All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று நடந்த விபத்தில் அவனுக்கு பெரிதாய் எதுவும் ஆகவில்லை என்றாலும் ஒரு கை அதிக வலியை கொடுத்துக் கொண்டு தான் இருந்தது... அதை தாங்க முடியாமல் மருத்துவரிடம் சொல்லி மாத்திரை எழுதி வாங்கியவனுக்கு அதை உண்டதில் இருந்து தூக்கம் கண்களை சுழற்றி கொண்டு இருந்தது...


ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. தூக்கமும் வருகின்றது ஆனால் தூங்கவும் முடியவில்லை என விசித்திர நிலையில் இருந்தவன் மனைவி நான் தூங்க போகிறேன் என்றதும் ஆவலாய் அவள் முகத்தை ஏறிட்டான்.


அதில் எதுவும் புரியாமல் அவள் அவனை பார்க்க அவனோ தயக்கம் மேலிட அதை எப்படி மனைவியிடத்தில் கூறுவது என புரியாமல் “அது... அதுவந்து...” என இழுக்க அதில் ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள் மலர்.


‘தன் கணவனா இப்படி திக்கித்திணறி பேச கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது... என்னவாயிற்று இவருக்கு... யாரையாவது திட்டவேண்டுமென்றால் தான் இவர் வாய் திறக்குமோ.... அப்படித்தான் இருக்க வேண்டும்... மத்த நேரங்களில் தான் பேசுவதற்கு கூட லஞ்சம் வாங்குபவராயிற்றே.... சரியான சிடுமூஞ்சி...’ என எண்ணியவள் அவன் விட்ட பேச்சை தொடராது அப்படியே இருக்கவும் “அதான் வந்திட்டீங்களே... சொல்லுங்க...” என உந்த...


அதில் தன் தயக்கம் விலகியவனாய் “நான்... நான் உன்மடியில படுத்துக்கட்டுமா...” என முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டு சன்ன குரலில் தவிப்புடன் கேட்டவனை பார்த்தவளுக்கு கண்களில் குளம் கட்டியது...


அதை மறைத்தவளாய் தாய்மை பெருக்குடன் “ம்ம்” என தலையசைத்தவள் கட்டிலில் ஏறி அமர அவன் தயக்கத்துடன் அவள் மடியில் படுத்து அவளின் இடையை கட்டிக் கொண்டான்.


அதில் அவளுக்கு எதுவும் தோன்றவில்லை மாறாக ஒரு சிறு குழந்தை தூக்கம் வரவில்லை என தன் தாயின் அரவணைப்பை நாடியது போல் இருந்தது... அதில் அவனின் தலையை மெல்ல கோதிக் கொடுக்க ஆரம்பித்தவளுக்கு கணவன் சற்று முன் தயங்கி தயங்கி கேட்டது நினைவு வந்து நெஞ்சில் வலியை உண்டாக்கியது...


‘எத்தனை பெரிய பணக்காரர்... என்னிடம் போய் யாசகம் கேட்பது போல் கேட்டுவிட்டாரே... நான் அவரின் கால் தூசி கூட பெறமாட்டேன்... என்னிடம் போய் அவரை ஏங்க வைத்துவிட்டாயே...’ என எண்ணியவளுக்கு கண்ணில் நீர் மல்கினாலும் இமை சிமிட்டி அதை கட்டுப்படுத்தியவளுக்கு தன் கடந்த கால நினைவலைகள்...


முதல் முதலாய் யுத்கார்ஷை பார்த்து விட்டு வந்ததிலிருந்து அவளின் நெஞ்சுக்குள் அவளறியாமல் காதல் மெல்ல மெல்ல குடியேற அதை தடுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் அதை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தனக்குள்ளே வாடுபவளுக்கு அன்றிலிருது அவளின் டயரி தான் துணையாய் மாறியது...


ஒவ்வொரு இரவிலும் தன் மனதில் தோன்றும் கற்பனைகளை எல்லாம் பென்சில் மூலம் வரைந்து வைப்பவள் அவனை பார்க்க வேண்டுமே எனும் ஏக்கம் வரும் போதெல்லாம் அதை ஆசை தீர வருடிக் கொடுப்பாள்..


அவளின் அந்த கற்பனை காட்சிகளில் இதுவும் ஒன்று... தன்னவன் தன் மடிசாய தான் அவன் முடி கோத இருவரும் பல கதை பேச என விதவிதமாய் வரைந்து தள்ளி வைத்திருக்கிறாள்... அதை இப்போது நினைத்ததும் அவளின் கண்ணில் இருந்து ஒற்றை துளி கண்ணீர் அவன் கன்னத்தில் விழ அது தெரிந்தும் அசையாமல் படுத்தவனுக்கு மனைவியின் மனம் மேலும் தெளிவாய் விளங்கிற்று...


மனைவியின் ஒற்றை துளி கண்ணீர் தன் கன்னத்தில் விழுந்தும் அசையாது படுத்துக் கிடந்த யுத்கார்ஷின் மனம் தன்னவளின் காதலுக்காய் ஏங்கியது.


இதுவரைக்கும் யாரிடம் எதுவும் கேட்டு வாங்கியதில்லை அவன்... கேட்பதற்கு முன்பே அது அவன் கைகளுக்கு வந்துவிடுவதால் அவன் யாரிடமும் எதற்காகவும் ஏங்கிக் கொண்டு நின்றதில்லை.


இன்றும் மனைவியின் மடியில் துயில் கொள்ள வேண்டும் எனும் சிறு ஆசை மனம் முழுக்க பரவியிருந்தாலும் அதை மனைவியிடம் எப்படி கேட்பது என புரியாமல் தவிக்க துவங்கினான்.


இதுவரையிலும் யாரிடமும் எதையும் கேட்டு பெறாதவனாயிற்றே.... அதனால் வந்த தயக்கம் என்றாலும் தான் போய் மனைவியிடம் கேட்பதா எனும் சிறு சுணக்கமும் அதில் அடங்கித் தான் இருந்தது...


ஆனால் அவனின் காதல் கொண்ட மனமோ அவனின் சுணக்கத்தை போக்கி காதலில் ஈகோ பார்க்க கூடாது என அவனுக்கு புரியவைத்து மனைவியிடம் கேட்கவும் வைத்து விட்டது...


அதுவும் கேட்டு முடிந்ததும் அவனுக்கு சிறு படபடப்பாய் தான் இருந்தது... எங்கே மனைவி முடியாதென கூறிவிடுவாளோ எனும் பயம் தான்... இல்லை எடக்காய் ஏதாவது பேசிவிட்டால் போதும் அத்துடன் அவன் மனமும் முற்றிலும் மாறிவிடும்... தான் கேட்டு யாராவது இல்லை என்றால் அது எத்தனை பெரிய அவமானம் தனக்கு என்பது அவன் எண்ணம்... ஆனால் மனைவி ஒன்றும் பேசாது தன்னை மடியில் படுத்துக் கொள்ள கூறவும் ஏதோ பெரிய சாதனை செய்ததை போன்று இருந்தது அவனின் உள்ளம்...


அதே மனநிலையில் இருந்தவன் அப்படியே அவளின் காதலையும் அவளின் வாய் வார்த்தையால் பெற காத்திருந்தான்... ஆனால் அதையே தன் மனைவி தன்னிடமும் எதிர்பார்க்கின்றாள் என்பது அந்த கள்வனுக்கு புரியவில்லையோ.....


அவனின் முடியை கோதிக் கொடுத்துக் கொண்டிருந்தவளுக்கு தூக்கம் கண்களை சுழற்ற அப்படியே இருந்தவாறே துயிலில் ஆழ்ந்தாள்... அவனுமே அவள் விரல்களின் ஸ்பரிசத்தில் சுகமாய் துயில் ஆழ்ந்தான்..


இருவருக்குள்ளும் கடளவு நேசம் இருக்கின்றது... ஆனால் அதை வெளிப்படுத்தத் தான் இருவருமே முயற்சிக்கவில்லை.


கணவன் மனைவியின் வாயிலிருந்து அவளின் காதலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். பெண்ணவளோ இயல்பான வெட்கம் காரணமாய் தன்னவனின் வாய் வார்த்தை மூலம் அவனின் காதலுக்காய் காத்திருந்தாள்.


ஆகமொத்தத்தில் இருவருமே மற்றவரின் வாய் வார்த்தைகாக்க காத்திருந்தனரே தவிர தங்கள் இணையிடம் தங்களை வெளிபடுத்த முயலவில்லை.


அதுவரைக்கும் விதி இவர்களை விட்டு வைக்குமா?



கள்வன் வருவான்.............
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 28


மறுநாள் காலை யாருக்கும் காத்திராமல் அழகாய் விடிய அந்த விடியல் யாரிற்கு எதை வைத்து காத்திருக்கின்றது என்பதை யாராலும் கணிக்க முடியாமல் போனது...


காலையில் வெகுவிரைவிலே கண்விழித்த யுத்கார்ஷ் தன்னருகில் துயிலில் ஆழ்த்திருந்த மனைவியை நோக்கினான்.s


காற்றில் சேலை விலகி அவளின் பெண்மையின் அங்கங்களை அவனுக்கு வெட்ட வெளிச்சமாய் படம்பிடித்துக் காட்டிக் கொண்டிருக்க அதை பார்த்தவனின் கண்களில் தன்னவளின் மென்மையை எண்ணி தாபம் வழிந்து கொண்டிருந்ததது..


அவளின் மார்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் பார்வை கீழிறங்கிச் சென்று அவளின் மெல்லிடையில் பதிய அதை பார்த்தும் அவனின் கைகள் பரபரவென அவளின் மென்மையை ஆராய துடிக்க அதை தாளமுடியாமல் மெதுமெதுவாய் அவளருகில் நகர்ந்தவன் அவளின் மெல்லிடையில் தன் கரங்களை பதித்தான்.


பெண்ணவளின் மென்மையான மெல்லிடையில் ஆணவனின் வன்மையான கரங்கள் பதிந்து அவளுக்கு சிலிர்ப்பை உண்டாக்க அதை தாளமுடியாமல் பெண்ணவள் தூக்க கலக்கத்தில் நெளிய ஆரம்பிக்க அதில் தன்னை மறந்தவன் அவளின் இடையில் தன் விரல்களால் கோலமிட ஆரம்பித்தான்.


அவனின் சில்மிஷத்தை தூக்க கலகத்திலும் உணர்ந்த மலரோ அவனின் கைகளை தட்டி விட்டு அவன் புறம் திரும்பி படுக்க அந்த செய்கையில் மெல்ல இதழ்களில் புன்னகையை படர விட்டவன் அவளின் மார்பில் முகம் புதைத்து மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மலரோ நெஞ்சில் ஏதோ உரசுவது போல் இருக்க உடலை ஆட்டி அதை விரட்ட முயற்சித்தவள் அது முடியாமல் போகவும் சிரமப்பட்டு கண்களை மலர்த்திப் பார்க்க அங்கு அவளின் மார்பை தஞ்சமாக்கி துயிலில் ஆழ்ந்திருந்தான் அவளின் கள்வன்...


அதை பார்த்தும் உடல் கூச்சத்திலும் வெட்கத்திலும் நெளிய ஆரம்பிக்க அதில் அவனின் இதழ்கள் அவளின் அங்கங்களை உரசிப்பார்த்து அவளுள் அச்சத்தையும் தகிப்பையும் சரிசமமாய் விதைக்க அதற்கு மேல் தாங்கமாட்டாதவளாய் அவளின் தோளை சுரண்டி அவனை எழுப்ப முயற்சி செய்தாள்.


மனைவியின் உடல் குளிர்ச்சியில் தன்னிலை மறந்து கண்மூடி கிறங்கிப்போய் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு மனைவியின் சுரண்டல் கிச்சு கிச்சு மூட்டுவது போல் இருக்க இதழ் பிரித்து சிரித்தவன் “கொஞ்ச நேரம் சின்னு ப்ளீஸ்...” என முணுமுணுத்தவாறு அவளுள் மேலும் அழுத்தமாய் புதைய அதில் அவள் தான் விதிர்விதிர்த்து போனாள்.


அவனை எப்படி எழுப்புவது என புரியாமல் திணறியவள் மீண்டும் சுரண்ட முயற்சித்து தோல்வியை தழுவ என்ன செய்வதென யோசிக்கலானாள்.


இதுவரையிலும் அவள் அவனுடன் நெருக்கமாய் பழகியதில்லை... அவனும் தான். இருந்தாலும் அவன் சட்டென தன் உரிமையை நிலைநாட்டி விட்டிருந்தான். ஆனால் அவளால் அது முடியவில்லை... என்ன தான் தான் அவனை காதலித்திருந்தாலும் அவன் தன் தேவிம்மாவின் காதலன் என்ற நிலையில் தள்ளித்தான் இருந்தாள்.


ஆனால் காதல் கொண்ட பெண்ணவளுக்கு அவனின் தொடுகை மயக்கத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்தி அவள் விலக முயற்சித்தாள் அவன் வீறு கொண்டு எழுந்து அவளை சித்திரவதை படுத்தி தன் கீழ் கொண்டு வந்திருந்தான்...


அதன் பின்னும் அவள் ஒதுங்கிப் போனாலும் அவன் சீண்டி அவளை தன் வழிக்கு கொண்டுவந்திருந்தான். இப்போது கூட அவள் மார்பில் முகம் புதைந்து தூங்கிக் கொண்டிருக்கின்றானே..


ஆனால் அவளால் அது முடியவில்லை.. முன்பு கணவன் தொடும் போதிருந்த மயக்கம் இப்போதுமே இருந்தாலும் இப்போது அதனுடன் சேர்ந்து ஒருவித தயக்கமும் பயமும் வந்திருந்தது... அது எதனால் என்றும் அவளுக்கு தெரியவில்லை. ஒருவேளை தன்னை ‘வேசி’ என்று தன் பெண்மையை தன் கற்பை இகழ்ந்ததாலோ என்று கூட அவள் யோசித்து பார்த்து விட்டாள். ஆனால் இதுவரையிலும் அது ஏனென்று அவளுக்கு புரியவில்லை.


இப்பொது அவனை எழுப்ப வேண்டும் என உடலும் உள்ளமும் பரபரத்தாலும் அவளுக்கு அவனை என்ன சொல்லி அழைப்பது என்று கூட புரியவில்லை. இதுவரை அவனை அழைத்து பழக்கமும் இல்லையே... என்ன செய்வதென தலையை தட்டி யோசித்தாள்.


‘இவர இப்போ எப்பிடி எழுப்புறது... இப்பிடி அசந்து தூங்கி நான் இதுநாள் வரைக்கும் பார்த்ததில்லையே...’ என அவள் எண்ணமிட அவளின் ஆஸ்தான மனசாட்சியோ ‘ஏதோ அவன் கூட பழகாலம் பழகின மாதிரியே பில்டப் விர்றியே மலரு... இதெல்லாம் ரொம்பே ஓவர்... ம்ம்... அவளோ தான் சொல்லிட்டேன்... அதுமட்டுமில்ல கண்ணு... நான் அன்னைக்கு எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன்.. அவன் இருக்கிற பக்கம் தலைவச்சிக் கூட படுக்காதேன்னு... நீ கேக்கிறியா... நான் சொல்றதெல்லாம் வலக்காதுல வாங்கி இடக்காதால வெளியே விட்டுறியே.... நான் சொல்றத நீ என்னைக்கு கேக்க போறேன்னு எனக்கு தெரியல மலரு... ஆனா ஒன்னு நீ மட்டும் அவன் பக்கம் தலை வச்சி படுத்திருக்கேலேன்னா இப்பிடி ஒரு நிலைமை உனக்கு வந்திருக்குமா...’ என அவளை ஓட்ட..


