All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 29


கணவனின் அறிவுரைகளை கேட்டு மூளையில் பதித்துக் கொண்டாலும் மனதில் அது பதியாது போனதால் மனதின் பதைபதைப்பு அதிகரித்துக் கொண்டே தான் சென்றது அவளுக்கு.


இருந்தாலும் தன் எண்ணங்களை கணவனிடத்தில் சொல்லி அவனை கவலைக்குள்ளாக்குவது பிடிக்காமல் முகத்தை சாதரணமாக வைத்திருந்தவள் கணவனை பார்த்து கேள்வியாய் புருவங்களை உயர்த்தினாள்.


எங்கோ செல்வதற்காக கணவன் தயாரிகிருப்பது புரிந்தது... ஆனால் அதை கேட்பதா வேண்டாமா எனும் தயக்கத்தில் இருந்தவள் ஒருவழியாய் தன்னை திடப்படுத்திக் கொண்டு புருவங்களை கேள்வியாய் உயர்த்தி இறக்கினாள்.


எங்கே வாயால் கேட்டால் தன்னை திட்டிவிடுவாரோ என்ற பயத்தில் தான் அவள் அப்படி செய்ததே. இவன் தான் எப்போது எப்பிடி மாறுவானென தெரியாதே...


அந்த எண்ணத்தில் அவனிடம் சைகை செய்தவள் அவன் மார்பிலிருந்து நிமிர்ந்து அவனை நோக்க அவனோ தன் மார்பில் வாகாய் சாய்ந்து கொண்டு தன்னிடம் கேள்வி கேக்கும் மனைவியை ஆசை பொங்க பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் பார்வையில் தெரிந்த மாற்றத்தில் கன்னங்கள் செம்மையாக நெஞ்சுக்கூடு பயத்திலும் வெட்கத்திலும் சில்லிட தன் முகத்தை அவன் மார்பில் இன்னும் அழுந்த புதைத்துக் கொண்டவளின் பெண்மை அவன் நெஞ்சில் மோதி அவனின் தாபத்தை அதிகரித்து அவளை ஆட்கொள்ளும் பேராவலை தோற்றுவிக்க அதில் தன்னை எண்ணியே சிரித்தவன் தலையை அழுந்த கோதி தன் எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு ‘ஏய் இம்சை அழகி.... நீ உண்மையிலேயே என்னை ரொம்ப இம்சை பண்றடி’ என தன்னவளை செல்லமாய் கொஞ்சியவன் அவளின் தலையை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தான்.


அவனின் அச்செயலில் வெட்கம் இன்னும் அதிகரிக்க படக்கென தலையை குனிந்து கொண்டவள் “என்ன....” என்று முணுமுணுக்க....


அவளின் முணுமுணுப்போ அவனுக்கு அழைப்பு விடுப்பதை போன்றிருக்க அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாமல் தன்னிடமிருந்து அவளை பிரித்தெடுத்தவன் “ஏதாவது கேக்கணுமா....” என்க....


ஒரே சமயத்தில் மேலும் கீழும் என பல திசையில் அவள் தலையை அசைக்க அதில் இளம் புன்னகை ஒன்று அவனிதழில் வந்தமர்ந்தது


எல்லாப் பக்கமும் தலையை அசைத்துக் கொண்டிருந்த மனைவியின் தலையில் தன் கரங்களை பதித்தவன் அவளின் தலையை மேலும் கீழும் ஆட்டிக் காட்டி பின்பு இடமும் வலமுமாய் ஆட்டிக் காண்பித்து “இதுல ஒன்ன சொல்லு சின்னு... நீ இப்பிடி எல்லா பக்கமும் தலைய ஆட்டினேனா நான் என்னன்னு நினைக்கிறது” எனக் கேட்க.... அவளோ திருதிருவென முழித்தாள்.


