All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவர்களது மகிழ்ச்சியை பார்த்து மனம் இதம் பெற அமைதியாய் புன்னகைத்து கொண்டு காரிலிருந்து இறங்கினான் யுத்கார்ஷ்
அவனது மனைவியின் மனதை ஆறுதல் படுத்தும் அந்த சிறுவர்களின் சிரிப்பொலியே இன்று அவனது மனப்பரத்தையும் குறைத்து அவனது மனதை அமைதிபடுத்தியது.
சிறுவர்களுடன் சிறுவனாய் மாறி அவர்களுடன் சிறிது நேரம் விளையாடியவன் தான் அனுப்பியிருந்த ஆடைகள் வந்து விட்டதா என கேட்டு அதை தன் கையாலேயே அவர்களிடம் கொடுத்து அவர்களது மகிழ்வை பார்த்து தானும் மகிழ்ந்தவன் தோட்டத்து பக்கம் மெல்ல நடந்து சென்றான்
நடந்து சென்றவனின் கண்களில் விழுந்தது ரோஜா செடிகள். அதை பார்த்தவனின் மனதில் மனைவியின் நினைவுகள்.
“ஆமாங்க.. நான் இதையெல்லாம் இங்க வச்சேன்... நல்லா இருக்கில்ல...” என சன்ன குரலில் கண்களில் தோன்றிய வர்ணஜாலத்துடன் கூறிய மனைவியின் அழகு அன்று அவனது கண்ணுக்கு புலப்படவில்லை. மாறாக இன்று அவளின் அழகு முகம் அவனது மனதில் மின்னி மின்னி மறைந்தது...
“என்னாச்சு எனக்கு... கலையில இருந்து அவளோட நினைவாவே இருக்கு…
"வாட் ஹப்பென்ட் டு மீ..” (what happenend to me) என தனக்குள் மூழ்கி குழம்பியவனை தெளிய வைப்பதற்காகவே அனுப்பப்பட்டான் அவன்... கண்ணன்...
"அங்கிள்... எங்க கூட வாங்களேன் ப்ளீஸ்... ப்ளீஸ்...” என அவனின் கையை பிடித்து இழுத்து கொண்டு போனர் கண்ணனும் அவனுடன் வந்த அவனின் நண்பர்களும்.
“என்ன எங்க கூட்டிட்டு போறீங்க... ம்ம்ம்... இப்போ சொல்ல போறீங்களா இல்லையா” என அவர்களுக்கு சரிசமமாய் வினவியவனை வாயில் விரல் வைத்து அடக்கியவர்கள் “ஷ்ஷ்... சத்தம் போடாதீங்க அங்கிள்... அம்மாக்கு சத்தம் போட்டா சுத்தமா பிடிக்காது” என்றவாறு பூனை போல் ஓசைபடாமல் மலரின் அறைக்கதவை திறந்த கண்ணன் உள்ளே அவளை காணாது யுத்கார்ஷையும் அறைக்குள் இழுத்து கொண்டு போனவன் மீண்டும் உள்ளே தேடத்துவங்கினான்.
அப்போதும் அவளை காணாது போகவே “அச்சோ அம்மா இன்னும் கடைக்கு போய்ட்டு வரல போல... என்ன பண்றது” என யோசித்தவன் யுத்கார்ஷை நோக்கி “அம்மா உங்கள பார்க்கனும்னு சொன்னாங்க... ஆனா இன்னும் வரல போல...” என்று மேல பேச தொடங்கியவனை வெளியிலிருந்து யாரோ அழைக்க “இதோ இங்கயே இருங்க நான் வந்திர்றேன்...” என்றவாறு ஓடியவனின் கை தட்டுபட்டு அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த புத்தகங்கள் சரிந்து கீழே விழுந்தன
அந்த சிறு அறையை நோட்டம் விட்டவன் அது மிகவும் துப்புரவாய் இருக்க அதை எண்ணி சிரித்தவன் கீழே சரிந்து கிடந்த புத்தகங்களை பார்த்து என்ன நினைத்தானோ தன் நிலையில் இருந்து கீழிறங்கி அதை எடுத்து வைக்க துவங்கியவன் அதனுடன் இருந்த டைரியை எடுத்து வைக்க அதை கையில் ஏந்திய நொடி காற்று வேகமாய் வீச ஆரம்பிக்க அந்த டைரியின் தாள்கள் காற்றில் புரட்ட பட்டு ஒரு தாளில் நிலைகுத்தி நின்றது.
அந்த தாள் மட்டுமல்ல அவனின் பார்வையும் தான்.
அதை பார்த்தவனின் கைகளிலிருந்து அந்த டைரி நழுவி கீழே விழுந்தது
மூச்சை ஆழயிழுத்து வெளியிட்டு தன்னை சமநிலை படுத்தியவன் கைகள் நடுங்க கீழே விழுந்த டைரியை எடுத்தவன் அங்கிருந்த கட்டிலில் சென்றமர்ந்து அந்த பக்கத்தை பார்த்தான்.
அந்த பக்கத்தில் மலரவளின் கைவண்ணத்தில் அழகாய் வரையபட்டிருந்தது அவனது ஓவியம்.s
அதை பார்த்தவனின் கண்களில் சிறு ஆச்சரியம். ‘எப்படி... யார் இதை வரைந்திருப்பா..’ என்றவாறு அதன் முன்பக்கம் புரட்டியவனின் கண்கள் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது அதனூடே சிறு அதிர்ச்சி, கொஞ்சமே கொஞ்சம் சந்தோசம், சிறு பரபரப்பு....
முதல் பக்கம் கொட்டை எழுத்தில் எழுதபட்டிருந்தது அவனின் மனையாட்டியின் பெயர்.
அதை பார்த்தவனின் மனதில் முதலில் தோன்றியது ‘அவள் இங்கு தான் இருக்கின்றாள்... அதுவும் பத்திரமாய்...’ என்பது தான்.
மனைவியின் டைரி என்றறிந்ததும் அவனே அறியாமல் அவனின் மனதினுள் சிறு பரபரப்பு தோன்ற கண்களில் தோன்றிய இனம்புரியா உணர்வுடன் அதை மெதுவாய்.. மிக மெதுவாய்... அதற்கு வலிக்குமோ எனும் அளவிற்கு மெதுவாய் புரட்டினான் அவன்.
இத்தனை நாளாய் அவளை பற்றி புரியாமல் இருந்தவன் இன்று அவளின் கைப்பட எழுதிய டைரியின் மூலம் அவளை பற்றி... அவளின் சோகம்... மகிழ்ச்சி... துக்கம்... கவலை... எல்லாவற்றையும் பற்றி புரிய ஆரம்பித்தான்.
சிலபக்கங்களில் சிறுவயதில் இருந்து அவளுக்கு ஏற்பட்ட கவலைகளை எல்லாம் ஏதோ அவளுக்கு தோன்றிய விதமாய் எழுதியிருந்தாள்.
அதை படித்தவனின் மனதில் இனம்புரியா கவலை... தன் மனைவி அனுபவித்த கவலையை எண்ணி அவனும் சிறிது கலங்கித்தான் போனான்.
மேலும் சிலபக்கங்களை புரட்டி புரட்டியவனின் கைகள் அவனது ஓவியம் வரையபட்டிருந்த பக்கத்தில் சிறிது நேரம் அசையாது நின்றது.
அதுவும் இத்தனை தத்ரூபமாய் அவனை வரைந்திருந்த அவனின் மனைவியை அவனுக்கு இப்போதே பார்க்க வேண்டும் போல் இருந்தது.
ஆனாலும் தன் ஆசையை அடக்கியவன் ‘அவளுக்கு எப்படி தன்னை தெரியும்... அதுவும் இது இப்போது எழுதபட்டது போல் தெரியவில்லையே... சிலவருடங்களுக்கு முன்பு எழுதபட்டிருக்கின்றதே...'
‘அப்போதே அவளுக்கு என்னை தெரியுமா... எப்படி தெரியும்...’ என யோசித்தவனுக்கு விடையளிப்பது போல் அவனை பார்த்தது முதல் இப்போது வரை அவனின் மேல் அவள் கொண்ட காதலை உணர்வுபூர்வமாய் எழுதியிருந்தாள் அவள்...
அதுவும் அவனுடன் கற்பனையில் வாழ்ந்த காட்சிகளை அப்படியே அவள் படமாய் வரைந்திருந்ததை பார்த்தவனுக்கு மனைவியை அப்படியே கட்டி அணைத்து கொள்ள வேண்டும் போல் கைகள் பரபரத்தது.
ஆனால் இப்போதும் அவனுக்கு அவள் மேல் காதல் தோன்றவில்லை. மாறாக தன் மனைவியால் இந்தளவு காதலிக்கபடுகிறோம் என்ற எண்ணம் தான் இருந்தது.
காதலிப்பதை விட தன் இணையால் காதலிக்கப்டுவதும் சுகம் தான் போல... அவனும் அந்த சுகத்தில் தான் மூழ்கி இருந்தான்.
அதை முழுவதும் படித்தவனுக்கு மனைவியை காண வேண்டும் போல் உடலும் மனமும் பரபரக்க அந்த டைரியையும் கையோடு எடுத்து கொண்டு அவளை தேடி வெளியில் சென்றான்...
அந்தோ பரிதாபம் அவனின் மனைவியும் அவனின் வாரிசும் அங்கு.... அந்த மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்......
வெளியில் வந்தவன் மனைவி எங்கிருப்பாள் என கண்களால் துலாவ அவளோ அவனின் கண்களுக்கு தட்டுபட்டலில்லை...
எத்தனை மணி நேரங்கள் அங்கேயே அவளை தேடினானோ... அப்படியும் அவள் அவனின் கண்ணில் படாமல் போக... பெரிதும் தவித்தவனை அழைத்தது அவனது செல்போன்.style='font-size:14.0pt;mso-bidi-font-family:Latha;color:black;mso-themecolor:
அதை எடுத்தவன் மருத்தமனையில் இருந்து அழைப்பு வரவும் “என்னாச்சு அங்கிள் எதாவது இம்ப்ருவ்மென்ட் தெரிஞ்சதா...” என அவன் பேசி முடிக்கும் முன்பே “சாரி த்ருவா... அந்த....” என்று அவர் முடிக்கும் முன்பே தன் செல்போனை தூக்கி வீசியிருந்தான் அவன்....
‘அந்த பெண் இறந்து விட்டாள் அதுவும் என்னால்... அந்த குழந்தை.... அவளது குடும்பத்தினருக்கு எப்படி இதை தெரிவிப்பது... எல்லாம் அவனால்...அவனை...’ என அந்த லாரிகாரனை நினைத்து பல்லை கடித்தவன் அவனது மரணத்திற்கான நாளை குறித்திருந்தான்...
சதாசிவம் அழைத்ததிலிருந்து அந்த பெண்ணையும் அவள் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் நினைத்து கவலையில் ஆழ்ந்தவன் காப்பகத்திலிருந்து வெளியேறி வேகமாய் மருத்துவமனை நோக்கி விரைந்தான்.
மனைவியை காண வேண்டும் என்ற தவிப்பு உள்ளுக்குள் தீயாய் தகித்து கொண்டிருந்தது... அதுவும் அவளின் காதலை உணர்ந்ததும் அவளை ஒரே ஒரு தடவை காண வேண்டும் போல் மனம் பரபரப்பத்தாலும் அதை அடக்கி கொண்டான்...
‘மனைவியை எப்போது வேண்டுமானாலும் அவனால் பார்க்க முடியும்... ஆனால் அந்த முகம் தெரியாத பெண்... அவளது உயிர்... அவளது குழந்தை... அது உயிரோடு இருக்கிறதோ இல்லையோ...’ அதற்கு மேல் அவனால் அதை யோசிக்க கூட முடியவில்லை...
அப்படி மட்டும் அந்த குழந்தைக்கு ஏதாவது ஆகிருந்தால் அதற்கு காரணமானவர்களை அவன் ஒரு போதும் உயிருடன் விட மாட்டான்.
அந்த லாரிகாரனின் வருகைக்கு பின் ஒரு குள்ள நரியின் சதி இருக்கின்றது என்பதை அவன் எப்போதோ அறிந்துவிட்டிருந்தான்... அது யாரென்றும் அவனுக்கு தெரிந்துவிட்டிருந்தது தான்...
ஆனால் அவனுக்கு இப்போது அந்த அவன் முக்கியமில்லை... மனைவியும் தான்... இப்போது அவனுக்கு முக்கியமாகபட்டதெல்லாம் அந்த முகம் தெரியாத பெண்ணும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் தான்.
அவர்களுக்கொன்றென்றால் அந்த குற்ற உணர்ச்சி அவனை விட்டு என்றும் போகாது... அதுவே அவனை அணுஅணுவாய் கொன்று விடும்...
