All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கடவுளே இதெல்லாம் ரொம்ப அநியாயம்.... இப்போ தான் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணியிருக்கேன்... தயவு செஞ்சு என்னோட காதல சொதப்பிடாத....’ என கடவுளிடம் வேண்டிக் கொண்டவனுக்கு தன் செயல் விசித்திரமாகவே பட்டது...
அவனது ஒவ்வொரு மணித்துளிகளும் விலைமதிப்பில்லாதவை. அதை வீணாக களிக்க அவன் என்றும் விரும்பியதில்லை... ஒவ்வொரு மணிதுளிகளையும் வியாபாரமாக்கி கொண்டிருப்பவனுக்கு இந்த காதல் வந்த பின் எல்லாமே விசித்திரமாய் நடப்பாதாகவே தோன்றியது.
இருந்தும் அது பிடித்தமானதாக இருப்பதும் அவனுக்கு உற்சாகத்தை கொடுத்தது... காதல் வந்தால் எல்லாமே வித்தியாசமாய் மாறிவிடும் போல.... அவனுக்கும் அப்படித்தான் இருந்தது... எல்லாமே புதிதாய்... வித்தியாசமாய்... பிடிக்காதவை கூட பிடித்தமானதாய் மாறியதை ரசனையுடன் ரசித்து கொண்டிருந்தான் அவன்...
தந்தையின் பேச்சை எல்லாம் காதில் வாங்காது மனைவியின் பின்னழகை ரசனையுடன் பார்த்து கொண்டிருக்க அவளோ ஏதோ முதுகை துளைப்பது போல் இருக்கவும் முகத்தை சுளித்து கொண்டு பின்னால் திரும்பியவள் அங்கு கணவன் நின்றிருப்பதை பார்த்து இன்னும் அதிகமாய் உதட்டை சுழிக்க.....
உசுரே போகுதே உசுரே போகுதே ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
என்ற பாடல் அங்கிருந்த நர்ஸின் செல்போனிலிருந்து சரியாய் அதேநேரம் ஒலிக்க அதை கேட்டு கண்கள் மின்ன சிரித்த கணவனை காதில் புகை வராத குறையாய் முறைத்து வைத்தாள் மலர்..
மகனினதும் மருமகளினதும் பார்வை பரிமாற்றத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்த ருத்ரா, “த்ருவா நீ இன்னும் சாப்பிடலையே போப்பா... போய் சாப்பிடு... மலர் நீ சாப்பிட்டியா இல்லையா... இல்லனா ரெண்டு பெரும் போய் சாப்பிடுங்க... நானும் மாமாவும் குழந்தைய பார்த்துக்கிறோம்...” என்க...
அதை கேட்டு யுத்கார்ஷ் உள்ளுக்குள் துள்ளி குதித்து குத்தாட்டம் போட்டவாறு மனைவியை பார்த்து உதடு துடிக்க சிரிக்க... அவளோ தன் அத்தையின் சொல்லை தட்ட முடியாமல் அவனை முறைத்து கொண்டு எழுந்தவள் வாயிற்கதவருகில் சென்றாள்...
அவனோ அவள் வருவதை அறிந்து வழிவிடாமல் கதவை மறைத்து கொண்டு நிற்க... அவனது செய்கையில் கோபம் சுறுசுறுவென ஏற “வழியை விட போறீங்களா இல்லையா...” ஹஸ்கி வாய்சில் யாருக்கும் கேட்காதவாறு முணுமுணுக்க.....
மனைவியின் அருகாமையும் அந்த குரலும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து செல்ல தாபத்துடன் அவளை கண்களாய் மொய்த்தவாறு மெதுவாய் விலக அவளோ அந்த இடைவெளியை பார்த்து அவனை உஷ்ணத்துடன் முறைத்தவள் உடம்பை நெளித்து கொண்டு அங்கிருந்து நகர அவனோ தன்னை பட்டும் படாமலும் தீண்டிய மனைவியை மையலுடன் பார்த்தவாறு அவளருகில் மெதுவாய் குனிந்து பெண்ணவளின் வாசத்தை முகர அதில் முதுகுத்தண்டு சில்லிட நெஞ்சு படபடக்க கன்னம் சிவக்க கண்கள் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க உதடு துடிக்க அவனை தவிப்புடன் பார்த்து வைத்தாள் மலர்...
தன் அருகாமையில் மனைவி தன்னிலை இழப்பதை உணர்ந்து இதழ்களில் கர்வப்புன்னகை மின்ன அவளை பார்த்து கண்சிமிட்டியவன் அவளை உரசியபடி சாப்பாட்டு அறை நோக்கி செல்ல... கணவனின் உடல் உரசலில் திடுக்கிட்டவள் மனம் தடதடக்க மயங்கி நின்றவளின் காதில் முன்பொரு நாள் இதே போல் நிற்கும் போது கூறிய கணவனின் வார்த்தைகள் நாராசமாய் ஒலிக்க அத்தனை நேரம் இருந்த மயக்கம் நொடியில் கலைந்து செல்ல கணவனின் செயலை எண்ணி வெறுமையுடன் சிரித்தவாறு அவனை பின்தொடர்ந்தாள்.
'டைனிங் டேபிள் அருகே சென்றவன் தன் பின்னால் வந்த மனைவியை பார்த்து சிரித்தவாறு அவளுக்காக கதிரையை நகர்த்தி அவளை அமரும் படி கண்ணசைக்க, அவனை வெற்று பார்வை பார்த்தவள் “இத யார நினைச்சு செய்றீங்க...” என மொட்டையாய் கேட்க...
அவளின் விசித்திரமான கேள்வி புரியாமல், “புரியல...” என சிரித்தபடி அவன் கூற....
“இல்ல... அன்னைக்கு என்கூட படுக்கும் போது என்ன வேசின்னு நினைச்சு தான் அப்பிடியெல்லாம் பண்ணீங்கன்னு சொன்னீங்களே... அதே மாதிரி இதை யாரை நெனச்சு பண்றீங்கன்னு கேக்கிறேன்....” என கத்தியின்றி யுத்தமின்றி அவனை மெல்லமாய் கொன்றால் அவனின் சிக்கி..
அதை கேட்டு துடித்து போய் அவளை நிமிர்ந்து பார்த்தவன் அவளின் பார்வையிலிருந்த வெறுமையை கண்டு கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்தியவன் அவளருகில் நெருங்கி மெதுவாய் அவளின் கைகளை பற்றியவன் “என்ன காயப்படுத்துறதா நினைத்து உன்னை நீயே காயப்படுத்தாத சிக்கி...” என அவளின் கைகளில் சிறு அழுத்தம் கொடுத்து மொழிந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தவாறு தன் அறை நோக்கி சென்றுவிட்டிருந்தான்..
கணவன் செல்வதையே இயலாமையுடன் பார்த்து கொண்டிருந்தாள் மலர்...
ஒரு மனமோ அவன் செல்வதை கண்டு கொள்ளாமல் இருக்க அவளின் மறுபாதி காதல் மனமோ அவன் சாப்பிடவில்லையே என்ற கவலைப்பட்டு கொண்டிருந்தது...
‘பசியோட இருக்கிறதா அத்த சொன்னாங்களே.... என்ன பண்றது....’ என மூளையை கசக்கியவள் அவன் பசியுடன் இருப்பதை தாங்கமுடியாமல் தட்டில் உணவை எடுத்து லிப்ட் வழியால் கொண்டு அவனின் அறை நோக்கி சென்றாள்...
அறையினுள் நுழைந்தவனுக்கு மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்து கொள்ள தவிப்புடன் கட்டிலில் அமர்ந்து தலையை பிடித்து கொண்டு இருக்க அவனின் அறையின் அருகில் வந்தவள் அவன் தலையை பிடித்து கொண்டிருக்கவும் அதை பார்த்தவளுக்கு மனதில் பாரமேற அவனை எப்படி அழைப்பது என புரியாமல் “க்கும்” என தொண்டையை செருமினாள்.
கனைப்பு சத்தத்தில் தலையை நிமிர்த்தியவன் தன் அறை வாயிலில் மனைவி நின்று கொண்டிருக்கவும் அதை நம்ப முடியாமல் மனைவியை விழிவிரித்து பார்த்தவன் அவள் தட்டையும் தன்னையும் மாறி மாறி பார்ப்பதை உணர்ந்து தலையை அழுந்த கோதியவனுக்கு மனம்முழுவதும் மகிழ்ச்சி பரவ மறுபக்கம் திரும்பியவன் தன் நெஞ்சை மென்மையாய் நீவிக்கொண்டான்.
இப்போது அந்த இடத்தில் அவனின் அழகி குடிபெயர்ந்திருந்தாள். தன் மனைவி வீற்றிருந்த தன் இதயத்தை நீவியவனுக்கு மனதில் இனம்புரியா மகிழ்ச்சியும் நம்பிக்கையும் பரவ அவள் புறம் திரும்பியவன் “ஏன் அங்கயே நிற்கிற உள்ள வா..” என புதிதாய் முளைத்த பரபரப்புடன் கூற..
அவனை விசித்திரமாய் பார்த்தவள் ‘வரமாட்டேன்’ எனும் விதமாய் தலை அசைக்க...
“ப்ச்... உள்ள வான்னு நான் சொன்னா... நீ வந்து தான் ஆகணும்...வா” என அதட்ட..
‘இந்த அதட்டலுக்கொன்னும் கொறச்சலில்ல...’ என உள்ளுக்குள் எண்ணி கொண்டு அவள் அசையாது நிற்க...
“வேற எதில குறைச்சல்னு நினைக்கிற” என அவன் கேலியாய் கேட்க....
‘அடியாத்தி நா... நான் மனசுக்குள்ள நெனச்சத இவரு எப்பிடி கண்டு பிடிச்சாரு... ஒருவேல அதுக்கும் எதாவது மெஷின் வச்சிருக்காரோ.... இவரு தான் பணக்காரராச்சே.... அதை வாங்கினாலும் அதிசயப்படுறதுகில்ல...’ என மீண்டும் மனதுக்குள் எண்ணியவாறு அவனை கூர்ந்து பார்க்க....
மனைவியின் எண்ணத்தை கண்டுகொண்டவனுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வர அடக்கமாட்டாமல் உடல் குலுங்க சிரிக்க அதையே கண்கொட்டாமல் பார்த்து வைத்தாள் மலர்.
அவனின் மெல்லிய இதழ் விரிப்பிலேயே அவனின் மேல் பித்து பிடித்து காதலாகி கசிந்துருகியவள் இன்று அவன் வாய்விட்டு சிரிப்பதை பார்த்து ‘இப்பிடியே சிரிச்சிக்கிட்டு இருந்தா எவ்ளோ அழகா இருக்கும்... அத விட்டிட்டு எப்போ பாரு கடுவன் பூனை மாதிரி மூஞ்சை வச்சுகிட்டு வெறப்பாவே நின்னுகிட்டிருந்தா நல்லாவா இருக்கும்... இப்போதான் சினிமா பட ஹீரோ மாதிரி அசத்தலா இருக்கிறாரு’ என அவளின் காதல் மனம் உள்ளுக்குள் ரசனையுடன் எண்ணமிட...
அவளை பார்த்து சிரித்தவன் “அப்போ நான்... சிரிச்சா தான் நல்லா இருக்கேன்... இல்லன்னா கடுவன் பூனை மாதிரி இருக்கேன் அப்பிடித்தானே... சரி அப்போ ஒன்னு பண்ணலாம் இனி என்னோட சிக்கி என்ன நினைக்கிறாளோ அதே மாதிரி தான் நான் இருப்பேன்னு அவளுக்கு ப்ராமிஸ் பண்ணி கொடுக்கிறேன்..” என சன்ன சிரிப்புடன் கூற...
அவளோ அவன் கூறிய பின் பகுதியை கண்டுகொள்ளாது தான் மனதில் நினைத்ததை அப்படியே கூறிய கணவனை விழியகற்றாமல் பார்க்க...
அவள் முழித்து கொண்டிருந்த அழகை பார்த்து ரசித்தவாறு அவளருகில் நெருங்கியவன் அவளின் கன்னத்தில் விழுந்து கிடந்த முடிகற்றையை மென்மையாய் காதின் புறம் சொருகி விட்டவாறு....