‘எங்கயாவது போகும் போது எங்க போறீன்னு கேக்க கூடாதே.... அப்பிடிக்கேட்டா ஏதாவது நடந்திடும்னு சொல்லுவாங்க... இப்போ என்ன பண்றது...’ என தீவரமாய் யோசித்தவள் “இல்ல... இல்ல.... ஒன்னும் இல்ல... நான் சும்மா... சும்மா தான் அப்பிடி பண்ணேன்... வேற ஒன்னுயில்ல....” என சமாளித்தவள் “நான் கீழ போறேன்...” எனக் கூற அதில் முகம் சுருங்கியவன் ஒன்றும் பேசாது முகத்தை திருப்பிக் கொண்டான்.


கணவனின் முகம் திருப்பலில் திகைத்துப் போன மலர் ‘எதற்காக முகம் திரும்புகிறார்’ என புரியாமல் குழம்பிப் போய் அவன் முகம் திருப்பிய புறம் போய் நின்று கொண்டவள் “ஏன்....” என்றாள்.


அவள் ஒரு வார்த்தை தான் கேட்டால் ஆனால் அதனுள் பல அர்த்தங்கள் பொதிந்து கிடந்ததை அவன் உணர்ந்திருந்தான். ஆனால் அதற்கு விளக்கம் கூற பிடிக்கவில்லை.


என்றாலும் மனைவியிடத்தில் கூற வேண்டும் எனும் கடமை இருந்ததால் “பிடிக்கல” என்றான் அவனும் ஒரு வரியில்.


அவளோ ‘என்ன பிடிக்கல... என்னையா... இல்ல வேறெதுவுமா....” என ஒன்றும் புரியாது மீண்டும் உள்ளுக்குள் தவிப்பாய் இருக்க ‘எதை பிடிக்கவில்லை என கணவனிடத்தில் கேட்டே ஆகவேண்டும் எனும் உந்துதலில் “என்னையா....” என்றால் சிறு குரலில்.


அதில் அவளுள் இருந்த வேதனை.. ஏக்கம்.. சுயபச்சாதாபம்.. இயலாமை.. வெறுமை.. கோபம் என அத்தனையும் வெளிப்பட்டிருந்தது...


இருந்தாலும் அவனை போலவே முகத்தில் எந்த மாறுதலும் இல்லை.


அதை பார்த்து மனைவியை நினைத்து கர்வப்பட்டவன் “இல்ல...” என்றான் அழுத்தமாக...


அவனுக்கு எதை வேண்டுமானாலும் பிடிக்காமல் போகலாம்... ஏன் இந்த உலகை கூட... அதிலுள்ள காலங்கள் கூட மாறலாம்... ஆனால் அவன் மனைவியின் மேல் கொண்டுள்ள பிடித்தம்... காதல்... ஆசை அது இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல இனி ஏழேழு ஜென்மங்கள் கழிந்தாலும் கூட மாறாது.


இது பார்த்தவுடன் பூத்த காதல் அல்லவே இனக்கவர்ச்சி என காலம் கழிந்ததும் மறந்து போவதற்கு...


இது துளித்துளியாய் வேர்விட்டு அவன் மனதில் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி அவளில்லை என்றால் தானுமில்லை என்ற அளவுக்கு அவனை மாற்றிய உயிரினில் பூத்த காதல் அல்லவா... இது காலங்கள் கடந்தாலும் மாறாது... மறவாது...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனைவியின் ‘என்னையா’ என்ற ஒரு சொல்லில் அவனின் காதல் மனம் ஆயிரமாயிரம் மையில்களை கடந்து சென்று ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி அவனுள் கோபத்தை விதைத்து...


‘அவள் எப்படி என்னிடம் இப்படி ஒரு வார்த்தையை கேட்கலாம்’ என அவனின் காதல் மனம் கோபம் கொண்டது.


அவனின் மனசாட்சியோ ‘அவள் இப்படி கேட்கமால் வேறு எப்படி கேட்பாள்.’ என எகத்தாளம் செய்ய...


