்லை அவள் உயிரினும் மேலான மானத்தை மானபங்க படுத்தி அவள் உயிரை சூறையாடி விடுவானா???
அதே நேரம் சென்னையின் பிரதான சாலையில் அமைந்திருந்த காபி ஷோப்பில் தன்னவனுக்காக இரண்டு மணி நேரங்களாய் காத்திருந்தால் வின்னி.
அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜோடி ஜோடியாய் பல இருக்க அவர்களை எல்லாம் ஒரு சிறு கணநேரம் நோட்டம் விட்டாலும் தன் கைக் கடிகாரத்தையே பல மணி நேரங்களாய் பார்த்து கொண்டிருந்தாள்.
அங்கிருப்போரின் பார்வை தன்னையே வட்டம் விடுவதையும் உணர்ந்து தானிருந்தாள். ஆனால் அவர்களிடமெல்லாம் நான் என் காதலனுக்காக காத்திருக்கிறேன் என சொல்லிக் கொண்டா இருக்க முடியும் என எண்ணிக் கொண்டு பழராமனுக்காய் காத்திருந்தவள் அதற்கு மேல் அங்கு தனியாய் இருக்க கிளம்புவதற்காக எழுந்த நொடி அவனது மோட்டார் வண்டி அந்த காபி ஷோப்பினுள் நுழைந்திருந்தது..
அவனது வண்டியை பார்த்தும் அத்தனை நேரம் அவள் முகத்தில் இருந்து தவிப்பு மறைந்து அங்கு சந்தோசம் குடிகொண்டது
அவனை நோக்கி செல்ல துடித்த தன் கால்களை அடக்கி அவனை தன் விழிகளால் மொய்க்க துவங்கியவள் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து உள்ளங்கையில் முகத்தை தாங்கிக் கொண்டு அவனை மெய்மறந்து ரசிக்க ஆரம்பித்தாள்
எப்போதும் ஆறு மணிக்கெல்லாம் தன் வேலையை முடித்துக் கொண்டு வருபவன் அன்று பார்த்து வேலை இழுத்தடிக்கவும் சற்று தாமதமாகவே கிளம்பினான்.
இருந்தாலும் தனக்காக காத்திருந்த நண்பர்களுடன் தான் வழக்காமாய் வரும் காபி ஷோப்பினுள் நுழைந்து தன் வண்டியை பார்க் செய்துவிட்டு நண்பர்களுடன் வளவளத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் முதுகை எதுவோ துளைப்பது போலிருக்கவும் சுற்றும் முற்றும் பார்வை அலையவிட்டான்.
ஆனால் யாரும் பார்ப்பது போல் தெரியாததால் தலையை உலுக்கிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்த மறுநொடி புயல் போல் அவனுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தாள் வின்னி.
அவளை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனவன் அவசரமாய் எழுந்து நின்றான்.
அதை பார்த்து மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டவளை தொடர்ந்து அவனது நண்பர்களும் தலையிலடித்துக் கொண்டனர்.
தன் நண்பர்கள் தன்னை மனதுக்குள் வைவதை பற்றி அறியாதவனாக அசையாத சிலை போல் நிமிர்ந்து விறைத்துப் போய் நின்றிருந்தவனை வின்னி தான் சொடக்கிட்டு அழைத்து அவனை தன் நிலைக்கு கொண்டு வந்திருந்தாள்.
தான் வந்தமர்ந்ததும் எழுந்து நின்றவனை எண்ணி கடுப்பானாலும் அவனது அந்த முட்டாள்தனமான செய்கையையும் அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை...
ஆனால் பல பேர் தங்களையே வேடிக்கை ஆர்த்துக் கொண்டிருக்கவும் அவனை சொடக்கிட்டு அழைத்தவள் அவன் தன்னை புரியாது நோக்கவும் உற்காருமாறு சைகை செய்தாள். அதை பார்த்து தலையை அசைத்துக் கொண்டு அவள் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தவனை அவனது நண்பன் வெங்கட் முறைத்துப் பார்த்தான் என்றால் வின்னியோ அவனை ரசித்துப் பார்த்தாள்.
அத்தனை நேரமாய் தன்னவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த வின்னி அவனது நண்பர்களை அப்போது தான் கவனித்தவளாய் அவர்களை ஏறிட்டு பார்த்தவள் “நான் ராம் கூட கொஞ்சம் தனியா பேசணும்...” என்க...
அதை கேட்டு ‘இந்த பொண்ண பார்த்த டெரர் பீஸ் மாதிரி இருக்கு... ஆனா இவனப் பார்த்தா பீடிங் பாட்டில் சூப்புற பச்ச மண்ணு மாதிரி இருக்கு... இதுங்க ரெண்டுக்கும் எப்பிடி செட் ஆகும்னே புரியலையே...’ என தலையை சொரிந்து கொண்ட அவனது நண்பர்கள் நண்பனை ஒரு பரிதாப பார்வை பார்த்துக் கொண்டு அங்கிருந்து விலகிச் சென்றனர்.
