sivanayani
விஜயமலர்
இத்தனை எழுதி இருக்கேனே அதெல்லாம் கண்ணில படாம இதுதான் உங்களுக்கு பட்டுச்சா. ரொம்ப கவனமா வாசிச்சு பாருங்க... என்ன சொல்ல வந்தேன்னு புரியும்... முதலாவது, அந்த இடம் கையை விட்டு போக கூடாது. காரணம், அவளையும் அவனையும் இணைப்பது போன்ற ஒரு கற்பனை தோற்றத்தை விளைவிக்கும் ஒரு இடத்தை, எந்த விலை கொடுத்தும் வாங்குவான் என்கிற நிலையில், வெளிநாட்டில் இருப்பவன் வாங்க முடியாது என்கிற சட்டத்தின் கீழ் தன்னவளுக்காய் அவளின் பெயரி வாங்கியது குற்றமா? அதில் வரக்கூடிய வருமானம், பல கோடியை கொட்டும். நீங்கள் வியாபாரி என்கிற நிலையில் நின்று பார்க்காமல் சற்று தள்ளி நின்று ஒரு காதலனாய் எண்ணி பாருங்கள்.. அந்த பணம் அவனுக்கானது அல்ல. அவளுக்கானது. அவள் ஏற்றுக்கொள்கிறாள் மறுக்கிறாள் அதெல்லாம் வேறு கதை. ஆனால் அவளுக்காக சேகரிக்கும் பணத்தை எதற்க்காக அவன் விட்டு கொடுக்கவேண்டும். இதை படித்தவர்கள், அடுத்த பந்தியையும் படித்திருப்பீர்கள்... 'மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்வார்கள் அவன் உயிரை எடுப்பார்கள். தண்டத்துக்கு இருக்கும் உயிர்தானே. போனால் போகட்டும். இந்த இடம் அவளிடம் சென்றுவிடும்... அது போதும் எனக்கு' என்று அவன் எண்ணியதை எப்படி விட்டீர்கள்' இதிலிருந்தே தெரிந்திருக்கும், அப்புறம் எதற்க்காக அவளை விட்டு விலகினான் அதை பற்றியும் சொல்லி இருந்தேன். ஆம் விலகினான் அவளுடைய நன்மை கருதி விலகினான். ஒருத்தியை சீரழித்து விட்டு எந்த மூஞ்சயுடன் அவளை போய் பார்ப்பான். குற்ற உணர்ச்சி அவனை வதைக்காதா? அப்புறம் அவன் டிவோர்ஸ் வாங்கியது... டிவோர்ஸ் எடுப்பது அத்தனை சுலபமா.. கையெழுத்து போட்டால் மட்டும் விவாகரத்து கிடைத்து விடுமா... பின்னாடி எல்லாத்துக்கும் பதில் வரும் கண்ணு... (அப்புறம்... உங்கள் கேள்விக்கான பதில்தான் இவையே தவிர, சாத்தியமா கொச்சிகிட்டெல்லாம் போடல... எனக்கு அது சுட்டாலும் வராது.... மீ குட் கேர்ள். உங்க கேள்விக்கான பதில் ஏற்றுக்கொள்ள படும்னு நம்புறேன் ஜஜ் ஐயா... ) அப்புறம் நா எப்பவும் அபாயவித்துள்ளான் பக்கம்தானேயா.. ஏன்னா நா லோயல் ஹீரோ ஆர்மி. இன்னொன்னு கொஞ்சம் விலகி மிளிர் மிருத்தை மட்டும் பெண்ணில்லாம காந்திமதியை பதியும் கொஞ்சம் யோசியுங்க... அவள் வலிக்கு பதில் யாரும் சொல்வதாய் இல்லை.தாமரை சகோதரியோட கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். மிரு பேபியோட மனதை கொஞ்சம் கூட யோசிக்காமல் டிவோஸ் வாங்கி உடைத்து விட்டு , உயிரோடு இருக்காள இல்லையா என்று பார்க்காமல் தூக்கி எறிந்து விட்டு போய்டு , இப்ப வந்து பிள்ளைகளை பற்றி சொல்லவில்லை என்று ரொம்ப துள்ளுரார். எப்படி நயனிமா கண்டியில் இடம் மனைவி பெயரில் வாங்காமள் யார் பெயரில் வாங்குவதா? தன்னுடைய பெயரில் வாங்க சட்ட சிக்கல் இருந்ததால்தான் மிரு பெயரில் வாங்கி தான் ஒரு வியாபாரி என்று நிரூபித்துவிட்டான். ஒர் காதல் கணவனாக மாறுவதற்கு மிரு பேபிகிட்ட நீ ரொம்ப படப்போர அபயா . நயனிமா எங்களுக்கு சப்போட் பன்னுவீங்களா