அதனாலேயே தன் மனைவியின் நினைவு நெஞ்சு முழுவதும் இருந்து அதை வெகு சிரமப்பட்டு அடக்கி கொண்டு மருத்துவமனை வாசலில் காரை நிறுத்தியவன் அவசரமாய் உள்ளே நுழைந்து அந்த ஹோஸ்பிடலின் டீன் சதாசிவத்தின் அறைக்குள் நுழைந்தவன் அங்கு அவரில்லாது போக தலையை அழுந்த கோதி தன்னை அமைதிபடுத்தி கொண்டு அவரை காண விரைந்தான்.
அவரோ இவனுக்கு அழைத்தழைத்து ஓய்ந்து போய் சிகிச்சைகான ஏற்பாட்டை ஆரம்பித்திருந்தார்.
சதாசிவம் எங்கு இருக்கிறார் என தெரியாமல் போன் பண்ணலாம் என எண்ணி கொண்டு அலைபேசியை தேட அப்போது தான் அவனுக்கு நினைவு வந்தது தான் செய்த முட்டாள் தனமான காரியம்...
காற்றில் கையை முஷ்டியாக்கி குத்தியவன் ‘அங்கிள் என்ன சொல்ல வந்தார்ன்னு கேக்காம போனை தூக்கி வீசிட்டேன் போல...’ என தலையை அழுந்த தேய்த்தவன் அந்த பெண்ணையாவது பார்க்கலாம் என ஐசியு அறை நோக்கி சென்றான்..
அதேநேரம் அந்த அறைக்குள் இருந்து வெளியே வந்த சதாசிவம் இவன் வருகையை கண்டு “என்னாச்சு த்ருவா... எத்தன தடவ போன் பண்றது... போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது... என்னாச்சு... எனி ப்ரோப்லம்...”
“நத்திங் அங்கிள்... அந்த... அந்த பொண்ணு...” என்று தயக்கத்துடன் இழுக்க...
“இப்போவும் என்னால உறுதியா ஒன்னும் சொல்ல முடியாது த்ருவா... பட் குழந்தை...” என அவர் முழுதாய் முடிக்கும் முன்பே “என்னாச்சு அங்கிள்... குழந்தைக்கு ஒன்னும்..ஒன்னும் ஆகலையே” என பதற்றத்துடன் கேட்க....
“ஐயம் சாரி டு சே தட் (i am sorry to say that) குழந்தைய காப்பாத்த முடில... இட்ஸ் இம்போஸ்ஸிபில் (its impossible)... நான் தான் ஆல்ரெடி சொன்னேனே... ஒன் ஓர் டூ அவர் (one or two hour) தான் குழந்தை உயிரோட இருக்கும்னு...” என வேதனையுடன் கூறியவர் “நீ அந்த பொண்ண பார்க்கனும்னு சொன்னியே த்ருவா... போய் பார்க்கனும்னா பார்த்திட்டு வா... இன்னும் கொஞ்ச நேரத்துல ஆப்ரேசன் ஸ்டார்ட் பண்ணனும்...” என்றவாறு அங்கிருந்து அகன்றார்..
குழந்தை இறந்து விட்டது என்பதை தவிர அவனின் காதில் எதுவும் விழவில்லை... சிறிது நேரம் அதிர்ச்சியில் உடல் இறுக நின்றவனின் மனதில் மனைவின் மலர் முகம் தோன்றி ஏதோ ஒரு தைரியத்தை வரவழைக்க தன்னுடன் எடுத்து வந்திருந்த அந்த டைரியை கைகள் நடுங்க எடுத்தவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
மனைவியின் பெயர் எழுதபட்டிருந்த பக்கத்தை கைகளால் வருடியவன் ‘அழகி... எனக்கென்னமோ ஒரு மாதிரி பயமா... என்ன சொல்றது... எப்பிடி சொல்றதுன்னு தெரியல... என்னவோ மைன்ட் டிஸ்டர்பன்ஸாவே இருக்கு... நீ... நீ என் பக்கத்துல இருந்தா என்னால... என்னவேனா பண்ண முடியும்... நீ... எப்பவும் என்கூடவே இருப்பியா சுகர் ப்ளம்...’ என மனதுக்குள் தன்னை அறியாது மனைவியுடன் உரையாடியவன் தன் நெஞ்சை மென்மையாய் நீவி விட்டு கொண்டான்..
"ஏனோ இப்போது மனதில் புது தெம்பு வந்தது போல் இருந்தது அவனுக்கு... தன் மனைவியின் நினைவு தன்னை அமைதிபடுத்தியதை ஒரு வித வியப்புடன் உணர்ந்தவன் தனக்குள் சிரித்து கொண்டான்.
இது எதுவுமே அவனின் பழக்கம் கிடையாது... சிறுவயதில் இருந்தே யாருடனும் அவன் நெருங்கி பழகியதில்லை.. அம்மாவிடம் மட்டும் சிறிது நெருக்கம் காட்டுவானே தவிர அவரிடமும் இதுவரை தன் மனதில் இருந்ததை அவன் பகிர்ந்தது கிடையாது..
முதல் முறையாய் மனைவியிடம் அதுவும் அவனிடமுமல்ல அவளின் நினைவுகளிடம் தன் மனப்பாரத்தை இறக்கி வைத்திருக்கின்றான் அவன்...
இத்தனை நாளாய் தான் வெறுத்து ஒதுக்கிய மனைவி அவள் என்பதை அவன் அந்த கணம் மறந்திருந்தான். அவன் நினைவில் இருந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான்...தன் ஷுகர் ப்ளம் தன் அருகிலேயே தான் இருக்கிறாள்... அவள் எப்போதும் தன்னுடனே இருந்தால் என்னால் எதை வேண்டுமானாலும் தாங்கி கொள்ள முடியும் என்பது மட்டும்தான்.
ஆனால் இப்போதும் அவன் மனைவியின் மேல் அவனுக்கு காதல் வரவில்லை... ஒருவேளை வந்திருந்தாலும் அதை அறிய முடியாமல் தவிக்கிறானோ.....
மனைவியின் சுகமான நினைவுடன் ஐசியு அறைக்குள் அமைதியாய் நுழைந்தவன் ஒரு முறை கண்களை மூடி மனைவியின் பிம்பத்தை கண்களில் கொண்டு வந்து மனதை ஆசுவாசப்படுத்தியவன் தலையை அழுந்த கோதி கொண்டான்.. s
இருந்தும் மனதின் ஏதோ ஒரு மூலையில் இனம்புரியா தவிப்போன்று அடங்காது இருக்கவே ஆழமூச்செடுத்து வெளியிட்டவாறு அந்த பெண்ணின் அருகில் சென்று அவளை பார்த்த கணம் உடல் தூக்கிவாரி போட “நோஓஓஓஓஒ” என அலறிக்கொண்டு ஓரடி பின்னால் நகர்ந்தான்.
அந்த பெண்.... இத்தனை நேரமாய் முகம் தெரியாமல் யாரோ ஒரு பெண் என அவன் எண்ணி கொண்டிருந்த அந்த மங்கலான உருவம் இப்போது மனைவியின் முகத்தை அதில் வரைய யாரோ கன்னத்தில் பளாரென அறைந்தது போல் துடிதுடித்து போனான் யுத்கார்ஷ்
இத்தனை நேரமாய் மனைவியை மனதினுள் எண்ணி அமைதியடைந்திருந்த மனம் இப்போது அந்த மனைவியே உயிருக்கு போராடி கொண்டிருக்கவும் செய்வதறியாது தவித்து போனது..
அன்று அவனது காதலி இதேபோல் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது வந்த துடிப்பு ஒரு விதமென்றால் இன்று அவனின் மனைவி உயிருக்காய் போராடி கொண்டிருப்பதை பார்த்து வந்த துடிப்பு வேறுவிதம்....
அவள் வெறும் காதலி.... ஆனால் இவள் அவனின் உயிருடன் கலந்துவிட்டவள்... அவன் யாரென்றே தெரியாமலேயே அவன் மீது உயிரை வைத்திருந்தவள்...
அவன் எந்தளவு துன்புறுத்தியும் அதை எல்லாம் தனக்குள் போட்டு பூட்டி கொண்டு அவனின் ஒரு பார்வைக்காக நாள்தோறும் தவமிருந்தவள்...
அப்படிப்பட்ட அவள் இன்று அவனால் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றாள்...s
அன்று அவனின் மைலுவும் அவனால் தான் உயிருக்கு போராடி கொண்டிருந்தாள்... இன்று அவனது மனைவி... அவனை அறியாமல் அவன் ஆழ்மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த அவனின் அழகியும் அவனால் தான் உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றாள்.
அன்று அவளை வார்த்தையால் கொன்றான்... இன்று இவளை கரத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று கொண்டிருக்கின்றான்..
அன்று அவன் வார்த்தையால் கொன்றவள் இப்போது உயிருடன் இல்லை.. இன்று இவன் கரத்தால் கொன்றவள் கொஞ்சம் கொஞ்சமாய் காலனிடம் சென்று கொண்டிருக்கின்றாள்.
கைகள் நடுங்க கண்களில் கண்ணீரும் அதிர்ச்சியும் ஒரேசேர போட்டி போட்டு கொண்டு மின்ன கால்கள் நடுங்க அவளருகில் சென்றவன் உடல் முழுவதும் ஏகப்பட்ட வயர்கள் சூழ கண்களை மூடி சுயநினைவின்றி உயிருக்கு போராடி கொண்டிருந்த தன் மனைவியை பார்த்து உறைந்து போனான்...
பிரம்மை பிடித்த மனம் முழுவதும் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வலம்வந்து போயின...
எங்க தன் மனைவி தன்னை விட்டு போய் விடுவாளோ எனும் இனம்புரியா பயம் சூழ்ந்து கொள்ள தட்டுதடுமாறி எழுந்தவன் நெஞ்சு படபடக்க அவளருகில் சென்று இரத்தம் ஏறி கொண்டிருந்த அவளின் கைகளை மென்மையாய் பற்றியவன் “சிக்கி... நீ...நீ...என்ன...விட்டிட்டு போக....போக மாட்டேன்னு இப்போ... இப்போ தானே... சொன்ன...” என முழுதாக முடிக்க முடியாமல் அவனின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் துளி அவளின் இதயத்தில் விழுந்ததோ....
அந்த உயிர் போகும் கட்டத்திலும் தன்னவனின் வருகையை உணர்ந்தது போல் அவளது கண்ணிமைகள் மெதுவாய் அசைந்தது...
அதை பார்த்தவன் இன்னும் அழுத்தமாய் அவளின் கைகளை பற்ற அவனது தொடுகையை உணர்ந்தோ என்னவோ அவளது மூடிய கண்களின் கருமணிகள் சிறிது நேரம் அலைபாய்ந்து பின் அமைதியானது...
அவளது அசைவற்ற கண்களை வெறித்து பார்த்தவன் அவளின் கை மேல் வைத்திருந்த தன் நடுங்கும் கையை பயத்துடன் உறுவிக் கொண்டான்...
ஆனாலும் எங்கே தான் கையை எடுத்து கொண்டதும் அவள் தன்னை விட்டு ஒரேயடியாய் போய்விடுவாளோ எனும் பயம் மனதை கவ்வி கொள்ள அவளருகில் சென்றவன் மீண்டும் அவளது மெல்லிய கைகளை மென்மையாய் பற்றி கொண்டு “அழகி.... பேபி...” என என்ன சொல்வதென்று தெரியாமல் அவனின் வாரத்தைகள் திணறலாய் வெளி வந்தது...
அதையெல்லாம் கண்டுகொள்ள கூடிய மனநிலையில் இல்லாதவன் அவளது கைகளை மென்மையாய் வருடி “உன்னோட இந்த நிலைமைக்கு நான்தான் காரணம்ல சிக்கி..”
“நான் உன்ன ரொம்ப.... ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல சிக்கி... அதனால நீ என்ன விட்டு போய்டுவியா பேபி... ஆனா நான்... உன்ன எங்கயும் போக விடமாட்டேனடி... நீ... நீ... எப்பவும் என்கூடவே தான் இருக்கனும்... நானும்... நானும் உன்கூட மட்டும் தான் இருப்பேன்... வாழ்க்கை முழுதுக்கும்... நீயும் நானும் மட்டும் தான் ஒன்னா இருக்கணும்... அதுக்கிடையில யார் வந்தாலும்... அந்த கடவுளே வந்தாலும் உன்ன நான் யார் கூடவும் அனுப்பமாட்டேன்டி” என தன்னில்லை மறந்து பிதற்றி கொண்டிருந்தான் யுத்கார்ஷ்....
அன்று அவனின் மைலு இறந்த போது கூட அவன் இந்தளவுக்கு துடித்திருக்கவில்லை...
மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன்... ஏகப்பட்ட தொழில்களுக்கு சொந்தக்காரன்... பணத்திலே பிறந்து வளர்ந்த கோடீஸ்வர குடும்பத்தின் ஒற்றை வாரிசு... ஆயிரத்தை ஆயிரம் கோடியாக மாற்ற கூடிய திறமை மிக்கவன்...
பல லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி... இன்று தன்னிலையிலிருந்து கீழிறங்கி தன் மனைவிக்காக... தன் மனைவியின் காதலை உணர்ந்து கொண்ட கணவனாக அவளை காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தான் அவன்...