அதில் தன் மனசாட்சியிடம் கோபம் கொண்டவன் ‘உனக்கு அதெல்லாம் ஒன்னும் புரியாது... நீயும் ஒரு பெண்ணை காதலித்தால் தான் உனக்கெல்லாம் அது புரியும்...” என அவன் காதல் மனம் மனசாட்சியை பரிகாசம் செய்தது.


அதை கேட்ட மனசாட்சியோ கேலியாய் சிரித்துக் கொண்டே ‘எதற்கு உன்னை போல் நானும் அவஸ்தைபடவா...” என்க....


அதில் அதை முறைத்த காதல் மனமோ ‘எது அவஸ்தை காதலிப்பதா... இல்லவேயில்லை.... காதல் எத்தனை அற்புதமானது தெரியுமா... காதலில் வரும் அவஸ்தை கூட இங்கு சுகமாய் தானிருக்கும்....’ என தத்துவம் பேச...


மனமோ ‘சரிப்பா அதெல்லாத்தையும் விட்டு தொலை... முதலில் நான் கேக்கிறதுக்கு பதில் சொல்லு...’ என்க


‘முதல்ல நீ கேள்விய கேளுப்பா...’ என்றது காதல் மனம்...


மனசாட்சி, ‘ரொம்பத்தான்...’ என நொடித்துக் கொண்டு ‘நீ அவளைஉண்மையாய் காதலிக்கிறியா...’ என்க...


காதல் மனம், அவனை முறைத்துக் கொண்டு ‘காதலிக்காமல் இத்தனை எரம் உன்னுடன் வாதிட்டு கொண்டிருக்கிறேன்’ என கடுப்பாய் மொழிந்தது...


மனசாட்சி, ‘கோபப்படாதப்பா... முதல்ல உன்னோட இந்த கோபத்த குறைச்சிக்கோ... காதல்ல இருக்க கூடாத ரெண்டு விஷயம் என்ன தெரியுமா... இந்த கோபமும் ஈகோவும் தான். ரெண்டும் ஒண்ணா இருக்கிற இடத்த காதல் ரொம்ப நாள் நிலைச்சு நிக்காது... கோபத்தில நீ அவசரப்பட்டு தவறவிடும் ஒவ்வொரு வார்த்தையும் பின்னாளில் உன்னை தொரத்தும் போது அதிலிருந்து உன்னால் ஓடி ஒளிய முடியாது போய்விடும்...’ என அறிவுரை வழங்கி விட்டு ‘நான் சொல்ல வந்ததே வேறப்பா... அது என்னன்னா நீ உன்னோட காதல உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லிட்டியா இல்லையா...’ என்க...


அது இல்லை எனும் விதமாய் தலையசைக்கவும் ‘நீ சொல்லாம உன்னோட காதல் எப்பிடி உன்னோட பொண்டாட்டிக்கு தெரியும்... எத சொல்லாம விட்டாலும் பரவாயில்ல ஆனா காதல் வந்தா அத உடனே சொல்லிடனும்.... இல்லன்னா அத கடைசிவரை சொல்ல முடியாமலே போய்டும்... முதல்ல நீ என்ன பண்றேன்னா போய் உன் பொண்டாட்டிக்கிட்ட உன்னோட காதல சொல்லு... சொல்லாம இருக்கிற ஒவ்வொரு நிமிசமும் உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நரக மாறிடும்... முக்கியமா உன் பொண்டாட்டிக்கு... புருஷன் மனசுல தான் இல்லையாங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் எந்தளவு வேதனைய கொடுக்கும்ங்கிறது எனக்கு நல்லாவே தெரியும்... அதனால காலம் கடத்தாம சட்டுபுட்டுன்னு உன் காதல சொல்லிப்புட்டு ஹனிமூன் போற வழியப்பருடா...’ என்றவாறு அது மறைந்து விட தன் மனசாட்சியின் வழிகாட்டலில் தன் காதலை எப்படியாவது மனைவியிடத்தில் சொல்ல வேண்டும் என எண்ணிக் கொண்ட யுத்கார்ஷ் அதை இன்றே சொல்ல முடிவெடுத்தான்.