அவனது நண்பர்கள் எண்ணியது போல் தான் அவனும் இருந்து தொலைத்தான். எப்போதும் பெற்றோரின் சொற்படி கேட்டு அவர்கள் சொல்வதை மட்டுமே செய்து அவர்கள் கிழித்த கோட்டிலே தன் வாழ்க்கை பயணத்தை செலுத்திக் கொண்டிருக்கும் அவன் அவர்கள் எண்ணியது போல் பீடிங் பாட்டலில் பால் குடிக்கும் சிறு பாலகன் தான்.
அந்த நிலையில் தான் அவனை அவனது வீட்டில் வைத்திருந்தனர். அதுவும் கூட்டு குடும்பத்தில் சொந்த பந்தம் சூழ வாழ்வதால் அவனுக்கும் தைரியமாய் எதையும் செய்து பழக்கமும் இல்லை. அதனால் ஏனோ தானோவென்று கிராமத்தில் வாழ்ந்து வந்தவனுக்கு இந்த சென்னை வாழ்க்கை பிடிக்காவிட்டாலும் அவனுக்கு அதை தவிர வேறு வழி இருக்கவில்லை...
அப்படியும் அவனை வேலைக்கு அனுப்ப மனமில்லாமல் வீட்டிலேயே வைத்திருக்க முயன்ற தன் தங்கையையும் மச்சானையும் சாமாதனப்படுத்தி அவனை சென்னைக்கு அனுப்பி தனக்கு தெரிந்தவர் மூலம் அவனுக்கு வேலை ஒன்றை ஏற்பாடு செய்தது எல்லாமே அவனது ஒன்றுவிட்ட மாமா சுந்தரபாண்டியன் தான்
அப்படிப்பட்டவனுக்கு வின்னியை போல அடவடியான ஒருவளை பார்த்தாள் அதிர்ச்சியும் பயமும் படபடப்பும் ஒரு சேர வருவதில் ஆச்சரியமே இல்லையே..
அதிலும் அவள் தன்னிடம் தனித்து பேச வேண்டும் எனக்கூறி தன் நண்பர்களை அனுப்பி வைக்கவும் அவனுக்கு வந்த படபடப்புக்கும் வெடவெடப்புக்கும் அளவே இல்லாமல் தாறுமாறாய் அவன் நெஞ்சம் துடிக்க ஆரம்பிக்க அதை கட்டுக்குள் கொண்டு வரும் வழி வகை அறியாது செய்வதறியாமல் அவளை முழித்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனின் முழியை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அவனிடம் காதலை சொல்ல ஆரம்பித்த நொடி பெண்களுக்கு இயல்பாய் தோன்றும் வெட்கம் வந்து அவளை சூழ்ந்து கொள்ள என்ன சொல்வதென புரியாமல் தட்டுதடுமாற ஆரம்பித்தாள் அவள்.
“உங்க... உங்ககிட்ட ஒன்னு...” என்றவள் தன் கையிலிருந்த கைக்குட்டையால் முகத்தில் பூத்த வியர்வையை ஒற்றிக் கொண்டு “எப்பிடி சொல்றதுன்னு தெரியல...” என மீண்டும் ஆரம்பித்து அதற்கு மேல் சொல்ல முடியாமல் மீண்டும் பாதியிலேயே நிறுத்த அதை பார்த்து...
‘அட என்னை போல அவளுக்கும் படபடன்னு வருது போல... வெட்கம் வேற வருது... வெட்கப்படும் போது செம்மையா இருக்கா... இப்பிடியே இவ வெக்கப்பட்டுக்கே இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்லா...’ என தன்னை அறியாமல் மனதினுள் எண்ணிக் கொண்டவன் அதன் பின் தான் தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திகைத்து தன் மனதை உலுக்கி அதை பிடித்தி இழுத்து நிறுத்தி வைத்தான்.
“ஏதோ சொல்ல நினைக்குறீங்கன்னு புரியுது... எதுன்னாலும் பரவாயில்ல சொல்லுங்க...” என்றவன் “அதுக்கு முதல்ல நானும் உங்க கிட்ட ஒரு விஷயத்த சொல்லணும்” என தயக்கமாய் உரைத்தாலும் அவள் சொல்ல முடியாமல் தடுமாறுவதை கண்டு அவனாகவே ஒருவாறு யூகித்து அவள் என்ன சொல்ல நினைக்கிறாள் என்பதை கண்டு கொண்டவன் தான் பேச முடிவு செய்தான்...
எப்போதும் தன்னை பார்த்தால் பேச முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவன் இன்று தானாகவே தன்னிடம் பேச வேண்டும் எனக்கூறவும் ஆனந்த்தத்தின் உச்சிக்கு சென்றவள் வெட்கம் மேலிட “இத்தன நாளா நானும் இதுக்காகத்தான் காத்திருந்தேன்... சொல்லுங்க...” என தவிப்பும் தயக்கமுமாய் கூற...
அதை கேட்டவனுக்கு மனது கனத்து போனது... ‘ஐயோ கடவுளே... நீ என்ன இப்பிடியொரு இக்கட்டுல தள்ளியிருக்க கூடாது... இப்போ எப்பிடி நான் இவகிட்ட இதபத்தி சொல்றது... சொன்னா தாங்கிப்பாளா.....’ என உள்ளுக்குள் உதறலெடுக்க தன் இஷ்ட தெய்வத்தை எல்லாம் மனதுக்குள் வேண்டிக் கொண்டு மெதுவாய் அவளிடம் பேச ஆரம்பித்தான்.
