All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனோ அவளின் தலையை அழுந்த பற்றிபடி தன் முகம் நோக்கி நிமிர்த்தியவன் “உன் மேல இனி என்னக்கும் எனக்கு கோபம் வாராதுடி...” என்றான் சிரித்துக் கொண்டு...


அவளோ “அப்போ காலையில கோபபட்டீங்களே..” என்றாள் குழப்பமாய்.


அவனோ “அப்போ கோபம் வந்திச்சு அப்றோம் நீ சொன்னியே கீழே எல்லாரும் நமக்காக வெயிட் பண்றாங்க... என்னை தப்பா நினச்சிக்காதீங்கன்னு... அப்போவே என்னோட கோபம் எல்லாம் பறந்து போய்டிச்சு...” என்க..


அவளோ அவனை செல்ல கோபத்துடன் முறைத்துக் கொண்டு “அப்போ எதுக்கு இவ்ளோ நேரமா கோபமா இருந்த மாதிரி நடிச்சீங்கலாம்..” என சிணுங்க.


“நீ இப்பிடி ஏதாவது தருவேன்னு நினைச்சேன்... ஆனா அது இவ்ளோ சூப்பரா இருக்கும்னு தான் நினைச்சுக் கூட பார்க்கல..” என்றான் விசமத்துடன்.


அதில் அவன் மார்பில் குத்தியவாறு அவனுள் புதைந்தவள் “நீங்க என்மேல கோபப்பட்டா என்னால தாங்க முடியாது பாவா... ப்ளீஸ் இனிமேல் என்னை திட்டுங்க அடிங்க... ஆனா கோபபட்டு பேசாம மட்டும் இருக்காதீங்க... அத மட்டும் என்னால தாங்கவே முடியாது...” என்றவளின் கண்களில் கண்ணீரின் சாயல்.


அதில் அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளின் கண்ணீரை தன் இதழ்களால் துடைத்து விட்டவன் “நான் கோபபட்டா உன்னால எப்பிடி தாங்க முடியாதோ.. அதேமாதிரி நீ அழுதா என்னால தாங்க முடியாது பேபி... ப்ளீஸ்... இனி என்னைக்கும் உன் கண்ல இருந்து கண்ணீர் வரவே கூடாது...” என்றாவாறு அவளை இறுக அணைத்துக் கொண்டவன் அவளிடம் “ப்ராமிஸ்...” என்க..


அவளோ “அப்போ நீங்களும் என்கூட கோபப்பட்டு பேசாம இருக்கக் கூடாது... ப்ராமிஸ்..” என்க இருவரும் ஒன்றாய் “ப்ராமிஸ்” என்றபடி இறுக அணைத்துக் கொண்டனர்.


அதற்குள் மணமேடையில் ஐயர் தாலியை கொடுத்து அவளுக்கு அணிவிக்குமாறு ஜொகியிடம் கூற அதில் மனதில் பொங்கிய மகிழ்ச்சியுடன் அவள் கழுத்தில் தாலியை அணிவித்து அவளை தன் சரிபாதி ஆக்கிக் கொண்டான் ஒமி சிங் ஜொகிந்தர்.


தாலியை அனுவித்ததும் ஜொகி அவளின் கன்னத்தில் அத்தனை பேரின் முன்பு முத்தமிட அதில் அதிர்ச்சியில் அவனை அங்கிருந்த அத்தனை பேரும் ‘ஆவேன’ பிளந்த வாயுடன் பார்க்க பின்டோவும் அதே நிலையில் தான் இருந்தாள்.


அதை பார்த்து சிரித்த ஜொகி அவளருகில் குனிந்து “இப்பிடியே வாயை பிளந்து பார்த்து என் மூட கெடுத்துடாத ஜெனி... அப்றோம் என்னால என்னையே கன்ட்ரோல் பண்ண முடியாம போய்டும்..” என்க அதில் சட்டென தன் வாயை மூடிக் கொண்டு அவளின் விலாவில் இடித்து வைத்தாள்.


அதை பார்த்த ரெயான் “மச்சி.. இப்போவே அடிவாங்க ஆரம்பிச்சிட்டான்... ஹா.. ஹா..” என சிரிக்க அதை கேட்டு அங்கிருந்த அத்தனை இளவட்டங்களும் கெக்கே பிக்கேவென சிரிக்க அதில் ஜெனி அவளின் ஒமியை முறைக்க அதற்கு அவளின் ஒமி அவளை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்க்க அங்கு மகிழ்ச்சியின் சாரல் அழகாய் வீசியது.