“பொண்ணுங்க மனசு ஆழ்கடல் மாதிரின்னு சொல்லுவாங்க... அவங்க மனசில இருக்கிறத கண்டுபிடிக்கிறதுக்கு ஏதாவது மெஷின் கண்டுபிடிக்கணும் சொல்லுவாங்க பட் எனக்கு அது தேவையில்ல சிக்கி... உன்னோட இந்த கண்ண பார்த்தாலே போதும் நீ என்ன நினைக்கிறேன்னு நான் கண்டுபிடிச்சிருவேன் பிகாஸ் நான்... உன்னை...அந்தளவு... கா....” எனும் போதே அவனின் அமெரிக்க நிறுவனத்திலிருந்து அழைப்பு வர அவசரமாய் அதை ஏற்று காதில் வைத்தவன் பேசியபடியே வீட்டை விட்டு வெளியேறி விட அவளோ மறுபடியும் அடிபட்டு போய் நின்றிருந்தாள்.
கண்களில் நீர் துளிர்க்க உதட்டை கடித்து அதை கட்டுபடுத்தியவள் உள்ளுக்குள் நொறுங்கியே போனால்...
‘பொய்யான காதல சொல்லவாறதுக்கு முன்னாடியே கடவுள் அத தடுத்திட்டான் போல... இன்னும் எத்தன தடவ தாங்க இதேமாதிரி என்ன கொல்ல போறீங்க.... ஒவ்வொரு தடவையும் வார்த்தையால கொல்லுவீங்க ஆனா இப்போ புதுசா காதலன்னு பேர்ல கொல்ல பார்க்கிறீங்க....’ என தனக்குள் எண்ணி மருகியவளின் கண்ணீர் கூட வற்றி விட்டிருந்தது... கணவனின் இந்த பொய்யான காதலை எண்ணி...
தட்டுடன் கீழிறங்கியவள் அதை மேசையில் வைத்து மூடிவிட்டு தண்ணீரை அருந்தி பசியை போக்கி கொண்டாள்..
என்னதான் அவன் அவளை காதலிக்கவில்லை என்றாலும் அவள் அவனை உயிருக்குயிராகத்தானே காதலிக்கிறாள்... அவன் சாப்பிடாமல் தான் மட்டும் சாப்பிட பிடிக்காமல் தண்ணீரை விழுங்கி கொண்டு அத்தையின் அறைக்குள் நுழைந்தவள் அங்கு ருத்ராவும் சித்தார்த்தும் அன்யோன்யமாக பேத்தியுடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்து அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாமல் வெளியில் வந்தவள் என்ன செய்வதென புரியாமல் முழித்து கொண்டு நிற்க அங்கு வந்து சேர்ந்தார் சதாசிவம்.
இவள் பேந்த பேந்த விழித்து கொண்டிருப்பதை பார்த்து “என்னம்மா... இங்கென்ன பண்ற... குழந்தை எங்க... உன் புருஷன் எங்கம்மா...” என கேட்க...
அவரை பார்த்து விரக்தியாய் சிரித்தவள் “அவர் எங்க போறார்னு சொல்லிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் அவருக்கு முக்கியமானவ இல்லப்பா...” என்றவள் “நீங்க எங்க போனீங்க... நா... நாம எப்போ அங்க... ஊருக்கு போறோம்..” முகத்தை சாதரணமாக வைத்து கொண்டு கேட்க..
‘இந்த த்ருவா என்ன பண்ணிட்டு போனான்னு தெரியலையே...’ என தெரியாமல் தலையை பிய்த்து கொண்டவர் அவளை பார்த்து புன்னகைத்தவாறு “அதெல்லாம் பிறகு பார்க்கலாம்... உன் அத்தை மாமா எங்க...”
“அவங்க... அவங்க உள்ள இருக்காங்க.... குழந்தையும் அவங்க கூட தான் இருக்கா...”
“அப்போ நீ எதுக்கு இங்க நின்னு வேடிக்கை பார்த்திட்டு இருக்கம்மா...” என அவளிடம் கனிவாய் கேட்க...
“நான் சும்மா... சும்மா வெளியில வெளியில... தோ...தோட்டத்து பக்கம் போக.. போகலாம்னு தான் வந்தேன்...” என திணறலாய் கூறியவள் அவசரமாய் அங்கிருந்து அகல முயல...
அவளை போக விடாமல் தடுத்தவர் “என்ன பழக்கம் இது மலர்... வீட்டுக்கு வந்தவங்கள இப்பிடித்தான் அம்போன்னு விட்டிட்டு போய்டுவியா... இதே உங்க அத்தைன்னா இந்நேரம் தடபுடலா உபசரிச்சிருப்பா... இப்போ உங்க அத்தைக்கு உடம்புக்கு சரியில்லைன்னு தான் உன்ன இந்த வீட்டிக்கு கூட்டிட்டு வந்திருக்கேன்... அதனால உன்னோட அத்தையோட இடத்திலிருந்து நீ தான் இனிமே இந்த வீட்ட பார்த்துக்கணும்... என்ன நான் சொல்றது புரிதா மலர்...” என கனிவுடனும் கண்டிப்படனும் அவளை இந்த வீட்டிலேயே ஒன்ற வைப்பதற்காக கூறிய வார்த்தைகளுக்கு வேறு அர்த்தமும் உண்டென்று அவருக்கு புரியாது போயிற்று...
அது புரிந்தவளோ தான் இந்த வீட்டில் எந்த நிலையில் இருக்கின்றோம் என புரிந்து வேதனையாய் சிரித்தவள் அவரிடம் ‘சரி’ எனும் விதமாய் தலையை அசைத்து விட்டு சமையல்கார அம்மாளிடம் காபி எடுத்துவருமாறு கூறியவள் அத்தையின் அறைக்கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டு நுழைந்து சதாசிவம் வந்திருப்பதை கூறியவள் பசியில் சிணுங்கிய குழந்தையை தூக்கி கொண்டு அவள் முன்பு பாவித்த அறை நோக்கி சென்றாள்.
குழந்தைக்கு பசியாற்றியவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளின் மலர்செண்டின் கன்னத்தில் விழ அதற்கு என்ன புரிந்ததோ மெல்ல கண்களை திறந்து ‘நானிருக்கிறேன்’ எனும் விதமாய் இதழ் பிரித்தது...
குழந்தையின் அந்த செய்கையில் அதன் கன்னத்தில் தாய்மை பெருக்குடன் முத்தமிட்டவள் திடீரென கதவு திறபடவும் தன் மார்பு சேலையை மறைத்தவாறு திடுக்கிட்டு திரும்பி பார்க்க அங்கு முகங்கொள்ளா சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தாள் ஜியா...
அவளது சிரிப்பு மலருக்கும் தொற்றிகொள்ள அவளை பார்த்து ‘இங்கே வா’ எனும் விதமாய் தலையசைக்க அதற்காகவே காத்திருந்தது போல் துள்ளிகுதித்து ஓடி வந்தவள் அவளருகில் அமர்ந்து மலரின் மடியில் படுத்திருந்த அந்த பிஞ்சு குழந்தையின் கைகளில் மென்மையாய் முத்தமிட்டவள் “அம்மா... பேபி என்னமாதிரியே இருக்கில்ல...” என சந்தோசமாய் கூற...
அவளின் பேச்சின் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளாமல் வெள்ளந்தியாய் “அப்பிடியா... என்னோட செல்ல குட்டி மாதிரியேவா அவளோட தங்கச்சி பாப்பாவும் இருக்கா...” சிரித்தவாறு கேட்க...
“அச்சோ அம்மா... என்னம்மா நீங்க... என்னமாதிரின்னா என்னை மாதிரியில்ல...” என மழலை குரலில் கூறியவளின் குரல் இனிமையாய் மாற... “உங்களோட தேவிம்மா மாதிரியே இருக்கில்ல... அதுவும் நீங்க ஆசைப்பட்ட மாதிரியே அவங்களே உங்களுக்கு மகளா பொறந்திட்டாங்க...” என கூறி சிரிக்க அதை கேட்டு முதலில் அவளுடன் இணைந்து சிரித்த மலருக்கு அதன் பின் தான் அவள் கூறியதின் முழு அர்த்தம் புரிய ‘இது ஜியாக்கு எப்பிடி தெரியும்’ என குழம்பியவள் நிமிர்ந்து பக்க அங்கு ஜியா இல்லாது வெறிச்சோடி இருந்தது...
அதை பார்த்து நெஞ்சுக்கூடு சில்லிட பயத்துடன் சுற்றும் முற்றும் கண்களை சுழற்றியவள் குழந்தையை மார்போடு இறுக்கி கொண்டு “ஜியா... ஜியாம்மா... எங்க இருக்க....” என மெல்லிய குரலில் பயத்துடன் அவளை அழைக்க.... அதேநேரம் மீண்டும் அறைக்கதவு திறப்பட்டது....
அமெரிக்க நிறுவனத்திலிருந்து அழைப்பு வரவும் அவசரமாய் கிளம்பியவன் மனைவியின் நினைவில் அவசரமாய் வேலையை முடித்து விட்டு வீடு வந்தவன் முதலில் சென்றது அவனின் மனைவியின் அறைக்கு தான்.
மனைவி அங்கு தான் என்ற நினைவில் அங்கு சென்றவன் அங்கு அவளை காணாது அவள் பாவிக்கும் அறையருகே செல்ல அது முடியிருந்தது... மனைவி உள்ளே இருப்பாளோ எனும் ஆசையில் மெதுவாய் அந்த கதவை திறந்தவன் அங்கும் அவளில்லாது போகவே குழம்பி போய் கீழிறங்கியவன் தாயின் அறையருகே சென்று நோட்டம் விட அங்கு அவள் இருந்தற்கான அறிகுறியே இல்லாது போகவும் கோபத்துடன் தலையை உலுக்கி கொண்டு படியேறும் போது அந்த படியின் அருகிலிருந்த அறையிலிருந்து பேச்சு சத்தம் கேட்கவும் மெதுவாய் அந்த அறையருகே சென்று கதவை திறந்தான்.
ஏற்கனவே பயத்தில் இருந்த மலர் மீண்டும் அறைக்கதவு திறபடவும் காய்ந்த தொண்டையை எச்சில் விழுங்கி ஈரப்படுத்தி கொண்டு “ஜி... ஜியா... என்ன விளையாட்டு இது...” என்க..
கதவை திறந்த யுத்கார்ஷ் உள்ளிருந்து கேட்ட மனைவியின் குரலில் பரவசமடைந்து அதன் பின்பே அவள் ‘ஜியா’ என்றழைப்பதை உணர்ந்து புருவம் சுருங்க யோசனைக்கு உள்ளானான்.
‘ஒருவேல ஜியாவ ரொம்ப மிஸ் பண்றாளோ...’ என எண்ணியவாறு கதவை திறந்து உள்நுழைந்தவன் அங்கு மலர் குழந்தையை இறுக பிடித்து கொண்டு பயத்துடன் முழித்து கொண்டிருப்பதை பார்த்து குழம்பியவனாய் அவளருகில் சென்றான்...
“என்னாச்சு சிக்கி... ஏன் ஒரு மாதிரியா இருக்க....” என கேட்டவாறு தன் மகளை மென்மையாய் தன் கைகளில் அள்ளி கொண்டான்.
குழந்தையின் முதல் ஸ்பரிசம் அவனை தந்தையாய் கர்வம் கொள்ள செய்தது... தன் மகளையே சிலிர்ப்புடன் பார்த்தவன் மென்மையாய் அவள் நெற்றில் முத்தமிட்டவாறு மனைவியை நிமிர்ந்து பார்த்தான்.
சிறிதும் தன் பாவனையை மாற்றாது முன்பை போலவே முழித்து கொண்டிருந்த மனைவியை பார்த்து புருவம் உயர்த்தியவன் “என்னாச்சுன்னு கேட்டேன்ல.... சொல்லு...” என அவளின் தயக்கத்தை அறிந்து உந்த....
மனைவியின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவன் “என்னாச்சு சிக்கி... எனி ப்ரோப்லம் (any problem)...” என கூறி சிரித்தவன்..
“ஜியாவையே நினைச்சிட்டு இருக்க போல.... அதான் அவ இருக்கிற மாதிரி இருந்திருக்கு.... நீ... அவள மிஸ் பண்றியா... நான் வேணா அவள இங்க வர சொல்லட்டுமா....” என கேள்வி மேல் கேள்வியை அடுக்க அவன் கூறுவது எதுவும் புரியாதவாளாய் திக்பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள் மலர்...
சில மாதங்களின் முன்பு நடந்த நிகழ்வுகள் மீண்டும் கண் முன்னால் படமாய் ஓட விக்கித்து போய் நின்றவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது...
அன்று.... அன்றிரவு நடந்தது எல்லாமே உண்மை... தனக்கு ஆபத்து வந்ததும் உண்மை... யாரோ அதிலிருந்து தன்னை மீட்டதும் உண்மை....