"Courier New";mso-hansi-font-family:"Courier New";color:black;mso-themecolor:
அதைக்கேட்டு அவளுக்கு இதயம் தொண்டை குழிக்குள் சிக்கிக் கொண்டதை போல் தோன்ற உடலோ அவளை அறியாமல் ஒரு பரவச நிலைக்கு சென்றிருந்தது...
‘என்னைப் போலவே அவருக்கும் என் மேல காதல் இருந்திருக்கு... ஆனா அத வெளிக்காட்டாம எப்பிடி மறச்சு வச்சுக்கு என்கிட்டே பயந்த ஆள் மாதிரி சீன் போட்டிருக்காரு... மவனே நீ முதல்ல ப்ரொபோஸ் பண்ணுடா அதுக்கப்றம் நீ பண்ண அட்டகாசத்துக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறேன்...’ என தனக்குள் சிரித்துக் கொண்டு “இல்ல... இல்ல அப்பிடியெல்லாம் நான்.... நான் தப்பா நினைக்க மாட்டேன்... நீங்க தயங்காம தாராளமா சொல்லுங்க...” என மகிழ்ச்சியை குரலில் வெளிக்காட்ட கூடாது என அவள் எத்தனை தடுத்தும் அது அப்பட்டமாய் வெளிப்பட்டே இருந்தது...
அதை கண்டவன் ஒரு நொடி... ஒரே ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு ‘இப்போ இப்பிடி சொல்ற நீங்க நான் விஷயத்த சொன்னப்பறம் என்ன பண்ண போறீங்கன்னு தெரியல...’ என எண்ணிக் கொண்டான்.
“அது... அதுவந்து என்னென்னா.... எனக்கு... எனக்கும் என்னோட அயித்த பொண்ணுக்கும் வர மாசம் நிச்சயம் வச்சிருக்காங்க... நான் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்புட்டு இருக்கேன்... நீங்களும் கண்டிப்பா என் நிச்சயத்துக்கு வரணும்” என்க..
அவ்வளவு தான்... அத்தனை நேரம் சந்தோசக்கடலில் மூழ்கியிருந்தவளை கதற கதற யாரோ தண்ணீருக்குள் அமிழ்த்தி மூச்சடைக்க செய்தது போல் உயிர் போகும் வலியை அந்நொடி உணர்ந்தாள்.
எத்தனை எத்தனை ஆசை... எத்தனையெத்தனை கனவுகளுடன் அவனை காண வந்திருந்தாள்... ஆனால் ஒரே வார்த்தையில் அவளின் ஒட்டுமொத்த ஆசை மீதும் இடித்து தகர்த்த முடியாதளவு சமாதி ஒன்றை அல்லவா எழுப்பி விட்டிருந்தான்.
அதை தாளமாட்டாமல் கண்கள் இரண்டும் கண்ணீரை பொழிய ஆயத்தமாக அவன் முன் தான் அழுது மேலும் அவமானப்பட விரும்பாமல் இமை சிமிட்டி கண்ணீரை அடக்கியவள் உதட்டை பற்களால் அழுந்த கடித்துக் கொண்டு எச்சிலை விழுங்கி தொண்டையை ஈரப்படுத்தினாள்.
அவனிடம் கடைசியாய் ஒரு தடவை பேச முயற்சி செய்தாள்.. ஆனால் பேச்சு வராமல் கேவலே வரவும் அதை அடக்கும் வழி தெரியாது இனிமேல் ஒரு நிமிடம் கூட அவன் முன்பு நிற்க தோன்றாது அவசரமாய் எழுந்தவள் தன் பர்சை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
மனது முழுக்க ரணமாய் வலிக்க அதை தாங்கமுடியாமல் கண்கள் கண்ணீரை சுரக்க அதற்கு மேல் கால்கள் அசைய மறுக்க கண்களை இறுக மூடி தன் உணர்வுகளை மறைக்க பிராயத்தனம் பட்டவளை காண சகியாது அவளை அணுகியவன் அவளின் தோளை தொட அதில் அவனை நோக்கி திரும்பியவளின் கண்களில் தெரிந்த வெறுமையில் அவன் மொத்தமாய் வீழ்ந்து போனான்.
ஆனாலும் தன் பெற்றோர் மேல் உள்ள பயம் நீங்காமல் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க அப்போதும் தன்னை ஆறுதல்படுத்த முயலாமல் நின்று கொண்டிருக்கும் தன்னவனை பார்த்தவளின் மனதில் அன்றொரு நாள் ஜொகி சொன்னது நினைவில் வந்தது.
“உனக்கு கொஞ்சமும் செட் ஆகாத ஒருத்தன லவ் பண்றேன்னு தோணுது” என அவன் கூறியதற்கான அர்த்தத்தை அவள் இன்று தான் முழுதாக புரிந்து கொண்டாள்.
