Ammuma vazhthukalda
மனபலமும் உடல் பலமும் சேர்ந்தால் நம்மால் எதனையும் சாதிக்க முடியும்....அதற்காக கட்டமைக்கப்பட்டதே இந்த திருமண பந்தம் என நிறைய முறை நினைப்பது உண்டு.....
இந்த வாழ்க்கை வாழ உடல் பலத்தை மனோபலமே அதிகம் தேவை....துவண்டிடும் போது தோள் கொடுக்கவும் வாடிடும் போது வாட்டம் நீக்கி தூணாய் தாங்கிடவும்...
இந்த பிணைப்பை ...இந்த பந்தத்தை சுவசமாய் பார்க்கிறேன்....என்னதான் காற்று புயலாய் வீசினாலும் நுரையீரலில் பிரச்சனை இருந்தால் ..... எப்படி சுவாசிப்பது...பிரச்சனையை தன்னுள் வைத்து கொண்டு காற்றை குறை கூறுவது...அகம் முழுதும் அழுக்கு இருக்க ....அகங்காரம் கண்ணை மறைக்க புறையேடிப்போன புத்தியை மறைக்க .... பலவீனங்களின் பரிச்சியத்தில் .....பயம் உள்ளம் முழுதும் பற்று வைக்க இது அத்தனை ஆயுதமாக்கி வஞ்சினத்தையே தோழமையாக கொண்டு இந்த வாழ்க்கையை தள்ள அவன் எடுத்த ஆயுதமே குறை கூறி குற்றம் சொல்லி பழியிட்டு தன் பலவீனத்தை மறைக்க பாலமிடுகின்றார்கள் பாதகர்கள்...அத்தனையும் தாங்கி இச்ஜெகத்தினையும் எதிர் கொள்ளும் பெண் ...எந்த நிலையில் இருந்தாலும் அவளை காட்டிலும் பலமானவர்கள் இந்த இவ்வண்டத்தால் இருக்க முடியுமோ நான் அறியேன்!!!!!
அடங்கி போவதால் அவள் ஆற்றல் தெரிவதில்லை...
ஆட்டம் காட்டும் உனக்கே மொளன யுத்தம் புரிந்து உன் மடமைகளை தள்ளி வைத்து அவளுள் நல்லவைகளை நங்கூரம் பாய்ச்சி புயலாய் வீசும் நடுகடலில் தன் நிலையில்லா வாழ்க்கையில் நிலையாய் நிம்மதியாய் இருக்க தினம் தினம் தீ மிதிக்கிறாள் உன் வார்த்தையென்னும் அக்கினி குண்டத்தினுள்....ஆனாலும் அகல் விளக்காய் இருக்க அவள் முயற்ச்சிக்க உன் செயல் என்னும் அகோரத்தால் அவளை காட்டு தீயாய் மாற்றிவிட்டு காலம் கடந்து யேசிக்காதே!!!!!!
//மனபலமும் உடல் பலமும் சேர்ந்தால் நம்மால் எதனையும் சாதிக்க முடியும்....அதற்காக கட்டமைக்கப்பட்டதே இந்த திருமண பந்தம் என நிறைய முறை நினைப்பது உண்டு.....//
ஏற்று கொள்கிறேன் .கூடவே பெண்ணின் முழுமை ஆண் எனவும் சேர்க்கிறேன் ( love life )
//இந்த பந்தத்தை சுவசமாய் பார்க்கிறேன்....என்னதான் காற்று புயலாய் வீசினாலும் நுரையீரலில் பிரச்சனை இருந்தால் ..... எப்படி சுவாசிப்பது...பிரச்சனையை தன்னுள் வைத்து கொண்டு காற்றை குறை கூறுவது...//
அருமையான situational example sis
//அத்தனையும் தாங்கி இச்ஜெகத்தினையும் எதிர் கொள்ளும் பெண் ...எந்த நிலையில் இருந்தாலும் அவளை காட்டிலும் பலமானவர்கள் இந்த இவ்வண்டத்தால் இருக்க முடியுமோ நான் அறியேன்!!!!!//
மிக சரி..ஒருவருக்கு வலியே வாழ்க்கையானால் அதுவே சில நேரங்களில் அவள் வழியாகிறது.சில நேரங்களில் வலிமையும் படுத்துகிறது.
//அடங்கி போவதால் அவள் ஆற்றல் தெரிவதில்லை...
ஆட்டம் காட்டும் உனக்கே மொளன யுத்தம் புரிந்து உன் மடமைகளை தள்ளி வைத்து அவளுள் நல்லவைகளை நங்கூரம் பாய்ச்சி புயலாய் வீசும் நடுகடலில் தன் நிலையில்லா வாழ்க்கையில் நிலையாய் நிம்மதியாய் இருக்க தினம் தினம் தீ மிதிக்கிறாள் உன் வார்த்தையென்னும் அக்கினி குண்டத்தினுள்....ஆனாலும் அகல் விளக்காய் இருக்க அவள் முயற்ச்சிக்க உன் செயல் என்னும் அகோரத்தால் அவளை காட்டு தீயாய் மாற்றிவிட்டு காலம் கடந்து யேசிக்காதே!!!!!!//
என்ன ஒரு அர்த்தம் பொதிந்த கருத்து.அதுவும் கதையின் கருவை உள்ளடக்கி.
ஆம் அவள் முயல்கிறாள் தான் கொண்ட நேசத்தால் அவ்வீட்டிற்கு அகல் விளக்காக ?
ஆனால் அவளின் ஒழுக்கமே சந்தேகப்படும் போது , எங்கனம் அவளால் மன்னிக்க முடியும்.
அவள் இல் தாண்டியது இந்த சமூகத்தில் தவறென்றால் ,
மாற வேண்டியது அவள் இல்லை.
பிறரின் குறையை மட்டுமே முன்னிறுத்தி பேசும் இச்சமூகமே.
இவை கதையோடு வரும் என் பார்வை ,ஆனால் உங்களோடு.
கதைக்கு உணர்வு வேண்டுமானால் நாங்கள் தரலாம் ,ஆனால் கதையின் உயிரை நீட்டிக்க செய்வது ,உங்களை போன்ற சிறந்த வாசர்களின் கருத்து தான்.
மிக்க நன்றி sis
நீங்க கதையெழுதினால் உங்களது முதல் வாசகி நான் தான்.
காத்திருக்கிறேன்