ஆனால் அவனின் குரல் கடவுளை எட்டவில்லையோ....
ஆனால் அவளின் செவிகளை எட்டியிருந்தது. தன்னவனின் குரல் காதில் கேட்ட மறுநொடி
“ஒரு நாள் உன்கூட படுத்ததும் பொண்டாட்டி ஆகிட்டோம்னு கனவு கண்டிட்டியா....”
“உனக்கொன்னு தெரியுமாடி.... என்கூட படுக்கவாறவங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...”
“உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் அதுல நான் வேஸ்ட் ஆக்கின பணத்துக்காக உன்ன யூஸ் பண்ணிக்கிட்டேன்...
“அன்னைக்கு உனக்கும் எனக்கும் நடந்த செக்ஸ் கூட அப்படித்தான் நான் பணம் செலவு பண்ணேன்... நீ எனக்கு உன்னோட உடம்ப கொடுத்த தட்ஸ் இட்...” என்ற அரைகுறை வார்த்தைகள் அவனின் குரலுடன் சேர்ந்து மாறி மாறி ஒலித்து தன்னிலை அற்ற நிலையிலும் அவளின் உடலை கூச செய்ய “ம்ஹா...ம்ஹ்ஹா..மம்ஹா” மூச்சு விடவும் சிரமப்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வடிய அவளின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டு பிரிந்து கொண்டிருந்தது...
முதலில் எதுவும் அவனின் காதை எட்டவேயில்லை... அவன் தான் தன்னிலையிலேயே இல்லையே... பின்பு தான் தன் கைபிடியில் இருந்த மனைவியின் கைகள் ஜில்லிட்டு இருப்பதை உணர்ந்தவன் நிலைமையின் தீவிரம் புரிந்து “அங்கிள்....” என கத்தியவனின் காட்டு கத்தலில் அந்த பேதையின் மென்மையான இதயம் அதிர்ந்து ஓய்ந்தது..
த்ருவா போய் வெகுநேராமாகியும் வாராது போகவே ஏனைய மருத்துவர்கள் புடை சூழ அந்த அறைக்குள் நுழைந்த சதாசிவம் அவனின் கத்தலில் முதலில் அதிர்ந்து பின் தெளிந்தவர் அவளின் நிலைகண்டு அவசரமாய் அவளருகில் விரைந்தார்.
“அங்கிள்... என்னோட... அழகிய... அங்கிள்...ப்ளீஸ் எப்பிடியாவது என்னோட அழகிய காப்பாத்துங்க... எவ்ளோ.... எவ்ளோ செலவானாலும் பாராவயில்ல ப்ளீஸ் அங்கிள்...” என சிறுபிள்ளை போல் பிதற்றிய அந்த தொழிலதிபனை புரியாது பார்த்தாலும் பெண்ணவளின் நிலை உணர்ந்து “சீக்கிரம் டிபிப்ரிலேட்டர் (defibrillator) கொடுங்க” என்க...
அவரருகில் நின்ற நர்ஸ் அவசரமாய் அதில் ஜெல் ஒன்றை தடவி கொடுக்க அது இரண்டையும் தடவியவாறு அவளின் நெஞ்சில் வைக்க...
“ஆஹ்ஹஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா...” என்ற அணுகலுடன் அவள் உடல் தூக்கிவாரி போட்டது...
மீண்டும் நர்ஸ் ஜெல் தடவ அதை எடுத்து அவளின் நெஞ்சில் வைக்க......
“ஆஆஹ்ஹ்ஹாஹ்ஹாஆஆஹ்ஹாஆஅ.....” என்றவாறு உடல் தூக்கி போடவும் அதை பார்த்து கொண்டிருந்த யுத்கார்ஷ் துடிதுடித்து போய்விட்டான்...
ஒவ்வொரு முறையும் தான் அவளை அவதூறாய் பேசும்போதும் அவள் இப்படித்தான் துடிதுடித்து போயிருப்பாளோ என எண்ணியவனின் இதயத்தில் சுருக்..சுருக்கென ஒரு வித வலி பரவியது...
அதை தாங்க முடியாமல் தவித்தவனுக்கு மனைவியின் இந்த நிலை... அதுவும் அதை தாங்கி கொண்டிருக்கும் மனைவியின் திடம் எல்லாம் கண்முன்னால் தோன்ற அசைவற்று போனான் அந்த இளம் தொழிலதிபன்...
ஒவ்வொரு முறையும் தொழிலில் வெற்றி கொடி நட்டுபவன் முதன்முறையாய் வாழ்க்கையில் தோற்று போனான்....
அவனில் முதல் காதல்... அதுவும் அத்தனை வருடமாய் காதல் திருமணம் என எதிலும் நம்பிக்கை இல்லாது சுற்றி திரிந்தவனை காதல் கொள்ள செய்த அவனின் மைலு இறந்த போது கூட அவனுக்கு இந்தளவு உயிர் போகும் வலி ஏற்படவில்லை....
ஆனால் இவள் அவனின் வேண்டாத மனைவி... அவள் அருகில் வந்தாலே அருவருப்பில் உதட்ட சுழிப்பவன்.... அவளுடன் வாழ்ந்த வாழ்க்கையையே ஒரு வேசியுடன் வாழ்ந்ததாய் கூறுமளவு அவளை வெறுப்பவன்...
அப்படிபட்டவன் இன்று அவள் துடிப்பதை பார்த்து தானும் துடித்து போனான்...
அவளின் அந்த வலியை தன்னால் போக்கமுடியவில்லையே என தன்னையே நிந்தித்து கொண்டிருக்கின்றான்..
அவளின் இந்த நிலைக்கு காரணமான தன்னை நினைத்து தனக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் மடிந்து கொண்டிருக்கின்றான்....
இது தான் உண்மையான காதலோ? இதை அவன் உணர்ந்தானா... அல்ல இன்னும் உணராமலே இருக்கின்றானா?
பிழைப்பாளா மாட்டாளா என தெரியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவன் மனைவி உயிர் பிழைத்ததை எண்ணி ஆனந்தத்தில் சிரிப்பதா... இல்லை அவள் பட்ட துன்பத்தை எண்ணி கண்ணீர் வடிப்பதா என புரியாமல் அசைவற்று வைத்த கண் வாங்காமல் மனைவியையே பார்த்து கொண்டிருந்தான் யுத்கார்ஷ்...
அவனின் மனையாட்டியோ அவன் ஒருவன் நிற்கின்றான் என்பதையே உணராமல் மெதுவாய் கண்களை சுழற்றி தான் இருக்குமிடத்தை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்.
நினைவும் மயக்கமும் மாறி மாறி வர அந்த இரண்டுக்கும் இடையில் போராடி களைத்து போய் இப்போது தான் கண்விழித்திருந்தாள் அவள்...
களைப்பில் மயக்கம் வந்தாலும் அதை எல்லாம் திடமாய் எதிர்த்து முழுவதுமாய் கண்விழித்தவள் அப்போது உணர்ந்தாள்... தன் வயிற்றின் சுமை குறைந்திருப்பதை..
அச்சமும் சந்தோசமும் திகைப்பும் என பல கலவையான உணர்வுகள் போட்டி போட அங்கிருந்த மருத்துவரை பார்த்தவள் “எ... என்...குழந்தை... என்.. எங்க....” என பேச முடியாமல் மெல்லிய குரலில் சோர்வாய் கேட்க...
அதை கேட்டு இடிந்து போனான் யுத்கார்ஷ்...
இத்தனை நேரமாய் மனைவியை பற்றி மட்டுமே எண்ணி கொண்டிருந்தவனுக்கு குழந்தையின் சுத்தமாய் இல்லை...
இப்போது மனைவி குழந்தை எங்கே என தேடவும் தான் அவனுக்கே குழந்தையின் நினைவு வந்தது... கூடவே குழந்தையின் மரணமும்...
அதை எண்ணி திகைத்தவனுக்கு மனைவி அதை எவ்வாறு எடுத்து கொள்வாள் என்று தான் புரியவில்லை..
மனைவியின் முகத்தை வைத்தே அவள் எந்தளவு குழந்தையை எதிர்பார்க்கின்றாள் என்பதை கண்டுகொண்டவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது...
தன்னை சமன் படுத்தியவன் மனைவியின் அருகில் சென்று மெதுவாய் அவளது கையை பற்ற அவனது தொடுகையை கூட உணராமல் தன் முன்னால் நின்றிருந்த அந்த மருத்துவரையே ஆவலுன் ஏறிட்டு கொண்டிருந்தாள் அவனின் மனைவி..
தன் கையிலிருந்த மனைவியின் கரத்தை அதிர்ச்சியுடன் நோக்கினான் யுத்கார்ஷ்...
‘தன் தொடுகையை தன்னவள் உணரவில்லையா....’ என்ற கேள்வி அவன் நெஞ்சை ஒரு உலுக்கு உலுக்கியது...
இதுவே சில மாதங்களுக்கு முன்பென்றால் அவனின் சிறு தொடுகையிலே உருகி குழைந்து போயிருப்பாள் அவள்....
ஆனால் இன்று அவன் தொடுகையை விட அவனின் வார்த்தையின் வீரியம் தான் அவளின் மனதில் ஆழப்பதிந்து அந்த வார்த்தையினால் உண்டான அருவருப்பு அவனின் இந்த தொடுகையை உணரமுடியாமல் ஆக்கிவிட்டிருந்தது....
தன்னையே ஆவலுடன் பார்த்துகொண்டிருந்த மலரை பார்த்த சதாசிவத்திற்கு மனம் பரிதவித்தது... இத்தனை நேரத்தில் அவரிடத்தில் யுத்கார்ஷ் அனைத்தையும் கூறியிருந்தான்...
அதனாலேயே அவர் மலரை தன் மகளை போலவே பார்க்க ஆரம்பித்திருந்தார்.
இப்போது தன் மகள் போன்றவளிடம் அந்த குழந்தை உயிருடன் இல்லை என்ற விஷயத்தை கூறமுடியாமல் அவர் யுத்கார்ஷை பார்க்க அவனோ தன் தொடுகையை கூட உணரமுடியாமல் இருக்கும் மனைவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தோ...அல்ல மலரின் தவிப்பு புரிந்தோ அவளின் தலையை பாசத்துடன் வருடியவர் “நீ இப்போது தைரியமாக இருக்க வேண்டும்மா..” என்க...
இப்போது திகைத்து போவது அவளின் முறையாயிற்று...
‘தைரியமா...இத்தனை நேரமாய் எனக்குள் இருந்த அந்த தைரியம் இப்போது மொத்தமாய் என்னை விட்டு போய்விட்டதே... பின்னே நான் எப்படி தைரியமாய் இருப்பது....’
‘என் வாழ்வின் ஆதாரமாய் எனக்குள் உயிர்த்த என் ஜீவன் என்னை விட்டு போய்விட்டதே... இந்த பாவப்பட்ட தாயின் வயிற்றுக்குள் இருக்க அது விரும்பவில்லையோ...’
‘ஆமாம் அப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த வேசியின் வயிற்றில் இருக்க அது விரும்பவில்லை போல...’ என தனக்குள் எண்ணி கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோட விட்டத்தை வெறிக்க தொடங்கினாள் அவள்...
ஆனாலும் அவளால் அதுவும் முடியாமல் போய்விட்டிருந்தது... தன் மகவை சுமந்த வயிற்றை தன் கைகளால் தடவியவளின் கைகள் சிலிர்த்து போனது....
இதே கையால் தானே தன் மகவின் அசைவை உணர்ந்து அதை வருடிக்கொடுத்து தான் ஆறுதல் அடைந்தது...
ஆனால் இப்போது தன் மகவு தன்னுடன் இல்லையே... அன்று நீ உருவாக காரணமானவர் என்னை விட்டு சென்றார்... இன்று நீ என்னை விட்டு சென்றுவிட்டாய்... என கழிவிரக்கத்தில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பொழிய தவித்து போனவள் ஒன்று தோன்ற, “டாக்டர்... எ..என்... குழந்தையை...நா.. நான்... ஒரு தடவை.... ஒரே ஒரு முறை பார்க்க வேண்டுமே... டாக்டர்.... டாக்டர்... ஒரே.. ஒரு தடவை....” என்று பரிதவித்தாள்...
“வேண்டாம்மா... பார்த்தாள் உன்னால் உன்னை கட்டுபடுத்தி கொள்ள முடியாது...” என்க...
அதையெல்லாம் கேட்கும் மனநிலையிலெல்லாம் அவள் இல்லை... இப்பொது அவளது மகவை அவள் பார்த்தே ஆக வேண்டும்... இப்போது பார்க்காவிடில் கடைசிவரை அவளால் பார்க்கமுடியாமலே போய்விடுமே...
“இல்லை டாக்டர்.... என... எனக்கு ஒன்றும் ஆகாது... நான்... நான் என் குழந்தையை ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும் டாக்டர்.... தயவு செய்து என் குழந்தையை என் கண்ணில் காட்டுங்கள் டாக்டர்... இல்லாவிட்டால் என் குழந்தையை என்னால் கடைசிவரை பார்க்கமுடியமலே போய்விடும்.... டாக்டர்...” என தன் இயல்பையும் மீறி உச்சஸ்தானியில் குரல் உயர்த்தி கத்த...