‘சரியாத்தான் சொல்லியிருக்கீங்க... ஆனா நான் தான் புரிஞ்சிக்காம போயிட்டேன்... பாட்டதுக்கப்றம் தான் எனக்கு புரியுது...’ என உள்ளுக்குள் கதறியவளின் கதறல் தாங்கமால் மழை ‘சோ’வென கொட்டி இருவரையும் மெல்ல தழுவி சென்றது...
அதற்குமேல் தாங்கமுடியாமல் அவனை வெறித்து பார்த்தவள் ஓடி சென்று அவனை இறுக தழுவிக் கொண்டாள்.
நடுரோட்டில் நிற்கின்றோம் என்ற நினைவே இன்றி அவனை அவள் ஆரத்தழுவ அதில் அவனுள் புது ரத்தம் பாய உடல் சிலிர்க்க மெய்மறந்து நின்று கொண்டிருந்தான் அவன்.
இதுவரைக்கும் பெண்களென அவன் பழகியது அவனது அம்மா, அக்கா, பாட்டி, அத்தை, சித்தி என வயதுக்கு மூத்தவர்களுடன் தான்.
தனக்கு நிச்சயம் செய்யப்போகும் தன் அத்தை மகள் ரத்னாவிடம் கூட அவன் இதுவரை நெருங்கி பழகியதில்லை. அப்படிப்பட்டவனை அந்நிய பெண்ணொருத்தி தொட்டு தழுவவும் அவனின் இளமை விழித்துக் கொள்ள அவனும் தன் நிலை மறந்து அவளை ஆரத்தழுவிக் கொண்டான்.
அந்நொடி அவன் அப்பா.. அம்மா... தன் குடும்பம்... தனக்கு நிச்சியம் செய்யப்போகும் அத்தை பெண்... என யாரும் அவன் நினைவலைகளில் இல்லை...
அவன் நினைவில் இருந்ததெல்லாம் அவள்... அவள் மட்டுமே தான்.. அக்கணம் அவன் ஒன்றை தெளிவாய் உணர்ந்து கொண்டான். தன்னை அறியாமலேயே அவளிடம் தன் இதயம் சரணாகதி அடைந்து விட்டிருந்ததை.
அவர்களிருவரும் ஒருவரை ஒருவர் காற்றுகூட புக முடியாதளவு ஆரத்தழுவிய நொடி அங்கிருந்த பெட்டிக்கடையிலிருந்த வானொலியில் ஒலித்த பாடல் இருவரது மனதையும் மெல்ல தீண்டி சென்றது...
“என்னமோ செய்தாய் நீ...
என்னதான் செய்தாய் நீ...
எதிரில் யாரை பார்க்கும் போதும்...
கண்கள் உன்னை தானே தேடும்...
கால்கள் தரையில் இறங்கும் போதும்...
மனசு பறந்து பார்க்க தோணும்...
எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய்...
எந்தன் நெஞ்சை கேட்டுப் பார்த்தேன்..s
எத்தனை எத்தனை எத்தனை தடவை
கேட்டும் பதில்கள் இல்லையே...
நதியில் மிதக்கும் இலைக்கு எல்லாம்..
நதியின் ஆழம் தெரிவதில்லை...
காதல் எந்த நிமிடம் பிறக்கும்...
கடவுள் உலகம் அறிவதில்லை...
என்னமோ செய்தாய் நீ...
என்னதான் செய்தாய் நீ...”
என்ற பாடல் இனிய கானமாய் ஒலித்து இருவரது இதயத்தையும் மயக்க அதில் மூழ்கி நின்றவர்களில் முதலில் தன்னிலைக்கு வந்த வின்னி அவனை பலம் கொண்ட மட்டும் உதறித்தள்ளி விட்டு “சே” என்றவள்...
“போடா... நீயே சொன்ன மாதிரி... உனக்காக காத்திட்டு இருக்கிற அருக்கானியையோ திருக்கானியையோ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இரு... இனிமேல் நான் உன்பக்கமே தலைவச்சு படுக்க மாட்டேன்... இனி நீயாவே என்ன தேடி வந்தாலும் எனக்கு நீ வேண்டவே வேண்டாம் டா... போடா... பன்னி... லூஸு... மூஞ்ச பாரு மொஞ்ச இஞ்சி தின்ன குரங்கு மாதிரி... உன்ன போய் லவ் பண்ணேன் பாரு... என்னை செருப்பாலேயே அடிக்கணும்... பொண்ணுங்க காதல சொன்னா உங்களுக்கு அவ்ளோ சீப்பா போய்டிச்சில்ல... பொண்ணுங்க காதல் அவ்ளோ ஈஸி இல்லடா... ஆனா நான் எல்லாரும் அவ்ளோ சொல்லியும் உன்ன லவ் பண்ணேன்ல... அதுக்கு நீ நல்ல பரிசு கொடுத்திட்டடா... போடா....” என அழுது கொண்டே கூறியவள் அங்கிருந்து ஓடிச்சென்று அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி தன் அபார்ட்மென்டிற்கு சென்று விட்டிருந்தாள்.