அதை கேட்டு உதட்டை சுழித்தவள் ‘என்ன நினைச்சிட்டு இருக்க நீ... அதுயென்ன எப்போபாரு அவர பத்தி எதாவது சொல்லிக்கிட்டே இருக்க... அவரு என் புருஷன்... நான் என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.. நீ கொஞ்சம் அடக்கிவாசி... அவரு என்ன கட்டிப்பிடிச்சு தூங்கினா என்ன தூக்கி சுத்துனா உனக்கென்ன... பேசாம உன்வேலைய பார்த்திட்டு போவியா... அதவிட்டிட்டு வந்துட்டா வெட்டி பஞ்சாயத்து பேச...” என தன் மனசாட்சியை அடகியவள் மீண்டும் கணவனை ஏறிட்டு பார்த்தாள்.


சீராக திருத்தமாய் வடிவமைக்கப்பட்ட முகமும் சீராய் ஏறியிறங்கி கொண்டிருந்த மூச்சும் என நிர்மலமாய் தூங்கிக் கொண்டிருந்த கணவனை பார்த்து செல்லமாய் சிரித்தவள் ‘தூங்கும் போது தான் ஒருத்தங்க எப்பிடி பட்டவங்கன்னு கண்டுபிடிக்க முடியுமாம்... ஆனா நீங்க தூங்கும் போது கூட நீங்க எப்படிபட்டவருன்னு என்னால கண்டுபிடிக்க முடியல... நீங்க ரொம்ப விசித்திரமான பிறவி தாங்க... யாராலையும் உங்கள அவ்ளோ சீக்கிரம் கண்டு பிடிக்க முடியாது... உங்க... உங்ககிட்ட ஒன்னு சொல்லட்டுமா... நீங்க எவ்ளோ அழகு தெரியுமா... நான் உங்கள பார்த்திலிருந்து இப்பிடித்தான் கிறுக்கு பிடிச்ச மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்... உங்களுக்கு என்னோட காதல் புரியுதா... உங்களுக்கு என்ன பிடிக்குமா... நான் உங்களவுக்கு பணத்துல வசதியில கௌரவத்துல அந்தஸ்த்தில எதுலையும் உங்களுக்கு பொருத்தமில்லன்னாலும் நான் உங்கமேல வச்ச அளவு கடந்த காதல் தாங்க என்னோட ஒரே ஒரு தகுதி... எப்போங்க உங்களுக்கு என்னோட வலி புரியும்..” என தனக்குள் பேசிக் கொண்டிருந்தவள் மீண்டும் அவனை எப்படி அழைக்கவென யோசிக்கலானாள்.


‘என்னன்னு இவர கூப்பிடுறது... அத்தான்னு சொல்றதா... இல்ல பாவா... இல்லன்னா மாமா... எது நல்லா இருக்கும்....’ என நெடுநேரம் யோசித்தவள் அவனின் தோளை தொட்டு “பாவா” என மென்மையாய் அழைக்க அது அவன் காதில் விழுந்ததோ என்னவோ அவளின் கையை சுண்டி இழுத்து தன் மேல் கிடத்திக் கொண்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.


அதை பார்த்து அதிர்ச்சியானவள் “என்னங்க பண்றீங்க.... அப்போ இவ்ளோ நேரமா நீங்க தூங்கிற மாதிரி நடிச்சிக்கிட்டா இருந்தீங்க... சரியான...” என ஏதோ சொல்ல இழுத்தவள் அதை பாதியிலே உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டு ‘நானே நேரமாயிடிச்சு எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு சங்கடத்துல இருக்கேன்... காலங்காத்தால இந்த மனுஷன் வேற...’ என தனக்குள் எண்ணுவதாய் நினைத்து சத்தமாகவே பேசியவள் அவனிடமிருந்து பிரிந்து விலகி அவனுக்கு இதழை சுழித்து பளிப்பு காட்டிவிட்டு குளியறைக்குள் நுழைந்து கொண்டாள்.


அவள் அவசரவசரமாய் விலகியதை எண்ணி உடல் குலுங்க அட்டகாசமாய் சிரித்தவன் மகள் மெல்லாமாய் சிணுங்கவும் அவளை தன் கைகளில் ஏந்தி கொஞ்ச ஆரம்பித்தான்.


குளியறைக்குள் நுழைந்தவளுக்கு இன்னும் அந்த படபடப்பு குறைந்த பாடாய் இல்லை. கணவனின் சிரிப்பு சத்தம் தன்னை தொடர்வது போலிருக்க மூடிய கதவில் சாய்ந்தவள் மூச்சை ஆழ இழுத்து விட்டு தன்னை நிலைபடுத்திக் கொண்டாள்.


வெளியில் இருந்த யுத்கார்ஷ் மெதுவாய் தான மகளை கையில் ஏந்திக் கொண்டு “என்னோட ஸ்வீட் பேபி ஏன் க்ரை பண்றா... மம்மி காணோமா... எங்க பேபியோட மம்மி காணோமா... மம்மி வரட்டும்... வந்த உடனே என்னோட செல்ல பேபி மம்மிய திட்டுவீங்களாம்... ஓகே வா...” என அதனுடன் விளையாடியவனின் குரல் உள்ளிருந்தவளின் செவியை எட்ட அதில் புன்னகைத்துக் கொண்டவள் விரைவாய் குளித்து விட்டு அவன் கையிலிருந்த குழந்தையை கையில் வாங்கியவள் குந்தையுடன் கீழிறங்கி சென்றுவிட்டிருந்தாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“மசமசன்னு நிக்காம அவசரமா குளிச்சிட்டு கீழே வார வழியபாருங்க...” என்ற சிறு அதட்டலுடன் தான். அதை கேட்டு சிரித்தவனுக்கு மனதுக்குள் அத்தனை மகிழ்ச்சி.


‘இப்போ தான் சின்னு கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வார... அப்பிடியே வந்து என்கிட்டே உன்னோட காதலையும் சொல்லிட்டேனா அப்றோம் இந்த உலகத்திலேயே சந்தோசமான ஆளா நான் மட்டும் தான் இருப்பேன்....’ என உற்சாகத்துடன் எண்ணியவன் தானும் குளித்து விட்டு கீழிறங்கி சென்றான்.


அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மூத்த தலைமுறையினர் இவன் வரவும் சாப்பாட்டு அறை நோக்கி சென்று உணவில் கவனம் செலுத்த அவனும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.


தன்னவளின் வருகையின் பின் தான் மொத்தமாய் மாறிவிட்டிருக்கிறோம் என உணர்ந்த யுத்கார்ஷ் மனைவியை பார்த்து கண்சிமிட்ட அதை பார்த்து பதறியவள் தன் கையிலிருந்த பழம் வெட்டும் கத்தியை யாரும் அறியாதவாறு அவனிடம் காட்ட அதை பார்த்து கப்சிப்பென அடங்கிப் போய்விட்டிருந்தான் அவன்.


அதை எதேர்ச்சியாய் பார்த்த ருத்ரா ‘பரவாயில்ல நம்ம மருமக என் பையனையே அவ வழிக்கு கொண்டுவந்திட்டா இப்பிடியே இந்த பொண்ணு என் பையனை அடக்கயொடுக்கி வச்சிருக்கணும் கடவுளே...’ என அவர் மானசீகமாய் கடவுளை வேண்ட அந்த நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கடவுளும் ‘உன் வேண்டுதல் பலிக்கட்டும்...’ என அவரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார்.


பெரியவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்ல தயமயந்தி தன் பேத்தியை கையில் அள்ளிக்கொண்டு மருமகனுக்கு மகளுக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றார்.


அனைவரும் அங்கிருந்து அகன்றதும் மனைவியை பார்வையால் பருகுபருகுவென பருகியவனின் பார்வை அதிக நொடிகள் அவளின் மெல்லிடையிலேயே குடிகொண்டு மீண்டது.