ஆனால் அது யாரென்று தான் அவளுக்கு புரியவில்லை... ‘ஆனால் அந்த குரல்.... அது எனக்கு மிகவும் பழக்கமானதாய் தோன்றுகிறதே.... ஏன்.... என்ன தான் நடக்குது....
அன்று... அன்றிரவும் இதே குரல் தானே என்காதில் கேட்டது.... நான் என் பிரம்மை என்று நினைத்தேனே.... அப்போ... இன்று ஜியாவின் ரூபத்தில் வந்ததும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்... ஆனால் அது யார்.... ஏன் அது என்னை காப்பாற்ற வேண்டும்.... ஒரு.... ஒருவேளை அ... அது தேவி.... தேவிம்மாவா இருக்குமோ.... அவர்களது குரலும் இப்படித்தானே மென்மையாய் இருக்கும்... ஆ... ஆனால் எப்பிடி... இது எப்பிடி சாத்தியம்....’
‘என்ன சுத்தி என்ன நடக்குது கடவுளே... எனக்கு என்னாச்சு.... உணமையிலேயே இது எல்லாம் நிஜமா... இல்ல கற்பனையா.... இது நிஜம்னா அது யாரா இருக்கும்.... இல்ல கற்பனைன்னா ஏன் எனக்கு இந்த மாதிரி எல்லாம் தோணுது.... எனக்கு இப்பிடியெல்லாம் தோணுறது நல்லாதா... இல்ல... எதாவது கேட்டது நடக்க போகுதா... கடவுளே இதையெல்லாம் நீதான் சரி பண்ணனும்....’ என தலையை பிடித்தவாறு கடவுளிடம் வேண்டி கொண்டு நிமிர அதே நேரம் அவளருகில் நெருங்கி அவளது கைகளை விலக்கி அவளின் தலையை மெதுவாய் பிடித்து விட ஆரம்பித்தான் யுத்கார்ஷ்...
அவனது செய்கையில் பதறியவள் “என்ன பண்றீங்க... முதல்ல கைய எடுங்க....” என அவனின் கையை விலக்கியவாறு கூற...
அவனோ அவளது கைகளிரண்டையும் தன் கைகளால் பிடித்து கொண்டு கட்டிலில் குழந்தையின் அருகில் அவளை அமர்த்தி தானும் அவளருகில் அமர்ந்து மீண்டும் அவளின் நெற்றியை இதமாய் பிடித்து விட துவங்கினான்.
அவளோ இவனின் இந்த அடாவடி செய்கையில் அதிர்ந்து போய் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள்....
தன்னையே விழியெடுக்காமல் பார்த்து கொண்டிருந்த மனைவியை கள்ள சிரிப்புடன் ஏறிட்டவன் நெற்றியை பிடித்து கொண்டிருந்த கைகளை மெதுவாய் கீழிறக்கினான்..
மிக மிக மெதுவாய் ஒற்றை விரலால் அவளின் நெற்றியில் ஆரம்பித்து அவளின் கூர்நாசியில் மென்மையாய் கோடிழுத்தவன் அவளின் கன்னத்தில் தன் விரல் கொண்டு சுண்ட அவனின் திடீர் செய்கையில் பதறிப்போய் அவனிடமிருந்து விலகியவள் கட்டிலின் மறுபக்கம் போய் நின்று கொண்டாள்.
மனைவியின் விலகலை எண்ணி சலிப்புற்று கொண்டு அவளை முறைத்தவன் “இப்போ என்ன ஆச்சுன்னு இப்பிட விலகி விலகி போற...” என காட்டத்துடன் கேட்க...
அவனின் குரலில் இருந்த கோபத்தை கண்டு கொண்டவள் பயத்துடன் எச்சிலை விழுங்கி தொண்டையை ஈரப்படுத்தி கொண்டு “நீங்க இப்பிடியெல்லாம் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல்ல... நீங்க யாரை நினைத்து இப்பிடி பன்றேங்கன்னும் எனக்கு புரியல.... தயவு செஞ்சு இனிமே என்ன தொட்டு பேசாதீங்க.... எனக்கு அருவருப்பா இருக்கு.... முதல்ல தொடுவீங்க... அப்றோம்... ஏதோ நான்தான் உங்கள மயக்கி தொடவச்ச மாதிரி ரொம்ப கேவலமா பேசுவீங்க.... அதியெல்லாம் தாங்குற அளவுக்கு என் உடம்புல தெம்புயில்ல மனசில சக்தியும் இல்ல....” என கடகடவென அவனிடம் கூறியவள் கண்களில் துளிர்த்த நீரை அவனுக்கு காட்டாது உதட்டை பற்களால் அழுந்த கடித்து இமையை சிமிட்டி கண்ணீரை உள்ளடக்கியவள் அவனை வெற்று பார்வை பார்த்தாள்..
மனைவியின் பேச்சை எந்த குறுக்கிடலும் இல்லாமல் கேட்டவன் மௌனமாய் சிரித்து கொண்டு அவளருகில் சென்றான்...
மலரின் இந்த பேச்சை கேட்டு உண்மையிலேயே அவனுக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்... மாறாக அவனுக்கு சிரிப்புத்தான் அவனது தொலைத்தது.. ஆனால் இதயத்தின் ஒரு பகுதியில் வலி தோன்றியது உண்மையே... அது மனைவியின் வலியை கண்டு அவனுக்குள் தோன்றிய காதல் வலி...
அதை அவளிடம் வெளிப்படுத்தாது சிரித்தவாறு அவளருகில் நெருங்கியவன் “ரொம்ப சென்டிமென்டா பேசி என்னோட ஹார்ட டச் பண்ணிட்ட பேபி... செம்ம ஸ்பீச்... இதை ஒரு தமிழ் மூவியிலேயோ இல்ல ஒரு தமிழ் டிராமாலயோ சொல்லியிருந்தா சூப்பரா இருந்திருக்கும்...” என சிரித்தவன்...
“பட் நீ இப்படி சென்டிமென்டா பேசி என்னோட டைம வேஸ்ட் பண்ணியிருக்க வேண்டாம்... அதுவுயில்லாம நீ எதுக்கு இப்பிடியெல்லாம் பேசுற பேபி... நான் உன்ன தொட கூடாதுன்னு தானே... பட் என்னால உன்ன தொடாம இருக்க முடியாதே பேபி.... நான் என்ன பண்றது நீயே சொல்லு... நான் தாலி கட்டியிருக்கிற என்னோட பொண்டாட்டிய நான் தொடாம வேற எவன் தொடுவான்.... இல்ல நான் தான் தொட விட்டிடுவேனா...தொட்டவனையும் கொன்னுடுவேன் உன்னையும் கொன்னுடுவேன்.... என்னோட பொண்டாட்டியா இருக்கணும்னா அதுக்கு முழுத்தகுதியே... அவள தொடுற முதல் ஆளா நான் மட்டும் தான் இருக்கணும்... வேற எவன் கையாவது அவ மேல பட்டிருந்தா உருத்தெரியாம அழிச்சிடுவேன்...” என மீண்டும் உருமியவன் தலையை தட்டி தன்னை சமன் படுத்தி கொண்டு “பட் நீ அப்படிப்பட்ட பொண்ணில்லேன்னு எனக்கு தெரியும் பேபி...” என கூறி புன்னகைத்தவன்...
“அண்ட் இன்னொரு விஷயம்... நான் உன்ன தொடாம மட்டும் இருக்க மாட்டேன் பேபி... ப்ளீஸ்... ப்ளீஸ்... எனக்காக... என்செல்ல பேபில்ல... சோ நான் உன்ன தொடும் போதும் இப்போ மாதிரி நீ சட்டுன்னு விலக கூடாது பேபி... எனக்கு அது சுத்தமா பிடிக்காது சரியா... இப்போ உனக்கு உடம்பு சரியில்ல அதனால தான் நான் கைய கட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருக்கேன்... கூடிய சீக்கிரம் உன்னோட உடம்பு சரியாகட்டும் அப்றோம் பாரு இந்த மாமனோட விளையாட்ட...” எனக்கூறி கண்சிமிட்டிய படி வெளியேறி கதவருகில் சென்றவன் மீண்டும் அவளருகில் வந்தான்.
அவள் பயத்தில் கண்களை அகல விரித்து கொண்டு நின்றிருக்கவும் பயத்தில் விரிந்த கண்களும் லேசாய் பிழந்திருந்த இதழ்களும் அவனுக்கு தாபத்தை மூட்ட அவளருகில் நெருங்கியவன் சட்டென குனிந்து அவளிதழோடு இதழ் பதித்து முத்தமிட்டவன் அவள் காதருகில் தன் இதழ்கள் உரச...
“நீ என்ன சொன்னாலும் கேக்கிறதுக்கு ட்ரை பண்றேன் பேபி.... பட் உன்ன தொடாம மட்டும் என்னால இருக்க முடியாது சோ ப்ளீஸ் பேபி.... எனக்கு உன்னோட பெர்மிஷன் எல்லாம் தேவையில்ல.... பட் சொல்லனும்னு தோனிச்சு அதான்.... ஓகே பேபி நீ நல்லா ரெஸ்ட் எடு.... நான் ஜியாவ வர சொல்றேன்.... ஓகேவா.... போ... போ... போ...” என அவளிடமிருந்து விலகி அவளை கட்டிலில் அமர வைத்தவன் அவளின் கன்னத்தில் தட்டி....
“பேபி உனக்கு இந்த டைம்ல நார்மல் பூட் தான் செட் ஆகும்னு அங்கிள் சொன்னாரு... எனக்கு அதை பத்தியெல்லாம் தெரியாது பேபி... சோ நீயே செர்வன்ட் கிட்ட என்ன வேணுமோ அதை செய்ய சொல்லி சாப்பிட்டுக்கோ..... எனக்காக வெயிட் பண்ணாத... ஓகே வா.... நான் இப்போ ஆபீஸ் போகணும் நாம நைட் மீட் பண்ணலாம்.... பாய் பேபி....” என கூறி கிளம்பி சென்று விட்டிருந்தான் அவன். புறப்பட்டு செல்லும் அவனையே புரியாத பார்வை பார்த்து கொண்டிருந்தாள் மலர்.
சற்று நேரத்தின் முன்பு மென்மையாய் இருந்தவன் திடீரென வன்மையாய் மாறி மீண்டும் மென்மையாய் மாறி காதல் ரசம் பிழிந்ததை அவள் அதிசயமாய் பார்ப்பதிலும் ஆச்சர்யம் இல்லை..
உண்மையிலேயே அவன் ஒரு புரியாத புதிர் தான். எப்போது எப்படி மாறுவான் என்று அவனுக்கு கூட தெரியாது... சூழ்நிலையை பொறுத்தே அவனின் மாற்றமும் அமையும்..
உயிருக்குயிராய் காதலித்த அவனின் மைலுவை வார்த்தையால் கொன்றதும் இந்த சூழ்நிலையால் தான். ஆசை ஆசையாக காதலர் தினத்தன்று அவளிடம் தன் காதலை கூற சென்றவன் இறுதியில் காதலை சொல்லாமல் அவள் மறந்திருந்த ஒன்றை அவளுக்கு நினைவூட்டி அவளை வார்த்தையால் கொன்று தன் காதலையும் கொன்றிருந்தான் அவன்..
அவனுக்கு எந்தளவு விவேகம் இருக்கின்றதோ அதேயளவு வேகமும் இருப்பதால் தான் இந்த வினையே..
வாழ்க்கையில் அவசரகதியில் வார்த்தையை விட்டு அதன் பின்பே யோசிக்கும் ரகம்.... ஆனால் வியாபாரத்தில் ஆயிரம் முறை யோசித்துவிட்டு நிதானமாய் ஆயிரம் பேரையும் ஒற்றை ஆளாய் நின்றே சாதூர்யமாய் சமாளிக்கும் ஜெகஜால கில்லாடி...
தான் மணப்பவளை தொடும் முதல் ஆணாக தான் மட்டுமே இருக்க வேண்டும் என்ற ஆசையில்
இருந்தவன் மைலுவின் மேல் கொண்ட அதிகளவு உரிமையினால் அவளை முன்பே யாரோ தொட்டு அசுத்தபடுத்தியதை தாங்கமுடியாமல் வார்த்தையை வீசியெரிந்தவன் அதன் பின்பே தன் செயல் உணர்ந்து அவளை தேடி சென்றபோது அவளின் உயிர் பிரிந்திருந்தது...