அத்தனை நேரம் அவள் கட்டி தழுவியதில் உடல் சிலிர்க்க நின்றவன் அவள் தன்னை விட்டு விலகி சென்றதும் தான் அவள் பேசியது புரிந்து அவளை பார்க்க அவளோ ஆட்டோவில் ஏறி சென்று கொண்டிருந்தாள்..
அதை பார்த்தவன் ‘அச்சோ... லூஸு... தனியா இந்த நேரத்துல போறாளே... இவளுக்கு கொஞ்சங்கூட அறிவேயில்ல... லூஸு... லூஸு...’ என முதல் தடவையாக யாரோ ஒரு பெண்ணுக்காக கவலைப்பட்டு தன் இயல்பை தொலைத்து புதிதாய் அவதாரம் எடுத்திருந்தான் பழராமன்...
காதல் வந்தால் கோழை கூட வீரனாகி விடுவானோ...1
இங்கு இவர்கள் காதலை உணர்ந்தும் உணராமலும் பிரிந்தும் பிரியாமலும் சேர்ந்தும் சேராமலும் இருக்க அதே நேரம் அந்த மனநல மருத்துவமனையில் தன்னவளை அணைத்தவாறு அந்த மழையில் நனையாமல் தன்னவளை காரில் ஏற்றி விட்டு தானும் ஏறி அமர்ந்து காரை உயிர்ப்பித்து அதை தன்னவளுக்காக மெதுவாகவே ஓட்டிச் சென்றான் யக்ஷித்.
அவளுக்கு முழுதாக குணமாகாவிடிலும் அதற்கு மேல் அவளை அங்கு வைத்திருக்க முடியாமல் அவளை டிஸ்சார்ஜ் செய்ய சொல்லி மருத்துவரை வற்புறுத்தி ஒருவழியாய் அவர் அதற்கு சம்மதிக்கவும் அவளை தன் வீட்டிற்கே அழைத்து செல்ல முடிவு செய்தவன் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.
தன்னவளின் இந்த நிலைக்கு காரணமான யுத்கார்ஷை அவன் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உயிர்த்த நொடியே தன் அலைபேசியில் விக்ரமை அழைத்தவன் “நீ உன்மனசில என்ன தான் நினைச்சிட்டு இருக்க விக்ரம்... இதுக்கு மேலயும் என்னால வெயிட் பண்ண முடியாது... நீ முடிக்க போறியா... இல்ல நானே இறங்கட்டுமா...” என கறாராய் கேட்க...
text1'>“இல்ல பாஸ்... இதுல வீனா உங்க பெயர் வரவேண்டாம்... எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்... இன்னும் ஒரு வாரம் டைம் கொடுங்க நான் முடிச்சிட்டு போன் பண்றேன்” என கோரி போனை அணைத்தவனின் மனது கனத்து போனது...
எப்படி இருந்தாலும் அவள் அவன் காதலித்தவளாயிற்றே... அவளை ஒருவன் கொல்ல சொல்கிறான்... அதுவும் தன் கையாலேயே எனும் போது அவன் இதயம் வலித்த வலியை சொல்ல அவனிடம் வார்த்தைகளே இல்லாது போனது...
தான் இதை செய்யவில்லை என்றால் அவன் வேறு ஒருவனை வைத்து செய்து முடிப்பான் என்று அறிந்து தான் அவன் தானே முடிப்பதாய் சொல்லியிருந்தான்.. தன் மனதை கல்லாக்கி கொண்டு...
அன்று அவனின் பார்ம் ஹவுஸில் விக்ரம் பேசியதெல்லாம் அவனை நம்ப வைப்பதற்காய் அவன் பேசிய பேச்சுக்கள்... உண்மையாய் காதல் கொண்ட யாரும் எந்த நிலையிலும் தன் இணையை காயப்படுத்த முன்வரமாட்டார்கள்... விக்ரம் அவளை உண்மையாய் காதலித்தான்.. சிறுவயதிலிருந்து தனக்கு வேண்டும் என்ற ஒன்று தனக்கு கிடைக்காவிடில் அதை யாருக்கும் கிடைக்காமல் செய்யும் விக்ரம் மலர் மேல் கொண்ட காதலால் அந்த மலரை போலவே மென்மையாய் மாறிவிட்டிருந்தான்.
இப்போது அவன் காதல் கைகூடா விடிலும் அவனுக்காய் கடவுள் படைத்தவள் வரும் போது மீண்டும் அவன் மனம் காதலால் மலரும்... இந்த நல்ல உள்ளம் படைத்தவனை கடவுள் அத்தனை சீக்கிரத்தில் கைவிட மாட்டான்...
தன் காரில் சென்று கொண்டிருந்த யக்ஷித்தின் இதழ்கள் கேலியாய் வளைந்தது... அவனுக்கு விக்ரமின் திட்டத்தை பற்றி முன்பே தெரியும்... இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அவனுக்கு இசைவது போலிருந்தது அவன் தன் திட்டத்தை அறிய கூடாது எனும் ஒரே காரணத்திற்காத்தான்...