“த்ருவா... நீயாவது சொல்...” என அவர் அவனையும் இடையில் இழுத்து விட...
அவனின் தொடுகை மட்டுமல்ல அவனின் பெயர் கூட அவளை அசைக்கவில்லை...
அவர் கூறுவது காதிலேயே விழாதவளாய் “தயவு செய்து... ஒரே ஒரு முறை டாக்டர்... அதன் பின் நான்... நான் கேட்க மாட்டேன்... டாக்டர்.... என குழந்தையை ஒரே ஒரு தடவை என் கண்ணில் காட்டுங்கள் டாக்டர்....” என வீரிட...
அவளின் தாய் மனதின் தவிப்புணர்ந்து அந்த அறையில் இருந்த நர்ஸின் கண்களும் கலங்கிப்போனது..
அது நேரம் வரை மனைவி தன்னை உணர்ந்து கொள்ளவில்லையே என தவித்து கொண்டிருந்தவன் இப்போது மனைவியின் தவிப்புணர்ந்து அவளது கரத்தை அழுத்தியவன் அப்போதும் அவள் அமைதியடையாது போகவே “அழகி போதும் நிறுத்து...” கத்த...
அந்த சத்தத்தில் தான் அவன் ஒருவன் நிற்கிறான் என்பதையே உணர்ந்தவள் அவனை பார்த்து “என்னோட குழந்தையை ஒரே ஒரு தடவ எனக்கு காட்ட சொல்லுங்களேன்.... இன்னிக்கு பார்க்கலேன்னா இனிமேல் என்னால பார்க்கவே முடியாதுங்க... உங்களுக்குத்தான் தெரியும்ல..” என தன் அருகில் நின்றிருந்தவனின் கைகளை எக்கி பிடித்து கொண்டு அவள் பரிதாபமாய் கூற...
அவளது வார்த்தையை கேட்டு யாரோ கன்னத்தில் அறைவது போல் துடித்து போய் வலியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தான் அவன்...
தன் வலியின் முன் அவன் வலி அவளுக்கு பெரிதாய் தெரியவில்லை போல... இதுவே முன்பென்றால் அவன் கண்ணை பார்த்தே அனைத்தையும் புரிந்திருப்பாள்... ஆனால் இன்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவளின் உடலை மட்டுமல்லாது அவளின் மனதையும் பாதித்திருந்ததால் அவனின் தவிப்பை உணராது அவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
அவளின் பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் உள்ளுக்குள் உடைந்தவன் நர்ஸிடம் குழந்தையை கொண்டுவருமாறு பணிக்க... அவளும் கண்களில் கண்ணீர் மல்க ஒரு துணிச்சுருளை கொண்டு வந்தாள்... அவளும் பெண் தானே... இன்னொரு பெண்ணின் வலியை அவளாலும் உணரமுடிந்தது..
நர்ஸின் கையிலிருந்த துணிச்சுருளை பார்த்தவள் ஆர்வத்துடன் எழுந்தமர முயற்சிக்க.... அவளால் முடியவில்லை... பலத்த அடிபட்ட உடம்பு அவள் சிறிது அசையவுமே உயிர் போவது போல் வலிக்க “அம்மாஆஆ..” என முனகிக்கொண்டு குழந்தையை பார்க்கும் ஆர்வத்தில் மீண்டும் எழுந்தமர முயற்சித்தாள்.
அவளின் முயற்சியை கண்ட யுத்கார்ஷ் அவளை தூக்கி அமர வைக்க அவளை தொட.... அத்தனை நேரம் இருந்த இணக்கம் மாறி அவனை அருவருப்புடன் நோக்கினாள் அவள்.
அவளின் கண்களில் தோன்றிய அந்த உணர்வை புரிந்து கொள்ளமுடியாமல் அவளை தூக்கி தன் மேல் சாய்த்துகொள்ள... அதை அதைவிடவும் அருவருப்புடன் நோக்கியவள் தன் குழந்தையை காணவேண்டும் என்ற ஒன்றிற்காய் அமைதியாய் அவனின் தொடுகையை ஏற்றுக்கொண்டாள்.
அவள் எழுந்தமர்ந்தும் அவள் அருகில் வராமல் சில அடி தூரத்திலேயே நர்ஸ் நின்றுகொண்டிருக்கவும் அவளை பார்த்து “என் குழந்தையை காண முடியலையே... என் பக்கத்தில்... என் கையில் ஒரு முறை என் குழந்தையை கொடுங்கள் ஒரே ஒரு தடவை....” என அவள் மீண்டும் கெஞ்ச துவங்க...
அவளும் இவளின் கவலை உணர்ந்து குழந்தையை அவள் அருகில்.... அவளுக்கு மிக அருகில் நீட்டினாள்...
அதை ஆனந்தத்துடன் பார்த்தவள் கைகள் நடுங்க மென்மையாய் அந்த துணிச்சுருளை விலக்கினாள்
அதனுள்ளே அவளின் மகவு... சின்ன வடிவம்... குஞ்சான கை ,கால்கள்.. வெளேர் என்ற நிறம்...
ஆசையுடன் தன் குழந்தையை வருடிக்கொடுத்தவளின் கைகள் மூடிவிட்ட அதன் இமைகளில் தடுமாறி நின்றது..
அதற்குமேல் மனைவியின் தவிப்பை காணமுடியாமல் “அழகி போதும் டா...” என்றான் யுத்கார்ஷ்..
வெறுப்பும் கோபமும் கலந்து அவனை பார்த்தவள் “போதாது...போதாது...போதாது.... எனக்கு போதாது... எல்லாம் உங்களால் தான்... இன்று என் குழந்தை என்னை விட்டு ஒரேயடியாய் போய்விட்டது... உங்களை போலவே என் குழந்தையும் இந்த வேசியின் வயிற்றில் வாழ விரும்பாமல் என்னை தவிக்க விட்டு போய்விட்டது... ஏன் என் குழந்தையை கொன்றீர்கள்... உங்களால் தானே... நீங்கள் மட்டும் அன்று அப்படி சொல்லியிருக்கா விட்டால்... என் குழந்தை நான் நல்லவள் என்றெண்ணி என்னுடனேயே இருந்திருக்குமே...” என கட்டுபோட்டிருந்த கையால் அவன் மார்பில் அடித்து கொண்டு கதறினாள் அந்த பேதை....
அவள் அத்தனை அடித்தும் அவள் கரங்களை விலக்காமல் அவள் அடிக்கும் அடிகளை எல்லாம் அமைதியாய் வாங்கி கொண்டான் அவன்.
இத்தனை நாள் அவன் புரியாமல் உணராமல் இருந்த ஏதோவொன்று அவனுக்கு இப்போது புரிவது போல் தோன்றியது.. அது... அவன் மனைவியின் மீது கொண்டிருந்த காதல்... அவனின் அடி ஆழ் மனதில் அவனின் அழகியின் மேல் கொண்டிருந்த காதல்...
இந்த காதல் அவனை அறியாமல் அவனின் அடி ஆழ் மனதில் தோன்ற காரணமே ஜில்மில் தான்...
அவளை நினைத்ததுமே அவன் முகத்தில் வேதனையுடன் கூடிய புன்னகையின் சாயல்... இப்போதும் கூட அவள் அவன் மனதில் குடியிருக்கிறாள் தான்... ஆனால் அவனின் காதலியாய் அல்லாமல் அதற்கும் மேலான உறவில் அவனின் மனதில் குடியிருக்கிறாள்...
அவளால் தானே அவனுக்கு மலர் மனைவியாய் கிடைத்தாள். அதுவுயில்லாமல் ஜில்மில் அவனிடம் மலரை பற்றி பேசும் போதெல்லாம் வெளியில் முகத்தை கடுகடுவென வைத்து கொண்டு உள்ளுக்குள் தன்னை அறியாமலே அவளை ரசித்திருக்கின்றோம் என்பது இப்போது புரிகையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது... கூடவே சிறு துக்கமும்..
இப்போது தான் உணர்ந்து கொண்ட காதலை அப்போதே உணர்ந்திருந்தால் மனைவிக்கு இந்த நிலை வந்திருக்காதே... என தனக்குள் வருந்தினாலும் இப்படி ஒன்று நடக்காமலே விட்டிருந்தால் கடைசிவரை தன் மனைவியின் காதலை உணராமலே போயிருப்போம்.. என அதற்கும் ஒரு காரணத்தை கற்பித்து கொண்டான் அந்த மூடன்..
இருந்தும் மனதின் ஓரத்தில் ஒரு வலி பரவாமலில்லை... இதற்கு அவன் கொடுத்த விலை பெரிதல்லவா....
தன் ரத்தம்... தன் வாரிசு.... தன் உயிரில் உருவான கருவை அல்லவா அவன் இழந்திருக்கின்றான்... அதை தாங்கி கொள்ள முடியாமல் அல்லவா இப்போது அவனின் மனைவி இந்த துடிப்பு துடிக்கிறாள்.
அவனின் வார்த்தையால் தான் இன்று தன் மகவு தன்னை விட்டு போய்விட்டது என கதறுபவளுக்கு உண்மயிலேயே தன் மகவின் உயிர் போவதற்கு அவன் தான் காரணம் என தெரிந்தாள் என்ன ஆவாளோ??
அவள் மனதிலுள்ள பாரத்தை எல்லாம் இறக்கி வைக்க துவங்கவுமே குழந்தையை எடுத்து போகுமாறு பணித்தவன் அவளின் கதறலை எல்லாம் ஒன்றும் பேசாது கேட்டுக்கொண்டு நிற்க.... தன் மனப்பாரத்தை அவனிடம் பகிர்ந்த நிம்மதியினாலோ என்னவோ அழுதழுது ஓய்ந்தவள் சிறிது நேரத்தில் மீண்டும் மயங்கிச்சரிந்தாள்.
மயங்கி சரிந்த மனைவியை பதறிப்போய் கையில் ஏந்தியவன் மெதுவாய் அவளை பெட்டில் கிடத்தி விட்டு..
“என்னாச்சு அங்கிள்... ஒன்னும் ப்ரோப்லம் இல்லையே...” என்று தவிப்புடன் கேட்க அவனது கரத்தை ஆறுதலாய் பற்றியவர்....
“ஒன்னும் இல்ல த்ருவா... அதிர்ச்சியில வந்த சாதாரண மயக்கம்.... கொஞ்ச நேரத்தில கண்விழிச்சிடுவா... நீ ரொம்ப ரெஸ்ட்லெஸா இருக்க த்ருவா... டேக் சம் ரெஸ்ட் (take some rest) என்றவர் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்த நொடி....
அவனோ அவரை உணர்ச்சியற்று பார்த்தவன் ஒன்றும் பேசாமல் மனைவியின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்...
காலையிலிருந்து ஏற்பட்ட ஏகப்பட்ட அதிர்ச்சிகள்... மனைவியின் விபத்து... அவளின் காதலை உணர்ந்தது... தங்கள் மகவின் இறப்பு... அதன் பின் மிக முக்கியமனாதாய் தன் காதலை உணர்ந்தது..
இத்தனை அதிர்ச்சியும் ஒரேசேர வந்து அவனை தாக்கியதில் அவனும் சற்று கலங்கித்தான் போனான்...
அதுவும் மனைவியின் நிலை... மயக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் அல்லாடி கொண்டல்லவா இருக்கிறாள்... கவலையுடன் மனைவியையே பார்த்தவன் அவளது கைகளில் தன் முகத்தை புதைத்து கொண்டான்...
அதேநேரம் கைகளில் குழந்தையுடன் வெளியேறிய நர்ஸின் கால்கள் ஓறிடத்தில் நகரமறுத்து நிற்க.... நம்பமுடியா ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் அவள் திகைத்து போய் அசையாது நின்றாள்..
ஒரு சில கணங்கள் தான் மறுநொடியே “டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” உரத்த குரலில் அழைக்க அந்த உரத்த சத்தத்தில் அந்த துணிச்சுருளினுள் இருந்த அந்த குட்டி மொட்டின் திறந்திருந்த கண்கள் அவளது கத்தலில் இன்னமும் அகல விரிந்து பயத்துடனோ இல்லை ‘நான் உங்களிடம் வந்துவிட்டேன் அம்மா’ என தன் தாயிடம் கூறுவதற்காகவோ “ஞே” என மெல்லிய குரலில் அழவும் சக்தியற்று போய் மென்மையாய் வீரிட....
குழந்தை கண்விழித்ததையே அதிர்ச்சியும் ஆச்சரயமும் கலந்து பார்த்தவள் இப்போது குழந்தை வீரிடவும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று மீண்டுவந்தவள் தன் சத்தத்தில் வெளியே வந்திருந்த டாக்டரிடம் சென்று குழந்தை நீட்ட...
அவரும் அதை நம்ப முடியாத ஆச்சரியத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தார்... எல்லாமே சிலகணங்கள் தான்... அதன் பின் ஒரு மருத்துவராய் தன் கடமையை செவ்வனே செய்தார்.