இன்று தன் மனதிலுள்ள ஆசையை மனைவியிடத்தில் மறைமுகமாக கூறி அவளை தனக்கு பிடிக்குமென்பதை ஏதோவொரு விதத்தில் கூறியவனுக்கு தெரியவில்லை... இந்த வார்த்தைகளால் அவள் எந்தளவு காயப்பட்டிருக்கின்றாளேன்று.....
அதுமட்டுமன்றி கூடிய விரைவிலேயே அவனின் மனைவியை சீரழிக்க ஒருவன் நாள் குறித்திருக்கின்றானென்ரும் அவனுக்கு தெரிந்திருக்கவில்லை....
விதியின் கரங்கள் இன்னும் அவளை விட்டு அகலவில்லை போல....
----------------------------------------
வெளியேறி செல்லும் கணவனையே விசித்திரமாய் பார்த்து கொண்டிருந்தவள் குழந்தை லேசாய் சிணுங்கவும் அதன் அருகில் சென்றவள் மென்மையாய் குழந்தையை கைகளில் அள்ளி கொண்டு தாலாட்டு பாட துவங்கினாள்.
தாலேலோ.... தாலே... தாலே... தாலே... லொ...
தாமரை பூங்கனவில்..
செல்லமே கண்ணுறங்கு...
ஒவ்வொரு இரவிலும் வளர்ந்து...
ஒவ்வொரு உறவிலும் வளர்ந்து..
சந்திரக் கலையில் நின்றொரு...
திங்களாய் நீ வளர்க..
அம்மாவின் மனதில்...
முழு திங்களாய் நீ வளர்க..
அன்னையின் நெஞ்சிலே...
சின்னகுயில் சித்ராவின் குரலை போலவே மெல்லிய குரலில் தாய்மையின் பூரிப்புடன் சன்னமாய் அவள் பாடிய பாடலில் மயங்கி கண்ணுரங்கியது அவளின் குழந்தை மட்டுமல்ல...
அவளையே பின்தொடர்ந்து கொண்டிருக்கும் அவளின் தேவியின் ஆன்மாவும் கூடத்தான்...
குழந்தை மார்பில் சாய்ந்து உறங்கியதும் அதன் நெற்றில் இதழை ஒற்றி எடுத்தவள் கட்டிலில் குழந்தையை கிடத்தி விட்டு சிறிது நேரம் தன் மகளையே பார்த்து கொண்டிருந்தாள்.
மனதினுள் பல விடை தெரியாத கேள்விகள் அரித்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் யோசித்து விடைகாண அவளால் முடியவில்லை.
மற்றவற்றை கூட பின்னால் யோசித்து கொள்ளாலாம்... ஆனால் இப்போது மிக முக்கியமாய் அவள் மனதினுள் விடைதெரியாமல் அரித்து கொண்டிருக்கும் விஷயம் கணவனின் திடீர் மாற்றம்...
‘எப்படி இவ்வளவு சீக்கிரம் அவர் மனம் மாறினார்... அவ்வளவு சுலபத்தில் மனம் மாறக்கூடியவர் அல்லவே... என்ன நடந்தது...’ என எவ்வளவு யோசித்தும் விடை தெரியாது போகவே... மெல்ல கட்டிலில் சாய்ந்து கண்களை மூடி தூங்க முயற்சித்தாள்..
ஆனால் தூக்கம் தான் வந்தபாடாய் இல்லை... மாறாக அவள் மனதுக்குள் சின்ன ஆசையொன்றெ வட்டமிட்டு கொண்டிருந்தது... தன் பெற்றோரை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதால், அவர்களை எப்போது பார்ப்போம் எனும் ஆசை நெஞ்சின் ஓரம் இருந்து கொண்டே இருந்தது..
அதை கணவனிடம் கேட்பதற்கும் அவளுக்கு விருப்பமில்லை... அது ஏனென்றும் புரியவில்லை... ஒருவேளை குழந்தை பிறந்ததால் தான் தன்னுடன் இழைகிறாரோ என்ற எண்ணமும் வண்டு போல் குடைந்து கொண்டிருந்தாலோ என்னவோ...s
அதேநேரம் தேவியின் நினைவுகளும் மனதினுள் அலைமோதி கொண்டிருந்தது... கணவனின் பேச்சிலிருந்து எது புரிந்ததோ இல்லையோ ஒன்று மட்டும் அவளுக்கு தெளிவாய் புரிந்திருந்தது..
அதுவும் ‘நான் தாலி கட்டியிருக்கிற என்னோட பொண்டாட்டிய நான் தொடாம வேற எவன் தொடுவான்.... இல்ல நான் தான் தொட விட்டிடுவேனா...தொட்டவனையும் கொன்னுடுவேன் உன்னையும் கொன்னுடுவேன்.... என்னோட பொண்டாட்டியா இருக்கணும்னா அதுக்கு முழுத்தகுதியே... அவள தொடுற முதல் ஆளா நான் மட்டும் தான் இருக்கணும்... வேற எவன் கையாவது அவ மேல பட்டிருந்தா உருத்தெரியாம அழிச்சிடுவேன்...’ என உறுமிய கணவனின் குரல் இப்போதும் காதில் ஒலித்து அவளை நடுக்கமுற செய்தது..
அதுமட்டுமன்றி அதனூடே இன்னுமொரு எண்ணமும் தோன்றி அவளை அலைகழித்தது...
‘இப்படிபட்டவர் எப்படி தேவிம்மாவை காதலித்தார்... ஒருவேளை தேவிம்மாக்கு அப்படியொன்னு நடந்தது தெரியாம தான் காதலிச்சாறோ... அப்றோம்... திடீர்ன்னு என்ன நடந்தது... ஒருவேள இவருக்கு அது தெரிஞ்சுதுனால தான் தேவிம்மாவிற்கு திடீர்னு இப்பிடி ஆச்சா... என்கிட்டயே எக்குதப்பா பேசுறவரு... தேவிம்மாகிட்ட எப்படியெல்லாம் பேசினாரோ... ஐயோ... அதின் நினைக்கும் போதே என்னோட உடம்பெல்லாம் நடுங்குதே... நீங்க எப்படி தேவிம்மா அதையெல்லாம் தாங்கினீங்க.... ஒருவேல அத தாங்க முடியாம தான உங்க உசுரு உங்கள விட்டு போயிடிச்சோ...’ என தன் மனக்கவலையையும் மீறி தன் உயிரிலும் மேலான தேவியிற்காக கண்ணீர் சிந்தினால் மலர்...
தன் மலர் போன்ற மலரவளின் கண்ணீரை கண்டு துடித்த தேவியின் ஆன்மா அவலருக்ல் வந்து அவளின் தலையை தன் மடிமீது சாய்த்து கொண்டது..
கண்ணீர், கவலை, வெறுமை, மகிழ்ச்சி, ஏக்கம் என அனைத்தின் பிடியிலும் சிக்கியிருந்த மலர் தன் தேவி தன்னருகில் இருந்ததை உணர்ந்தாலோ என்னவோ அத்தனை நேரம் விலகி நின்று அவளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நித்ராதேவியும் அவளை ஆரத்தழுவ நிம்மதியாய் தூங்கி போனாள் மலர்..
அசதியில் நெடுநேரம் தூங்கியவள் குழந்தை பசியில் சிணுங்கவும் கண்களை கசக்கி கொண்டு கண்விழித்தவள் தன் முன் நின்றவர்களை பார்த்து திகைத்து விழித்து பின் மகிழ்ச்சியில் அவசரமாய் எழுந்து அவர்களை நோக்கி விரைந்தாள்...s
‘எத்தனை நாளாகிவிட்டது இவர்களையெல்லாம் பார்த்து...’ என எண்ணியவளின் கண்களில் புன்னகையுடன் சேர்த்து ஆனந்த கண்ணீரினதும் சாயல்..
அவளது அறையில் நின்று கொண்டிருந்தவர்கள் வேறுயாருமல்ல...s
அவளது பெற்றோரும் தேவியின் குடும்பத்தினரும் தான்..]மனைவியின் மனதை எப்படி படித்தானோ... மனைவிக்கு இவர்களை எல்லாம் பார்க்கும் ஆசை இருக்கின்றது என்பதை கண்டு கொண்டு அனைவரையும் வரவழைத்திருந்தான்..
தன் பெற்றோரின் அருகில் சென்று அவர்களை அணைத்து கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது...
அதை பார்த்த தமயந்தி “புள்ளபெத்த பொண்ணு அழக்கூடாதுடாமா.... நீ எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்...” என்க...
தாயின் பேச்சில் கன்னத்தை அழுந்த துடைத்தவள் முகத்தில் புன்னகையை படர விட அதை சற்று தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த யுத்கார்ஷின் முகமும் புன்னகையை பூசிக்கொண்டது..
அவனுக்கு மனைவியின் வேதனை நன்கு புரிந்து தான் இருந்தது... ‘அதுவுமின்றி பிரசவ காலத்தில் அவள் என்னன்னே கஷ்டங்கள் பட்டாளோ... அந்நேரம் எத்தனையோ ஆசைகள் இருந்திருக்கும்....’ என எண்ணிப் பார்க்கும் போதே ஏதோ தானே அத்தனை துன்பங்களையும் பட்டது போல் உள்ளுக்குள் துடித்து போனவன் அவசரமாய் அவளது பெற்றோரையும் தேவியின் குடும்பத்தையும் தன் வீட்டிற்கு அழைத்திருந்தான்..
தமயந்தி, சுந்தரபாண்டியனுக்கு மலர் வீட்டை விட்டு போனது பற்றி எதுவும் தெரியாததால் மற்றவர்களிடம் அதை பற்றி எதுவும் பேச வேண்டாம் என எச்சரித்தும் விட்டிருந்தான்.
‘எங்கே அது அவர்களுக்கு தெரிந்து அதில் மீண்டும் தன் மனைவி காயப்பட்டு விடுவாளோ’ என்ற பயத்தில் தான் அவன் அவர்களிடம் எச்சரித்திருந்தது..
தாய் தந்தையுடன் சிறிது நேரம் சீராடியவள் அகிலாண்டேஸ்வரியின் அருகில் சென்று அவரின் காலில் விழ தாமதித்த ஒரு நொடியில் அவளருகில் வந்து நின்று அதை தடுத்து விட்டிருந்தான் யுத்கார்ஷ்..
மலர் அவனை புரியாத பார்வை பார்த்து வைக்க மற்றவர்களும் அவனை கேள்வியாய் நோக்கினர்..
அப்போது தான் அந்த அறைக்குள் நுழைந்த சித்தார்த்தும் வீல் ஷேரில் இருந்த ருத்ராவும் அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தனர்...
மற்றவர்களின் பார்வையிலிருந்த கேள்வியை கண்டு கொண்டவன் தொண்டையை செருமிக்கொண்டு “இத்தன நாள் எப்பிடிவேணா இருந்திருக்கலாம்.... ஆனா இனிமே என்னோட பொண்டாட்டி மத்தவங்க கால்ல விழுறத என்னால ஏத்துக்க முடியாது...” என அலட்சியத்துடன் கூற அதை கேட்டு தலையில் அடித்து கொண்டார் சித்தார்த்..
ருத்ரா நெற்றிக்கண்ணை திறக்காத குறையாக அவனை முறைத்து பார்த்தார்... ‘வயசுக்கு மூத்தவங்கன்னு ஒரு மரியாதை கூட இவனுக்கு இல்லாம போச்சு... இவன...’ என பல்லையும் கடித்து கொண்டார்...
இதை கேட்ட மலரோ ‘நான் உங்க பொண்டாட்டியாஆஆ... இது எப்போதிருந்து....’ என ஒரு பார்வையை அவனை நோக்கி வீசி வைத்தாள்.
இவனின் பேச்சை கேட்ட அகிலாண்டேஸ்வரி தேவி கோபம், வெறுப்பு, அவமானம் எதுவுமின்றி தன் பேத்தியின் ஆசை நிறைவேறி விட்டது என மகிழ்ச்சியில் ஆழ... மலரின் பெற்றோரோ மருமகனின் பேச்சில் உள்ளம் குளிர நின்று கொண்டிருந்தனர்...
தங்கள் மகள் இங்கு நன்றாகவே இருக்கிறாள்... மருமகனும் மனம் மாறி தங்கள் மகளுடன் சந்தோசமாக வாழ்கின்றார் என என்னும் போதே சந்தோசம் அவர்களின் உள்ளத்தை நிறைத்தது..
மனைவியின் பார்வையை கண்டு துக்கம் பெருகினாலும் அதை தனக்குள் போட்டு புதைத்து கொண்டவன் யாருமறியாமல் அவளை பார்த்து கண்சிமிட்டினான்.