அதில் தன்னை அடக்க முடியாதவனாய் “ஒய் பொண்டாட்டி...” என விஷம குரலில் அழைக்க அதை கேட்டு அதிர்ந்து அவனை நோக்கியவள் சிறிது நேரத்தில் முறைக்க ஆரம்பிக்க அதை பார்த்து “எதுக்கு முறைக்கிறடி பொண்டாட்டி...” என மீண்டும் சரசமாய் வினவ...


அதில் கோபத்துடன் அவனருகில் வந்தவள் “என்ன.... என்னாச்சு உங்களுக்கு... என்ன!... திடீர்னு நான் பொண்டாட்டி ஆயிட்டேன்... நீங்க கொஞ்ச நாளா சரியாவே இல்ல...” என படபடத்தவள் “ஆமா உங்களுக்கு தலையில எதாவது அடிபட்டிருக்கா...” என கேள்வியாய் வினவ....


அவள் எதற்காக கேட்கிறாள் என புரியாதவனாய் “எதுக்கு இப்போ திடீர்னு சம்மந்தமில்லாம இப்பிடி ஒரு கேள்வி கேக்கிற...”


“சம்மந்தமில்லாமலா.... அதெல்லாம் சம்மந்தமிருக்கு.... நான் ஏன் அப்பிடி கேட்டேன்னா நீங்க சட்சட்டுன்னு மாறிப் போயிடுறீங்க... இந்த வானிலை இருக்கில்ல வானிலை அது மாதிரி... அதான் கேட்டேன்... சில நேரம் ரொம்ப நல்லா இருப்பீங்க... அப்றோம் சிடுசிடுன்னு எரிஞ்சு விழுவீங்க... திடீர்னு மூக்குக்கு மேல கோபம் வரும்... அப்றோம் பேக்கு மாதிரி சிரிச்சிக்கிட்டு லூசுத்தனமா எதையாவது செய்வீங்க... நீங்க உங்க மனசுல என்னதான் நினைச்சிருக்கீங்க... எப்போவும் ஒரே நிலையில இருக்கமாட்டீங்களா...” என கையை அசைத்து அசைத்து பேசிக்கொண்டிருக்க அதை கண்கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் யுத்கார்ஷ்.


‘வாவ்... சூப்பர் பேபி... ரொம்ப நல்லா பேசுறடி... நான்கூட நீ கொஞ்சமே கொஞ்சமாத்தான் பேசுவியோன்னு நினைச்சேன் பேபி... ஆனா பரவாயில்ல நீ நல்லாவே பேசுற...’ என உள்ளங்கையில் முகத்தை தாங்கிக் கொண்டு உள்ளுக்குள் அவளை ரசித்தவாறு மனதுக்குள் எண்ணியவன் அவளை ஆழ்ந்து நோக்கினான்.


அவனின் ஆழ்ந்த கூர்மையான இதயத்தை துளைக்கும் பார்வையில் தானாகவே தலை கவிழ தரை நோக்கி பார்வையை செலுத்திக் கொண்டிருந்தவளை அழுத்தமான காலடியோசையுடன் நெருங்கினான்.


அவனின் காலடியோசை கேட்டு அவனை கலவரத்துடன் நோக்கியவள் ‘உனக்கு தேவையில்லாத வேல மலரு... அவர் எப்பிடி கூப்பிட்டா உனக்கென்ன... நீ பேசாம இருக்க வேண்டியது தானே... அத விட்டிட்டு சும்மா இருந்த சிங்கத்த சொறிஞ்சி விடவா சொறிஞ்சி விடவான்னு கேட்டு சீண்டி விட்டிட்டியே.... சும்மாவே மூக்குக்கு மேல கோபம் வரும்... இதுல நான் வேற கொஞ்சம் அதிகப்படியா பேசிட்டேன்... இனி என்ன ஆகபோகுதோ....’ என அதிர்வுடன் எண்ணிக் கொண்டு இன்னும் அழுத்தமாய் தலைகுனிந்து நின்றவளை பார்த்து கள்ள சிரிப்பு சிரித்தவன் அவளருகில் நெருங்கினான்.


அவன் அருகில் நெருங்கவும் இறுக கண்களை மூடிக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டவள் உடல் நடுங்க கைகளை இறுக அழுத்திக் கொண்டிருக்க அவளருகில் நெருங்கியவனோ அவள் அழுந்த பற்றிக் கொண்டிருந்த கைகளை மென்மையாய் பற்றி ஒவ்வொரு விரலாய் அதை நீவி அவளின் இறுக்கத்தை தளர்க்கிறேன் எனும் பெயரில் அவளின் கூச்சத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தான்.


அவனின் செய்கையில் நெஞ்சுக்குழி ஏறியிறங்க அவனை கூச்சத்துடன் ஏறிட்டவள் “எ... என்ன பண்றீங்க... வி...விடுங்க...” என கையை உருவ முயற்சிக்க அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.


பார்ப்பவர்களுக்கு அது மென்மையானது போல் தோன்றினாலும் அவன் அத்தனை அழுத்தமாய் அவளின் கைகளை பற்றியிருந்தான். அதனுடன் சேர்த்து அவள் விரல்களையும் நீவிக் கொண்டு...


அதில் உடல் கூச நின்றிருந்தவள் “எதுக்கு புதுசா இப்பிடியெல்லாம் பண்றீங்க.... கை... கைய விடுங்க...” என கூச்சத்துடனும் லேசான அச்சத்துடனும் கெஞ்ச அதை சட்டை செய்யாதவன் “நீ புதுசா பேசும் போது நானும் புதுசா ஏதாவது பண்ணனும்ல அதான்...” என்றவன் “நல்லா இருக்கா...” என ஹஸ்கி வாய்சில் கேட்க அதில் அவனை கோபத்துடன் ஏறிட்டவள் “கொஞ்சங்கூட நல்லா இல்ல.... போதுமா... முதல்ல என் கைய விடுங்க... ஆளப்பாரு ஆள... புதுசா பண்ணபோறாராம் புதுசா...” என உதட்டை வளைத்து அவனுக்கு பழிப்புகாட்டியவள் அவன் தன் பிடியை தளர்த்தவும் கையை உறுவிக் கொண்டு அவனை உரசியபடி நகர்ந்தவள் தன் பின்னலிட்ட கூந்தலை அலட்சியமாய் பின்னால் தூக்கிப் போடா அதுவோ சரியாய் அவன் முகத்தினை தீண்டிவிட்டு நகர்ந்தது...


அதில் அவன் முடியில் போட்டிருந்த ஏதோவொன்றின் வாசம் அவனை பித்தம் கொள்ள செய்ய அதை கண்மூடி ரசித்தவன் “என்ன சாம்பு யூஸ் பண்ற பேபி....” என அதே கிறக்கமான குரலுடன் வினவ அதில் பின்னால் திரும்பி அவனை முறைத்தவள் ‘அது எதுக்கு உங்களுக்கு...’ என அவனைப்போல பார்வையாலேயே வினவி வைக்க அதை உள்ளுக்குள் அணுஅணுவாய் ரசித்தவன் “எதுக்கு கேக்கபோறேன்னு தெரியாதா பேபி...” என காந்த சிரிப்புடன் கேட்க...