அவருடன் மற்ற மருத்துவர்களும் இணைந்து குழந்தையை ஐசியுவிற்கு அழைத்து சென்று குழந்தையை முழுமையாய் பரிசோதித்து இனி அதற்கு ஒன்றுமில்லை என்றறிந்ததும் தான் அவர்களுக்கு மூச்சு சீராய் வந்தது...
உயிரை விட்டிருந்த குழந்தைக்கு எப்படி திடீரென மூச்சு வந்தது என்பதை யாராலும் யூகிக்க முடியவில்லை. மருத்துவ உலகில் நம்ம முடியாத ஆச்சரியமாய் இருந்தது அந்த குழந்தையின் பிறப்பு.
மலரின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்த போதே அது அசைவில்லாது தான் இருந்தது... அவர்களும் தங்களால் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்து விட்டு தான் குழந்தை இறந்ததை உறுதி செய்திருந்தனர்.
ஆனால் இறந்ததாய் அவர்கள் எண்ணிய குழந்தை மீண்டும் உயிர்த்தெழுந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியவர்கள் கடவுளின் திருவிளையாடலை எண்ணி அதிசயித்து போயினர்..
பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்யும் அந்த கடவுள் மலரவளின் கதறலில் அவளின் இறந்து விட்டிருந்த ஜீவனை மீண்டும் உயிர்த்தெழ செய்திருந்தான்
இத்தனை காலமாய் துன்பத்தை மட்டுமே அவளுக்கு வழங்கி அவளை சோதித்தவன் முதன்முறையாய் இன்பத்தை அள்ளி வழங்கினான்
தன் மகவு மீண்டு வந்ததை கூட அறியாமல் தன் மனைவியின் கையில் தன் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருந்த யுத்கார்ஷின் தோளின் மேல் கைவைத்தார் சதாசிவம்...
தன் தோளில் படிந்த கையை பார்த்து சாவதானமாய் நிமிர்ந்து பார்த்தவன் அங்கு சதாசிவம் நிற்கவும் “என்ன அங்கிள்... ஏதாவது சொல்லனுமா...”
அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை சடுதியில் கண்டு கொண்டு கேள்வியாய் வினவ... அவனை பார்த்து தன் வயதையும் மீறி ஆர்ப்பாட்டமாய் சிரித்தவர் அவனை தூக்கி நிறுத்தி சந்தோசமாய் அணைத்து கொண்டார்.
அவர் மகிழ்ச்சியின் காரணம் புரியாது திகைத்தவன் அவரை கேள்வியாய் நோக்கவும்....
அவனது பார்வையின் பொருளுணர்ந்து அவனை பார்த்து மீண்டும் அடக்கமாட்டாமல் சிரித்தவர் அவன் முறைக்க துவங்கவும் சிரிப்பை அடக்கி கொண்டு,
“என்னோட நண்பன் தாத்தாவாக போறான்னு நினைக்கும் போது எனக்கு வர சந்தோசத்த அடக்க முடியல த்ருவா....” என ஆர்ப்படமாய் கூற முதலில் அவர் கூறுவது புரியாமல் விழித்தவன் மறுநொடியே அவர் கூற்றின் அர்த்தம் உணர்ந்து நம்பமுடியாமல் முகம் விகசிக்க தலையை அழுந்த பற்றியவனின் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தையே இல்லை.
‘எப்படி... எப்படி... எப்படி... எப்படி சாத்தியம் ஆயிற்று...’ என நம்பமுடியாமல் தன் மனைவியின் அருகில் வந்தவனின் கண்களிலிருந்து விழுந்த ஒற்றை துளி கண்ணீர் அவளின் கன்னத்தில் பட்டு தெறித்தது..
அத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தவள் மீண்டும் மெதுவாய் கண்களை சுழற்றி சுயநினைவுக்கு திரும்ப அவளை பார்த்து கண்களில் கண்ணீர் மல்க ஆனந்தத்தில் சிரித்தான் யுத்கார்ஷ்...
தலை பாரமாய் கணக்க கண்விழித்தவளுக்கு கணவனின் சிரித்த முகம் கண்ணில் பட ‘நான் இங்க மேலுக்கு முடியாம கிடக்கேன்.. இவருக்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு..’ என தனக்குள் கடுகடுத்து கொண்டிருந்தவளுக்கு மீண்டும் தன் மகவின் நினைவு வர கண்ணில் இருந்தது கண்ணீர் உகுத்தது..
மனைவியின் கண்ணீரின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன் அவளருகில் அமர்ந்து அவளின் கைகளை இறுக்க பற்றியவன் “பேபி...” என தொண்டை அடைக்க அழைத்தான்.
அவனது அழைப்பு காதில் நாராசமாய் விழ கண்களை இறுக்க மூடிக்கொண்டு முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டாள் அவள்..
“பேபி... நம்ம...” என தன் மகவின் மறுபிறப்பில் திக்குமுக்காடியவன் அந்த மகிழ்ச்சியை மனைவியிடம் பகிர நினைத்து வார்த்தைக்கு தந்தியடிக்க...
அவளோ அவனின் பிடியிலிருந்து தன் கையை பிரித்தெடுத்தவள் “நீங்க என்ன தொடுறது எனக்கு அருவருப்பா இருக்கு... தயவு செஞ்சு என்ன தொட்டு பேசாதீங்க” என கோபத்துடன் கூற...
மனைவியின் அந்த வார்த்தையில் அவசரமாய் அவளிடமிருந்து விலகியவன் கண்ணில் வலியுடன் அவளை பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்...
தன்னை விட்டு செல்லும் கணவனையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் மலர்...
அவன் அவளுடன் இருந்தாலும் அவனின் வார்த்தைகள் அவளின் காதில் கேட்டு அவளை வதைக்கிறது... அவன் விலகினாலும் மீண்டும் மீண்டும் என்னை விட்டு செல்கின்றாரே என்று அவளுள்ளம் நொறுங்குகின்றது.
அவனை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் தவித்தாள் அந்த பேதைப்பெண்...
அத்தனை நேரம் தன் கணவனின் நினைவில் இருந்தவள் அப்போது தான் அங்கு நின்று கொண்டிருந்த டாக்டரை பார்த்து தர்மசங்கடத்திற்குள்ளானாள்.
கணவன் வெளியேறியதற்கான அர்த்தமும் அப்போது தான் அவளின் மரமண்டைக்கு உறைக்க மானசீகமாய் தலையில் அடித்து கொண்டவள் அவரை சங்கடமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் கண்களை மூடி தன் மகவின் நினைவில் ஆழ துவங்கினாள்.
அவளருகில் வந்த சதாசிவம் “என்னம்மா தூக்கம் வருதா..” என மென்மையாய் வினவ...
அதில் கண்களை மலர்த்தியவள் “இல்லை” எனும் விதமாய் தலையசைக்க...
அவளை பார்த்து சிரித்தவர் “உடம்புக்கு எதாவது பண்ணுதா... வலி ஏதாவது இருக்கா...” என பொதுப்படையாய் வினவ.
“சின்ன வயசிலிருந்து வலிய தாங்கி பழகிடிச்சு டாக்டர்... பொறக்கும் போதே இவ கஷ்டப்படம்னு அந்த ஆண்டவன் என்னோட தலைவிதிய எழுதிரிக்கனோ என்னவோ... எனக்கு இந்த வலியெல்லாம் சாதரணமா தான் இருக்கு..” என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் கசிய..
அவளது வார்த்தையில் மனம் கசிய “பொறந்ததிலிருந்து கஷ்டத்த மட்டுமே பார்க்கிறவங்களுக்கு அவங்க எத்ரிபாராம சில சந்தோசமும் கிடைக்கும்மா...” என்க...
“சந்தோசமா” உதட்டை இகழ்ச்சியாய் சுளித்தவள்...
“என்ன சந்தோசம் டாக்டர் கிடைக்க போகுது... இறந்து போன என்னோட அப்பா, அம்மா, தங்கச்சி திரும்பி வருவாங்களா... இல்ல என்னோட கஷ்டத்த பார்த்து என்னையும் ஒருத்தியா அவ வீட்டில வச்சு பார்த்துகிட்ட என்னோட மகா திரும்பி வந்துடுவாளா... இல்ல...என்னோட தேவிம்மா... என்னோட தேவிம்மா மறுபடியும் என்கிட்டே வந்துடுவாங்களா என்ன.. இல்லன்னா என்னோட...” என்கும் போதே தொண்டையடைத்து கேவல் வர அதை அடக்கியவள்...
“நான் ஆசை ஆசையா... எதிர்பார்த்த என்னோட குழந்தையா எனக்கு கிடைக்க போகுது..” என கண்ணீர் வழிய கூறவும்...
அவளை பார்த்து புன்னகைத்தவர், “அப்போ இவங்க எல்லாரும் தான் முக்கியம்... தாலிகட்டிய புருஷன் முக்கியமில்லையா...”
அவரது வார்த்தையில் அவரை அடிபட்ட பார்வை பார்த்தவள் “அவர விட எனக்கு முக்கியமானவங்க யாரும் இல்ல... ஆனா... ஆனா அவருக்கு தான் நான்... நான்... வே....வேலைக்கரியாச்சே....” என அவனின் வார்த்தையை யாரோ ஒருவரிடம் கூறி அவனின் தரத்தை குறைக்க கூட முடியாமல் வாய்க்கு வந்ததை அவள் கூறி முடிக்க...
அதை வெளியில் நின்று கேட்டு கொண்டிருந்த யுத்கார்ஷின் மனம் வெந்து போனது... ஒரு காலத்தில் தான் அவளை பார்த்து இரக்கமற்று கூறிய வார்த்தைகள்...
அதே வார்த்தைகளை மனைவியின் வாயிலிருந்து கேட்கும் போது அவனால் அதை தாங்க முடியவில்லை... ‘தன் வார்த்தைகளை தன் மனைவி எப்படி தாங்கினாள்’ என பரிதவித்தவன் அதை எண்ணி பார்க்க கூட திராணியற்று ஓசைபடாமல் அங்கிருந்து கிளம்பியவன் நேரே சென்றது சென்னைக்கு தான்.
அதுவும் அங்குள்ள தன் குடோணிற்கு... அங்கு தான் அவனது ஆட்கள் அந்த லாரிகாரனை பிடித்து வைத்திருந்தனர்.
அவளை பார்த்து ஆறுதலாய் புன்னகைத்தவர் “மாற்றம் ஒன்று தான் மாறாதது... மத்தது எல்லாமே காலங்கள் மாற மாற தானாவே மாறிடும்...” என்க.
அவரின் கூற்றின் அர்த்தம் புரியாது விழித்தவள் “நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல...”
“ம்ம்ம்... அப்போ உன்ன வேலைக்காரியா பார்த்தவன்... இப்போ பொண்டாட்டியா பர்க்காலாம்ல...” எனக் கூற...
“ப்ச்” என உச்சுகொட்டியவள் “அவராவது என்ன பொண்டாட்டியா ஏத்துக்கிரதாவது... இந்த காலம் மாறினாலும் அவரோட கல் மனசு என்னைக்கும் மாறாது...” என தனக்குள் எண்ணிக்கொண்டவள்...
“நடக்காதத பத்தி என்னைக்கும் யோசிச்சு வேதனைபட்டுக்கிறது இல்ல டாக்டர்... ஒருவேல அப்படியே அவருக்கு என்மேல இரக்கம் வந்திருந்தாலும்... ஏதோ என்னோட... என்னோட குழந்தை இறந்த துக்கத்த பார்த்து பாவப்பட்டு வந்திருக்கும்...” என கவலையுடன் கூற...
“அவனோட குழந்தை தான் உயிரோட இருக்கே... பின்னே எதுக்கு குழந்தை உயிரோடயில்லன்னு நினச்சு அவன் உன்மேல பரிதாபபடப்போறான்....” என ஒவ்வொரு வார்த்தையாய் அழுத்தமாய் உச்சரிக்க....
முதலில் அவரின் பேச்சின் அர்த்தம் புரியாமல் மலங்க மலங்க விழித்தவள் அதன் அர்த்தம் புரிந்த மறு வினாடி.....
தவிப்பும் ஏக்கமும் போட்டி போட... “உண்மையிலே.... சத்தியமா என்னோட... என்னோட குழந்தை உயிரோட இருக்கா... உண்மைய தான் சொல்றீங்களா... இல்ல... இல்ல.... வேணும்னு ஆசைகாட்டுறீங்களா..... டாக்டர்.... ப்ளீஸ்... ப்ளீஸ்... என்னோட குழந்தை விசயத்துல என்கிட்டே விளையாடாதீங்க டாக்டர்....” என கையை ஏந்தி கண்களில் கண்ணீர் கரையுடைக்க கெஞ்ச...
அவளை ஏந்திய கைகளை ஆறுதலாய் பற்றியவர் “நீ என்னோட பொண்ணு மாதிரிமா... எந்த அப்பாவும் தன்னோட பொண்ணுகிட்ட போய் சொல்ல மாட்டாங்க... உன்னோட இந்த அப்பாவும் உன்கிட்ட போய் சொல்ல மாட்டேன்...”