ஆனால் அவனின் காதல் மனம் ‘இப்போ சொல்ல வேணாம்... முதல்ல மலர் ஆசைப்பட்ட கோவிலுக்கு கூட்டிட்டு போ... அதுக்கப்றம் அவகிட்ட நீ வாங்கிட்டு வந்த கிப்ட்ட கொடுத்துட்டு உன்னோட லவ்வ ப்ரொபோஸ் பண்ணு ஓகேவா...’ என்க தன் காதல் மனதின் யோசனை நல்லதாகவே பட அதன் படியே செய்வோம் என எண்ணியவன் மனைவியை பார்த்து “இப்போ பேசுறதுக்கு டைம் இல்ல சின்னு... போ...போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா... பைவ் மினிட்ஸ் தான் டைம் தருவேன்...” என்றான்.


அவளோ நின்ற இடத்தில் இருந்து அசையாது தான் கேட்ட கேள்விக்கு இப்போதே பதில் வேண்டும் என்பது போல் முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு நிற்க அதை எண்ணி சளித்தவன் “சின்னு ப்ளீஸ்... நான் போற வழியில எல்லாத்தையும் சொல்றேன் நீ சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா...” என்க அவளோ ஒன்றும் பேசாது கீழிறங்கிச் சென்றவள் குழந்தைக்கு பசியாற்றி விட்டு வேறு உடைக்கு மாறியவள் அவனுக்காய் கீழே காத்திருந்தாள்.


அவனோ தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவன் ‘எப்போதெடா கோவிலுக்கு சென்று வருவோம்’ என அதிலேயே நிலைத்து நிற்க உள்ளம் புதிதாய் காதல் சொல்லப் போகும் தடுமாற்றத்தில் தாறுமாறாய் துடித்தது.


தன் இதயத்தில் கைவைத்து ‘உன்கிட்ட பர்ஸ்ட் டைம் லவ் ப்ரொபோஸ் பண்ண போறேன் சின்னு... என்னோட இந்த சந்தோசத்த எப்பிடி சொல்றதுன்னே புரியலடி... ரொம்ப.... ரொம்ப சந்தோசமா இருக்கேன் பேபி... எல்லாம் உன்னாலதான்டி... ஹையோ... இன்னும் வரப்போற இந்த நிமிசத்த எல்லாம் எப்பிடி கடத்த போறேன்னே தெரியல... இப்போவே உன்கிட்ட சொல்லணும் போல மனசு துடிக்குது... ஆனா திடீர்னு சொன்னா நீ எப்பிடி பிஹேவ் பன்வேன்னு தெரியல... அதனால உனக்கு பிடிச்ச கோவிலுக்கு கூட்டிட்டு போய்... உன்னோட மூட் சேஞ் ஆனதுகப்றம் உன்கிட்ட என்னோட காதல சொல்ல போறேன்....’
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரெண்ட்ஸ்.....

கதை பாதியிலேயே நிற்கிறது... முதலில் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.....

கதையை முழுதாக போடத் தான் முயர்ச்சித்தேன ஆனால் அதற்குள் தளம் வேலை செய்யாது போய்விட்டது.....

அதன் பின்பு என் laptop மக்கர் பண்ணிடிச்சு... so அத சரி பண்ண அனுப்பி இருக்கேன்... எப்போ வரும்னு தெரியல.....

So வெயிட் பண்ணுங்க மக்களே....

அன்ட் உங்கள் கருத்தக்களையும் பகிர்ந்து கொள்ளூங்கள்.....

முக்கியமா உங்ள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.....