“எனக்கெப்பிடி தெரியும்... நீங்கதான் எப்போ எப்பிடி மாறுவீங்கன்னு எனக்கு தெரியாதுன்னு சொன்னேனே... அதுக்குள்ள மறந்துபோச்சா... இதுக்குள்ள பெரிய உலகம் போற்றும் தொழிலதிபர்னு பேரு வேற.... நான் ரெண்டு நிமிஷத்துக்கு முன்னால சொன்னதையே உங்களால ஞாபகம் வச்சுக்க முடியல்லன்னா அப்றோம் எப்பிடி இத்தன தொழில் பண்றீங்க... பிரச்சின ஏதாவது வந்திடமாட்டாதா.... அதனால நீங்க என்ன பண்றீங்கன்னா தினமும் சீக்கிரமா எழுந்திரிச்சி உங்க ஆபிஸ் பைலு எல்லாத்தையும் சரியா பாருங்க... காலைல சீக்கிரம் எழுந்து படிச்சா படிக்கிறதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும்னு என் அம்மா சொல்லுவாங்க... என்ன நான் சொல்றது புரியுதுல்ல...” என படபட பட்டாசை வார்த்தைகளை கொட்டியவள் “இப்போவாவது நான் கெளம்பட்டுமா...” என கேட்க அவனோ அவளை கடுப்பாய் முறைத்து வைத்தான்.


‘இப்போ எதுக்கு இவரு என்ன இப்பிடி முறைக்கிறாரு...’ என தெரியாமல் அவனை கேள்வியாய் நோக்க அவளது அந்த செயலில் தன்னை தொலைத்தவன் ‘ரசிக்கிறத்துக்கும் விடமாட்டீங்கிறா.... கோபப்படக் கூட விடமாட்டீங்கிறா... இவள....’ என செல்லமாய் பல்லைகடித்துக் கொண்டு அவளை பார்த்து இளித்து வைக்க அதில் அவள் தான் மீண்டும் குழம்பிப் போனாள்.


‘ஐயோ... இந்த மனுஷன பெத்தாங்களா செஞ்சாங்களான்னு தெரியலையே... இப்போதான் இவர கணிக்க முடியாதுன்னு சொன்னேன்... ஆனா உண்மையும் அது தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிறக்கமா பேசினாரு... இப்போ முறைக்க தோங்கிட்டு இளிச்சு வைக்கிறாரு... அடியே மலரு இன்னும் கொஞ்ச நேரம் இவரு கூட இருந்த அவர மாதிரி நீயும் மாறிப்போய்டுவ.... சீக்கிரம் இந்த இடத்த விட்டு போறவழிய பாரு புள்ள’ என தனக்குள் எண்ணிக் கொண்டவள் அடுத்த அந்த இடத்தை விட்டு ஓடியே போய்விட்டிருந்தாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை பார்த்து சிரித்தவன் ‘மை ஸ்வீட் க்ரேஷி’ முணுமுணுத்தவன் அங்கு கூடையில் அடுக்கி வைக்கபட்டிருந்த விதவிதமான பழங்களில் ஆப்பில் பழமொன்றை எடுத்து கடித்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.



இன்று அலுவலகம் செல்லாததால் முக்கியமான மெயில்கள் சில வந்த வண்ணமிருக்க தன் மடிகணனியினுள் மூழ்கிப் போனான். இத்தனை நேரம் மனைவியுடன் இருந்ததில் மனைவியை சுற்றி மட்டுமே ஓடிய எண்ணங்கள் அலுவலக வேலைகளில் ஈடுபட்ட நொடி ஒரு சிறந்த தொழிலதிபனுக்குறியதாய் மாறிப் போய் இருந்தது.



அதில் தனக்கு நடந்த விபத்தை குறித்த எண்ணங்கள் வரிசையாய் படமாய் ஓட அதை மறுபடியும் மறுபடியும் ஓடவிட்டு பார்த்தவனுக்கு அப்போது தான் மூளையில் மணியடித்து.



தன் எண்ணங்களை ரீவைண்ட் செய்து பார்த்தவன் ஓரிடத்தில் அதை புஷ் பண்ணி வைத்தான். அது வேகமாய் வந்த லாரி. அதை அப்படியே ஜூம் செய்து பார்த்தவன் அந்த லாரிகாரனின் முகத்தை நன்றாக உற்று பார்த்தான். அவனின் முகத்தை எங்கோ பார்த்தது போலிருக்க ‘எங்க... எப்போ பார்த்தோம்.... அன்னைக்கா... இல்ல அதுக்கு முன்னாடியா...’ என ஆட்காட்டி விரலால் நெற்றியை தட்டி யோசித்தவனுக்கு பல எண்ணங்கள் ரெண்டும் வரிசையாய் தோன்ற அதில் இதற்கு முன்பு நடந்த விபத்தை குறித்த சம்பவங்களும் வரிசையாய் ஓட ‘ஒருவேளை இதுக்கும் அதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா... இல்ல ரெண்டும் வேற வேறயா...’ என தீவிரமாய் சிந்தித்தவன் அந்த லாரிகாரனை சந்தித்த நிகழ்வுகளை மனதினுள் ஓட்டிப் பார்த்தான்.



“இதுமட்டும் எங்க பாஸுக்கு தெரிஞ்சது உன்ன சும்மா விடமாட்டாரு...” என்ற அவனின் கூற்று மனதினுள் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க அதனுடன் சேர்த்து அவனை தான் சந்திக்க சென்று அதை பாதியில் விட்டதும் நினைவு ‘ஷிட்’ என தான் இருந்த சோபாவில் பலம்கொண்டு கொண்டு குத்தியவனுக்கு ‘இதற்கு பின்னால் ஒருவன் இருக்கிறான்’ என்பது மட்டும் தெள்ளதெளிவாய் புரிந்தது.



ஆனால் அது யாரென்று அவனுக்கு புரியவில்லை. தொழிலில் அவன் நிறைய எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கிறானே. தனக்கு எதிராய் ஒருவன் சுண்டு விரலை நீட்டினாலே அவன் நீட்டிய விரலையே கண்டம் துண்டமாய் வெட்டி வீசுபவனுக்கு பல எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதில் யார் இப்படியெல்லாம் செய்கின்றனர் என்பது தான் அவனுக்கு புரியவில்ல. அதிகமானோர் அவனுடன் மோதுவதற்கு பயந்தே பின்வாங்கி விடுவார்கள். இன்னும் சிலர் அவனிடம் மோதி மரண பயத்தை பெற்று அவன் பாதையிலிருந்தே விலகி விடுவார்கள். அப்படி இருக்கும் போது இது யார் அந்த கண்ணுக்கு தெரியாத புது எதிரி என தீவிரமாய் யோசித்தவன் தன் சீப் செக்யூரிட்டியை அழைத்து அன்று நடந்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டவனுக்கு தலைவலி மண்டையை பிளந்தது.


இந்த விபத்தை பற்றி யோசித்ததிலேயே அவனுக்கு தலைவலி வந்துவிட்டிருந்தது. தலையை அழுந்த பிடித்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தமர்ந்தவன் இண்டர்காமில் சமையலறைக்கு அழைத்து காபி கொண்டு வரச் சொன்னவன் கண்களை மூடி ஓய்வெடுத்தான்.


ஆனால் ஓய்வுக்கு பதிலாக மூடிய விழிகளுக்குள் மனைவியின் மலர் முகமே தோன்ற அதை எண்ணி சிலிர்த்தவனுக்கு மனைவியை காணவேண்டும் போல உள்ளம் பரபரக்க தலைவலியோ எழுந்து போக முடியாமல் சதி செய்து கொண்டிருந்தது.s


அதில் மீண்டும் கண்களை மூடி கனவிலாவது மனைவியை காண்போம் என எண்ணி கண்களை மூடியவனின் அறைக் கதவை தட்டிக் கொண்டு அதற்குள் நுழைந்தாள் மலர்.


அதில் தன் மனைவியை காணமுடியவில்லையே எனும் எரிச்சலில் திட்டுவதற்கு கண்களை திறந்தவனின் கண்களுக்கு முன்னால் பிரசன்னமானால் அவனின் மனையாள்.


அதில் முகம் விகசிக்க அவளை தன்னருகில் வருமாறு சைகை செய்தவன் அவள் டீபாயில் வைத்த காபியை எடுத்து அருந்த ஆரம்பித்தான்.


