Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அழகியின் அந்திரன்" - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்த காவியம் இது ஆழ்மன ஓவியம்!
இனிய தோழி,
சுயநலப் பேய்களின் ஆட்டம் - இது
விதி வழி ஓடிய ஓட்டம்!
வெறிமிகு நாய்களின் கூட்டம் - அது
மதி வழி ஆடிய பாட்டம்!
பழி ஒரு புறம்
பாவம் ஒரு புறம்
பரிதவித்ததென்னவோ
பால்மனம் மாறாப் பிஞ்சுகளே!
காயம் பட்ட மனது
ஆதாயம் தேட...
காட்டாற்று வெள்ளமாய்
கட்டற்றுப் போக...
காய்த்துப் போன மனதின்
கோர தாண்டவம் - அது
மாய்ந்து போன உயிரின்
புத்திர தாண்டவம்!
வக்கிரம் பேசும்
அக்கிரமம் கண்டே...
உக்கிரம் வீசும்
அந்திரன் நெஞ்சே...
வேடனாய் மாறி
வேட்டையும் ஆடி...
தேவனாய் மாறி
கூட்டையும் தேடி...
பாசத்தின் பாதுகாவலனாய்
சோதரியை காத்து...
நேசத்தின் நீதி தேவனாய்
காதலியை சாய்த்து...
அன்புக்கு அறம் சொன்ன
அந்திரனே...!
உன் வம்புக்கு இலக்காகி
தெம்பற்றுப் போனாளே...
நேர்கொண்ட பார்வையில்
நெருங்கி வந்த நேரிழையாள்...!
அவள்...
சீர் கண்ட நேர்மையில்
துலங்கி வந்த தாய்மையில்
அடைக்கலம் தேடும் தேவனே...
உன்...
பாசம் மீறிய நேசம்
கண்கட்டிப் போட்டாலும்
நேசம் மீறிய வேசம்
பெண்கட்டிக் கொள்ள
சதிராடி நின்றால்...
சதிபதி ஆகுமோ ஓட்டம்!
பிஞ்சிலேயே வெம்பிய நெஞ்சம்
வஞ்சியிலே தேடுமதன் தஞ்சம்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
இனிய தோழி,
சுயநலப் பேய்களின் ஆட்டம் - இது
விதி வழி ஓடிய ஓட்டம்!
வெறிமிகு நாய்களின் கூட்டம் - அது
மதி வழி ஆடிய பாட்டம்!
பழி ஒரு புறம்
பாவம் ஒரு புறம்
பரிதவித்ததென்னவோ
பால்மனம் மாறாப் பிஞ்சுகளே!
காயம் பட்ட மனது
ஆதாயம் தேட...
காட்டாற்று வெள்ளமாய்
கட்டற்றுப் போக...
காய்த்துப் போன மனதின்
கோர தாண்டவம் - அது
மாய்ந்து போன உயிரின்
புத்திர தாண்டவம்!
வக்கிரம் பேசும்
அக்கிரமம் கண்டே...
உக்கிரம் வீசும்
அந்திரன் நெஞ்சே...
வேடனாய் மாறி
வேட்டையும் ஆடி...
தேவனாய் மாறி
கூட்டையும் தேடி...
பாசத்தின் பாதுகாவலனாய்
சோதரியை காத்து...
நேசத்தின் நீதி தேவனாய்
காதலியை சாய்த்து...
அன்புக்கு அறம் சொன்ன
அந்திரனே...!
உன் வம்புக்கு இலக்காகி
தெம்பற்றுப் போனாளே...
நேர்கொண்ட பார்வையில்
நெருங்கி வந்த நேரிழையாள்...!
அவள்...
சீர் கண்ட நேர்மையில்
துலங்கி வந்த தாய்மையில்
அடைக்கலம் தேடும் தேவனே...
உன்...
பாசம் மீறிய நேசம்
கண்கட்டிப் போட்டாலும்
நேசம் மீறிய வேசம்
பெண்கட்டிக் கொள்ள
சதிராடி நின்றால்...
சதிபதி ஆகுமோ ஓட்டம்!
பிஞ்சிலேயே வெம்பிய நெஞ்சம்
வஞ்சியிலே தேடுமதன் தஞ்சம்!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Last edited: