மீனு மா...
தங்களின் வாதபிரதிவாதங்களுக்கு..முதலில்...
தமிழுக்கு
❤❤❤❤
1 அவள் தந்தைக்கு வலிக்க வேண்டும்..புரிய வேண்டும் என்று சொன்னது...அது காந்திமதிக்கு அவள் காட்டிய நியாயம்...ஒரு பெண்ணாய்..அவளின் சவுக்கடி..அவள் நீதி தேவதை....நாயகி...
அதற்காக....
அது அபயனுக்கு...எல்லாம் செய்ய அனுமதி கொடுத்தது ஆகாது அம்மையே...
நாய் கடித்தால் திருப்பிக் கடிக்க வேண்டும் என்று இல்லையே..
பழிவெறி தீர்க்க...விக்னேஷ்வரனை..விடுத்து மகளை ....இதுவா ஞாயம்..இதுவா தர்மம்..எந்த தர்மசாஸ்திரம்..சட்டப் புத்தகம் நீதி நூல் இதை சொல்கிறது...
வடநாட்டில் சில மதவாத காட்டுமிராண்டிகள் இதுபோல் செய்ததாக படித்த போது..எப்படி மனம் கொதித்ததோ...கொந்தளித்ததோ...அதுபோல கொதிக்கிறது..தோழி...
விக்னேஸ்வரன் செய்தால் குற்றம்...அபயன் செய்தால் அது ..தண்டனை ஆகிவிடாது...இவனும் தப்பை தொடர்ந்த குற்றவாளியே...
நான் பாவபுண்ணியம் பற்றி பேசவேயில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்..
நீதி அநீதி பற்றி மட்டுமே பேசுகிறேன்..
கண்கள் கட்டப்பட்ட நீதிதேவதையின் முன் அவற்றின் கனம் மட்டுமே தெரியும்..
தான் பெற்ற வலியை..விக்னேஸ்வரனுக்கு கடத்தியவன்...தன் தமக்கை பெற்ற வலியை மிளிருக்கு கடத்தினான்..
மிளிர் பெற்ற வலி...எங்கு கடத்த வேண்டும்..என்று தாங்களே கூறுங்களேன்..இது தான முடிவா..தொடரா என்று தான் நான் கேட்டேன்...
2 ஆஹா..உணர்வால் தேடினானா...
அப்போது மீண்டும் கண்டியில் சந்தித்த போது...ஏன்' வாழ்வில் யாரை சந்திக்கவே கூடாது என்று நினைத்தானோ..'எனும் பதம் வந்ததாம்.
(முன்னோட்டத்தில் இன்னும் கடுமை யாக இருக்கிறது..சோதித்து பார்த்துக்கொள்ளலாம்)
.குற்றம் செய்தவன் ஒளிந்து கொள்ளும் மனநிலை அது...
ஒளிந்தாவது தன் தண்டனையின் விளைவை பார்த்து இருந்தால் இப்போது இவ்வளவு அதிர்ச்சி வேதனை அவனுக்கு இருந்திருக்காது..
தமக்கைக்கு மிக நல்லவன்..ஒழுக்கத்தில் உத்தமன்..ஆனால்...மிளிருக்கு...கொன்று புதைத்தவன் தானே...அவன் மேலும்....இன்னமும் ...பாசம் வத்திருக்கிறாளே...ராஜாவை நண்பனாகவே வைத்திருக்கிறாளே...அவள் அவனை விட ஒருபடி அதிகம் தான்..
3 தீயின் இயல்பா...தீயின் இயல்பு பட்டதெல்லாம் எரிப்பது.....மனிதன் அவ்வாறு இருக்கலாமா..அது நன்மை தருமா...குடும்பம் வேண்டும் எனில் தீ அடுப்பிற்குள் அடங்கி இருக்க வேண்டும்..கடுப்பை கிளப்பக் கூடாது..
தவறு செய்தால் மன்னனேயாகினும் அரியாசனம் விட்டு கீழிறங்க வேண்டும்...அறத்தில் பிழைத்தால் அறமே கூற்றாகும் என்பது நீதி...அது இவனுக்கும் தானே..
அவனின் நிமிர்வை...எங்கும் காட்டலாம்..தன் குற்றத்தால் பாதிக்கப்பட்ட..மிளிரிடம் குழந்தைகளிடம் முடியாது..கூடாது...அப்போது அது திமிராகி விடுகிறது...அவளுக்கான முடிவை.. தான் எடுக்க நினைத்தால்...அதன் பதிலடி..அவன் போல் முடியாவிட்டாலும்..அவளால் இயன்றதாக கொடுக்க தான் செய்வாள்...
தடி கொண்டு அடித்து..பூவை மலர வைக்க முடியாது..காயை பழுக்க வைக்க முடியாது..
3 கவிநயச் சொற்களில் கண்மயங்குகிறது தோழி..கருத்து விழித்துக் கிடக்கிறதே...
சூப்பர்..அ வில் ஆரம்பிக்கவில்லை...
ஃ ல் முடித்தவன்
அது உயிரெழுத்தன்று ...ஆயுத எழுத்து..ஆயுதத்தால்..உயிர் வாங்கலாம்..மெய்யைக் காயம் செய்யலாம்..உயிர்மெய்யோடு இணைக்க முடியாது..
அதற்கு 'அ ன் பு' எனும் 'உயிர்..மெய்..உயிர்மெய்',,யை காலடியில் சமர்பிக்க வேண்டும்..'
காதல் அன்பை தேட...கர்வம் தொலைக்க வேண்டும்..மன்னிப்பை யாசித்து...சரண்புக வேண்டும்.
அந்நாள் பொன்னாளாகும்..
அபயனுக்கும் மிருதைக்கும்..
நன்னாளாகும்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤
லவ் ஆல்..