அவர் கூறிய மறுநொடி மனம் முழுவதும் சந்தோசத்தில் திளைக்க கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை இருகைகாலும் அழுந்த துடைத்தவளின் முகம் தாய்மையின் பூரிப்புடன் பலவண்ண மலர்தொட்டத்தை போல் அழகாய் மலர்ந்து விகசிப்புடன் மின்னியது...
“டாக்டர்... நான்... என்னோட... குழந்தையை பார்க்கலாமா... எனக்கு பாக்கணும் போல இருக்கு...” ஏக்கத்துடன் கேட்க....
“இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னோட பொண்ணு என்னோட இந்த செல்ல பொண்ண பார்க்க ஓடி வந்திடுவா.... கொஞ்ச நேரம் நீ தூங்கி ரெஸ்ட் எடுடா....” என்றவாறு அவர் வெளியேற...
ஏதோ மிகப்பெரிய சாதனை செய்தது போன்ற மகிழ்ச்சியில் பெட்டில் தலையை சாய்த்தவளுக்கு மனதில் என்றுமில்லாத வகையில் நிம்மதி சூழ்ந்து கொண்டது..
தான் இழந்த அத்தனை உறவும் தன் மகனின் ரூபத்தில் மீண்டும் தன்னிடம் வந்ததாகவே உணர்ந்தாள் மலர்...
‘சிறுவயதில் கிடைக்காதா பெற்றோரின் அரவணைப்பு, தன் குட்டி தங்கையுடன் செல்லமாய் போடாத சண்டைகள், தன் தோழியின் அன்பு, தன் தேவிம்மாவின் பாசம், தன் கணவனின் ஆதரவு.... அனைத்தையும் கிடைத்தும் கிடைக்காது போனதையும் தன் மகளிற்கு தான் கொஞ்சமும் குறையின்றி அள்ளிவழங்க வேண்டும்’ என மனதுக்குள் எண்ணிகொண்டவளின் மனதில் மகிழ்ச்சி... மகிழ்ச்சி மட்டுமே...
இத்தனை நாளாய் கனவுடன் வாழ்ந்த குழந்தையுடன் இனி நிஜத்தில் வாழபோகிறோம் என்ற உணர்வில் மனம் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட மகளின் நினைவுடனே கண்களை மூடி துயிலில் ஆழ்ந்தாள் மலர்...
அதே நேரம் தன் குடோனில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றவன் தான் ஆட்களின் பாதுகாப்பில் கட்டி வைக்கபட்டிருந்த அந்த லாரிகாரனை பார்த்து பல்லை கடித்தவன் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தான்.
அவன் அறைந்த ஒற்றை அறையில் வலியில் அலறியவன் இருந்தும் தன் கெத்து குறையாமல் “ஏய்... இந்த அறையிற வேலையெல்லாம் என்கிட்டே வச்சுக்காதே... அப்பிறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” என அவன் எகிற....
“வாலண்டியரா வந்து வாய கொடுத்திட்டான் இனி என்ன நடக்க போகுதோ..” என யுத்கார்ஷின் பிஏ சதீஷ் அவனருகில் நின்ற செக்யூரிட்டியிடம் மெல்லிய குரலில் முணுமுணுக்க...
அந்த அவனோ சதீஷை கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தவன் மீண்டும் தன் முகத்தை யுத்கார்ஷின் பக்கம் திருப்பினான்.
“அடச்சே.... போயும் போயும்... இவன்கிட்ட சொன்னேன் பாரு... என்ன சொல்லணும்...” என தன்னுக்கு தானே கவுண்டர் கொடுத்து கொண்டு மானசீகமாய் தலையில் அடித்து கொண்டவன் யுத்கார்ஷை நோக்கி தன் பார்வையை திருப்பினான்..
அவன் திரும்பிய நொடி சரியாய் அவனை பார்த்து வைத்தான் யுத்கார்ஷ்... பாஸின் பார்வை கண்டு என்னவென்று தெரியாமல் திருதிருத்தவன் அவன் உஷ்ண பார்வை பார்க்கவும் அவன் பார்வைக்கான அர்த்தம் புரிந்து அவசரமாய் ஆணியையும் சுத்தியலையும் எடுத்து வந்து அங்கிருந்த மேசையில் வைத்தவன் பழைய படி தான் நின்ற இடத்தில் போய் நின்று கொண்டான்...
கதிரையில் கட்டிபோட்டிருந்த அவன் முன்பிருந்த இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்தவன் தன் செக்யூரிட்டி கார்ட்ஸை பார்க்க அவனின் பார்வைக்கான அர்த்தத்தை புரிந்து கொண்டவர்கள் அந்த லாரிகாரனின் அருகில் வந்து அவனின் வலது கையை எடுத்து அவனுக்கு முன்பிருந்த மேசையில் வைத்து அழுத்தி பிடித்தான்.
தன் முன்பு வைக்க பட்டிருந்த ஆணியை கையிலெடுத்து சுழற்றிய யுத்கார்ஷ் அவனின் கட்டை விரலில் அதை வைத்து அழுத்து கொண்டு கையில் சுத்தியலை எடுக்க...
அதை பார்த்து அவன் என்ன செய்ய போகிறான் என்பதை யூகித்தவன் “டேய்... என்ன பண்ண போற... விடுடா.... இது மட்டும் எங்க பாஸுக்கு தெரிஞ்சது உன்ன சும்மா விடமாட்டாரு...” என அப்போதும் அந்த கெத்து சற்றும் குறையாமல் அவன் உரத்த குரலில் கத்த...
அவனின் கத்தலில் “ப்ச்” என உச்சுகொட்டியவாறு தன் காதை தேய்த்துவிட்ட யுத்கார்ஷ் அவனை ஒரு சில கணங்கள் ஏறிட்டு பார்த்து விட்டு சுத்தியலால் அவன் கையில் ஒரு போடுபோட.....
அதில் வலிதாங்காது “அம்மாஆஆஆ” என்று அலறியவன்...
“சார்... சார்... விடுங்க சார்... எனக்கொன்னும் தெரியாது சார்... அவங்க தான் எனக்கு பணம் கொடுத்து இப்பிடியெல்லாம் பண்ண சொன்னாங்க சார் விடுங்க சார்....” என உயிர் போன வலியில் வார்த்தையில் மரியாதை தானாய் வந்து சேர கூறியவனை பார்த்து முகம் கோபத்தில் மின்ன சிவந்தவன் இன்னுமொரு ஆணியை அவனின் கையில் ஏற்றிய பின் தான் அவனை விட்டான்...
அது அவன் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை... அவனை இழுத்து சென்ற தன் கார்ட்ஸை அழைத்தவன் அவனை முடிக்குமாறு கூறிவிட்டே அங்கிருந்து அகன்றான்.
அவனுக்கு தொழில் எதிரி இருந்தால் பரவாயில்லை... அது எத்தனை பேரென்றாலும் அவர்களை வீழ்த்தி விட்டு முன்னேறி விடுவான்... ஆனால் நம்பிக்கை துரோகி இருக்க கூடாது.... அதை முளையிலேயே அடியோடு ஒழித்து விடுவான்...
அவனை ஒழித்து விட்டு தன் முக்கிய எதிரியை நாடிப்போனான் யுத்கார்ஷ்...
அதே நேரம் தன் கெஸ்ட் ஹவுஸில் அமர்ந்திருந்தான் அவன்...
“நீ சொன்னவன் என்ன பண்ணியிருக்கான்னு பார்த்தியா... அதுக்கு தான் சொன்னேன் நானே பண்றேன்னு.... ஆனா நீ கேக்கல... இப்போ பார்த்தியா என்ன ஆச்சுன்னு...”என ஆத்திரத்துடன் தன் முன்னால் அமர்ந்திருந்தவனிடம் கூறியவன் தன் கையிலிருந்த பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைத்தான்.
“இப்போ நீங்க எதுக்கு கவலைபடுறீங்க... என்னோட ஆளு அவன் எவ்ளோ அடிச்சு கேட்டாலும் நாம யாருன்னு காட்டி கொடுக்க மாட்டான்... அவன் ரொம்ப விசுவாசமான ஆளு..” என தான் அனுப்பிவைத்தவனை பற்றி பெருமையாய் கூறிக்கொண்டிருந்தான் விக்ரம்...
மலரை காதலிக்கும் போது மென்மையாய் இருந்த அவனின் காதல் மனம் இன்று அவள் வேறொருவனுடன் வாழ்வதை பார்த்து கடினமாய் மாறிவிட்டிருந்தது...
அதனால் தான் அவளை கொல்வதற்காக அவளின் வீட்டிக்கு சென்றிருந்தான்...
யுத்கார்ஷின் அந்த வீட்டிற்குள் யாராலும் அவ்வளவு சுலபமாய் நுழைந்து விடமுடியாது... அவனின் வீடு ஒரு இரும்பு கோட்டை... ஆனால் இவன் அதை சாதரணமாய் கடந்து சென்று அவனின் மனைவியையே கொல்ல பார்த்திருக்கின்றான் என்றால் அவனின் கதி என்னவோ.....
“நான் அன்னைக்கே அந்த மலர போட்டிருக்கனும்... ஆனா அதுக்குள்ள யாரோ வந்து தடுத்திட்டாங்க.... ஆனா அது யாருன்னு தான் எனக்கு புரிய மாட்டேங்கிது...”
“அவனோட செக்யூரிட்டி யாராவது வந்திருப்பாங்க....” என அவன் முன்னால் இருந்தவன் அலட்சியமாய் கூற...
“அதுக்கு சான்சே இல்ல.... அவனோட வீட்டிக்குள்ள போற உரிமை அவனுங்க யாருக்கும் கிடையாது.... இது அவனுங்க யாருயில்ல... வேற... வேற யாரோ தான் அன்னைக்கு அங்க வந்திருக்காங்க... அது யாருன்னு நான் கூடிய சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன்..” என விக்ரம் ஆவேசமாய் கூற அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தவன்.....
“அவனோட பொண்டாட்டி நீ காதலிச்ச பொண்ணு... அதனால உனக்கு அவள கொல்றதுக்கு மனசு வந்திருக்காது... அதனால பாவம் பார்த்து திரும்பி வந்திருப்ப... இப்போ எனக்கிட்ட யாரோ இருந்தாங்கன்னு சீன் போற.... இதெல்லாம் எவனானவது காதுல பூ வச்சிட்டு சுத்திகிட்டு இருப்பான் அவன்கிட்ட போய் சொல்லு....” என அவனின் பழிவெறி அறிந்து அவனை உசுப்பி விட...
"நான் அவள காதலிச்சேன் தான்... ஆனா இப்போயில்ல.... இப்போ என்மனசு முழுக்க அவளை பழிவாங்கனும்ன வெறி தான் அதிகமா இருக்கு... அவளை என் கையாலேயே நான் கொல்லனும்... அவ துடிதுடிச்சு சாகிறதா நான் பார்த்து ரசிக்கணும்.... எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது...” என வெறியில் கூறியவன் அங்கிருந்து வெளியேறி தன் வீடு நோக்கி சென்றான் அவன்...
விக்ரம் வெளியேறிய மறுநொடி.. ‘உன்ன அவனுக்கெதிரா திருப்பி விட்டிட்டேன்.... இனி நான் பண்றதுக்கு ஒன்னும் இல்ல... நீ அவன் பொண்டாட்டிய கொல்லனும்... அத பார்த்து அந்த த்ருவா கதறனும்.... அவன் கதறல நான் பார்த்து ரசிக்கணும்...’ என உதட்டில் வெறியில் மின்னிய புன்னகையுடன் அவன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.
“நான் எப்பிடி துடிச்சேனோ அதே மாதிரி நீயும் துடிக்கனும் த்ருவா... அப்போ தான் என்னோட ஆத்திரம் அடங்கும்.... அதுக்கப்பிரம் இந்த உலகத்திலேயே சந்தோசமானவனா நான் மட்டும் தான் இருப்பேன்....” என உரத்த குரலில் அந்த அத்துவான காட்டிற்குள் அமைந்துள்ள வீட்டினுள் இருந்து கத்தியவனின் குரலில் இருந்த அளவுகடந்த வெறி அந்த வீடு முழுவதும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தது...
தன் காரில் அந்த அவனின் இடம் நோக்கி சென்று கொண்டிருந்தவனை அழைத்தார் சிதம்பரம்...
“என்ன அங்கிள்... என்னோட பெரிய பேபியும் சின்ன பேபியும் என்ன பண்றாங்க அங்கிள்...” என மனநிறைவுடன் கேட்க...
அவனின் கேள்வியில் வாய்விட்டு சிரித்தவர் “உன்னோட ரெண்டு பேபியும் நல்லா தான் இருக்காங்க... ஆமா நீ இன்னும் வீட்டிக்கு போகலையா த்ருவா... உன் அப்பாவும் அம்மாவும் உனக்காக காத்திட்டு இருக்காங்க....” என்க...