அவன் அழைக்கவும் மறுக்க முடியாமல் அவனருகில் அமர்ந்தவள் அவன் காபி குடித்து முடித்தும் “தலைவலியா... இப்போ பரவாயில்லையா... நான் வேணும்னா தலையை பிடிச்சி விடட்டுமா...” என கேள்வி கணைகளை தொடுக்க அதில் கையை அவள் முன்பு நீட்டி ‘போதும் போதும்’ என தடுத்தவன் “இப்போ கொஞ்சம் பெட்டர் சின்னு... நீ போய் பேபிய பார்த்துக்கோ நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்...” என்றவன் அவள் ‘சரி’ என தலையசைத்து விட்டு எழவும் “ஒன் மினிட் பேபி” என்க அதில் தன்னை திரும்பி நோக்கியவளை கைபிடித்து சுண்டி இழுத்தவன் அவள் தன் மடியினில் விழவும் தன் கைகளை அவளின் வெண்பஞ்சு கன்னத்தில் அழுந்த பதிந்து அதை மெதுவாய் வருடியவன் அவள் கன்னத்தில் விழுந்து கிடந்த முடிக் கற்றைகளை மெதுவாய்... வலிக்குமோ எனும் அளவுக்கு மெதுவாய் பற்றி அவளின் காதருகில் சொருகி விட்டான்.


அதில் அவளின் கண்கள் அந்திவானம் போல் செக்கச்செவேலன சிவக்க அதை ரசனையுடன் ஏறிட்டவனுக்கு அவனின் கன்னத்தை சுவைக்க வேண்டும் போல் ஆசை கிளம்ப அதை கட்டுப்படுத்த முடியாமல் தான் செய்த சத்தியத்தை மறந்தவனாய் அவளின் காதில் உரசிக் கொண்டிருந்த தன் கையை மெதுவாய் நகர்த்தி அவளின் பின்னந்தலையை அழுந்த பற்றியவன் அவளை முகத்தை தாபம் பொங்க ஏறிட்டான்.


ஏற்கனவே அவனின் தொடுகையில் உடல் நடுங்க கன்னங்கள் அந்திவானமாய் சிவக்க உதடுகள் பயத்தில் நடுங்க நெஞ்சுக் குழி ஏறியிறங்க முகத்தில் வியர்வை மொட்டுக்கள் அரும்ப அவஸ்தையுடன் அமர்ந்திருந்தவள் அவன் பிடரியில் கைவைக்கவும் தொய்ந்து போனாள்.


பிடிமானமின்றி அவனின் சட்டை காலரை இழுத்து பிடித்தவளின் கண்கள் அதிர்ச்சியில் மெதுவாய் சொருக அவளின் அந்த நிலையை பார்த்தவனுக்கு மோகம் இன்னுமின்னும் அதிகரிக்க அவளின் கன்னங்களின் அருகில் தன் இதழ்களை கொண்டு சென்றவன் ஒரு சில நிமிடங்கள் ஒன்றும் செய்யாது இருந்தவன் மறுநொடி அவளின் நெற்றியில் மென்மையாய் மோதினான்.


அதில் திடுக்கிட்டு கண்களை மலர்த்தியவள் தன் நெற்றியில் தலை சாய்த்துக் கொண்டிருக்கும் கணவனையே விழி மூடாது வெறித்தாள்.


அவளின் நிலையறிந்து அவளிடமிருந்து விலகியவன் தன் இரு கைகளாலும் அவளின் தலையை இறுக பற்றி “உனக்கு பிடிக்காம எதுவும் நடக்காது பேபி... முன்னெல்லாம் என்னை அறியாம ஏதேதோ தப்பு பண்ணிட்டேன்... ஆனா இனிமே எந்த தப்பும் பண்ணமாட்டேன் பேபி... ஐ ப்ராமிஸ் யு... நீ ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத... இப்போ போ... எனக்கும் கொஞ்சம் வொர்க் இருக்கு... முடிச்சிட்டு ரெஸ்ட் எடுக்கிறேன்... நீயும் போய் ரெஸ்ட் எடுத்துக்கோ பேபி...” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாய் முத்தமிட அவனை புரியாமல் பார்த்தவள் மீண்டும் ‘சரி’ என தலையசைத்து விட்டு வெளியே செல்ல எத்தனித்தவள் மீண்டும் அவன் முகத்தை ஏறிட்டாள்.


அவனோ இன்னும் போகாமல் நிற்கும் மனைவியை ‘என்ன’ எனும் விதமாய் ஏறிட்டவன் “ஏதாவது சொல்லனுமா சின்னு..” என அவளின் முகத்தை பார்த்தே ஏதோ சொல்ல தயங்குகிறாள் எனப் புரிந்து அவன் கேள்வியெழுப்ப அதில் தயக்கத்துடன் தலையசைத்தவள் “நான் கோவிலுக்கு போய் ரொம்ப நாள் ஆச்சு... அதான் இன்னிக்கு போய் வரட்டுமா... அதுவுயில்லாம நான் எங்க ஊர்ல இருக்கும் போது அடிக்கடி கோவிலுக்கு போவேன்... இங்க வந்தப்றோம் கோவிலுக்கு போகவே இல்ல.... அதான் போகட்டுமா...” என தயக்கமாய் கூறினாலும் நான் போக வேண்டும் என்ற உறுதியும் அதிலிருக்க அதை கேட்டு சன்னமான புன்னகையை இதழில் தவழ விட்டவன் தன் லாப்டாப்பை மூடி வைத்து விட்டு எழுந்து “சரி வா..” என்க... அதை கேட்டு அவனை முறைத்து பார்த்தாள் மலர்.


“எங்க வா... ம்ம்...” என அவனை முறைத்தவாறு கேட்க...


“வேறு எங்க கோவிலுக்கு தான்... வா வா... ரெடி ஆகணும்னா சீக்கரம் ரெடி ஆகிட்டு வா...” என்க...

>மறுபடியும் அவனை முறைத்து வைத்தவள் “என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க... இப்போதான் தலவலி தாங்க முடியலன்னு காபி குடிச்சீங்க... அதுவுயில்லாம இன்னமும் உங்களுக்கு தலைவலி குறையலன்னு பார்த்தாலே தெரியுது... அதுக்குள்ள வெயில்ல வேற நீங்க வரணுமா... அதெல்லாம் ஒன்னும் தேவையில்ல... நானே போய்க்கிறேன்... நீங்க கொஞ்ச நேரம் குழந்தைய பார்த்துக்கோங்க என்ன நான் சொல்றது...” என்றவள் வெளியேற எத்தனிக்க அவளின் கரம் பற்றி தடுத்தவன் “இல்ல நீ தனியா போக வேணாம் சின்னு... நான் உன்கூட வரேன்... இல்லன்னா நீ கோவிலுக்கே போக வேண்டாம்... அதுவும் நீ இருக்கிற கன்டிஷன்ல நடக்க கூடாது... சோ ப்ளீஸ்... நீ கோவிலுக்கு போக வேண்டாம்...” என அவளை போக விடாமல் தடுக்க அவளோ நான் போய்யே ஆக வேண்டும் என அடம்பிடிக்க அவள் தான் சொல்வதை கேட்க போவதில்லை என்பதை உணர்ந்தவன் “சரி... வா... மாம் கிட்ட இதப்பத்தி சொல்றேன் அவங்க என்ன சொல்றாங்களோ அது படி செய்யலாம்” என்றவன் மனைவியுடன் தன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டிலில் சாய்ந்தமர்ந்து புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த ருத்ரா வாயிலில் அசைவு தெரியவும் புத்தகத்தை மூடி வைத்தவர் வாயிலை நோக்கி திரும்பிப் பார்க்க அங்கு மகனும் மருமகளும் முகச் சுணுக்கத்துடன் நிற்பதை பார்த்து “மறுபடியும் பிரச்சினையா...” என கவலை கொண்டவர் மகனை நோக்கி “என்ன த்ருவா ஏதாவது பிரச்சினையா” என கவலையுடன் கேட்க அதை கேட்டு அவரை முறைத்தவன் “என்ன மாம் நான் எப்போ உங்க ரூமுக்கு வந்தாலும் எதாவாது ப்ரோப்லமான்னே கேக்கிறீங்க... போங்க மாம்” என சிறுபிள்ளையாய் சினுங்கியவனை ஆசையுடன் பார்த்தார் ருத்ரா...


