Hi ma, இப்போது. தான் படித்தேன்...மிக அருமை...இந்த கதைக்கரு தேர்ந்தெடுத்ததற்காக என்னுடைய வணக்கங்கள்.....
பெண்...இந்த சமுதாயத்தில் முத்திரை குத்தப்பட்ட அவளுடைய நிலை மிக யதார்த்தமாக வைதேகியின் மூலம் காட்டியுள்ளீர்கள்....
பெண்ணை தெய்வமாக வணங்குவோம் பெண்மையை போற்றுவோம் என்று வாய் கிழிய அறைக்கூவல் விட்டாலும்....பெண் ஒரு அடிமை தான்....
பிறந்தது முதல் பெற்றோருக்கு
பிறகு கட்டியவனுக்கு
பின் பிள்ளைக்கு.....
இதையெல்லாம் கடந்து ஒரு பெண் சாதிக்கிறாள் என்றால் அவள் இந்த வைதேகியை போல வாழ்க்கையை இழந்து தான் பெற முடிகிறது.......
நாம் நினைக்கலாம்...ஏன் நல்ல வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டே பெண்கள் சாதிக்கவில்லையா.....
இருக்கலாம் நல்ல கணவன் கிடைத்தால்......ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....
எல்லாவற்றிற்குமே பெண்ணிற்கு அனுமதி தேவைப்படுகிறது.......
எல்லா பெண்களுமே தன்னுடைய சுயத்தை இழந்து தான் வாழ்கிறார்கள்....
ஏனெனில் விட்டுக்கொடுத்து வாழ்வது பெண்ணின் கடமையாகிறது....
இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....பட்டம்.......
அதையும் மீறி சாதிக்கலாம் என்றால். இப்படி வைதேகியாக மாறினால் மாத்திரமே சாத்தியமோ.....??????
மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி
முதலில் உங்களுடன் ஒரு hifi .
எனக்கும் உங்களை போலவே சமூகத்தின் மீது நிறைய ஆதங்கங்கள் உண்டு.
ஏனோ இது போல பேசினால் பெண்ணியவாதி என நுற்றில் ஒன்றாக அடையாளப்படுத்த படுகிறோம்.
இங்கு அனைத்து பெண்களுக்கும், சிந்தனை வேற ,சூழ்நிலை வேற எண்ணங்கள் வேற.
அவளது வாழ்ந்த வாழ்க்கை, பார்த்த நிகழ்வுகள்,மாற்ற நினைக்கும் விஷயங்கள் என்றா லும் , " பெண்ணியம் " என்ற ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விடுகிறார்கள்.
எது பெண்ணியம் ?
ஆணுக்கு நிகராக நாங்களும் என பெண்கள் கேட்பதா ?
இல்லை ஆண் -பெண் சமம் என உணர்வதா ?
காதல் கொண்ட ஆணிடமும் ,
பாசம் வைத்த உறவிடமும்
இறங்கி செல்வது தவறேயில்லை.
அது உறவை பலப்படுத்தும்.
ஆனால் காதல் ,பாசம் ,மரியாதை அது இருபக்கமும் இருக்க வேண்டும்.
ஒருவரின் பாசம் மற்றொருவர் வேஷமாக இருக்க கூடாது.
மொத்த புள்ளியில் என் விண்ணப்பம் ஒன்றே தான் ,அதுவும் நீங்கள் சொன்னது தான் , ' அவளை அவளாக வாழ விடுங்கள் '
//ஆனால் அதிலும் கூட அவன் ஒத்துழைத்தால் மட்டுமே அவளால் சாதிக்கமுடியும்....இதில் கணவன் போற்றப்படுகிறான்...பெரிய தேவாம்சமாக கருதப்படுகிறான்....
ஏனெனில் அவன் மற்ற ஆண்களிலிருந்து வித்தியாசமானவன் இல்லையா.....என்ன கொடுமை....//
அருமை sis
.
இங்கு பெண்ணின் கடமை கட்டாயமாகவும்,
ஆணின் கடமை
தெய்வாம்சமாக தான் போற்றப்படுகிறது.
இவை அனைத்தையும் தாண்டி,
கடமையை சரியாக செய்யும் ஆண்களை நான் மதிக்கிறேன்,ஆனால் கொண்டாட மாட்டேன்.
இந்த பக்குவம் பெண்களுக்கு வர இன்னும் காலமெடுக்கும்.
//இதில் தன் காலில் நிற்கிற பெண்களின் நிலை கொடுமை....பாவம் அவளுக்கு பேச்சு என்பதே மறுக்கப் படுகிறது... மீறினால் திமிர் பிடித்தவள்....//
நிதர்சனம் sis
.
இங்கு நேர்மையான கோவம் கூட திமிராக மட்டுமே அடையாளப்படுத்த படுகிறது.
//மொத்தத்தில் கண் கலங்க வைத்து இருதயத்தை பிசைகிறதான உணர்வை தந்து கடைசியில் வீறுக்கொண்டு எழ வைத்தது உங்கள் படைப்பு....
நன்றி
//
இந்த நாளின் இனிய கருத்தங்கள் அளித்து என்னை மகிழ்ந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி sis
என்ன சொல்ல ,இனி வரும் தலைமுறையாது ,நாம் பெற்றோரானால்,சிந்தனையில் சிறந்த ஆண்பிள்ளைகள் ,எண்ணங்களில் தெளிவான பெண் பிள்ளைகளை வளர்க்க வேண்டும்..கூடவே அவர்களை அவர்களாக வாழ விட வேண்டும்.
Thank you soooooo much sis
enathu மனதின் சில துளிகளையும் மகிழ்வாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்