அதனால் தான் இவ்வளவு நாள் பொறுமையாய் இருந்து விட்டு இன்று அவனை தொடர்பு கொண்டது... அதுவும் தான் சொல்லும் போது அவன் அதிர்ந்தது அவன் பேச்சிலேயே வெளிப்படவும் அதற்கு மேல் தாமதிக்காமல் தன் செல்போனை எடுத்து ஒரு எண்ணை அழுத்தியவன் “வாட்ஸ்அப்ல ஒரு டீடைல்ஸ் அனுப்பி இருக்கேன்... இன்னும் ஒரு வாரத்துக்குள்ள முடிச்சிட்டு போன் பண்ணு... பணம் உன் அக்கௌன்டுக்கு வந்து சேரும்” என்றவன் அத்துடன் பேச்சு முடிந்தது போல் அணைப்பை துண்டித்து விட்டு தன்னவள் புறம் திரும்பியவன் ‘உன்ன இந்த நிலைமைக்கு ஆக்கினவன சும்மா விட மனசு வரல பேபி.. அதான் அவன் பொண்டாட்டிக்கும் இதே மாதிரி... இல்ல.. இல்ல... இத விட மோசமா தண்டனை கொடுப்பேன்... அதுவும் கூடிய சீக்கிரம்...’ என எண்ணியவனுக்கு தெரியவில்லை தன்னவள் ஒரு பெண்ணுக்கு அதுவும் அவளின் உயிர்த்தோழிக்கு செய்த தீங்கு...
அது தெரிய வரும் போது அவளை மன்னித்து ஏற்பானா.... அல்லது தன் காலாலே எட்டி உதைப்பானா...
வானில் வெளிச்சத்தை பூப் போல தூவிக் கொண்டிருந்தது மின்னல்.. அதற்கு பின்னணி இசையாய் இடி இடித்துக் கொண்டிருக்கும் அந்த மழை வேளையில் மழையில் நனைந்தபடி தன் அபார்ட்மென்டினுள் நுழைந்து கொண்டிருக்கும் வின்னியை சற்று தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தான் பழராமன்...
அவள் அருகில் செல்லத்தான் நினைத்தான்... ஆனால் அதற்கு அவன் மனம் இடமளிக்கவில்லை... அவன் அவள் மேல் கொண்ட காதலை உணர்ந்து கொண்டாலும் அவளை நெருங்கி செல்லுமளவு தனக்கு தகுதியுமில்லை உரிமையுமில்லை என்றே அவன் நினைத்தான்.
ஏனோ அவளருகில் தன்னை நிலைநிறுத்திப் பார்பதற்கு அவன் மனம் ஒப்பவில்லை... காதலில் தகுதி தராதரம் பார்ப்பதில்லை என்பதை அவன் உணரவில்லையோ என்னவோ... அதனாலேயே அவளை தள்ளி நின்று சிறிது நேரம் ரசித்துப் பார்த்தவன் அவள் அபார்ட்மென்டினுள் நுழைந்ததும் தன் வண்டியை கிளப்பிக் கொண்டு தான் தங்கும் அறையை நோக்கி சென்றான்.
அவனது வண்டி கிளம்பிய மறுநொடி வெளியில் வந்த வின்னி அவன் வண்டி செல்லும் திசையையே கண்களில் காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தான் ஆட்டோவில் ஏறியதும் அவன் தன்னை பின் தொடர்வான் என்பதை அவள் ஏற்கனவே அறிந்து தான் இருந்தாள். அதுவும் ஒரே ஒரு நொடி அவன் கண்களில் தனக்காய் தோன்றிய காதலை கண்டபின் தான் அவள் அவனை தழுவியது...
அதன் பின்னும் அவனிடமிருந்து விலக மனமில்லாமல் இந்த நொடி இப்படியே நீளாத என பேராவல் கொண்டு தான் நின்றாள்...
ஆனால் அதற்கு மேலும் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் தான் அவனிடமிருந்து விலகி அவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்காத்தான் அவனிடம் அவள் அப்படியெல்லாம் பேசியது..
சிறிது நேரம் அவன் சென்ற திசையையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தவள் அதற்கு மேல் மழையில் நனைய முடியாமல் உள்ளே ஓடிச்சென்று தான் பயன்படுத்தும் அறைக்கதவை திறந்தவள் குளியலறைக்குள் நுழைந்து உடலை சுத்தப்படுத்திக் கொண்டு வேறு உடைக்கு மாறியவள் மெத்தையில் பொத்தென விழுந்து புரள ஆரம்பித்தாள்...
காதல் வந்தால் கூடவே கிறுக்கு தனமும் வந்துவிடும் போலவே... எப்போதும் கட்டிலில் விழுந்த மறுநொடி உறக்கத்தை தழுவும் வின்னி அன்று உறக்கம் வாராமல் தவிக்க துவங்கினாள்.
அதே நிலையில் தான் அவள் உள்ளம் கவர் கள்வனும் இருந்தான் என்பதை அவள் அறிய வாய்ப்பில்லை.. என்றாலும் அவனுக்கு முன்பே அவனின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளும் வின்னிக்கு இது ஒன்றும் பெரிய விடமில்லை என்பதும் உண்மை தான்
தான் நண்பனுடன் தங்கியிருக்கும் அறைக்கு வந்த வின்னியின் ராம் ஒரு குளியல் போட்டு இரவுடையை அணிந்தவன் மெத்தையை தரையில் இழுத்துப் போட்டுக் கொண்டு விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.