“முக்கியமான வேலையோன்னு பாக்கி இருக்கு அங்கிள் அத முடிச்சேன்னா நான் இனிமே ப்ரீ தான்... அதுக்கப்பிரம் வீட்டுக்கு போறேன்...” என இதழில் இழையோடிய சிரிப்புடன் கூற...
மெல்லிய நகையோடிய சிரிப்புடன் கூடிய அவனின் பேச்சை கேட்டு அவருக்கு ஆச்சரியம் தாளவில்லை...
அவருக்கு அவன் பிறந்ததிலிருந்து அவனை பற்றி நன்கு தெரியும்..
அவ்வளவு சுலபத்தில்... அது தெரிந்தவர்கள் என்றாலும் பரவாயில்லை தெரியாதவர்கள் என்றாலும் பரவாயில்லை... யாருடன் சிரித்ததென்ன சாதாரணமாய் கூட பேசமாட்டான்... அத்தனை அலட்சியம் இருக்கும் அவன் மற்றவர்களை பார்க்கும் பார்வையில்...
அந்த அலட்சிய பாவத்திலேயே அவனுடன் பேச ஆசைபடுபவர்கள் கூட பேசாமலேயே போய்விடுவர்.... அப்படிபட்டவன் இன்று தான் அழுதும் இருக்கிறான்... தன் தரத்தில் இருந்து இறங்கியும் இருக்கிறான்... முதன் முறையாய் சிரித்தும் இருக்கிறான்..
“வாழ்க்கையில இன்னிக்கித்தான் நான் நினைச்சி கூட பார்க்கமுடியாத நிறைய விஷயங்கள் நடந்திருக்கு த்ருவா... அதுவும் உன்னோட இந்த மாற்றம்.... நடக்கவே நடக்காதுன்னு நினைச்சிட்டு இருந்த ஒன்னு.... ஆனா இன்னிக்கி.... உன்னோட வொய்பும் டோட்டரும் உன்ன டோட்டலா மாத்திட்டாங்க.... சம்திங் அன்பிலீவபில் (something unbelievable)” ஆச்சரியமாய் கூறியவர் சிறிது நேரத்தில் அழைப்பை துண்டித்தார்..
அவனுக்கும் அதே எண்ணம் தான்... இதுவரைக்கும் அவன் பெண்களை அறியாதவனும் இல்லை.. அவர்களுடன் பழகாதவனும் இல்லை... பின்னே எப்பிடி ஒரு நாளுக்குள் அவள் மேல் இத்தனை காதல் தனக்கு வந்தது....’ எண்ணியவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது....
இனி அவளின்றி தானில்லை... அதுவும் அவளின் காதல்... எத்தனை உயர்வானது என்பதை நினைத்தவனுக்கு மனைவியை நினைத்து பெருமையாய் இருந்தது...
அவள் தன்னை உயிருக்குயிராய் காதலித்தும் அதை கடைசிவரை தன்னிடம் கூறாமலே விட்டிருந்த மனைவியை நினைத்து அவனுக்கு வருத்தமாய் இருந்தாலும் அவளின் உணர்வுகளும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது...
அதுவும் தன் காதலால் தன்னவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதனாலேயே அவள் அதை தன்னிடம் கூறாமல் தான் கொட்டிய வார்த்தைகளை எல்லாம் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாய் செத்து கொண்டிருந்திருக்கின்றாள் என இப்போது புரிந்ததும் அவனுக்கு இதயம் கனத்தது...
இனி அவளை எந்த வகையிலும் கஷ்டப்பட விடக்கூடாது என எண்ணியவனுக்கு தெரியவில்லை இனி தான் அவனால் அவள் அதிகம் காயப்பட போகிறாள் என்று...
சிதம்பரத்தின் அழைப்பை ஏற்ற பின் அவனின் இடத்தை நோக்கி செல்லவும் மனமின்றி தன் வீட்டிற்கு செல்லவும் மனமின்றி தன் கெஸ்ட்ஹவுஸ் நோக்கி சென்றான் யுத்கார்ஷ்.
மகிழ்ச்சியோ துக்கமோ அதை பகிர்ந்து கொள்ள அவனுக்கு தனிமை மிக அவசியம்..
அதனாலேயே வீட்டிற்கு செல்லாமல் கெஸ்ட் ஹவுஸ் வந்திருந்தவன் தன் மகளின் வரவை நினைத்து செய்த ஆர்ப்பாட்டத்திற்கு அளவே இல்லை... அந்தளவிற்கு மகிழ்ச்சி அவனின் ஒவ்வொரு அணுவிலும் பீரிட்டு கொண்டிருந்தது..
மகளின் நினைவிலேயே ஆழ்ந்து உறங்கியவன் மறுநாள் எழுவதற்கே மதியத்திற்கு மேல் ஆகியிருந்தது...
மறுநாள் அயர்ச்சியில் தாமதமாய் எழுந்தவனுக்கு மனைவியையும் மகளையும் காண வேண்டும் போல் ஏக்கம் அதிகரிக்க செய்வதறியாமல் முழித்து கொண்டிருந்தான் அவன்..
அவன் நினைத்தால் இப்போதே அவர்களிருவரையும் காணமுடியும்... ஆனால் மனைவியின் முகத்தில் தெரிந்த அந்த பார்வை.. அவளின் பேச்சு... அவை எல்லாமே அவனை போக விடாமல் தடுத்தது...
அதுவும் அவனுக்காகவும் அல்ல... தன் மனைவிக்காகவே.. எங்கே அவள் என்னை பார்த்தாள் என்னை வார்த்தையால் காயப்படுத்துவதாக நினைத்து தன்னை தானே காயப்படுத்திக் கொள்வாளோ என்ற பயத்தில் தான் அவன் அவளை காணப்போவதை தவிர்த்தான்.
ஆனால் விதி மீண்டும் ஏதோவொரு வகையில் அவளை காயப்படுத்துவதற்காக ஆவலுடன் காத்திருந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
அதன் பின் குளித்து வேறு உடைக்கு மாறியவன் மதிய உணவை கூட மறந்து தன் தாயை பார்க்க வீட்டிற்கு பறந்தான்.
அதேநேரம் தன் அத்தையின் நிலையறிந்து தன் மகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மலர்...
அதுவும் அவரின் இந்த நிலைக்கு காரணம் தான் என்றறிந்ததும் அவளால் அதை சற்றும் தாங்க முடியவில்லை.
எப்போதும் ஓரிடத்தில் நில்லாமல் சுற்றி திரியும் தன் அத்தை இன்று படுத்தபடுக்கையாய் கிடப்பதை சிதம்பரத்தின் வாயால் அறிந்தவளுக்கு இனி ஒரு நொடி கூட இங்கிருக்க விருப்பமில்லை
ஒரு புழுபூச்சிக்கு கூட துன்பம் நேர கூடாது என நினைப்பவளால் இன்று தன் அத்தை... அதுவும் தன்மேல் பாசத்தை பொழியும் அத்தைக்கு இப்படி ஒரு நிலைமை என்றறிந்ததும் சிதம்பரத்திடம் கெஞ்சி கூத்தாடி அவருடனே சென்னை வந்துவிட்டிருந்தாள்.
அந்த வீட்டு படியை கூட மிதிக்க கூடாது என்று எண்ணி இருந்தவள் மீண்டும் அந்த வீட்டை நோக்கி தன் பயணத்தை ஆரம்பித்திருந்தாள்.
போர்டிகோவில் காரை நிறுத்தியவன் அவசரகதியில் வீட்டினுள் நுழைந்து தன் தாயின் அறைக்குள் சென்றவன் அவரருகில் அமர்ந்து அவரின் கையை வருடியபடி....
“மாம்... ஆர் யு ஆல்ரைட்?...” என்று சன்ன குரலில் வினவ..
அவனது குரலில் மெதுவாய் கண்களை திறந்தவர் அவனது முகத்தை பார்த்து மென்மையாய் சிரித்து கொண்டு “எனக்கென்ன த்ருவா நான் நல்லா தான் இருக்கேன்... மலர்... மலர பத்தி அண்ணன் சொன்னது உண்மையா த்ருவா....” என்று மெல்லிய குரலில் மனம்கொள்ளா சந்தோசத்துடன் கேட்க...
அவரது கரத்தை அழுத்தமாய் பற்றியவன் “எஸ் மாம்... நீங்க என்னோட குழந்தைக்கு கிரேன்ட்மா (grandmaa) ஆகபோறீங்க... எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு மாம்... ஆனா அத எப்பிடி சொல்றதுன்னு தான் எனக்கு புரியல.... இத்தன நாளா எப்பிடி அவ இல்லாம வாழ்ந்தேன்னு கூட எனக்கு புரியல... ஆனா இன்னொரு தடவ அவளில்லாம என்னால வாழ முடியுமான்னு தெரியலை மாம்... ஐ...ஐ லவ் ஹேர் எலாட் உங்களுக்கு... இல்ல நீங்க ஹாப்பியா மாம்...” என தவிப்புடன் வினவ...
“த்ருவா நீ... நீ நெஜமாத்தான் சொல்றியா... இல்ல... சும்மா விளையாட்டுக்கு சொல்றியா” என தன் மகனின் காதல் உண்மையா என்றறிவதற்காக கேட்டவரின் கண்களில் மகனின் அடிபட்ட பார்வை விழ...
அவனின் பிடியிலிருந்த கையை விலக்கி தன் நடுங்கும் கரங்களால் அவனின் கையை பற்றியவர் “முதல் காதல மறுக்கிறது அவ்வளவு சுலபம் இல்லைன்னு எல்லாருக்கும் தெரியும் த்ருவா... ஆனா நீ இப்போ மலர நேசிக்கிறேன்னு சொல்றத கேட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குப்பா... நான் நல்லது தான் பண்ணியிருக்கேன்னு தோணுது... நான் மட்டுயில்ல நம்ம மலரோட தேவி... அவள் மட்டும் அன்னைக்கு சத்தியம் பண்ணி கேக்கலைனா இன்னிக்கி உனக்கு மலரோட கல்யாணம் ஆகியிருக்காதுப்பா.... சாகும் போதே உனக்கொரு நல்லது பண்ணனும்னு நினைச்சிருக்கா... தங்கமான பொண்ணு...” என தன் மனதில் இருந்ததை கூறியவர் லேசாய் கண்களை மூட...
அவனுக்கு இது புதுக்கதை... ‘என்ன சத்தியம் வாங்கினாளா.... என்ன சத்தியம்... என்ன சொல்றாங்க மாம்...’ என குழம்பியவன்...
மாம்...” என்று அவன் மெல்லிய குரலில் அழைக்க அதில் கண்களை மலர்த்தியவர் “என்ன த்ருவா... எதாவது கேக்கணுமா”
“எஸ்... மாம்... அது... அதுவந்து.... என்ன என்ன சத்தியம்... யாருகிட்ட வாங்கின...” என வார்த்தை தந்தியடிக்க அவன் கேட்க...
“அது ஒன்னுயில்ல த்ருவா... தேவி தான்.... சாகும் போது உனக்கும் மலருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி சத்தியம் வாங்கிட்டு இறந்து போயிட்டதா அவங்க பாட்டி தான் சொன்னாங்க... ஆனா அத கேள்விபட்டதும் மலர்.... மலர் தற்கொலை.... கிணத்துல விழுந்திட்டாளாம்.... அண்ணன் தான் சொன்னாரு.... அதனால தான் அவசர அவசரமா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சோம்....”
தன் மனைவியின் தற்கொலை முயற்சியை கேள்விப்பட்டதும் திடுக்கிட்டு போனவன் ‘இனி உனக்கு எதுவும் நடக்காம நான் பார்த்துப்பேன் சிக்கி.... காலம் பூரா நாம ரெண்டு பெரும் சந்தோசமா இருக்கணும்... என்னை மீறி உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன்...’
“ஆனா இப்போ பாரு.... நீ அவள விரும்பிற... அவளுக்கும் கூடிய சீக்கிரம் உன்ன பிடிக்கும் கண்ணா... காலம் எல்லாத்தையும் மாத்திடும்... இன்னாருக்கு இன்னார்ன்னு கடவுள் எப்போவோ முடிவு பண்ணி வச்சிருக்கான்... அது படி தான் எல்லாம் நடக்கும்...”
‘ஆமா மா... எல்லாமே அந்த கடவுளோட கணக்கு படி தான் நடந்திருக்கு... இல்லன்னா எப்பிடி யாரையும் காதலிக்க விரும்பாத நான் மைலு பார்த்ததும் காதலிக்க ஆரம்பிச்சேன்.... அவள ஒரு இக்கட்டான நிலையில காப்பாத்தி அவளோட உயிரை அவளுக்கு திருப்பி கொடுத்த நானே எப்பிடி அவளை பத்தி முழுசா புரிஞ்சிக்காம அவளை வார்த்தையால கொன்னு சாகடிச்சேன்... தான் சாகபோறோம்னு தெரிஞ்சதும் எதுக்காக எனக்கும் என்னோட அழகிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டு இறந்திருப்பா.... எல்லாமே அந்த கடவுளோட விளையாட்டுன்னு இப்போதான் எனக்கு புரியுது...’ என கடவுளின் திருவிளையாடலை எண்ணி வியப்பதா சபிப்பதா என புரியாமல் மனதுக்குள் தவித்து போனான் அவன்...