ஆவலுடன்
NJN
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘இவ்ளோ நாளா நீ தான் என்கிட்ட வந்து உன்னோட காதல சொல்லனும்னு ஆசைப்பட்டேன்... ஆனா இப்போ நானே வந்து உன்கிட்ட என்னோட காதல சொல்ல போறேன்... என்னோட மனசாட்சி சொல்லிச்சு காதல்ல ஈகோ இருக்க கூடாதுன்னு. சோ..... ப்ச்.... அதனால.... நீ என்கிட்டே வந்து உன்னோட காதல சொல்லியிருந்தேன்னா நான் எவ்ளோ சந்தோசப்பட்டிருப்பேனோ அந்த சந்தோசத்த நான் உனக்கு கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்... நீ எந்தளவுக்கு ஹாப்பியா இருக்கியோ அதே அளவுக்கு உன்னோட சந்தோசத்த பார்த்து நானும் ஹாப்பியா இருப்பேன்... பிகாஸ்’ என்றவன் ‘ஹையோ தமிழ்ல சொல்றதா இல்ல இங்கிலீஷ்ல சொல்றதா... என் சின்னுக்கு இங்கிலீஷ் அவ்ளோவா தெரியாதே...’ என தீவிரமாய் யோசிக்க அவனின் மனசாட்சியோ ‘இப்போ இது ரொம்ப முக்கியம்...’ என கிண்டலடித்து விட்டு செல்ல அதில் அதை முறைத்தவன்...


‘என் சின்னுக்கிட்ட நான் லவ் ப்ரொபோஸ் பண்ண போறேன் சோ அவளுக்கு புரியிற மாதிரி தானே நான் சொல்லணும் அதனால நான் தமிழ்லயே சொல்றேன்...’ என முடிவெடுத்தவனுக்கு தன் ஒவ்வொரு செயலும் விசித்திரமாகவும் அது பிடித்தமாகவும் இருப்பது போல் தோன்ற தனக்குள் என்றும் சிரித்துக் கொண்டான்.


தற்போது தான் மாறிப்போயிருப்பதை பார்த்து அவனுக்கும் ஆச்சர்யம் தான். இருபத்து மூன்று வயதிலேயே தந்தையின் உழைப்பில் உருவான தொழில் சாம்ராஜ்யத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாளுக்கு நாள் புதிது புதிதாய் ஒவ்வொரு துறையிலும் கால்பதித்து மிகப்பெரிய சாதனைகளை படைத்து அந்த இளம் வயதிலேயே தொழில் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன் என சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பெயரெடுத்தவன்.


உலக நாடுகள் முழுவதிலும் அவனது ‘அஹ்லுவாலியா இண்டஸ்ட்ரீஸ்’ பறந்து விரிந்து காணப்பட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் அந்த தொழில் ஜாம்பவான் இன்று தன் மனைவிக்காக அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு அவளுடன் அவள் ஆசைப்பட்ட தான் நம்பிக்கை கொள்ளாத கடவுளை பார்க்க கிளம்பிக் கொண்டிருக்கின்றான்.


இதுவரையிலும் ஒரே ஒரு தடவை தான் அவன் கடவுளை வேண்டியிருக்கின்றான். அது தன் மனைவியின் உயிரை மீட்டுக் கொண்டுவருவதற்காகத் தான்.


அன்று அவளின் காதலின் அளவை உணர்ந்து அவன் அவளுக்காக வேண்டினான். இன்று தன் காதலை உணர்ந்து அவளுக்காக அவளின் ஆசைக்காக அங்கு செல்ல தயாராகி உள்ளான்.