அவனின் கண்சிமிட்டலில் உடலில் உள்ள இரத்தமெல்லாம் முகத்தில் பாய்ந்து முகம் செவ்வானமாய் சிவக்க படபடத்த இதயத்துடன் மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள் மலர்..
மருமகனின் பார்வையையும் மகளின் முகச்சிவப்பையும் பார்த்த தமயந்தி கூச்சத்துடன் பார்வையை தாழ்த்திக் கொண்டு கணவனின் கையை சுரண்டி கண்ஜாடை காட்ட..
மனைவியின் கண்ஜாடையில் மனைவியை பார்த்து சுந்தரபாண்டியன் கண்சிமிட்ட அந்த வயதிலும் அழகாய் வெட்கப்பட்டார் தமயந்தி..
‘கூறுகெட்ட மனுஷன்... நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்காம கண்சிமிட்டிறாரு.. கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லாதவரு...’ என நொடித்து கொண்டாலும் கணவனை காதலுடன் பார்க்கவும் தவறவில்லை..
மனைவியின் காதல் பார்வையை கண்டு அந்த நாள் நியாபகத்திற்கு சென்றவர் கர்வமாய் தன் மீசையை முறுக்கி கொள்ள... இதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்து கொண்டிருந்த வின்னிக்கி காதால் புகை வராத குறை தான்.
“இந்த அண்ணன் ரொமான்ஸ் பண்றாருன்னா அதுல ஒரு நியாயம் இருக்கு... ஆனா இந்த ரெண்டு ஓல்ட் ஜோடி ரொமான்ஸ் பண்றத தான் என்னால தாங்க முடியல... அவனவன் கிடைக்கிற கேப்பில ஹெலிகாப்டேரே ஓட்டுறான் ஆனா நான் இன்னும் பர்ஸ்ட் ஸ்டேஜ் கூட தாண்டல..” என தன் அருகில் நின்றிருந்த பின்டோவின் காதில் முணுமுணுக்க அதைகேட்டு கேலியாய் உதட்டை வளைத்தாள் பின்டோ..
தன் மனகவர்ந்தவளின் உதட்டு சுழிப்பையே காதலுடன் பார்க்க துவங்கினான் ஒமி..
அதை பார்த்து தலையில் அடித்து கொண்டாள் வின்னி... திரும்பும் பக்கமெல்லாம் ஆளாளுக்கு தங்களின் ஜோடிகளை சைட் அடித்து கொண்டிருக்க காதல் கை கூடாமல் என்ன செய்வதென புரியாமல் தலையை பிய்த்து கொண்டிருந்த வின்னிக்கு இதைப் பார்த்தால் கடுப்பு ஆகுமா ஆகாதா..
அதானலே அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் கொலைவெறியுடன் வெளியேறி படியேறி மேலே சென்றவள் அங்கிருந்த பால்கனி பக்கம் சென்றாள்..
தன் போனில் தன்னவனின் புகைப்படத்தை காதலுடன் பார்வையிட்டு கொண்டு அங்கு சென்றவளின் காதில் யாரோ மெல்லிய குரலில் உரையாடும் சத்தம் கேட்க சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு குரல் வந்த திசை நோக்கி சென்றாள்..
அதேநேரம் கீழே மலரின் அறையிலிருந்தவர்கள் குழந்தை பார்வையிட்டு கொண்டு ஹாலிற்கு செல்ல மலரும் குழந்தையை கைகளில் அள்ளிக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தாள்...
அதை பார்த்த யுத்கார்ஷ் மனைவியின் கையிலிருந்து குழந்தை வாங்கியவன் “இந்த டைம்ல வெயிட் தூக்க கூடாது பேபி... நீ ப்ரீயா இரு... நம்ம குட்டி பேபிய நான் தூக்கிட்டு வாறேன்...” என்றவன் முறைத்து கொண்டு சென்ற மனைவியை உரசியபடி அவளுடன் சென்றான்..
குரல் கேட்ட திசை நோக்கி சென்ற வின்னிக்கு யாரென்று தெரியாத பயம் இருந்தாலும் இயற்கையிலேயே உள்ள துணிச்சல் கைகொடுக்க மனதை அமைதிபடுத்திக் கொண்டு அந்த இடத்தை சென்றடைந்தவள் சத்தியமாய் ஜியாவை அங்கு எதிர்பார்கவில்லை..
மெதுவாக அங்கு சென்ற வின்னி அவ்விடத்தில் ஜியாவை சற்றும் எதிர்பார்க்கவில்லை..
‘ஜியா இங்க என்ன பண்றா...’ என யோசனையில் மூழ்கியவள் அவளருகில் நெருங்க, ஜியாவோ பின்னால் யாரோ வரும் ஓசை கேட்டு தன் பேச்சை பாதியில் நிறுத்தி மெதுவாய் திரும்பி பார்க்க அங்கு வின்னி இவளையே கூர்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வைக்கான அர்த்தம் அந்த இளம் மொட்டிற்கு புரியாவிட்டாலும் தன் உரையாடலை கேட்டிருப்பாளோ எனும் சிறு சந்தேகம் எழ “இங்க என்ன பண்றீங்க...” என வின்னியை நோக்கி கேள்வியெழுப்ப...
அதை கேட்டு கடுப்பானவள் ஜியாவை முறைத்து கொண்டு “அது நான் கேக்கவேண்டிய கேள்வி... ஆமா நீ இங்க என்ன பண்ற... யார் கூட பேசிட்டிருந்த...” என அவளை சந்தேகமாய் நோக்க...
அதை கேட்டு உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் அதை மறைத்து கொண்டு அவளை பார்த்து சிரித்தவள் “நான் சும்மா தான் இங்க வந்தேன்... அண்ட் என்ன கேட்டீங்க யார் கூட பேசுறேன்னா...” என மீண்டும் மென்னகை சிந்தியவள் “இதோ இது கூடத்தான் பேசிட்டிருந்தேன்” என தன் கையிலிருந்து பொம்மையை தூக்கி காண்பித்தாள்.
அந்த பொம்மையை பார்த்து பயந்த வின்னி “ஏய்... ஏய்... ஜியா அந்த பொம்மையை தூக்கி போடு.... ப்ளீஸ்... எனக்கு அதுன்னா பயம் ப்ளீஸ்டி” என தன் வயதையும் மறந்து ஒரு சிறு பெண்ணிடம் அவள் கெஞ்ச அதை கேட்டு கணீரென சிரித்தாள் ஜியா... அவளுடன் சேர்ந்து சத்தமாய் சிரித்தாள் ஜில்மில்...
அந்த சிரிப்பொலியில் திடுக்கிட்டு மூடியிருந்த கண்களை மெதுவாய் திறந்த வின்னி “ஜியா... யாரோ சிரிக்கிற மாதிரி இருந்திச்சு.... யாரு...” என பொம்மையை பார்த்த பயத்தில் குரல் நடுங்க கேட்க...
அதில் தானும் திடுக்கிட்டவள் தன் கையிலிருந்த பொம்மையை முறைத்து பார்த்தாள்.
ஜியா பொம்மையை முறைத்து பார்த்து கொண்டிருப்பதை விசித்திரமாய் பார்த்தவள் கண்களை மீண்டும் மூடி அரைக்கண்ணால் அவளை நோட்டம் விட்டவாறு “நான் என்ன கேக்கிறேன் நீ என்ன பண்ற...” என கடுப்புடன் கேட்க..
அவளின் கேள்வியில் அப்பாவியாய் இமை தட்டி சிரித்த ஜியா “நான் என்ன பண்ணேன் வின்னி” என கூறி மீண்டும் சிரிக்க...
“ஏய்.... என்ன... என்னைய வச்சி காமெடி பண்றியா... பிச்சுபுடுவேன் பிச்சு... அதுவுயில்லம பேர் சொல்லி கூப்பிடுற... உன்ன விட வயசில மூத்தவடி நான் மரியாதையா பேசு சொல்லிட்டேன்... இல்ல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது...” என ஜியாவை மிரட்ட...
அவளது மிரட்டலை அசால்டாய் எதிர்கொண்டவள் “என்ன பண்ண போறீங்கன்னு உங்களுக்கே தெரியல அப்பிறம் எதுக்கு வெட்டியா என்கிட்டே டையலாக் விடுறீங்க...” என அவள் மீண்டும் வின்னியை கலாய்க்க....
அதை கேட்டு கடுப்பின் உச்சிக்கு சென்ற வின்னிக்கு தலையை பீய்த்து கொள்ளலாம் போல் இருந்தது...
இங்கு வந்ததிலிருந்து தலைவலியில் இருந்தவள் இப்போது ஜியாவின் பேச்சில் பெரும் தலைவலிக்கு உள்ளானாள்.
இதற்கு மேலும் இங்கிருந்தால் பைத்தியம் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அவளின் ஏழாவது அறிவு உணர்த்த ஜியாவை முறைத்து கொண்டு அங்கிருந்து அகன்றவள் மலரிடமும் மற்றவர்களிடமும் விடை பெற்று கொண்டு தன்னவனை காண சென்றாள்.
ஆனால் அவனை பார்க்க செல்லும் அவள் கூடிய விரைவிலேயே மனமுடைந்து வரப்போகிறாள் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
வின்னியை ஒரு வழியாய் அனுப்பி விட்டோம் என மகிழ்ந்தவள் தன் பொம்மையை தூக்கி பிடித்து “இன்னைக்கு ஒரு வழியா தப்பிச்சிட்டோம் ஜில்லும்மா... நீங்க அம்மாவையும் அப்பாவையும் சேர்த்து வைப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு... சரி... சரி... நாம அப்பிறம் பேசலாம்... நான் இப்போ கீழே போறேன்... பாய்...” என அதன் கன்னத்தில் முத்தமிட்டவள் அந்த பொம்மை இருந்த இடத்தில் அதை வைத்து விட்டு கீழிறங்கி சென்றாள்.
ஜியா அங்கிருந்து சென்றதும் அந்த பொம்மையிலிருந்து வெளிப்பட்டது தேவியின் ஆன்மா...
மலருக்காக அவளுடனே ஒன்றி கொண்டிருக்கும் தேவியின் ஆன்மா... மலருக்கொன்றென்றால் அதற்கு காரணமானவர்களை வேட்டையாடும் ஆன்மா.. ஒவ்வொரு ஆபத்தின் போதும் அவளுக்கு துணை நின்று அவளை காக்கும் ஆன்மா.. தானே அவளுக்கு மகளாய் பிறக்க வேண்டும் என்ற அவளின் ஆசையை அறிந்து அவள் மகவின் உயிரை காத்த ஆன்மா.. மலருக்காக எதை செய்யவும் தயங்காத ஆன்மா..
ஆனால் இந்த நொடி அவள் மலரை மறந்து விட்டிருந்தாள்... காரணம் ஜியாவின் பேச்சு... ‘என்ன பண்ண போறீங்கன்னு உங்களுக்கே தெரியல அப்பிறம் எதுக்கு வெட்டியா என்கிட்டே டையலாக் விடுறீங்க...’ என்ற வார்த்தைகள் அவள் ஒருமுறை அவனிடம் கூறிய வார்த்தைகள்... அப்படியே இல்லையென்றாலும் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் அவளுக்கு அவனின் நினைவுகள் அலைகடலென ஆர்பரித்து கொண்டு கண்முன்னே தோன்றியது...
அதுவும் தன் காதலை அவள் உணர்ந்த தருணம்... அதை என்றும் அவளால் மறக்க முடியாது... தன் உயிர் தனக்கு சொந்தமில்லையென தெரிந்தும் அவன் மேல் தான் கொண்ட நினைத்து இந்த நொடி கூட வால் வேதனையில் மூழ்கினாள்.
நிலைக்காத காதல்... நிலைக்காத உறவு என தெரிந்தும் தான் அவன் மீது காதல் கொண்டு விட்டோமே... என எண்ணியவளின் மனக்கண்ணில் அந்த தருணம் அழகாய் மலர்ந்தது...
முதல் முறை அவனை ஒரு அசாதரணமான சூழ்நிலையில் சந்தித்தவள் அதன் பின்பு அவன் ஒருவன் இருக்கிறான் என்ற நினைவே இல்லாமல் அந்த சம்பவத்தை மறந்தே போய்விட்டிருந்தாள்...
அதை நினைத்து பார்க்க கூட அவளுக்கு நேரம் கிடைத்திருக்கவில்லை என்பதே உண்மை... ஆனால் அவனால் அதை அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியாமல் போய்விட்டிருந்தது.