“சரிப்பா.... நேத்து எங்க போன... வீட்டுக்கும் வரலைன்னு அப்பா சொன்னாரு.... சரி.... இப்போ சாப்பிட்டியா.... இல்லன்னா போய் சாப்பிடுப்பா...” என்றவர் அவனை வெளியே அனுப்ப....
“ஓகே மாம்... நா.. நான் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன் நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என கனத்த மனதுடன் கூறியவாறு தாயின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிட்டவன் அங்கிருந்து வெளியேற அதேநேரம் அங்கு வந்தார் சித்தார்த்...
அவரை பார்த்ததும் இவன் விறைப்பாய் நிற்க... தன் மகனின் செய்கையில் வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே அடக்கியவர் “குழந்தை பொறந்த சந்தோசத்தையே உன் முகத்தில காணோமே...” என எடக்காய் வினவ...
‘இவருக்கு கொஞ்சம் கூட அறிவேயில்ல.... அவனே இப்போதான் மனசு மாறியிருக்கான்.... இப்போ போய் எடக்கு மடக்கா எதையாவது கேட்டு வச்சா என்ன பண்ண போறானோ...’ என மனதுக்குள் தன் கணவனை தாளித்து கொண்டு அவரை முறைத்து பார்த்து கொண்டிருந்தார் ருத்ரா...
மனைவியின் பார்வையை அறியாதவராய் அவர் தன் மகனை முறைத்து பார்த்து கொண்டிருக்க அவனோ அவரை அதற்கு மேல் முறைத்து கொண்டு..
“எவளோ ஒருத்திக்கு பொறந்த குழந்தையை நினைச்சி நான் எதுக்கு சந்தோசப்படனும்... எனக்கு அதுக்கெல்லாம் நேரமும் இல்ல....” என்று அவரை முறைத்து கொண்டு காட்டத்துடன் கூறியவாறு திரும்பியவன் வாசலில் கையில் தன் மகளுடன் நின்றிருந்த மனைவியை சற்றும் எதிர்பாக்கவில்லை.
தன் அத்தையை பார்க்கும் ஆவலிலும் தன் கணவனும் இருப்பானோ எனும் சிறு ஆசையிலும் அவசரமாய் தன் மகளை தூக்கி கொண்டு உள்ளே வந்த மலர் தன் ஆசை கணவனின் இந்த பேச்சை சற்றும் எதிர்பாத்திருக்கவில்லை.
‘எவளோ ஒருத்தியா.... இது அவர் குழந்தை இல்லையா... நான் அவர் சொன்னது போலில்லை என்பதற்கு சாட்சியாய் தானே என் மகள் என்னிடம் மீண்டு வந்ததாய் எண்ணினேன்.... ஆனால் இப்போது அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிட்டதே... எப்படி இவரால் இப்படியெல்லாம் கூற முடிந்தது... கடவுளே.... எப்போது தான் இந்த சோதனையிலிருந்து என்னை மீட்க போகிறாயோ....’ என உள்ளுக்குள் கதறியவளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டு சொட்டாய் இறங்கியது...
கண்களில் கண்ணீருடன் நிற்கும் தன் மனைவியை என்ன செய்து சமாதானப்படுத்துவது எனப்புரியாமல் சிலையாய் சமைந்து நின்றான் யுத்கார்ஷ்...
தன் தந்தையை தாக்குவதற்காக மனதை கல்லாக்கி கொண்டு கூறிய வார்த்தைகள் குறி தவறி தன் மனைவியை குத்தி விட்டது என்பதை அறிந்து உள்ளுக்குள் நொந்து போனான் அந்த இளம் தொழிலதிபன்...
இருந்தும் எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல் “பேபி” என்றவாறு அவளருகில் நெருங்க.... அவளோ அவனை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தவாறு தன் அருகில் நின்றிருந்த சிதம்பரத்தை நோக்கி ‘இது தான் நீங்க சொன்ன பொண்டாட்டி மேல் பொத்து கொண்டு வந்த பாசமா...’ என நக்கல் பார்வை ஒன்றை வீசி வைக்க...
அவரோ அவளின் பார்வையிலிருந்த நக்கலையும் அந்த நக்கலுக்குள் அவள் மறைத்து வைத்திருந்த அவளின் மனதின் வலியையும் புரிந்து கொண்டு யுத்கார்ஷை முறைத்து வைத்தார்...
ஆளாக்கு மாறி மாறி முறைத்து கொண்டிருப்பதை பார்த்த சித்தார்த் மகனின் நிலையை எண்ணி கேலியாய் சிரித்தவாறு தன் மருமகளை பார்த்து “வாம்மா... உள்ளே வாடா மலர்...” என அவளை பாசமாய் வரவேற்க....
‘மலர்’ என்ற பெயர் காதில் விழுந்ததும் கூடவே மகனின் வார்த்தையும் நினைவு வரவே மருமகள் இதை எப்படி தாங்கினாலோ என கவலையுடன் விட்டத்தை வெறிக்க தொடங்கினார் ருத்ரா...
அவரை பார்த்து சங்கடத்துடன் சிரித்தவள் தயக்கத்துடன் அந்த வீட்டினுள் காலை வைத்தாள்.
முதன்முறை மருமகளாய் இந்த வீட்டிற்குள் நுழையும் போதும் இதே தயக்கத்துடன் தான் இந்த வீட்டினுள் நுழைந்தாள்.... இந்த வீட்டை விட்டு வெளியேறும் போதும் இதே தயக்கத்துடன் தான் வெளியேறினாள்... மறுபடியும் இந்த வீட்டிற்குள் அதே தயக்த்துடன் தான் நுழைகிறாள்.
மனைவியின் அந்த சிறு ஒதுக்கத்தையும் தாங்க முடியாமல் கோபத்துடன் தந்தையை நோக்க அவரோ நமுட்டு சிரிப்புடன் தன் மருமகளை மனைவியின் அறைக்குள் அழைத்து சென்றார்.
தன் அத்தையின் அறைக்குள் தன் குழந்தையுடன் நுழைந்தவள் அங்கு அவர் கவலை அப்பிய முகத்துடன் விட்டத்தை வெறித்து கொண்டிருக்கவும் “அத்த....” என்ற கூவலுடன் அவரருகில் சென்று கண்ணீருடன் அவரருகில் அமர்ந்தாள்...
தன் மருமகளான மகளின் கண்ணீரை காண சகியாது அவளை ஏறிட்டவர் அழ வேண்டாம் என்பது போல் தலையை அசைக்க.... அவரின் செய்கையின் அர்த்தம் புரிந்து தன் கையில் துயிலில் ஆழ்ந்திருந்த தன் குழந்தையை அவரருகில் வைத்தவள் கண்ணீரை அழுந்த துடைத்து கொண்டு தன் துக்கத்தை எல்லாம் தனக்குள் புதைத்து கொண்டு மென்மையான புன்னகையை முகத்தில் ஓட்ட வைத்து கொண்டு அவரை பார்த்தாள்.
தன் ஒட்டுமொத்த துன்பத்தையும் தனக்குள்ளேயே போட்டு புதைத்து கொண்டிருக்கும் மருமகளை பரிதாபத்துடன் பார்த்தவர் தன் பேத்தியை பார்க்கும் ஆவலில் எழுந்தமர முயற்சித்தார்...
மனைவி முதன் முறையாய் எழுந்தமர முயற்சிக்கவும் தன் பேத்தியின் வருகையை நினைத்து பெருமிதப்பட்டவர் மனைவியை பார்த்துக்கொள்ள வந்திருந்த நர்ஸை அழைத்து மனைவியை அமர வைக்கலாமா என கேட்டு அவளின் உதவியுடன் கட்டிலில் தலையணையை சாய்த்து மனைவியை அதில் அமர வைத்தார்.
வெளியில் நின்றிருந்த யுத்கார்ஷ் “அங்கிள் அவளோட இந்த கண்டிஷன்ல எதுக்கு இங்க வந்தா... இதனால ஏதாவது ப்ரோப்லம் ஆகுமா அங்கிள்... பேபிக்கு ஒன்னும் இல்லையே.... அண்ட் நீங்க வாரத ஏன் என்கிட்டே முன்னாடியே சொல்லல...” என கேள்வி கேட்டு துளைத்தெடுக்க..
அவனின் கேள்விக்கனையிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என புரியாது குழம்பியவர் ‘மலரிருக்க பயமேன்’ என எண்ணியாவாறு “நான் என்னப்பா பண்றது... உன் பொண்டாட்டி தான் அத்தைய பார்க்கணும்... அத்தைய பார்க்கனும்னு அடம்பிடிச்சு என்னை இங்க இழுத்திட்டு வந்திட்டா... இனிமே நீ என்ன கேக்கிறதா இருந்தாலும் அவள் கிட்டேயே கேட்டுக்கோப்பா...” என்றவாறு அங்கிருந்து அகல...
‘அவகிட்ட கேக்கிறதா... இருக்கிற கோபத்துல என்னை தொலைச்சி எடுத்தாலும் ஆச்சரியபடுறதிக்கில்ல....’ என தன் அந்தஸ்த்து மறந்து சிறு பிள்ளைத்தனமாய் எண்ணியவாறு தன் தலையை தட்டி கொண்டு அன்னையின் அறைக்குள் நுழைந்தவன் அங்கு அவர் எழுந்தமர்ந்திருப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்க அவரோ தன் மகனின் வரவுணர்ந்து அவனை முறைத்து பார்த்தார்..
தன்னை சாடிய அவரின் பார்வையின் காரணத்தை யூகித்தவனுக்கு சற்று முன் தன் தாயிடம் தான் அவளை காதலிப்பதாய் கூறியதை நினைத்து ஒரு மாதிரி ஆகிவிட்டிருந்தது...
‘உண்மையிலேயே தான் அவளை காதலிப்பதை எப்படி அவரிடம் கூறுவது... அதுவுமின்றி இந்த வினைக்கெல்லாம் காரணகர்த்தா மிஸ்டர் சித்தார்த் ராவ் அஹ்லுவாலியா தான் என்று எப்படி சொல்வது’ என புரியாமல் அவரை கெஞ்சலாய் பார்க்க...
மகனின் கெஞ்சல் பார்வையை அதிசயத்திலும் அதிசயமாய் பார்த்து வைத்தார் அவர்.
யாருக்கும் தலைவணங்காத மகனின் கெஞ்சல் பார்வையை கண்டு அவர் அதிசயப்படுவதிலும் ஆச்சர்யம் இல்லையே....
மகனின் கெஞ்சல் பார்வையை கண்டு அதிசயப்பட்டாலும் மருமகளின் மனதின் வலியை அறிந்து அவனை கண்டன பார்வை பார்க்கவும் தயங்கவில்லை. அதிலேயே ஏதோ மருமகளுக்காக நம்மால் முடிந்த ஒன்றையாவது செய்து விட்டோம் எனும் நிறைவும் கிடைக்க மகனை கண்டு கொள்ளாது மருமகளை தன் அன்பால் குளிப்பாட்ட துவங்கினார் ருத்ரா..
முதலிலிருந்தே அவருக்கு மலர் மேல் அதிக பாசம்... காரணம் தன் அண்ணனையும் அண்ணியையும் பாசமாக பார்த்து கொள்கின்றாள் என்பதால் வந்த பாசம் இன்று தனக்கே மருமகளாகவும் அது அதிகமானதே ஒழிய இம்மியளவும் குறையவில்லை...
அது குறையும் படி அவள் நடந்து கொண்டதுமில்லை. எல்லோருடனும் பாசமாக பழகுபவள் அதுவும் தாயில்லாமல் வளர்ந்தவளுக்கு தாயை போன்று பாசம் காட்டிய அத்தையை மிகவும் பிடித்து விட்டது... அதனாலேயே அவருடன் அதிகம் ஒட்டி கொள்வாள்... ஆனால் இடையில் எதுயெதுவோ நடந்து எல்லாமே கோணல் மாணலாய் முடிவுற்றிருந்தது.... ஆனால் இப்போது மீண்டும் அவர்களது பாசப்பிணைப்பு துளிர்த்தெளுந்திருந்தது....
வாயிற்கதவினருகில் நின்று மனைவியை ஆசையுடன் ரசித்து கொண்டிருந்தான் யுத்கார்ஷ்... அதை தற்செயலாய் பார்த்த சித்தார்த் மகனை முறைத்து கொண்டு “எதுக்கு வெளியிலேயே நிற்கணும் பார்க்கனும்னா உள்ள வர வேண்டியது தானே...” என மகனை சீண்ட....
தந்தையின் பேச்சை கேட்டு அவரை முறைக்க அதே நேரம் மலர் அவனை திரும்பிப் பார்க்க மீண்டும் ஒரு சொதப்பாலா என தலையிலேயே அடித்து கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.