என தன்னை பற்றிய யோசனையில் உழன்றவன் அப்போதுதான், தான் அவளை தயாராக சொன்னது நினைவு வர அவசரமாய் கீழிறங்கியவன் அவளைப் பார்த்து ‘போலாமா’ என தலையசைக்க பதிலுக்கு அவளும் ‘சரியென’ தலையசைக்க தன் பெற்றோரிடமும் அவளின் பெற்றோரிடமும் போய் வருகிறோம் எனக் கூறியவன் தன் மகளிடம் சென்று அவளை கைகளில் ஏந்தி “பேபி... நான் என்னோட பர்ஸ்ட் பேபிக்கிட்ட இன்னைக்கு நான் அவ மேல வச்சிருக்கிற அன்ப சொல்ல போறேன்... இத அவகிட்ட கூட நான் சொல்லல பேபி... இந்த செல்ல பேபிக்கிட்ட தான் முதல்ல சொல்றேன்... உன் டாடி இன்னிக்கு எவ்ளோ ஹாப்பியா இருக்கார்னு உனக்கு தெரியுமா பேபி...” என மகளிடம் தன் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவளுக்கு என்ன புரிந்ததோ தன் போக்கை வாயை காட்டி அவள் சிரிக்க “ஹேய்... அப்பாவோட மனசு பொண்ணுக்கு புரிஞ்சிடிச்சு போல... சோ ஸ்வீட் பேபி...” என மகளின் முகம் முழுவதும் மென்மையாய் முத்தமழை பொழிந்தவன் அவளை தன் அத்தையின் கைகளில் கொடுத்து விட்டு விடைபெற்று கிளம்பினான்.


போகும் போது இருந்த இந்த மகிழ்வு வரும் போதும் இருக்குமா?


தன் ரோல் ராய்ஸ் காரின் முன்பக்க கதவை மனைவிக்காக திறந்து விட்டவன் அவள் ஏறி அமர்ந்ததும் கதவை மூடிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து காரை கிளப்பியவனின் மனம் முழுதும் சொல்ல முடியாதளவு சந்தோசம் பீரிட்டு வழிந்து கொண்டிருந்தது.


அதே சந்தோசத்துடன் எப்எம்,மை ஆன் செய்தவனின் மனதை மட்டுமல்லாது தான் சொல்ல நினைத்ததையும் சொல்லிச் சென்றது அதில் ஒலித்த பாடல்


"என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய் நெஞ்சில் வாழ்கின்றாய்
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது நியாயமில்லை

எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே
தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே கீறலாய்
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்
என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்1
உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்

என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
வேண்டும் உன் காதல் ஒன்றே
உன்னை மட்டும் நேசித்தேன் இது உண்மை
இன்னும் ஏன் இந்த ஊடல்

என் உயிர் காதலை உந்தன் காதோரம்
ஒருமுறையாவது சொல்ல நீ வேண்டும்
எந்தன் ஆசை முத்தங்கள் உன்னை சேருமோ
இல்லை காதல் யுத்தங்கள் இன்னும் நீளுமோ
உந்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி

நெஞ்சில் பாரம் வேண்டாமே என்னை பாரடி
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி
சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்
ஏனோ கோபங்கள் சொல்லடி

என்னை கொள்ளாதே தள்ளி போகாதே
நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்"


அந்த பாடல் இருவரது மனதினுள்ளும் நுழைந்து அவர்களின் மனதினை வெளிப்படுத்தியது போலிருந்தது.


மலருக்கு தான் சொல்ல நினைத்தவற்றை அந்த பாடலே சொல்லிவிட்டது போலிருந்தது.


யுத்கார்ஷிற்கோ தன் மனதின் காதலையும் தான் அவளிடம் பேசிய பேச்சுக்களுக்கான அர்த்தத்தையும் அந்த பாடலே உரைத்து விட்டது போலிருந்தது.


இருந்தும் தானே தன் வாயினால் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென வாழ்நாளில் முதன் முறையாய் எண்ணியவன் அவளின் கைகளை எடுத்து தன் கைக்குள் அடக்கிக் கொண்டு ஒரு கையால் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.


அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் மின்னலாய் ஒரு வெளிச்சத்தின் சாயல். ஆனால் மறுநொடியே அது பொய்யோ எனும் அளவுக்கு முகத்தை சாதரணமாய் வைத்திருந்தவளுக்கு அந்த நேரத்தில் அவனின் தொடுகை அவசியமாய் இருந்தது போலும் அவனின் கைகளை கெட்டியாய் பற்றிக் கொண்டிருந்தாள். ஆனால் ஒன்றும் பேச தோன்றவில்லை.


அந்த நேரத்தில் இருவருக்குமே பேச்சு எழவில்லை. மௌனமே சிறந்ததாய் தோன்றியது.