அவனின் மனமோ நிலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது.. தான் செய்வது சரியா... இல்லையா என ஒரு முடிவுக்கு அவனால் வரமுடியாவிட்டாலும் மனதுக்குள் தன்னை அறியாமல் நுழைந்து விட்ட அவளை அவனால் மறக்கவும் முடியவில்லை.
அதனால் மெத்தையில் உருண்டு புருண்டு தூங்க முயற்சித்தவனுக்கு தூக்கம் கிட்ட கூட வராமல் ஆட்டம் காட்டவும் தலையை பிடித்துக் கொண்டு குப்புற விழுந்து தூங்க ஆரம்பித்தான்.
ஆனால் அப்போதும் தூக்கம் வராது அவளின் புன்னகை பூசிய முகமே அவன் மனதில் உலா வர இதழ் பிரித்து புன்னகைத்தவன் ‘அழகான ராட்சஸி... ரொம்ப இம்சை பண்ற... நான் நாளைக்கு ஆபீஸ் போகணும்ல... அதனால என்ன கொஞ்சம் தூங்க விடுங்க அம்மணி...’ என மனதுக்குள் அவளுடன் உரையாடியவன் தன் அருகில் மேசையின் மேல் இருந்த தன் செல்போனை எடுத்து தனக்கு மிகவும் பிடித்த பாடலை ஒலிக்க விட்டான்...
"காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே ஏங்கும் என்னை சொல்லாமல் செல்லாதே...."
‘எனக்குள்ள வந்த காதல் சரியா... பிழையான்னு கூட எனக்கு தெரியலேங்க... நானே அது புரியாம தவிச்சுக்கிட்டு கிடக்கேன்... அதுல நீங்க வேற என்னைய தூங்க விடாம இம்சை பண்றீங்களே...’
"காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை கொல்வாயோ..."
‘எப்போடா கருவாயா உன்காதல என்கிட்ட சொல்ல போற... சீக்கிரம் சொல்லிடு... உன் கண்ல எனக்கான காதல நான் பார்த்துட்டேன் ராம்... ப்ளீஸ் சீக்கிரம் என்கிட்ட சொல்லிடுங்க... இன்னும் கொஞ்ச நாள்ல நான் மறுபடியும் யூ. எஸ் போய்டுவேன்...’ என அதே நேரம் உறக்கமின்றி தவித்து கொண்டிருந்த வின்னி மனதுக்குள் தன்னவனுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.
"வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு..."
‘சின்னு நீ உன்னோட காதல சொல்லப்போற அந்த நாளுக்காக நான் ரொம்ப ஆவலா காத்திட்டு இருக்கேன்... என்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வைக்காத பேபி சீக்கிரம் சொல்லிடு...’ என குழந்தையை தொட்டிலில் போட்டு அதன் அருகில் குழந்தை போல் தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளை பார்த்து மனதுக்குள் சொல்லிக் கொண்டான் யுத்கார்ஷ்...
அது அவளுக்கு புரிந்ததோ என்னவோ அந்த உறக்க கலக்கத்திலும் கூட அவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்து அவளின் மலர் முகம் மொட்டு போல் மலர்ந்து விகசித்தது...
"விதியின் கைகளோ வானம் போன்றது புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது..."
‘என் காதல் எப்போ உனக்கு புரியும் பேபி... இன்னும் எத்தனை நாளைக்கு உன்ன இப்பிடியே பார்த்துக்கிட்டு இருக்க போறேன்னு எனக்கு தெரியல பேபி... சீக்கிரம் நீ பழைய படி மாறனும்... அந்த நாளுக்காக நான் காத்திட்டு இருக்கேன்...’ என தன் தோளில் சாய்ந்து நிம்மதியாய் உறங்கும் தன்னவளை பார்த்து மனதுக்குள் பேசியவன் மென்மையாய் அவள் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான் யக்ஷித்.
ஸ்ரேயா நன்றாக துயிலில் ஆழவும் காரை சற்று வேகமாய் செலுத்தி தன் வீட்டை அடைந்தவன் ஹாரன் அடிக்கவும் அவனது வீட்டு காவலாளி முதலாளியின் காரைப்பார்த்து அவசரமாய் வாயிற்கதவை விரிய திறந்து விட்டான்.
போர்டிகோவில் காரை மெதுவாய் நிறுத்தி விட்டு காரிலிருந்து இறங்கி மறுபக்கம் துயிலில் ஆழ்ந்திருந்த ஸ்ரேயாவை கைகளில் அள்ளியவன் வீட்டினுள் நுழைய அதற்காகவே காத்திருந்தவர் போல் அவர்கள் உள்ளே நுழையும் சமயம் சரியாய் கதவை திறந்து விட்டார் யக்ஷித்தின் அன்னை சுபத்ரா..