அவளை பார்த்த நொடியே அவன் மனதில் இனம்புரியா உணர்வு தோன்றி மறைந்தது.... ஆனால் அவன் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி யாரும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத தன்னிடம் அடாவடி பண்ணிய அவளை அவனுக்கு காரணம் புரியாமல் பிடித்திருந்தாலும் அவனின் ஈகோ அதை ஏற்கமுடியாமல் அவள் தன்னிடம் பேசிய பேச்சுக்கு பதிலடி கொடுக்கவே எண்ணியது.
தப்பு தன் பேரில் இருந்தாலும் தன் தப்பை ஒத்துக்கொண்டு அவளை மன்னிக்க முடியாமல் அவள் மேல் வன்மத்தை வளர்த்தவன் அவளை தேட துவங்கினான்.
அவன் நினைத்தால் ஒரே நிமிடத்தில் அவளை பற்றிய முழு விபரத்தையும் அறிந்திருக்க முடியும்... ஆனால் அவன் அதை விரும்பவில்லை... தான் அறியாமல் அவன் அவள் மீது கொண்ட சலனம் தானே அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என வைராக்கியம் கொள்ள அதை யாருமறியாமல் மறைத்த அவனின் தான் எனும் ஈகோ அது அவளை பழிவாங்க வேண்டும் என்பதற்காத்தான் என உறுதியாய் எண்ணியது...
அதனாலேயே தன் அடையாளத்தை மறந்து அந்த நகரில் அவளை தேடி அலைந்தான்... ஆனால் அவ்வளவு சுலபத்தில் அவனால் அவளை கண்டு பிடித்திருக்க முடியவில்லை.
ஆனாலும் விடாமல் தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்தவனின் பொறுமையை சோதிக்காமல் கடவுள் அவளை அவன் கண்களில் காட்டி விட்டிருந்தான்.
அன்றும் வழக்கம் போல யுத்கார்ஷ் தன் தேடுதல் வேட்டையை ஆரம்பித்து ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டிருந்தான். ஆனால் அவனும் எத்தனை நாள் தான் அவளை தேடிக்கொண்டே இருப்பது கொஞ்சமாவது தன் கண்களில் படுகிறாளா என மனதுக்குள் அவளையெண்ணி வசைமாரி பொழிந்து கொண்டிருந்தவனின் செவிகளை தீண்டி சென்றது காந்தமென ஈர்க்கும் சிரிப்பொலியொன்று....
அதில் அத்தனை நேரம் அவனை சுற்றி வளைத்து தன் பிடியில் வைத்திருந்த எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து மனதில் பரவசம் உண்டாக அந்த சிரிப்பொலி வந்த திசை நோக்கி திரும்பியவனின் கண்கள் வாழக்கையிலேயே முதல் தடவையாக ஆச்சர்யத்தில் விரிந்து விகசித்தது...
இதுவரையிலும் எத்தனையோ பெண்களை பார்த்து அவர்களுடன் பழகியும் இருந்திருக்கின்றான். ஆனால் அவளை பார்த்த அந்நொடி அவளின் உருவம் அவன் மனதில் ஓவியமாய் செதுக்கப்பட்டு நெஞ்சோரம் சேமிக்கவும் பட்டது.
பார்வையை அவளிடமிருந்து அகற்றமுடியாமல் தன் கள்ள விழிகளாலேயே அவளை கபளீரகம் செய்து கொண்டிருந்தான் யுத்கார்ஷ்.
பிறை போன்ற அவள் நெற்றியில் தொங்கிக்கொண்டிருந்த அவளின் வைர நெற்றி சுட்டிக்கு ஒத்து அதேபோல் பிரகாசித்து கொண்டிருந்த நெற்றியும் அதன் கீழே அழகிய நாசியும் உதட்டு சாயம் பூசாமலேயே சிவந்து போயிருந்த தேன்வடியும் அதரங்களும் சிவந்து போயிருந்த கண்ண கதுப்புகளும் காதில் பளீரிட்டு கொண்டிருந்த வைர தொங்கட்டான்களும் இதழ் பிரித்து அவள் சிரித்தபோது சட்டென தோன்றி மறைந்த இருபக்க கண்ண குழிகளும் சங்கு கழுத்தும் என அவளை தனக்குள்ளேயே வர்ணித்து கொண்டிருந்த யுத்கார்ஷ் அதன் கீழே இறங்கிய பார்வையை கண்டு தன் உணர்வுகள் புரியாது முகத்தை திருப்பியவனுக்கு இத்தனை நாள் அவள் மேல் கொண்டிருந்த வன்மம் கரைய ஆரம்பித்திருந்தது.
ஆனாலும் அவனின் பிறவிக்குணமான தலைக்கணம் அவளுக்கான விலையைத்தான் முதலில் குறித்தது.
அவனின் சலனப்பட்ட மனமோ அதை எண்ணி திகைத்து அவள் மீதிருந்து பார்வையை விலக்க முற்பட்டாலும் அவனால் அது கொஞ்சமும் முடியவில்லை. அந்தளவு அவளின் அழகு அவனை ஈர்த்து தொலைத்தது.
அதுவும் அவள் அணிந்திருந்த மெல்லிய புடவையில் அவளின் இளமை அப்பட்டமாய் வெளிப்பட அதிலிருந்து அவனின் பார்வையை அவனால் கிஞ்சித்தும் அகற்ற முடியவில்லை.
அதிலும் மென்மையான சாரல் காற்றில் அவளின் சேலை விலகி அவளின் பளீர் இடை வெளிப்பட்டு அவன் நெஞ்சை அசைக்க சட்டென திரும்பி நின்று கொண்டான்..
அன்று அவளின் பிறந்த நாள் என்பதால் பாட்டியின் ஆசைக்காகவோ அல்லது மலரின் வேண்டுகோளுக்காகவோ இளம் சிகப்பு நிற மெல்லிய டிசைனர் சாரி அணிந்து அதே நிறத்தில் வைரத்தாலான நெற்றிச்சுட்டி, காதணி, மூக்குத்தி அணிந்து பிரம்மன் படைத்த மிகச்சிறந்த ஓவியமாய் காட்சியளித்தவளை பார்த்து அவன் மயங்கியதில் ஒன்றும் பிழையே இல்லை.
அந்தளவு தன் ஒட்டுமொத்த சக்தியையும் கொண்டு அவளை படைத்திருந்தான் பிரம்மன். என்றும் சாதரணமாய் பாவாடை சட்டை அல்லது ஆண்களை போல் பேன்ட் சேர்ட் அணிபவள் அன்று தான் பல நாட்களின் பின் புடவை அணிந்திருந்தாள்.
சென்னையில் இருக்கும் போது அடிக்கடி புடவை அணிபவள் தான் ஆனால் பாரிஸ் வந்த பின்பு அது முற்றிலும் விடுபட்டிருந்தது... ஆனால் விதி ஏதோவொரு வகையில் சூட்சுமம் செய்து அவளின் பிறந்த நாளன்று அதுவும் புடவையில் அவள் வரும்படியாய் செய்து அவளை அவன் கண்ணிலும் விழ வைத்திருந்தது.
இதுவரையிலும் எதற்காகவும் தன் இயல்பை மாற்றாதவன் முதல் தடவையாக அவளின் அழகில் தன் சுயம் தொலைத்து செய்வதறியாமல் விழித்தான்.
ஆனாலும் அவனின் பிறவிக்குணம் மாறுமா என்ன... அதில் தலையை சிலுப்பி கொண்டு அவளை நோக்கி சென்றான்.
அதேநேரம் அவள் இளமை அழகில் மயங்கி அவளை கேவலமான பார்வையுடன் நோக்கியபடி அவளருகில் நெருங்கி அவள் உடலில் உரசியபடி இடித்து சென்றான்.
அதை சாதரணமாய் எடுத்து கொண்ட ஜில்மில் அவன் “ஐயம் ரியல்லி சாரி” என பார்வையால் அவளை மொய்த்து கொண்டு கூற அதை சற்று தள்ளி நின்று பாரத்து கொண்டிருந்த யுத்கார்ஷின் மனம் கோபத்தில் சுனாமியாய் பொங்கியெழுந்து கரையுடைந்தது.
அதில் ஆவேசமாய் அவளை நெருங்கியவனின் மனதில் அவனுக்கும் அவளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பது நினைவில்லாது போயிருந்தது.
அதுவும் தான் அவளை பழி வாங்க வேண்டும் எனும் நோக்கில் தான் தேடி அலைந்தோம் என்பதும் அவனுக்கு நினைவிலில்லை.
தன்னிடம் மன்னிப்பு கூறியவனிடம் “இட்ஸ் ஓகே... நோ ப்ரோப்லம்” என கூறி சிரித்தவள் அங்கிருந்து செல்ல துவங்கும்முன் அவள் கையை பற்றி தன்னருகில் இழுத்து நிறுத்தி இன்னமும் அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் முகத்தில் தன் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டி ஓங்கி ஒரு அறை விட அதில் சுருண்டு விழுந்தான் அவன்.
கீழே விழுந்து கிடந்தவனின் அருகில் சென்று அவனின் முடியை பற்றி இழுத்து தூக்கி நிறுத்தியவனின் முகமும் கண்களும் கோபத்தில் சிவக்க நரம்பு புடைக்க அவனின் கழுத்தை நெரித்தவன் “இப் சம்வன் எல்ஸ் சீஸ் தி திங் ஐ லைக், சிம்ப்லி ஐ வில் கில் தெம் (if someone else sees the thing i like, simply i will kill them) என கோபத்தில் உறுமியவாறு தன்னை அறியமாலே அவளை தன் சொந்தமாய் எண்ணி அவனிடம் உருமியவன் அதே கோபத்துடன் தன் அருகில் ஒன்று புரியாது விழித்து கொண்டு நின்றவளை இழுத்து கொண்டு போய் தன் காரில் தள்ளி தன் அரண்மனை நோக்கி சென்றான்.
இதுவரையிலும் அவன் அரண்மனை வாசலை வெளியார் யாரும் மிதித்ததில்லை... வாழக்கையிலேயே இன்று தான் யாரென்றே தெரியாத அதுவும் அவனையே எதிர்த்து பேசி அவனை கோபம் கொள்ள செய்தவளை இன்று தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
தன் மனைவி ஆகபோகின்றவள் மட்டுமே தன் அரண்மனையில் நுழைய வேண்டும் வேறு யாரும் அதன் வாசற்படியை கூட மிதிக்க கூடாது எனும் கொள்கையில் இருந்தவன் அறிந்தோ அறியாமலோ அவளை அங்கு அழைத்து சென்று அவளை தன் மனைவியாய் ஏற்றிருந்தான்.
ஆனால் அவன் அதை உணரவில்லை... அவள் மேல் கொண்ட கோபத்தில் தான் அவளை இங்கு அழைத்து வந்திருக்கின்றேன் என தன்னையே சாமாதனப்படுத்தி கொண்டான் அந்த மூடன்.
தன்னை பிடித்து காரில் தள்ளியவனை அதிர்ச்சியுடன் பார்த்தவளின் மூளை ஒரு சில நிமிடங்கள் அதன் இயக்கத்தை நிறுத்தியிருந்தது... அதனால் அவனையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வையை உணர்ந்தார் போல் அவளை நோக்கி திரும்பியவன் “நான் அழகுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... அதுக்காக நீ ஒன்னும் என்ன பார்த்து அத ப்ரூப் வேணாம்” என தெனாவெட்டாய் இதழ்களில் புன்னகையும் கண்களில் கள்ளத்தனமும் மின்ன கூறியவன் காரில் ஓட்டுவதிலேயே குறியாய் இருந்தான்.
அத்தனை நேரம் சுயநினைவின்றி அவனையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவள் அவனின் பேச்சில் கோபம் தலைக்கேற “ஏய் யார் நீ? என்ன எங்க கூட்டிட்டு போற... உனக்கு கொஞ்சங்கூட சென்ஸ் இல்ல... இப்பிடித்தான் முன்னபின்ன யாருன்னே தெரியாத பொண்ண நாடு ரோட்டில வச்சு இழுத்திட்டு வந்து கார்ல தள்ளி கிட்னாப் பண்ணுவியா.... அறிவில்ல.... இடியட்...” என உரத்த குரலில் அவள் சத்தமிட...
அவளின் பேச்சில் அவனுக்கு கோபம் தலைக்கேறியது… ‘அதுவும் அவள் யார் நீ என்றதை அவனால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை... தான் அவளை நினைத்து பல நாட்களாய் ரோடு ரோடாய் அலைந்து திரிந்திருக்க அவளோ சாதாரணமாய் நீ யார் என்கிறாள்... என்னை கொஞ்சமும் அவளுக்கு நினைவில்லையா...’ என காந்தியவன் ‘அது எப்படி அவள் என்னை மறக்க முடியும்...’ என ஆணவம் தலைக்கேற ‘அவளை...’ என பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு அவளை முறைத்த முறைப்பில் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டு விட்டாள் ஜில்மில்.