இதுவரை அவன் அப்படியிருந்து அவர் பார்த்ததில்லை. எப்போதும் ஆளுமையுடன் இருக்கும் மகன் இன்று சிறுபிள்ளையாய் மாறியதை எண்ணி தன் மருமகள் வந்த நேரம் என மகளான மருமகளை பார்த்து சிரித்தவர் இருவரையும் உள்ளே வருமாறு சைகை செய்துவிட்டு “என்ன விஷயம் மலர்...” என மலரை பார்த்து கேட்க.... அவளோ கணவனை பார்த்து ‘பார்த்தீங்களா... அத்தை என்கிட்ட தான் முதல்ல கேக்கிறாங்க...’ என சிறுபிள்ளைத்தனமான பாவனையொன்றை முகத்தில் காட்டி கணவனை கேலியாய் நோக்க அவனோ மனைவியின் அந்த செய்கையில் மனம் மகிழ்ச்சியில் திளைக்க அதே மகிழ்ச்சியுடன் அவளை பார்த்திருந்தான்


இதுவே பழைய யுத்கார்ஷாக இருந்திருந்தால் கோபத்தில் தாம்தூமென குதித்திருப்பான். தன்னைத்தான் முதலில் கேட்டிருக்க வேண்டுமென சீரியிருப்பான். தான் மட்டுமே முதன்மையாய் இருக்க வேண்டுமென எண்ணியிருப்பான். ஆனால் இப்போதிருப்பவன் அந்த கோபக்கார யுத்கார்ஷ் அல்லவே... இவன் ஒரு சிறுபெண் தன் மேல் கொண்ட காதலினால் தன்னை மறந்து அவளின் காதல் மழையில் நனைந்து அதைவிட அவளை அதிகளவு காதலிற்கும் காதல் கணவனாய் மாறியிருக்கும் யுத்கார்ஷ் அல்லாவா...


அவன் தன் மனைவியின் ஒவ்வொரு செய்கையிலும் மலர்ந்தான். மனம் மயங்கினான். அவள் தன்னுடன் மனம் விட்டு பேசுவதற்காக காத்திருக்கிறான். அவளின் காதலை அவள் வாய் மொழியாலே கேட்க ஆவா கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கின்றான். ஒரு மனைவியாய் அவள் எப்போது தன் உரிமையை நிலைநாட்டுவாள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான்.


காதல் தான் எத்தனை விசித்திரமானது... இங்கு எரிமலையாய் சீறிக் கொண்டிருந்த கோபக்காரனை ஒரே ஒரு நொடியில் தலைகீழாக மாற்றிவிட்டதே... மனைவியை எப்படியெல்லாம் கடத்து குதறலாம் என எண்ணிக் கொண்டிருப்பவன் இந்த காதலெனும் மாயவலையில் சிக்கி சின்னாபின்னமாகி இப்போது அவளை எப்படியெல்லாம் காதலிக்கலாம் என எண்ணிக் கொண்டிருக்கின்றான்.


மனதில் புதிதாய் பூத்த மகிழ்ச்சியுடன் தன்னவளையே பார்த்துக் கொண்டிருந்த யுத்கார்ஷ் அவள் இன்னமும் பேச ஆரம்பிக்காதிருக்கவும் கேள்வியாய் அவளை நோக்கினான்.


கணவனின் பார்வையின் அர்த்தத்தை புரிந்தவளோ ‘ஒன்றுமில்லை’ எனும் விதமாய் தலையை அசைத்து விட்டு மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.



இதுவரையிலும் தன் அத்தையுடன் பேசிப் பழகி இருந்தாலும் தன் எல்லை அறிந்தே பழகியவள். இத்தனை நாளில் அவரிடம் எதுவும் அவள் கேட்டு பெற்றதில்லை. அவரிடம் என்றில்லை யாரிடமும் அவள் எதையும் கேட்டு பெற்றதில்லை. மற்றவர்கள் தனக்கு கொடுப்பதை வைத்தே மகிழ்ச்சியுடன் வாழ கூடியவள்.


இத்தனை நாளாய் அப்படியிருந்தவள் இப்போதும் அப்படி இருக்கத்தான் எண்ணினாள். ஆனால் மனம் ஏனோ கோவிலுக்கு போயே ஆக வேண்டும் என உரக்க கூறுவது போலிருக்க தன் தயக்கத்தை மறந்து தன் அத்தையை நோக்கியவள் “அதுவந்து அத்த... நான் கோவிலுக்கு போய்ட்டு வரட்டுமா... இங்க வந்ததிலிருந்து கோவிலுக்கு போகவே இல்லையே... அதான்...” என இழுக்க...


அவளை ஆதுரத்துடன் பார்த்தவர் “இப்போ நீ இருக்கிற நிலமையில எப்பிடி மலர் கோவிலுக்கு போக முடியும்.... நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா மலர்...” என மெதுவாய் கூற... அதில் முதலில் புரியாது விழித்தவள் அதன் பின்பே அதற்கான அர்த்தம் புரிந்து அசடு வழிந்து கொண்டே கணவனை ஏறிட்டாள்.


அதில் அவளை கிண்டலுடன் நோக்கியவன் ‘ஐயோ... பாவமே...’ என்ற கிண்டல் பார்வையுடன் அங்கிருந்து அகல அதை பார்த்து மூக்கு விடைக்க அழுகை பெருக ஆரம்பிக்க அதை அடக்கி அணைபோட்டவள் தன் அத்தையை பரிதாபமாய் நோக்கினாள்.


இன்னும் சில நாட்களுக்கு அவளால் கோவிலுக்கு போக முடியாது... இதை எப்படி தான் மறந்து போனோம் என தனக்குள்ளேயே எண்ணிக் கொண்டவள் இருந்தாலும் மனம் கோவிலுக்கு போயே ஆகவேண்டும் என உறுதியாய் எண்ணிக் கொண்டிருக்க செய்வதறியாமல் தவித்தாள்.



அவளின் உள்மனது என்றும் நிலைதடுமாறியதில்லை. ஆனால் இன்று ஏதோ ஒருவித படபடப்பும் நடுக்கமும் உள்ளே பரவிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று நடக்க போகின்றது என்பது மட்டும் தெள்ளதெளிவாய் புரிந்தது. ஆனால் அது யாருக்கு என்பது தான் அவளுக்கு புரியாது போயிற்று.


இருந்தாலும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு எழுந்து செல்ல எத்தனித்தவளின் கையை பிடித்து தடுத்த ருத்ரா, “என்னடாம்மா ஒரு மாதிரியா இருக்க... முகமெல்லாம் வாடி வதங்கிப் போயிருக்கு.... என்னாச்சு... உடம்புக்கு ஏதாவது பண்ணுதா...” என அனுசரணையுடன் கேட்க அதில் தன் முகத்தை சீராக்கியவள் “ஒன்னுயில்ல அத்த... நான்.. மே... மேல போயிட்டு வரேன்...” என சிரமப்பட்டு ஒருவழியாய் கூறியவள் அங்கிருந்து விறுவிறுவென அகன்று தன் கணவனின் அறை நோக்கி சென்றாள்.


ஏனோ தன்னவனை பார்க்க வேண்டும் போல அவள் உள்ளம் பரபரத்தது. விரைவாய் அவனறை நோக்கி சென்றவள் மெதுவாய் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைய அவனோ எங்கோ செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.