தனக்காக தூங்காமல் விழித்திருக்கும் தாயை பார்த்து முறைத்தவன் “எதுக்கு மாம் முழிச்சிட்டு இருக்கீங்க... நீங்க போய் தூங்க வேண்டியது தானே... உங்க கிட்ட நான் ஆல்ரெடி சொல்லியிருக்கேன் சீக்கிரம் தூங்கனும்னு...” அழுத்தத்துடன் உரைத்தாலும் அதில் அவன் தன் அன்னை மீது கொண்ட அக்கறையே வெளிப்பட அவனை பார்த்து பாசமாய் சிரித்தார் சுபத்ரா...
“நான் தூங்க கூடாதுன்னா நினைக்கிறேன்... நீ வேற உங்க மருமகள கூட்டிட்டு வாரேன்னு போய்ட்ட... அதான் தூக்கம் வராமா முழித்து இருந்தேன்... அதுவுயில்லாம நான் ஒன்னும் உனக்காக முழிச்சிட்டு இருக்கல்லப்பா... என் மருமகள பார்க்கிறதுக்கத்தான் முழிச்சிட்டு இருந்தேன்...” என கேலியாய் கூறி சிரிக்க தாயின் சிரிப்பில் தானும் சிரித்தவன் தன்னவள் சிறிது அசையவும் சட்டென தன் சிரிப்பை நிறுத்தி விட்டு...
“மாம்... பேபிக்கு எந்த ரூம் அரேஞ்ட் பண்ணியிருக்கீங்க...” என்க...
“எந்த ரூமும் ரெடி பண்ணி வைக்கல கண்ணா... ஏன் மருமக என்னோடவே இருக்கட்டும்... அதுவுயில்லாம இந்த நிலைமையில அவள தனியா தங்க வைக்கிறதும் சரியில்லையே... அதான் என்னோட தங்கிக்கட்டும் என் மருமக...” என ஸ்ரேயாவின் தலையை வருடிய படி கூற...
அதை கேட்டவனது மனது தன் தாயினை எண்ணி பெரிதும் நெகிழ்ந்து போனது... தனக்கு எப்படிப்பட்ட தாய் அமைந்திருக்கிறார் என எண்ணியவன் அவரை வாஞ்சையுடன் பார்த்து சிரித்து வைத்தான். மகனின் புன்னகைக்கான அர்த்தம் புரியா விட்டாலும் தானும் அவனை பார்த்து புன்னகைத்தவர்..
“சரிப்பா.... ரொம்ப நேரமாச்சு... நீ மருமகள ஏன் ரூமுக்கு எடுத்துட்டு போ...” என்றவர்..
“ஆமா நீங்க ரெண்டு பெரும் சாப்பிட்டீங்களா இல்லையா...” என கேட்க..
“இல்லமா...” என அசிரத்தையாய் கூறியவன் ஸ்ரேயாவை அன்னையின் அறையில் படுக்கையில் கிடத்தி விட்டு தாயை தேடிச்சென்றான்.
அவரோ சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டு மகனுக்காய் காத்திருந்தார்.
“என்ன மாம்... இங்க இருக்கீங்க... போங்க போய் தூங்குங்க..” என கறாராய் கூற...
அதை கண்டு கொள்ளாமல் “நான் அப்றோம் தூங்கிறேன்... நீ முதல்ல வயித்த காயப்போடாம சாப்பிடு...” என கண்டிப்புடன் கூற...
“மாம்... எனக்கு இப்போ பசியில்ல மாம்...” என்றவனுக்கு உண்மையிலே பசி தெரியவில்லை... காரணம் தன்னவள் தன் அருகில் இருக்கிறாள் என்பதனால் தான்...
தன்னவள் தன் அருகில் இருக்கிறாள் என்ற நிம்மதியிலோ என்னவோ அவனுக்கு அனைத்து உணர்வுகளும் மறைந்து அவளின் நினைவு மட்டுமே அவனின் மனதை நிறைத்திருந்தது..
ஆனால் அது புரியாத சுபத்ரா “அது எப்பிடி பசியில்லாம போகும்.... சாப்பிட்டா பசி தானா வந்து சேரும் பேசாம சாப்பிடு..” என்றவர் அவனுக்கு தட்டை எடுத்து வைத்து அவனுக்கு இரவுணவை பரிமாறினார்...s
முதலில் லேசாய் கொறிக்க ஆரம்பித்தவன் உணவின் ருசியிலோ அல்லது பசியின் வேகத்திலேயோ உணவை வாயில் அள்ளி திணிக்க ஆரம்பித்தவனுக்கு அப்போது தான் தெரிந்தது தன் அகோரப் பசி...
‘மாம் சொன்னது சரி தான் போல.... சாப்பிட்டா தானா பசி வரும்னு சொன்னாங்க வந்திடுச்சு...’ என எண்ணிக் கொண்டு உணவை ஒரு பிடி பிடித்தவன் சாப்பிட்டு முடிந்ததும் கைகளை கழுவிக் கொண்டு தாயின் நெற்றியில் முத்தமிட்டவன் “சரிம்மா... நீங்க போய் தூங்குங்க... குட் நைட்...” என்றவாறு அவரின் அறை வாசல் வரை வந்தவன் அங்கு துயில் கொண்டிருக்கும் தன்னவளை சிறிது நேரம் ரசித்து விட்டு தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு தூக்கம் கண்ணை சுழற்ற அப்படியே தூங்கிப் போனான்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.