ஆனாலும் அவளும் எத்தனை நேரம் தான் வாயை மூடிக் கொண்டிருப்பது அதனால் தொண்டையை கனைத்து அவனை தன் திசை நோக்கி திரும்ப வைத்தவள் “சரி... சரி... நான் உன்கிட்ட இனி எதுவும் கேள்வி கேக்கல்ல... ஆனா என்னால பேசாம மட்டும் இருக்க முடியாது...” என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கூற...
அவளின் பாவனையில் சிரிப்பு வந்தாலும் எங்கே தான் சிரித்தாள் அவள் தன் மேல் ஏறி உற்கார்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதை உணர்ந்து இதழில் பூத்த புன்னகையை இதழ்களுக்குள்ளேயே அமிழ்த்திக் கொண்டான்.
ஜில்மில் இவன் ஏதாவது பேசுவானா என்ற ரீதியில் முகத்தை வைத்துக் கொண்டு அவனை ஏறிட அவனோ அவளின் பேச்சை சட்டையே செய்யாதது போல் முகத்தை வைத்து காரை ஓட்டிக்கொண்டிருந்தான்...
எதுவும் பேசாமல் கற்சிலை போன்று முகம் தோற்றமளிக்க அமர்ந்திருந்தவனை கொலைவெறியோடு பார்த்தவள் அவனுக்கு பக்கவாட்டில் இரு கைகளையும் கொண்டு அவனின் கழுத்தை நெரிப்பது போல் பாவனை செய்ய அதேநேரம் சட்டென அவளைத்தான் திரும்பிப் பார்த்து வைத்தான்.
அவன் தன்னை பார்ப்பான் என்று எதிர்பாராதவளின் முகம் பேயறைந்ததை போல் மாற தூக்கி பிடித்திருந்த கைகளை கீழிறக்கியவள் அவனை பார்த்து அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு வெளிப்புறம் தன் முகத்தை திருப்பி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
தான் எதிர்பாராது அவன் தன்னை பார்க்கவும் அதில் திடுக்கிட்டாலும் அவனின் பார்வையிலிருந்த ஏதோவொன்றில் அவளின் இதயம் தாளம் தப்பியது. இருந்தும் அவள் அதை உணரவில்லை.
தன்னை ஒருவன்... அதுவும் யாரென்றே தெரியாத ஒருவன் பிடித்து இழுத்து காரிலேற்றிக் கொண்டு செல்கின்றான் என்பதை மறந்து அவனுடன் காலங்காலமாய் பழகியது போல் எந்தவித தயக்கமுமின்றி சிறிது நேரம் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் போரடித்து போகவே ரேடியோவை உயிர்ப்பித்தாள்.
அதிலோ ஹிந்திப் பாடகள் ஒலித்துக் கொண்டிருந்தது. ஜில்மில்லுக்கு ஹிந்தி நன்றாக தெரியுமென்றாலும் அவள் ஹிந்தி பாடல்களோ படங்களோ பெரிதாக பார்ப்பதில்லை. அவள் பெரிதாக படங்கள் பார்ப்பதில்லையென்றாலும் சந்தர்ப்பவசத்தால் பார்க்கும் படங்களெல்லாம் தமிழ் படங்கள் மட்டுமே தான்.
அப்படி படங்கள் பார்க்கும் போது ஏதாவது பாடல்கள் பிடித்துவிட்டால் அதை டவுன்லோட் செய்து பென்ட்ரைவில் பதிவேற்றுபவள் அதை எப்போதும் தன் கைப்பையிலோ அல்லது பர்சிலோ தான் வைத்திருப்பாள்.
ஆதலால் தன் கையிலிருந்த பர்சை எடுத்து அதிலிருந்த பென்ட்ரைவை எடுத்து காரில் சொருகியவள் ஒவ்வொரு பாடலாக மாற்றி மாற்றி கடைசியாக அந்த பாடலை ஒலிக்கவிட்டாள்.
அதுவும் ஒலித்து... இருவரினது மனதிலும் அவர்களுக்கே தெரியாமல் உருவாகியிருந்த ஒரு பந்தத்தை எடுத்துக் காட்டும் விதமாய் ஒலித்து இருவரது மனதிலும் சஞ்சலத்தை புகுத்தியிருந்தது.
கண் ரெண்டும் நீ வரத்தானேகாத்துக் கிடந்தது உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே....
காத்தாடி போலவே என் நெஞ்சமே
உன் கைகளில் அது தஞ்சமே
இந்த நாள் அடி இந்த நாள்
என் இதயத்தில் தொடர்ந்து வரும்
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே
ஆண் மனம் வெளிக் காட்டிப் பேசும்
பெண் மனம் திரை மூடிப் பேசும்
பூவுக்குள் இருக்கின்ற வாசம்
காற்றுக்கு கடிதங்கள் வீசும்
அடி மௌனத்தின் மொழிகளே காதலின் முகவரி
மனம் இன்று அறிகின்றதே
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே
எது வரை எனைக் கூட்டிப் போவாய்
அது வரை உடன் சேர்ந்து வருவேன்
உலகத்தை மறந்தொடிப் போவோம்
கனவில் மிதந்தோடிப் போவோம்
அடி மறுபடி மறுபடி உன்னிடம் தோற்றிட
மனதிருக்கு பிடிக்கிறதே
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதை பார்த்துக் கிடந்தது என் அன்பே வா முன்பே
அந்த பாடலில் சிக்குண்டு இருந்தவர்களில் முதலில் மீண்டது ஜில்மில் தான். சட்டென தன் பென்ட்ரைவை எடுத்து தன் பர்சினுள் நுழைத்துக் கொண்டவளின் மனது அமைதியில்லாமல் தவிக்க துவங்கியது ஏனென்றே தெரியாமல்...
அவனை பார்த்த நினைவே இல்லாவிடினும் அவனின் பேச்சும் அவனின் உடல் அசைவுகளும் அவன் செய்கைகளும் அவன் யாரென்பதை அவளுக்கு உணர்த்த அவளுக்குள் இனம் புரியா தவிப்போன்று உருவாகி விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது...
‘தான் அவனை பார்த்து கோபம் தானே கொள்ளவேண்டும்... ஆனால் ஏன் என்னால் அவனை கோபமாய் பார்க்க முடியவில்லை... அவன் அன்னைக்கு பண்ணிய வேலைக்கு அவன பார்த்தா பார்த்த இடத்திலேயே கன்னம் கன்னமா அறையனும்னு நினைச்ச நான் எதுக்கு இப்பிடி அமைதியா இருக்கேன்... அதுவும் இப்போ அவன் யாருன்னு தெரிஞ்ச பின்னும் அமைதியா இருக்கேனே... எனக்கு என்ன ஆச்சு... மனசெல்லாம் ஏதோ நடுங்கிற மாதிரி இருக்கே... முகயெல்லாம் ஏன் இப்பிடி வேர்க்கிறது... ப்ச்... காதுக்குள்ள மணி சத்தம் கேக்கிற மாதிரி இருக்கே... என்னாச்சு....’ என முகத்தை அங்கிருந்த செர்வியட்டால் ஒற்றி எடுத்தவள் நடுங்கிய இதழ்களையும் படபடத்த மனதையும் அடக்கும் வழிவகை தெரியாது மீண்டும் சாலையில் தன் விழிகளை புதைத்துக் கொண்டாள்.
அந்த பாடலை கேட்டு ஏதோ தன் மனதையே அது எடுத்துரைப்பது போலிருக்க தனக்குள் தோன்றிய விசித்திரமான எண்ணத்தின் காரணத்தை யூகிக்க முடியாமல் தவித்த யுத்கார்ஷ் காரை அதற்கு மேல் ஓட்ட முடியாமல் திரும்பியவன் அப்போது தான் பார்த்தான் தான் தன் வீட்டருகில் நின்றுகொண்டிருப்பதை.
உடனே காரை வீட்டினுள் செலுத்தி அங்கிருந்த மிக பிரம்மாண்டமான போர்டிகோவில் காரை நிறுத்தியவன் காரை விட்டு இறங்கி கடகடவென வீட்டினுள் நுழைந்திருந்தான்.
அவன் காரை நிறுத்தியதுமே அத்தனை சாலையை வேடிக்கை பார்க்கிறேன் எனும் பெயரில் தன் மனதின் எண்ணத்தை அறிய முடியாமல் அதனூடே தத்தளித்து கொண்டிருந்தவள் அப்போது தான் அந்த வீட்டை பார்த்தாள்.
பிரம்மாண்டம் என்பது மிக சாதாரண வர்ணனையோ எனும் விதத்தில் அமைய பெற்றிருந்தது அந்த மாடமாளிகை...
வீட்டினை சுற்றி கண்ணுக்கெட்டும் தூரம் வரையிலும் வண்ண வண்ண பெயரறியா மலர்கள் கொண்ட பூந்தோட்டம் அமைந்திருக்க அதன் நடுவே வீற்றிருந்தது அழகிய கண்ணன் சிலை....
தோட்டத்தில் இருந்து சற்று தூரத்தில் அமைத்திருந்தது நீச்சல் குளம்... அதன் அருகே ஒய்வு எடுப்பதற்காக வெள்ளை நிற நீண்ட மர நாற்காலிகளும் அதன் இருபுறமும் வெள்ளை நிற தாமரை மலர்களிலிருந்து நீர் வழிவது போலவும் கலைநயத்துடன் அமைய பெற்றிருந்தது அந்த இடம்..
இப்படி ஒரு நிமிடத்திற்க்குள்ளேயே அவளின் பார்வை வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை ஒரு இடம் விடாமல் ரசனையுடன் ஸ்கேன் செய்து கொண்டிருந்தது.
“ம்ம்... பரவாயில்ல ஆளு சிடுமூஞ்சின்னாலும் அவன் ரசனையெல்லாம் நல்ல சூப்பராத்தான் இருக்கு... ஆனா என்ன அவன் கொஞ்சம் சிரிச்சா இன்னும் கொஞ்சம் சூப்பரா இருக்கும்....” என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தவளை விசித்திரமாய் பார்த்தவாறு அடைந்து சென்றான் அந்த வீட்டின் தலைமை செப் வில்லியம் வெர்னல்..
தன் எண்ண அலைக்குள் சுழன்று கொண்டிருந்தவள் அப்போது தான் தன்னை கடந்து சென்றவனின் விசித்திர பார்வையை உணர்ந்து சுற்றும் முற்றும் அவனை கண்களால் துலாவியவள் அவனை காணாது போக உள்ளுக்குள் அவனை அர்சித்தவாறு தன்னை கடந்து சென்றவன் தன்னை பற்றி என்ன நினைத்திருப்பான் என எண்ணி தன் தலையில் கொட்டியவள் மெதுவாய் அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைக்கும் முன்பே பின்னிருந்து அவளை அழைத்தான் ஒருவன்.
“மேம்” என அழைத்த யுத்கார்ஷின் செக்யூரிட்டி அவள் திரும்பாது இருக்கவும் சத்தமாய் “மேம்” என அழுந்த உச்சரித்து அழைக்க அதில் அவன் யாரை அழைக்கிறான் என புரியாவிட்டாலும் தன் பின்னாலிருந்து தான் சத்தம் வருகின்றது என்பதை உணர்ந்து பின்னால் திரும்பியவள் தன் பின் நின்றிருந்தவனை நோக்கி தன்னையா எனும் விதமாய் தன் ஆட்காட்டி விரலால் தன்னையே சுட்டிக் காட்ட அவனோ ‘ஆம்’ என தலையசைத்தவன் அவளருகில் வந்தான்.
‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை உயர்த்திய ஜில்மில்லுகும் பதிலாய் கிடைத்த பதிலை அவள் சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதற்கு எதுவாக அவளின் திருமுகம் அதிர்ச்சி, ஏமாற்றம், வலி, அவமானம், கோபம் என பல்வேறு பரிணாமங்களை அப்பட்டமாய் காட்டி கொடுத்தது...
தன் உணர்வை எண்ணி தன்னையே நிந்த்திதவள் அங்கு அவளுக்காக அவன் ஏற்பாடு செய்திருந்த அந்த காரில் ஏறாமல் வேறு எதிலாவது செல்லத்தான் நினைத்தாள்.