கண்ணாடி முன் நின்று தலை கோதிக் கொண்டிருந்தவன் மனைவி உள்ளே நுழையவும் அவளை பார்த்து சிரித்தவன் அவளை தன் அருகில் வருமாறு சைகை செய்ய அவளோ ஏதோ கனாவில் இருப்பது போல் தன்னை மறந்து அவனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.


எப்போதும் கோர்ட் சூட் அணிந்து ஆண்மையின் கம்பீரத்துடனும் மிடுக்குடனும் பணக்கார தோரனையுடனும் நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் தி கிரேட் யங் பிசினஸ் மேன் யுத்கார்ஷ் இன்று வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டு அதே நிறத்தில் பேன்ட்டும் அணிந்து தலைமுடியை கோதிக் கொண்டிருந்தவனின் அழகு அவளை கொள்ளை கொள்வதில் வியப்பேதும் இல்லையே.



விழிவிரிய தன்னை பார்த்தவாறு வந்து கொண்டிருக்கும் தன் மனைவியை பார்த்தவனின் இதழ்கள் கர்வத்தில் அழகாய் மின்னியது.


தன்னை அறியாமல் தன் கணவனின் அருகில் நெருங்கிய மலர் அவனின் முகத்தை ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தாள். இத்தனை நாள் அவனை பார்த்திருந்தாலும் இன்று ஏனோ அவள் கண்களுக்கு அவன் புதிதாய் தெரிந்தான்.


அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு. ஏதோ உள்ளுக்குள் உடைவது போல் அவள் மனம் பதைபதைத்தது. அவனை பார்க்க பார்க்க ஏதோ நடக்ககூடாத ஒன்று நடக்கபோவது போல் உள்ளம் துடித்தது.


மனதுக்குள் பல எண்ணங்கள் தோன்றி மறைந்து அவளை திடுக்கிட செய்ய அதை தாள முடியாமல் சட்டென அவன் நெஞ்சை தஞ்சமாக்கி அதில் தலை சாய்த்துக் கொண்டாள். மனைவியின் இந்த செயலை எதிர்பாராத யுத்கார்ஷின் கரங்கள் மனைவியை தழுவ பரபரத்தது.


மனம் முழுக்க அத்தனை மகிழ்ச்சி. அவனின் ஒவ்வொரு அணுவும் அவளின் சிறு தழுவலில் மரணத்தை தொட்டு மீண்டது போலிருந்தது. தன் உள்ளக்களிப்பை மனைவியிடத்தில் வெளிப்படுத்தும் வகை அறியாது அவளின் தலையை மெதுவாய் கோதிக் கொடுத்தான். அவளின் அந்த சிறு செயலில் அவனின் அவன் எப்படி மகிழ்வு கொண்டானோ அதே போல் அவனின் செயலில் அவளும் மலர்ந்து போனாள். பல நிமிடங்கள் மௌனத்திலே கழிய இருவருக்குமே எதுவும் பேசத்தோன்றவில்லை.


சில வேளைகளில் மௌனம் கூட சிறந்த மொழி தான். பேச தோன்றாத நேரங்களில் மௌனத்தை விட சிறந்த மொழி வேறு எதுவுமில்லை. அந்த மௌனத்திலே சில நிமிடங்கள் கழிய அதற்கு மேல் மௌனம் சாதிக்க முடியாமல் மனைவியின் முகத்தில் அப்பிக் கிடந்த அவனை பேச தூண்ட “நீ என்கிட்டே ஏதாவது...” என ஆரம்பிக்கும் போதே அவளும் “நான் உங்ககிட்ட ஒன்னு....” என ஏதோ சொல்ல வரவும் இருவருக்குமே சிரிப்பு வந்தது.


‘யாரால் உன் மௌனத்தை சரியாய் மொழிபெயர்க்க முடியுமோ அவருக்கு மட்டுமே உன் மனதை படிக்கும் சக்தி உண்டு....’ என எங்கோ பார்த்த கவிதை தான் அந்நேரம் மலரின் மனதில் தோன்றியது. ‘எத்தனை உண்மையான வார்த்தைகள்... இதோ இவர் என் மௌனத்தை புரிந்து கொண்டாரே.. அதற்கான காரணத்தை கூட யூகித்திருப்பார்’ என நினைத்து கணவனை பெருமை பொங்க பார்த்தவள் இன்னும் அழுத்தமாய் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.



இத்தனை நாளாய் இருந்த தயக்கம் கூட இன்று தூர விலகி சென்றது போலிருந்து அவளுக்கு. ஆனாலும் ஒரு பயப்பந்து தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது போல் தான் இருந்தது.


அதை மறைத்து அவனின் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவனின் முகத்தை நோக்கியவள் “ஏதோ சொல்ல வந்தீங்களே..” என தெரியாதது போல் கேட்க அவனோ “நான் ஒன்னும் சொல்ல வரலையே... நீ தான் ஏதோ சொல்ல வந்த என்ன விஷயம் பேபி... ஏதாவது என்கிட்டே சொல்லனுமா... எதுன்னாலும் சொல்லு பேபி... மனசில எதையும் ஒளிச்சு வைக்காம வெளிப்படையா என்கிட்டே பேசு சின்னு...” என அவன் ஊக்கினான்.


அதில் தன் மனதை சமன்படுத்திக் கொண்டவள் “அது... அதுவந்து... மனசு சரியில்லாத மாதிரி இருக்கு... ஏதோ பயமா....” என அதற்கு மேல் சொல்ல முடியாமல் பாதியில் நிறுத்த அவனோ அவளின் கையை பற்றி தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான் அவளுக்கு தைரியம் அளிப்பது போல்.


இருந்தும் அவளின் முகம் தெளிவில்லாமல் இருக்கவும் “நீ யாருன்னு உனக்கு தெரியுமா பேபி... இந்த யுத்கார்ஷோட வைப்... தி கிரேட் பிசினஸ் மேக்னெட் த்ருவ் யுத்கார்ஷ் ராவ் அஹ்லுவாலியாவோட வைப் அவனை மாதிரியே கம்பீரமா இருக்கணும்... எப்பிடி இருக்கணும் பேபி...” என அவளை நோக்கி வினவ....


“கம்பீரமா இருக்கணும்...” என மெல்லிய குரலில் முணுமுணுத்தவளுக்கு கணவனின் வார்த்தைகள் மூளையில் பதிந்ததே தவிர மனதில் அழுத்தமாய் பதிபடாமல் போய்விட்டிருந்து....



சில வேளைகளில் மூளை வேகமாய் செயல்படும் மனமோ மந்தமாய் செயற்பட்டுக் கொண்டிருக்கும். இப்போது அவளின் மனமும் அந்த நிலையில் தான் இருந்தது... மனதில் அப்பிக்கிடந்த பயம் அதை தவிர வேறு எதையும் சிந்தக்க விடாமல் செய்து கொண்டிருந்தது. அவன் பேசுவது அவளுக்கு தெளிவாய் கேட்டது... ஆனால் அது மனதில் பதியவில்லை.


ஒருவேளை அது அவள் மனதில் பதிந்திருந்தால் அவளுக்கு எதுவும் நேராது போயிருக்குமோ?


விதி எந்த நேரத்தில் எந்த ரூபத்தில் யார் வாழ்க்கையில் எப்படி விளையாடுமென யாரால் கண்டறிய முடியும்....


கள்வன் வருவான்......
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்......

நீங்க எல்லோரும் ஆவலா எதிர்பார்த்திட்டு இருந்த அடுத்த அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்....
பார்த்திட்டு மறக்காம லைக் பட்டன ப்ரெஸ் பண்ணுங்க அண்ட் உங்க கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.....
மறக்காம பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே....

(இவ்ளோ நேரம் டைப் பண்ணி டைப் பண்ணி என்னோட ஒரு பக்க கண்ணு கூட சிவந்து போச்சு மக்களே.... கை வேற ரொம்ப வலி.... அதனால ப்ளீஸ்....)

ஆவலுடன்

NJN
 
Status
Not open for further replies.
Top