அந்த சந்தோசத்துடனே சிவனேந்திர பூபதியும் ரூபசுந்தரியும் அங்கிருந்த அத்தனை பேரின் முன்பும் விரேன் விஸ்வாஸ் பூபதிக்கும் திவ்யநந்தினி தேவிக்குமான திருமண அறிவிப்பை அறிவிக்க அந்த சந்தோசம் இரட்டிப்பானது.


அத்துடன் அங்கு தன் குடும்பத்தினருடன் வந்திருந்த பழராமிற்கும் வின்னிக்கும் அங்கேயே ராமின் முறைப்படி அவனின் ஒன்று விட்ட மாமாவான சுந்தரபாண்டியனின் தலைமையில் நிச்சயம் நடைபெற்று வின்னியை தங்கள் மருமகளாக்குவதற்கு மறைமுகமாய் சம்மதம் தெரிவித்தனர் ராமின் குடும்பத்தினர்.


அவர்களுக்கு வெளிநாட்டு பெண்ணை தங்கள் மகனுக்கு மணம்முடித்து வைப்பதில் சிறிதும் உடன் பாடுயில்லை. அதை ராம் தன் மாமா சுந்தரபாண்டியனிடமும் அத்தை தமயந்திடமும் தெரிவிக்க அவர்கள் இருவரும் ராமின் விருப்பத்திற்கிணங்க ராமின் குடும்பத்தினரின் மனதை கரைத்து இத்தனை தூரம் கொண்டு வந்திருந்தனர்.


ஆக இங்கு காதலித்த அத்தனை ஜோடிகளும் தங்கள் இணையுடன் சேர்ந்து கொண்டனர். ஒருத்தியை தவிர. தேவி. மனதில் பூத்த முதல் காதல் கருகிப் போனதில் மனமுடைந்து இறந்த அவளின் உயிர் இன்று இவர்கள் அத்தனை பேரின் முகத்திலும் உள்ளத்திலும் இருந்த சந்தோசத்திலும் பூரிப்பிலும் முக்கியமாய் தன் மலரினும் மெல்லிய மனம் கொண்ட தன் மலரவளின் காதல் கைகூடிய மகிழ்ச்சியில் தன் காதல் தோற்றுப் போன துக்கத்தை மறந்து அவர்கள் அனைவரையும் அதுவும் தன் இதயத்தை சுமந்து கொண்டு அங்கிருந்த சிறு பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜியாவையும் ஆசை தீர கண்களால் நிரப்பியவள் தன் தோழி ஸ்ரேயாவிற்கும் கூடிய சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற வேண்டுதளுடனும் அங்கிருந்து மறைய ஆரம்பித்தவளின் கண்களில் காதல் தோற்றுப் போன வலி. அந்த வலியுடன் யுத்கார்ஷையே பார்த்துக் கொண்டிருந்தவளின் ஆன்மா மற்றவர்களின் மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்து சாந்தியடைந்தது.


காதல்..... மென்மையான ஆழமான உணர்வு. சிலருக்கு பார்த்தவுடன் பூத்து விடும். ஒரு சிலருக்கு பார்க்கப் பார்க்க மலரும். இன்னும் ஒரு சிலருக்கு பார்க்காமேலே மணம் வீச ஆரம்பித்து விடும்.


இங்கு யுத்கார்ஷிற்கு மலரை பார்க்க பார்க்க காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் அளவுக்கதிகமாய் வெறுத்தவளை இதோ இப்போது அளவுக்கதிகமாய் காதலித்துக் கொண்டிருக்கிறான்.


ஜொகிக்கு பின்டோவை பார்க்காமலே காதல் மணம் வீசியது. வின்னிக்கு பார்த்தும் காதல் பூத்தது. யக்ஷித்திற்கு அதே போல் தான் பார்த்ததும் காதல் மலர்ந்தது. ஒவ்வொருவரினதும் காதலும் ஒவ்வொரு விதம்.


ஜொகி-பின்டோவின் திருமணமும் விஸ்வாஸ்-திவ்யாவின் திருமண அறிவிப்பும் பழராம்-வின்னியின் நிச்சயமும் நடைபெற்ற சந்தோசத்தில் பூரிந்தவர்களை அழைத்த யுவேதா “எல்லாரும் வாங்க.... இன்னிக்கு லாஸ்ட் டே... இனிமேல் நம்மள எல்லாரும் மறந்திடுவாங்க... சோ யாரும் நம்மள மறக்காத மாதிரி பண்ணலாம் வாங்க...” என அனைவரையும் ஒன்று சேர்த்தவள் அங்கிருந்த இசை குழுவினரிடம் “மியூசிக் ஸ்டார்ட் பண்ணுங்க..” என கத்த அவளுடன் சேர்ந்து அனைவரது குரலும் ஒலிக்க அவர்கள் அத்துடன் பாடலும் ஒலிக்க ஆரம்பித்தது. அதில் அவர்களின் ஆட்டமும் துவங்க ஆரம்பித்தது.

மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை
மல்லிகையில் ஒரு மாலை
தங்கச்சரிகையில் ஒரு சேலை

பூவொன்றை பூட்டி வைக்கத்தான்

கல்யாணம் கண்டுபிடித்தான்

தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்s
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா


பாடல் ஒலிக்க ஆரம்பித்ததுமே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாடலுக்கேற்ப ஆட ஆரம்பிக்க யுத்கார்ஷும் மலரும் ஆரத்தழுவிக் கொண்டனர் பாடலுக்கேற்ப ஆடிய படியே. ஜொகியும் பின்டோவும் தங்களை மறந்த உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்க ராமும் வின்னியும் ஒருவரை ஒருவர் பார்வையால் கபளீரகம் செய்து கொண்டிருக்க யக்ஷித் ஸ்ரேயாவை சீண்டுவதும் அதில் அவள் அவனை புரியாது பார்த்துக் கொண்டு ஓடுவதும் ஜியா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அங்கிருந்த தன் வயதை ஒத்தவர்களுடன் ஆட்டம் போட அப்போது தான் ஒரு முக்கியமான கேஸ் ஒன்றை முடித்துக் கொண்டு வந்த விக்ரமாதித்யன் தன் பதவி மறந்து அங்கிருந்த பெண்களை ஜொள்ளு விட விக்ரமும் யுத்கார்ஷின் வரவேற்பிற்கிணங்க அங்கு வந்திருந்தவன் சுந்தரபாண்டியன் தமயந்தி தம்பதியினருடன் அமர்ந்திருக்க வெரோனிக்கா எப்போது போல் தான் இருக்கும் இடத்தை கலகலப்பாய் வைத்திருக்க ஆஷிரா எல்லோருடன் சேர்ந்து தன் இயல்பு மறந்து ஆட்டம் போட இது அத்தனையையும் தன் கண்களால் அலசிய யுவேதா கலர் பவுடரை எடுத்து வந்து அனைவரின் மீதும் தெளிக்க அதில் கோபம் கொண்டவர்கள் திட்டிய திட்டை எல்லாம் வலது காதினால் வாங்கி இடது காதினால் வெளியில் தள்ளியவள் “ட்ரெஸ் பழாகிடும்னு இந்த சந்தோசத்த யாரும் மிஸ் பண்ணிடாதீங்க... திஸ் இஸ் ரேர் மொமென்ட்ஸ்... சோ ப்ளீஸ் எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க...” கத்தியவள் “ஹுர்ரே.....” கத்த அவளுடன் சேர்ந்து அனைவரும் “ஹிப் ஹிப் ஹூர்ரே....” கத்தினர்.


வாழ்க்கையில் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஒரு நொடி போதும். அது இன்று இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்தது. இனிமே என்றுமே அது நிலைக்கும்.

அடடா நீ அழகி என்று
ஆர்ப்பரிப்பான் உன் கணவன்
வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று


கதை கொஞ்சம் மாறும்போது
வார்த்தைகளெல்லாம் பாழாகும்
வாழ்வே ஓர் போர்க்களமாகும்

ஹே ஹே நீ மோதிட வேண்டும்
தாலி உன் தாலி
அது உன்னைக் கட்டும் வேலி
கூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி
தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே
பறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே

அம்மி மிதிக்கிற வாழ்க்கையெல்லாம்
நினைப்பதுபோல் இருப்பதில்லை
சிறகினை அடகுவைத்தால்
பறவையின் வாழ்வில் சுகம் இல்லை

அணைப்பதும் அடங்கி நின்று
தவிப்பதும் ஓர் மயக்கம்தானே
நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொர்க்கம்

தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்
துந்தனானேனா

தொடக்கம் மாங்கல்யம்
தந்துனானேனா
பின்பு ஜீவிதம்

துந்தனானேனா


மீண்டும் சந்திப்போம்......
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...


என்னுடைய இந்த முதல் கதைக்கு ஆதரவு நல்கிய அத்தனை பேருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்...

இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

Slide1.JPG
 
Last edited:
Status
Not open for further replies.
Top