ஆனால் செல்லத்தான் அவளுக்கு வழி தெரிந்திருக்கவில்லை. அவள் அவளின் எண்ணங்களிலேயே மூழ்கியிருந்ததால் அவன் வந்த வழியை கவனிக்காமல் கோட்டைவிட்டிருந்தவளுக்கு அவன் காரில் ஏறி செல்வதை தவிர வேறு எந்த வழியும் இருந்திருக்க்கவுமில்லை.
அதனால் தன் ஆத்திரத்தை தனக்குள்ளேயே போட்டு மறைத்து அமைதியாய் காரில் ஏறி சென்றவளின் மனதில் இனம் புரியா வலி பரவியதேன்னவோ உண்மை தான்..
அவள் காரில் ஏறிய மறுநிமிடம் கார் சீறிப்பறக்க கார் கண்ணாடியில் தலை சாய்த்தவளின் மனதில் சற்று முன் அந்த செக்யூரிட்டி கூறிய வார்த்தைகளே ஒலித்து கொண்டிருந்தது.
அவளருகில் வந்த ஜோர்ஜ் “சார் இப்போ உங்கள மீட் பண்ண முடியாத சிடுவேசன்ல இருக்காரு... அதனால உங்களுக்கு கார் அரேஞ்ட் பண்ணியிருக்காரு... சோ நீங்க கிளம்பலாம்... வெளியில உங்களுக்காக கார் வெயிட் பண்ணுது” என தூய ஆங்கிலத்தில் கடகடவென மொழிந்தவன் அத்துடன் பேச்சு முடிந்ததென்பது அவளை திரும்பியும் பாராது அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கம் இன்னும் அவளுள் இருக்க கார் கண்ணாடியில் அழுந்த முகத்தை புதைத்து கொண்டவள் அவன் செயலின் காரணம் புரியாது தவித்தாள்.
‘சும்மா நின்ன என்ன இழுத்து கார்ல தள்ளி கூட்டிட்டு வந்தான்... அப்றோம் ஏதோ நான் தான் அவன பார்க்க வந்த மாதிரி அவன் ஆள் கிட்ட சொல்லியிருக்கிறத பாரு... சரியான லூஸு... சைகோ... ஸ்டுபிட்... இடியட்...’ என அனைத்து கேட்ட வார்த்தைகள் வாய்க்கு வந்த வார்த்தைகள் என அனைத்தாலும் அவனை பிலுபிலுவென மனதுக்குள் வெளுத்து வாங்கியவள் தான் இறங்க இடத்தை கூறி அந்த கார் நகர்ந்த பின்னே தன் அபார்ட்மென்ட் சென்றாள்.
அங்கு சென்றும் அவளின் மனக்கொதிப்பு தணியாது போகவே தன் படுக்கை அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டவள் தன் கார்போர்டினுள் இருந்த மலரின் புகைப்படத்தை எடுத்து சிறிது கண்கொட்டாமல் பார்த்தாள்.
இப்போதும் அதேபோல் அவளின் புகைப்படத்தை சிறிது நேரம் பார்த்திருந்தவள் ‘மலர் எனக்கு என்னன்னே புரியமாட்டேங்குது... மனசெல்லாம் ஒரு மாதிரி... அத என்னன்னு சொல்றது... எப்பிடி சொல்றதுன்னுல்லாம் எனக்கு தெரியல ஆனா ஒரு மாதிரியா இருக்கு... இதுக்கு என்ன பண்றதுன்னும் தெரியல...’
‘அவன் யாரு.... எதுக்கு திடீர்னு என் கண்முன்னாடி வந்தான்னு எதுவும் எனக்கு புரியல... உன்கிட்ட பேசினா மனசு ஆருதலாகும்னு தெரியும்... அதான் உன்கிட்ட பேசுறேன்...’
‘இப்போ மட்டும் நீ என் பக்கத்தில இருந்திருந்தா என் மனசில இருக்கிற எல்லாத்தையும் உன்கிட்ட கொட்டிடுவேன்... ஆனா நீ எங்கயோ இருக்க நான் எங்கயோ இருக்கேன்... அப்றோம் எப்பிடி உன்கிட்ட பேசுறது... போன் பண்ணனும் போல இருந்தாலும் என்னால பண்ண முடியல மலர்...’ என தன் மலரவளுடன் மனதினுள்ளே உரையாடியவாறே தன் உடையை கலைந்து தண்ணீரின் அடியில் நின்றவள் குளித்து முடிந்ததும் மெல்லிய ஆடையோன்ரை அணிந்து கொண்டு படுக்கையில் விழிந்து கண்களை மூடி தூங்கினாள்.
ஆனால் அப்போதும் விடாமல் அவனின் ஒவ்வொரு விதமான தோற்றமும் மனக்கண்ணில் தோன்றி அவளின் இதழை விரிய செய்ய தன் காதலில்லா காதலனின் நினைவுடன் துயிலில் ஆழ்ந்தாள் ஜில்மில்...
அங்கு அவளை அனுப்பிய பின் தன் மியூசிக் அறைக்குள் நுழைந்த யுத்கார்ஷ் அங்கு நடுநாயகமாக வீற்றிருந்த பியானோவை மெல்ல இசை மீட்டினான்.
அவன் கைகளின் அசைவுகலிற்கேற்ப அதுவும் ஒரு மெல்லிசையை உருவாக்க அதை ஆத்மார்த்தமாய் உணர்ந்து ரசித்தவனின் மனதிலும் அந்த பெயரறியா வாயாடியின் நினைவுகள் தான்.
ஒருவர் அறியாமல் அவர்களிருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதலை என்று அவர்கள் புரிந்து கொள்வார்களோ....
ஆனால் விதி அதுவரைக்கும் கூட அவர்களை விட்டு வைக்கவில்லை.
விதியின் கைகளில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இருக்கும் போது அதன் படி தானே நாமும் வாழ்ந்தாக வேண்டும்.
இங்கு இவர்கள் இருவரினதும் வாழ்க்கையிலும் கூட விதி தன் தலையீட்டால் மாற்றி அமைத்திருந்தது.
தன் காதல் நினைவுகளில் சுகமாய் மூழ்கியிருந்த தேவி அழுத்தமான காலடி ஓசை கேட்கவும் தன் நினைவுகள் கலைய நிமிர்ந்து பார்த்தாள்.
அங்கு ஆண்மையின் கம்பீரத்துடன் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தான் யுத்கார்ஷ்... அவனை கண்டதும் மீண்டும் அவளின் எண்ணங்கள் தெறிகெட்டு பாயத்துவங்க அதை அடக்கி தன்னுள் அமிழ்த்திக் கொண்டு அவனையே ஆசையாய் கண்களால் பருகியவள் மாயமாய் அங்கிருந்து மறைந்து போனாள்.
அத்தனை நேரம் மிக முக்கியமான பைல் ஒன்றை தேடிக்கொண்டிருந்த யுத்கார்ஷ் ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தான்.
ஆனால் அங்கு யாருமில்லாது போகவே தலையை உலுக்கிக் கொண்டு தான் தேடிய பைல் கைக்கு அகப்படவும் அதை எடுத்துக் கொண்டு கீழே வந்தவன் அங்கு நின்றிருந்த தன் மேனேஜர் பிரகாஷிடம் அதைக் கொடுத்து அனுப்பினான்.
உடல் அதன் பாட்டிற்கு இயல்பாய் செயல்பட்டுக் கொண்டிருக்க அவனின் மனமோ தான் சற்று முன் உணர்ந்ததையே நினைத்து குழம்பிக் கொண்டிருந்தது.
அது எப்படி தனக்கு அத்தனை உறுதியாய் மைலு இருப்பதை போலவே தோன்றுகிறதே. அவள் தான் இறந்துவிட்டாலே பின்பு எப்படி அவள் இங்கிருப்பது போல் என் உள்ளுணர்வுக்கு தோன்றுகின்றது... என தலையை உலுக்கியவன் மனைவியின் அருகில் அமர சென்று பின் ஏதோ யோசனையாக அவளிடமிருந்து விலகி அமர்ந்தான்.
தன்னவன் மேல் வெறுப்பும் கோபமும் சரிவிகிதத்தில் கலந்து அவள் மனதை ஆட்கொண்டிருந்தாலும் அவனின் அருகாமை அதை மறக்கடித்து அவளுள் அவன் மீதான காதலை அதிகரித்துவிடும்.. அதை தாங்க முடியாமல் தான் அவன் மேல் கோபம் கொள்வதைப் போல் அவள் விலகிச்செல்வது.
அதை எப்படி அவனால் தாங்கிக் கொள்ள முடியாதோ அதை விட படமடங்கு அவனின் விலகல் அவளை தாக்கியது.
அதில் அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் கண்களில் வழிய ஆயத்தமான கண்ணீரை இமை சிமிட்டி உள்ளுக்குள் இழுத்து கொண்டு வலுக்கட்டாயமான சிரிப்பொன்றை இதழ்களில் விரியவிட்டு தன் மனக்காயத்தை தன்னுடைய பெற்றோர் அறியாமல் பார்த்துக் கொண்டாள்.
இதுவே சற்று நேரத்தின் முன்பென்றால் அவளின் ஒற்றை பார்வையை வைத்தே அவளின் மனதை புரிந்து கொண்டிருந்திருப்பான்... ஆனால் இந்த நொடியோ பல நாட்களின் பின் உணர்ந்த மைலுவின் நினைவுகளில் மூழ்கி இருந்தவன் அவள் பக்கம் திரும்பாது போயிருந்தான்.
தன் மனக்கவலையை மறைத்து முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை ஒற்றிக் கொண்டிருந்த மலரின் முகத்தை பார்த்து என்னவோ ஏதோவென பதறிப்போன ருத்ரா மகனை திரும்பிப் பார்க்க அவனின் முகமும் ஏதோ யோசனையிலே ஆழ்ந்த்திருக்கவும் மனதுக்குள் ஏதோ எண்ணியவராய் “த்ருவா...” என்றழைத்தார்.
அவரின் அழைப்பு காதில் விழாதவனாய் அமர்ந்திருந்தவனை மீண்டும் ருத்ரா அழுத்தமாய் அழைக்க அதில் தன் உணர்வுக்கு மீண்டு தன் தாயை கேள்வியை நோக்கினான் யுத்.
“என்ன யோசனையில இருக்க த்ருவா...எவ்ளோ நேரமா உன்னை கூப்பிடுறது” என சற்று அழுத்தமாய் வினவ...
அதில் எரிச்சலுற்றவன் “அதான் இப்போ என்னன்னு கேக்குறேன்ல சொல்ல வேண்டியது தானே...” என சிறு முறைப்புடன் அவருக்கு சற்றும் சளைத்தவனில்லை எனும் அளவில் அவனுமே அழுத்தமாய் கூற...
மகனின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட ருத்ரா ‘இவன் எப்போ எப்பிடி மாறுவான்னு பெத்து வளர்த்த எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது இதுல மலருக்கு எப்பிடி புரியுமோ...’ என தன் மருமகளை எண்ணி கவலை கொண்டவர் அவனை முறைத்துக் கொண்டு...
“மலர உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போப்பா... ரொம்ப நேரமா ஒரே இடத்துல இருந்ததில அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும்... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும் நீங்க ரெண்டு பெரும் போங்க நாங்க குழந்தைய கவனிச்சிக்கிறோம்... என் பேத்தி அழுதா உங்க கிட்ட சொல்றேன்” என்க...
தன் நாத்தனாரின் பேச்சில் ஒரு தாயாய் தன் மகளின் நிலையெண்ணி கவலை கொண்ட தமயந்தி “ஆமா மலர்... நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ... நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்... போம்மா...” எனக் கூறியவரை தொடர்ந்து ஆளாளுக்கு அவளை ஓய்வெடுக்குமாறு கூறவும் மெதுவாய் தலையை அசைத்தவள் தான் பயன்படுத்தும் அறையை நோக்கி சென்றாள்.
அதை பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்ட ருத்ரா என்ன செய்வதென புரியாமல் திருதிருவென முழிக்க ஆரம்பித்தார்.
தன் தாயின் பாவனை கண்டு குழம்பிய யுத்காஷ் அவரின் பார்வை சென்ற இடத்தை நோக்கி தன் பார்வையை செலுத்தியவன் அங்கு மனைவி அவள் இருக்கும் அறை நோக்கி செல்லவும் தானும் அவசரமாய் எழுந்து அவள் பின்னோடு சென்றவன் யாரும் எதிர்பாராத விதமாய் அவளை கைகளில் அள்ளியிருந்தான்.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.