மலரோ கணவனின் கரங்களை இறுக பற்றியபடி சீட்டில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டாள். இன்னமும் உள்ளிருந்த பயம் அகலாவிட்டாலும் தன் கணவன் உடனிருந்தால் அவன் தன்னை காப்பான் என்ற நம்பிக்கை அவளுள் முளைத்திருந்தது.


திருமணமான நாளிருந்து தன்னை கண்டாலே சீறும் சிறுத்தையாய் இருக்கும் கணவனின் மீது இத்தனை நாட்களும் அவளுள் பயம் தான் அதிகம் இருந்தது.


ஆனால் இன்று தான் முதன்முறையாய் அவன் மீது நம்பிக்கை பிறந்திருந்தது. இத்தனை நாட்கள் நம்பிக்கை இல்லாமல் இல்லை. இருந்தது தான். ஆனால் தன்னை அவன் காப்பான் என்றெல்லாம் அவள் இத்தனை நாட்களாய் நினைத்து கூட பார்த்ததில்லை. இன்று தான் அவள் ஆழ்மனதில் அந்த நம்பிக்கை உருவாகி இருந்தது. தன் கணவன் என்றும் தன்னை கைவிடமாட்டானென்று.


கடைசிவரை அந்த நம்பிக்கை நிலைத்து நிற்குமா? அந்த கடவுளை அன்றி வேறுயாரால் அதை கூற முடியும்...


மனைவிக்கு விருப்பமான பிள்ளையார் கோவிலின் முன்பு காரை நிறுத்தியவன் அவளின் தோளை தொட்டு அவளை எழுப்ப அதில் தன் கனவுலகத்தில் இருந்து வெளி வந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அவனோ சிரித்துக் கொண்டே அவள் இறங்குவதற்காக கார் கதவை திறந்து விட்டு அவளை மகாராணியாக உணர வைத்தான்.


எந்த ஒரு பெண்ணும் தன் கணவனிடத்தில் தன் நிலை இறங்கிப் போய்விடக்கூடாதென்றே எண்ணுவாள். ஆனால் மலர் அப்படிப்பட்டவளில்லையே.


ஆனாலும் இன்று அவள் தன் கணவனின் ஒவ்வொரு செய்கையிலும் மலர்ந்தாள். இருந்தாலும் இப்போதும் கூட அவளால் அவனின் காதலை புரிந்து கொள்ள முடியவில்லை.


காரிலிருந்து இறங்கியவள் தன் முன்னால் வீற்றிருந்த கோவிலைக் கண்டு அடைந்த பூரிப்பிற்கு அளவே இல்லை. அந்தளவு அவளின் உள்ளம் பூரித்து போயிருந்தது.


அதுவும் கணவன் தனக்கு பிடித்த பிள்ளையார் கோவிலுக்கு அழைத்து வந்திருக்கவும் இன்னும் மகிழ்ந்தவள் அதே மகிழ்வுடன் அவனை பார்த்து தன் பல வரிசை தெரிய அழகாய் புன்னகை புரிந்தவள் வெளியில் இருந்தே அந்த கோவிலை பார்த்துக் கொண்டிருந்தாள்.


உள்ளே செல்லும் ஆசை இருந்தாலும் தான் இருக்கும் நிலையில் உள்ளே செல்ல கூடாது எனப் புரிந்து கொண்டு வெளியில் நின்று கொண்டே அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் தன் பார்வையால் ஆசையுடன் வருடியவள் கணவனின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டாள்.


அவள் எந்தளவு மகிழ்ச்சியிருந்தாலோ அதேயளவு அவனும் மகிழ்ச்சியில் இருந்தான்.


அதே நேரம் தன் காதலை சொல்லப்போகும் தருணத்திற்காகவும் ஆசையுடன் காத்திருந்தான். தன் காதலை மனைவியிடத்தில் சொல்லும் போது அவளின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை படிக்கவும் ஆசை கொண்டான்.
 
Status
Not open for further replies.
Top